The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
இந்தியப் பெருங்கடல் அல்லது இந்து சமுத்திரம் (Indian Ocean) உலகின் மூன்றாவது பெரிய நீர்த்தொகுதியாகும். இது, உலகப்பரப்பின் 20% பகுதியை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. இதன் வட பகுதியில் இந்தியா உட்பட ஆசியா; மேற்கில் ஆப்பிரிக்கா; கிழக்கில் ஆஸ்திரேலியா; தெற்கில் தெற்குப் பெருங்கடல் (அல்லது, அன்டார்க்டிக்கா.) ஆகியன இதன் எல்லைகள்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
பெண்என்னும் சொல் பல பொருள்களில் பயன்படுகின்றது. பால் பகுப்பில் பெண் பால் எல்லா உயிரினங்களினதும் பெண்." பாலாரை வயது வேறுபாடின்றிக் குறிக்கப் பயன்படுகின்றது. ஆங்கிலத்தில் "பெண்" என்ற உச்சரிப்பு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் விம்பானா, 'wīfmann என்றும் பின்னர் வும்மான (wīmmann to wumman) என்றும் சொல்லிருந்து மருவி விம்மனுக்கும், இறுதியாக உச்சரிப்புடைய விம்மன் என்ற மாறியது (பெண்ணுக்கும்) அது பழைய ஆங்கிலத்தில், விபெய்ன் "பெண் மனிதனை" குறிக்கிறது,என்றும் கருத்து உண்டு.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
ஆர்ஜே சுச்சி (RJ Suchi - Radio Jockey Suchi) என பரவலாக அறியப்படும் சுசித்ரா (Suchitra) தமிழகத்தைச் சேர்ந்த வானொலி ஒலிபரப்பாளர் ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் மொத்தமாக நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். ஆரம்பத்தில் ரேடியோ மிர்ச்சி (சென்னை) பண்பலை வானொலி நிலையத்தில் பணியாற்றிய இவர், தற்போது ரேடியோ ஒன் (சென்னை) பண்பலை வானொலி நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
பதினாறு வயதினிலே 1977 ஆம் ஆண்டில் வந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் புதிய திருப்பம் ஒன்றை உருவாக்கியது, முன்னணி நட்சத்திரங்களான கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் 175 நாட்கள் மேல் வெற்றிகரமாக ஓடியது. இத்திரைப்படம் தெலுங்கில் '16 வயசு' மற்றும் இந்தியில் 'சொல்வ சவன்' எனும் பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது, ஸ்ரீதேவி அனைத்து மொழியிலும் கதாநாயகியாக நடித்தார், ஸ்ரீதேவியின் முதல் இந்தி மொழி திரைப்பட கதாநாயகி அறிமுகமாகும்.
குறும்பர் (Kurumbas அல்லது Kurumbar) என்பவர்கள் இந்திய மாநிலங்களான கருநாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வாழுகின்ற ஒரு பழங்குடி மக்கள் ஆவர். இவர்கள் தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைப்பகுதியில் வாழுகின்றனர். இப்பகுதியில் இவர்களைப்போல் கோத்தர், தோடர், இருளர், பனியர் மற்றும் காட்டு நாயக்கர் போன்ற பழங்குடி மக்களும் வாழுகிறார்கள்.
ஏரி மாவட்டம் (Lake District அல்லது The Lakes அல்லது Lakeland) வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஓர் மலைப்பாங்கான மண்டலம். புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் இப்பகுதி இங்குள்ள ஏரிகள், காடுகள், மலைகள் (ஃபெல்கள்) ஆகியவற்றிற்கு மட்டுமல்லாது 19வது நூற்றாண்டின் துவக்க காலத்தில் இங்கு வாழ்ந்திருந்த ஏரி கவிஞர்கள் என அறியப்படும் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் போன்றோரின் கவிதைகளுக்காகவும் எழுத்துக்களுக்காகவும் புகழ்பெற்றுள்ளது. இப்பகுதி தேசியப் பூங்காவாக மே 9, 1951இல் அறிவிக்கப்பட்டது.
