The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
திருச்செந்தூர் (ஆங்கிலம்:Thiruchendur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்ட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில் திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி.
விஸ்தாரா (Vistara) புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையத்தை அச்சுமையமாகக் கொண்டு இயங்கும் இந்திய வான்வழிப் போக்குவரத்து நிறுவனம் ஆகும்.இந்நிறுவனம் தனது முதல் விமான சேவையை புது தில்லியிலிருந்து மும்பைக்கு சனவரி 9,2015 ல் இயக்கியது . 3 ஏர்பஸ் ஏ320 வானூர்திகளைக் கொண்டு தினசரி 14 பறப்புக்களை இயக்குகின்றது. விஸ்தாரா வானூர்தி நிறுவனம் ஓர் கூட்டு முயற்சி நிறுவனமாக இந்தியாவின் டாடா குழமம் மற்றும் சிங்கப்பூர் வான்வழி நிறுவனத்தால் 2013 ல் நிறுவப்ப ட்டது.இந்திய உள்நாட்டு விமான சேவைகளில் அதிகம் உள்ள குறைந்த கட்டண சேவைகளை இந்நிறுவனமும் தனது தரமான விமான சேவை,உணவு வழங்குதல் மற்றும் தொழில்முறை விமான பயணிகளுக்கு வழங்கி வருகிறது.
கண்ணதாசன் (ஒலிப்பு ) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல். இது சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.
உழவு அல்லது வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
புதுக்கவிதை என்பதற்கான வரைவிலக்கணம் என்பது இன்றைய சூழலில் பல்வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. எனினும் இலகுவாக புதுக்கவிதை என்பது கவிதைக்குரிய மரபு, இலக்கணம் அற்ற ஒரு கவிதை முறையாக நோக்கப்படுகின்றது. மரபுக்கவிதையானது சீர், தளை, அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளைக் கொண்டு காணப்பட புதுக்கவிதை அவற்றை புறந்தள்ளியதாக புதுக்தோற்றத்துடன் காணப்படுகின்றது.
அனைத்துலக ஆண்கள் நாள் (International Men's Day) என்பது 19 நவம்பர் அன்று கொண்டாடப்படும் வருடாந்த பன்னாட்டு நிகழ்வாகும். 1999 இல் ரினிடட் மற்றும் டோபாகோவில் ஆரம்பித்து வைக்கப்பட்டு, பலதரப்பட்ட தனியார் மற்றும் குழுக்களினால் அவுஸ்திரேலியா, கரீபியன், தென் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிலிருந்து இதற்கு ஆதரவளிக்கப்பட்டது.யுனெஸ்கோ சார்பாக பேசிய, பெண்கள் மற்றும் சமாதான கலாச்சார இயக்குனர் "இது ஒரு சிறப்பான சிந்தனையும், சில பால் சமத்துவத்தினை வழங்கக்கூடியதுமாகும்" எனத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் யுனெஸ்கோ ஒழுங்குபடுத்துனர்களுடன் இது தொடர்பில் ஒத்துழைப்புச் செய்ய எதிர்பார்க்கிறது எனவும் தெரிவித்தார்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
கொல்கத்தா (வங்காள: কলকাতা) (முன்பு கல்கத்தா) இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தின் தலைநகரும், பரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமும் ஆகும்.. இந்நகர் கிழக்கு இந்தியாவின் கலாச்சாரம், கல்வி மற்றும் வர்த்தக நடுவமாக விளங்குகிறது. இந்நகர் இந்தியாவின் கிழக்கு பகுதியில் பாயும் ஊக்லி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில் மட்டும் நகராட்சிகளுக்கும், கிராம ஊராட்சிகளுக்கும் இடைப்பட்ட நிலையில் பேரூராட்சி அமைப்பு நிறுவப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் நகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் குறிப்பிட்ட வருவாயுடைய ஊர்களை பேரூராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த பேரூராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
மலையாளக் கவுண்டர், மலையாளி, மலயாளத்தான் என்பவர்கள் வட தமிழ்நாட்டில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் வாழுகின்ற பழங்குயின மக்களாவர். இவர்கள் பொதுவாக தமிழ்நாட்டின் சேர்வராயன் மலை (சேலம்), கொல்லி மலை (நாமக்கல்), பச்சை மலை (திருச்சி), கல்வராயன் மலை (தருமபுரி), ஏலகிரி மலை (திருப்பத்தூர்), சித்தேரி மலை (அரூர்) மற்றும் ஜவ்வாது மலை (திருப்பத்தூர்) ,(கல்வராயன் மலை)(திருவண்ணாமலை) போன்ற இடங்களில் காணப்படுகின்றனர். இவர்கள் மலைகளில் குடியேறியுள்ளதால், மலைகளை ஆள்பவர் என்னும் பொருளில் தங்களை "மலையாளி" என்றும் அழைத்து கொள்கின்றனர்.
வைரமுத்து (Vairamuthu, சூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் சனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார்.
