The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (சூன் 14, 1928 – அக்டோபர் 9, 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
இராம் விலாசு பாசுவான் (Ram Vilas Paswan) (5 சூலை 1946 - 8 அக்டோபர் 2020) பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், தற்போதைய உணவு மற்றும் நுகர்பொருள் அமைச்சரும் ஆவார். எட்டு முறை மக்களவை (இந்தியா) உறுப்பினராகவும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். சம்யுக்த சோசலிசக் கட்சியில் தமது அரசியல் வாழ்வைத் தொடங்கினார்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
வி. கஸ்தூரி வாசு ( V.Kasthuri Vasu) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகதை சேர்த்தவர். இவர் அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, 2016 தேர்தலில் வால்பாறை தொகுதியில் இருந்து , தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
கண்ணதாசன் (ஒலிப்பு ) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
சென்னை மெட்ரோ முதல் திட்டத்தின் இரண்டு தடங்களில் நில தடம் அல்லது தடம் 1 ஆகும், இரண்டாவது தடம் பச்சை வழித்தடம். முதல் தடமானதுசென்னை பன்னாட்டு வானுர்தி நிலையத்திலிருந்து வண்ணாரப்பேட்டை வரை மேலும் விம்கோ நகருக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 25 மெட்ரோ நிலையங்கள் உள்ளன, அதில் 17 நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
ஜோர்டன் ஹாவர்த் பீல் (ஆங்கிலம்: Jordan Haworth Peele) (பிறப்பு பிப்ரவரி 21, 1979) ஐக்கிய அமெரிக்க நடிகர், நகைச்சுவையாளர், எழுத்தாளர், இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர் ஆவார். நகைச்சுவை மற்றும் திகில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்காக அறியப்படுகிறார் டாய் ஸ்டோரி 4 அசைவூட்டத் திரைப்படத்தில் குரல் கொடுத்து நடித்துள்ளார்.
விக்கி (wiki, (கேட்க) விக்-கீ) என்பது ஓர் இணையத்தளத்துக்கு வரும் பார்வையாளர்களே ஏனையோருடன் இணைந்து அத்தளத்தின் உள்ளடக்கத்தைத் திருத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ தக்க வகையில் அமைந்திருக்கும் ஒரு வலைச் செயலியைக் குறிக்கும். இந்த மாற்றங்கள் ஓர் இணைய உலாவியில் ஓர் எளிய குறியீட்டு மொழி அல்லது "வாட் யூ சீ இஸ் வாட் யூ கெட்" (WYSIWYG) தொகுப்பானின் உதவியுடனோ செய்யப்படுகிறது. இது போன்ற பல இணையத்தளங்களில் பயனர் கணக்கு உருவாக்காமல் கூட உள்ளடக்க மாற்றங்களைச் செய்ய இயலும்.
பச்சை வழித்தடம் (சென்னை மெட்ரோ)
பச்சை வழித்தடம் அல்லது அல்லது தடம் 2 ஆகும் லைன் 2 சென்னை மெட்ரோ, முதல் திட்டத்தின் இரண்டாவது தடம் ஆகும் சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை இந்த வரிசையில் 17 மெட்ரோ நிலையங்கள் உள்ளன, அதில் 9 நிலையங்கள் தரைக்கடியிலும் மற்றும் 8 நிலையங்கள் உயர் பாலத்தில் இயக்கப்படுகிறது.
எ. சிறீதரன் ( A. Sridharan) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகதை சேர்த்தவர். இவர் அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, 1991 தேர்தலில் வால்பாறை தொகுதியில் இருந்து , தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Dicerorhinus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} சிட்டகாங் காண்டாமிருகம் அல்லது வடக்கு கேரி காண்டாமிருகம் என்றும் அழைக்கப்படும் வடக்கு சுமத்ரா காண்டாமிருகம் (டைசெரோரைனஸ் சுமட்ரென்சிஸ் லேசியோடிஸ்) என்பது சுமத்ரா காண்டாமிருகத்தில் மிகவும் பரவலாகக் காணப்படும் துணைச் சிற்றினமாகும். ஆசியாவின் பிரதான நிலப்பகுதியைச் சேர்ந்த ஒரே ஒரு துணைச் சிற்றினமாக இது உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல சந்தர்ப்பங்களில் இந்த காண்டாமிருக இனம் அதிகாரப்பூர்வமாக அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும், பர்மா மற்றும் மலேசியத் தீபகற்பம் போன்ற காடுகளில் சிறிய எண்ணிக்கையில் இவை இன்னும் இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss, பிறப்பு: அக்டோபர் 9, 1968) ஒரு தமிழக அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். இவரின் தந்தையார் மருத்துவர் ராமதாஸ் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சியில் உறுப்பினர் ஆவார். 2004-இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய நடுவண் அரசில் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சராகப் பணியாற்றினார்.
(சுற்றுச்சூழல் பாதுகாப்பு) (environmental protection) என்பது சுற்றசூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகையினாலும் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்று சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
இரேகா யாதவ் (Rekha Yadav; இந்தி: रेखा यादव ) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனசக்தி கட்சியின் உறுப்பினர். மத்தியப்பிரதேசம் சதர்பூர் மாவட்டத்தில் மல்ஹாரா தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மத்தியப் பிரதேச விதான் சபையின் முன்னாள் உறுப்பினர் ஆவார். 2008 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் இந்த தொகுதியில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கில மொழி: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழு
தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழு-நாகாவானது (National Advisory Committee for Aeronautics-NACA) ஐக்கிய அமெரிக்க கூட்டரசால் வானூர்தியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக மார்ச் 3, 1915-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அக்டோபர் 1, 1958-இல் நாகா அமைப்பு கலைக்கப்பட்டது, அதன் சொத்துக்கள் மற்றும் வேலையாட்கள் புதிதாக நிறுவப்பட்ட தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்-நாசா அமைப்புக்கு மாற்றப்பட்டனர். இவ்வமைப்பின் ஆராய்ச்சியில் வடிவமைக்கப்பட்ட நாகா காற்றிதழ்கள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன.
திருநாங்கூர் மதங்கீசுவரர் கோயில்
திருநாங்கூர் மதங்கீசுவரர் கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
இந்திய சோதிடத்தில் பிரீதி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் முதலாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 13° 20' தொடக்கம் 26° 40' பிரீதி யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "பிரீதி" ஆகும்.
சுற்றுச்சூழல் நாற்கூம்பு அல்லது சுற்றுச்சூழல் பிரமிடு (ecological pyramid) என்பது கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழலில் ஒவ்வொரு சூழ்நிலை மண்டல மட்டத்திலும் உயிரினத்தொகுதி (பயோமாஸ்) அல்லது உயிர் உற்பத்தித்திறனைக் காட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு வரைகலை அமைப்பு ஆகும். இது சூழ்நிலை மண்டல பிரமிடு, எல்டோனியன் பிரமிடு, ஆற்றல் பிரமிடு, அல்லது சில நேரங்களில் உணவு பிரமிடு (trophic pyramid, eltonian pyramid, energy pyramid, food pyramid) எனவும் அழைக்கப்படுகிறது. ”பயோமாஸ் பிரமிடுகள்” எத்தனை உயிரினங்கள் (ஒரு உயிரினத்தில் வாழும் உயிரினம் அல்லது உயிரினத்தின் அளவு) ஒவ்வொரு சூழ்நிலை மண்டல மட்டத்திலும் உள்ளன என்பதைக் குறிப்பிடுகின்றன.
கோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சி இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மேற்குப் பகுதியில் தென்னிந்தியாவின் பெரும் தொழில் நகரமாக (தென்னிந்தியாவின் மான்செஸ்டர்) இருக்கும் கோயம்புத்தூர் மாநகரத்தை ஆட்சி செய்யும் உள்ளாட்சித் துறையின் ஒரு அமைப்பே கோயம்புத்தூர் மாநகராட்சி ஆகும். தென்னிந்தியாவின் சென்னை, ஐதராபாத், பெங்களூருக்கு அடுத்த நான்காகவது மிகப்பெரிய மாநகராட்சி கோயம்புத்தூர் ஆகும். இந்தியாவில் மும்பைக்கு அடுத்த அதிக தொழில் முதலீடுகளை கொண்டுள்ள ஓர் மாநகரம் ஆகும்.
சுற்றுச்சூழல் மாசுபாடு (சூழல் மாசடைதல்) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும். சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது.
உணவுச் சங்கிலி (food chain) என்பது, ஒரு குறிப்பிட்ட வாழ்சூழலில் உள்ள உயிரினங்களுக்கு இடையிலான உணவுத் தொடர்பினை விளக்கும் எளிய சங்கிலித் தொடர்பு. ஒரு வாழ்சூழல் முறைமையில் உள்ள ஒரு உணவு மட்டத்திலிருந்து மற்றொரு உணவு மட்டத்திற்கு உணவும், ஆற்றலும் கடத்திச் செல்லப்படுவதை உணவுச் சங்கிலி விளக்குகிறது. உண்மையில், உணவுச் சங்கிலி தொடர்புகள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றன.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
உயிரியல் பல்வகைமை அல்லது பல்லுயிரியம் அல்லது உயிரினப் பன்மயம் (Biodiversity, இலங்கை வழக்கு: உயிர்ப் பல்வகைமை) என்பது பூமியில் உள்ள நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய கணக்கிலடங்காத உயிரினங்களில் காணப்படும் வேறுபாடு ஆகும். மரபுவழிப் பண்பில் பல்வகை, சிற்றினங்களில் பல்வகை, சூழல் அமைப்பில் பல்வகை, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு உரித்தான பல்வகை, அறிமுகப்படுத்தப்பட்ட உயிரினங்களில் பல்வகை ஆகியவற்றை உயிரியல் பல்வகைமை என்பது குறிக்கும். உயிரியல் பல்வகைமை என்பது புவியின் எல்லாப் பகுதிகளிலும் பல்வேறு சூழல்களில் வாழும் பலவகையான உயிரினங்களைப் பற்றி விவரிக்கப் பயன்படுத்தும் ஒரு சொல்லாகும்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
இம்மானுவேல் சேகரன் (1924 அக்டோபர் 9 - செப்டம்பர் 11, 1957) ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தமிழக அரசியல் தலைவர். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர். மேலும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை வதாரண்யேசுவரர் கோயில்
மயிலாடுதுறை வதாரண்யேசுவரர் கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
'இறக்கைகள் கொண்ட இருகாலி'யைப் பறவை எனக் கூறுவர். பறவைகள் முதுகெலும்புடைய இளஞ்சூட்டுக் குருதியுடைய, இறகுகளுடைய, முட்டையிட்டு இனம்பெருகும் விலங்குகளை குறிக்கும். பறவைகள் இருகால்கள் உள்ள, தன் உடல்வெப்பம் காக்கும், முதுகெலும்புள்ள (முள்ளந்தண்டுள்ள) புள் என்றும் குரீஇ என்றும் சிறப்பித்துக் கூறும் வகையைச் சேர்ந்த, முட்டையிடும் விலங்குகள் ஆகும்.
மலரன்னை ஓர் ஈழத்து எழுத்தாளர். மூத்த புகழ் பெற்ற எழுத்தாளர் கச்சாயில் இரத்தினத்தின் மகள். இவரது நூற்றி எழுபத்தைந்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள் பல்வேறு பத்திரிகைகள், வானொலிகள், சஞ்சிகைகளில் இலங்கை மற்றும் பிற நாடுகளில் பிரசுரமாகியுள்ளது.சில சிறுகதைகள் சர்வதேச வெளியீடுகளில் மீள்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளம் என்பது நிலத்தை மூழ்கடிக்குமளவுக்குத் தேங்கி நிற்கும் அல்லது பொங்கிப் பாய்ந்தோடும் நீர் ஆகும்.ஆறு அல்லது ஏரி போன்ற நீர்நிலைகளில் உள்ள நீர் மிகையாகும் போது அல்லது கரை உடையும் போது அது தனது வழக்கமான எல்லைகளைத் தாண்டுகிறது. நீரோட்டத்தின் வலிமையானது மிகவும் அதிகரிக்கின்ற போது ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அது ஆற்றின் பாதையைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடி கரையோரம் ஒட்டி அமைந்துள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனகளுக்கு சேதம் உண்டாக்குகிறது.
முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு, தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும், ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக, தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
சீர்காழி காசி விசுவநாதர் கோயில்
சீர்காழி காசி விசுவநாதர் கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
வறட்சி அல்லது வரட்சி என்பது ஒரு வரண்ட காலகட்டத்தைக் குறிக்கும். நீண்ட காலத்திற்கு மழைவீழ்ச்சி (பொழிவு) கிடைக்கமையால் ஏற்படுகின்ற சூழல் நிலைமையை வரட்சி என்று எளிமையாக வரைவிலக்கணப்படுத்தலாம். ஆயினும் வரட்சி பற்றிய திட்டமான வரையறை காலத்துக்குக் காலம், நாட்டுக்கு நாடு, பிரதேசத்திற்குப் பிரதேசம் வெறுபடுகின்றது.
