The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
தமிழ்நாடு சட்டப் பேரவை என்பது இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் சட்டம் இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது. இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பார்க்கும் பொழுது இது 18ம் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுதிலிருந்தே இப்பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016
பதினைந்தாவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் (Legislative Assembly election) 2016 மே 16 இல் இடம்பெற்றது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு, சட்டமன்றத்திற்கு இடம்பெற்ற இத்தேர்தலில் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது.
பாரதிய ஜனதா கட்சி (மொழிபெயர்ப்பு: இந்திய மக்கள் கட்சி; சுருக்கமாக பா.ஜ.க) இந்திய அரசியலின் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றாகும். 1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கட்சி, நாடாளுமன்றத்திலும், பல்வேறு மாநில சட்டமன்றங்களிலும் பெற்றிருக்கும் இடங்களின் அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாகத் திகழ்கிறது. இதை பாரதிய சனதா கட்சி அல்லது சுருக்கமாக பாசக என்றும் அழைப்பார்கள்.
தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019
இந்தியாவின் 17 ஆவது மக்களவைக்கான தேர்தல் 2019 ஆம் ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு ஏப்ரல் 18 அன்று நடந்தது.
தமிழக மக்களவை உறுப்பினர்கள், பதினாறாவது மக்களவை
பதினாறாவது மக்களவை 2014-ஆம் ஆண்டில் தொடங்குகிறது. மக்களவை கலைக்கப்படாத வரையில், இது 2019-ஆம் ஆண்டு வரை செயல்படும். தமிழ்நாடு மாநிலத்திலிருக்கும் 39 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக அல்லது அண்ணா திமுக) என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் அரசியல் கட்சி ஆகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது. திமுகவிலிருந்து விலகிய பின்னர் எம்.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், அதன் முழுமையான நிலையில், தமிழ் நாட்டின் 1920 முதலான வரலாற்றில் இருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.தமிழக முதல்வர் அல்லது தமிழ்நாடு முதலமைச்சர், இந்தியாவின் தமிழ்நாடு மாநில அமைச்சரவையின் தலைமை அமைச்சர் ஆவார். இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பெறும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக மக்களின் வாக்குகளால் வெற்றி பெறும் உறுப்பினர்களின் பெரும்பான்மையைச் சார்ந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பெற்று அவர்களின் பரிந்துரையின் படி தமிழத்தின் ஆளுநரால் ஆளுமை புரிய அழைத்ததின் பேரில் தமிழகத்தின் முதல்வராக ஐந்து ஆண்டுகள் ஆளுமை புரிய கடமைபட்டவராவார். இவரே தமிழகத்தின் முதன்மை செயலாட்சியர் ஆவார்.
இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்
இது இந்தியப் பிரதம மந்திரிகளின் முழுப் பட்டியலாகும். இதில் 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியப் பிரதமராக பதவி ஏற்றவரும் இதில் அடங்கும். இந்திய பிரதம மந்திரி என்ற பதவியானது இந்திய அரசாங்கத்தின் தலைமையாகவும், தலைமைச் செயலதிகாரம் கொண்டதாகவும் உள்ள பதவியாகும்.
தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து
தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து (Thandavarayapuram Ramaswami Pachamuthu, பரவலாக டி. ஆர். பச்சமுத்து) எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தரும் ஆவார்.
இந்தியப் பொதுத் தேர்தல் 2014 (Indian general election of 2014) இந்தியாவின் 16வது மக்களவையைக்கான 543 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2014 ஏப்ரல் 7 முதல் மே 12 வரை ஒன்பது கட்டங்களில் நடைபெற்றது. இந்திய வரலாற்றில் 1951க்கு பிறகு, அதிக நாட்கள், பல்வேறு கட்டங்களாக, வாக்குப்பதிவு நடைபெற்ற தேர்தல், இது ஆகும். இதற்கு முன் அதிக நாட்கள் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தல் 1951 முதல் 1952 வரை 5 மாதங்களுக்கு நடந்தது.
தங்கபாண்டியன் (இறப்பு: சூலை 31, 1997) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், அருப்புக்கோட்டை தொகுதியிலிருந்து, தி.மு.க சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பிள்ளைகளான தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோரும் தி.மு.கவில் உறுப்பினராக உள்ளனர்.
