The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் நாள் ஆகும். இது இலங்கைத் தமிழராலும், உலகத் தமிழராலும் ஆண்டு தோறும் மே 18 ஆம் நாள் நினைவு கூரப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டில் இந்நாளிலேயே இலங்கையின் வட-கிழக்குக் கரையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் எனும் கிராமத்தில் ஈழப்போர் முடிவுற்றது.
இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியும் ஆவார். இந்திய ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் என குறிப்பிடப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் மூலம் இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் சம்பிரதாயம் போன்ற ஒன்றாகும்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, நவம்பர் 26, 1954 – மே 17 அல்லது மே 18 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
பொதுத்துறை நிறுவனங்கள், இந்தியா
பொதுத்துறை நிறுவனங்கள் (Public sector undertakings in India (PSU) or (Public Sector Enterprise). இந்திய அரசு தனியாகவோ அல்லது மாநில அரசுகளுடன் இணைந்தோ, அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட மாநில அரசுகள் இணைந்து நடத்தும் தொழில், வணிகம் மற்றும் சேவை நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனங்கள் என்பர். பொதுத்துறை நிறுவனப் பங்குகளில், இந்திய அரசு அல்லது மாநில அரசுகளின் பங்கு முதலீடு 51% மேலாக உள்ளது.
பெஞ்சமின் பிராங்கிளின் (Benjamin Franklin; (ஜனவரி 17, 1706 – ஏப்ரல் 17, 1790) என்பவர் ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் ஆவார். இவர் ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஒரு எழுத்தாளர், அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் ஆவார். மின்னியலில் இவரின் கண்டுபிடிப்புகளுக்கும், கருத்துக்களுக்குமாக இவர் இயற்பியல் சரித்திரத்தில் ஒரு முக்கிமான அறிவியலாளராகக் கருதப்படுகிறார்.
ஜன் தன் திட்டம் அல்லது பிரதமர் மக்கள் நிதி திட்டம் (Pradhan Mantri Jan Dhan Yojana) வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு இருக்கும் வகையில் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி 28 ஆகஸ்டு 2014 வியாழக்கிழமை அன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி 15 ஆகஸ்டு 2014 சுதந்திர தின உரையில், ‘பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா’ (பிரதமர் மக்கள் நிதி திட்டம்) என்ற திட்டத்தை பற்றி அறிவித்தார். . இந்தத் திட்டத்தின் கீழ், வங்கியில் கணக்கு இல்லாத 7½ கோடி குடும்பத்தினருக்குக் காப்பீடு வசதியுடன் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது.
இடி தாங்கி அல்லது மின்னல் கடத்தி (Lightning rod or Lightning conductor) என்பது ஓர் உலோகக் கம்பி கட்டமைப்பில் பொருத்தப்பட்டு மின்னல் தாக்குதலில் இருந்து கட்டமைப்பைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்ட அமைப்பாகும். மின்னல் ஒரு கட்டமைப்பைத் தாக்கினால் நெருப்பு அல்லது அதிக மின்சாரம் தோன்றி அக்கட்டமைப்பு பாதிக்கப்படும். மாறாக இடிதாங்கி பொருத்தப்பட்டிருந்தால் மின்னல் முதலில் இடிதாங்கியை தாக்கும்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
இலங்கைத் தமிழர் இனப்படுகொலை என்பது பெரும்பான்மை பேரினவாத சிங்கள அரசு கலவரங்களை ஏற்படுத்தியும், வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாக குண்டு வீசியும், எறிகணைகளை வீசியும், நேரடியாகச் சுட்டும், சித்திரவதை செய்தும் ஈழத்தமிழர்களை படுகொலை செய்யும் இனவழிப்பைக் குறிக்கும். குறிப்பாக தமிழர்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு எவ்வித நடைமுறைத் தீர்வுகளையும் முன்வைக்காது, பொது மக்களைப் பொருட்படுத்தாது மேற்கொண்டுவரும் போரில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்படுதலைக் குறிக்கிறது. 2009 போரில் மட்டும் சுமார் 20,000 மக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய இராச்சிய ரைம்சு பத்திரிகை கூறுகிறது.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவரான திருவள்ளுவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, அரபு மொழி: محمد, பிறப்பு கிபி 570, இறப்பு 8 ஜூன் கிபி 632 கணிப்பு), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்தவர். அராபியத் தீபகற்பம் முழுமையையும் இசுலாம் என்ற ஒரே கொள்கைச் சமயத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர் முஸ்லிம்களால் மட்டுமல்லாமல் பாபிஸ்துகள் மற்றும் பகாய் சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்று போற்றப்படுகிறார்.
