The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு, தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும், ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக, தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
மனு தர்ம சாத்திரம் (சமசுகிருதம்:मनुस्मृति, மனுஸ்மிருதி) இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும். இதனை சுவாயம்பு (மனு) எனும் பண்டைய வேத கால முனிவர் தொகுத்தார். இது 2685 செய்யுட்களாகவும், 3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது.
மீலாதுன் நபி ( அல்லது மிலாத்-உன்-நபி, ஆங்: Mawlid, அரபு மொழி: مَوْلِدُ النَبِيِّ mawlidu n-nabiyyi, “நபிகளின் பிறந்தநாள்” அல்லது mawlid an-nabī, சிலநேரங்களில் ميلاد , மீலாத் )என்பது இசுலாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் வருகின்ற முகமது நபி அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதாகும்.மௌலித் என்ற வசனம் உலகின்,எகிப்து போன்ற சில இடங்களில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க சூபி பெரியோர்களின் பிறந்த தினத்தைக் குறிக்கவும் உபயோகிக்கப்படுகின்றது.
இந்தியாவில் ஊழல் ஒரு பெரும் பிரச்சினை. அது இந்தியாவின் பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கின்றது. இந்தியாவில் திரான்சிபரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) நடத்திய 2005ஆம் ஆண்டின் ஆய்வின் படி 62 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இலஞ்சம் கொடுப்பது, அல்லது செல்வாக்கு பயன்படுத்தி பொது அலுவலகங்களில் வெற்றிகரமாக வேலைகளை முடித்துக் கொள்வதில் முதல் கை அனுபவம் இருந்ததாக தெரியவந்துள்ளது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, அரபு மொழி: محمد, பிறப்பு கிபி 570, இறப்பு 8 சூன் கிபி 632 கணிப்பு), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்தவர். அராபியத் தீபகற்பம் முழுமையையும் இசுலாம் என்ற ஒரே கொள்கைச் சமயத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர் முஸ்லிம்களால் மட்டுமல்லாமல் பாபிஸ்துகள் மற்றும் பகாய் சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்று போற்றப்படுகிறார்.
பிரான்சின் முதலாம் நெப்போலியன்
நெப்போலியன் பொனபார்ட் (Napoléon Bonaparte, 15 ஆகஸ்ட் 1769 – 5 மே 1821) அல்லது முதலாம் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவனாகவும், அரசியல் தலைவனாகவும் இருந்தவன். தற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது. இவன் பிரெஞ்சுப் புரட்சியில் ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளன், பிரெஞ்சுப் பேரரசன், இத்தாலியின் மன்னன், சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளன், ரைன் கூட்டாட்சியின் காப்பாளன் ஆகிய பதவிகளை வகித்துள்ளான்.
தேவர் செயந்தி (தேவர் ஜெயந்தி) என்று ஒவ்வொரு ஆண்டும் இந்திய விடுதலை வீரரும் அரசியல்வாதியுமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளான அக்டோபர் 30ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் தென்பகுதியில் தேவர் குலத்தவர்களால் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது இந்நாள் ஒரு பொதுவிடுமுறையாக இல்லாதிருப்பினும் இப்பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளும் கடைகளும் மூடப்பட்டிருக்கும்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சார்ந்திருந்த அரசியல் கட்சியான அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு இந்நாளை தமிழ்நாட்டில் ஓர் பொது விடுமுறை நாளாக அறிவிக்கக் கோரி வருகிறது.
