The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
நன்னூல், தொல்காப்பியத்தையும், தொல்காப்பியம் இளம்பூரணர் உரையையும் முதல்நூலாகக் கொண்ட வழிநூல். இது தொல்காப்பியம் கண்ட தமிழியலைப் பின்பற்றி நன்னூல் தோன்றிய காலத்தில் இருந்த தமிழையும் உள்ளத்தில் கொண்டு தமிழ்மொழியை ஆராய்ந்துள்ளது. சுமார் 1700 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் நிகழ்ந்த தமிழியல் பார்வை இது என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
இந்திய அரசியலமைப்பிலுள்ள இணைப்புப் பட்டியல்கள்
இந்தியாவானாது ஒன்றிய அரசு அளவில் கூட்டாட்சியையும், அவற்றின் மாநிலங்கள் அளவில் ஒற்றையாட்சியையும் கொண்டுள்ளது. இதனை செவ்வனே செய்ய இந்திய அரசியலமைப்பு அதிகாரங்களை கீழ்கண்ட பட்டியல்கள் வழியாக வழங்குகின்றன.இந்திய அரசியலமைப்பில் உள்ள பட்டியல்களில் எண்ணிக்கை பனிரெண்டு ஆகும். அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது, இருந்த பட்டியல்களின் எண்ணிக்கை எட்டு மட்டுமே ஆகும்.பின்னர், 1951, 1985, 1992, 1992 ஆகிய ஆண்டுகளில் நான்கு பட்டியல்கள் அரசியலமைப்புச் சட்டத்திருத் தங்கள் மூலம் பின்னர் இணைத்துக் கொள்ளப் பட்டன.
தானியம் என்பது புல் வகைத் தாவரங்களில் விளைவிக்கப்படும் (தாவரவியல் முறைப்படி இவை உலர் வெடியாக்கனி அல்லது காரியாப்சிஸ் வகைக் கனி ஆகும்) உணவுப்பொருட்களைக் குறிப்பதாகும். பெரும்பாலான தானியங்கள் முளை சூழ்தசை, முளைக்குறுத்து மற்றும் தவிடு (உமி) ஆகியவற்றைக் கொண்டுள்ளன. உலகளாவிய அளவில் தானிய மணிகள் மற்ற பயிர்களைக் காட்டிலும் பெருமளவு விவசாயம் செய்யப்படுகின்றன.
துடுப்பாட்டம், (மட்டைப்பந்து, Cricket, கிரிக்கெட்) 19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டு ஆகும். இது கனவான்களின் விளையாட்டு என சிறப்பித்துக் கூறப்படுகிறது.இது முறையே 11 வீரர்கள் கொண்ட இரு அணிகளுக்கிடையே ஆடப்படும் ஆட்டமாகும். தற்பொழுது, இந்த ஆட்டம் பொதுநலவாய நாடுகளில் பரவலாக ஆடப்பட்டு வருகிறது.
பிரிவு 21, இந்திய அரசியலமைப்பு சட்டம், 1950 ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளின்படி அல்லாமல் எந்த ஒரு மனிதரின் வாழ்வுரிமையும் பாதிக்கப்படுதல் கூடாது. பிரிவு 3, ஐ. நா சபை மனித உரிமைப்பிரகடனம், 1948 ஒவ்வொருவரும் தாங்கள் உயிர் வாழ்வதற்கும், தங்களது சுதந்திரத்திற்கும் மற்றும் பாதுகாப்பிற்கும் உரிமை உள்ளவர்கள் பிரிவு 6:1, அகில உலக சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உடன்பாடு, 1966: உயிர் வாழ்வதற்கான உரிமை ஒவ்வொரு மனிதரின் உள்ளார்ந்த உணர்விலிருந்து வருகிறது.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் (Tamil Nadu Slum Clearance Board (TNSCB); இது தமிழ்நாடு அரசு மூலமாக நிர்வகிக்கப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகும். அது தமிழ்நாடு குடிசை பகுதிகள் (மேம்படுத்தல் மற்றும் இசைவு) சட்டத்தின் 1971 (Act 1971) மூலம் உருவாக்கப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் சேரிகளை அகற்றி, சுகாதார வசதிகளை வழங்குவதே இந்த குழுவின் முக்கிய செயல்பாடு ஆகும்.
திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்
ஆதிபுரீசுவரர் கோயில் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவொற்றியூரில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் ஆதிபுரீசுவர், தாயார் திரிபுரசுந்தரி. இத்தலத்தின் தலவிருட்சமாக அத்தி மரமும், மகிழ மரமும் உள்ளன.
பிராணயாமா அல்லது பிராணயாமம் (சமசுகிருதம்: प्राणायाम prāṇāyāma ) என்பது ஒரு சமசுகிருத சொல், அதற்கு "பிராணா அல்லது மூச்சைக் கட்டுப்படுத்தி வைத்தல்" என்று பொருள். அந்தச் சொல் இரு சமசுகிருத சொற்களால் உருவாக்கப்பட்டது அவை "பிராணா" வாழ்வாற்றல் அல்லது முக்கியமான வலிமை குறிப்பாக மூச்சோட்டம் மற்றும் "ஆயாமா" நிறுத்தி வைத்தல் அல்லது கட்டுப்படுத்தி வைத்தல் என்று பொருள். அது அவ்வப்போது வாழ்வாற்றலை (பிராணா) கட்டுப்படுத்துதல் என்று மொழிபெயர்க்கப்படுகிறது.
அண்ணாமலை மகிழ்நன், PhD.,புவியியல் அறிஞர் ஆஸ்திரேலிய கல்வித்துறை ஆலோசகர். நீரின்றி அமையாது உலகு டாக்டர் நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு - திருவள்ளுவர். "நீர் இல்லாவிட்டால் எந்த உயிரும் வாழாது, உலக ஒழுங்கு கெட்டு, உலக வாழ்வே முடிந்து விடும்' என்றுதான் எல்லா திருக்குறள் உரையாசிரியர்களுமே உரை எழுதியிருக்கிறார்கள்.
சமூகப்பணி என்பது தனி நபராலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களாலோ சமூக நலன் கருதியும் மேம்பாடு கருதியும் செய்யப்படும் சேவையாகும். சமூகப்பணி தொடர்பான வரையறைகள் குறித்து நோக்கும்போது, சமூகப்பணி என்பது மனிதனின் சமூகச் செயல்திறனை உருவாக்கவதாகும் என வெர்னர் டபிள்யு போகம் (Werner W. Boehmm) என்ற அறிஞர் கூறுகிறார். மேலும், சமூகப்பணி மக்கள் தங்கள் தேவைகளைத் தாங்களே நிறைவு செய்து கொள்வது அல்லது சிக்கல்களைத் தாங்களே எவ்வாறு வென்று முன்னேறுவது என்பதற்கு வழிகாட்டுவது என்ற தத்துவத்தின் கீழ் செயற்படுகிறது.
பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும். சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது முன்றுறையர் அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது.
சாராயம் (Arrack) தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் கரும்புச்சாறு, தென்னை ஊறல் அல்லது பழச்சாறுகளைப் புளிக்க வைத்து வடிதிறுக்கப்படும் ஓர் மது பானமாகும். சாராயம் பொதுவாக பொன்மஞ்சள் நிறத்தில் இருக்கும். மத்திய கிழக்கு நாடுகளில் "அரக்" என்று வழங்கப்படும் நிறமற்ற பானத்திலிருந்து இது வேறானது.தென்னையிலிருந்துப் பெறப்படும் சாராயம் தானியத்திலிருந்தோ பழத்திலிருந்தோ வடிக்கப்படாமையால் இசுலாமியர்களின் மதுவிலக்கு விதிக்கு இது "விலக்காகக்" கருதப்படுகிறது.
