The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
தமிழ்ப் புத்தாண்டு தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும்.
பாபா சாகேப் (பொருள்: தந்தை) என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கிலம்:Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; பிறப்பு:14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
அறுபது ஆண்டுகள் (ஆண்டு வட்டம் அல்லது சம்வத்சரம்) பெரும்பாலான இந்திய நாட்காட்டிகளில் காலக்கணிப்பில் பயன்படும் ஒரு சுற்றுவட்டம் ஆகும். இவை அறுபதுக்கும் பஞ்சாங்கங்களில் தனித்தனிப் பெயர் குறிப்பிடப்படுவதுடன், அறுபதாண்டுகளுக்கு ஒருமுறை இப்பட்டியல் மீள்வதாகச் சொல்லப்படுகின்றது. சமகாலத்தில் தமிழ் நாட்காட்டியிலும் கன்னடர் - தெலுங்கர் பயன்படுத்தும் உகாதி நாட்காட்டியிலும் இது பரவலாகப் பயன்படுகின்றது.
தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரெண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
திருவள்ளுவர் ஆண்டு, தமிழரின் ஆண்டுக்கணக்காக, தமிழகத்தில் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்காட்டி முறைமை ஆகும். இன்று பல நாடுகளில் பரவலாக வழக்கில் உள்ள கிரிகோரியன் ஆண்டு முறையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் திருவள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் கூடி இருக்கும். உதாரணமாக, பொ.பி 2018ஆம் ஆண்டு, கிரிகோரியன் ஆண்டு முறையில் கூறப்படுவது, தி.பி 2049ஆம் ஆண்டு ஆகும்.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
குருத்து ஞாயிறு (Palm Sunday) அல்லது குருத்தோலைத் திருவிழா என்பது இயேசு கிறித்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து கிறித்தவர்கள் ஆண்டுதோறும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். இது இயேசு சாவினின்று உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய ஞாயிறு நிகழும்.இயேசு எருசலேமுக்குள் நுழைந்த நிகழ்ச்சியை நான்கு நற்செய்தியாளரும் விவரித்துள்ளனர். காண்க: மாற்கு 11:1-11 மத்தேயு 21:1-11 லூக்கா 19:28-44 யோவான் 12:12-19.
சொல் (ஒருசொல், ஒன்று அல்லது பல பொருள், நிகண்டு வழி)
ஒரு சொல்லானது இன்னின்ன பொருளைத் தரும் என முதன்முதலில் தோன்றிய திவாகர நிகண்டு சொற்பொருள் இங்குத் தொகுக்கப்பட்டு அகர வரிசையில் தரப்படுகின்றன. இத்தொகுப்பில் 343 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலுக்குச் சேந்தன் திவாகம் என்னும் பெயரும் உண்டு.
கருங்குழி (Black Hole) அல்லது கருந்துளை என்பது, இவற்றின் எல்லைக்குட் செல்லும், ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதியாகும். மேற் குறிப்பிட்ட எல்லை நிகழ்வெல்லை (event horizon) எனப்படும். இந்த நிகழ்வெல்லைக்குள் இருந்து பார்க்கக்கூடிய ஒளி அலைகள் போன்ற மின்காந்த அலைகள் கூடத் தப்பி வெளியேற முடியாது என்பதால் உள்ளே நடப்பவை எவற்றையுமே வெளியில் இருந்து அறிந்து கொள்ள முடியாது.
தமிழர்கள் சூட்டியுள்ள ஆண்பால் பெயர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அ அகரமுதல்வன் அக்கராயன் அகவழகன் அகத்தியன் அகமகிழன் அகமுகிலன் அகிழவன் அகில் அகிலன் அமுதன் அமிர்தன் அழகப்பன் அழகன் அதிரன் அருள் அருண் அருளழகன் அருள்நம்பி அரும்பொறையன் அறவணன் அறவாணன் அறநெறியன் அற்புதராசன் அற்புதன் அறிவன் அறிவாற்றன் அறிவு அறிவழகன் அறிவுநம்பி அய்யாகண்ணு அய்யன்சாமி அனழேந்தி அண்ணாதுரை அண்ணாமலை அன்பு அன்புமணி அன்பரசன் அன்புக்கரசன் அன்புச்செல்வன் அன்பழகன் அன்பினியன் அன்பானந்தன் அடைக்கலநாதன் அதிர்துடியன் அமலன் அம்பலவன் அம்பலவாணன் அம்பலக்கூத்தன்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசிய, ஈழப் போராட்ட ஆதரவு உடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல் கட்சி ஆகும். . இந்தக் கட்சி மே மாதம் 18 ஆம் நாள் 2010 ஆம் ஆண்டில் சீமானால் தொடங்கப்பட்டது. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் நடத்தி வந்த "நாம் தமிழர் இயக்கத்தின்" தொடர்ச்சியே சீமானால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என அறியப்படுகிறது.