அருண் ஜெட்லி (Arun Jaitley, 28 திசம்பர் 1952 – 24 ஆகத்து 2019) ஓர் இந்திய அரசியல்வாதியும், பதினாறாவது மக்களவையின் அமைச்சரவையில், நிதியமைச்சராகவும், பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பொறுப்பில் இருந்தவர் ஆவார். இவர் பாதுகாப்பு அமைச்சராகக் கூடுதல் பொறுப்பிலும் இருந்துள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும், இந்திய உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த வழக்கறிஞரும் ஆவார்.
முள்ளிவாய்க்கால் படுகொலை என்பது இலங்கை நாட்டின், வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கே அமைந்த முள்ளிவாய்க்கால் என்ற கடற்கரை கிராமத்தில், ஈழப் போரின் இறுதிக் கட்டம் 2009ஆம் ஆண்டில் நிறைவுற்றது. இறுதிப் போரின் போது ஒன்றுமறியாத நாற்பதாயிரம் தமிழர்கள், சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.இப்படுகொலை குறித்து ஐக்கிய நாடுளின் சபை தலைமையில் பன்னாட்டு விசாரணை நடத்த உள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam, LTTE) சுருக்கமாக விடுதலைப் புலிகள் அல்லது த.வி.பு என்பது இலங்கையில் தமிழருக்கு ஏற்பட்ட இனவேற்றுமைகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடிய போராட்ட அமைப்பு ஆகும். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆவார். அவரால் இவ்வியக்கம் 1976 இல் உருவாக்கப்பட்டது.
வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் முகமதியர்களின் படையெடுப்புக்குப்பின்பு கம்பிளி ராஜ்ஜியம் இழந்து விஜயநகரம் உருவாக்கினர்.
சொல் (ஒருசொல், ஒன்று அல்லது பல பொருள், நிகண்டு வழி)
ஒரு சொல்லானது இன்னின்ன பொருளைத் தரும் என முதன்முதலில் தோன்றிய திவாகர நிகண்டு சொற்பொருள் இங்குத் தொகுக்கப்பட்டு அகர வரிசையில் தரப்படுகின்றன. இத்தொகுப்பில் 343 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலுக்குச் சேந்தன் திவாகம் என்னும் பெயரும் உண்டு.
மே 17 இயக்கம் (May 17 Movement) என்பது தமிழீழ மக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பினை சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி துவக்கினார். இந்த இயக்கம், தமிழீழ இனப்படுகொலை நாளான 2009, மே மாதம் 17ஆம் தேதியை குறியீடாக வைத்து தமிழர் உரிமைகளைச் சார்ந்து இயங்கும் ஒரு அரசியல், சமூக அமைப்பாகும்.
இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பட்டியல்
இந்திய அரசின் கட்டுப்பாட்டில் ஏறத்தாழ 300 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளது. சிறப்பாகச் செயல்படும் பொதுத் துறை நிறுவனங்களை நவரத்தின நிறுவனங்கள் என்பர். நவரத்தின நிறுவனங்களை மகா நவரத்தின நிறுவனங்கள், நவரத்தின நிறுவனங்கள் மற்றும் சிறு நவரத்தின நிறுவனங்கள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
உலகத் தமிழ் மாநாடு உலகத் தமிழ் மாநாடு என்பது உலகில் உள்ள அனைத்து தமிழா்களையும் மொழியின் பால் ஒன்று சோ்ப்பதற்காக நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இம் மாநாடு தமிழையும், தமிழாின் பெருமையையும் உலகோர் அறியச் செய்ய கருப்பொருளாக விளங்குகிறது. இம்மாநாட்டில் பங்காற்றுவது ஒவ்வொரு தமிழனின் மொழி காக்கும் செயலாகும்.
