The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 என்பது 234 தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்கு 2016ஆம் ஆண்டின் மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலாகும்.
அன்னையர் நாள் (Mother's day) விடுமுறை தினம் அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் அவர்களால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் உருவாக்கப்பட்டது; இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டது. இது, இப்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. அவற்றில் பல, நவீன விடுமுறை தினத்தை விட மிகவும் பழமையானது (எ.கா.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
ஜெ. ஜெயலலிதா என்று அறியப்படும் கோமளவல்லி ஜெயராம் (பிறப்பு: பிப்ரவரி 24, 1948) தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் தமிழக முதலமைச்சராக 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சி மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார்.
2015 நேபாள நிலநடுக்கம் (2015 Nepal earthquake) 2015 ஏப்ரல் 25 ஆம் நாள் சனிக்கிழமை உள்ளூர் நேரம் 11:56 மணிக்கு (6:11:26 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்) இடம்பெற்ற 7.8 Mw நிலநடுக்கத்தைக் குறிக்கும். நேபாளத்தின் லாம்சுங் மாவட்டத்தின் கிழக்கு-தென்கிழக்கே 15 கிமீ (9.3 மைல்) தூரத்தில் மையம் கொண்டிருந்த இவ்வதிர்வு 15 கிமீ (9.3 மைல்) ஆழத்தில் இடம்பெற்றது. 1934 நிலநடுக்கத்தின் பின்னர் நேபாளத்தில் இடம்பெற்ற மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும்.
பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி அல்லது பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி (Acquired immune deficiency syndrome) என்பது எச்.ஐ.வி எனப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் குறைப்பு செய்யும் திறன் கொண்ட தீ நுண்மத்தால் (வைரசால்) ஏற்படுகிற ஒரு நோயாகும்,. இந்த நோயானது மனிதர்களின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் செயற்படுதிறன் வலுவற்றதாகும் நிலையை படிப்படியாகத் தீவிரமடையச் செய்து, வாய்ப்பை எதிர் நோக்கியிருக்கும் தொற்றுநோய்களாலும், கட்டிகளாலும் மனிதர்களை இலகுவில் பாதிப்படையக் கூடியவர்களாகச் செய்கிறது. எச்.ஐ.வி தொற்றுக்குட்பட்ட இரத்தம், விந்து, யோனித் திரவம், முன்விந்துத் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களைக் கொண்ட உடலில் உள்ள சீதச்சவ்வு அல்லது இரத்த ஓட்டத்துடன் ஏற்படும் நேரடித் தொடர்பினால் இந்த வைரசானது ஒருவரிலிருந்து வேறொருவருக்குத் தொற்றுகின்றது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரை பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர்.
தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகளின் பட்டியல்
தமிழ் நாட்டில் 300க்கும் மேற்பட்ட வகை பறவைகள் பார்க்கலாம்.
இலங்கை (சிங்களம்: ශ්රී ලංකා, ஸ்ரீலங்கா, Sri Lanka) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்து சமுத்திரத்தில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு (Democratic Socialist Republic of Sri Lanka) ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
சீமான் தமிழக அரசியல்வாதியும், தமிழ் தேசியதலைவர்களில் மற்றும் செயற்பாட்டாளர்களில் ஒருவரும், தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகரும் ஆவார். தமிழர் தந்தை சி்.பா.ஆதித்தனார் அவர்கள் நிறுவிய நாம் தமிழர் கட்சியை தற்போது தலைமையேற்று தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் வழியில் நடத்துபவர். தமிழ் தேசியத்தை இன்றைய இளைஞர்களிடம் தீவிரமாக புகுத்தி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்[சான்று தேவை].
கருத்தரிப்பு என்பது, பாலூட்டிகளில், கருக்கட்டல் நிகழ்வின்போது உருவாகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்த சந்ததிக்கான உயிரி, முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கரு நிலையில் குழந்தை பிறப்புவரை, பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையில் பதிந்து, தாங்கிக் கொள்ளப்படும் நிலையாகும். இந்தக் கட்டுரையில் மனிதரில் நிகழும் கருத்தரிப்பே விரிவாக ஆராயப்படுகின்றது. மனிதரில், பருவமடைந்த ஆரோக்கியமான பெண்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள் உற்பத்தியாகும்.
