The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
மழைநீர் சேகரிப்பு என்பது மழை நீரை வீணாக்காமல் சேமித்து வைப்பது ஆகும். மழைநீரைச் சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும், நீர்ப்பாசனத்திற்கும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் பயன்படுத்தலாம். வீடுகள், நிறுவனங்களின் கட்டிடங்களின் மேற்கூரைகளில் இருந்தும் இதற்காகத் தயார் செய்யப்பட்ட தரைவழியாகவும் சேகரிக்கப்படும் மழைநீர் குடிநீருக்கான முக்கியமான ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.சில சூழ்நிலைகளில், மழைநீர் ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய, சிக்கனமான நீர் ஆதாரம்.
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்
திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும்.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல், மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி இளைய தலைமுறையினரை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
இயற்கை வேளாண்மை என்பது செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை), மரபணு மாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனித சாக்கடைக்கழிவுகள் ஆகியவற்றை குறைவாக பயன்படுத்தி அல்லது முற்றிலுமாக தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயரியல் (பூச்சி, நோய் மற்றும் களை) நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை அடிப்படையாக கொண்ட ஒரு வேளாண்மை (விவசாய) முறைமையாகும். இயற்கை வேளாண்மை விளைந்த பொருட்களின் சுகாதாரம், மனிதர்களின் நலம், தரச்சான்றுக்கு மற்றும் விற்பனை ஆகியவற்றைப்பற்றி விவரிக்கிறது.
திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு (environmental protection) என்பது சுற்றசூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகையினாலும் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்று சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்:Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
அத்தி வரதர் தரிசனம் 2019 என்பது 2019 ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயிலின் திருக்குளமான அமிர்தசரசு அல்லது ஆனந்த புஷ்கரணி தீர்த்தத்தின் அடியில் வைக்கப்பட்டிருக்கும் மூலவர் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தரிசனம் தரும் ஒரு உற்சவம் ஆகும். இதற்கு முன்னதாக 1979 ஆம் ஆண்டு சூலை 2-ஆம் நாள் அத்திவரதர் திருக்குளத்திலிருந்து எடுக்கப்பட்டார். 1 சூலை 2019 அன்று திருக்குளத்திலிருந்து அத்தி வரதர் எடுக்கப்பட்டு பொதுமக்கள் தரிசனத்திற்காக காட்சியளிக்கிறார்.
கண்ணதாசன் ( ஒலிப்பு) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாக குமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
உழவு அல்லது வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான்.
சந்திரயான்-2( Chandrayaan-2 (சமக்கிருதம்: चन्द्रयान-२; Sanskrit: [tʃəndrəjaːn dʋi]; lit: Moon-vehicle pronunciation) சந்திரயான்-1 என்பதனை அடுத்து இந்தியா சார்பாக நிலாவை ஆராய்ச்சி செய்ய அனுப்பி வைக்கப்படும் இரண்டாவது ஏவூர்தி ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் மேம்படுத்தப்பட்ட இந்த ஏவூர்தி ஜி. எஸ்.
புதுக்கவிதை என்பதற்கான வரைவிலக்கணம் என்பது இன்றைய சூழலில் பல்வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. எனினும் இலகுவாக புதுக்கவிதை என்பது கவிதைக்குரிய மரபு, இலக்கணம் அற்ற ஒரு கவிதை முறையாக நோக்கப்படுகின்றது. மரபுக்கவிதையானது சீர், தளை, அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளைக் கொண்டு காணப்பட புதுக்கவிதை அவற்றை புறந்தள்ளியதாக புதுக்தோற்றத்துடன் காணப்படுகின்றது.
சொல் (ஒருசொல், ஒன்று அல்லது பல பொருள், நிகண்டு வழி)
ஒரு சொல்லானது இன்னின்ன பொருளைத் தரும் என முதன்முதலில் தோன்றிய திவாகர நிகண்டு சொற்பொருள் இங்குத் தொகுக்கப்பட்டு அகர வரிசையில் தரப்படுகின்றன. இத்தொகுப்பில் 343 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலுக்குச் சேந்தன் திவாகம் என்னும் பெயரும் உண்டு.
