The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளிற் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
நாடார் (Nadar) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் தமிழகத்தில் பல இடங்களில் காணப்பட்டாலும் திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அடர்த்தியாக வாழுகின்றனர். மேலும், மதுரை, தேனி, சேலம், கோவை, தஞ்சாவூர், ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை போன்ற மாவட்டங்களிலும் பரவலாக உள்ளனர்.
பன்னாட்டு நட்பு நாள் (International Friendship Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து மாத முதல் ஞாயிறு அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கள் நண்பர்களுடன் நேரத்தைச் செலவழிப்பதுடன் தங்கள் அன்பைத் தெரிவிக்கும் விதமாக பூக்கள், வாழ்த்தட்டைகள், கங்கணக் கயிறுகளை பரிமாறிக் கொள்கின்றனர். இது முதன்முதலில் 1958 இல் பராகுவேயில் "சர்வதேச நட்பு தினம்" என்று முன்மொழியப்பட்டது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
தேசிய கல்வி கொள்கை 2019 (NPE) இந்தியாவின் மக்களிடையே கல்வியை மேம்படுத்துவதற்கான இந்திய அரசால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் உள்ள கல்லூரிகளுக்கு ஆரம்ப கல்வியை இந்தக் கொள்கை உள்ளடக்கியுள்ளது. முதல் தேசிய கல்வி கொள்கை1968 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி இந்திரா காந்தி அரசாங்கமும் மற்றும் இரண்டாவது தேசிய கல்வி கொள்கை பிரதம மந்திரி ராஜீவ் காந்தியால் 1986 ல் வெளியிடப்பட்டது.
பிள்ளையார் அல்லது விநாயகர் (சமசுகிருதம்: गणेश; சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி: கணேஷா; கேட்க ), இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள். விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாக காணப்படுகிறது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார்.
வன்னியர் (Vanniyar) அல்லது வன்னிய குல சத்திரியர் (Vanniya Kula Kshatriya's) எனப்படுவோர் தமிழகத்தில் குறிப்பாக வடதமிழகத்தில் (காவேரி ஆற்றின் வடக்கு பகுதிகளில்) அடர்த்தியாகவும், மற்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலும் வாழுகின்ற ஒரு மிகப்பெரிய தமிழ் சாதியினர் ஆவர். இவர்கள் புதுச்சேரி, தெற்கு கருநாடகம் மற்றும் தெற்கு ஆந்திரா போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2020
2020 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் (2020 Sri Lankan parliamentary election) 2020 ஆகத்து 5 இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2018 நவம்பரில், அன்றைய அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தினார். பின்னர் மீயுயர் நீதிமன்றம் நாடாளுமன்றக் கலைப்பை இரத்துச் செய்து, அடுத்த தேர்தல் தேதியை 2020 இற்கு மீண்டும் தள்ளிப் போட்டது.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சொல் (ஒருசொல், ஒன்று அல்லது பல பொருள், நிகண்டு வழி)
ஒரு சொல்லானது இன்னின்ன பொருளைத் தரும் என முதன்முதலில் தோன்றிய திவாகர நிகண்டு சொற்பொருள் இங்குத் தொகுக்கப்பட்டு அகர வரிசையில் தரப்படுகின்றன. இத்தொகுப்பில் 343 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலுக்குச் சேந்தன் திவாகம் என்னும் பெயரும் உண்டு.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
அசின் தொட்டும்கல் (ஆங்கில மொழி: Asin, மலையாளம்: അസിന് തോട്ടുങ്കല്), (பிறப்பு அக்டோபர் 26, 1985)பரவலாக அசின் என்ற பெயரால் அறியப்படும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய நடிகையும், பயிற்சி பெற்ற பரதநாட்டியக் கலைஞர் ஆவார். 2001 ஆம் ஆண்டில் வெளியான சத்யன் அந்திக்காடின் நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அவரது முதல் வர்த்தகரீதியான வெற்றித் திரைப்படம் 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமான அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி ஆகும்.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கில மொழி: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
கௌதம புத்தரை அடிப்படையாகக்கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். கௌதமபுத்தர் கிறித்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடிய, ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை தாம் கண்டறிந்துள்ளதாக நேபாளத்தில் உள்ள அகழ்வாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் பழங்குடியினர் (36) பட்டியல் சாதிகள் (76) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79)என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் சோழ பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே.