குதிரைவாலி (அல்லது) புல்லுச்சாமை (horse-tail millet, barnyard millet, panicum verticillatum, Echinochloa frumentacea)(இந்திய தினை) புற்கள் வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். இது ஒருவகைப் புன்செய் பயிர். இத்தானியத்தில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளது.
இளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
இளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் வரிசை பின்வருமாறு: (இது முழுமையான பட்டியல் அல்ல.)
அமில மழை (Acid rain) அல்லது காடிநீர் மழை அல்லது வேறு வடிவில் காடி நீர் வீழ்தல் என்பது, வழமைக்கு மாறான அமிலத் தன்மை கொண்ட மழை அல்லது வேறுவிதமான வீழ்படிதல் ஆகும். இது, தாவரங்கள், நீர்வாழ் விலங்கினங்கள், உள்கட்டுமானம் என்பவற்றின் மீது தீங்கு விளைவிக்கக் கூடிய தாக்கத்தை உண்டாக்குகிறது. இது பெரும்பாலும் மனித நடவடிக்கைகளால் வெளிப்படும் கந்தகம், நைதரசன் ஆகியவற்றைக் கொண்ட சேர்வைகள் வளிமண்டலத்துடன் தாக்கமுற்று அமிலங்களை உருவாக்குகின்றன.
பீனிக்ஸ்' (Phoenix) ஒரு புனித தீ பறவையாக வருணிக்கப்படுகின்றது. எகிப்திய, கிரேக்க, கிறிஸ்தவ புராண (தொன்மவியல்) கதைகளிலும், நவீன வரைகதைகளிலும் பீனக்ஸ் பறவை இடம்பிடிக்கின்றது. "தானே தீக்குளித்து பின்னர் அதன் சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவதாக" என்று புராண கதைகளில் பீனக்ஸ் பறவையின் தன்மையை தற்காலத்திலும் எடுத்தாள்வதை காண்கிறோம்.
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம்
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் (ஆதாரம் : முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம்) மருத்துவக் காப்பீட்டு திட்டம் தமிழ்நாட்டில் ஏழை மக்கள், உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு, Indian Rupee symbol.svg 1,00,000 (ஒரு இலட்சம்) வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெற வகை செய்யும் ஒரு காப்பீட்டுத் திட்டமாகும். பயனாளிகள் • தமிழ்நாடு அரசின் பல்வேறு நல வாரியங்களின் உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள். • குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூபாய் 72,000க்கும் குறைவாக உள்ள அனைத்துக் குடும்பங்கள் • மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டை பெற்று பதிவு செய்து கொள்ளவேண்டியது அவசியம்.
சீனப் பெருஞ் சுவர் (Great Wall of China) (長城 எளிதாக்கப்பட்டது: 长城 பின்யின்: (ச்)சாங் (ச்)செங், நேரடிக் கருத்து: "நீண்ட நகர் (கோட்டை)") என்பது, ஆறாம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியாவிலிருந்தும், மஞ்சூரியாவிலிருந்தும் வந்த 'சியோங்னு'களின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காக அதன் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட அரண் ஆகும். பல்வேறு காலப்பகுதிகளில், கல்லாலும் மண்ணாலும், பல பகுதிகளாகக் கட்டப்பட்டுப் பேணப்பட்டு வந்த இச்சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அன்று; எதிரிகள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பதே இதன் நோக்கம் ஆகும். பெருஞ்சுவர் என்று பெயரிட்டு அழைக்கப்பட்ட பல சுவர்கள் காலத்துக்குக் காலம் கட்டப்பட்டிருந்தாலும், கிமு 220-200 காலப்பகுதியில், சீனப் பேரரசர் சின் சி ஹுவாங்கினால் கட்டப்பட்ட சுவரே மிகப் பெயர் பெற்றது ஆகும்.
