The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
இல்லுமினாட்டி (லத்தின் வார்த்தையான இல்லுமினட்டஸ் இன் பன்மை, "தெளிவூட்டுதல்" என்று பொருள்) என்பது வரலாறு சார்ந்த உண்மையான மற்றும் கற்பனையான குழுக்களை குறிப்பிடும் பெயர் ஆகும். வரலாற்று ரீதியாக இது, பவரிய இல்லுமினாட்டி குழுவை குறிக்க பயன்படுகிறது. இது மே 1, 1776 அன்று கண்டறியப்பட்ட தெளிவடைந்த கால இரகசிய சமூகம் ஆகும்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
மிக்கி மவுஸ் (Mickey Mouse) என்பது, ஒரு வேடிக்கையான விலங்கின் கேலிச் சித்திர (cartoon) கதாப்பாத்திரமாகும். கருத்துச் சித்திரமாகவும் விளங்கும் இது, அமெரிக்காவின் மகிழ்கலை வணிக நிறுவனமான வால்ட் டிஸ்னி கம்பனி எனும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சின்னமாகும். உலகப்புகழ் பெற்ற இந்த மிக்கி மவுஸ், 1928 ஆம் ஆண்டு, நவம்பர் 18 இல், இயங்குபட தொழிற்கூடமாக உள்ள வால்ட் டிஸ்னி கம்பனியின் மகிழ்கலைத் தேவையின் பொருட்டு வால்ட் டிஸ்னி, மற்றும் யூபி ஐவர்க்சு (Ub Iwerks) என்பவர்களால், உருவாக்கப்பட்டவையாகும்.
திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவரான திருவள்ளுவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக்கில் 200 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன.
இந்திய மொழிகளில் உள்ள தமிழ்ச் சொற்கள்
ஒரு இனத்தின் மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லிற்குப் பின்னும் அவ்வினத்தின் நீண்டகால வரலாறு அடங்கியிருக்கும். அப்படி தமிழரின் வரலாற்றைத் தன்னுள்ளே பொதிந்து வைத்திருக்கும் தமிழ் மொழியில் உள்ள பல சொற்களை, சமஸ்கிருதச் சொற்கள் என தற்காலத்தில் பலர் பயன்படுத்துவதில்லை. தமிழ் மொழியில் உள்ள சொற்கள் காரணப்பெயர்கள் என்பதால், ஒன்றைக் குறிக்கப் பல சொற்களை உருவாக்க முடியும்.
சுடோக்கு என்பது 9x9 என அமைந்த 81 சிறுகட்டங்கள் அடங்கிய ஒரு பெரிய கட்டத்தில் குறிப்பிட்ட விதிகளுடன், ஒரு குறிப்பிட்ட பண்பு பொருந்துமாறுஎண்களைக் கொண்டு விளையாடும் ஒரு புதிர் விளையாட்டு. இது சப்பான் நாட்டில் 1986 ஆம் வருடத்தில் தொடங்கியது. என்றாலும் 2005 ஆம் ஆண்டளவில்தான் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிலும், பின்னர் அனைத்துலக நாட்டினரிடத்திலும் வெகுவாகப் பரவியது.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
சௌம்யமூர்த்தி ஆறுமுகன் ராமநாதன் தொண்டமான் அல்லது ஆறுமுகன் தொண்டமான் (Savumiamoorthy Arumugan Ramanathan Thondaman, மே 29, 1964 - மே 26, 2020) இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதியும், தொழிற்சங்கத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சரும் ஆவார். இவர் முன்னாள் அமைச்சரும் தொழிற்சங்கவாதியுமான சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் ஆவார். இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் இறக்கும் வரை பதவியில் இருந்தார்.
இந்திய சீனப் போர் என்பது 1962ம் ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட போரை குறிக்கும். இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை சிக்கலை காரணம் காட்டி இப்போர் நடந்தாலும், மற்ற புற காரணிகளும் இப்போர் நடப்பதற்கு முதன்மை காரணமாக விளங்கியது. 1959ல் திபெத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை தொடர்ந்து சீன அதிகாரத்தை ஏற்க மறுத்த தலாய் லாமாவிற்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது.