கருப்பசேர்வை கொங்கு நாட்டு ஓடாநிலைக் கோட்டை பாளையக்காரர் தீரன் சின்னமலையிடம் சேர்ந்து பிரிடிஷ்காரர்களுக்கு எதிராக யுத்தம் செய்தவர். தீரன் சின்னமலையிடம் திறை வசூலிக்க வந்த சங்ககிரி திவான் மீராசாகிப்பின் படை வீரர்களை கருப்பசேர்வை விரட்டியடித்தார். மைசூர் மன்னர் திப்பு சுல்தானுடன் கூட்டணி சேர்ந்து, சின்னமலை மற்றும் கருப்பசேர்வை, கம்பெனி ஆட்சிக்கு எதிராக பெரும்படை திரட்டிப் போரிட்டனர்.
'பெருங்காயம் (பெருலா அசபோய்டிடா) (பாரரசீகம் انگدان அங்கதான்), மாற்றுவிதமாக அசபேடிடா, உச்சரிப்பு /æsəˈfɛtɪdə/ (இது சாத்தானின் சாணம், நாற்றமடிக்கும் பசை, அசந்த், கடவுளின் உணவு, காயம் (மலையாளம்), இங்கு (பெங்காலி, மராத்தி, குசராத்தி, இந்தி, உருது, நேபாளி), இன்குயா (தெலுங்கு), இன்கு (கன்னடம்), பெருங்காயம் (தமிழ்), ஐடிட்டு (மிசுனாய்க்கு எபிரேயம்), மற்றும் சியண்ட்டு பென்னல் என்றும் அறியப்படுகின்றது), இது பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்ட பெருங்காய இனம் ஆகும். பெருங்காயம் சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக்கத்தக்க மணத்தைக் கொண்டிருக்கின்றது. ஆனால் இது சமைத்த உணவுகளில் மென்மையான சுவையை வழங்குகின்றது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
மனு தர்ம சாத்திரம் (சமசுகிருதம்:मनुस्मृति, மனுஸ்மிருதி) இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும். இதனை சுவாயம்பு (மனு) எனும் பண்டைய வேத கால முனிவர் தொகுத்தார். இது 2685 செய்யுட்களாகவும், 3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது.
வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் முகமதியர்களின் படையெடுப்புக்குப்பின்பு கம்பிளி ராஜ்ஜியம் இழந்து விஜயநகரம் உருவாக்கினர்.
மாவீரன் கர்ணன் (ஒலிப்பு ) மகாபாரத காப்பியத்தில் இடம் பெறும் மைய கதாப்பாத்திரங்களுள் ஒருவர். அவர் அங்கா நாட்டின் (தற்போதைய பாகல்பூர் மற்றும் முங்கர்) அரசராக இருந்தார். கர்ணனை போரில் வீழ்த்தக்கூடிய வல்லமை பெற்ற ஒரு வீரர் அகிலத்தில் எவரும் இல்லை என்று கிருஷ்ணன் உரைத்தார், ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் பீஷ்மரினால் மகாபாரதத்தின் மிகச்சிறந்த போர்வீரராகக் கருதப்பட்டார்.
முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு, தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும், ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக, தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
காகிதம் (Paper) என்பது எழுதுவதற்கும், அச்சிடுவதற்கும் பயன்படும் ஒரு மெல்லிய பொருள் ஆகும். மரம், கந்தல் அல்லது புல் ஆகியனவற்றிலிருந்து கிடைக்கும் செல்லுலோசுக் கூழின் ஈரமான இழைகளை அழுத்தி பின்னர் நெகிழும் தன்மை கொண்ட தாள்களுக்கிடையில் உலர்த்தி இக்காகிதத்தைத் தயாரிக்கிறார்கள். எழுதுதல், அச்சிடுதல், பொட்டலம் கட்டல், தொழில்துறை மற்றும் கட்டுமான செயல்முறைகள் உட்பட பல பயன்களைக் கொண்ட ஒரு பல்துறை பொருளாக காகிதம் பயன்படுகிறது.