சுரண்டை (Surandai), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை பேரூராட்சி ஆகும். இங்கு 2008 ஆம் ஆண்டு சுரண்டை அரசுக் கலைக் கல்லூரியானது, இவ்வூரில் தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளது. 19 ஜூலை 2019 ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள்
உலகிலேயே போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள் பற்றிய தகவல்கள் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளன. வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழு (Airports Council International, ACI) என்னும் நிறுவனத்தின் கருத்து சேகரிப்பின் அடிப்படையில் உருவான புள்ளியியல் குறிப்புகளின் படி பயணிகளின் போக்குவரத்து முதலியன கீழே தரப்பட்டுள்ளன. அட்லான்டாவில் உள்ள ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு விமான நிலையம் 2000ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக உலகின் போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
நெகிழி அல்லது பிளாஸ்டிக் (Plastic) என்பது ஒரு பொருள் ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுகி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும். "வார்க்கத் தக்க ஒரு பொருள்" என்னும் பொருள் தரும் "பிளாஸ்டிகோஸ்" என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது. நெகிழி என்னும் பொருளானது பிசைவு கொள்ளும் பொருள் ஆகும்.
சுரதா (நவம்பர் 23, 1921 - சூன் 20, 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர்.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா, தமிழ்நாட்டின், திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆண்டுதோறும் சங்கீத மும்மூர்த்திகள் என அறியப்படும், கர்நாடக இசை அறிஞர்களான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள் மற்றும் முத்துசுவாமி தீட்சிதர் ஆகிய சங்கீத மும்மூர்த்திகளின் பிறந்த நாள் விழா, திருவாரூர் தியாகராஜர் கோயிலில் காஞ்சி சங்கர மடத்தின் கர்நாடக சங்கீத சேவா அறக்கட்டளை சார்பில் 1987ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. விழாவின் போது புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர்கள் கலந்ந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார்.
கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார்.
தென்காசி (Tenkasi) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் புதிதாக நிறுவப்பட்ட தென்காசி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், தேர்வுநிலைநகராட்சியும் ஆகும். தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. குற்றாலம் அருவிகள் இந்நகரத்தில் அருகாமையில் உள்ளதால் இது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு நகரமாக அமைந்துள்ளது.
அலெக்சாண்டர் மிகைலொவிச் துபியான்சுகி (Alexander Dubyanskiy, உருசியம்: Алекса́ндр Миха́йлович Дубя́нский, ஏப்ரல் 27, 1941 - நவம்பர் 18, 2020) என்பவர் உருசியத் தமிழ்ப் பேராசிரியராவர். இவர் உருசியாவில் மொசுகோ அரசுப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியப் பேராசிரியரும் ஆவார். அத்துடன் தமிழ் மொழி மீது மிகுந்த பற்றுக்கொண்ட இவர், தமிழ் மொழியை சரளமாக பேசவும் கூடியவர்.
குழந்தை பாதுகாப்பு என்பது குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறை, சுரண்டல், தீங்குழைத்தல் மற்றும் புறக்கணிப்பு. ஆகியவற்றில் இருந்து அவர்களை பாதுகாத்து குழந்தைகள் ஆரோக்கியமாக உயிர் வாழ மற்றும் உடல்,மன வளர்ச்சி பெற்று தனித்தன்மையுடன் வளர பாதுகாக்கப்படுவது குழந்தை பாதுகாக்கப்படுவது குழந்தை பாதுகாப்பு ஆகும் குழந்தைகள் தனித்துவம் வாய்ந்தவர்கள் என்பதால் குழந்தை உரிமைகள் மீதான உடன்படிக்கையை . ஜக்கிய நாடுகளின் [[குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை குழந்தை உரிமைகள பாதுகாப்பு வழங்குகிறது 54 ஷரத்துகள் உள்ளாடக்கிய இந்த உடன்படிக்கையில்கூறப்பட்டிற்கும் குழந்தை உரிமைகள் அனைத்தும் மனித உரிமைகளாகும் குழந்தைகள் மற்றும் வீட்டில் மற்றும் வெளியே அவர்கள் தங்களின் உரிமகளை நிலை நாட்டவும், சுதந்திரமாக செயல்படுவும் குழந்தை பாதுகாப்பு அமைப்புகள் ஒரு தொகுப்பு, வழக்கமாக அரசு நடத்தும் சேவைகள் பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் யார் வயது மற்றும் ஊக்குவிக்க குடும்ப நிலைத்தன்மை.
கருத்தரிப்பு என்பது, பாலூட்டிகளில், கருக்கட்டல் நிகழ்வின்போது உருவாகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்த சந்ததிக்கான உயிரி, முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கரு நிலையில் குழந்தை பிறப்புவரை, பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையில் பதிந்து, தாங்கிக் கொள்ளப்படும் நிலையாகும். இந்தக் கட்டுரையில் மனிதரில் நிகழும் கருத்தரிப்பே விரிவாக ஆராயப்படுகின்றது. மனிதரில், பருவமடைந்த ஆரோக்கியமான பெண்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள் உற்பத்தியாகும்.
சமய நல்லிணக்கம் அல்லது மத நல்லிணக்கம் (Religious harmony in India) இந்தியா பல்வேறு சமய நம்பிக்கைகள் கொண்ட மக்கள் வாழும் நாடு. இந்திய மக்கள் பிற சமய மக்களின் நம்பிக்கைகளை மதித்து, ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி ஒற்றுமையுடன் வாழ, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஊக்கமும் ஆக்கமும் அளிக்கிறது. ஒவ்வொரு இந்தியனும் தனக்குப் பிடித்தமான சமயத்தை தேந்தெடுக்கவும், அதனை பின்பற்றி வாழவும் உரிமை வழங்கியுள்ளது.