மார்பகம் (மாற்றுச்சொற்கள்: கொங்கை, முலை), பெண் பாலூட்டிகளின் உடலில் மேற்பகுதியில் இரு பக்கங்களிலும் அமைந்து, பாற்சுரப்பியைக் கொண்டு பாற்சுரந்து, குழந்தைகளுக்குப் பாலூட்டப் பயன்படுத்தப்படுகிறது. இருபாலருக்கும் ஒரே கருவியல் இழையங்களில் இருந்து மார்பகங்கள் வளருகின்றன. எனினும், பருவமடையும் போது, பெண்களின் பாலின இயக்குநீர்கள் குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் மார்பக வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
பெண் உறுப்பு சிதைப்பு (ஆங்கிலம்: Female genital mutilation) என்பது பெண்ணின் நரம்புகள் குவிந்த கந்து முனையை வெட்டி அகற்றுவதாகும். இது உகாண்டா, சோமாலியா உள்ளிட்ட ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களிடையே சிறுமிகளுக்கு நடைபெறும் ஒரு சடங்கு ஆகும். இது வழமையான அகற்றுவோரால் கத்தியைக் கொண்டு மயக்க மருந்து கொடுத்தோ, கொடுக்காமலோ செய்யப்படுகின்றது.
காச நோய் (Tuberculosis, டியூபர்க்குலோசிசு) என்பது மைக்கோபாக்டீரியா (mycobacteria) என்னும் நுண் கோலுயிரியின் தாக்குதலால் மாந்தர்களுக்கு ஏற்படும் கடும் தொற்றுநோய். இதனால் நோயுற்றவர் இறக்கவும் நேரிடும். இந்நோய் முக்கியமாக மைக்கோபாக்டீரியம் டியூபர்க்குலோசிசு (Mycobacterium tuberculosis) என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகின்றது.
சிவன் (Śiva, சிவா) என்பவர் இந்து சமயக் கடவுள்களில் ஒருவராகவும், ஸ்மார்த்த மதத்தில் வணங்கப்பெறும் ஆறு கடவுள்களில் ஒருவராகவும், சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளாகவும் வழிபடப்படுகிறார். சிவம் என்றும் சிவபெருமான் என்றும் பரவலாக அழைக்கப்பெறும் இவருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. இவர் பிறப்பும் இறப்பும் இல்லாதவர் என்றும் , இவரே மும்மூர்த்திகளையும், தேவர்களையும், அசுரர்களையும் உலகினையும், உலக உயிர்களையும் தோற்றுவிப்பதாகவும், பிரளயக் காலத்தில் அனைவற்றையும் அழித்துத் தன்னுள் ஒடுக்கிச் சிவன் மட்டும் நிலையாக இருப்பதாகச் சைவ சமய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.
அன்னை தெரேசா (’Mother Teresa, ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார்.
மதுரை (ஆங்கிலம்:Madurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் மதுரை, மக்கள் தொகை அடிப்படையிலும், நகர்ப்புற பரவல் அடிப்படையிலும் மாநிலத்தின் மூன்றாவதும் இந்திய அளவில் 31 ஆவதுமான பெரிய நகரம் ஆகும். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம் இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (சுருக்கமாக அதிமுக அல்லது அண்ணா திமுக) என்பது இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் முக்கிய அரசியல் கட்சியாக விளங்குகிறது. இக்கட்சியின் மூலம் தேர்தலை சந்தித்தும், தற்காலிகமாகவும் எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்), இரா.
நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், உருசியாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன.
உயர் இரத்த அழுத்தம் (hypertension) சில நேரங்களில் “தமனி வழி உயர் இரத்த அழுத்தம்”, தமனி / தமனிகளில் இரத்த அழுத்தம் உயர்த்தப்பெற்ற ஒரு நீடித்த(மருந்து) / நீடித்த நோய் / மருத்துவ நிலை ஆகும். இரத்தக் குழாய்களின் மூலமாக செயல் படும் இரத்த ஓட்டத்திற்கு, இந்த உயர்த்தப்பெற்ற நிலையினால் இதயம் வழக்கத்தைவிட கடினமாக வேலை செய்ய தேவைப்படுகிறது. இதய துடிப்புகளுக்கிடையே இதய தசை சுருங்குவது (சிஸ்டோல்) அல்லது தளர்வுறுவது ( டைஸ்டோல் ) என்பதை பொறுத்து இரத்த அழுத்தம் இதய சுருங்கியக்க அழுத்தம் மற்றும் விரிவியக்க அழுத்தம் என்ற இரண்டு அளவுகளை உள்ளடக்கியது.