இந்திய வரலாறு (History of India) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் வரலாற்றுக் காலம் முன்பு வாழ்ந்த மக்கள், அவர்தம் சமுதாயம், சிந்து சமவெளி நாகரிகம் இந்தோ-ஆரியப் பண்பாடு உள்ளடக்கிய வேதகால நாகரிகம் தொடங்கி இன்றுவரை உள்ளிட்டகாலம் அடங்கும். மேலும் பல கலாச்சாரங்களின் சாரமாகவும் பண்பாடுகளை உள்வாங்கியும் பிறந்த இந்து சமயம், அதன் வளர்ச்சி குறித்தும் சிரமணா இயக்கத்தின் வளர்ச்சி, சிரவுத்தா பலிகளின் வீழ்ச்சி, சைனம், பௌத்தம், சைவம், வைணவம் மற்றும் சக்தி வழிபாடு இவைகளின் வளர்ச்சி, தாக்கம், மேலும் இப்பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த அரச பரம்பரை, பேரரசுகளின் தோற்றம், தாக்கம், இடைகாலத்தில் தோன்றிய இந்து மற்றும் முகலாய அரச பரம்பரைகள் குறித்த தகவல்கள், பிற்காலத்தில் வந்த ஐரோப்பிய வணிகர்கள், அதன் தொடர்ச்சியாக அமைந்த ஆங்கிலேய அரசு, அதன் தொடர்ச்சியாக எழுந்த விடுதலை இயக்கம், அதன் பின் நாடு பிரிவினை அடைந்து இந்தியக் குடியரசு பிறந்த வரை தகவல்கள் உள்ளிட்டவை அடங்கும்.சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துணைக்கண்டத்தில் இன்றைய மனிதர்களின் உடற்கூறியல் வடிவத்தை ஒத்த மனிதர்களோ அல்லது 5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தற்கால மனிதனின் முன்னனோடிகளோ வாழ்ந்து வந்தததற்கான் சான்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிமு 3200 முதல் கிமு 1300 வரை இந்தியாவில் செழிப்பாக விளங்கிய சிந்துவெளி நாகரிகம்தான் தெற்கு ஆசியாவில் தோன்றிய முதல் நாகரிகம் ஆகும்.
சூழல் தாக்க மதிப்பாய்வு (Environmental impact assessment) என்பது, மனிதனுடைய சூழல்சார் உடல்நலத்தில் ஏற்படக்கூடிய தாக்கம், வாழ்சூழல் நலம் (ecological health) மற்றும் இயற்கையின் சேவைகளில் (nature's services) ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஆகியவற்றில் ஒரு குறிப்பிட்ட திட்டம் கொண்டிருக்கக்கூடிய தாக்கங்களை மதிப்பாய்வு செய்தல் ஆகும். திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பான தீர்மானம் எடுப்பவர்கள், அதற்குமுன், அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் கவனத்தில் கொள்வதற்கு உதவுமுகமாகவே இந்த மதிப்பாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. சூழலியல் காரணிகளால், மனித உடல் நலத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றி அறிவதற்கு, செல்வழிப் பகுப்பாய்வு (pathway analysis) முறையைப் பயன்படுத்துவதில், ஐக்கிய அமெரிக்க சூழல் பாதுகாப்பு முகமை (US Environmental Protection Agency) முன்னோடியாக இருந்தது.
நாயக்கர் என்பவர்கள் ஆந்திரா, கருநாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் வாழும் சில சமூகங்கள் பயன்படுத்தும் பட்டம் ஆகும். இவர்கள் தென்மாநிலங்களில் மக்கள் தொகையில் அதிகமாக காணப்படுகிறார்கள். இவர்கள் ஆதியில் கங்கை சமவெளியில் யமுனை நதிகரையில் வாழ்ந்த மேய்ச்சல் நில ஓர் இன பழங்குடிமக்கள் என ரிக் வேதத்தின் அய்த்ரேய பிராமணம் கூறுகிறது.
தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரெண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
அஜித் குமார், (பிறப்பு மே 1, 1971) தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் தல என்றும் அழைக்கிறார்கள்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
கண்ணதாசன் (ஒலிப்பு ) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
கொங்கு வேளாளர் (Kongu Vellalar) எனப்படுவோர் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் வசிக்கும் தமிழைத் தாய் மொழியாக கொண்ட ஓர் இனக்குழுவினர் ஆவர். பொதுவாக இவர்களை கவுண்டர் என்று கொங்கு சமுதாயம் என்றும் அழைப்பர். கொங்கு நாட்டுப் பகுதிகளில் பெருமளவில் உள்ள இவர்கள் முற்படுத்தப்பட்ட வகுப்பினராய் இருந்து, 1975இல் தங்களின் கோரிக்கைக்கேற்ப பிற்படுத்தப்பட்டவர்களாய் அறிவிக்கப்பட்டார்கள்.