தக்காணப் பீடபூமி (Deccan Plateau) (தக்காண மேட்டுநிலம்)என்பது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர், மற்றும் விந்திய மலைத்தொடர் ஆகிய மூன்று மலைத்தொடர்களுக்கு நடுவில் முக்கோணவடிவில் உள்ளதாகும். தென்னிந்தியாவின் பெரும்பகுதி தக்காண பீடபூமியை சேர்ந்தது.கங்கைச் சமவெளிக்கு தென்புறம் தக்காணப் பீடபூமி அமைந்துள்ளது. இதன் மேற்குப்பகுதி உயரம் கூடியும் கிழக்குப்பகுதி உயரம் குறைந்தும் காணப்படுகிறது.
பாண்டவர் எனப்படுவர்கள் மகாபாரதத்தில் வரும் மன்னன் பாண்டுவின் ஐந்து மகன்கள் ஆவார்கள். இவர்களுள் முதல் மூவரான தர்மன், பீமன் மற்றும் அர்ஜூனன் ஆகியோர் குந்தி மூலமும் கடைசி இருவரான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் மாத்ரி மூலமும் பிறந்தவர்கள் ஆவர். இவர்கள் ஐவர் என்பதால் பஞ்ச பாண்டவர் என்றும் அழைக்கப்படுவர்.
சொல் (ஒருசொல், ஒன்று அல்லது பல பொருள், நிகண்டு வழி)
ஒரு சொல்லானது இன்னின்ன பொருளைத் தரும் என முதன்முதலில் தோன்றிய திவாகர நிகண்டு சொற்பொருள் இங்குத் தொகுக்கப்பட்டு அகர வரிசையில் தரப்படுகின்றன. இத்தொகுப்பில் 343 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலுக்குச் சேந்தன் திவாகம் என்னும் பெயரும் உண்டு.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆத்திரேலியா, ஆஸ்திரேலியா அல்லது அவுஸ்திரேலியா (Australia) என்பது உலகின் மிகச்சிறிய கண்டமாகவும் உலகின் மிகப்பெரும் தீவாகவும் உள்ள பெருநிலப்பரப்பையும், தாஸ்மானியா தீவு, இந்திய, பசிபிக் பெருங்கடல்களில் உள்ள சில சிறிய தீவுகளையும் உள்ளடக்கிய நாடு. இது பொதுநலவாய ஆஸ்திரேலியா (Commonwealth of Australia) என அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது. எந்த நாட்டுடனும் இதற்கு நில எல்லை கிடையாது.
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார்.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
ஹாலிவுட் எனப்படும் இடம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் (Los Angeles) நகரின் ஒரு பகுதியாகும். இவ்விடத்தில் அமெரிக்காவின் பல முன்னணித் திரைப்பட நடிகர்கள் வாழ்வதாலும் பல திரைக்கூடங்கள் (studio) அமைந்துள்ளதாலும் அமெரிக்கத் திரைப்படத்துறை பொதுவாக ஹாலிவுட் என்றழைக்கப்படுகிறது. 'ஹாலிவுட்' எப்படி உருவானது 1853 ஆம் ஆண்டில், ஒரு அடோப் குடிசை நோபலேரா (நோபல் புலத்தில்) இருந்தது, அந்த இடம் பாரம்பரி யமான மெக்சிகன் நோபல் கற்றாழைக்காக பெயர் பெற்றது 1870 வாக்கில், ஒரு விவசாய சமூகம் செழித்தோங்கியது.