அண்ணாமலை மகிழ்நன், PhD.,புவியியல் அறிஞர் ஆஸ்திரேலிய கல்வித்துறை ஆலோசகர். நீரின்றி அமையாது உலகு டாக்டர் நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு - திருவள்ளுவர். "நீர் இல்லாவிட்டால் எந்த உயிரும் வாழாது, உலக ஒழுங்கு கெட்டு, உலக வாழ்வே முடிந்து விடும்' என்றுதான் எல்லா திருக்குறள் உரையாசிரியர்களுமே உரை எழுதியிருக்கிறார்கள்.
இயற்கைப் பேரழிவு (ஆங்கிலம்Natural disaster) அல்லது பெருங்கேடு என்பது இயற்கையாக நிகழும் இடையூறுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறிப்பதாகும். (எடுத்துக் காட்டாக, வெள்ளப் பெருக்கு, எரிமலை வெடிப்பு, நில நடுக்கம், மண்சரிவு போன்றவை), இந்தப் பேரழிவால் மிகையான அளவில் பொருட்சேதம், உயிர்ச்சேதம், ஏற்படுவதுடன் சுற்றுச்சூழலும் விவரிக்க இயலாத அளவிற்கு சேதமடைகிறது. இதனால் ஏற்படும் பெரும் நட்டத்தை தாங்கிக் கொள்வது சுலபமல்ல, அதன் சுவடுகள் வாழ்நாள் முழுதும் பாதிப்படைந்தவர்களை துன்பத்திலும், துயரத்திலும் ஆழ்த்தினாலும், ஒரு வகையில் இந்தக் கட்ட நட்டங்களைத் தாங்கி மீள்வதற்கான செயல்பாடுகளை அந்நாட்டு மக்களும் சமூகமும் எடுக்கும் விரைவான நடவடிக்கைகளை மிகவும் சார்ந்தே, சுற்றுப்புற சூழ் நிலைகளை பழைய நிலைமைக்கு கொண்டு வருவதற்கான மிகச் சிறந்த, தெளிவான வழியாகும்.
இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடு
இலவச மதிய உணவுத் திட்டம் (Midday Meal Scheme) தமிழகத்தில் உள்ள அரசு/அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டமாகும்.
முதலமைச்சர் (முதல்வர்) அல்லது முதல் அமைச்சர் என்பவர் ஒரு ஒருங்கிணைந்த நாட்டின் உள்பிரிவான மாநிலம், இராச்சியம் (பாகிஸ்தான்), மாநிலம் மற்றும் ஒன்றிய ஆட்சிப்பகுதி (இந்தியா), ஆள்பகுதி ( அவுஸ்திரேலியா),தன்னாட்சி வழங்கப்பட்ட வெளிநாட்டு பகுதி (பிரித்தானியா) இவற்றின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தலைவர் ஆவார். தவிர மலாய் மாநிலங்களில் அரசாட்சி இல்லாத மாநில அரசின் தலைமையைக்குறிக்கும் ஆங்கிலச்சொல்லாகும்.ஆங்கில ஆட்சிகாலத்தில் இந்தியாவின் பல குறுநாடுகளில் அமைச்சர்களில் அதிக அதிகாரம் கொண்ட உயர்ந்த அமைச்சர் இப்பெயரால் அழைக்கப்பட்டார்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும், தஞ்சைப் பெரிய கோயில் ("Big temple") அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் ("Peruvudayar Temple") என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள காவிரி துனை ஆற்று கரையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
இயற்கை வளங்கள் (natural resources, பொருளாதார ரீதியில் நிலம் மற்றும் மூலப்பொருள் அல்லது கச்சா பொருட்கள்) எனப்படுபவை ஒப்பிட்டளவில் மனிதத் தலையீடுகளின்றித் தன் இயல்புநிலையில் சூழல் தொகுதிகளில் காணப்படும் பொருட்கள் ஆகும். இயற்கை வளங்கள் சுற்றுச்சூழலிலிருந்து தருவிக்கப்படுபவை. இவற்றில் பெரும்பான்மையானவை நம் வாழ்விருப்புக்கு அத்தியாவசியமானவையாகவும் தேவைகளுக்குப் பயன்படக்கூடியவைகளாகவும் அமைகின்றன.