தமிழ் இலக்கியங்களில் யானைகளை ஆண், பெண், குட்டி, அறுபது வயதிற்கு மேலான யானை, போர் யானைகள் என்ற அடிப்படையில் மட்டும் அல்லாது இன்னும் பல்வேறுப் பிரிவுகளாக அவற்றைப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர்.இதன் மூலம் பழந்தமிழர்களின் வாழ்வினில் யானைகள் எவ்வளவு பயன் ஆற்றின என்பதையும், தமிழர்கள் அந்த யானைகளை எவ்வளவு ஆழமாக உணர்ந்து அவற்றின் பிரிவுகளை வரையறுத்து வைத்து இருந்தார்கள் என்பதையும் அறியலாம்.
நோட்டா (None of the Above - NOTA;) அனைவருக்கும் எதிரான வாக்கு என்று பொருள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மக்கள் அனைவருக்குமான உரிமையே இந்த நோட்டா பொத்தான் என்பதாகும். எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத எந்த ஒரு இந்தியரும் இந்தப் பொத்தானை அழுத்துவதின் மூலம் அந்தத் தொகுதியில் நிற்கும் வேட்பாளரை தான் வெறுக்கிறேன் என்று அர்த்தம் கொள்ளப்படும்.
2.0 அல்லது முன்னதாக எந்திரன் 2 என்பது சங்கர் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டில் தமிழ் மற்றும் இந்தியில் வெளியான ஒரு இந்திய அறிபுனை திரைப்படமாகும். 2010 ஆம் ஆண்டில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவரும் இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா புரொடக்சன்சு தயாரித்தது.
விசுவாசம் (Viswasam) என்பது 2019 ஆம் ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் அஜித் குமார், நயன்தாரா, விவேக், யோகிபாபு ஆகியோர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம் திரைப்படங்களை இயக்கிய சிவாவால் எழுதி, இயக்கி மற்றும் தியாகராஜனால் தயாரிக்கப்பட்டது.
ஜலியான்வாலா பாக் படுகொலை அல்லது ஜாலியான்வாலா பாக் படுகொலைகள் (Jallianwala Bagh Massacre), அல்லது அமிர்தசரஸ் படுகொலை என்பது வட இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜலியான் என்ற இடத்தில் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 இல் ரெஜினால்ட் டையர் என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் பிரித்தானிய இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட பீரங்கிச் சூட்டு நிகழ்வைக் குறிக்கும். இந்நிகழ்வில் பெண்கள், சிறுவர்கள் நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நீடித்த இச்சூட்டு நிகழ்வில் மொத்தம் 1650 தடவைகள் அல்லது ஒரு சிப்பாய்க்கு 33 சூடுகள் என்ற முறையில் சுடப்பட்டன.
எளிய மூலப்பொருள்களைக் கொண்டு ஒருவரின் செயற்திறனை ஆதாரமாகக் கொண்டு ஆக்கப்படும் பொருட்களை கைத்தொழில் உற்பத்திகள் எனலாம். கைத்தொழில் கிராமப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இன்று பெரு உற்பத்திப் பொருட்களால் கைத்தொழில் உற்பத்திப் பொருட்களின் சந்தை குறைந்து இருப்பினும், சில துறைகளிலும் சில சூழலும், கைத்தொழில் உற்பத்திகள் தொடர்ந்து பயன்மிக்க பங்காற்றி வருகிறது.
மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே வடிவிலான எழுத்துருக்களை கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வகையான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவற்றை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.
பஞ்சாங்கம் (Panchangam) அல்லது ஐந்திறன் என்பது இந்துக் காலக் கணிப்பு முறையின் படி, கணிக்கப்படுகின்ற கால அட்டவணை எனலாம். பஞ்சாங்கம் என்ற வடமொழிச்சொல், (பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம் ) ஐந்து உறுப்புகள் எனப் பொருள்படும். இக் காலத்தில் பஞ்சாங்கம் சமய சம்பந்தமான விடயங்களுக்கும், சோதிடக் கணிப்புகளுக்குமே பெரிதும் பயன்படுகின்றது.
தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும், தஞ்சைப் பெரிய கோயில் ("Big temple") அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் ("Peruvudayar Temple") என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள புது ஆற்று கரையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
வெள்ளியங்கிரி மலை (Velliangiri Mountains) தமிழ்நாடு கோயம்புத்தூரிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர். தென்கயிலை என பக்தர்களால் அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையானது கொட்டும் பனியும், கை தொட்டு விளையாடும் உயரத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் "வெள்ளியங்கிரி" என்ற பெயர் பெற்றது.
தனித்தமிழ் இயக்கம் என்பது தமிழ் மொழியில் பிறமொழிச் சொற்களைக் கலக்காமல் தனித்தமிழில் எழுதப்பட வேண்டும் அல்லது பேசப்பட வேண்டும், அவ்வாறு கலப்பதால் தமிழ்மொழிக்கு நன்மையில்லை, பெருந்தீமை என்று சொல்லும் இயக்கம் ஆகும். தமிழ் மொழி, இயற்கையாகவே தனித்தியங்கக்கூடியது; அதற்குப் பிறமொழிகளின் துணை தேவையில்லை என்பது இக்கொள்கையின் அடிப்படையாகும். சமற்கிருத சொற்களும் மணிப்பிரவாள அல்லது மணிப்பவழ நடையும் தமிழில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்ட சூழ்நிலையில் தமிழ் மொழியை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்ட இயக்கமே தனித்தமிழ் இயக்கமாகும்.
பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ.வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈ.வெ. இராமசாமி நாயக்கர், ஆங்கிலம்:E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 - திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு (environmental protection) என்பது சுற்றசூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகையினாலும் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்று சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
தமிழ்நாடு சட்டப் பேரவை என்பது இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் சட்டம் இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது. இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பார்க்கும் பொழுது இது 18ம் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுதிலிருந்தே இப்பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016
பதினைந்தாவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் (Legislative Assembly election) 2016 மே 16 இல் இடம்பெற்றது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு, சட்டமன்றத்திற்கு இடம்பெற்ற இத்தேர்தலில் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது.
சிங்களப் புத்தாண்டு என்பது இலங்கை சிங்களவர்களால் பழங்காலம் தொட்டே கொண்டாடி வரும் புத்தாண்டு கொண்டாட்ட முறையாகும். இந்த புத்தாண்டு கொண்டாட்ட முறை இலங்கையின் பழங்காலத் தமிழர்களின் வழியாக இலங்கையில் தோற்றம் பெற்ற தமிழர் புத்தாண்டு முறையே ஆகும். அதனாலேயே இலங்கையில் தமிழ் சிங்களப் புத்தாண்டு என அழைக்கின்றனர்.
சில்டெனபில் சிட்ரேட் , வயக்ரா , ரிவேஷியோ மற்றும் பல்வேறு பெயர்களில் விற்கப்படுவது விறைப்புத் திறனின்மை மற்றும் நுரையீரல் தமனி உயர் இரத்த அழுத்தம் (பிஏஹெச்) ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்து. இது ஃபைசர் என்ற மருந்தாக்கியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு சந்தையிடப்படுகிறது. இது ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை முறைப்படுத்தும் என்சைமான சிஜிஎம்பி உள்ள பாஸ்போடையஸ்ட்ரேஸ் டைப் 5 ஐ தடுத்து நிறுத்தவதன் மூலமாக செயல்படுகிறது.
பருவகாலம் (season) என்பது காலநிலை, சூழலியல் மற்றும் பகலின் மணித்தியாலங்கள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றத்தால் குறிப்பிடப்படுகின்ற வருடத்தின் பிரிவு ஆகும். சூரியனைச் சுற்றிவரும் பூமியின் ஆண்டுச் சுழற்சி மற்றும் சுழற்சியின் சமதளத்திற்கு தொடர்புடைய பூமி அச்சின் சாய்வு ஆகியவற்றினால் பருவகாலம் ஏற்படுகிறது. மிதமான தட்பவெப்பமுள்ள துருவப் பிரதேசங்களில் பூமியின் மேற்பரப்பை எட்டும் சூரிய ஒளியின் அடர்த்தியில் ஏற்படும் மாற்றம், விலங்குகள் செயலற்றிருத்தல் அல்லது இடம்பெயர்தலுக்கு காரணமாக அமைவது மற்றும் தாவரங்கள் வளர்ச்சியை நிறுத்திக்கொள்வது ஆகியவற்றால் பருவங்கள் இலகுவாக வேறுபடுத்திப் பார்க்கப்படுகின்றன.
