The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
சிங்கம்பட்டி அரண்மனை என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் சிங்கம்பட்டியில் உள்ள ஒரு அரண்மனை ஆகும். சிங்கம்பட்டி அரண்மனை என்பது சிங்கம்பட்டி ஜமீன்தாரின் அரண்மனை இந்த அரண்மனை ஐந்து ஏக்கரில் விரிந்துள்ளது. இந்த அரண்மனையில் சமீன்தார் குடும்பத்தினர் இன்றும் வாழ்ந்துவருகின்றனர்.
திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவரான திருவள்ளுவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வன்னியர் (Vanniyar) அல்லது வன்னிய குல சத்திரியர் (Vanniya Kula Kshatriya's) எனப்படுவோர் தமிழகத்தில் குறிப்பாக வடதமிழகத்தில் (காவேரி ஆற்றின் வடக்கு பகுதிகளில்) அடர்த்தியாகவும், மற்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலும் வாழுகின்ற ஒரு மிகப்பெரிய தமிழ் சாதியினர் ஆவர். இவர்கள் புதுச்சேரி, தெற்கு கருநாடகம் மற்றும் தெற்கு ஆந்திரா போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயா சாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்து, கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும்.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
பாண்டவர் எனப்படுவர்கள் மகாபாரதத்தில் வரும் மன்னன் பாண்டுவின் ஐந்து மகன்கள் ஆவார்கள். இவர்களுள் முதல் மூவரான தர்மன், பீமன் மற்றும் அர்ஜூனன் ஆகியோர் குந்தி மூலமும் கடைசி இருவரான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் மாத்ரி மூலமும் பிறந்தவர்கள் ஆவர். இவர்கள் ஐவர் என்பதால் பஞ்ச பாண்டவர் என்றும் அழைக்கப்படுவர்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திரௌபதி (சமசுகிருதம்: कृष्णा द्रौपदी) (ஆங்கிலம்: Draupadi) மகாபாரதம் எனும் காவியத்தில் திரெளபதி, யாக அக்னியில் பிறந்தவள் என்பதால் யாகசேனி என்றும் கரிய நிறத்தவர் என்பதால் கிருஷ்ணை என்றும் பாஞ்சால நாட்டு இளவரசி என்பதால் பாஞ்சாலி என்றும் அழைக்கப்பட்டார். திரெளபதி, பாஞ்சால நாட்டு அரசர் துருபதன் செய்த யாக அக்னியில் தோன்றியவர். இவருடன் திருட்டத்துயும்னன் எனும் சகோதரனும் யாகத்தீயில் தோன்றினார்.
கர்ணன் (ஒலிப்பு ) மகாபாரத காப்பியத்தில் இடம் பெறும் மைய கதாப்பாத்திரங்களுள் ஒருவர். அவர் அங்கா நாட்டின் (தற்போதைய பாகல்பூர் மற்றும் முங்கர்) அரசராக இருந்தார். அர்சுனனை போரில் வீழ்த்தக்கூடிய வல்லமை பெற்ற ஒரே வீரராக நம்பப்படும் கர்ணன், ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் பீஷ்மரினால் மகாபாரதத்தின் மிகச்சிறந்த போர்வீரராகக் கருதப்பட்டார்.
மேலும் தகவல்களுக்கு: இராவணன் (பக்கவழி நெறிப்படுத்தல்)இராவணன் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணம் எனும் காவியம் கூறும் இலங்கையை ஆண்ட அசுர குல மன்னர் ஆவார். இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. பத்து முகங்களை உடையமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார்.மேலும் இவர் சிவனுடைய பக்தனாக திருநீர் அணிவர் என்றும் , சீதையை கவர்ந்து சென்றதனால் இராமனுடன் போரிட்டு வீரமரணம் அடைந்ததாகவும் இராமாயண காவியம் கூறுகிறது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
சொல் (ஒருசொல், ஒன்று அல்லது பல பொருள், நிகண்டு வழி)
ஒரு சொல்லானது இன்னின்ன பொருளைத் தரும் என முதன்முதலில் தோன்றிய திவாகர நிகண்டு சொற்பொருள் இங்குத் தொகுக்கப்பட்டு அகர வரிசையில் தரப்படுகின்றன. இத்தொகுப்பில் 343 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலுக்குச் சேந்தன் திவாகம் என்னும் பெயரும் உண்டு.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது.
சங்க இலக்கியம் (Sangam literature) எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு.