எடுங்குரி சன்டிந்தி ஜெகன் மோகன் ரெட்டி (தெலுங்கு: యెడుగూరి సందిటి జగన్మోహన రెడ్డి)(பிறப்பு திசம்பர் 21, 1972), அல்லது ஜெகன் என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய அரசியல்வாதியும் கடப்பா தொகுதி மக்களவை உறுப்பினராகவும் உள்ளார். இவர் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் மகனாவார். தனது தந்தையின் மறைவுக்குப் பின் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்னும் கட்சியை 2010ல் தொடங்கினார்.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, ஆந்திரப் பிரதேசத்திலும், தெலுங்கானாவிலும் செயல்படும் முக்கியமான அரசியல் கட்சி. இதன் முழுப்பெயர் யுவஜன, ஸ்ரமிஜ, ருது காங்கிரஸ் கட்சி என்பதாகும்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014
இந்தியக் குடியரசின் பதினாறாவது நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஏப்ரல் 24, 2014 அன்று நடந்தது.
தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் (2014)
தமிழ்நாட்டில் ஏப்ரல் 24 அன்று நடந்த இந்தியப் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவின் முடிவுகள் மே 16, மே 17 நாட்களில் அறிவிக்கப்பட்டன. இந்த முடிவுகள் குறித்தான விரிவான தகவல்கள், இக்கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
புதிய தலைமுறை தொலைக்காட்சி என்பது தமிழில் இயங்கும் தொலைக்காட்சி ஆகும். இது 24X7 நேரலை செய்திகள் ஒளிபரப்பை 2011-ம் ஆண்டு, ஆகஸ்ட் 24 ஆம் தேதி துவக்கியது. தனி நபர், கொள்கை, குழு, அரசு மற்றும் நிறுவனங்கள் என யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ செய்திகளை வெளியிடுவதில்லை என்கின்ற வலிமையான நெறிமுறைகளையும் கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு செய்திப் பிரிவு கட்டமைக்கப்பட்டுள்ளதாக இத்தொலைக்காட்சி கூறுகிறது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்
இந்தியாவில் 29 மாநிலங்களும், டெல்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 7 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் நடுவண் அரசினால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத்தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும்.
முத்தரையர் என்பது, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இருந்த பேரரசர்கள் ஆவர். இவர்கள் தஞ்சை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மண்டலங்களை கி.பி 600 முதல் கி.பி 900 வரை ஆட்சி செய்தனர். முத்தரையர், இரண்டாம் நூற்றாண்டில் எருமைநாட்டில் இருந்து தமிழ் ராஜ்யங்களை ஆக்கிரமித்தார், இது கர்நாடகாவின் நவீன மைசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது.
திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார்.
இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கான மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்கள், இந்திய மாநிலங்களிலுள்ள சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவைத் தேர்தல்கள், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் போன்றவைகளை நேர்மையான முறையில் நடத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தில் இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகள் தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றன. 2018 சூன் 20ஆம் தேதி நிலவரப்படி 2,064 கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்திய தேசிய காங்கிரஸ் (ஆங்கிலம்:Indian National Congress) ('காங்கிரஸ் கட்சி அல்லது காங்கிரஸ் (I) என்றும் அழைக்கப்படுகிறது, சுருக்கமாக ') இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885ல் தொடங்கப்பட்ட இக்கட்சி, இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. இக்கட்சியின் அமைப்புகளில் 15 மில்லியன் இந்திய மக்களும், ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 70 மில்லியன் மக்களும் பங்கெடுத்தனர்.
தேர்தல் (election) என்பது, ஒரு நாட்டின் மக்கள் பொது வாழ்வில் பதவிகளை நிர்வகிப்பதற்காக ஒரு தனி நபரைத் தேர்ந்தெடுக்க முடிவெடுக்கும் செயல்முறை என்னும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முறைமையாகும். தேர்தல்கள் என்பவை 17வது நூற்றாண்டு தொடங்கி நவீன பிரதிநிதித்துவக் குடியாட்சியில் வழக்கமான ஒரு செயல்பாடாகத்தான் இருந்து வந்துள்ளன. தேர்தல்களின் மூலம், பகுதி சார்ந்த மற்றும் உள்ளுர் அரசுஅமைப்புகளில், சட்டசபை, சில சமயங்களில் நிர்வாக அமைப்பு, நீதித் துறை ஆகியவற்றில் உள்ள பதவிகள் நிரப்பப்படுகின்றன.
தமிழிசை சௌந்தரராஜன் (Tamilisai Soundararajan, பிறப்பு: சூன் 2, 1961) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 2014 ஆகத்து மாதம் முதல் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பதவி வகிக்கின்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் மகளான இவரும், இவரது கணவர் சௌந்தரராஜன் தொழில்முறை மருத்துவர்கள்.