ஐசக் நியூட்டன் (டிசம்பர் 25, 1642 – மார்ச் 20, 1727), ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார். அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்டவர் நியூட்டன். இது நாள் வரை வாழ்ந்த அறிவியலாளர்களுள் மிகவும் செல்வாக்கு உள்ளவர்களுள் ஒருவராகவும், அறிவியல் புரட்சியில் முக்கியமான ஒருவராகவும் இவர் இருந்தார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை (Violence against women, சுருங்க VAW) என்பது பெண்களுக்கு எதிராக முதன்மையாக அல்லது தனிப்பட்ட முறையில் நிகழ்த்தப்படும் வன்முறைச் செயல்களை மொத்தமாகக் குறிப்பிடுகின்றது. சிலநேரங்களில் வெறுப்புக் குற்றமாகக் கருதப்படும் . பாதிக்கப்படுபவரின் பாலினத்தை முதன்மைக் காரணமாகக் கொண்டு, இத்தகைய வன்முறை குறிப்பிட்ட குழுவினரைக் குறி வைக்கிறது.
பெண்ணியம் பெண்ணியம் என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் எதிர்க்கும் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் தொகுப்பாகும். ஆண் பெண் சமத்துவத்தில் கவனம் செலுத்தும் கோட்பாடாகவும் இது வரையறுக்கப்படுவதுண்டு. பெண்ணியத்தை வரையறுப்பதென்பதே கூட சிக்கலானதாக இருப்பதுண்டு.
தேம்பாவணி என்னும் நூல் இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான புனித யோசேப்பு மீது இயற்றப்பட்ட முதற் பெரும் செய்யுள் வகை நூலாகும். இந்நூல் இத்தாலிய நாட்டவரான வீரமாமுனிவர் (1680 - 1742) அவர்கள் தமிழில் திறம்பட ஆக்கிய நூல் எனப் புகழப்படுகிறது. கிறிஸ்தவ சமயத்தின் சுருக்கமென்றே இந்நூலை அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர்.
பட்டாம்பூச்சி அல்லது வண்ணத்துப் பூச்சி அல்லது வண்ணாத்திப் பூச்சி (butterfly) என்பது கண்ணைக் கவரும், மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள பறக்கும் பூச்சி இனமாகும். பற்பல வண்ணங்களில் இறக்கைகள் கொண்டு, அழகாக இருப்பதனால், இவை வண்ணத்துப் பூச்சி எனவும் அழைக்கப்படுகின்றன. இப்பூச்சிகள் மலர்களில் இருந்து தேனை உறிஞ்சிப் பருகுவதும், மிக ஒடிசலாக இங்கும் அங்கும் சிறகடித்துப் பறப்பதும் பலரையும் கண்டு களித்து இன்புற்ச்செய்யும்.
69 என்பது இரு நபர்கள் தங்களின் பிறப்புறுப்புகள் அடுத்தவரின் வாயை நோக்கி இருக்குமாறு வைத்து உடலுறவு கொள்ளும் நிலையாகும். இந்த முறையில் இருவரும் தங்களை பரஸ்பரபரமாக எண் 6 மற்றும் 9 போல தங்களை தலைகீழாக்கிக் கொண்டு செயல்படுவதால் இந்த முறையை 69 என்று அழைக்கின்றார்கள். இந்த நிலையில் எந்த பாலினத்தவறும் இணைந்து செயல்பட முடிகிறது.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (United Nations Children's Fund or UNICEF) 11 டிசம்பர் 1946 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் இரண்டாம் உலகயுத்தத்தில் அழிவுற்ற நாடுகளில் உள்ள சிறார்களுக்கு உணவு மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. 1953இல் ஐக்கியநாடுகளின் நிதந்தர அமைப்பாகி இதன் முன்னைய பெயரான ஐக்கிய நாடுகளின் பன்னாட்டுச் சிறுவர்களிற்கான அவசரகால உதவி (United Nations International Children's Emergency Fund) என்னும் பெயரானது ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என மாற்றப்பட்டது. எவ்வாறெனினும் இன்றும் இதன் முன்னைய பெயரில் இருந்து சுருக்கி அறியப்பட்ட யுனிசெஃப் என்றே இன்னமும் அறியப்படுகின்றது.