பெருநாள் தொழுகைகள் ஸலாத்துல் ஈத் (அரபு மொழி: صلاة العيد) மற்றும் Șālat al-’Īdayn (அரபு மொழி: صلاة العيدين "இரு பெருநாட்களின் தொழுகை") என்றும் அறியப்படுவது, இஸ்லாமிய இரண்டு பெருநாள் தினங்களிலும் பாரம்பரியமாக திறந்த வெளியில் அல்லது தொழுகை நடைபெறும் இடங்களில் நடத்தப்படும் சிறப்புத் தொழுகைகளாகும். இரண்டு பெருநாள் தினங்களிலும் நடைபெறும் சிறப்புத் தொழுகைகளாவன: ஈதுல் ஃபித்ர் (அரபு மொழி: عيد الفطر), இஸ்லாமிய மாதமான ஷவ்வால் மாதத்தின் முதல் நாளன்று அதாவது, ரமலான்மாதத்தில் நொன்பு நோற்ற பின்பு கொண்டாடப்படும். ஈதுல் அழ்ஹா (அரபு மொழி: عيد الأضحى), துல் ஹஜ் மாத்ச்ம் பத்தாம் நாள் அதாவது அரபாவுக்கு அடுத்த தினம் கொண்டாடப்படும்.
2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று
தமிழகத்தில் கொரோனாவைரஸ் தொற்று, 7 மார்ச் அன்று முதலில் உறுதிப்படுத்தப்பட்டது. 25 மே, 2020 நிலவரப்படி, மொத்தமாக 17,082 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 8,731 பேர் உடல்நலம் தேறி வீடு திரும்பியுள்ளதாகவும், 118 பேர் இறந்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை தெரிவித்தது. தொற்று பரவுவதை தடுக்க மத்திய அரசு, 24 மார்ச் அன்று நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.
'இறக்கைகள் கொண்ட இருகாலி'யைப் பறவை எனக் கூறுவர். பறவைகள் முதுகெலும்புடைய இளஞ்சூட்டுக் குருதியுடைய, இறகுகளுடைய, முட்டையிட்டு இனம்பெருகும் விலங்குகளை குறிக்கும். பறவைகள் இருகால்கள் உள்ள, தன் உடல்வெப்பம் காக்கும், முதுகெலும்புள்ள (முள்ளந்தண்டுள்ள) புள் என்றும் குரீஇ என்றும் சிறப்பித்துக் கூறும் வகையைச் சேர்ந்த, முட்டையிடும் விலங்குகள் ஆகும்.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர்.
ரமலான் நோன்பு (Sawm, அரபு மொழி: صوم) என்பது இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் இசுலாமியர்களால் நோற்கப்படும் நோன்பு ஆகும். இந்நாட்களில் நோன்பு அனுசரிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமல், மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பர்.இது இசுலாமின் ஐந்து அடிப்படை கடமைகளில் மூன்றாவது கடமை ஆகும்.
பகவத் கீதை (pronunciation ) (சமக்கிருதம்: श्रीमद्भगवद्गीता, Bhagavad Gita) என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்கு கடவுளின் பாடல்கள் என்று பொருள்படும். மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அருச்சுனன் அங்கே அவன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தார்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
இலங்கை (ஒலிப்பு ) (Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, சிறீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா: கு, சு, டு, து, பு, று) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துகள் (எ.கா: ற, கி, பெ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது. இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.
முத்தரையர் என்பது, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இருந்த அரச வம்சத்தில் ஒன்றாகும். முத்தரையர்கள் தஞ்சை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மண்டலங்களை கி.பி 600 முதல் கி.பி 900 வரை ஆட்சி செய்தனர். முத்தரைய குடியினர் இரண்டாம் நூற்றாண்டில் எருமைநாட்டில் இருந்துவந்து தமிழ் ராச்சியங்களை ஆக்கிரமித்தவர்களெனத் தமிழ் அறிஞர்கள் கருதுகின்றன.
