The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
கண்ணதாசன் (ஒலிப்பு ) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
ஐக்கூ, கைக்கூ அல்லது ஹைக்கூ (Haiku) மூன்று வரிகளில் முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் என 17 அசைகளைக் கொண்டு அமைக்கப்பெறும் இயைபற்ற ஜப்பானியக் கவிதை வடிவம் ஆகும். ஐக்கூ மிகக்குறைந்த சொற்களைக்கொண்டு நேரடியாகவும் மறைமுகமாவும் அதிக கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. 17ம் நூற்றாண்டில் பாசோ இதனை மேலும் மெருகூட்டப்பட்ட கலையாக உயர்த்தியபோது இவ்வடிவம் தனித்தன்மையடைந்தது.
முத்தையா முரளிதரன் (Muttiah Muralitharan, பிறப்பு: ஏப்ரல் 17, 1972, கண்டி) பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார். இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். 2002 ஆம் ஆண்டில் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பானது இவரை தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் மிகச்சிறந்த பந்து வீச்சாளர் எனக் குறிப்பிடுகிறது.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
தசாவதாரம் என்பது இந்து சமயக் கடவுள் விஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிப்பதாகும். இறைவன் பூமியில் பிறப்பெடுப்பதை அவதாரம் என்று இந்துகள் குறிப்பிடுகின்றார்கள். வைணவ சமயத்தின் முழுபெரும் கடவுளான விஷ்ணு உலகில் அதர்மம் ஓங்குகின்ற போது, பக்தர்களை காக்கவும், தர்மத்தினை நிலை நாட்டவும், அரக்கர்களை அழிக்கவும் அவதாரம் எடுப்பதாக வைணவர்கள் நம்புகின்றார்கள்.
ஆனைமுடி சோலை தேசியப் பூங்கா ( மலையாளம் : ആനമുടി ഷോല ദേശീയ ഉദ്യാനം) என்பது தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தின், இடுக்கி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். இது மன்னவன் சோலை, இடிவாரா சோலை, புல்லரடி சோலை ஆகியவற்றைக் கொண்டது. இதன் மொத்த பரப்பளவு சுமார் 7.5 km².
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
அகன்ற தமிழ்நாடு என்பது தமிழ் தேசியத்தின் ஒரு தாயக கருத்தாகும், இது இந்திய ஒன்றியத்தின் தமிழ் பேசும் பகுதிகளையும் ("முதன்மை நிலப்பரப்பு") மற்றும் இலங்கை ("தீவு") தமிழ்ப் பகுதிகளையும் இணைப்பதன் மூலம் தமிழர்களுக்கு ஒரு தேசிய தாயகத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இருப்பினும் இந்தப் பகுதிகளின் வடக்குப் பகுதியில் பெருமளவில் கன்னடம், தெலுங்கு மொழி பேசும் மக்களும், தென்மேற்கில் மலையாள மொழி பேசும் மக்களும், தீவில் சிங்கள மக்கள் உள்ளனர். 1958 ஆம் ஆண்டில் சி.
குன்றுமணி அல்லது குன்றிச் செடி (Jequirity) என்பது, ஆப்ரஸ் பிரிக்கட்டோரியஸ் (Abrus precatorius) என்னும் அறிவியற் பெயர் கொண்ட ஒரு கொடித் தாவரம் ஆகும். கடுமையான சிவப்பு நிறத்தில் கருமை நிறத்தில் ஒரு மறுவைக் கொண்ட கொண்ட இதன் விதை பொதுவாகக் குண்டுமணி என அறியப்படுகிறது. இச் சொல் குன்றிமணி என்பதன் திரிபு ஆகும்.
உடுமலைப்பேட்டை (ஆங்கிலம்:Udumalaipettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை வட்டம் மற்றும் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை நகராட்சியும் ஆகும். இந்த நகராட்சி தான் மாவட்டத்திலேயே மிகப்பெரிய நகராட்சி ஆகும். உடுமலைப்பேட்டையில் பல காற்றாலைகளும், நூற்பாலைகளும் உள்ளன.