உழவு அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான்.
சுற்றுச்சூழல் அல்லது உயிரியற்பியல் சூழல் என்பது ஒரு உயிரினத்தை அல்லது மக்கள் தொகையைச் சுற்றியுள்ள உயிர் உள்ள, மற்றும் உயிரற்ற கூறுகள் அனைத்தையும், அவற்றின் விளைவாக குறிப்பிட்ட உயிரினம் அல்லது மக்கள் தொகையின் பிழைப்புத் திறன், விருத்தி, படிவளர்ச்சி அல்லது கூர்ப்பு ஆகியவற்றில் தாக்கம் செய்யக்கூடிய அனைத்துக் காரணிகளையும் உள்ளடக்கிய இயற்கைச் சூழலைக் குறிக்கின்றது. உயிரியற்பியல் சூழலானது நுண்ணோக்கி நிலையிலிருந்து, உலகளாவிய நிலைவரை வேறுபட்ட அளவுகளில் ஆராயப்படலாம். அத்துடன் சூழலின் இயல்பைப் பொறுத்து பெருங்கடல் சூழல், வளிமண்டலச் சூழல், நிலச் சூழல் போன்ற பல வேறுபட்ட சூழல்களைக் காணலாம்.
நோபெல் பரிசு (Nobel Prize) அல்லது நோபல் பரிசு (பழைய வழக்கு) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
க/பெ ரணசிங்கம் (Ka Pae Ranasingam)) 2020 ஆம் ஆண்டு இந்திய தமிழ் மொழி அரசியல் நாடகப் படமாகும். இப்படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் திரையரங்கில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக காட்சிக்கு காசு தளத்தில் வெளியிடப்பட்டது.
புதுக்கவிதை என்பதற்கான வரைவிலக்கணம் என்பது இன்றைய சூழலில் பல்வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. எனினும் இலகுவாக புதுக்கவிதை என்பது கவிதைக்குரிய மரபு, இலக்கணம் அற்ற ஒரு கவிதை முறையாக நோக்கப்படுகின்றது. மரபுக்கவிதையானது சீர், தளை, அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளைக் கொண்டு காணப்பட புதுக்கவிதை அவற்றை புறந்தள்ளியதாக புதுக்தோற்றத்துடன் காணப்படுகின்றது.
குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா: கு, சு, டு, து, பு, று) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துகள் (எ.கா: ற, கி, பெ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது. இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.
கள்ளக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)
கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது 1951 முதல் 1971 வரை சட்டமன்றத் தொகுதியாக இருந்தது. 2009ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட தொகுதி மறு சீரமைப்பு கட்டளைப்படி, மீண்டும் சட்டமன்றத் தொகுதியாக அறிவிக்கப்பட்டது.
இலூயிசு எலிசபெத்து கிளிக்கு (Louise Elisabeth Glück; ;; பிறப்பு: ஏப்பிரல் 22, 1943) ஓர் அமெரிக்கக் கவிஞரும் கட்டுரையாளரும் ஆங்கில மொழிப் பேராசிரியரும் ஆவார். "சீரிய அழகுடன் தனி இருப்பை உலகளாவியதாக்குகிறது" என்பதில் அவரது தெளிவுநிறைந்த கவிதைக் குரலுக்காக, 2020-ஆம் ஆண்டில் இவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் தேசிய மனிதநேய பதக்கம், புலிட்சர் பரிசு உட்பட அமெரிக்காவில் பல முக்கிய இலக்கிய விருதுகளை வென்றுள்ளார்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
தகவல் தொழில்நுட்பம் (Information technology) என்பது தகவல் அல்லது தரவுகளைக் கணினியைப் பயன்படுத்தித் தேக்குதல், ஆய்தல், மீட்டல், செலுத்தல், கையாளல் சார்ந்த அறிவியல் தொழில்நுட்பப் புலமாகும். இங்குத் தகவல் என்பது வழக்கமாகத் தொழில்வணிகம் அல்லது பிற நிறுவனம் சார்ந்ததாக அமையும். தகவல் தொழில்நுட்பம் தகவல், தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தின் ஓர் உட்பிரிவாகும்.