The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது இந்தியாவில் மாநில அரசு ஒன்று கலைக்கப்பட்டு அல்லது இடைநிறுத்தப்பட்டு ஒன்றிய அரசின் மேற்பார்வையில் இயங்குவதைக் குறிக்கிறது. இவ்வகை ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிக்கு இந்திய அரசியலமைப்பு விதி 356 வழி செய்கிறது. இவ்விதியின்படி, மாநிலத்தில் அரசியலமைப்பு அமைப்புகள் இயங்காதிருக்கும்போது மாநில அரசுகளைக் கலைக்க ஒன்றிய அரசிற்கு அதிகாரம் உள்ளது.மாநில சட்டப்பேரவையில் எந்தவொருக் கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிட்டாது ஆட்சி அமைக்க இயலாதிருப்பினும் குடியரசுத் தலைவராட்சி அமையலாம்.
தமிழ் ராக்கரஸ், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களை சட்டத்திற்கு புறம்பாக இணையத்தில் வெளியிடும், ஒரு இணையத்தளம் ஆகும். புதிய திரைப்படங்களை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சவாலாக திரையிடப்பட்ட அன்றே இணையத்தில் பரப்பி வருகின்றனர். இந்த இணையத்தளத்தின் உரிமையாளரெனக் கருதி, கவுரிசங்கர் என்பவரை கைது செய்தனர், ஆனால் அவருக்கும் இந்த இணையத்தளத்திற்கும் தொடர்பில்லை என விசாரணையில் தெரியவந்தது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
வேதாந்தா ரிசோர்சஸ் பிஎல்சி (Vedanta Resources plc, LSE: VED) அல்லது தமிழாக்கம் வேதாந்தா வளங்கள் பொதுவில் வரையறுக்கப்பட்ட நிறுவனம் சுரங்கத்தொழில் மற்றும் உலோகஙகளில் உலகளவில் ஈடுபடும் ஓர் நிறுவனமாகும். ஐக்கிய இராச்சியத்தின் இலண்டனில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. இரும்பல்லாத உலோகங்களில் இந்தியாவின் மிகப்பெரும் சுரங்கங்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்திற்கு ஆத்திரேலியா மற்றும் சாம்பியாவில் சுரங்கங்கள் இருக்கின்றன.
ஜாலியன்வாலா பாக் படுகொலை (Jallianwala Bagh Massacre), அல்லது அமிர்தசரஸ் படுகொலை என்பது வட இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 இல் ரெஜினால்ட் டையர் என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் பிரித்தானிய இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட பீரங்கிச் சூட்டு நிகழ்வைக் குறிக்கும். இந்நிகழ்வில் பெண்கள், சிறுவர்கள் நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நீடித்த இச்சூட்டு நிகழ்வில் மொத்தம் 1650 தடவைகள் அல்லது ஒரு சிப்பாய்க்கு 33 சூடுகள் என்ற முறையில் சுடப்பட்டன.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு (environmental protection) என்பது சுற்றசூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகையினாலும் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்று சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவர் கிமு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார்.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், அதன் முழுமையான நிலையில், தமிழ் நாட்டின் 1920 முதலான வரலாற்றில் இருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும். தமிழக முதல்வர் அல்லது தமிழ்நாடு முதலமைச்சர், இந்தியாவின் தமிழ்நாடு மாநில அமைச்சரவையின் தலைமை அமைச்சர் ஆவார். இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பெறும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக மக்களின் வாக்குகளால் வெற்றி பெறும் உறுப்பினர்களின் பெரும்பான்மையைச் சார்ந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பெற்று அவர்களின் பரிந்துரையின் படி தமிழத்தின் ஆளுநரால் ஆளுமை புரிய அழைத்ததின் பேரில் தமிழகத்தின் முதல்வராக ஐந்து ஆண்டுகள் ஆளுமை புரிய கடமைபட்டவராவார்.
