The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
தமிழ் ராக்கரஸ், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களை சட்டத்திற்கு புறம்பாக இணையத்தில் வெளியிடும், ஒரு இணையத்தளம் ஆகும். புதிய திரைப்படங்களை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சவாலாக திரையிடப்பட்ட அன்றே இணையத்தில் பரப்பி வருகின்றனர். இந்த இணையத்தளத்தின் உரிமையாளரெனக் கருதி, கவுரிசங்கர் என்பவரை கைது செய்தனர், ஆனால் அவருக்கும் இந்த இணையத்தளத்திற்கும் தொடர்பில்லை என விசாரணையில் தெரியவந்தது.
அப்பர் திருநாவுக்கரசு நாயனார் கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், 63 நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரை தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில் தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர். இவர் திருஞானசம்பந்தர் அப்பர் (தந்தை) என்று அழைத்தமையால்,.
திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவர் கிமு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
நீட் தேர்வு (National Eligibility cum Entrance Test) என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம், மற்றும் ஓமியோபதி துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் இத்தேர்வு அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்விற்கு (All India Pre Medical Test (AIPMT)) மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வானது அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.
ஐட்டம் நம்பர் (Item Number) அல்லது குத்தாட்டப் பாடல் அல்லது குத்துப்பாட்டு என்பது இந்தியத் திரைப்படங்களில் வரும் ஒரு பாடல் காட்சி. திரைக்கதைக்கு சம்பந்தமற்ற இப்பாடல் காட்சிகள் கவர்ச்சியான உடையில் பாலிச்சையைத் தூண்டும் வண்ணம் நடனமாடும் பெண்களைக் காட்சிப்படுத்துகின்றன; வர்த்தக ரீதியாக படத்தின் வெற்றிக்கும் உதவுகின்றன.
சிவன் (Śiva) என்பவர் இந்துப் பிரிவான சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம் பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர். இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசாரங்களை உருவாக்கினார்களென்றும்,தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான திருமாலையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது.
பெண்குறிக் காம்பு (clitoris அல்லது மதன பீடம் ,பெண்குறிப் பருப்பு, யோனிலிங்கம்,யோனிப் பருப்பு) பெண் பாலூட்டிகளில் மட்டுமே உள்ள ஓர் பாலுறவு உறுப்பாகும். மனிதர்களில் பருப்பு அல்லது மொட்டு போன்று காணப்படும் பகுதி சிறுநீர்க் குழாய் மற்றும் புணர்புழை துளைகளின் மேலே சிறிய இதழின் முன்பக்க சந்திப்புக்கு அண்மையில் உள்ளது. பெண்குறிக் காம்பிற்கு ஒத்தமைப்புடைய ஆண்குறி போலன்றி இதன் சேய்மையில் சிறுநீர்க்குழாய் கொண்டிருக்கவில்லை.
சொல் (ஒருசொல், ஒன்று அல்லது பல பொருள், நிகண்டு வழி)
ஒரு சொல்லானது இன்னின்ன பொருளைத் தரும் என முதன்முதலில் தோன்றிய திவாகர நிகண்டு சொற்பொருள் இங்குத் தொகுக்கப்பட்டு அகர வரிசையில் தரப்படுகின்றன. இத்தொகுப்பில் 343 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலுக்குச் சேந்தன் திவாகம் என்னும் பெயரும் உண்டு.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)
உலகின் பல விவவிவேகம் 2017 தமிழில் வெளிவந்த அனைத்துத் திரைப்படங்களையும் அகர வரிசையில் பட்டியலிட முனைகின்றது இப்ப ட்டியல்.அ
பீனிக்ஸ்' (Phoenix) ஒரு புனித தீ பறவையாக வருணிக்கப்படுகின்றது. எகிப்திய, கிரேக்க, கிறிஸ்தவ புராண (தொன்மவியல்) கதைகளிலும், நவீன வரைகதைகளிலும் பீனக்ஸ் பறவை இடம்பிடிக்கின்றது. "தானே தீக்குளித்து பின்னர் அதன் சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவதாக" என்று புராண கதைகளில் பீனக்ஸ் பறவையின் தன்மையை தற்காலத்திலும் எடுத்தாள்வதை காண்கிறோம்.
தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும் தஞ்சைப் பெரிய கோயில் ("Big temple") அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் ("Peruvudayar Temple") என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபாடு (சூழல் மாசடைதல்) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும். சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது.
சூரியக் குடும்பம் (Solar System) அல்லது சூரியத் தொகுதி அல்லது ஞாயிற்றுதொகுதி என்பது சூரியனையும் சூரியனின் ஈர்ப்புவிசையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து பருப்பொருட்களையும் உள்ளடக்கிய ஒரு தொகுதி ஆகும். இச் சூரியத்தொகுதி கதிரவனைச் சுற்றி வரும் எட்டு கோள்களையும், இக்கோள்களின் 162 (இதுவரை தெரிந்த கணக்கெடுப்பின்படி) துணைக்கோள்களையும், சிந்து குறுங்கோள்களையும், அக்குறுங்கோள்களின் துணைக்கோள்களையும் மற்றும் ஆயிரக்கணக்கான பிற வான்பொருட்களையும் உள்ளடக்கியது. வால்வெள்ளி, எரிகற்கள், விண்கற்கள் மற்றும் நாள்மீன்களுக்கு இடையே உள்ள விண்துகள்கள் போன்றவையும் சூரியத் தொகுதியில் காணப்படுகின்றன.
பாபா சாகேப் (பொருள்: தந்தை) என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கிலம்:Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; பிறப்பு:14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் சாதிகள் (76) பட்டியல் பழங்குடியினர் (36) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79) என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
இலங்கை (Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, சிறீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு (environmental protection) என்பது சுற்றசூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகையினாலும் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்று சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி அல்லது பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி (Acquired immune deficiency syndrome) என்பது எச்.ஐ.வி எனப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் குறைப்பு செய்யும் திறன் கொண்ட தீ நுண்மத்தால் (வைரசால்) ஏற்படுகிற ஒரு நோயாகும்,. இந்த நோயானது மனிதர்களின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் செயற்படுதிறன் வலுவற்றதாகும் நிலையை படிப்படியாகத் தீவிரமடையச் செய்து, வாய்ப்பை எதிர் நோக்கியிருக்கும் தொற்றுநோய்களாலும், கட்டிகளாலும் மனிதர்களை இலகுவில் பாதிப்படையக் கூடியவர்களாகச் செய்கிறது. எச்.ஐ.வி தொற்றுக்குட்பட்ட இரத்தம், விந்து, யோனித் திரவம், முன்விந்துத் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களைக் கொண்ட உடலில் உள்ள சீதச்சவ்வு அல்லது இரத்த ஓட்டத்துடன் ஏற்படும் நேரடித் தொடர்பினால் இந்த வைரசானது ஒருவரிலிருந்து வேறொருவருக்குத் தொற்றுகின்றது.
சில்டெனபில் சிட்ரேட் , வயக்ரா , ரிவேஷியோ மற்றும் பல்வேறு பெயர்களில் விற்கப்படுவது விறைப்புத் திறனின்மை மற்றும் நுரையீரல் தமனி உயர் இரத்த அழுத்தம் (பிஏஹெச்) ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்து. இது ஃபைசர் என்ற மருந்தாக்கியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு சந்தையிடப்படுகிறது. இது ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை முறைப்படுத்தும் என்சைமான சிஜிஎம்பி உள்ள பாஸ்போடையஸ்ட்ரேஸ் டைப் 5 ஐ தடுத்து நிறுத்தவதன் மூலமாக செயல்படுகிறது.
உலகின் புதிய ஏழு அதிசயங்கள் (New 7 Wonders of the World, 2000-2007) என்பது உலகின் பழைய ஏழு அதிசயங்களின் யோசனையை புதிய அதிசயங்களின் ஒரு பட்டியலைக் கொண்டு புதுப்பிப்பதாகும். நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை என்னும் தனியார் நிறுவனம் பிரபலமுற்றவைக்கான கருத்துக்கணிப்பு ஒன்றினை ஏற்பாடு செய்தது, வெற்றி பெற்றவை 2007 சூலை 7 அன்று போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் அறிவிக்கப்பட்டன<ref">Dwoskin, Elizabeth (2007-07-09), "Vote for Christ", நியூஸ்வீக் </ref> 100 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் தங்கள் வாக்குகளை இணையம் வழியாக அல்லது தொலைபேசி வழியாக பதிவு செய்ததாக சுவிட்சர்லாந்து நாட்டை மையமாகக் கொண்டு செயல்படும் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தெரிவிக்கிறது. ஒருவரே பலவாக்குகளை பதிவு செய்வதை தடுக்க வழியில்லாததால், இந்த கருத்துக்கணிப்பு "தீர்மானமாக அறிவியல்பூர்வமற்ற" ஒன்றாகக் கருதப்படுகிறது.