மகேந்திரசிங் தோனி (Mahendra Singh Dhoni ( pronunciation; எம் எஸ் தோனி ; பிறப்பு: 7 சூலை, 1981 இந்தி: महेन्द्र सिंह धोनी) இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் முன்னாள் தலைவர் ஆவார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஒருநாள் போட்டிகளுக்கும் , 2008முதல் 2014 வரை தேர்வுத் துடுப்பாட்டத்திற்கும் தலைவராக இருந்தார். இவரின் தலைமையில் 2007 ஐசிசி உலக இருபது20 2007-08 பொதுநலவய போட்டித் தொடர், 2010மற்றும் 2016 ஆசியக் கோப்பை, 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2013 ஐசிசி வாகையாளர் கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது.
கவிதை (Poiesis) என்பது அழகியல் உணர்ச்சியுடைய, ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை பண்புச் சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கியக் கலை வடிவம் ஆகும். மேலும், மொழியில் உள்ள ஒலியன் அழகியல், ஒலிக் குறியீடுகள், மற்றும் சந்தம் (Metre) ஆகியவற்றுடன் இடம், இயல்பான பொருள் ஆகியவற்றை வெளிப்படையாகக் காட்டுவதாகக் கவிதை உள்ளது. உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.
மயில், பசியானிடே குடும்பத்தின், பேவோ (Pavo) பேரினத்திலுள்ள இரண்டு இனங்களையும் (தெற்காசியாவில் தென்படும் இந்திய மயில் / நீல மயில், மற்றும் பச்சை மயில்), Afropavo எனும் பேரினத்தைச் சேர்ந்த, ஆப்பிரிக்காவில் தென்படும் காங்கோ மயிலையும் குறிக்கும். மயில்கள் ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது. ஆண்மயில் பெண் மயிலைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும்.
மழை என்பது நீரானது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது.
சூப்பர் பந்துப் பரிமாற்றம் அல்லது சூப்பர் ஓவர் (Super Over) அல்லது நீக்குவான் (Eliminator) அல்லது ஆங்கிலச் சுருக்கமாக ஓப்சே (Oopse) (ஓரணிக்கு ஒரு ஓவர் நீக்குவான் - One Over Per Side Eliminator), எனப்படுவது மட்டுப்படுத்திய பந்துப் பரிமாற்ற துடுப்பாட்டத்தில் சமனாக முடிந்த ஆட்டங்களில் வெற்றி அணியைத் தேர்கின்ற ஓர் முறைமையாகும். ஒர் ஆட்டத்தில் இரு அணிகளும் சமமான ஓட்டங்களைப் பெற்றிருந்தால் இருவருக்கும் ஆட்டப் புள்ளிகளை பகிர்ந்தளிக்காது இந்த சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற அணிக்கே முழுமையான புள்ளிகளும் வழங்கப்படும். 2008ஆம் ஆண்டுமுதல் செயல்முறையில் உள்ள இந்த முறைமை இதற்கு முன்னிருந்த பௌல் அவுட் முறைமைக்கு மாற்றாக அமைந்தது.