இலங்கை (ஒலிப்பு ) (Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, சிறீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள்
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் என்பது இந்திய மாநிலமான தமிழகத்திலுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் (Unorganised Workers) சமூக பாதுகாப்புக்காக தமிழக் அரசால் செயல்படுத்தப்படும் நல வாரியங்கள் (Welfare Board) ஆகும். இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேருவோருக்கு ஓய்வூதியம், மகப்பேறு கால உதவி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, கலைஞர் காப்பீட்டு திட்டம், பணிக் காலத்தில் இறந்தால் நிவாரணத்தொகை உள்பட பல்வேறு நிவராணத் தொகை மற்றும் நல உதவிகள் கிடைக்கும். அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் கீழ்கண்ட நலவாரியங்களை உள்ளடக்கியது.
தமிழன் என்ற இதழ் சென்னை ராயப்பேட்டையில்1907 சூன். 19 ஆன்று ஒரு பைசா தமிழன் என்ற பெயருடன் வார இதழாக அயோத்திதாசரால் தொடங்கப்பட்ட தமிழ் இதழாகும். ‘ஒடுக்கப்பட்டோரை ஒரு பைசாவுக்குப் பெறாதவர் என இளக்காரமாகப் பேசுவோர், ஒரு பைசாத் தமிழனை முழுமையாக அறிந்தால், ஒரு கோடி பொன் என்று பேசுவார்’ எனத் தன் இதழுக்குப் பெயர்க் காரணம் கொடுத்தார் அயோத்தி தாசர்.
தமிழில் அறிவியல் இதழ்கள் (நூல்)
தமிழ் அறிவியல் இதழியல் பற்றியது இரா. பாவேந்தன் எழுதியுள்ள தமிழில் அறிவியல் இதழ்கள் நூல். இந்நூலில் நான்கு இயல்களும் (அதிகாரங்களும்) இரண்டு இணைப்புகளும் உள்ளன.
இந்தியாவின் நிதி அமைச்சர் (Minister of Finance of India) இந்திய அரசின் நிதி அமைச்சின் தலைவர் ஆவார். அமைச்சரவையின் மூத்த அலுவலகம் ஒன்றின் தலைவரான நிதி அமைச்சர் அரசின் நிதிக்கொள்கைக்குப் பொறுப்பானவர் ஆவார். அத்துடன் இந்தியாவின் வரவு செலவுத் திட்டம் மற்றும் பொது வரவு செலவுத் திட்டங்களின் வரைவாளரும் ஆவார்.
தேசிய கடலியல் நிறுவனம், இந்தியா
தேசியக் கடலியல் நிறுவனம் (National Institute of Oceanography, India) டோனாப் பவுலா, கோவாவில் தலைமையகத்தையும், கொச்சி, விசாகப்பட்டினம், மும்பையில் வட்டார மையங்களையும் கொண்டு செயற்பட்டு வருகிறது. இது புது தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (Council of Scientific and Industrial Research - CSIR) 38 ஆய்வு நிறுவனங்களில் ஒன்று. 1960 ஆம் ஆண்டு நிகழ்ந்த அனைத்துலக இந்தியப் பெருங்கடல் குறிக்கோள் பயணத்திட்டத்தின் (International Indian Oceana Expedition - IIOE) தொடர்ச்சியாக இந்நிறுவனம் சனவரி 1, 1966 ஆம் ஆண்டு கோவாவில் நிறுவப்பட்டது.