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக்கில் 200 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன.
வணிகம் அல்லது வர்த்தகம் (trade, commerce) என்பது மனிதனது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் இலாப நோக்குடைய அல்லது இலாப நோக்கற்ற ஒரு பொருளாதார செயற்பாடு ஆகும். வணிகமானது பிரதானமான நான்கு வளர்ச்சி கட்டங்களின் கீழ் வளர்ச்சியுற்றது. பண்டமாற்று முறை பணமுறை கைத்தொழில் புரட்சி தகவல் தொழில்நுட்ப புரட்சிவணிகவியல் வர்த்தக நடவடிகைகளை வணிகம் தொழிற்சாலை என இரு பிரிவுகல்ளாக பிரிகளாம்.
கனடா (Canada) வட அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு ஆகும். வடக்கே வட முனையும் கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலும் தெற்கே அமெரிக்க ஒன்றியமும் மேற்கே பசிபிக் பெருங்கடலும் அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன. கனடா பத்து மாகாணங்களையும் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளையும் கொண்ட கூட்டமைப்பு ஆகும்.
சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் (Sachin Ramesh Tendulkar உச்சரிப்பு, பிறப்பு ஏப்ரல் 24, 1973) ஓர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரர் மற்றும் அணித் தலைவர் ஆவார். துடுப்பாட்ட விளையாட்டில் எல்லா காலங்களில் விளையாடிய வீரர்களில் சச்சின் சிறந்த மற்றும் மிகவும் மதிக்கப்படும் வீரராக பரவலாக அனைவராலும் கருதப்படுகிறார். இவர் பதினொரு வயதுமுதல் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார்.
மரகதப் புறா (emerald dove, Chalcophaps indica), வெப்ப மண்டலத் தெற்காசியாவில் பாகிஸ்தானிலிருந்து இலங்கை வரையிலும், கிழக்கே இந்தோனேசியா, வடக்கு, கிழக்கு ஆஸ்திரேலியா வரையிலும் பரவலாகக் காணப்படும் மனைவாழ் புறாவாகும். இப்புறா, பச்சைப் புறா எனவும், பச்சை இறகுப் புறா எனவும் அழைக்கப்பெறுகிறது. இப்புறாவின் பல இனங்கள் காணப்படுகின்றன.
மனிதர்களில் கர்ப்பகாலம் அல்லது கருத்தரிப்புகாலம் முடிவடையும்போது, கருவானது வளர்ச்சியடைந்த குழந்தையாக உருமாற்றம் பெற்று, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கைக்குழந்தையாக பெண்ணின் கருப்பையிலிருந்து வெளியேறும் தொழிற்பாட்டையே குழந்தை பிறப்பு என அழைக்கிறோம்.உலகம் முழுவதும் 2015 -இல் சுமார் 135 மில்லியன் பிறப்புகள் நிகழ்ந்தன. கருத்தரிப்புக் காலத்தில், 37 கிழமைகளுக்கு முன்னராக குறைப்பிரசவப் பிறப்பாக சுமார் 15 மில்லியன் குழந்தைகள் பிறந்தன, அதே வேளையில் 42 வாரங்களுக்குப் பிறகு பிந்தியகாலப் பிறப்பாக 3 முதல் 12% வரையிலான குழந்தைகள் பிறந்தன. வளர்ந்த நாடுகளில் பெரும்பாலான பிரசவங்கள் மருத்துவமனையில் நிகழ்கின்றன, அதே வேளையில் வளர்ந்துவரும் நாடுகளில் பெரும்பாலான பிறப்புகள் பாரம்பரியமான பிரசவ உதவியாளரின் உதவியுடன் வீட்டில் நிகழ்கின்றன.கருத்தரிப்புகாலம் முழுமைக்கும் கருப்பையினுள் குழந்தை வளர்ச்சிக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டிருந்த நஞ்சுக்கொடி அல்லது சினைக்கொடி என அழைக்கப்படும் சூல்வித்தகமும் (placenta), இந்த குழந்தை பிறப்பின்போது, குழந்தையுடன் சேர்த்து வெளியேற்றப்படும்.
பட்டுப்புழு வளர்ப்பு அல்லது பட்டுவளர்ப்பு (Sericulture, அல்லது silk farming) என்பது பட்டு நூல் தயாரிப்பதற்கு வேண்டிய பட்டுப்புழுவை வளர்க்கும் முறையைக் குறிக்கும். பட்டு தயாரிப்பிற்கு பல சிற்றினப் புழுக்களை இருந்தாலும் கம்பளிப்புழு இனமான பொம்பெக்ஸ் மொரியே (Bombyx mori) பெரிதும் பயன்படுகிறது. புதிய கற்காலம் தொட்டே சீனாவில் முதன்முதலாகப் பட்டு தயாரிப்பு செய்தாகக் கருதப்படுகிறது.
அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss, பிறப்பு: அக்டோபர் 9, 1968) ஒரு தமிழக அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். இவரின் தந்தையார் மருத்துவர் ராமதாஸ் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சியில் உறுப்பினர். 2004-இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய நடுவண் அரசில் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சராகப் பணியாற்றினார்.
இந்திய விடுதலை நாள் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.இந்த நாளில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
கடந்த நூற்றாண்டு கண்ட தனிப்பெரும் சாதனையான படியெடுப்பு இனப்பெருக்க முறையின் வெற்றியைத் தொடர்ந்து ஆழமான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் துறையே குருத்தணு (Stem Cell) தொடர்பான துறையாகும். இத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளால் மனிதன் எதிர்நோக்கும் சகல நோய்களுக்கும் தீர்வு கண்டுவிட முடியும் என எதிர் பார்க்கப்படுகிறது. குருத்தணு எனப்படுவது அனைத்துப் பல்கல உயிரினங்களிலும் காணப்படும், மேம்பாடு அடையாத மற்றும் வகைப்பாட்டிற்கு உட்படாத (unspecilaized and undifferentiated), ஆனால் கலப்பிரிவு, மற்றும் உயிரணு வேற்றுமைப்பாடு மூலம் புதிய உயிரணுக்களை உருவாக்குவதுடன் மேம்பட்ட உயிரணுக்களை (specialized cells) உருவாக்கி வகைப்படுத்தப்பட்டு வெவ்வேறு இழையங்களையும் உருவாக்கும் தன்மை கொண்ட உயிரணுக்களாகும்.
சிங்கப்பூர் அல்லது அலுவல்முறையாக சிங்கப்பூர் குடியரசு (The Republic of Singapore, சீனம்: 新加坡共和国, Xīnjīapō Gònghéguó; மலாய்: Republik Singapura) தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ளது, ஜொகூர் நீர்ச்சந்தி இதனை மலேசியாவிடமிருந்து பிரிக்கிறது. தெற்கில் சிங்கப்பூர் நீர்ச்சந்தி இந்தோனேசியாவின் ரியாவு தீவுகளைப் பிரிக்கின்றது.
இந்து ( ஒலிப்பு) (தேவநாகரி:हिंदू) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் மெய்யியல், சமயங்கள் மற்றும் பண்பாடு ஆகியவற்றைக் குறிக்கும் அடையாளச் சொல்லாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி "இந்து" என்பது இந்திய சமயங்களைக் குறிக்கிறது.(உதா: இந்து சமயம், சைவம், வைணவம், சமணம், பௌத்தம் அல்லது சீக்கியம்). பொதுவாக இந்து சமயத்தவரைக் குறிப்பிட இந்து என்ற சொல் பயன்படுகிறது.