வேகப்பம் அல்லது “பீத்சா” (pizza) ஒலிப்பு: /ˈpiːtsə/ என்பது இயல்பாக மேல்பகுதியில் தக்காளி சாஸ் மற்றும் பாலடைக்கட்டி வைத்து அதன் கீழே இறைச்சிகள், கொத்துக்கறி, கடல் உணவுகள், பாலாடைக்கட்டிகள், காய்கறிகள் மற்றும் கீரைகளைக் கலாச்சாரத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து இவற்றை சேர்த்து அடுமனையில் சுடப்பட்ட தட்டையான வட்டவடிவான ரொட்டி ஆகும். நெப்போலிட்டன் சமையல் வகையிலிருந்து பிறந்த, இந்த உணவு உலகின் பல்வேறுபட்ட பகுதிகளில் மிகவும் பிரபலமாக இருக்கின்றது. பீத்சாக்களை முதன்மையாக உருவாக்கி விற்கும் ஒரு கடை அல்லது உணவுவிடுதி "பிஸ்ஸாரியா" என்று அழைக்கப்படுகின்றது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது.
சங்க இலக்கியம் (Sangam literature) எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் அல்லது ஐக்கிய அமெரிக்கா, (United States of America / USA / US) பொதுவாக அமெரிக்கா என அழைக்கப்படுகிறது. இது ஐம்பது மாநிலங்களும் ஓர் கூட்டரசு மாவட்டமும் ஐந்து தன்னாட்சி ஆட்பகுதிகளையும் மற்றும் பல துய்ப்புரிமை உடைய பகுதிகளையும் கொண்ட கூட்டாட்சி அரசியல் சட்ட குடியரசு நாடாகும். 3.8 மில்லியன் சதுர மைல்கள் (9.8 மில்லியன் கிமீ2) பரப்பும் 325 மில்லியன் மக்களும் கொண்ட ஐக்கிய அமெரிக்கா உலகின் பரப்பினடிப்படையில் மூன்றாவது- அல்லது நான்காவது-மிகப்பெரும் நாடாகவும் மூன்றாவது-மிகுந்த மக்களதொகை உள்ள நாடாகவும் திகழ்கிறது.
மயில், பசியானிடே குடும்பத்தின், பேவோ (Pavo) பேரினத்திலுள்ள இரண்டு இனங்களையும் (தெற்காசியாவில் தென்படும் இந்திய மயில் / நீல மயில், மற்றும் பச்சை மயில்), Afropavo எனும் பேரினத்தைச் சேர்ந்த, ஆப்பிரிக்காவில் தென்படும் காங்கோ மயிலையும் குறிக்கும். மயில்கள் ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது. ஆண்மயில் பெண் மயிலைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும்.
கர்ணன் (ஒலிப்பு ) மகாபாரத காப்பியத்தில் இடம் பெறும் மைய கதாப்பாத்திரங்களுள் ஒருவர். அவர் அங்கா நாட்டின் (தற்போதைய பாகல்பூர் மற்றும் முங்கர்) அரசராக இருந்தார். அர்சுனனை போரில் வீழ்த்தக்கூடிய வல்லமை பெற்ற ஒரே வீரராக நம்பப்படும் கர்ணன், ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் பீஷ்மரினால் மகாபாரதத்தின் மிகச்சிறந்த போர்வீரராகக் கருதப்பட்டார்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில் தமிழில் இதுவரை ஏறத்தாழ 6000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல் உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
கீசகன், மகாபாரதக் கதை மாந்தர்களில் ஒருவன். இவன் மத்சய நாட்டு அரசன் விராடனின் பட்டத்து ராணி சுதேஷ்ணையின் தம்பியும், நாட்டின் தலைமைப் படைத்தலைவனும் ஆவான். துரியோதனுடன் சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்களும் திரௌபதியும், சூதாட்ட விதியின்படி, விராட நாட்டு அரசவையில் பல பணிகளில் அமர்ந்து ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டு வந்தனர்.
பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயா சாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்து, கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும்.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
திரௌபதி (சமசுகிருதம்: कृष्णा द्रौपदी) (ஆங்கிலம்: Draupadi) மகாபாரதம் எனும் காவியத்தில் திரெளபதி, யாக அக்னியில் பிறந்தவள் என்பதால் யாகசேனி என்றும் கரிய நிறத்தவர் என்பதால் கிருஷ்ணை என்றும் பாஞ்சால நாட்டு இளவரசி என்பதால் பாஞ்சாலி என்றும் அழைக்கப்பட்டார். திரெளபதி, பாஞ்சால நாட்டு அரசர் துருபதன் செய்த யாக அக்னியில் தோன்றியவர். இவருடன் திருட்டத்துயும்னன் எனும் சகோதரனும் யாகத்தீயில் தோன்றினார்.