முற்காலத்தில் பெருநிலக் கிழார்களாக வாழ்ந்துவந்த முத்தரையர்கள் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக தஞ்சாவூர், திருச்சி,புதுக்கோட்டை பகுதிகளில் பல்லவ மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர். தமிழகத்தில் 29 உட்பிரிவினராக அறியப்படுகின்ற முத்தரையர் சமுதாய மக்கள் முதிராஜ், முத்தராசி என்றும் தேனுகோல்லு, முத்திராஜுலு, முத்துராசன், நாயக், தெலுகுடு, பாண்டு, தெலுகா, கோலி, தலாரி என்று ஆந்திரப் பிரதேசதிலும், கங்கமதா, கங்கவார், பேஸ்த, போயர், கபீர், வால்மீகி, கங்கைபுத்திரர், கோலி, காபல்கார் என்று கருநாடகத்திலும் அழைக்கப்படுவர். கேரளா மாநிலத்தில் அரையர் என்ற பெயரால் அழைக்கப்படுவர்.
பாபா சாகேப் (பொருள்: தந்தை) என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கிலம்:Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; பிறப்பு:14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
மழைநீர் சேகரிப்பு என்பது மழைநீரைத் திரட்டி, ஒருங்கே குவித்து, சேமித்து வைப்பது ஆகும். மழைநீரைச் சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கு, கால்நடைகளுக்கு, நீர்ப்பாசனம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்குப் பயன்படுத்தலாம். வீடுகள், நிறுவனங்களின் கடடிடங்களின் மேற்கூரைகளில் இருந்தும் இதற்காகத் தயார் செய்யப்பட்ட தரைவழியாகவும் சேகரிக்கப்படும் மழைநீர் குடிநீருக்கான முக்கியமான ஆதாரமாகப் பயன்படுத்தலாம்....
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் சாதிகள் (76) பட்டியல் பழங்குடியினர் (36) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79) என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும் தஞ்சைப் பெரிய கோயில் ("Big temple") அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் ("Peruvudayar Temple") என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)
உலகின் பல விவவிவேகம் 2017 தமிழில் வெளிவந்த அனைத்துத் திரைப்படங்களையும் அகர வரிசையில் பட்டியலிட முனைகின்றது இப்ப ட்டியல்.அ
வேலுப்பிள்ளை பிரபாகரன் (நவம்பர் 26, 1954 – மே 17 அல்லது மே 18 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
சொல் (ஒருசொல், ஒன்று அல்லது பல பொருள், நிகண்டு வழி)
ஒரு சொல்லானது இன்னின்ன பொருளைத் தரும் என முதன்முதலில் தோன்றிய திவாகர நிகண்டு சொற்பொருள் இங்குத் தொகுக்கப்பட்டு அகர வரிசையில் தரப்படுகின்றன. இத்தொகுப்பில் 343 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலுக்குச் சேந்தன் திவாகம் என்னும் பெயரும் உண்டு.
கடல் மாலை திட்டம் (Sagar Mala project) இந்தியத் துறைமுகங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி அமைப்பதே கடல் மாலைத் திட்டத்தின் நோக்கமாகும். இதனால் நாட்டின் கடற்கரை பகுதிகளில் தொழில் மற்றும் போக்குவரத்து வசதிகள் மேம்படும். ,பழைய மீன்பிடி துறைமுகங்களையும், வணிக துறைமுகங்களையும் மேம்படுத்தும் திட்டத்திற்காக இந்திய அரசு 70,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய தீர்மானித்துள்ளது.
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் ஏப்ரல் 17, 1997 ஆம் ஆண்டு மாநில அதிகாரத்தின் கீழ் பிரிவு-21 இன் மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம், 1993, இன்படி கட்டமைக்கப்பட்டது. இதன்படி மாநில மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள ஒரு சில இந்திய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இவ்வாணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.
கொம்மாரெட்டி சாவித்திரி (Kommareddy Savitri) அல்லது சாவித்திரி கணேஷ் (Savitri Ganesh, தெலுங்கு: సావిత్రి కొమ్మారెడ్డి; டிசம்பர் 6, 1935 – டிசம்பர் 26, 1981), புகழ் பெற்ற ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 318 படங்களில் நடித்திருக்கிறார்.