எல். முருகன் (L. Murugan, பிறப்பு: 29 மே, 1977) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும் ஆவார். இவர் தமிழக பாஜக தலைவராக, தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் 11 மார்ச், 2020 அன்று நியமிக்கப்பட்டார்.இவருக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளும் நன்றாகத் தெரியும்.
கப்பல் போக்குவரத்து ( ship transport ), பயணிகள் கப்பலின் மூலம் மக்களையும் மற்றும் சரக்கு கப்பலின் மூலம் சரக்குகளையும் உலகின் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதை குறிக்கும். வரலாற்று பார்வையில் பயணிகள் கப்பல் போக்குவரத்து வெகுவாக குறைந்திருப்பினும், இன்னும் உல்லாச பயணங்களுக்காகவும், குறைந்த தொலைவு பயணங்களுக்காகவும் கப்பல்கள் பயன்படுத்தப் படுகின்றன. கடல் போக்குவரத்து மிகப் பெரிய அளவில் சரக்குகளை கொண்டு செல்லவே உலகம் முழுவதும் பயன் படுகிறது.
சிந்துவெளி நாகரிகம் (Indus Valley Civilisation) மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது.
குமரிக்கண்டம் (kumari Kandam) என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இந்தியாவின் தெற்கே இருந்ததாகக் கருதப்படும் இழந்த ஒரு கண்டத்தைக் குறிக்கிறது . இது பண்டைய தமிழர் நாகரிகத்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமான நிலப்பகுதியாகவும் கருதப்படுகிறது. குமரிக்கண்டம், குமரி நாடு என்ற வேறு பெயர்களாலும் இப்பகுதி அழைக்கப்பட்டது.
சுரதா (நவம்பர் 23, 1921 - சூன் 20, 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர்.
கம்மனந்தல் (Kammannathal), தமிழ்நாட்டின், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் வட்டாரத்தில் துரிஞ்சிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும். இந்த கிராமம், துரிஞ்சிகுப்பம் ஊராட்சிக்கும், போளூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 588 ஆகும்.
'இறக்கைகள் கொண்ட இருகாலி'யைப் பறவை எனக் கூறுவர். பறவைகள் முதுகெலும்புடைய இளஞ்சூட்டுக் குருதியுடைய, இறகுகளுடைய, முட்டையிட்டு இனம்பெருகும் விலங்குகளை குறிக்கும். பறவைகள் இருகால்கள் உள்ள, தன் உடல்வெப்பம் காக்கும், முதுகெலும்புள்ள (முள்ளந்தண்டுள்ள) புள் என்றும் குரீஇ என்றும் சிறப்பித்துக் கூறும் வகையைச் சேர்ந்த, முட்டையிடும் விலங்குகள் ஆகும்.
சட்டம் மற்றும் பொருளியலில்‚ காப்பீடு அல்லது காப்புறுதி (insurance) என்பது சார்ந்திருப்போர் இழப்பின் பாதிப்பு இடர்பாட்டினைக் கடப்பதற்கு முதன்மையாகப் பயன்படுத்தப்படும் இடர் மேலாண்மை வடிவமாகும். பெரிய அளவிலான அதிர்ச்சியளிக்கும் இழப்பிற்கான வாய்ப்பை தவிர்க்கும் வகையில் ஒரு சிறிய உத்தரவாதம் மிக்க இழப்பாக ப்ரீமியத்தைப் பெற்று‚ ஒரு தரப்பிலிருந்து மற்றொரு தரப்பிற்கு இழப்பு இடர்பாட்டிற்கு சமமான மாற்றினை வழங்குவதே காப்பீடு ஆகும். காபீட்டை விற்கும் நிறுவனம் காப்பீடு வழங்குவோர் என்றும்; காப்பீடுதாரர் அல்லது பாலிசிதாரர் என்று காப்பீட்டை பெற்ற நபரோ அல்லது தரப்போ அழைக்கப்படும்.
இந்தியாவின் அலுவல்மொழிகள் (official languages of the Indian Union) அலுவல் பணிகளுக்கு முதன்மையாக இந்தியும் கூடுதலாக ஆங்கிலமும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் மாநிலங்கள் தங்களுடைய அலுவல் பணிகளுக்கான மொழியை தாங்களே சட்டமாக்கிக் கொள்ளலாம். இந்திய அரசியலமைப்போ அல்லது எந்தவொரு இந்தியச் சட்டமோ தேசிய மொழி என்று எதனையும் வரையறுக்கவில்லை.மாநிலங்கள் தங்கள் அலுவல்பணிகளுக்கான மொழியை சட்டப்பேரவை மூலம் தீர்மானிக்கின்றன.