2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று
தமிழகத்தில் கொரோனாவைரஸ் தொற்று, 7 மார்ச் அன்று முதலில் உறுதிப்படுத்தப்பட்டது. 28 மே, 2020 நிலவரப்படி, மொத்தமாக 19,372 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 10,548 பேர் உடல்நலம் தேறி வீடு திரும்பியுள்ளதாகவும், 145 பேர் இறந்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை தெரிவித்தது. தொற்று பரவுவதை தடுக்க மத்திய அரசு, 24 மார்ச் அன்று நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.
அபுல்-பத் சலால்-உத்-தின் முகம்மத் அக்பர் (பாரசீகம்: ابو الفتح جلال الدين محمد اكبر; அக்டோபர் 1542– 27 அக்டோபர் 1605), என்ற இயற்பெயரும், மகா அக்பர் என்று பொதுவாகவும், (அக்பர்-இ-ஆசம் اکبر اعظم) மேலும் முதலாம் அக்பர் என்றும் அழைக்கப்படும் இவர் (வார்ப்புரு:IPA-ur), மூன்றாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் 1556 முதல் 1605 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தார். அக்பர் தனது தந்தை உமாயூனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தார்.
'இறக்கைகள் கொண்ட இருகாலி'யைப் பறவை எனக் கூறுவர். பறவைகள் முதுகெலும்புடைய இளஞ்சூட்டுக் குருதியுடைய, இறகுகளுடைய, முட்டையிட்டு இனம்பெருகும் விலங்குகளை குறிக்கும். பறவைகள் இருகால்கள் உள்ள, தன் உடல்வெப்பம் காக்கும், முதுகெலும்புள்ள (முள்ளந்தண்டுள்ள) புள் என்றும் குரீஇ என்றும் சிறப்பித்துக் கூறும் வகையைச் சேர்ந்த, முட்டையிடும் விலங்குகள் ஆகும்.
கருத்தரிப்பு என்பது, பாலூட்டிகளில், கருக்கட்டல் நிகழ்வின்போது உருவாகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்த சந்ததிக்கான உயிரி, முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கரு நிலையில் குழந்தை பிறப்புவரை, பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையில் பதிந்து, தாங்கிக் கொள்ளப்படும் நிலையாகும். இந்தக் கட்டுரையில் மனிதரில் நிகழும் கருத்தரிப்பே விரிவாக ஆராயப்படுகின்றது. மனிதரில், பருவமடைந்த ஆரோக்கியமான பெண்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள் உற்பத்தியாகும்.
வன்னியர் (Vanniyar) அல்லது வன்னிய குல சத்திரியர் (Vanniya Kula Kshatriya's) எனப்படுவோர் தமிழகத்தில் குறிப்பாக வடதமிழகத்தில் (காவேரி ஆற்றின் வடக்கு பகுதிகளில்) அடர்த்தியாகவும், மற்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலும் வாழுகின்ற ஒரு மிகப்பெரிய தமிழ் சாதியினர் ஆவர். இவர்கள் புதுச்சேரி, தெற்கு கருநாடகம் மற்றும் தெற்கு ஆந்திரா போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.
இலங்கை (ஒலிப்பு ) (Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, சிறீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் சோழ பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே.