மழைநீர் சேகரிப்பு என்பது மழைநீரைத் திரட்டி, ஒருங்கே குவித்து, சேமித்து வைப்பது ஆகும். மழைநீரைச் சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கு, கால்நடைகளுக்கு, நீர்ப்பாசனம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்குப் பயன்படுத்தலாம். வீடுகள், நிறுவனங்களின் கடடிடங்களின் மேற்கூரைகளில் இருந்தும் இதற்காகத் தயார் செய்யப்பட்ட தரைவழியாகவும் சேகரிக்கப்படும் மழைநீர் குடிநீருக்கான முக்கியமான ஆதாரமாகப் பயன்படுத்தலாம்....
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் (நவம்பர் 26, 1954 – மே 17 அல்லது மே 18 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) தென் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர். ஆன்மிகவாதியாகவும் சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும் சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும்.
அஜித் குமார், (பிறப்பு மே 1, 1971) தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது ரசிகர்கள் இவரை "அல்டிமேட் ஸ்டார்"என்றும் "தல" என்றும் அழைக்கிறார்கள்.
இந்திய வரலாறு என்பது இந்தியத் துணைக்கண்டதில் வரலாற்றுக் காலம் முன்பு வாழ்ந்த மக்கள், அவர்தம் சமுதாயம், சிந்து சமவெளி நாகரிகம் இந்தோ-ஆரியப் பண்பாடு உள்ளடக்கிய வேதகால நாகரிகம் தொடங்கி இன்றுவரை உள்ளிட்டகாலம் அடங்கும். மேலும் பல கலாச்சாரங்களின் சாரமாகவும் பண்பாடுகளை உள்வாங்கியும் பிறந்த இந்து சமயம், அதன் வளர்ச்சி குறித்தும் சிரமணா இயக்கத்தின் வளர்ச்சி, சிரவுத்தா பலிகளின் வீழ்ச்சி, சைனம், பௌத்தம், சைவம், வைணவம் மற்றும் சக்தி வழிபாடு இவைகளின் வளர்ச்சி, தாக்கம், மேலும் இப்பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த அரச பரம்பரை, பேரரசுகளின் தோற்றம், தாக்கம், இடைகாலத்தில் தோன்றிய இந்து மற்றும் முகலாய அரச பரம்பரைகள் குறித்த தகவல்கள், பிற்காலத்தில் வந்த ஐரோப்பிய வணிகர்கள், அதன் தொடர்ச்சியாக அமைந்த ஆங்கிலேய அரசு, அதன் தொடர்ச்சியாக எழுந்த விடுதலை இயக்கம், அதன் பின் நாடு பிரிவினை அடைந்து இந்தியக் குடியரசு பிறந்த வரை தகவல்கள் உள்ளிட்டவை அடங்கும். சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துணைக்கண்டத்தில் இன்றைய மனிதர்களின் உடற்கூறியல் வடிவத்தை ஒத்த மனிதர்களோ அல்லது 5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தற்கால மனிதனின் முன்னனோடிகளோ வாழ்ந்து வந்தததற்கான் சான்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (வலைத்தளம்)
தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் பயன்படும் பாட நூல்கள் அனைத்தும் இணையத்தில் இலவசமாக http://www.textbooksonline.tn.nic.in/ என்ற முகவரியில் கிடைக்கின்றன. வகுப்பு 1 முதல் 12 வரையான பாட நூல்கள் இங்கு கிடைக்கின்றன. தமிழ், கணக்கு, அறிவியல், மனையியல் உட்பட எல்லா பாடங்களும் இங்கு உள்ளன.
உயர் இரத்த அழுத்தம் (hypertension) சில நேரங்களில் “தமனி வழி உயர் இரத்த அழுத்தம்”, தமனி / தமனிகளில் இரத்த அழுத்தம் உயர்த்தப்பெற்ற ஒரு நீடித்த(மருந்து) / நீடித்த நோய் / மருத்துவ நிலை ஆகும். இரத்தக் குழாய்களின் மூலமாக செயல் படும் இரத்த ஓட்டத்திற்கு, இந்த உயர்த்தப்பெற்ற நிலையினால் இதயம் வழக்கத்தைவிட கடினமாக வேலை செய்ய தேவைப்படுகிறது. இதய துடிப்புகளுக்கிடையே இதய தசை சுருங்குவது (சிஸ்டோல்) அல்லது தளர்வுறுவது ( டைஸ்டோல் ) என்பதை பொறுத்து இரத்த அழுத்தம் இதய சுருங்கியக்க அழுத்தம் மற்றும் விரிவியக்க அழுத்தம் என்ற இரண்டு அளவுகளை உள்ளடக்கியது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
அன்னையர் நாள் (Mother's day) விடுமுறை தினம் அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் அவர்களால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் உருவாக்கப்பட்டது; இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டது. இது, இப்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. அவற்றில் பல, நவீன விடுமுறை தினத்தை விட மிகவும் பழமையானது (எ.கா.
சீரடி சாய்பாபா (Shirdi Sai Baba, செப்டம்பர் 28, 1838. – அக்டோபர் 15, 1918), (மராத்தி: शिर्डीचे श्री साईबाबा,உருது: شردی سائیں بابا), மகாராட்டிரத்தில் அகமது நகர் மாவட்டத்தில் சீரடியில் வசித்திருந்த ஓர் இந்திய குரு, யோகி மற்றும் சுஃபி துறவி. இவரை இந்துக்களும் இசுலாமியரும் புனித சாமியாராக போற்றுகின்றனர்.
நடிகையர் திலகம் (Nadigaiyar Thilagam), நாக் அஸ்வினின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில், வைஜெயந்தி மூவிசின் தயாரிப்பில் வெளியாகவுள்ள சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம். துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், சமந்தா, அனுஷ்கா, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படம் மிக்கி ஜெ.
தமிழர் வரலாற்றுக் காலக்கோடு என்பது கிமு 2000 -ல் தொடங்கி இன்று வரையுள்ள தமிழர்களின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றது. வரலாற்றுக்கு முந்திய காலம், சங்க காலம் முதல் இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டு வரை தமிழர்களின் ஆட்சி, அரசியல், மொழி, தமிழர்களை ஆண்டோர், இன்னல்கள் என முக்கிய நிகழ்வுகளைச் சுட்டி, தமிழகம், ஈழம், மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் புலம் பெயர் தமிழர்கள் என விரிவடைந்து முக்கிய நிகழ்வுகளைக் கோடிட்டுக் காட்டுகின்றது இக் காலக்கோடு. கல்லாயுதங்களைப் பயன்படுத்திய தமிழர்கள் முதல் கணினியைப் பயன்படுத்தும் இக்காலத் தமிழர்கள் வரை அவர்களின் இன்பங்களையும் துன்பங்களையும், வெற்றிகளையும் தோல்விகளையும், ஏற்றங்களையும் இறக்கங்களையும் அறிய தமிழர் வரலாற்றுக் காலக்கோடு பயன்படுகிறது.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்:Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
கருத்தரிப்பு என்பது, பாலூட்டிகளில், கருக்கட்டல் நிகழ்வின்போது உருவாகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்த சந்ததிக்கான உயிரி, முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கரு நிலையில் குழந்தை பிறப்புவரை, பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையில் பதிந்து, தாங்கிக் கொள்ளப்படும் நிலையாகும். இந்தக் கட்டுரையில் மனிதரில் நிகழும் கருத்தரிப்பே விரிவாக ஆராயப்படுகின்றது. மனிதரில், பருவமடைந்த ஆரோக்கியமான பெண்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள் உற்பத்தியாகும்.
