The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
மியன்மார் அல்லது மியான்மர் அல்லது மியான்மார் அல்லது பர்மா (Myanmar) (myan-MAR-' (கேட்க) mee-ahn-MAR-', mee-EN-mar or my-AN-mar (also with the stress on first syllable); Burmese pronunciation: [mjəmà]), என்பது ஆசியாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்த இறைமையுள்ள நாடாகும். இது இன்றைய இரும்புத் திரை நாடு ஆகும். 1989ம் ஆண்டு பர்மா என்ற நாட்டின் பெயரை மியான்மர் நைங்கண்டௌ என்று மாற்றினர்.
ஜெர்மனி (Germany, [ˈdʒɜːmənɪ] ), அல்லது ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு (ஜெர்மானியம்: , IPA: [ˈbʊndəsʁepuˌbliːk ˈdɔʏtʃlant]), என்பது நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் வடக்கே வட கடல், டென்மார்க், பால்ட்டிக் கடல்; கிழக்கே போலந்து, செக் குடியரசு; தெற்கே ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து; மேற்கே பிரான்ஸ், லக்சம்பேர்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியன எல்லைகளாக உள்ளன. ஜெர்மனியின் பரப்பளவு 357,021 கிமீ².
உக்ரைன் (Ukraine, உக்ரைனியன்: Україна, உச்சரிப்பு [ʊkrɐˈjinɐ] (கேட்க)) கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் எல்லைகளாக வடகிழக்கே உருசியா; வடக்கே பெலருஸ்; மேற்கே போலந்து, சிலோவாக்கியா, அங்கேரி; தெற்கே உருமேனியா, மல்தோவா, கருங்கடல் ஆகியனவும் அமைந்துள்ளன. கிரிமியாவை 2014 இல் உருசியா கையகப்படுத்தியமை தொடர்பாக உக்ரைன் அந்நாட்டுடன் தற்போது எல்லைச் சர்ச்சையில் உள்ளது.
பன்னாட்டுத் தலைநகரங்களின் பட்டியல்
இது உலகில் உள்ள நாடுகள், ஆட்சிப் பகுதிகள், சார்ந்திருக்கும் ஆட்சிப் பகுதிகள் போன்றவற்றின் தலைநகரங்களின் பட்டியல் ஆகும்.
சுதா கொங்கரா (Sudha Kongara) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட பெண் இயக்குநராவார். திரைக்கதை ஆசிரியராக தமிழ் திரையுலகிலும், தெலுங்கு திரைத்துறையிலும், இந்தித் திரைப்பட உலகிலும் நன்கு அறியப்பட்டவர். இவர் அமைத்த திரைக்கதை இந்திய ஆங்கிலப் படமான மித்ர், மை ஃபிரண்ட் ( Mitr, My Friend) அந்த ஆண்டின் சிறந்த ஆங்கிலப் படத்திற்கான விருதாக 49ஆவது தேசியத் திரைப்பட விருதைப் பெற்றது..
இந்து தொன்மவியலின் படி திருமாலின் வராக அவதாரத்திற்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர் நரகாசுரன் ஆவார். இவர் தன்னுடைய பெற்றோர்களால் தான் மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரம் வாங்கியதாகவும், அதன் காரணமாக திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் பூமாதேவி சத்தியபாமாவாக பிறந்து நரகாசுரனை கொன்றதாகவும் நம்பிக்கை நிலவுகிறது. நரகாசுரனின் மரணத்தினை தேவர்கள் கொண்டாடியது போல மக்களும் கொண்டாட வேண்டும் என்று சத்யபாமா கிருஷ்ணரிடம் வரம் வாங்கியதால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
அபர்ணா பாலமுரளி (Aparna Balamurali) இவர் மலையாளத் திரைப்படம் மற்றும் தமிழ்த் திரைப்படத்துறையில் பணிபுரியும் இந்திய திரைப்பட நடிகையும் மற்றும் பின்னணி பாடகியுமாவார். இவர் மகேசிண்ட பிரதிகாரம் (2016) என்ற படத்தில் ஜிம்ஸி என்ற வேடத்திலும் மற்றும் சண்டே ஹாலிடே (2017) என்பதில் அனு என்ற பாத்திரத்தில் நடித்தற்காக மிகவும் பிரபலமானவர்.