விஸ்வநாதன் ஆனந்த் (Viswanathan Anand, பிறப்பு: டிசெம்பர் 11, 1969, மயிலாடுதுறை, இந்தியா), இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட்மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக-சதுரங்க போட்டியின் வெற்றி வீரரும் ஆவார். FIDE ELO மதிப்பீட்டின் படி தற்போது ஆனந்த் 2789 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார். உலக சதுரங்க வரலாற்றில் பீடே தரப்பட்டியலில் 2800 புள்ளிகளைத் தாண்டிய ஐவருள் ஆனந்தும் ஒருவர் (ஏப்ரல் 2006, ஏப்ரல் 2008).
கண்ணதாசன் (ஒலிப்பு ) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
கீழடி தொல்லியல் களம் என்பது இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு ஆரம்பிக்கப்பட்டு , பின்னர் தமிழ் மாநில தொல்லியல் துறையால் செயல்பட்டு வரும் ஒரு சங்க கால வசிப்பிடம் ஆகும். இந்த அகழாய்வு மையம் தமிழ்நாட்டில் மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி ஊராட்சியில் உள்ள கீழடி கிராமத்தின் பள்ளிச்சந்தை திடல் மேட்டுப்பகுதியில் உள்ளது. ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு இதுவேயாகும்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழில் சமசுகிருதத்தின் பாதிப்பு
மொழியில் மாற்றம் இயல்பானது. அருகாமையில் உள்ள மொழிகளும், செல்வாக்கு உள்ள மொழிகளும், மாறும் தேவைகளும் ஒரு மொழியில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஒலியியல், எழுத்துமுறை, உருபனியல், தொடரியல், பொருளியல், சொற்கள், இலக்கணம், இலக்கியம், பேச்சு என ஒரு மொழியின் எல்லா பிரிவுகளிலும் மாற்றம் ஏற்படலாம்.
தன்சானியா (Tanzania, கிசுவாகிலி: Jamhuri ya Muungano wa Tanzania), கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே கென்யா, உகாண்டா ஆகியனவும், மேற்கே ருவாண்டா, புருண்டி, கொங்கோ மக்களாட்சிக் குடியரசும், தெற்கே சாம்பியா, மலாவி, மொசாம்பிக் ஆகியனவும் அமைந்துள்ளன. இந்தியப் பெருங்கடல் இதன் கிழக்கே உள்ளது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
என். பிரபாகரன் (ஆங்கிலம்: N. Prabhakaran ) என்பவர் ஒரு குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளரும், புதின ஆசிரியரும், கவிஞரும், நாடக ஆசிரியரும், கட்டுரையாளரும், கல்வியாளரும், மலையாளப் பத்திரிக்கைகளில் பத்தி எழுதுபராகவும் உள்ளார் என் குன்கம்பு மற்றும் கல்யாணி ஆகியோருக்கு பிறந்த ஐந்து குழந்தைகளில் பிரபாகரன் மூத்த மகனாக 1952 டிசம்பர் 30 அன்று கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பரச்சினிக்கடவு என்ற ஊரில் பிறந்தார். இவரது குழந்தை பருவத்தை மடாயி என்ற ஊரில் கழித்தார்.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது.
மகாவீரர் (இந்தி:महावीर), 599 – 527 BCE என்று குறிப்பிடப்படுபவர் சைன சமயத்தின் மையக் கருத்துக்களை நிறுவிய வர்த்தமானர் என்ற இந்திய துறவியாகும். சமண சமய வழக்கில் அவர் 24வது மற்றும் கடைசி அருகன் ஆவார் சைன சமயப் புத்தகங்களில் இவர் வீரா, வீரப்பிரபு, சன்மதி, அதிவீரர் மற்றும் ஞானபுத்திரர் என்று அழைக்கப்படுகிறார்.