ஆஸ்திரேலியத் தமிழர் (அல்லது அவுஸ்திரேலியத் தமிழர், தமிழ் அவுஸ்திரேலியர்கள், Tamil Australian) எனப்படுவோர் தமிழ் பின்புலத்தைக் கொண்டு அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்கள். 1970 ஆம் ஆண்டில் இருந்தே தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயரத் தொடங்கினர். அதற்கு முன்னர் தொழில் அனுமதி பெற்றுச் சிலர் வந்துள்ளனர்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
சினைப்பை நோய்க்குறி (Polycystic ovary syndrome)(PCOS) என்பது பெண்களுக்கு ஆண்ட்ரோஜன் எனப்படும் ஆண்தன்மைச் சுரப்பி அதிகரிப்பதன் காரணமாக ஏற்படும் ஒரு கூட்டு நோய் அறிகுறியாகும். ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் இல்லாமலிருத்தல், அதிகமான குருதிப்போக்கு, உடலிலும் முகத்திலும் அதிகமான முடிவளர்ச்சி, முகப்பரு, இடுப்பெலும்பு வலி, மலட்டுத்தன்மை, சில தோல் பகுதிகள் மட்டும் கெட்டியாகவும் கருத்தும் மிருதுவாகக் காணப்படுதல் ஆகியன இதன் அறிகுறிகளாகும். மேலும் இதனோடு நீரிழிவு நோய், உடற் பருமன் இதய நோய் , உறங்கும்போது மூச்சு விடுதலில் மாற்றம், சீரற்ற மனநிலை, கருப்பை அகப்படலப் புற்றுநோய் ஆகியவையும் இதனோடு தொடர்புடையனவாகும்..
தமிழில் உள்ள உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18, ஆக மொத்தம் 30 எழுத்துகளைத் தமிழ் இலக்கணம் என்னும் மொழியியல் முதலெழுத்து எனக் குறிப்பிடுகிறது. வித்துமுதலைப் போட்டு விளைச்சல் காண்பது போலவும், முதலை வைத்துத் தொழில் செய்து பொருள் ஈட்டுவது போலவும் இந்த 30 முதல் எழுத்துகளை வைத்துதான் தமிழ் இயங்குகிறது. எழுத்துகள் சொல்லாகும்போது சில எழுத்துகள் மொழியோடு தோன்றி எழுத்தின் ஒலியைக் கூட்டியும் குறைத்தும் தருவது உண்டு.
சிங்கம்பட்டி அரண்மனை என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் சிங்கம்பட்டியில் உள்ள ஒரு அரண்மனை ஆகும். சிங்கம்பட்டி அரண்மனை என்பது சிங்கம்பட்டி ஜமீன்தாரின் அரண்மனை இந்த அரண்மனை ஐந்து ஏக்கரில் விரிந்துள்ளது. இந்த அரண்மனையில் சமீன்தார் குடும்பத்தினர் இன்றும் வாழ்ந்துவருகின்றனர்.
சௌமியமூர்த்தி தொண்டமான் (ஆகஸ்டு 30, 1913 - அக்டோபர் 30, 1999) இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களது முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராவார். 86 வது வயதில் இவர் இறக்கும் போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவராகவும் இலங்கை அரசின் அமைச்சரவையில் வயது கூடிய அமைச்சராகவும் காணப்பட்டார். இவர் தொடர்ந்து 21 வருடங்கள் இலங்கை பாராளுமன்றத்தில் அமைச்சராகப் பதவி வகித்தார்.
தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று
தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று இந்தியாவில் சூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்கள் வீசும் பருவப் பெயர்ச்சிக் காற்று ஆகும். கோடை காலத்தில் தார் பாலைவனம் மற்றும் அதைச்சுற்றியுள்ள இந்தியாவின் வட, நடுப்பகுதிகள் சூடாவதால் அங்கு குறைந்த காற்றழுத்தம் உண்டாகிறது. அதை ஈடு செய்ய ஈரப்பதம் மிக்க காற்று இந்தியாவின் இந்தியப் பெருங்கடலின் தென் மேற்கு பக்கத்திலிருந்து அப்பகுதியை நோக்கி வீசுகிறது.இந்தக் காற்று இமயமலைகளில் முட்டி மேலெழுந்து தீபகற்ப இந்தியாவில் மழை மேகங்களை குவிக்கிறது.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும். சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது முன்றுறையர் அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது.