The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, சனவரி 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
தமிழ் ராக்கரஸ், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களை சட்டத்திற்கு புறம்பாக இணையத்தில் வெளியிடும், ஒரு இணையத்தளம் ஆகும். புதிய திரைப்படங்களை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சவாலாக திரையிடப்பட்ட அன்றே இணையத்தில் பரப்பி வருகின்றனர். இந்த இணையத்தளத்தின் உரிமையாளரெனக் கருதி, கவுரிசங்கர் என்பவரை கைது செய்தனர், ஆனால் அவருக்கும் இந்த இணையத்தளத்திற்கும் தொடர்பில்லை என விசாரணையில் தெரியவந்தது.
திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார்.
இடுக்கி அணை கேரள மாநிலத்தில் பாயும் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அணை 839 அடி உயரமுடைய குறவன் மலை, 925 அடி உயரமுள்ள குறத்தி மலை எனும் இரு மலைகளை இணைத்து வளைவு வடிவில் கட்டப்பட்ட அணையாகும். ஆசியாவிலிருக்கும் உயரமான வளைவு அணைகளுள் (arch dam) இது இரண்டாவது மிகப்பெரிய அணையாகும்.
தூய்மை இந்தியா இயக்கம் (Clean India Mission, அலுவல் முறையாக சுவச்ச பாரத் அபியான், Swachh Bharat அல்லது Swachh Bharat Abhiyan) நாட்டின் 4041 நகரங்களில் உள்ள சாலைகள், கட்டமைப்புக்களை தூயப்படுத்துவதற்காக இந்திய அரசு துவக்கியுள்ள இயக்கமாகும். இந்த இயக்கத்தை அக்டோபர் 2, 2014 அன்று புது தில்லியில் ராஜ்காட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைத்தார். காந்தி தங்கியிருந்த இல்லத்திற்கு வெளியே சாலையை சுத்தப்படுத்தி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு (environmental protection) என்பது சுற்றசூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகையினாலும் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்று சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், உருசியாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன.
தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும் தஞ்சைப் பெரிய கோயில் ("Big temple") அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் ("Peruvudayar Temple") என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபாடு (சூழல் மாசடைதல்) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும். சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், அதன் முழுமையான நிலையில், தமிழ் நாட்டின் 1920 முதலான வரலாற்றில் இருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.தமிழக முதல்வர் அல்லது தமிழ்நாடு முதலமைச்சர், இந்தியாவின் தமிழ்நாடு மாநில அமைச்சரவையின் தலைமை அமைச்சர் ஆவார். இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பெறும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக மக்களின் வாக்குகளால் வெற்றி பெறும் உறுப்பினர்களின் பெரும்பான்மையைச் சார்ந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பெற்று அவர்களின் பரிந்துரையின் படி தமிழத்தின் ஆளுநரால் ஆளுமை புரிய அழைத்ததின் பேரில் தமிழகத்தின் முதல்வராக ஐந்து ஆண்டுகள் ஆளுமை புரிய கடமைபட்டவராவார். இவரே தமிழகத்தின் முதன்மை செயலாட்சியர் ஆவார்.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்:Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
காஞ்சீவரம் நடராச முதலியார் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 - 3 பெப்ரவரி, 1969) இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். இந்தியா குடியரசான பிறகு ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.அண்ணாதுரை, காஞ்சீபுரத்தில், நடுத்தர குடும்பமொன்றில் பிறந்தார்.
சொல் (ஒருசொல், ஒன்று அல்லது பல பொருள், நிகண்டு வழி)
ஒரு சொல்லானது இன்னின்ன பொருளைத் தரும் என முதன்முதலில் தோன்றிய திவாகர நிகண்டு சொற்பொருள் இங்குத் தொகுக்கப்பட்டு அகர வரிசையில் தரப்படுகின்றன. இத்தொகுப்பில் 343 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலுக்குச் சேந்தன் திவாகம் என்னும் பெயரும் உண்டு.
மழைநீர் சேகரிப்பு என்பது மழை நீரை வீணாக்காமல் சேமித்து வைப்பது ஆகும். மழைநீரைச் சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும், நீர்ப்பாசனத்திற்கும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் பயன்படுத்தலாம். வீடுகள், நிறுவனங்களின் கட்டிடங்களின் மேற்கூரைகளில் இருந்தும் இதற்காகத் தயார் செய்யப்பட்ட தரைவழியாகவும் சேகரிக்கப்படும் மழைநீர் குடிநீருக்கான முக்கியமான ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.சில சூழ்நிலைகளில், மழைநீர் ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய, சிக்கனமான நீர் ஆதாரம்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஜூலை 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
சமய நல்லிணக்கம் அல்லது மத நல்லிணக்கம் (Religious harmony in India) இந்தியா பல்வேறு சமய நம்பிக்கைகள் கொண்ட மக்கள் வாழும் நாடு. இந்திய மக்கள் பிற சமய மக்களின் நம்பிக்கைகளை மதித்து, ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி ஒற்றுமையுடன் வாழ, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஊக்கமும் ஆக்கமும் அளிக்கிறது. ஒவ்வொரு இந்தியனும் தனக்குப் பிடித்தமான சமயத்தை தேந்தெடுக்கவும், அதனை பின்பற்றி வாழவும் உரிமை வழங்கியுள்ளது.சிறுபான்மையின சமய மக்கள், தங்களுக்குரிய இறை வழிபாட்டு இடங்களை கட்டிக் கொண்டு வழிபடவும் உரிமை வழங்குகிறது.
கண்ணதாசன் (( ஒலிப்பு) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகளின் பட்டியல்
தமிழ் நாட்டில் 300க்கும் மேற்பட்ட வகை பறவைகள் பார்க்கலாம்.
இயற்கை வேளாண்மை அல்லது அங்கக வேளாண்மை (organic farming) என்பது செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை), மரபணு மாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனித சாக்கடைக்கழிவுகள் ஆகியவற்றை குறைவாக பயன்படுத்தி அல்லது முற்றிலுமாக தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயரியல் (பூச்சி, நோய் மற்றும் களை) நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை அடிப்படையாக கொண்ட ஒரு வேளாண்மை (விவசாய) முறைமையாகும். அங்கக வேளாண்மை விளைந்த பொருட்களின் சுகாதாரம், மனிதர்களின் நலம், தரச்சான்றுக்கு மற்றும் விற்பனை ஆகியவற்றைப்பற்றி விவரிக்கிறது.
மயில், பசியானிடே குடும்பத்தின், பேவோ (Pavo) பேரினத்திலுள்ள இரண்டு இனங்களையும் (தெற்காசியாவில் தென்படும் இந்திய மயில் / நீல மயில், மற்றும் பச்சை மயில்), Afropavo எனும் பேரினத்தைச் சேர்ந்த, ஆப்பிரிக்காவில் தென்படும் காங்கோ மயிலையும் குறிக்கும். மயில்கள் ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது. ஆண்மயில் பெண் மயிலைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
பாபா சாகேப் (பொருள்: தந்தை) என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கிலம்:Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; பிறப்பு:14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
திருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 – சனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 சனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார்.
மேட்டூர் அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இது அணையைக்கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.இந்த அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது மற்றும் கட்டிமுடிக்க 9 ஆண்டுகள் ஆனது.
இந்திய சுதந்திர தினம் அல்லது இந்திய விடுதலை நாள் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி சுதந்திர நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.இந்த நாளில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
கணினி (( ஒலிப்பு) என்பது எண் முதலான தரவுகளை உட்கொண்டு, முறைப்படி கோத்த ஆணைக் கோவைகளைச் செயற்படுத்தும் ஒரு கருவி. ஒரு பணியைச் செய்ய, அதனைப் பல கூறாகப் பகுத்து, எதன் பின் எதனைச் செய்ய வேண்டும் என்று எண்ணி, கணினியுள் இடுவதற்காகத் lp தொகுக்கப்பட்ட ஆணைக் கோவை அல்லது கட்டளைக் கோவையானது, செய்நிரல் எனப்படும். கணினியில் இப்படி செய்நிரல்களைச் சேமித்து வைத்து பணி செய்ய இயக்குவது தனிச் சிறப்பாகும்.
கடைக்குட்டி சிங்கம் (Kadaikutty Singam), பாண்டிராஜ் இயக்கத்தில், 2டி என்டேர்டைன்மென்ட் சார்பில் சூர்யா தயாரிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக், சாயிஷா சைகல் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களிலும் சத்யராஜ், பிரியா பவானி சங்கர், ஆர்த்தனா பினு ஆகியோர் துணைப்பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் டி.
வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1874) ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர்.சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக, சமுதாயத்தின் பழைமைப் பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்.
சூரியக் குடும்பம் (Solar System) அல்லது சூரியத் தொகுதி அல்லது ஞாயிற்றுதொகுதி என்பது சூரியனையும் சூரியனின் ஈர்ப்புவிசையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து பருப்பொருட்களையும் உள்ளடக்கிய ஒரு தொகுதி ஆகும். இச் சூரியத்தொகுதி கதிரவனைச் சுற்றி வரும் எட்டு கோள்களையும், இக்கோள்களின் 162 (இதுவரை தெரிந்த கணக்கெடுப்பின்படி) துணைக்கோள்களையும், சிந்து குறுங்கோள்களையும், அக்குறுங்கோள்களின் துணைக்கோள்களையும் மற்றும் ஆயிரக்கணக்கான பிற வான்பொருட்களையும் உள்ளடக்கியது. வால்வெள்ளி, எரிகற்கள், விண்கற்கள் மற்றும் நாள்மீன்களுக்கு இடையே உள்ள விண்துகள்கள் போன்றவையும் சூரியத் தொகுதியில் காணப்படுகின்றன.