கட்டிடக்கலை என்பது கட்டிடங்கள் மற்றும் அதன் உடல் கட்டமைப்புகளை வடிவமைத்தல், செயல்முறைத் திட்டமிடல், மற்றும் கட்டிடங்கள் கட்டுவதை உள்ளடக்கியதாகும். கட்டடக்கலை படைப்புகள், கட்டிடங்கள் பொருள் வடிவம், பெரும்பாலும் கலாச்சார சின்னங்களாக மற்றும் கலை படைப்புகளாக காணப்படுகின்றது. வரலாற்று நாகரிகங்கள் பெரும்பாலும் அவர்களின் கட்டிடகலை சாதனைகளின் மூலம் அடையாளம் காணப்படுகின்றன.
கே.பாக்யராஜ் (Bhagyaraj, பிறப்பு: சனவரி 7, 1951) ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவில் என்னும் ஊரில் பிறந்தவர். தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர், திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர், சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட ஒரு கலைஞர். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக, 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் திரைப்படக்கலை பயின்றவர்.
மூளைச்சவ்வுக் காய்ச்சல் அல்லது மூளைக் காய்ச்சல் (Brain fever) என்பது மூளையைச் சுற்றி உள்ள மூளைச் சவ்வுகளின் வீக்கமாகும். பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சைகள் போன்ற நோய்க்காரணிகளினால் இந்நோய் ஏற்படுகிறது. தலைவலி, ஒளி விரும்பாமை, எரிச்சல், கழுத்துப் பகுதியில் தசை இறுக்கம், காய்ச்சல் மற்றும் பிற நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.
பனையிலிருந்து பெறப்படும் பயன்கள்
பனையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பலவகையான பயன்களை மக்கள் பெறுகிறார்கள். பனையிலிருந்து ஏராளமான உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. முற்காலத்தில் தயாரித்துப் பயன்படுத்தப்பட்ட எத்தனையோ பொருட்கள் நவீன மாற்றீடுகளுக்கு இடம் கொடுத்து ஒதுங்கிக் கொண்டன.
அணுக்கரு ஆற்றல் இந்தியாவின் மின்சார உற்பத்தியில் அனல், புனல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு அடுத்து நான்காமிடத்தில் உள்ளது. 2012 வரை, இந்தியாவில் ஆறு அணு மின் நிலையங்களில் இயங்கும் 20 அணுக்கரு உலைகளில் 4,780 மெவா மின்சாரம் உற்பத்தியாகிறது. மேலும் ஏழு அணுக்கரு உலைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன; இவற்றின் மூலம் கூடுதலாக 5,300 மெகாவாட் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.அக்டோபர் 2010இல் இந்தியாவில் "2032ஆம் ஆண்டுக்குள் 63,000 மெவா அணுமின் ஆற்றலை உற்பத்தி செய்ய திட்டமொன்றை" தீட்டியபோதும், "திட்டமிடப்பட்ட பகுதி மக்களின் எதிர்ப்புகளாலும் அணுக்கரு உலை குறித்த பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடாதிருத்தல் குறித்து எழுந்த புதிய ஐயங்களாலும்" இது தள்ளிப்போடப்படுள்ளது.