கொம்மாரெட்டி சாவித்திரி (Kommareddy Savitri) அல்லது சாவித்திரி கணேஷ் (Savitri Ganesh, தெலுங்கு: సావిత్రి కొమ్మారెడ్డి; டிசம்பர் 6, 1935 – டிசம்பர் 26, 1981), புகழ் பெற்ற ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 318 படங்களில் நடித்திருக்கிறார்.
{தமிழ் தெய்வங்கள் | Image =முருகன் வீதி உலா.jpg |Caption =வள்ளி தெய்வானையுடன் உற்சவ மூர்த்தியாக முருகன் |Name =முருகன் |Devanagari = |Sanskrit_Transliteration = |Tamil = |Tamil_script = |Script =தமிழ் |Affiliation =வினை தீர்ப்பவர் |Abode = |God_of =தமிழ் |Mantra =ஓம் சரவணபவ |Weapon =வேல் |Consort =வள்ளி, தெய்வானை |Mount =மயில் |Planet = }} முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் சைவக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர்.
கோப்பரகேசரி வர்மர் முதலாம் இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே.
நாடார் என்ற சாதிப் பெயருடைய மக்கள் தமிழகத்தில் பல இடங்களில் காணப்பட்டாலும் திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளனர். மேலும், மதுரை, தேனி, சேலம், கோவை, தஞ்சாவூர், ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை போன்ற மாவட்டங்களிலும் பரவலாக உள்ளனர். நாடார் சமுதாயத்தில் சுமார் 60% இந்துக்கள், எஞ்சியோர் கிறித்தவர்கள்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 அல்லது தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 (Right to Information Act, சட்டம் இல. 22/2005) இந்திய நாடாளுமன்றத்தால் அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக்க உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். இச்சட்டம் டிசம்பர் மாதம் 2004, ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு மே 11, 2005, மக்களவையிலும், மே 12, 2005, ஆம் ஆண்டு மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (Tamilnadu State Transport Corporation – TNSTC) தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் முக்கியமான பொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்துகளை இயக்கும் துறையாகும். இத்துறை 1972ல் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இது தமிழ்நாட்டிற்குள்ளேயும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளுக்குத் தமிழ்நாட்டிலிருந்தும் பேருந்துகளை இயக்குகிறது.
சிலநேரங்களில் எம்எஸ் தோனி என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகின்ற மகேந்திரசிங் தோனி (இந்தி: महेन्द्र सिंह धोनी) 1981ஆம் ஆண்டு ஜூலை 7இல் பிறந்தார். இந்திய துடுப்பாட்ட வீரரும் முன்னால் இந்திய அணிக்கு ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு தலைவராக இருப்பவரும் ஆவார். துவக்கத்தில் மிகுந்த ஆரவாரமான அதிரடியான மட்டையாளராக அறியப்பட்டிருந்த தோனி இந்திய ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு தலைமையேற்றதிலிருந்து மென்மையான தலைவர்களுள் ஒருவராக குறிப்பிடப்படுகிறார்.
வெள்ளியங்கிரி மலை (Velliangiri Mountains) தமிழ்நாடு கோயம்புத்தூரிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர். தென்கயிலை என பக்தர்களால் அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையானது கொட்டும் பனியும், கை தொட்டு விளையாடும் உயரத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் "வெள்ளியங்கிரி" என்ற பெயர் பெற்றது.
அகத்தியர் (தெலுங்கு:అగస్త్య, கன்னடம்:ಅಗಸ್ತ್ಯ, சமசுகிருதம்:अगस्त्य, மலாய்: Anggasta, தாய்: Akkhot) என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்கு பயணப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரம் ஆவார். இவரே அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர்.
காச நோய் (Tuberculosis, டியூபர்க்குலோசிசு) என்பது மைக்கோபாக்டீரியா (mycobacteria) என்னும் நுண் கோலுயிரியின் தாக்குதலால் மாந்தர்களுக்கு ஏற்படும் கடும் தொற்றுநோய். இதனால் நோயுற்றவர் இறக்கவும் நேரிடும். இந்நோய் முக்கியமாக மைக்கோபாக்டீரியம் டியூபர்க்குலோசிசு (Mycobacterium tuberculosis) என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகின்றது.