மரம் என்பதை அளவிற் பெரிய பல்லாண்டுத் தாவரம் என வரைவிலக்கணம் கூறலாம். இது நிலத்தில் (ஒரு விதையிலிருந்து) தோன்றி, இடம் விட்டு இடம் தானே நகராது, நிலைத்து வளரக்கூடிய ஒரு நிலைத்திணை வகை ஆகும். இதற்கான அளவு குறித்த வரையறை எதுவும் கூறப்படாவிடினும், பொதுவாக முதிர்ந்த நிலையில் 4.5 மீட்டர் (15 அடி) உயரமும், ஒரு தனி அடிமரத்தில் தாங்கப்பட்ட கிளைகளையும் கொண்டிருக்கும்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தை பற்றி வழங்கும் நூல்கள் மூன்றாம் திருமுறை, ஏழாம் திருமுறை மற்றும் பன்னிரெண்டாம் திருமுறை, திருவிளையாடல் புராணம் முதலிய நூல்களாகும்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் மாசுபாடு (சூழல் மாசடைதல்) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும். சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது.
பாபா சாகேப் (பொருள்: தந்தை) என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கிலம்:Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; பிறப்பு:14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
நியூசிலாந்து (New Zealand) என்பது பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது வடக்குத் தீவு, மற்றும் தெற்குத் தீவு ஆகிய இரண்டு முக்கியமான நிலப்பகுதிகளையும், சதாம் தீவுகள் போன்ற பல சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது. நியூசிலாந்தின் மாவோரி மொழிப் பெயர் ஆவோதேயாரோவா (Aotearoa) என்பதாகும்.
கருத்தரிப்பு என்பது, பாலூட்டிகளில், கருக்கட்டல் நிகழ்வின்போது உருவாகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்த சந்ததிக்கான உயிரி, முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கரு நிலையில் குழந்தை பிறப்புவரை, பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையில் பதிந்து, தாங்கிக் கொள்ளப்படும் நிலையாகும். இந்தக் கட்டுரையில் மனிதரில் நிகழும் கருத்தரிப்பே விரிவாக ஆராயப்படுகின்றது. மனிதரில், பருவமடைந்த ஆரோக்கியமான பெண்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள் உற்பத்தியாகும்.
சுரதா (நவம்பர் 23, 1921 - ஜூன் 19, 2006) தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர்.
நிலம் (Land) என்பது நிரந்தரமாக நீரில் மூழ்கியிராத புவியின் திண்ம மேற்பரப்பு ஆகும். வரலாறு முழுவதும் பெரும்பாலான மனிதச் செயற்பாடுகள், வேளாண்மை, வாழிடம், பல்வேறு இயற்கை வளங்கள் ஆகியவை அடிப்படையான நிலத்திலேயே நடந்துள்ளன. நிலம், பெரிய நீர்ப் பரப்புககளைச் சந்திக்கும் பகுதிகள் கரையோரப் பகுதிகள் என அழைக்கப்படுகின்றன.
பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ.வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈ.வெ. இராமசாமி நாயக்கர், ஆங்கிலம்:E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 - திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.
சிட்டுக் குருவி (Sparrow) முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். சிட்டுக் குருவிகள் பசரீன்கள் குடும்பத்தைச் சார்ந்தவை.இந்தியாவில் இவை வீட்டுக்குருவிகள், அடைக்கலக்குருவிகள் ,ஊர்க்குருவிகள், சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. காகத்திற்கு அடுத்து மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை குருவியாகும்.
உலகிலுள்ள,பல பண்பாடுகளுள் சிறந்ததும் முதன்மையானதும் தமிழ் மக்களின் பண்பாடே ஆகும். தமிழ் கலாச்சாரம் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ளது. தமிழ் கலாச்சாரம் மொழி, இலக்கியம், இசை, நடனம், நாட்டுப்புற கலை, தற்காப்பு கலை, ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, விளையாட்டு, ஊடகங்கள், நகைச்சுவை, உணவு, ஆடைகள், கொண்டாட்டங்கள், தத்துவம், மதங்கள், மரபுகள், சடங்குகள், மூலம் அறிவியலை வெளிப்படுத்துகிறது மற்றும் பழந்தமிழரின்தொழில்நுட்பம் இன்றைைய தொழில்நுட்ப வல்லுநர்களை அதிசயிக்கச் செய்கிறது.