இந்திய தேசியக் கொடி அல்லது மூவர்ணக் கொடி என்பது ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், 22 ஜூலை 1947 அன்று ஏற்கப்பட்ட இந்திய நாட்டின் கொடியாகும். 26 ஜனவரி 1950 இல் இந்தியா குடியரசு நாடாக ஆகும் வரையிலும், அதன் பிறகும் இக்கொடி தேசியக் கொடியாக விளங்கி வருகிறது. நீள்சதுர வடிவில் உள்ள இக்கொடியில், மேலிருந்து கீழாக, காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்கள் உண்டு.
தமிழ் கலாச்சாரம், தமிழ் மக்களின் பண்பாடு ஆகும். தமிழ் கலாச்சாரம் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ளது. தமிழ் கலாச்சாரம் மொழி, இலக்கியம், இசை, நடனம், நாட்டுப்புற கலை, தற்காப்பு கலை, ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, விளையாட்டு, ஊடகங்கள், நகைச்சுவை, உணவு, ஆடைகள், கொண்டாட்டங்கள், தத்துவம், மதங்கள், மரபுகள், சடங்குகள், நிறுவனங்கள், அறிவியலை வெளிப்படுத்தப்படுகிறது மற்றும் தொழில்நுட்பம்.
உழவுத் தொழில் அல்லது வேளாண்மை அல்லதுவிவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான்.
இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி.
சிவன் (Śiva) என்பவர் இந்துப் பிரிவான சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம் பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர். இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசாரங்களை உருவாக்கினார்களென்றும்,தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான திருமாலையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது.
நெகிழி அல்லது பிளாஸ்டிக் (Plastic) என்பது ஒரு பொருள் ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுகி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும். "வார்க்கத் தக்க ஒரு பொருள்" என்னும் பொருள் தரும் "பிளாஸ்டிகோஸ்" என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது. நெகிழி என்னும் பொருளானது பிசைவு கொள்ளும் பொருள் ஆகும்.
டிக் டிக் டிக் (2018 திரைப்படம்)
டிக் டிக் டிக் என்பது 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு இந்தியத் தமிழ் அறிவியல் புனைவுத் திரைப்படம் ஆகும். இதனை சக்தி சௌந்தரராஜன் இயக்கியிருந்தார். 1963 இல் வெளியான கலை அரசி திரைப்படத்திற்குப் பின்னர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது விண்வெளித் திரைப்படமாகும்.
தமிழர் வரலாற்றுக் காலக்கோடு என்பது கிமு 2000 -ல் தொடங்கி இன்று வரையுள்ள தமிழர்களின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றது. வரலாற்றுக்கு முந்திய காலம், சங்க காலம் முதல் இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டு வரை தமிழர்களின் ஆட்சி, அரசியல், மொழி, தமிழர்களை ஆண்டோர், இன்னல்கள் என முக்கிய நிகழ்வுகளைச் சுட்டி, தமிழகம், ஈழம், மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் புலம் பெயர் தமிழர்கள் என விரிவடைந்து முக்கிய நிகழ்வுகளைக் கோடிட்டுக் காட்டுகின்றது இக் காலக்கோடு. கல்லாயுதங்களைப் பயன்படுத்திய தமிழர்கள் முதல் கணினியைப் பயன்படுத்தும் இக்காலத் தமிழர்கள் வரை அவர்களின் இன்பங்களையும் துன்பங்களையும், வெற்றிகளையும் தோல்விகளையும், ஏற்றங்களையும் இறக்கங்களையும் அறிய தமிழர் வரலாற்றுக் காலக்கோடு பயன்படுகிறது.
மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே வடிவிலான எழுத்துருக்களை கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வகையான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவற்றை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
இலங்கை ( ஒலிப்பு) (Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, சிறீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
சுரதா (நவம்பர் 23, 1921 - ஜூன் 19, 2006) தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர்.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாக குமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)
உலகின் பல நாடுகளில் தமிழில் வெளிவந்த அனைத்துத் திரைப்படங்களையும் அகர வரிசையில் பட்டியலிட முனைகின்றது இப்ப ட்டியல்.
கோப்பரகேசரி வர்மர் முதலாம் இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே.
தற்கால இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மண்டலம் வரலாற்றுக் காலத்துக்கு முன்பு முதல் மக்கள் வாழும் உறைவிடமாக தொடர்ந்து இருந்துவந்துள்ளது. தமிழ்நாட்டின் வரலாறும் தமிழ் மக்களின் நாகரீகமும் உலகின் மிகப் பழமையானவையாகும். முந்தைய பழங்கற்காலம் முதல் தற்காலம் வரையிலான தமிழ்நாட்டின் வரலாறு முழுவதிலும், இந்தப் பகுதியானது பல்வேறு புறக் கலாச்சாரங்களுடன் ஒருங்கிணைந்து இருந்து வந்துள்ளது.