தமிழக அமைச்சரவை தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
(சுற்றுச்சூழல் பாதுகாப்பு) (environmental protection) என்பது சுற்றசூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகையினாலும் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்று சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
உழவு அல்லது வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான்.
திருப்பூர் மாவட்ட காவல்துறை என்பது தமிழக காவல்துறையின் கீழ் தமிழக அரசின் முதலமைச்சர் கட்டுப்பட்டின் கீழ் செயல்படும் ஓர் மக்கள் பாதுகாப்பு துறை ஆகும். இந்தியாவின் ஐந்தாவது மிகப்பெரிய காவல்துறை தமிழக காவல் துறை ஆகும். இந்த காவல் துறை ஒன்பது மாவட்டங்களுக்கு ஒரு ஐ.ஜி என்ற முறையில் பிரிக்கப்படுகிறது.பின் தமிழகத்தில் ஏழு மிகப்பெரிய மாநகரங்களில் மட்டுமே காவல்துறை காவல் ஆணையர் (COMMISSIONER OF POLICE) என்ற தலைமையின் கீழும் செயல்படுகிறது.
வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, நவம்பர் 26, 1954 – மே 17 அல்லது மே 18 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்
இந்தியாவில் 28 மாநிலங்களும், டெல்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 8 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, ஜம்மு காஷ்மீர், டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் இந்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும்.
கூட்டுறவு இயக்க வரலாறு, இங்கிலாந்து நாட்டில் முதன் முதலாக கூட்டுறவு இயக்கமானது, ரோச்டேல் பயனீர் என்பவரால் சிந்திக்கப்பட்டு, 1844ஆம் ஆண்டில் அவரது நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்கள் கொண்ட கூட்டம் கூட்டப்பட்டு, அந்த கூட்டத்தில் தாமே, தங்களுக்குள், தங்கள் தேவைக்காக தங்கள் மூலம் என்ற கொள்கைகளுடன் ரோச்டேல் சமத்துவ முன்னோடிகள் கூட்டுறவு பண்டகசாலைகளை துவக்கினர். அக்கூட்டுறவு சங்கத்திற்கான நடைமுறை விதிகள் ஏற்படுத்திக் கொண்டனர். இக்கூட்டுறவு சங்கமே, பிற நாடுகளில் கூட்டுறவு சங்கங்கள் துவக்க முன்னோடியாக விளங்கியது.ஜெர்மனியில் 1852ஆம் ஆண்டில் பிரான்ச் ஹெர்மன் சூல்ஸ் (Franz Hermann Schulze) என்பவரது முயற்சியால், நகர் புறங்களில் சிக்கன நாணயக் கூட்டுறவு கடன் சங்கங்கள் துவக்கப்பட்டது.
மிலன் மேளா (Milan Mela) இந்தியாவின் கொல்கத்தா நகரில் முதன்மை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையமாக திகழ்கிறது. 31,894 சதுர மீட்டர் (343,300 சதுர அடி) பரப்பளவு கொண்ட கண்காட்சி இடத்தைக் கொண்ட கொல்கத்தாவின் மிகப்பெரிய கண்காட்சி மையமாக இது கருதப்படுகிறது. மிலன் மேளா வளாகம் மேற்கு வங்க அரசாங்கத்தின் மேற்கு வங்க வர்த்தக மேம்பாட்டு அமைப்புக்குச் சொந்தமானதாகும்.
வயநாடு செட்டி, அல்லது செட்டி, என்பது இந்தியாவின் வகைப்படுத்தப்படாத தென் திராவிட மொழியாகும், இது இந்தியாவின் கேரளத்தின் சில பகுதிகளிலும், நீலகிரி மலையின் வயநாடு பகுதியிலும் வாழும் வயநாடன் செட்டி சமூகத்தால் பேசப்படுகிறது. இது கவுடருடன் 62-76% லெக்சிக்கல் ஒற்றுமையைக் கொண்டுள்ளது, 65% ஜோன் குறும்பா மொழியுடன் 52% மற்றும் கன்னடத்துடன் 52% ஒற்றுமையைக் கொண்டுள்ளது. இது கன்னடத்துடன் மிக நெருக்கமான முக்கிய மொழியாக உள்ளது.