இந்தோனேசியா (Indonesia), அதிகாரபூர்வமாக இந்தோனேசியக் குடியரசு (Republic of Indonesia) என அழைக்கப்படுவது 17,508 தீவுகளாலான தென் கிழக்காசிய, மற்றும் ஓசியானிய நாடாகும். 33 மாகாணங்களைக் கொண்ட இந்நாட்டில் 238 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதனால் உலகில் மக்கள் தொகை கூடிய நாடுகளில் இந்தோனேசியா நான்காவது இடத்தில் உள்ளது.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
சீனா (China) என்று பொதுவாக அழைக்கப்படும் சீன மக்கள் குடியரசு கிழக்காசியாவிலுள்ள நாடாகும். ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும். 1,306,313,812 மக்கள் வாழும் சீனா, உலகில் சனத்தொகை கூடிய நாடுகளில் முதலிடம் வகிக்கிறது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
மனு தர்ம சாத்திரம் (சமசுகிருதம்:मनुस्मृति, மனுஸ்மிருதி) இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும். இதனை சுவாயம்பு (மனு) எனும் பண்டைய வேத கால முனிவர் தொகுத்தார். இது 2685 செய்யுட்களாகவும், 3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது.
தாய்லாந்து (Thailand, தாய்: ประเทศไทย, எழுதும்படி: தாய் பிரதேசம்), அதிகாரப்பூர்வமாக தாய்லாந்து இராச்சியம் (Kingdom of Thailand), முன்னர் சயாம் (Siam, สยาม), என அழைக்கப்படும் நாடு; தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு. இதன் எல்லைகளாக மியான்மர், லாவோஸ் ஆகியன வடக்கேயும், லாவோஸ், கம்போடியா ஆகியன கிழக்கேயும், தாய்லாந்து வளைகுடா, மலேசியா ஆகியன தெற்கேயும், அந்தமான் கடல் மேற்கேயும் அமைந்துள்ளன. தாய்லாந்தின் கடல் எல்லைகளாக தென்கிழக்கே தாய்லாந்து வளைகுடாவில் வியட்நாமும், தென்மேற்கே அந்தமான் கடலில் இந்தோனேசியா, இந்தியா ஆகியனவும் உள்ளன.
இலங்கை (ஒலிப்பு ) (Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, சிறீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
பிர்சா முண்டா (Birsa Munda) இவர் ஆங்கிலேய அரசிடமும், உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களுக்காகப் போராடிய முதல் வீரர் ஆவார். தற்போதைய பீகார், ஜார்கண்ட் பகுதி பழங்குடி இனமக்களின் போராட்டத்திற்கு இந்திய விடுதலை இயக்கக் காலமான 19ஆம் நூற்றாண்டிலேயே வித்திட்டவர் ஆவர். பழங்குடி தலைவர்களிலேயே இவரின் உருவப்படம் மட்டும் தான் இந்திய நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது.இவரின் பெயரால் சார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் உள்ள விமான நிலையத்திற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மேற்கு செருமனி (West Germany, செருமன் மொழி: Westdeutschland) என்று குறிப்பிடப்படுவது மே 1949 முதல் அக்டோபர் 1990ஆம் ஆண்டு வரை செருமனி நாட்டின், நட்பு அணி நாடுகள் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பிரான்ஸ் வெற்றிகொண்ட மேற்குப் பகுதியில், அமைந்த செருமன் கூட்டாட்சிக் குடியரசு ஆகும். மற்ற நட்பு அணி நாடான சோவியத் ஒன்றியம் வெற்றிகொண்ட பகுதிகளில் அமைந்த செருமன் சனநாயக குடியரசு கிழக்கு செருமனி என குறிக்கப்பட்டது.அக்டோபர் 1990ஆம் ஆண்டு செருமன் சனநாயக குடியரசு கலைக்கப்பட்டு 40 ஆண்டுகால பிரிவிற்குப் பிறகு செருமன் கூட்டாட்சிக் குடியரசுடன் இணைந்தது. இந்த இணைப்பின் பின்னர் செருமன் கூட்டாட்சிக் குடியரசு செருமனி எனவே குறிப்பிடப் படுகின்றது.
