The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
திலீபன் எனும் பெயரில் அறியப்படும் பார்த்திபன் இராசையா என்பவர் (நவம்பர் 29, 1963 – செப்டெம்பர் 26, 1987) தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பகால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராவர். இவர் இலங்கை, யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்தவர். இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்பில் லெப்டினன் கேணல் திலீபன் எனும் நிலை வழங்கப்பட்டது.
இந்தியாவில் பாலினப் பாகுபாடு (Gender inequality in India) என்பது இந்தியாவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நலவாழ்வு, கல்வி, பொருளியல், அரசியல் சார்ந்த சமனின்மையைக் குறிக்கிறது. இந்தக் காரணிகளின் அடிப்படையிலும் ஒட்டுமொத்த நிலைமையைப் பொறுத்தும் பல்வேறு பன்னாட்டுப் பாலினச் சுட்டிகள் இந்தியாவை பல்வேறு தரவரிசைகளில் பாகுபடுத்துகின்றன. மேலும் இந்தச் சுட்டிகள் ஏற்கப்படாமல் கருத்துமோதலில் உள்ளன.பாலினச் சமனின்மைகளும் அவை உருவாக்கும் சமூகக் காரணிகளும் இந்தியாவில் பாலின விகிதத்தை மாற்றுவதோடு மகளிரின் வாணாள் நலவாழ்வின் தரத்தையும் கல்வி வளர்ச்சியையும் பொருளியல் மேம்பாட்டையும் குறைக்கின்றன.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
பாலினப் பயில்வுகள் (Gender studies) என்பது பாலின அடையாளத்தையும் பாலின உருவகிப்பையும் பயிலும் பலதுறையிடைப் புலமாகும். இது மகளிர் பயில்வுகள், ஆடவர் பயில்வுகள், பெண்ணியம், பாலினம், பாலின அரசியல், விதிர்நிலைப் பயில்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கும். சிலவேளைகளில், பாலினப் பயில்வுகள் மாந்த இனப் பாலுணர்வுப் பயில்வுடன் இணைந்தே பயிலப்படுகிறது.
சமூகம் உருவாக்கும் பாலின வேறுபாடு
பாலின வேறுபாட்டை சமூகம் உருவாக்குகின்றது என்ற கருத்து பாலினம் குறித்த பல மெய்யியல் மற்றும் சமூகவியல் கோட்பாடுகளில் இடம் பெறுகின்றது. இக்கருத்தியலின்படி, சமூகமும் பண்பாடும் பாலினச் செய்கைகளை உருவாக்குகின்றன; சமூகமும் பண்பாடும் ஒரு குறிப்பிட்ட பாலருக்கு பொருத்தமான அல்லது ஆதர்ச செயற்பாடுகளை வரையறுக்கின்றன என்பதாகும். இதில் தீவிரக் கருத்துக் கொண்டவர்கள் ஆடவருக்கும் பெண்களுக்கும் உள்ள வேறுபாடுகள் முழுமையாக சமூக பழக்கங்களால் ஆனவையே என்று வாதிடுகின்றனர்; மற்றவர்கள் உயிரிக் கூறுகள் வரையறுக்கும் சில நடத்தைகளைத் தவிர பிற செயற்பாடுகளை சமூகம் கட்டமைக்கின்றது என்கின்றனர்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
இளையராஜா (Ilaiyaraaja, பிறப்பு: சூன் 2, 1943) இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)
இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission) இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்வியினை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், தரக்கட்டுப்பாடு செய்யவும் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். 1956 ஆம் ஆண்டு இந்திய நடுவண் அரசால் நிறுவப்பட்ட சட்டரிதியான அமைப்பாகும். இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்பு வழங்குதல், அரசு பல்கலைக்கழங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது.
கட்டசேரி யோசஃப் யேசுதாஸ் (மலையாளம்: കാട്ടശ്ശേരി ജോസഫ് യേശുദാസ്) , (பிறப்பு 10 சனவரி 1940) அல்லது பரவலாக கே.ஜே.யேசுதாஸ், ஓர் இந்திய கருநாடக இசைக் கலைஞரும் புகழ்பெற்றத் திரைப்படப் பாடகரும் ஆவார். அவர் தமது 50 ஆண்டுகள் திரைவாழ்வில் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமசுகிருதம், துளு, மலாய் மொழி, உருசிய மொழி,அராபிய மொழி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 40,000-க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடியுள்ளார். சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் வகையில் வேறு எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில் ஏழு முறை தேசிய விருது பெற்றுள்ளார்.மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார்.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
கண்ணதாசன் (ஒலிப்பு ) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
அருங்காட்சியகம் என்பது, அரும்பொருட்களைச் சேகரித்தல், அவற்றைக் காட்சிக்கு வைத்தல் ஆகிய நோக்கங்களுக்காக உள்ள கட்டிடங்கள் அல்லது நிறுவனங்களைக் குறிக்கும். இவை, மக்கள் மற்றும் அவர்கள் சூழல் தொடர்பான சான்றுகளை, மனமகிழ்ச்சி, கல்வி, ஆய்வு போன்ற நோக்கங்களுக்காகச் சேகரிப்பதுடன், அவற்றைப் பாதுகாத்தும், ஆய்வுகளை நடத்தியும், அதனை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தியும், காட்சிப்படுத்தியும் உதவுகின்றன. இது, சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், அதன் சேவைக்குமாக இயங்குகின்ற ஒரு நிலையான நிறுவனமாகும்.