கிரிஷ் காசரவள்ளி (Girish Kasaravalli) (பிறப்பு: திசம்பர் 3, 1950) இவர் ஓர் இந்திய திரைப்பட இயக்குனராவார். கன்னட சினிமாவில், மற்றும் இணை சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராக இருக்கிறார். தனது படைப்புகளுக்காக சர்வதேச அளவில் அறியப்பட்டஇவர் நான்கு சிறந்த தேசிய திரைப்பட விருதுகள் உட்பட பதினான்கு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார்; கட்டாஷ்ரத்தா (1977), தபரன கதே (1986), தாயி சாஹேபா (1997) மற்றும் திவீபா (2002) போன்றவை.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
கொலு என்றால் அழகு என்று பொருள்.கொலு என்பது நவராத்திரியை முன்னிட்டு பொம்மைகளை வைத்து செய்யப்படும் ஒரு வழிபாட்டு முறையாகும். பெரும்பாலும் இந்தியாவின் தென்பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகம் பகுதிகளில் இவ்வழிபாட்டு முறை நடைபெறுகிறது. இப் பண்டிகை பொதுவாக தமிழ் மாதமான புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையை அடுத்து வரும் பிரதமை திதியிலிருந்து பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இந்தியன் பிரீமியர் லீக் விருதுகளின் பட்டியல்
இப்பட்டியல் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் இந்திய டி 20 தொடரில் கொடுக்கப்படும் விருதுகளைப் பட்டியலிடுகிறது. இத்தொடர் வீரர்களை கௌரவப்படுத்த பல்வேறு விருதுகளை தொடரின் இறுதியில் வழங்கும். இவை: ஆரஞ்சு தொப்பி, ஊதா தொப்பி, அதிக சிக்ஸர்கான விருது, விலைமதிப்பற்ற வீரர் விருது மற்றும் இவ்வருடத்திற்கான சிறந்த வளர்ந்து வரும் வீரர்.
உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது. உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா: கு, சு, டு, து, பு, று) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துகள் (எ.கா: ற, கி, பெ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது. இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.
சீர் என்பது, யாப்பிலக்கணப்படி, செய்யுள் உறுப்புக்களில் ஒன்று. யாப்பியலில், எழுத்துக்கள் இணைந்து அசைகளும், அசைகளின் சேர்க்கையினால் சீர்களும் உருவாகின்றன. செய்யுள்களில் சீர்கள் சொற்களைப் போலத் தென்பட்டாலும், உண்மையில் சீர்களும் சொற்களும் எல்லாச் சமயங்களிலும் ஒன்றாக இருப்பதில்லை நத்தார்படை ஞானன்பசு வேறின்நனை கவிழ்வாய் மத்தம்மத யானையுரி போர்த்தமண வாளன் பத்தாகிய தொண்டர்தொழும் பாலாவியின் கரைமேல் செத்தாரெலும் பணிவான்திருக் கேதீச்சரத் தானேமேலேயுள்ளது சீர் பிரித்து எழுதப்பட்டுள்ள சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய தேவாரம் ஆகும்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (All India Anna Dravida Munnetra Kazhagam, அ.இ.அ.தி.மு.க. அல்லது அனைத்து இந்திய அண்ணா தி.மு.க.) என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது.
முதல் உலகப்போர் என்பது உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர். எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன.
கிம்மனே ரத்னக்கர் (Kimmane Rathnakar) இவர் கர்நாடகவின் முன்னால் அமைச்சரும், தொழில்முறை வழக்கறிஞரும் மற்றும் சிவமோகா மாவட்டத்தின் தீர்த்தஹள்ளி தொகுதியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியச் சேர்ந்த இவர் கர்நாடக அரசில் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.
கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட pnp repair ஒரு திறமூல பல் இயங்குதள இணைய உலாவியாகும். பெப்ரவரி 2009 இன் படி, பாவிக்கப்படும் உலாவிகளில், 1.15% ஆனவர்கள் இதைப் பாவிக்கின்றனர்.வெப்கிட் இன் பாகங்களையும் மொசில்லா பயர்பாக்சின் வசதிகளையும் அடிப்படையாக கொண்டுள்ளது. குரோம், நிலைத்த, வேகமான, பாதுகாப்பு கூடிய, வினைத்திறனும் எளிமையும் மிக்க, பயனர் இடைமுகத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.
இந்தியா அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் பட்டியல்
இந்திய உள்துறை அமைச்சகத்தால் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் பயங்கரவாத தடைசெய்யப்பட்ட அமைப்புகள்.
பூசன் ( Fushun என்பது சீனாவின் லியோவோனிங் மாகாணத்தில் சுமார் 45 km (28 mi) சென்யாங்கிற்கு கிழக்கே, 2,138,090 மக்கள் (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு) மற்றும் மொத்த பரப்பளவு 11,272 km2 (4,352 sq mi) , 714 km2 (276 sq mi) இதில் நகரம் சரியானது. கன் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது இது லியோவோனிங்கில் உள்ள தொழில்துறை மற்றும் பொருளாதார மேம்பாட்டு மையங்களில் ஒன்றாகும்.