ஜமின்தார் அல்லது நிலக்கிழார் (zamindar) இந்தியத்துணைக் கண்டத்தில் முகலாயப் பேரரசின் ஆட்சிக் காலத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களையும், உழவர்களையும் கொண்டிருப்பர்களைக் குறிக்கும். பெருநிலக்கிழார்கள் விளைநிலங்களை, குடியானவர்களுக்கு குத்தகைக்கு விட்டு, விளைச்சலில் கிடைக்கும் தானியங்களின் ஒரு பகுதியை வரியாக அரசுப் படைகளின் பராமரிப்புச் செலவிற்கு அரசிற்கு செலுத்துவர். பிரித்தானிய இந்தியாவில், ஜமீந்தார்கள் கொண்டிருக்கும் நிலங்களின் பரப்பளவுக்கு ஏற்ப, சமஸ்தான மகாராஜா , இராஜா போன்ற அடைமொழிகளுடன் அழைக்கப்பட்டனர்.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் பழங்குடியினர் (36) பட்டியல் சாதிகள் (76) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79)என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
கருத்தரிப்பு என்பது, பாலூட்டிகளில், கருக்கட்டல் நிகழ்வின்போது உருவாகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்த சந்ததிக்கான உயிரி, முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கரு நிலையில் குழந்தை பிறப்புவரை, பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையில் பதிந்து, தாங்கிக் கொள்ளப்படும் நிலையாகும். இந்தக் கட்டுரையில் மனிதரில் நிகழும் கருத்தரிப்பே விரிவாக ஆராயப்படுகின்றது. மனிதரில், பருவமடைந்த ஆரோக்கியமான பெண்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள் உற்பத்தியாகும்.
அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் சோழ பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில் தமிழில் இதுவரை ஏறத்தாழ 6000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல் உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
அபுல்-பத் சலால்-உத்-தின் முகம்மத் அக்பர் (பாரசீகம்: ابو الفتح جلال الدين محمد اكبر; அக்டோபர் 1542– 27 அக்டோபர் 1605), என்ற இயற்பெயரும், மகா அக்பர் என்று பொதுவாகவும், (அக்பர்-இ-ஆசம் اکبر اعظم) மேலும் முதலாம் அக்பர் என்றும் அழைக்கப்படும் இவர் (வார்ப்புரு:IPA-ur), மூன்றாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் 1556 முதல் 1605 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தார். அக்பர் தனது தந்தை உமாயூனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தார்.
சினைப்பை நோய்க்குறி (Polycystic ovary syndrome)(PCOS) என்பது பெண்களுக்கு ஆண்ட்ரோஜன் எனப்படும் ஆண்தன்மைச் சுரப்பி அதிகரிப்பதன் காரணமாக ஏற்படும் ஒரு கூட்டு நோய் அறிகுறியாகும். ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் இல்லாமலிருத்தல், அதிகமான குருதிப்போக்கு, உடலிலும் முகத்திலும் அதிகமான முடிவளர்ச்சி, முகப்பரு, இடுப்பெலும்பு வலி, மலட்டுத்தன்மை, சில தோல் பகுதிகள் மட்டும் கெட்டியாகவும் கருத்தும் மிருதுவாகக் காணப்படுதல் ஆகியன இதன் அறிகுறிகளாகும். மேலும் இதனோடு நீரிழிவு நோய், உடற் பருமன் இதய நோய் , உறங்கும்போது மூச்சு விடுதலில் மாற்றம், சீரற்ற மனநிலை, கருப்பை அகப்படலப் புற்றுநோய் ஆகியவையும் இதனோடு தொடர்புடையனவாகும்..
முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
இறையனார் அகப்பொருள் என்பது ஓர் தமிழ் இலக்கணநூல். அகப்பொருள் இலக்கணம் கூறும் இந்த நூலை மதுரை ஆலவாய்க் கடவுள் இறையனார் இயற்றினார் என்று அதன் நக்கீரர் உரை கூறுகிறது. இறையனார் என்னும் பெயர் கொண்ட ஒருவர் இயற்றியிருக்கவேண்டும், அல்லது இந்த நூலை இயற்றியவர் யார் என்று தெரியாத நிலையில் இறையனார் இயற்றினார் எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்
தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்: ஆண்டு - படைப்பு (தன்மை) - படைப்பின் எழுத்தாளர் 1955 - தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) - ரா. பி. சேதுப்பிள்ளை 1956 - அலை ஓசை (நாவல்) - கல்கி கிருஷ்ணமூர்த்தி 1957 - (விருது வழங்கப்பட வில்லை) 1958 - சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை) - சி.
தசாவதாரம் என்பது இந்து சமயக் கடவுள் விஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிப்பதாகும். இறைவன் பூமியில் பிறப்பெடுப்பதை அவதாரம் என்று இந்துகள் குறிப்பிடுகின்றார்கள். வைணவ சமயத்தின் முழுபெரும் கடவுளான விஷ்ணு உலகில் அதர்மம் ஓங்குகின்ற போது, பக்தர்களை காக்கவும், தர்மத்தினை நிலை நாட்டவும், அரக்கர்களை அழிக்கவும் அவதாரம் எடுப்பதாக வைணவர்கள் நம்புகின்றார்கள்.