வேலுப்பிள்ளை பிரபாகரன் (நவம்பர் 26, 1954 – மே 17 அல்லது மே 18 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசிய, ஈழப் போராட்ட ஆதரவு உடைய [சான்று தேவை] ஒரு தமிழ்நாட்டை முதன்மையாக கொண்ட அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சி மே மாதம் 18 ஆம் நாள் 2010 ஆம் ஆண்டில் சீமானால் தொடங்கப்பட்டது. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் நடத்தி வந்த "நாம் தமிழர் இயக்கத்தின்" தொடர்ச்சியே சீமானால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என அறியப்படுகிறது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)
உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழில் வெளிவந்த அனைத்துத் திரைப்படங்களையும் அகர வரிசையில் பட்டியலிட முனைகின்றது இப்பட்டியல்.
இந்திய வரலாறு என்பது இந்தியத் துணைக்கண்டதில் வரலாற்றுக் காலம் முன்பு வாழ்ந்த மக்கள், அவர்தம் சமுதாயம், இந்து சமவெளி நாகரிகம், இந்தோ-ஆரிய பண்பாடு உள்ளடக்கிய வேதகால நாகரிகம் தொடங்கி இன்றுவரை உள்ளிட்டகாலம் அடங்கும். மேலும் பல கலாச்சாரங்களின் சாரமாகவும் பண்பாடுகளை உள்வாங்கியும் பிறந்த இந்து சமயம், அதன் வளர்ச்சி குறித்தும் சிரமணா இயக்கத்தின் வளர்ச்சி, சிரவுத்தா பலிகளின் வீழ்ச்சி, சைனம், பௌத்தம், சைவம், வைணவம் மற்றும் சக்தி வழிபாடு இவைகளின் வளர்ச்சி, தாக்கம், மேலும் இப்பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த அரச பரம்பரை, பேரரசுகளின் தோற்றம், தாக்கம், இடைகாலத்தில் தோன்றிய இந்து மற்றும் முகலாய அரச பரம்பரைகள் குறித்த தகவல்கள், பிற்காலத்தில் வந்த ஐரோப்பிய வணிகர்கள், அதன் தொடர்ச்சியாக அமைந்த ஆங்கிலேய அரசு, அதன் தொடர்ச்சியாக எழுந்த விடுதலை இயக்கம், அதன் பின் நாடு பிரிவினை அடைந்து இந்தியக் குடியரசு பிறந்த வரை தகவல்கள் உள்ளிட்டவை அடங்கும். சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துணைக்கண்டத்தில் இன்றைய மனிதர்களின் உடற்கூறியல் வடிவத்தை ஒத்த மனிதர்களோ அல்லது 5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தற்கால மனிதனின் முன்னனோடிகளோ வாழ்ந்து வந்தததற்கான் சான்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ரசினிகாந்த் என்று அனைவராலும் அறியப்படும் சிவாஜி ராவ் கைக்வாட் (பிறப்பு: டிசம்பர் 12, 1949), மராட்டியில்: रजनीकांत/शिवाजीराव गायकवाड, சிவாஜீராவ் காயகவாட்) ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவருடைய ரசிகர்கள் இவரை தலைவர் என்றும் மக்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கின்றனர். ஆசியாவில் நடிகர் ஜாக்கி சான்-னுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகர் இவர்.
நாடார் என்ற சாதிப் பெயருடைய மக்கள் தமிழகத்தில் பல இடங்களில் காணப்பட்டாலும் திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளனர். மேலும், மதுரை, தேனி,சேலம், கோவை, தஞ்சாவூர், ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை போன்ற மாவட்டங்களிலும் பரவலாக உள்ளனர். நாடார் சமுதாயத்தில் சுமார் 60% இந்துக்கள், எஞ்சியோர் கிறித்தவர்கள்.ஆங்காங்கே ஒருசிலர் இஸ்லாம் சமயத்தைத் தழுவியதாகக் கூறப்படுகிறது.
தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும் தஞ்சைப் பெரிய கோயில் அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள சிவபெருமானுக்குரிய இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகும். அத்துடன் இந்தியாவில் அமைந்துள்ள அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.
சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud - மே 6, 1856 – செப்டெம்பர் 23, 1939) ஒரு ஆஸ்திரிய உளநோய் மருத்துவர். சிகிமண்ட் ஸ்லோமோ பிராய்ட் (Sigismund Shlomo Freud) என்னும் இயற்பெயர் கொண்ட இவர் உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர். உள்மனம் (unconscious mind) பற்றிய இவரது கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்புப் பொறிமுறை, உளப்பிணிகளை, பிணியாளருடன், உளப்பகுப்பாய்வாளர் பேசிக் குணப்படுத்துவதற்காக உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைச் செயல்முறைகளை உருவாக்கியமை என்பவற்றின் மூலம் பிராய்ட் பெரும் பெயர் பெற்றார்.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
உழவு தொழில் அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவு மற்றும் பிற பயன்பாடுகளுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான்.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், அதன் முழுமையான நிலையில், தமிழ் நாட்டின் 1920 முதலான வரலாற்றில் இருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும். தமிழக முதல்வர் அல்லது தமிழ்நாடு முதலமைச்சர், இந்தியாவின் தமிழ்நாடு மாநில அமைச்சரவையின் தலைமை அமைச்சர் ஆவார். இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பெறும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக மக்களின் வாக்குகளால் வெற்றி பெறும் உறுப்பினர்களின் பெரும்பான்மையைச் சார்ந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பெற்று அவர்களின் பரிந்துரையின் படி தமிழத்தின் ஆளுநரால் ஆளுமை புரிய அழைத்ததின் பேரில் தமிழகத்தின் முதல்வராக ஐந்து ஆண்டுகள் ஆளுமை புரிய கடமைபட்டவராவார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011
தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத் தேர்தல் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று நடைபெற்றது. ஐந்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி தோல்வியடைந்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஜெ.
கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
விக்கிப்பீடியா (Wikipedia, /ˌwɪkɪˈpiːdiə/ அல்லது /ˌwɪkiˈpiːdiə/ WIK-i-PEE-dee-ə) என்பது, இலாப நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தின் உதவியுடன் நடத்தப்படும், கூட்டாகத் தொகுக்கப்படும், பன்மொழி, கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியமாகும். தமிழ் விக்கிப்பீடியாவின் 60000க்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன் சேர்த்து இதன் மொத்தக் கட்டுரைகளான 24 மில்லியன் கட்டுரைகளும் உலகெங்கிலுமுள்ள தன்னார்வலர்களால் கூட்டாக எழுதப்படுகின்றன. பெரும்பாலும் இதன் எல்லாக் கட்டுரைகளும், இதனைப் பயன்படுத்தும் எவராலும் தொகுக்கப்பட முடியும்.
உளவியல் அல்லது மனோதத்துவம் (Psychology) என்பது மனதின் செயல்பாடுகள் மற்றும் நடத்தைகளை அறிவியல் முறையில் ஆய்வு செய்யும் கற்கை மற்றும் பயன்பாட்டு ஒழுங்கு முறையாகும். இந்தத் துறையின் தொழில்முறை நெறிஞர் அல்லது ஆய்வாளர் ஒரு உளவியலாளர் எனப்படுவர். உளவியலாளர் சமூக அல்லது நடத்தை விஞ்ஞானிகள் என்றும் வகைப்படுத்தப்படுவர்.
சூரியக் குடும்பம் (Solar System) அல்லது சூரியத் தொகுதி என்பது சூரியனையும் சூரியனின் ஈர்ப்புவிசையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து பருப்பொருட்களையும் உள்ளடக்கிய ஒரு தொகுதி ஆகும். இச் சூரியத்தொகுதி கதிரவனைச் சுற்றி வரும் எட்டு கோள்களையும், இக்கோள்களின் 162 (இதுவரை தெரிந்த கணக்கெடுப்பின்படி) துணைக்கோள்களையும், சிந்து குறுங்கோள்களையும், அக்குறுங்கோள்களின் துணைக்கோள்களையும் மற்றும் ஆயிரக்கணக்கான பிற வான்பொருட்களையும் உள்ளடக்கியது. வால்வெள்ளி, எரிகற்கள், விண்கற்கள் மற்றும் நாள்மீன்களுக்கு இடையே உள்ள விண்துகள்கள் போன்றவையும் சூரியத் தொகுதியில் காணப்படுகின்றன.