சிவன் (Śiva) என்பவர் இந்துப் பிரிவான சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம் பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர். இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசாரங்களை உருவாக்கினார்களென்றும்,தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான திருமாலையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது.
சட்டவிரோதமாகக் கூடுதல் (Unlawful Assembly) என்பது பொது மக்களின் அமைதிக்கு ஊறு செய்யும் நோக்கில், பொது இடங்களில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் கலகம், கிளர்ச்சி அல்லது கலவரம் செய்வதைத் தூண்டும் நோக்கில் கூடுவதைக் குறிக்கும். இந்தியா, கனடா, வங்காள தேசம், ஹாங்காங் ஆகிய நாடுகளில் பொது மக்கள் சட்டவிரோதமாகக் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபாடு (சூழல் மாசடைதல்) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும். சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது.
இலங்கை (Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, சிறீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
இரும்புத்திரை (2018 திரைப்படம்)
இரும்புத்திரை (Irumbu Thirai), பி. எஸ். மித்ரன் இயக்கத்தில், விஷால் பிலிம் ஃபேக்டரி சார்பில் விஷாலின் நடிப்பு, தயாரிப்பில் வெளியாகவுள்ள தமிழ்த்திரைப்படம்.
ஐக்கிய நாடுகள், அல்லது ஐநா அல்லது யூஎன், என்பது, பல நாடுகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல், கலிபோர்னியாவிலுள்ள, சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டது.
காளி (Kaali), கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகிவரும் தமிழ்த்திரைப்படம்.. விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா ஆகியோர் முதன்மைப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் ரிச்சர்டு ம நாதனின் ஒளிப்பதிவிலும், விஜய் ஆண்டனியின் இசையிலும், லாரன்சு கிசோரின் படத்தொகுப்பிலும் வெளியாகவுள்ள தமிழ்த்திரைப்படம்.
சிலநேரங்களில் எம்எஸ் தோனி என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகின்ற மகேந்திரசிங் தோனி (இந்தி: महेन्द्र सिंह धोनी) 1981ஆம் ஆண்டு ஜூலை 7இல் பிறந்தார். இந்திய துடுப்பாட்ட வீரரும் முன்னால் இந்திய அணிக்கு ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு தலைவராக இருப்பவரும் ஆவார். துவக்கத்தில் மிகுந்த ஆரவாரமான அதிரடியான மட்டையாளராக அறியப்பட்டிருந்த தோனி இந்திய ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு தலைமையேற்றதிலிருந்து மென்மையான தலைவர்களுள் ஒருவராக குறிப்பிடப்படுகிறார்.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்:Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
மதுரை (ஆங்கிலம்: Madurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் மதுரை, மக்கள் தொகை அடிப்படையிலும், நகர்ப்புற பரவல் அடிப்படையிலும்,மற்றும் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாகும் பத்து இலட்சத்துக்கு மேல் மக்கட்தொகைக் கொண்ட இந்திய மாநகரங்களின் பட்டியலில் 31ஆவது பெரிய நகரம் ஆகும். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம் இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது.
சில்டெனபில் சிட்ரேட் , வயக்ரா , ரிவேஷியோ மற்றும் பல்வேறு பெயர்களில் விற்கப்படுவது விறைப்புத் திறனின்மை மற்றும் நுரையீரல் தமனி உயர் இரத்த அழுத்தம் (பிஏஹெச்) ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்து. இது ஃபைசர் என்ற மருந்தாக்கியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு சந்தையிடப்படுகிறது. இது ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை முறைப்படுத்தும் என்சைமான சிஜிஎம்பி உள்ள பாஸ்போடையஸ்ட்ரேஸ் டைப் 5 ஐ தடுத்து நிறுத்தவதன் மூலமாக செயல்படுகிறது.