ஈழப் போர் அல்லது இலங்கை உள்நாட்டுப் போர் என்பது இலங்கை இனப்பிரச்சினை காரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட்ட இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களையும், போர்களையும் முதன்மையாகக் குறிக்கின்றது. இப்போரானது சிங்களவருக்கும், தமிழருக்கும் இடையில் பல விடயங்கள் தொடர்பாக நிலவிவரும் பாரிய கருத்து முரண்பாடுகளின் மூலத்தைக் கொண்டதாகும். 23 யூலை 1983 முதல் 26 ஆண்டுகள் நடைபெற்ற இப்போர் 2009 இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.27 வருடங்களுக்கு மேலாக இப் போராட்டம் இலங்கை மக்களுக்கு கடும் துன்பத்தையும், சூழல், பொருளாதார ரீதியாக நாட்டிற்கு இழப்பையும் ஏற்படுத்தி 80,000–100,000 க்கு மேற்பட்ட மக்கள் இறப்புக்கும் காரணமாகியது.
டஸ் கப்பிற்ரால் (Das Kapital) (தமிழில் - மூலதனம், ஆங்கிலத்தில் - Capital) என்பது கார்ல் மார்க்ஸினால் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட அரசபொருளியல் சார்ந்த ஆராய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூலாகும். இந் நூலானது மூலதனம் பற்றி பொருளியலாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோட்பாடுகள், முதலாளித்துவம் பற்றிய மார்க்சின் ஆய்வுகள் போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. இந்நூல் முதன்முதலில் தியாகு என்பவரால் தமிழில் மூலதனம் என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
வன்னியர் (Vanniyar) அல்லது வன்னிய குல சத்திரியர் (Vanniya Kula Kshatriya's) எனப்படுவோர் தமிழகத்தில் குறிப்பாக வடதமிழகத்தில் (காவேரி ஆற்றின் வடக்கு பகுதிகளில்) அடர்த்தியாகவும், மற்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலும் வாழுகின்ற ஒரு மிகப்பெரிய தமிழ் சாதியினர் ஆவர். இவர்கள் புதுச்சேரி, தெற்கு கருநாடகம் மற்றும் தெற்கு ஆந்திரா போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (Avengers: Endgame) என்பது 2019ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு சூப்பர் ஹீரோஸ் திரைப்படமாகும். இந்த திரைப்படம் 2012ஆம் ஆண்டு வெளியான தி அவேஞ்சர்ஸ் என்ற திரைப்படத்தின் இறுதி பாகம் ஆகும். இந்த திரைப்படத்தை மார்வெல் ஸ்டுடியோ தயாரிக்க, வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்ஸர் என்ற நிறுவனம் மூலம் 26 ஏப்ரல் 2019 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (நூல்)
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்பது ராபர்ட் கால்டுவெல் என்பாரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு நூல். இது தென்னிந்தியாவில் பரந்துள்ள பல்வேறு மொழிகள் தொடர்பான ஒரு ஒப்பீட்டு ஆய்வு நூல் ஆகும். இந் நூல் 1856 ஆம் ஆண்டில் முதன்முதலாக வெளியிடப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிலையம்
மத்தியக் கடல்மீன்வள ஆராய்ச்சி நிலையம் (Central Marine Fisheries Research Institute - CMFRI) இந்திய அரசின் வேளாண்மை அமைச்சகத்தின் வாயிலாக 1947 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது 1967 ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆய்வுக் கழகத்தின் அங்கமானது. இவ்வாய்வு நிறுவனம் கடல் மீன் வளம் அதன் உற்பத்தி பெருக்கம், பாதுகாப்பு ஆகியவற்றைச் சார்ந்து செயல்பட்டு வருகிறது.
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்
இந்தியாவில் 28 மாநிலங்களும், டெல்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 8 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, ஜம்மு காஷ்மீர், டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் இந்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும்.