தற்கால இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மண்டலம் வரலாற்றுக் காலத்துக்கு முன்பு முதல் மக்கள் வாழும் உறைவிடமாக தொடர்ந்து இருந்துவந்துள்ளது. தமிழ்நாட்டின் வரலாறும் தமிழ் மக்களின் நாகரீகமும் உலகின் மிகப் பழமையானவையாகும். முந்தைய பழங்கற்காலம் முதல் தற்காலம் வரையிலான தமிழ்நாட்டின் வரலாறு முழுவதிலும், இந்தப் பகுதியானது பல்வேறு புறக் கலாச்சாரங்களுடன் ஒருங்கிணைந்து இருந்து வந்துள்ளது.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் சாதிகள் (76) பட்டியல் பழங்குடியினர் (36) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79)என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
உயர் இரத்த அழுத்தம் (hypertension) சில நேரங்களில் “தமனி வழி உயர் இரத்த அழுத்தம்”, தமனி / தமனிகளில் இரத்த அழுத்தம் உயர்த்தப்பெற்ற ஒரு நீடித்த(மருந்து) / நீடித்த நோய் / மருத்துவ நிலை ஆகும். இரத்தக் குழாய்களின் மூலமாக செயல் படும் இரத்த ஓட்டத்திற்கு, இந்த உயர்த்தப்பெற்ற நிலையினால் இதயம் வழக்கத்தைவிட கடினமாக வேலை செய்ய தேவைப்படுகிறது. இதய துடிப்புகளுக்கிடையே இதய தசை சுருங்குவது (சிஸ்டோல்) அல்லது தளர்வுறுவது ( டைஸ்டோல் ) என்பதை பொறுத்து இரத்த அழுத்தம் இதய சுருங்கியக்க அழுத்தம் மற்றும் விரிவியக்க அழுத்தம் என்ற இரண்டு அளவுகளை உள்ளடக்கியது.
இராம நவமி (தேவநகரி: राम नवमी) அயோத்தி மற்றும் கோசலை ஆகியவற்றை ஆண்ட அரசர் தசரதரின் மகன் மற்றும் விஷ்ணு பகவானின் அவதாரமாக இந்துக்களால் நம்பப்படும் தெய்வீகத் தன்மை கொண்ட இராமபிரானின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு இந்துப் பண்டிகை ஆகும். அந்த நாள் ஸ்ரீ இராம நவமி என்றும் அறியப்படுகிறது. அது 'சுக்ல பட்ச' அல்லது வளர்பிறையில் இந்து சந்திர ஆண்டின் சித்திரை மாதத்தில் ஒன்பதாம் நாள் வரும் நவமியில் வருகிறது.
கோப்பரகேசரி வர்மர் முதலாம் இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே.
பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் (Scheduled Castes & Scheduled Tribes) என்ற சமூகத்தவர்கள் கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் தகுதிகளில் இந்திய துணை கண்டத்தில் வரலாற்று ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள். பிரித்தானிய இந்தியாவில், இவர்களை ஒடுக்கப்பட்ட மக்கள் (Depressed Class) என்று வகைப்படுத்தி, அவர்களது பொருளாதார மேம்பாட்டிற்கு பஞ்சமி நிலங்கள் ஓதுக்கப்பட்டது. மகாத்மா காந்தியும், அவர்பால் ஈர்க்கப்பட்ட என்.
தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)
உலகின் பல நாடுகளில் தமிழில் வெளிவந்த அனைத்துத் திரைப்படங்களையும் அகர வரிசையில் பட்டியலிட முனைகின்றது இப்ப ட்டியல்.
பாரதிய ஜனதா கட்சி (மொழிபெயர்ப்பு: இந்திய மக்கள் கட்சி; சுருக்கமாக பா.ஜ.க) இந்திய அரசியலின் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றாகும். 1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கட்சி, நாடாளுமன்றத்திலும், பல்வேறு மாநில சட்டமன்றங்களிலும் பெற்றிருக்கும் இடங்களின் அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாகத் திகழ்கிறது. இதை பாரதிய சனதா கட்சி அல்லது சுருக்கமாக பாசக என்றும் அழைப்பார்கள்.
புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி (Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும். இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின்போது கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.