முக்குலத்தோர் (Mukkulathor) அல்லது தேவர் (Thevar) எனப்படுவர்கள், இந்தியாவின், தமிழ்நாட்டில், மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் வாழுகின்ற இனக்குழுவினர் ஆவார். ஆனால் முக்குலத்தோர் என்னும் பெயரானது தமிழக அரசாங்கத்தால், இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. இவர்கள் கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூன்று சமூகத்தினர் ஆவர்.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
கண்ணதாசன் (ஒலிப்பு ) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
இந்திய வரலாறு (History of India) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் வரலாற்றுக் காலம் முன்பு வாழ்ந்த மக்கள், அவர்தம் சமுதாயம், சிந்து சமவெளி நாகரிகம் இந்தோ-ஆரியப் பண்பாடு உள்ளடக்கிய வேதகால நாகரிகம் தொடங்கி இன்றுவரை உள்ளிட்டகாலம் அடங்கும். மேலும் பல கலாச்சாரங்களின் சாரமாகவும் பண்பாடுகளை உள்வாங்கியும் பிறந்த இந்து சமயம், அதன் வளர்ச்சி குறித்தும் சிரமணா இயக்கத்தின் வளர்ச்சி, சிரவுத்தா பலிகளின் வீழ்ச்சி, சைனம், பௌத்தம், சைவம், வைணவம் மற்றும் சக்தி வழிபாடு இவைகளின் வளர்ச்சி, தாக்கம், மேலும் இப்பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த அரச பரம்பரை, பேரரசுகளின் தோற்றம், தாக்கம், இடைகாலத்தில் தோன்றிய இந்து மற்றும் முகலாய அரச பரம்பரைகள் குறித்த தகவல்கள், பிற்காலத்தில் வந்த ஐரோப்பிய வணிகர்கள், அதன் தொடர்ச்சியாக அமைந்த ஆங்கிலேய அரசு, அதன் தொடர்ச்சியாக எழுந்த விடுதலை இயக்கம், அதன் பின் நாடு பிரிவினை அடைந்து இந்தியக் குடியரசு பிறந்த வரை தகவல்கள் உள்ளிட்டவை அடங்கும்.சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துணைக்கண்டத்தில் இன்றைய மனிதர்களின் உடற்கூறியல் வடிவத்தை ஒத்த மனிதர்களோ அல்லது 5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தற்கால மனிதனின் முன்னோடிகளோ வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிமு 3200 முதல் கிமு 1300 வரை இந்தியாவில் செழிப்பாக விளங்கிய சிந்துவெளி நாகரிகம்தான் தெற்கு ஆசியாவில் தோன்றிய முதல் நாகரிகம் ஆகும்.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
தமிழ் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் அல்லது தமிழ்த் தொலைக்காட்சித்துறை என்பது தமிழ்நாட்டில் அதிகளவு தயாரிக்கப்பட்டு இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அசுத்திரேலியா, கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுககளில் வாழும் தமிழ் மக்களால் பார்க்கப்படும் ஒரு பொழுதுபோக்கு அம்சம் ஆகும். குடும்பம், நகைச்சுவை, கற்பனை, மருத்துவம், காதல், வரலாற்று நாடகம், நாடகத் தொடர், திகில், பரபரப்பூட்டும், மர்மம் போன்ற பல வித்தியாசமான கதைக்களத்துடன் தயாரிக்கப்பட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவருகின்றது. முதல் தமிழ் தொலைக்காட்சி தொடர் 1980 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் வாரநாட்களில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில்
திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர்ஆகிய மூவரதும் தேவாரப் பாடலும் அருணகிரிநாதரின் திருப்புகழும் பெற்றது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.
பீகார் சட்டமன்றத் தேர்தல், 2020
பீகார் சட்டமன்றத் தேர்தல், 2020 என்பது மூன்று கட்டங்களாக 235 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தல். முதல் கட்டம் 28 அக்டோபர் அன்று 71 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டம் நவம்பர் 3 அன்று 93 தொகுதிகளுக்கும் மூன்றாம் கட்டம் நவம்பர் 7 அன்று 78 தொகுதிகளுக்கு நடைபெறும். நவம்பர் 10 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
(சுற்றுச்சூழல் பாதுகாப்பு) (environmental protection) என்பது சுற்றசூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகையினாலும் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்று சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் சோழ பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே.
இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி.
கூகிள் ஐ/ஓ (மேம்பாட்டாளர் மாநாடு)-2017
கூகிள் மேம்பாட்டாளர் மாநாடு (Google I/O) என்பது கூகிள் நிறுவனத்தால் சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா யாவில் நடைபெற்ற வருடாந்திர மாநாடு ஆகும்.இந்த மாநாட்டில் இணைய மேம்பாடு, கூகிள் குரோம், ஆண்ட்ராய்டு இயங்குதளம், கூகிள் தேடல், செல்லிடத் தொலைபேசி போன்றவற்றின் மேம்பாடு பற்றி விவாதிக்கப்பட்டது. இதன் முதல் மாநாடு 2008 ஆம் ஆண்டு நடைபெற்றது.
ஆதிதிருவரங்கம் ரங்கநாதசுவாமி கோயில்
ரங்கநாத சுவாமி கோயில் அல்லது ரங்கநாத பெருமாள் கோயில் இந்தியா, தமிழ்நாடு,சங்கராபுரம் வட்டத்தில் உள்ள கோவில் ஆகும். இது திருக்கோவிலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு அருகில் உள்ள ஒரு கோவிலாகும். இக்கோயிலானது திராவிடக் கட்டிடக்கலை கொண்டு இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது, பின்னர் விஜயநகர அரசர்கள் காலத்தில் விரிவாக்கப்பட்டுள்ளது.
திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில்
திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவில் சுந்தரர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலமாகும். இத்தலம் திருநாமநல்லூர் என்றழைக்கப்படுகிறது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.
சர்தார் வல்லப்பாய் படேல் (அக்டோபர் 31, 1875 - டிசம்பர் 15, 1950) (Sardar Vallabhbhai Jhaverbhai Patel, குஜராத்தி: વલ્લભભાઈ પટેલ, இந்தி: सरदार वल्लभभाई पटेल) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார்.சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார்,ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார்.
திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில்
திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இச்சிவத்தலம் இந்தியா தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவடத்திலுள்ள திருக்கோவிலூர் ஊரில் கீழூர் என்ற பகுதியில் அமைந்துள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் என்பது 2018 முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில், அவற்றில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்படும் ஒரு விருது நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் யார் சிறந்த நடிகை மற்றும் நடிகர் என்று மக்களின் வாக்குகள் மூலமாகவும் மற்றும் ஜீ தமிழாலும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.இதில் விருப்பமான - நடிகை, நடிகர், வில்லி, ஜோடி மற்றும் சிறந்த - நடிகை, நடிகர், துணை நடிகர், துணை நடிகை, வில்லி, அப்பா, அம்மா, மாமியார், தொடர் போன்ற பல பிரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்திய லஞ்ச ஒழிப்பு இயக்கம் (2011)
இந்திய லஞ்ச ஒழிப்பு இயக்கம் என்பது இந்தியாவில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கும் லஞ்சம் மற்றும் முறைகேடுகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் ஆகும். இந்த இயக்கம் அண்ணா அசரே 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி இந்த நோக்கத்திற்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்ததிலிருந்து சூடுபிடிக்கத் தொடங்கி இன்று வரை நாடளவிலான மக்கள் எழுச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்திய குடிமக்கள் இந்த இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வருகின்றனர்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளைய தலைமுறையினரை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்
இந்தியாவில் 28 மாநிலங்களும், டெல்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 8 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, ஜம்மு காஷ்மீர், டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் இந்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும்.
ஊழல் (corruption) என்பது, வழங்கப்பட்ட அதிகாரத்தையோ, பதவியையோ தவறாகப் பயன்படுத்தி தனிப்பட்ட பயன்களைப் பெற்றுக்கொள்வதைக் குறிக்கும். உழல் என்பதில், லஞ்சம், கையாடல் போன்றவை உள்ளடங்கும். அரசாங்கத்தின் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் அல்லது அரசுபணியில் இருக்கும் பிற ஊழியர்கள் அலுவல் முறையில் தனிப்பட்ட நலன்களுக்காகச் செயற்படும்போது அரசாங்க அல்லது அரசியல் ஊழல் இடம்பெறுகிறது.
அப்பர் திருநாவுக்கரசு நாயனார் கி.பி. ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரை, தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.இவரை, திருஞானசம்பந்தர், 'அப்பர்' (தந்தை) என்று அழைத்தமையால்,.
உழவு அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான்.
நடராசர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவேரி வடகரை சிவத்தலங்கள் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது.
19ம் நூற்றாண்டின் இறுதியில் பிங்-பாங் என்று அறியப்பட்ட மேசைப்பந்தாட்டம் (table tennis, டேபிள் டென்னிஸ்) தற்போது உலகம் முழுதும் பரவி ஏற்றுக்கொள்ளப்பட்டுளது. 1988ல் ஒலிம்பிக்சில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. ஒரு மேசையின் இருபுறமும் நின்று, சிறிய கைப்பிடியுள்ள வட்டமான மட்டையைக் கொண்டு மிக இலேசாக தக்கைபோல் உள்ள (பிளாஸ்டிக்) பந்தை எதிராளி தடுத்து அடிக்கமுடியாமல் முன்னும் பின்னுமாய் அடித்து ஆடும் விளையாட்டு.