2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், முடிவுகள்
2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் குறித்தான விரிவான தகவல்கள், இக்கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி
கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 20வது தொகுதி ஆகும்.
தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்
தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம், பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், இந்திய அரசு, பட்டியல் சமூகத்தினருக்கு 44 சட்டமன்ற தொகுதிகளையும்; பட்டியல் பழங்குடி மக்களுக்கு 2 சட்டமன்ற தொகுதிகளையும் தனித்தொகுதிகளாக அறிவித்துள்ளது.
கருத்தரிப்பு என்பது, பாலூட்டிகளில், கருக்கட்டல் நிகழ்வின்போது உருவாகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்த சந்ததிக்கான உயிரி, முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கரு நிலையில் குழந்தை பிறப்புவரை, பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையில் பதிந்து, தாங்கிக் கொள்ளப்படும் நிலையாகும். இந்தக் கட்டுரையில் மனிதரில் நிகழும் கருத்தரிப்பே விரிவாக ஆராயப்படுகின்றது. மனிதரில், பருவமடைந்த ஆரோக்கியமான பெண்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள் உற்பத்தியாகும்.
{{Infobox TV channel| | name = சன் டிவி | logofile = சன் தொலைக்காட்சி.png | logocaption = | logosize = 250px | launch = 14 ஏப்ரல் 1993 11 டிசம்பர் 2011 (HD) | closed date = | picture format = MPEG-4 | share = | share as of = | share source = | network = சன் குழுமம் | owner = சன் குழுமம் | slogan = | country = இந்தியா| | broadcast area = | headquarters = சென்னை, தமிழ்நாடு, இந்தியா | former names = Deli TV India (1992–2004) | key_people = கலாநிதி மாறன் | replaced names = | sister channel(s) = sun life,sun music,kochi tv,gemini,undya,surya,sun news,சுட்டி டிவி | timeshift names = | web = சன் குழுமம் | sat serv 1 = டாட்டா ஸ்கை (இந்தியா) | sat chan 1 = 1504 1503 (HD) | sat serv 2 = அஸ்ட்ரோ (மலேசியா) | sat chan 2 = 211 | sat serv 3 = | sat chan 3 = | cable serv 1 = ரோகர்ஸ் கேபிள் (கனடா) | cable chan 1 = சேனல் 865 | cable serv 2 = Mozaic Qtel (கத்தார்) | cable chan 2 = சேனல் 269 | cable serv 3 = ஸ்டார்ஹப் டிவி (சிங்கப்பூர்) | cable chan 3 = சேனல் 133 | adsl serv 1 = | adsl chan 1 = | online serv 1 = | online chan 1 = |tccl channel no = 3 சன் டிவி அல்லது சன் தொலைக்காட்சி என்பது இந்தியாவின் தலைசிறந்த ஒளிபரப்பாளர்களுள் ஒன்றாகவும், தமிழில் முன்னோடி தொலைக்காட்சியாகவும் உள்ளது. 600 கோடி பெறுமதியான சன் நிறுவனத்தில் முதன்மையான தொலைக்காட்சி சேவையாக சன் டிவி இருக்கிறது. சன் டிவி குழுமத்தின் மொத்த வருவாய் ரூ.
அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss, பிறப்பு: அக்டோபர் 9, 1968) ஒரு தமிழக அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். இவரின் தந்தையார் மருத்துவர் ராமதாஸ் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சியில் உறுப்பினர் ஆவார். 2004-இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய நடுவண் அரசில் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சராகப் பணியாற்றினார்.
1900களில் இருந்தே முக்கிய சமூக நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்தாலும் தமிழக அரசியல் களம் 1940களில் சூடு பிடித்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள், திராவிடக் கொள்கைகள், பகுத்தறிவுக் கொள்கைகள், வாரிசு அரசியல், வன்முறை அரசியல் போன்ற கூறுகளுக்குத் தமிழக அரசியல் பிரசித்தி பெற்றது. பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் திராவிட, பொதுவுடமை, சோசலிசக் கொள்கைகள் கொண்டவையாக விளங்குகின்றன.
இந்திய மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் பரப்பளவு
இந்தியாவில் 28 மாநிலங்களும் 6 ஒன்றியப் பிரதேசங்களும் மற்றும் ஒரு தேசிய பிரதேசமும் உள்ளன.
தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும், தஞ்சைப் பெரிய கோயில் ("Big temple") அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் ("Peruvudayar Temple") என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள புது ஆற்று கரையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ.வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈ.வெ. இராமசாமி நாயக்கர், ஆங்கிலம்:E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 - திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்:Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
சொல் (ஒருசொல், ஒன்று அல்லது பல பொருள், நிகண்டு வழி)
ஒரு சொல்லானது இன்னின்ன பொருளைத் தரும் என முதன்முதலில் தோன்றிய திவாகர நிகண்டு சொற்பொருள் இங்குத் தொகுக்கப்பட்டு அகர வரிசையில் தரப்படுகின்றன. இத்தொகுப்பில் 343 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலுக்குச் சேந்தன் திவாகம் என்னும் பெயரும் உண்டு.
சட்டப் பேரவை உறுப்பினர் (Member of the Legislative Assembly, சுருங்க MLA) அல்லது சட்டமன்ற உறுப்பினர் (Member of the Legislature, சுருங்க ML), உள்நாட்டு ஆட்சிப்பகுதி ஒன்றின் சட்டமன்றம் அல்லது சட்டப் பேரவைக்கு தேர்தல் தொகுதியின் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர். நாட்டின் தேசிய சட்ட மன்ற உறுப்பினர்கள் பொதுவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப்படுகின்றனர். ஊடகங்களில் சிலர் ஆங்கிலச் சுருக்கமான எம்.எல்.ஏ எனப் பயன்படுத்துகின்றனர்.
இப்னு பதூதா (Ibn Battuta) என்றழைக்கப்படும் அபு அப்துல்லா முகமது இபின் பதூதா மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த கல்வியாளரும் ஒரு நாடுகாண் பயணியும் ஆவார். ரிகிலா எனப்படும் இவரது பயணங்களைப் பற்றிய விபரங்கள் பெயர்பெற்றவை. இவரது பயணங்கள் ஏறத்தாழ 30 ஆண்டுகள் நீடித்ததுடன், அறியப்பட்ட இசுலாமிய உலகம் முழுவதையும், அதற்கும் அப்பாலுள்ள நாடுகளையும் உள்ளடக்கி இருந்தன.இவர் வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, தெற்கு ஐரோப்பா.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (Rashtriya Swayamsevak Sangh, தேசியத் தொண்டர் அணி, ஆர் எஸ் எஸ்) இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பு அல்லது ஆர் எஸ் எஸ் (RSS, தேசிய தொண்டர் அணி) என அழைக்கப்படுகின்றது. இது 1925 செப்டம்பர் 27ம் தேதி விஜயதாசமி அன்று கேசவ பலிராம் ஹெட்கேவர் என்பவரால் நிறுவப்பட்டது.. சங்கமானது ஆரம்பிக்கப்பட்ட பத்து வருடங்களுக்குள் வடஇந்தியாவில் பெற்ற செல்வாக்கு மிக அதிகம்.
தைராய்டு சுரப்புக் குறை என்பது தைராய்டு சுரப்பியால் போதியளவு தைராய்டு இயக்குநீர் சுரக்கப்படாமையினால், தைராய்டு இயக்குநீரின் தொழிற்பாடு அல்லது அளவு குறைவாக இருப்பதன் காரணமாக ஏற்படும் அகச்சுரப்பித் தொகுதிக் கோளாறு ஆகும். இந்த குறைபாட்டு நிலை பல அறிகுறிகளைக் கொண்டிருக்கும். அவையாவன: குளிரைத் தாங்க முடியாத நிலை, களைப்பு, மலச்சிக்கல், மன அழுத்தம், உடல்நிறை அதிகரிப்பு கருத்தரித்திருக்கும் பெண்களில் தைராய்டு சுரப்புக் குறை இருப்பின், அதற்குத் தகுந்த சிகிச்சை தரப்படாவிட்டால், பிறப்பிலேயே உடல், உள வளர்ச்சிக் குறைபாட்டுடன் குழந்தை பிறக்கும்.
இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்
இந்தியா இருபத்தி ஒன்பது மாநிலங்கள் மற்றும் ஏழு யூனியன் பிரதேசங்களாக (UTS) பிரிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் மேலும் அவர்களின் சொந்த அரசாங்கத்தையும் கொண்டிருக்கின்றன. இரண்டு யூனியன் பிரதேசங்கள், தில்லி தேசிய தலைநகர பிரதேசம் மற்றும் பாண்டிச்சேரீகு தங்கள் சொந்த சட்டமன்றங்கள் இருக்கிறது.