தியாகத் திருநாள் (Eid al-adha, அரபு: عيد الأضحى ஈத் அல்-அதா) அல்லது பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்தப் பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் (Dul Haji) 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.
இட ஒதுக்கீடு சமுதாயத்தில் அழுத்தப்பட்ட பகுதி சார்ந்த மக்களுக்கு கல்வி மற்றும் வேலை நிலைகளில் ஓரளவு இடங்களை ஒதுக்கி காலப்போக்கில் சமுதாய சமத்துவத்தை ஏற்படுத்தும் திட்டமாகும். அப்படி அழுத்தப்பட்ட மக்கள் இனம், சாதி, மொழி, பால், வசிப்பிடம், பொருளாதார சூழல், உடல் ஊனம் போன்ற முறைகளில் இருக்கலாம். எடுத்துக்காட்டாக பெண்கள் பல சமூகங்களில் படிப்பு, வெளி வேலை இல்லாமல் வீட்டு வேலையே செய்து வந்தனர்.
குமரிக்கண்டம் (kumari Kandam) என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இந்தியாவின் தெற்கே இருந்ததாகக் கருதப்படும் இழந்த ஒரு கண்டத்தைக் குறிக்கிறது . இது பண்டைய தமிழர் நாகரிகத்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமான நிலப்பகுதியாகவும் கருதப்படுகிறது. குமரிக்கண்டம், குமரி நாடு என்ற வேறு பெயர்களாலும் இப்பகுதி அழைக்கப்பட்டது.
சங்க இலக்கியம் (Sangam literature) எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு.
பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் இனத்தவர்கள் (Scheduled Castes & Scheduled Tribes) என்ற சமூகத்தவர்கள் கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் தகுதிகளில் இந்திய துணை கண்டத்தில் வரலாற்று ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள். பிரித்தானிய இந்தியாவில், இவர்களை ஒடுக்கப்பட்ட மக்கள் (Depressed Class) என்று வகைப்படுத்தி, அவர்களது பொருளாதார மேம்பாட்டிற்கு பஞ்சமி நிலங்கள் ஒதுக்கப்பட்டது. மகாத்மா காந்தியும், அவர்பால் ஈர்க்கப்பட்ட என்.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (All India Anna Dravida Munnetra Kazhagam, அ.இ.அ.தி.மு.க. அல்லது அனைத்து இந்திய அண்ணா தி.மு.க.) என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது.
மேலும் தகவல்களுக்கு: இராவணன் (பக்கவழி நெறிப்படுத்தல்)இராவணன் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணம் எனும் காவியம் கூறும் இலங்கையை ஆண்ட அசுர குல மன்னர் ஆவார். இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. பத்து முகங்களை உடையமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார்.மேலும் இவர் சிவனுடைய பக்தனாக திருநீர் அணிவர் என்றும் , சீதையை கவர்ந்து சென்றதனால் இராமனுடன் போரிட்டு வீரமரணம் அடைந்ததாகவும் இராமாயண காவியம் கூறுகிறது.
தமிழக ஆளுநர் -தமிழக ஆளுநர்களின் பட்டியல் தென்னிந்தியாவின் மாநிலமான, தமிழ்நாடு மாநிலத்தில், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்ற ஆளுநர் தமிழகத்தின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர். தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுநர்கள் 1946ல் இருந்தே நியமனம் செய்யப்பட்டவர்களாகவும், தற்காலிகப் பொறுப்புகளுடனும் பதவி வகித்து வந்துள்ளனர்.
காதோலை கருகமணி அந்தக் காலத்தில் சுவாசினிகள் இன்றுபோல திருமாங்கல்யம் அணியும் முறை கிடையாது. சுமங்கலிப் பெண்கள் அணிவது கருகமணியும், பனை ஓலையால் ஆன காதணியும் தான். இன்றும் இல்லங்களில் வர-மகாலட்சுமி அம்மனை அலங்காரம் செய்கையில், இந்தக் காதோலை-கருகமணி (வெளிர்சிவப்பு நிறத்தில் சுருட்டப்பட்ட பனை ஓலை ஒரு கருப்பு நிற சிறு வளையத்துள் நுழைத்தது) சார்த்தப்படுகிறது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.