ஆடம் சிமித் (ஆடம் ஸ்மித்; Adam Smith; ஞானஸ்நானம் ஜூன் 16, 1723 – ஜூலை 17,1790 [பழைய முறை: ஜூன் 5, 1723 – 17 ஜூலை 1790]) ஓர் ஒழுக்கநெறி மெய்யியலாளரும் அரசியல் பொருளியலின் முன்னோடியும் ஆவார். ஸ்காட்டிய அறிவொளி இயக்கத்தின் முதன்மையானவர்களில் ஒருவரான சிமித், ஒழுக்க உணர்வுக் கோட்பாடு (The Theory of Moral Sentiments), நாடுகளின் செல்வத்தின் இயல்புகள், காரணங்கள் குறித்த ஒரு ஆய்வு (An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations) (அல்லது நாடுகளின் செல்வம்) ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் இரண்டாவது நூல் அவருடைய மிகச் சிறந்த ஆக்கம் என்பதுடன், தற்காலப் பொருளியலின் முதலாவது நூல் என்றும் கருதப்படுகிறது.சிமித், ஒழுக்க மெய்யியலை கிளாஸ்கோப் பல்கலைக்கழகத்திலும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம்|ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திலும் பயின்றார்.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் பழங்குடியினர் (36) பட்டியல் சாதிகள் (76) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79)என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது.
வர்ணங்கள் ) சமசுகிருத சொல்லான வர்ணா என்ற சொல்லிற்கு அடைத்து வை என்று பொருள். வரலாற்றையொற்றி வழிவழியாய் வந்த கூற்றின்படி வர்ணமும், சாதியும் வெவ்வேறானவை அல்ல அவை ஒன்றொக்கொன்று தொடர்புடையவை என்று கூறப்பட்டுள்ளது. இந்து மக்களை அதன் இறையியல் கூற்றுப்படி மனிதனை குறிக்கும் புருஷா எனும் சொல் (ரிக் வேதக் 10.90 கூற்றுப்படி) மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரிக்கின்றது.
ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஏப்ரல் 23ஆம் திகதி 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு குண்டான பெண்ணின் குடும்ப பின்னணியைக் கொண்ட தொலைக்காட்சி தொடர். இந்த தொடருக்கான கதை இந்தி மொழி தொடரான போதோ பஹு என்ற தொடரிலிருந்து எடுக்கப்பட்டது.இந்த தொடரில் ராசாத்தியாக புதுமுக நடிகை அஷ்வினி நடிக்கிறார்.
திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீசுவரர் கோயில்
திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீசுவரர் கோயில் தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணெய்நல்லூர் எனும் ஊரில் அமைந்துள்ள, தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் சுந்தரரால் பாடல் பெற்ற சிவாலயமாகும்.
வன்னியர் (Vanniyar) அல்லது வன்னிய குல சத்திரியர் (Vanniya Kula Kshatriya's) எனப்படுவோர் தமிழகத்தில் குறிப்பாக வடதமிழகத்தில் (காவேரி ஆற்றின் வடக்கு பகுதிகளில்) அடர்த்தியாகவும், மற்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலும் வாழுகின்ற ஒரு மிகப்பெரிய தமிழ் சாதியினர் ஆவர். இவர்கள் புதுச்சேரி, தெற்கு கருநாடகம் மற்றும் தெற்கு ஆந்திரா போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.
{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Discolampa|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} டைசுகோலம்பா (Discolampa) என்பது நீலன்கள் (லைகேனிடே) பட்டாம்பூச்சிகள் குடும்பத்தில் இலங்கை முதல் நியூ கினியா வரை காணப்படும் ஓர் பேரினமாகும். இந்தப் பேரினத்தின் கீழ் மூன்று சிற்றினங்கள் உள்ளன.
விஷ்ணு என்பவர் இந்து சமயத்தின் முக்கியமான கடவுள்களில் ஒருவரும் வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளும் ஆவார். மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு மூவுலகையும் காப்பவராக இருக்கிறார்.இவர் பிறப்பும்,இறப்பும் இல்லா பரம்பொருளாக இருப்பதால் பரப்பிரம்மன்,பரமாத்மா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். விஷ்ணு என்ற சொல்லுக்கு எங்கும் நிறைந்திருப்பவர் என்று பொருள்.
தற்கால இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மண்டலம் வரலாற்றுக் காலத்துக்கு முன்பு முதல் மக்கள் வாழும் உறைவிடமாக தொடர்ந்து இருந்துவந்துள்ளது. தமிழ்நாட்டின் வரலாறும் தமிழ் மக்களின் நாகரீகமும் உலகின் மிகப் பழமையானவையாகும். முந்தைய பழங்கற்காலம் முதல் தற்காலம் வரையிலான தமிழ்நாட்டின் வரலாறு முழுவதிலும், இந்தப் பகுதியானது பல்வேறு புறக் கலாச்சாரங்களுடன் ஒருங்கிணைந்து இருந்து வந்துள்ளது.
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார்.