தமிழ் ராக்கர்ஸ், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களை சட்டத்திற்குப் புறம்பாக இணையத்தில் பகிரும், ஒரு இணையத்தளம் ஆகும். இது பிட்டொரென்ட் வகையை சேர்ந்ததாகும். இது தனக்கென ஒரு வழங்கி ஒன்றை வைத்துகொள்ளாமல், பயனர்களின் கணணிகளை வழங்கி (Peer to Peer) ஆக மாற்றி பயன்படுத்தும்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, அரபு மொழி: محمد, பிறப்பு கிபி 570, இறப்பு 8 சூன் கிபி 632 கணிப்பு), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்தவர். அராபியத் தீபகற்பம் முழுமையையும் இசுலாம் என்ற ஒரே கொள்கைச் சமயத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர் முஸ்லிம்களால் மட்டுமல்லாமல் பாபிஸ்துகள் மற்றும் பகாய் சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்று போற்றப்படுகிறார்.
ஈராக்கு குடியரசு (அரபு மொழி: العراق , இராக்) என அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் ஈராக்கு தென்மேற்கு ஆசியாவிலுள்ள மத்திய கிழக்கு நாடாகும். இது பெரும்பாலான வடமேற்கிலுள்ள சாகரோஸ் மலைத்தொடரையும் சிரியப்பாலைவனத்தின் கிழக்குப் பகுதியையும் அராபியப் பாலைவனத்தின் வடபகுதியையும் உள்ளடக்கியுள்ளது. ஈராக்கில் கிழக்கு நடுப்பகுதியில் உள்ள பக்தாத் இதன் தலைநகரம் ஆகும்.
கிரேக்கம் (கிரேக்க மொழி:Ελλάδα, அல்லது Ελλάς, முறைப்படி கிரேக்கக் குடியரசு, கிரேக்க மொழியில்: எல்லிநீக்கி டீமொக்ராத்தியா; ஆங்கிலம்: Hellenic Republic (Ελληνική Δημοκρατία, என்னும் நாடு பால்க்கன் மூவலந்தீவுக்குத் தென்புறத்தில் அமைந்துள்ளது. இந்நாட்டுக்கு வடக்கே அல்பேனியாவும், மாசிடோனியாவும், பல்கேரியாவும், கிழக்கே துருக்கியும் அமைந்துள்ளது. ஏஜியன் கடல் கிழக்கிலும் தெற்கிலும் அமைந்துள்ளது.
தமிழர் (ஆங்கில மொழி: Tamil, Tamils, Tamilians) என்பவர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாவர். மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் தென்னிந்தியா, இலங்கையைச் சேர்ந்தவைகள் ஆகும்.உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழ்நாடும், தமிழீழமுமே ஆகும்.1800 முதல் 1900-களில் பிரித்தானியக் குடியேற்றவாத அரசால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டார்கள்,மேலும் மொரிசியசு, மடகாசுகர், தென்னாபிரிக்கா போன்ற ஆப்பிரிக்கா நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள்.20-ஆம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெற்று நடு ஆசிய நாடுகளுக்குச் சென்று வசிக்கின்றனர்.1950-களின் பின்னர் தமிழர் தொழில் வல்லுனர்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர்.1983 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்ட பெருமளவு ஈழத்தமிழர்கள் ஆத்திரேலியா, கனடா, அமெரிக்கா நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, யேர்மனி, சுவிட்சர்லாந்து, டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளிலும் சென்று வாழ்கிறார்கள்.உலகில் 70 மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும்,மேலும் 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாக கொண்டுள்ளனர்.
உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
இது உலக நாடுகளின் ஒரு அகரமுதற் பட்டியலாகும். நீங்கள் நாடுகளை தலைநகரம்வாரியாகவோ, கண்டங்கள் வாரியாகவோ, மக்கள்தொகை வாரியாகவோ, பரப்பளவு வாரியாகவோ, மக்கள்தொகை அடர்த்தி வாரியாகவோ, நேர வலயம் வாரியாகவோ கூட உலவலாம். விக்கித் திட்டம் நாடுகள் திட்டமானது தமிழ் விக்கியில் காணப்படும் மற்றும் இனி வரவிருக்கும் நாடுகள் பற்றிய கட்டுரைகள் ஒரு சீர்தரத்துக்குள் கொண்டுவரும் நோக்கில் அமைந்தது.
விஷ்ணு என்பவர் இந்து சமயத்தின் முக்கியமான கடவுள்களில் ஒருவரும் வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளும் ஆவார். மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு மூவுலகையும் காப்பவராக இருக்கிறார்.இவர் பிறப்பும்,இறப்பும் இல்லா பரம்பொருளாக இருப்பதால் பரப்பிரம்மன்,பரமாத்மா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். விஷ்ணு என்ற சொல்லுக்கு எங்கும் நிறைந்திருப்பவர் என்று பொருள்.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றது.