ஏபிரகாம் பென்சமின் - டி - வில்லியர்ஸ் (Abraham Benjamin de Villiers, பிறப்பு: பெப்ரவரி 17 1984), தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் குச்சக் காப்பாளர் மற்றும் மட்டையாளர் ஆவார். இவர் டைடன்ஸ் அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மட்டையாளார்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
கருத்தரிப்பு என்பது, பாலூட்டிகளில், கருக்கட்டல் நிகழ்வின்போது உருவாகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்த சந்ததிக்கான உயிரி, முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கரு நிலையில் குழந்தை பிறப்புவரை, பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையில் பதிந்து, தாங்கிக் கொள்ளப்படும் நிலையாகும். இந்தக் கட்டுரையில் மனிதரில் நிகழும் கருத்தரிப்பே விரிவாக ஆராயப்படுகின்றது. மனிதரில், பருவமடைந்த ஆரோக்கியமான பெண்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள் உற்பத்தியாகும்.
பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி அல்லது பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி (Acquired immune deficiency syndrome) என்பது எச்.ஐ.வி எனப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் குறைப்பு செய்யும் திறன் கொண்ட தீ நுண்மத்தால் (வைரசால்) ஏற்படுகிற ஒரு நோயாகும்,. இந்த நோயானது மனிதர்களின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் செயற்படுதிறன் வலுவற்றதாகும் நிலையை படிப்படியாகத் தீவிரமடையச் செய்து, வாய்ப்பை எதிர் நோக்கியிருக்கும் தொற்றுநோய்களாலும், கட்டிகளாலும் மனிதர்களை இலகுவில் பாதிப்படையக் கூடியவர்களாகச் செய்கிறது. எச்.ஐ.வி தொற்றுக்குட்பட்ட இரத்தம், விந்து, யோனித் திரவம், முன்விந்துத் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களைக் கொண்ட உடலில் உள்ள சீதச்சவ்வு அல்லது இரத்த ஓட்டத்துடன் ஏற்படும் நேரடித் தொடர்பினால் இந்த வைரசானது ஒருவரிலிருந்து வேறொருவருக்குத் தொற்றுகின்றது.
காச நோய் (Tuberculosis, டியூபர்க்குலோசிசு) என்பது மைக்கோபாக்டீரியா (mycobacteria) என்னும் நுண் கோலுயிரியின் தாக்குதலால் மாந்தர்களுக்கு ஏற்படும் கடும் தொற்றுநோய். இதனால் நோயுற்றவர் இறக்கவும் நேரிடும். இந்நோய் முக்கியமாக மைக்கோபாக்டீரியம் டியூபர்க்குலோசிசு (Mycobacterium tuberculosis) என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகின்றது.
பஞ்சாயத்து ஒன்றியம் அல்லது ஊராட்சி ஒன்றியம் (Panchayat Union or Block Development Office), இந்தியாவில், தமிழ்நாட்டில், 1994ம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி சட்டத்தின் படி வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 385 பஞ்சாயத்து ஒன்றியங்கள் உள்ளது. அவற்றுள் நீலகிரி மாவட்டம் குறைந்த பட்சமாக நான்கு பஞ்சாயத்து ஒன்றியங்களும், விழுப்புரம் மாவட்டம் அதிக பட்சமாக 22 பஞ்சாயத்து ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.
வேல்ஸ் இளவரசி டயானா (Diana, Princess of Wales, இயற்பெயர்: பிரான்செஸ் ஸ்பென்சர், ஜூலை 1, 1961 - ஆகஸ்ட் 31, 1997) வேல்ஸ் இளவரசர் சார்ல்சின் முதலாவது மனைவி. இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹென்றி (ஹரி) ஆகியோர் பிரித்தானியாவுக்கு முறையே இரண்டாவது, மூன்றாவது முடிக்குரியவர்கள் ஆவர். இளவரசர் சார்ல்சுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார்.