உய்குர் மக்கள் (உய்குர் மொழி: ئۇيغۇر, சீன மொழி: 维吾尔, பின்யின்: Wéiwú'ěr) மத்திய ஆசியாவில் வசிக்கும் உய்குர் மொழியை பேசும் ஒரு மக்கள் இனம். இன்று இந்த மக்கள் பெரும்பான்மையாக சீனாவின் வடமேற்கில் உள்ள சிஞ்சியாங் மாகாணப் பகுதியில் வசிக்கின்றனர். பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ரஷ்யா, கசக்ஸ்தான் போன்ற நாடுகளிலும் சில உய்குர் மக்கள் வசிக்கின்றனர்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
என்றென்றும் புன்னகை (தொலைக்காட்சித் தொடர்)
என்றென்றும் புன்னகை என்பது ஒரு தமிழ் மொழி காதல் தொடர் ஆகும், இது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 2020 மார்ச் 16 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 3:00 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. தற்போது சூலை 27 முதல் பிற்பகல் 2:00 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. இது நீலிமா ராணியின் இசாய் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இராணுவப் பொதுப் பள்ளிகள் (இந்தியா)
இராணுவப் பொதுப் பள்ளிகள் (Army Public Schools (APS) இராணுவப் பாசறைகளில் குடியிருக்கும் இந்திய இராணுவத்தினரின் குழந்தைகளுக்கு முதல் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை கல்வி தரும் பள்ளியாகும். இராணுவ நல கல்விக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்த இராணுவப் பொதுப்பள்ளிகள், இந்திய அரசின் நிதி உதவியுடன், நாட்டின் அனைத்து மாநிலங்களில் உள்ள பெரும்பாலான இராணுவப் பாசறைகளில் இயங்குகிறது. நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டங்களைக் கொன்டுள்ளது.
நீட் தேர்வு (National Eligibility cum Entrance Test) என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். இந்திய மருத்துவக் குழுமம் சட்டம் - 1956 இன் 2018 திருத்தம் மற்றும் பல் மருத்துவர் சட்டம் 1948 இன் 2018 திருத்தம் ஆகியவற்றின்படி தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வானது அகில இந்திய அளவிலான, இந்திய அரசின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழான, அகில இந்திய மருத்துவக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான ( அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் ஜவஹர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நீங்கலாக) சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்காக நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படுகிறது.நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் இத்தேர்வு அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்விற்கு (All India Pre Medical Test (AIPMT)) மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வானது அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் முகமதியர்களின் படையெடுப்புக்குப்பின்பு கம்பிளி ராஜ்ஜியம் இழந்து விஜயநகரம் உருவாக்கினர்.
ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்
தற்பொழுது 2019ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கும் நிகழ்ச்சியின் பட்டியல்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, அரபு மொழி: محمد, பிறப்பு கிபி 570, இறப்பு 8 சூன் கிபி 632 கணிப்பு), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்தவர். அராபியத் தீபகற்பம் முழுமையையும் இசுலாம் என்ற ஒரே கொள்கைச் சமயத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர் முஸ்லிம்களால் மட்டுமல்லாமல் பாபிஸ்துகள் மற்றும் பகாய் சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்று போற்றப்படுகிறார்.
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இப்பட்டியல் முழுமையானதல்ல.
2020 இந்தியன் பிரீமியர் லீக் என்பது 2007ஆம் ஆண்டு பிசிசிஐயால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் என்ற தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் 13ஆம் பதிப்பாகும். மார்ச் 29இல் தொடங்கவிருந்த இத்தொடர், உலகளாவிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக ஏப்ரல் 15க்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.
சகலகலாவல்லி மாலை குமரகுருபர சுவாமிகள் கலைமகளை வேண்டிய தமிழில் பாடிய பாமாலை ஆகும். குமரகுருபர சுவாமிகள் தனது ஞான தேசிகரான தருமபுர ஆதீன நான்காவது குருமுதல்வராக விளங்கிய ஸ்ரீமாசிலாமணி தேசிகரிடத்து விடைபெற்று காசிக்குச் சென்றார். அப்பொழுது தில்லி பாதுஷாவாக விளங்கிய முகம்மதிய மன்னனை வாதிலே வெல்லக் கருதி அம்மன்னனது மொழியாகிய இந்துஸ்தானியை அறிந்து கொள்வதற்காக சகலகலாவல்லி மாலை என்னும் பாமாலையைப் பாடினார்.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கில மொழி: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
மா. சுப்பிரமணியம் (அரசியல்வாதி)
மா. சுப்ரமணியம் (M. Subramaniam) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாணர். திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி உறுப்பினரான இவர் 2006-2011 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் மாநகர மேயராக இருந்தார்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
நவதானியங்கள் ஆவன நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை என்பனவாம். இந்து சமய நம்பிக்கையுடையோர் புதிதாக வீடு கட்டுதல், திருமணம் மற்றும் சுப நிகழ்வுகளுக்காக வீடுகளின் முன்பு பந்தல் அமைத்தல் போன்ற நிகழ்வுகளுக்கான சில வழிபாடுகளின் போது நவதானியத்தை வழிபாட்டுப் பொருளாக வைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது.
முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு, தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும், ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக, தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.