சொட்டு நீர்ப் பாசனம் அல்லது நுண்ணீர்ப் பாசனம் (Drip irrigation system) என்பது முதன்மை குழாய், துணைக் குழாய்கள், மற்றும் பக்கவாட்டுக் குழாய்கள் ஆகிய அமைப்புகள் வாயிலாக பயிர்களுக்கு தேவையான நீரை, துளித்துளியாக மண்ணின் மேற்பரப்பிலோ அல்லது, பயிர்களின் வேர்ப்பகுதியில் நேரடியாகவோ வழங்கும் ஒரு மேம்பட்ட நீர்ப்பராமரிப்பு முறையாகும். ஓவ்வொரு விடுகுழாய் அல்லது உமிழி மற்றும் புழைவாய், பயிர்களுக்கு தேவையான நீர், ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சிக்குத் தேவைப்படும் பொருள்களை, பயிர்களின் வேர்ப் பகுதியில், நேராக அளந்து அளிக்கிறது. நீராதாரம் குறைந்து வந்தாலும், சாகுபடி நிலப்பரப்பு குறைந்து வந்தாலும் வாழும் மக்களுக்கு உணவு அளிக்க விளைச்சல் (உற்பத்தித்) திறனை அதிகரித்து தரமான உணவு விளைவிப்பைப் பெருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசம் பழைய ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து 2 சூன் 2014-ஆம் ஆண்டில் தெலுங்கானா பகுதி பிரிக்கப்பட்டபின், இராயலசீமை மற்றும் கடற்கரை ஆந்திரா பகுதிகளை உள்ளடக்கியதே தற்போதைய ஆந்திரப் பிரதேசம் ஆகும். ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகராக அமராவதி நகரை அமைக்க, 22 அக்டோபர் 2015 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியால் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று. ஐதராபாத் ஆந்திரப்பிரதேசத்துக்கும் தெலுங்கானாவுக்கும் பொது தலைநகராக 10 ஆண்டுகளுக்கு இருக்கும்.
ஒற்றுமைக்கான சிலை (Statue of Unity) இந்திய விடுதலை இயக்கத்தலைவரான வல்லபாய் பட்டேல் நினைவாக அர்ப்பணிக்கப்பட்ட சிலையாகும். இந்த சிலை இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் சாது நர்மதா அணை எதிரேயுள்ள சாது பெட் தீவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையானது 20,000 சதுர மீட்டர் அளவுள்ள இடத்தில், 12 சதுர கிமீ பரப்பளவினைக் கொண்ட ஏரியில் அமைந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்
இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை அதிகாரியே ஆளுநர் என அழைக்கப்படுகிறார். இதுவரையிலும் 24 ஆளுநர்கள் பணியாற்றியிருக்கின்றனர். தற்போதைய ஆளுநராக உர்சித் படேல் பணியாற்றுகிறார்.
வேதித் தனிமம் (Chemical element: இலங்கை வழக்கு: மூலகம்) என்பது அணுக்கருவில் ஒரே எண்ணிக்கையில் புரோட்டான்களைப் பெற்றிருக்கும் ஒரே வகையான அணுக்களைக் குறிக்கும் . 118 தனிமங்கள் இதுவரை அடையாளம் கானப்பட்டுள்ளன. இவற்றில் 94 தனிமங்கள் இயற்கையில் தோன்றுவனவாகும் எஞ்சியிருக்கும் 24 தனிமங்களும் செயற்கை முறையில் தயாரிக்கப்படுவனவாகவும் இருக்கின்றன.
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் அல்லது கல்வி சட்டம் (RTE) 4 ஆகஸ்ட் 2009 இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இந்த கல்வி உரிமை சட்டம் இந்தியாவில் 6 மற்றும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி முக்கியத்துவத்தை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 21A கீழ் விவரிக்கிறது. சட்டம் ஏப்ரல் 2010 1 ம் தேதி அமலுக்கு வந்த போது, இந்தியா கல்வி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு அடிப்படை உரிமை என்று செய்யும் 135 நாடுகளில் ஒன்றாக மாறியது.
நீர் மாசடைதல் அல்லது நீர் மாசுபாடு என்பது, ஏரிகள், ஆறுகள், கடல்கள், நிலத்தடி நீர் என்பன போன்ற நீர் நிலைகள் மனித நடவடிக்கைகளால் தூய்மை இழப்பதைக் குறிக்கும். நீரின் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகளில் மாறுதல்கள் நிகழ்வதனால் நீர் மாசுபாடு ஏற்படுகின்றது. இது அந் நீர் நிலைகளில் வாழும் விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.