உலகின் புதிய ஏழு அதிசயங்கள் (New 7 Wonders of the World, 2000-2007) என்பது உலகின் பழைய ஏழு அதிசயங்களின் யோசனையை புதிய அதிசயங்களின் ஒரு பட்டியலைக் கொண்டு புதுப்பிப்பதாகும். நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை என்னும் தனியார் நிறுவனம் பிரபலமுற்றவைக்கான கருத்துக்கணிப்பு ஒன்றினை ஏற்பாடு செய்தது, வெற்றி பெற்றவை 2007 சூலை 7 அன்று போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் அறிவிக்கப்பட்டன<ref">Dwoskin, Elizabeth (2007-07-09), "Vote for Christ", நியூஸ்வீக் </ref> 100 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் தங்கள் வாக்குகளை இணையம் வழியாக அல்லது தொலைபேசி வழியாக பதிவு செய்ததாக சுவிட்சர்லாந்து நாட்டை மையமாகக் கொண்டு செயல்படும் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தெரிவிக்கிறது. ஒருவரே பலவாக்குகளை பதிவு செய்வதை தடுக்க வழியில்லாததால், இந்த கருத்துக்கணிப்பு "தீர்மானமாக அறிவியல்பூர்வமற்ற" ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்
இது இந்தியப் பிரதம மந்திரிகளின் முழுப் பட்டியலாகும். இதில் 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியப் பிரதமராக பதவி ஏற்றவரும் இதில் அடங்கும். இந்திய பிரதம மந்திரி என்ற பதவியானது இந்திய அரசாங்கத்தின் தலைமையாகவும், தலைமைச் செயலதிகாரம் கொண்டதாகவும் உள்ள பதவியாகும்.
உயர் இரத்த அழுத்தம் (hypertension) சில நேரங்களில் “தமனி வழி உயர் இரத்த அழுத்தம்”, தமனி / தமனிகளில் இரத்த அழுத்தம் உயர்த்தப்பெற்ற ஒரு நீடித்த(மருந்து) / நீடித்த நோய் / மருத்துவ நிலை ஆகும். இரத்தக் குழாய்களின் மூலமாக செயல் படும் இரத்த ஓட்டத்திற்கு, இந்த உயர்த்தப்பெற்ற நிலையினால் இதயம் வழக்கத்தைவிட கடினமாக வேலை செய்ய தேவைப்படுகிறது. இதய துடிப்புகளுக்கிடையே இதய தசை சுருங்குவது (சிஸ்டோல்) அல்லது தளர்வுறுவது ( டைஸ்டோல் ) என்பதை பொறுத்து இரத்த அழுத்தம் இதய சுருங்கியக்க அழுத்தம் மற்றும் விரிவியக்க அழுத்தம் என்ற இரண்டு அளவுகளை உள்ளடக்கியது.
ஐட்டம் நம்பர் (Item Number) அல்லது குத்தாட்டப் பாடல் அல்லது குத்துப்பாட்டு என்பது இந்தியத் திரைப்படங்களில் வரும் ஒரு பாடல் காட்சி. திரைக்கதைக்கு சம்பந்தமற்ற இப்பாடல் காட்சிகள் கவர்ச்சியான உடையில் பாலிச்சையைத் தூண்டும் வண்ணம் நடனமாடும் பெண்களைக் காட்சிப்படுத்துகின்றன; வர்த்தக ரீதியாக படத்தின் வெற்றிக்கும் உதவுகின்றன.
விளம்பரம் (advertising) என்பது தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பிராண்டுகளைஅல்லது ஒரு குறிப்பிட்ட வகை தயாரிப்புகள் அல்லது சேவைகளை அதிக அளவில் வாங்க உண்டாக்கப்பட்ட தொடர்பு சாதனம். 19ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒட்டுமொத்த உற்பத்தி அதிகமானதை தொடர்ந்து நவீன விளம்பரங்கள் முன்னேற்றமடைந்தன. வடிவமைக்கப்பட்ட மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட "வடிவம்" மூலம் அந்தக்குறிப்பிட்ட சாதனங்கள் ,சேவைகளின் கொள்முதலை அதிகப்படுத்தும் வகையில் நிறைய விளம்பரங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகளின் பட்டியல்
தமிழ் நாட்டில் 300க்கும் மேற்பட்ட வகை பறவைகள் பார்க்கலாம்.