மார்பகப் புற்றுநோய் அல்லது மார்புப் புற்று நோய் என்பது பெண்களுக்கே வரும் புற்று நோய்களுள் ஒன்று. (Breast cancer) என்பது மார்பகத் திசுக்களில் ஆரம்பிக்கும் புற்றுநோய்களைக் குறிக்கும், இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும். நாளங்களில் உருவாகும் புற்றுநோய்களுக்கு நாள புற்றுநோய் (டக்டல் கார்சினோமாஸ்) என்று பெயர்; அதேபோல நுண்ணறைகளில் தொடங்கும் புற்றுகளுக்கு நுண்ணறை தீவிரபுற்றுநோய் (லோபுளர் கார்சினோமாஸ்) என்று பெயர்.
முனைய துணைக்கோள் ஏவுகலம் (பி.எஸ்.எல்.வி., Polar Satellite Launch Vehicle, PSLV) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையமான "இஸ்ரோ" (ISRO) வினால் இயக்கப்படும் செயற்கைக்கோள்களை ஏவும் ஒரு மீளப்பாவிக்கமுடியாத (இழக்கத்தக்கதொரு ஏவு அமைப்பாகும். இதுவே இசுரோவின் முதல் செயல்படத்தக்க ஏவு ஊர்தி ஆகும். இவ்விரிசினால் 1600-கிகி நிறையுடைய துணைக்கோள்களை 620 கிமீ ஞாயிற்றிசைவு துருவப்பாதையிலும் 1050-கிகி நிறையுடைய துணைக்கோள்களை புவிநிலை இடைப்பாதையிலும் செலுத்த இயலும்.
குமரிக்கண்டம் என்பது முற்காலத்தில் இருந்ததாகக் கருதப்படும், கோட்பாடுகளால் ஊகிக்கப்படும் அல்லது இலக்கியங்களில் கற்பனையாகவோ சாட்சியாகவோ கூறப்படும் கண்டம் அல்லது பெருநிலப்பரப்பாகும். குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்குக் கீழ் அமைந்திருந்ததெனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்தக் குமரிக்கண்டத்தில்தான் மாந்தர்களும் தமிழர்களும் முதன்முதல் தோன்றினரென எழுதியுள்ளனர் ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் (சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து.
சதுரங்க விதிமுறைகள் ( Rules of chess ) என்பது சதுரங்கத்தின் சட்டங்கள் (Laws of chess ) ஆக அறியப்படுகின்றன. இவ்விதிமுறைகள் அல்லது சட்டங்கள் சதுரங்க (செஸ்) விளையாட்டினை விளையாடுவதற்காக வகுக்கப்பட்ட விதிமுறைகள் ஆகும். இவ்விதிமுறைகளின் மூலங்கள் துல்லியமாகத் தெரியாவிடினும், நவீன விதிமுறைகள் 16 ஆம் நூற்றாண்டில் முற்பகுதியில் இத்தாலியில் அமைக்கப்பட்டன.
தடிப்புத் தோல் அழற்சி அல்லது நமட்டுச்சொறி அல்லது நமட்டுச் சிரங்கு அல்லது சிரங்கு அல்லது உரி தோல் அழற்சி (psoriasis)([1]) என்பது தோலில் ஏற்படும், ஒரு நீடித்த, தொற்றும் தன்மை இல்லாத தன்னுடல் தாக்குநோய் ஆகும் ஆகும். இந்த நோய் தோல் மற்றும் மூட்டுகளை பாதிக்கும். இது பொதுவாக தோலில் சிவந்த செதில் போன்ற திட்டுக்களைத் தோற்றுவிக்கிறது.
சுற்றுச்சூழல் மாசுபாடு (சூழல் மாசடைதல்) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும். சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது.