சின்னம்மை (chickenpox), அல்லது பயற்றம்மை என்பது நீர்க்கோளவான் சின்னம்மை என்றும் அழைக்கப்படுகிறது. இது நீர்க்கோளவான் சின்னம்மை குழல் அமைப்பு வைரஸின் (VZV) மூல தொற்றின் காரணத்தினால் ஏற்படும் அதிகமான தொற்றும் பண்புடைய உடல்நலக் குறைவாகும். இது பொதுவாக தோல் கொப்புள விசிற்பாக இரண்டு அல்லது மூன்று முறைகளில் தென்பட ஆரம்பிக்கும்.
பஞ்சாயத்து ஒன்றியம் அல்லது ஊராட்சி ஒன்றியம் (Panchayat Union or Block Development Office), இந்தியாவில், தமிழ்நாட்டில், 1994ம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி சட்டத்தின் படி வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 385 பஞ்சாயத்து ஒன்றியங்கள் உள்ளது. அவற்றுள் நீலகிரி மாவட்டம் குறைந்த பட்சமாக நான்கு பஞ்சாயத்து ஒன்றியங்களும், விழுப்புரம் மாவட்டம் அதிக பட்சமாக 22 பஞ்சாயத்து ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.
கருச்சிதைவு (Miscarriage) என்பது பெண்கள் கர்ப்பமாக இருக்கும் நிலையில், முளையமோ அல்லது முதிர்கருவோ மேலும் உயிருடன் இருக்க முடியாத ஒரு நிலையில் தானாகவே அழிந்துபோதல் அல்லது சிதைந்துபோதலைக் குறிக்கும். இது பொதுவாகக் கருத்தரிப்பின் ஆரம்ப காலத்தில், அதாவது கருக்காலத்தின் 20 கிழமைக்குள் தன்னிச்சையாக நிகழும் ஒரு சிக்கலான நிலையாகும். இந்தக் கால எல்லை நாட்டுக்கு நாடு வேறுபட்டுக் கூறப்படுகின்றது.
மதுரை (ஆங்கிலம்: Madurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் மதுரை, மக்கள் தொகை அடிப்படையிலும், நகர்ப்புற பரவல் அடிப்படையிலும்,மற்றும் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாகும் பத்து இலட்சத்துக்கு மேல் மக்கட்தொகைக் கொண்ட இந்திய மாநகரங்களின் பட்டியலில் 31ஆவது பெரிய நகரம் ஆகும். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம் இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது.
சதுரங்க விதிமுறைகள் ( Rules of chess ) என்பது சதுரங்கத்தின் சட்டங்கள் (Laws of chess ) ஆக அறியப்படுகின்றன. இவ்விதிமுறைகள் அல்லது சட்டங்கள் சதுரங்க (செஸ்) விளையாட்டினை விளையாடுவதற்காக வகுக்கப்பட்ட விதிமுறைகள் ஆகும். இவ்விதிமுறைகளின் மூலங்கள் துல்லியமாகத் தெரியாவிடினும், நவீன விதிமுறைகள் 16 ஆம் நூற்றாண்டில் முற்பகுதியில் இத்தாலியில் அமைக்கப்பட்டன.
குடற் புண் (Peptic ulcer) அல்லதுவயிற்றுப் புண், அல்லது வயிற்றுப் புண் நோய் என்று அறியப்படுவது, இரைப்பை உணவுக்குழாய்க்குரிய பாதையில் ஏற்படும் சீழ்ப்புண் ஆகும் இது 0.5 செ.மீ.க்கும் அதிகமாகவோ சமமாகவோ இருக்கும் மியூகோசல் அரிப்பு என்று விவரிக்கப்படுவது. இது பொதுவாக அமிலத்தன்மையுடையது அதனால் மிக அதிக வலியுடையதாக இருக்கிறது. சுமார் 80% சீழ்ப்புண் ஹெலிகோபேக்டர் பைலோரி யுடன் தொடர்பு கொண்டிருக்கிறது, இது வயிற்றின் அமிலச் சூழலில் வாழும் ஒரு சுருள் வளைய வடிவிலான நுண்கிருமியாகும், எனினும் இந்த நிலைமைகளின் 40% மட்டுமே மருத்துவரின் கண்காணிப்புக்குச் செல்கின்றன.