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார்.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், அதன் முழுமையான நிலையில், தமிழ் நாட்டின் 1920 முதலான வரலாற்றில் இருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.தமிழக முதல்வர் அல்லது தமிழ்நாடு முதலமைச்சர், இந்தியாவின் தமிழ்நாடு மாநில அமைச்சரவையின் தலைமை அமைச்சர் ஆவார். இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பெறும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக மக்களின் வாக்குகளால் வெற்றி பெறும் உறுப்பினர்களின் பெரும்பான்மையைச் சார்ந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பெற்று அவர்களின் பரிந்துரையின் படி தமிழத்தின் ஆளுநரால் ஆளுமை புரிய அழைத்ததின் பேரில் தமிழகத்தின் முதல்வராக ஐந்து ஆண்டுகள் ஆளுமை புரிய கடமைபட்டவராவார். இவரே தமிழகத்தின் முதன்மை செயலாட்சியர் ஆவார்.
நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.இவர் 1945 ஆகத்து 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், உருசியாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆகத்து 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது.
துடுப்பாட்டம், (மட்டைப்பந்து, Cricket, கிரிக்கெட்) 19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டு ஆகும். இது கனவான்களின் விளையாட்டு என சிறப்பித்துக் கூறப்படுகிறது.இது முறையே 11 வீரர்கள் கொண்ட இரு அணிகளுக்கிடையே ஆடப்படும் ஆட்டமாகும். தற்பொழுது, இந்த ஆட்டம் பொதுநலவாய நாடுகளில் பரவலாக ஆடப்பட்டு வருகிறது.
இந்திய யானை (Elephas maximus indicus) என்பது அறியப்பட்ட மூன்று ஆசிய யானை துணை இனங்களில் ஒன்றும் ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டதுமாகும். 1986 இலிருந்து ஆசிய யானைகள் 60-75 வருட கணக்கெடுப்பில், கடந்த மூன்று தலைமுறைகள் குறைந்தது 50%க்கு மேல் அருகிவருவதால் அருகிய இனமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்வினம் வாழ்விட இழப்பு, கவனியாமை, பிரிந்து காணப்படல் ஆகிய காரணங்களினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்
எழுத்து என்பது ஒரு மொழியின் அடிப்படை கூறு ஆகும். மொழிக்கு நிலைபேறு அளிப்பது எழுத்தாகும். ஒலி வடிவத்திற்கு வரிவடிவம் கொடுப்பது எழுத்து என்பர்.
சரணாலயங்கள்(Sanctuary) என்பவை விலங்குகள், தாவரங்கள், நிலப்பரப்பு மற்றும் வரலாற்று முக்கியத்துவமுள்ள பொருட்கள் போன்றவற்றை பாதுகாக்க அமைக்கப்பட்டுள்ளவை ஆகும். வனத்துறை அலுவலர்களின் அனுமதியின்றி எந்தவொரு விலங்கையும் பிடிக்க, கொல்ல தடை செய்யப்பட்டுள்ள காட்டுப் பகுதி சரணாலயம் எனப்படும். இயற்கையின் பரிணாம வளர்ச்சி சீராக நடைபெற எந்தெந்த உயிரினம், எந்தெந்த இடத்தில் உள்ளதோ அந்தந்த இடத்தில் அவை இயல்பாக வாழ, வளர அனுமதிப்பவை சரணாலயங்கள் ஆகும்.இந்தியாவில் மட்டுமில்லை வெளிநாடுகளிலும் வனவிலங்குகளையும், பறவைகளையும் வேட்டையாடிக் கொன்று வீரம் என்று மகிழ்ச்சி அடைவதும், அதன் இறைச்சியை உண்பதும், இறைச்சியை மருத்துவப் பொருளாகப் பயன்படுத்துவதுமாக பல நோக்கங்கள் இருக்கின்றன.