நாயன்மார் என்போர் கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலராவார்கள். சுந்தரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத் தொகையில் அறுபத்து இரண்டு நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார். அதன் பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்து இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் இணைத்து அறுபத்து மூவரின் வரலாற்றை திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்
கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (ஆங்கிலம்: Captain America: Civil War, தமிழ்: கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போர்) 2016இல் திரைக்கு வரவிருக்கும் அமெரிக்க சூப்பர்கீரோத் திரைப்படமாகும். இத்திரைப்படம், மாவல் வரைகதைகளில் வரும் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, மாவல் ஸ்ரூடியோவினால் தயாரிக்கப்பட்டு வால்ற்று டிசுனி ஸ்ரூடியோவின் மோஷன் பிக்சேசு கிளையினால் விநியோகிக்கப்படவுள்ளது. இது 2011இல் வெளியான கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் மற்றும் 2014இல் வெளிவந்த கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் ஆகிய திரைப்படங்களின் தொடர்ச்சியும், மா(ர்)வல் சினிமரிக் யூனிவர்ஸ்-இன் வரிசையில் பதின்மூன்றாவது திரைப்படமுமாகும்.அந்தனி உறூசோ மற்றும் சோ உறூசோ இயக்கும் இத்திரைப்படத்தின் திரைக்கதையை கிறித்தோபர் மாக்கசு மற்றும் சுடீஃபன் மெக்ஃபீலி ஆகியோர் எழுதியிருப்பதுடன், கிறிசு எவன்சு, இராபட்டு டவுனி சூனியர், சுகார்லெட்டு சொகான்சன், செபசுதியான் சுரான், அந்தோணி மெக்கீ, போல் பெற்றனி, செரேமி ரெனர், உடொன் சியடெல், எலிசபெத்து ஓல்சன், போல் இறட்டு ஆகியோர் நடித்தள்ளனர்.கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போரில், கேப்டன் அமெரிக்காவும் ஏனைய அவெஞ்சர்சு குழுவின் அங்கத்தினரும் உலகைக் காப்பாற்றும் பணியைத் தொடர்கின்றபோதிலும், அவர்களால் விளைவிக்கப்பட்ட அதிகப்படியான சேதங்களால் அரசாங்கம் சூப்பர்கியூமன் பதிவுச் சட்டத்தினைக் கொண்டு வந்ததின் காரணமாக அவெஞ்சர்சு குழு பிரிவுபடுகிறது.
காலப் பயணம் என்பது, தற்காலத்திற்கு சில கணங்கள் முன்பான காலத்தில் பின்னோக்கி பொருள்களை அனுப்புதல் (அல்லது சில நிகழ்வுகளில் தகவலை மட்டும்) அல்லது தற்காலத்திலிருந்து குறுக்கிடும் கால எதிர்கொள்ளலின் தேவையின்றி எதிர்காலத்திற்கு பொருள்களை அனுப்புதல் (குறைந்தபட்சம் இயல்பான விகிதத்திலாவது) ஆகியவற்றிலான பரவெளியில் வேறுபட்ட இடங்களுக்கிடையே ஒத்தியல்பான முறையில் நகர்த்துவதற்கான காலத்தில் வேறுபட்ட இடங்களுக்கிடையே நகர்த்தும் கருத்தாக்கமாகும். இருப்பினும் 19 ஆம் நூற்றாண்டிலிருந்து காலப் பயணம் என்பது புனைவில் ஒரு பொதுவான மையக்கருவாக இருந்துவருகிறது, அத்துடன் எதிர்காலத்திற்குள்ளான ஒரு வழிப் பயணமானது சிறப்பு சார்பியல் தத்துவத்தில் (இரட்டை முரண்மெய்மையால் விளக்கப்படுவது) உள்ள இயக்கவிசை, மற்றும் பொது சார்பியல் தத்துவத்தில் உள்ள ஈர்ப்புவிசை கால விரிவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையிலான கால விரிவாக்கத்தின் வழங்கப்பட்ட நிகழ்வில் வாதமுறையில் சாத்தியமுள்ளதாக இருக்கிறது என்பதுடன் இது பௌதீக விதிகள் பின்நோக்கிய காலப் பயணத்தை அனுமதிக்குமா என்பது தற்போது அறியப்படாததாக இருக்கிறது. காலப் பயணத்தை அடைவதற்கு புனைவாகவோ அல்லது கருதுகோளாகவோ உள்ள எந்த தொழில்நுட்ப சாதனமும் பொதுவாக கால இயந்திரம் என்று குறிப்பிடப்படுகிறது.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஜூலை 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள்... என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. மகரத்திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேகத் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு (இந்தி: भारतीय़ संविधान, ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சியம்மன் கோயில் அல்லது மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது தமிழகத்தின் மதுரை நகரின் மையத்தில் அமைந்துள்ள தொன்மையான இந்துக் கோவில் ஆகும். இங்கு மீனாட்சி அம்மனும் சுந்தரேசுவரரும் வழிபடப்படுகின்றனர். இருப்பினும் இத்தலத்தில் மீனாட்சி அம்மன் சந்நிதியே முதன்மை பெற்றது.