தற்கால இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மண்டலம் வரலாற்றுக் காலத்துக்கு முன்பு முதல் மக்கள் வாழும் உறைவிடமாக தொடர்ந்து இருந்துவந்துள்ளது. தமிழ்நாட்டின் வரலாறும் தமிழ் மக்களின் நாகரீகமும் உலகின் மிகப் பழமையானவையாகும். முந்தைய பழங்கற்காலம் முதல் தற்காலம் வரையிலான தமிழ்நாட்டின் வரலாறு முழுவதிலும், இந்தப் பகுதியானது பல்வேறு புறக் கலாச்சாரங்களுடன் ஒருங்கிணைந்து இருந்து வந்துள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் (பிறப்பு: செப்டம்பர் 19, 1965) ஒரு அமெரிக்க விண்வெளி வீராங்கனையும் கப்பல்படை அதிகாரியும் ஆவார். இவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14ம் விண்வெளிப் பயணத்திற்கு உறுப்பினராக்கப்பட்டார், பின் அவர் 15ம் விண்வெளி பயணத்தில் இணைந்தார். விண்வெளியில் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் விண்வெளியில் பயணம் செய்த சாதனையை (195 நாட்கள்) அவர் கொண்டிருக்கிறார்.
கருச்சிதைவு (Miscarriage) என்பது பெண்கள் கர்ப்பமாக இருக்கும் நிலையில், முளையமோ அல்லது முதிர்கருவோ மேலும் உயிருடன் இருக்க முடியாத ஒரு நிலையில் தானாகவே அழிந்துபோதல் அல்லது சிதைந்துபோதலைக் குறிக்கும். இது பொதுவாகக் கருத்தரிப்பின் ஆரம்ப காலத்தில், அதாவது கருக்காலத்தின் 20 கிழமைக்குள் தன்னிச்சையாக நிகழும் ஒரு சிக்கலான நிலையாகும். இந்தக் கால எல்லை நாட்டுக்கு நாடு வேறுபட்டுக் கூறப்படுகின்றது.
பசுமை வேட்டை நடவடிக்கை (Operation Green Hunt) அல்லது கிரீன் ஹன்ட் நடவடிக்கை எனப்படுவது இந்திய அரசு மற்றும் துணை இராணுவ படைகள் இணைந்து நக்சலைட்டுகளுக்கு எதிராக நடத்தப்படும் போரை வர்ணிக்க இந்திய ஊடகங்களில் பயன்படுத்தப்படும் பெயர் ஆகும். இந்த நடவடிக்கையானது "சிகப்பு நடைபாதை" (Red Corridor) என்று அழைக்கப்படும் நக்சலைட்டுகள் நிறைந்த ஐந்து மாநிலங்களில் 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. இவ்வார்த்தையானது சட்டீஸ்கர் மாநில காவல் அதிகாரிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (மாவோயிஸ்ட்) எதிரான ஒரு வெற்றிக்கு பிறகு முதலில் புழக்கத்திற்கு வந்தது.
கீதா ஜீவன் தமிழ்நாடு அரசின் முன்னாள் சமூகநலத்துறை அமைச்சர். தூத்துக்குடியில் 06-05-1970 அன்று பிறந்த இவர் தூத்துக்குடியில் ஆங்கிலவழிக் கல்வியளிக்கும் ஒரு பள்ளிக்கூடத்தின் தாளாளராக இருந்து வருகிறார். தூத்துக்குடி மாவட்ட தி.மு.க செயலாளரும், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.
நடிகையர் திலகம் (Nadigaiyar Thilagam), நாக் அஸ்வினின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில், வைஜெயந்தி மூவிசின் தயாரிப்பில் வெளியாகவுள்ள சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம். துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், சமந்தா, அனுஷ்கா, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படம் மிக்கி ஜெ.