இந்திய வரலாறு (History of India) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் வரலாற்றுக் காலம் முன்பு வாழ்ந்த மக்கள், அவர்தம் சமுதாயம், சிந்து சமவெளி நாகரிகம் இந்தோ-ஆரியப் பண்பாடு உள்ளடக்கிய வேதகால நாகரிகம் தொடங்கி இன்றுவரை உள்ளிட்டகாலம் அடங்கும். மேலும் பல கலாச்சாரங்களின் சாரமாகவும் பண்பாடுகளை உள்வாங்கியும் பிறந்த இந்து சமயம், அதன் வளர்ச்சி குறித்தும் சிரமணா இயக்கத்தின் வளர்ச்சி, சிரவுத்தா பலிகளின் வீழ்ச்சி, சைனம், பௌத்தம், சைவம், வைணவம் மற்றும் சக்தி வழிபாடு இவைகளின் வளர்ச்சி, தாக்கம், மேலும் இப்பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த அரச பரம்பரை, பேரரசுகளின் தோற்றம், தாக்கம், இடைகாலத்தில் தோன்றிய இந்து மற்றும் முகலாய அரச பரம்பரைகள் குறித்த தகவல்கள், பிற்காலத்தில் வந்த ஐரோப்பிய வணிகர்கள், அதன் தொடர்ச்சியாக அமைந்த ஆங்கிலேய அரசு, அதன் தொடர்ச்சியாக எழுந்த விடுதலை இயக்கம், அதன் பின் நாடு பிரிவினை அடைந்து இந்தியக் குடியரசு பிறந்த வரை தகவல்கள் உள்ளிட்டவை அடங்கும்.சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துணைக்கண்டத்தில் இன்றைய மனிதர்களின் உடற்கூறியல் வடிவத்தை ஒத்த மனிதர்களோ அல்லது 5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தற்கால மனிதனின் முன்னனோடிகளோ வாழ்ந்து வந்தததற்கான் சான்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிமு 3200 முதல் கிமு 1300 வரை இந்தியாவில் செழிப்பாக விளங்கிய சிந்துவெளி நாகரிகம்தான் தெற்கு ஆசியாவில் தோன்றிய முதல் நாகரிகம் ஆகும்.
மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே வடிவிலான எழுத்துருக்களை கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வகையான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவற்றை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.
பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் இனத்தவர்கள் (Scheduled Castes & Scheduled Tribes) என்ற சமூகத்தவர்கள் கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் தகுதிகளில் இந்திய துணை கண்டத்தில் வரலாற்று ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள். பிரித்தானிய இந்தியாவில், இவர்களை ஒடுக்கப்பட்ட மக்கள் (Depressed Class) என்று வகைப்படுத்தி, அவர்களது பொருளாதார மேம்பாட்டிற்கு பஞ்சமி நிலங்கள் ஓதுக்கப்பட்டது. மகாத்மா காந்தியும், அவர்பால் ஈர்க்கப்பட்ட என்.
முக்குலத்தோர் (Mukkulathor) அல்லது தேவர் (Thevar) எனப்படுவர்கள், இந்தியாவின், தமிழ்நாட்டில், மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் வாழுகின்ற இனக்குழுவினர் ஆவார். இவர்கள் கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூன்று சமூகத்தினர் ஆவர். தேவர்கள் 1891ல் இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பில் தமிழ் போற்குடிகள் என்று ஆங்கிலேயர்கள் வகைபடுத்தினர்.
உய்யாலவாடா நரசிம்ம ரெட்டி (Uyyalawada Narasimha Reddy) ( பிறப்பு:1806 நவம்பர் 24 - இறப்பு: 1847 பிப்ரவரி 2) அல்லது மஜ்ஜரி நரசிம்ம ரெட்டி என்றும் அழைக்கப்படும் இவர் முன்னாள் இந்திய தெலுங்கு பாளையக்காரர் மல்லாரெட்டி மற்றும் சீத்தம்மா ஆகியோரின் மகனாவார். 1846 ஆம் ஆண்டில் இவர் சுதந்திரப் போராளிகளின் இதயத்தில் குடி கொண்டிருந்தார். அங்கு ஆந்திராவின் ராயலசீமா பிராந்தியமான கர்நூல் மாவட்டத்தில் உள்ள பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராக 5,000 பொது மக்கள் கிளர்த்தெழுந்தனர்.