உலக நீர் நாள் (World Day for Water அல்லது World Water Day), ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. 1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோ டி ஜனெய்ரோ நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டின் செயல் திட்டத்தின்படி 1993, ஜனவரி 18 ஆம் நாள் 47வது ஐ.நா பேரவை கூட்டத் தொடர் 193ம் தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்துடன் 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22ம் நாளும் உலக நீர் வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூலியன் பவுல் அசாஞ்சு (Julian Paul Assange, பிறப்பு: 1971) என்பவர் ஆத்திரேலிய ஊடகவியலாளரும், வெளியீட்டாளரும் ஆவார். விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை நிறுவி, அதன் முதன்மை ஆசிரியராகவும் பேச்சாளராகவும் உள்ளார். விக்கிலீக்சைத் தொடங்குவதற்கு முன்னர் இவர் இயற்பியல், கணிதவியல் மாணவராகவும் கணினி நிரலாளராகவும் இருந்தார்.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (Tamilnadu State Transport Corporation – TNSTC) தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் முக்கியமான பொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்துகளை இயக்கும் துறையாகும். இத்துறை 1972ல் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இது தமிழ்நாட்டிற்குள்ளேயும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளுக்குத் தமிழ்நாட்டிலிருந்தும் பேருந்துகளை இயக்குகிறது.
கடல் (ஒலிப்பு ) அல்லது ஆழி(Sea), உலகப் பெருங்கடல் (World ocean), அல்லது வெறுமனே பெருங்கடல் (Ocean) என்பது புவியின் பரப்பில் 70 விழுக்காட்டை ஆக்கிரமித்துள்ள உப்பான நீர் கொண்ட இணைந்த (connected) நீர்நிலை ஆகும். இது புவியின் பருவநிலையை நிலைப்படுத்துவதோடு நீர் சுழற்சி, கரிமச் சுழற்சி, நைட்ரஜன் சுழற்சி ஆகியவற்றிலும் முதன்மைப் பங்காற்றுகிறது. பழங்காலங்களிலிருந்து கடலில் பயணங்கள் செய்யப்பட்டும் தேடல்கள் நடந்தும் வந்தாலும், அறிவியல் அடிப்படையிலான கடலியல் அல்லது பெருங்கடலியல் என்பது பெரும்பாலும் பசிபிக் பெருங்கடலை ஜேம்ஸ் குக் 1768க்கும் 1779க்கும் இடைப்பட்ட காலத்தில் கண்டறிந்து ஆராய்ந்ததிலிருந்துதான் தொடங்குகிறது.
கீழடி தொல்லியல் களம் என்பது இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு ஆரம்பிக்கப்பட்டு , பின்னர் தமிழ் மாநில தொல்லியல் துறையால் செயல்பட்டு வரும் ஒரு சங்க கால வசிப்பிடம் ஆகும். இந்த அகழாய்வு மையம் தமிழ்நாட்டில் மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி ஊராட்சியில் உள்ள கீழடி கிராமத்தின் பள்ளிச்சந்தை திடல் மேட்டுப்பகுதியில் உள்ளது. ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு இதுவேயாகும்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
2019 உலகளவில் தமிழில் இதுவரை ஏறத்தாழ 6000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளி வந்துள்ளன. இப்பட்டியல் உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
அருண் ஜேட்லி விளையாட்டரங்கம்(முன்னர் பெரோ சா கோட்லா திடல் என்று அறியப்பட்டது) என்பது புதுதில்லியில் அமைந்துள்ள துடுப்பாட்ட அரங்கமாகும். 1883இல் தொடங்கப்பட்ட இது கொல்கத்தாவின் ஈடன் கார்டன்சுக்குப் பிறகு தற்போதும் செயல்பாட்டில் உள்ள இந்தியாவின் 2வது பழமையான பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கமாக உள்ளது. 12 செப்டம்பர் 2019இல் இந்த அரங்கம் மறைந்த முன்னாள் நிதியமைச்சரும் முன்னாள் டிடிசிஏ தலைவருமான அருண் ஜெட்லியின் நினைவாக மறுபெயரிடப்பட்டது.
அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் சோழ பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர்.
கர்ணன் (ஒலிப்பு ) மகாபாரத காப்பியத்தில் இடம் பெறும் மைய கதாப்பாத்திரங்களுள் ஒருவர். அவர் அங்கா நாட்டின் (தற்போதைய பாகல்பூர் மற்றும் முங்கர்) அரசராக இருந்தார். அர்சுனனை போரில் வீழ்த்தக்கூடிய வல்லமை பெற்ற ஒரே வீரராக நம்பப்படும் கர்ணன், ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் பீஷ்மரினால் மகாபாரதத்தின் மிகச்சிறந்த போர்வீரராகக் கருதப்பட்டார்.
இராம் நாத்து கோவிந்து (Ram Nath Kovind, ராம் நாத் கோவிந்த், பிறப்பு: 1 அக்டோபர் 1945) இந்தியாவின் 14 ஆவது குடியரசுத் தலைவராவர். இவர் 2015 முதல் 2017 வரை பீகார் மாநிலத்தின் ஆளுனராக இருந்தார். மேலும் 2017 ஆம் ஆண்டு, பாரதிய ஜனதாக் கட்சியின் சார்பாக இந்தியக் குடியசுத் தலைவர் தேர்தலுக்கு முன்மொழியப்பட்டவரும் ஆவார்.
தமிழீழம் அல்லது தமிழ் ஈழம் (Tamil Eelam, දෙමල ඊලාම්) எனப்படுவது இலங்கைத் தமிழர் தமது தாயக பிரதேசமாக கருதும் இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களை உட்பட்ட நிலப்பகுதியைக் குறிக்கும். தமிழீழம் தமது தேசியமாக தமிழர்களாலும், அவர்களது அரசியல் நிறுவனங்களாலும் முன்வைக்கப்படுகின்றது. இத்தேசிய கோரிக்கை, இலங்கையின் எண்ணிக்கைப் பெரும்பான்மை இனமான சிங்களவரை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பெருந்தேசியவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிரான உணர்வாக உருவானது.
கருத்தரிப்பு என்பது, பாலூட்டிகளில், கருக்கட்டல் நிகழ்வின்போது உருவாகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்த சந்ததிக்கான உயிரி, முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கரு நிலையில் குழந்தை பிறப்புவரை, பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையில் பதிந்து, தாங்கிக் கொள்ளப்படும் நிலையாகும். இந்தக் கட்டுரையில் மனிதரில் நிகழும் கருத்தரிப்பே விரிவாக ஆராயப்படுகின்றது. மனிதரில், பருவமடைந்த ஆரோக்கியமான பெண்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள் உற்பத்தியாகும்.
சிந்துவெளி நாகரிகம் (Indus Valley Civilisation) மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் (Tamil Nadu Construction Workers Welfare Board) என்பது தமிழக அரசினால் கட்டுமானத் தொழிலாளர்கள் நலனிற்காக உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களில் ஒன்று ஆகும். இது தமிழகத் தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்குகிறது. 53 வகையான கட்டுமான தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கும் நலத்திட்ட உதவிகளுக்கும் இவ்வாரியம் 30.11.1994 அன்று அரசால் ஏற்படுத்தப்பட்டது.
2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று
தமிழகத்தில் கொரோனாவைரஸ் தொற்று, 7 மார்ச் அன்று முதலில் உறுதிப்படுத்தப்பட்டது. 17 மே, 2020 நிலவரப்படி, மொத்தமாக 11,224 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 4,172 பேர் உடல்நலம் தேறி வீடு திரும்பியுள்ளதாகவும், 78 பேர் இறந்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை தெரிவித்தது. தொற்று பரவுவதை தடுக்க மத்திய அரசு, 24 மார்ச் அன்று நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் பழங்குடியினர் (36) பட்டியல் சாதிகள் (76) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79)என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.