மகாவீரர் ஜெயந்தி (Mahavir Jayanti), சமண சமயத்தின் 24-வதும், இறுதித் தீர்த்தங்கரருமான மகாவீரரின் பிறந்த நாள் விழாவைக் குறிப்பதாகும். மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வரும் சைத்திர மாதம், திரியோதசி திதி அன்று மகாவீரரின் பிறந்த நாள், சமணர்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மகாவீரர் பிறந்த நாளை இந்தியாவில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அன்று இந்தியாவில் இறைச்சிக் கடைகளும், மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளும் ஆணையிட்டுள்ளது.
திருச்செந்தூர் (ஆங்கிலம்:Thiruchendur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்ட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில் திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது.
பிலிப்பீன்சு (ஆங்கில மொழி: Philippines; (கேட்க); பிலிப்பினோ: பிலிப்பினாஸ் [ˌpɪlɪˈpinɐs]), அல்லது பிலிப்பைன்ஸ் என்றழைக்கப்படும் பிலிப்பீனியக் குடியரசு (பிலிப்பினோ: ரீபப்பிலிக்கா இங் பிலிபினாஸ்) தென்கிழக்காசியாவிலுள்ள, மேற்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இறைமையுள்ள தீவு நாடாகும். லூசோன், விசயாஸ் மற்றும் மின்டனாவு எனப் பொதுவாக மூன்று பிரதான புவியியற் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள பிலிப்பீன்சு 7,641 தீவுகளைக் கொண்டுள்ளது. இதன் தலைநகராக மணிலாவும், அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகக் குவிசோன் நகரமும் உள்ளன.
சூர்யா (சூலை 23, 1975) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் 1997 ஆம் ஆண்டு முதல் நேருக்கு நேர் (1997), நந்தா (2001), காக்க காக்க (2003), பிதாமகன் (2003), பேரழகன் (2004), வாரணம் ஆயிரம் (2008), ஏழாம் அறிவு (2011), 24 (2016) போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.இவரின் நடிப்பு திறனால் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள், நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், இரண்டு எடிசன் விருதுகள், ஒரு சினிமா விருதுகள் மற்றும் விஜய் விருதுகள் போன்றவை வென்றுள்ளார். இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியலில் தனுஷ் ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் 2012 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார்.
பிரான்சு அல்லது பிரெஞ்சுக் குடியரசு மேற்கு ஐரோப்பாவில் தனது பெருநிலப் பரப்பையும் மற்றைய கண்டங்களில் ஆட்சிப் பகுதிகளையும், தீவுகளையும் கொண்ட நாடாகும். பிரான்ஸ் பெருநிலப் பரப்பானது, தெற்கே மத்தியதரைக் கடல் தொடக்கம் வடக்கே ஆங்கிலக் கால்வாய் வடகடல் வரையும் விரிந்து காணப்படுகிறது. பெல்ஜியம், யேர்மனி, சுவிஸர்லாந்து, லக்சம்பேர்க், இத்தாலி, மொனாகோ, அன்டோரா, ஸ்பெயின் ஆகியன இதன் அண்டை நாடுகள்.
கலி யுகம் (Kali Yuga) இந்து தொன்மவியலில் புராணங்களில் உலக சமுதாயம் மேற்கொள்ளும் நான்கு வளர்ச்சிகாலங்களில், யுகங்களில், இருண்டகாலம் எனப்படும் கடைசி காலகட்டமாகும்.மற்றவை கிருதயுகம் (அல்லது) சத்திய யுகம்,திரேதாயுகம், துவாபரயுகம்.இவற்றின் காலவரையாக கூறப்படுபவை: கிருதயுகம் - 17 லட்சத்து 18 ஆயிரம் ஆண்டுகள்,திரேதாயுகம் - 12 லட்சத்து 90 ஆயிரம் ஆண்டுகள்,துவாபரயுகம் - 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள்.கலியுகம் - 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள்.தற்போது கலியுகம் நடப்பதாக நம்பப்படுகிறது.கலியுகம் முடிந்ததும் மீண்டும் கிருதயுகம் ஆரம்பிக்கும், அடுத்து திரேதாயுகம், துவாபரயுகம், மீண்டும் கலியுகம் இவ்வாறு மீண்டும் மீண்டும் வந்துகொண்டேயிருக்கும். கலியுகம் என்று ஆரம்பித்தது என உறுதியிட்டு கூற இயலவில்லை. கண்ணன் இறந்தநாளில் கலியுகம் துவங்கியதாக ஸ்ரீமத் மகாபாகவதம் முதல் °கந்தம்: அத்தியாயம் - 15, சுலோகம் - 36 கூறுகிறது.
சொல் (ஒருசொல், ஒன்று அல்லது பல பொருள், நிகண்டு வழி)
ஒரு சொல்லானது இன்னின்ன பொருளைத் தரும் என முதன்முதலில் தோன்றிய திவாகர நிகண்டு சொற்பொருள் இங்குத் தொகுக்கப்பட்டு அகர வரிசையில் தரப்படுகின்றன. இத்தொகுப்பில் 343 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலுக்குச் சேந்தன் திவாகம் என்னும் பெயரும் உண்டு.
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்
இந்தியாவில் 28 மாநிலங்களும், டெல்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 8 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, ஜம்மு காஷ்மீர், டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் இந்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும்.
ஆர்ஜே சுச்சி (RJ Suchi - Radio Jockey Suchi) என பரவலாக அறியப்படும் சுசித்ரா (Suchitra) தமிழகத்தைச் சேர்ந்த வானொலி ஒலிபரப்பாளர் ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் மொத்தமாக நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். ஆரம்பத்தில் ரேடியோ மிர்ச்சி (சென்னை) பண்பலை வானொலி நிலையத்தில் பணியாற்றிய இவர், தற்போது ரேடியோ ஒன் (சென்னை) பண்பலை வானொலி நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு, தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும், ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக, தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
ஆக்கானித்தான் அல்லது ஆக்கனிசுத்தான் (ஆக்கானிஸ்தான், Afganistan) என்னும் நாட்டின் முழுப்பெயர் ஆக்கானித்தான் இசுலாமியக் குடியரசு ஆகும். இந்நாடு நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டு தெற்கு ஆசியாவிற்கும் மத்திய ஆசியாவிற்கும் நடுவில் அமைந்துள்ள நடு ஆசிய நாடாகும். இது சில நேரங்களில் மத்திய கிழக்கு நாடாகவும், தெற்காசியாவின் நாடாகவும் நோக்கப்படுவதுண்டு.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் பழங்குடியினர் (36) பட்டியல் சாதிகள் (76) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79)என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்
இந்தியா இருபத்தி எட்டு மாநிலங்கள் மற்றும் ஒன்பது யூனியன் பிரதேசங்களாக (UTS) பிரிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் மேலும் அவர்களின் சொந்த அரசாங்கத்தையும் கொண்டிருக்கின்றன. இரண்டு யூனியன் பிரதேசங்கள், தில்லி தேசிய தலைநகர பிரதேசம் மற்றும் பாண்டிச்சேரீகு தங்கள் சொந்த சட்டமன்றங்கள் இருக்கிறது.
நயன்தாரா (Nayanthara, பிறப்பு: நவம்பர் 18, 1984; இயற்பெயர் - டயானா மரியா குரியன்), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.
வன்னியர் (Vanniyar) அல்லது வன்னிய குல சத்திரியர் (Vanniya Kula Kshatriya's) எனப்படுவோர் தமிழகத்தில் குறிப்பாக வடதமிழகத்தில் (காவேரி ஆற்றின் வடக்கு பகுதிகளில்) அடர்த்தியாகவும், மற்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலும் வாழுகின்ற ஒரு மிகப்பெரிய தமிழ் சாதியினர் ஆவர். இவர்கள் புதுச்சேரி, தெற்கு கருநாடகம் மற்றும் தெற்கு ஆந்திரா போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.
எல். முருகன் (L. Murugan, பிறப்பு: 29 மே, 1977) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும் ஆவார். இவர் தமிழக பாஜக தலைவராக, தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் 11 மார்ச், 2020 அன்று நியமிக்கப்பட்டார்.இவருக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளும் நன்றாகத் தெரியும்.
கௌதம புத்தரை அடிப்படையாகக்கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். கௌதமபுத்தர் கிறித்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடிய, ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை தாம் கண்டறிந்துள்ளதாக நேபாளத்தில் உள்ள அகழ்வாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்ணதாசன் (ஒலிப்பு ) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.