பல்கலைக் கழக மான்ய குழு பண்டைய பாரதத்திலிருந்து நவீன இந்தியா வரை, உயர் கல்வி எப்போதும் இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தை ஆக்கிரமித்துள்ளது. பண்டைய காலங்களில், நாலந்தா, தாகசீலா மற்றும் விக்ரமிலா பல்கலைக்கழகம் உயர் கல்வி கற்களால் புகழ்பெற்ற இடங்கள், நாடு முழுவதும் இருந்து மட்டுமல்ல, கொரியா, சீனா, பர்மா (இப்போது மியன்மார்), சிலோன் (இப்போது இலங்கை), திபெத் மற்றும் நேபாளம். இன்று, இந்தியா உலகிலேயே மிக உயர்ந்த உயர் கல்வி நிறுவனங்களில் ஒருவரையே நிர்வகிக்கிறது *.
கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளைய தலைமுறையினரை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
பேறுகாலச் சலுகைச் சட்டம் (The Maternity (Amendment) Bill 2017) என்பது 1961 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட பேறுகாலச் சலுகைச் சட்டத்திலுள்ள திருத்தங்களை மேற்கொள்வதற்காக இயற்றப்பட்ட சட்டம் ஆகும். இச்சட்டம் ஆகஸ்டு 11, 2016 இல் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. மேலும் மார்ச் 9, 2017 இல் மக்களவையில் (இந்தியா) நிறைவேற்றப்பட்டது.
சுற்றுலா (tourism) என்பது தமது வழமையான இருப்பிடங்களை விட்டு வேற்று இடங்களைக் கண்டு களிக்க பயணித்தலே ஆகும். உலக சுற்றுலா அமைப்பின் சொற்பொருள் விளக்கத்தின்படி ஒரு பயணத்தை சுற்றுலா என வகைப்படுத்த ஒருவர் தமது "வழமையான சுற்றுச்சூழலைவிட்டு வேற்று இடத்திற்கு ஒய்வு, அலுவல் மற்ற ஏனைய நோக்குடன் மேற்கொள்ளும் பயணம் ஒரு வருட காலகட்டத்திற்குள் அமைய வேண்டும். மேலும், அப்பயணத்தின் மூலம் பயணி பயணிக்கப்பட்ட இடத்திலிருந்து ஊதியம் பெற கூடாது".
பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம், 2013
இந்தியாவில் பணியிடத்தில் பாலியல் வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம், 2013 நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மசோதா, மக்களவையில் 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ம் தேதியும், மாநிலங்களவையில் 2013ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதியும் நிறைவேற்றப்பட்டது. 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதியில் குடியரசுத் தலைவர் இச்சட்டத்திற்கு தனது ஒப்புதலை அளித்தார்.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கில மொழி: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
பாலினச் சமனிலை (Gender equality), அல்லது பாலியல் சமனிலை (sexual equality) அல்லது பாலிடை நிகர்மை (equality of the sexes) என்பது பாலினம் சாராமல் அனைவரும் வளங்களையும் வாய்ப்புகளையும் எளிமையாக அணுகவியலும் சமனிலையைக் குறிக்கிறது; இதில் பொருளியல் பங்கேற்பும் முடிவெடுக்கும் திறனும் அடங்கும். மேலும், இது வேறுபட்ட நடத்தைகளையும் ஆர்வங்களையும் தேவைகளையும் பாலினம் சாராமல் மதிப்பிடும் நிலையைக் குறிக்கும். சிக்கலைத் தவிர்க்க, இங்கு ஆண், பெண் தவிர, பிற பாலினங்கள் கருதப்படவில்லை.
குடும்பம் என்பது இரத்த உறவாலோ, அல்லது திருமணம், சுவீகாரம் (தத்தெடுத்தல்) போன்ற வேறு சட்டபூர்வமான முறைகளிலோ தொடர்பு பட்ட ஒரு உறைவிடக் குழுவாகும். பல சமுதாயங்களில், குடும்பம் என்பது மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த வேறு கருத்துருக்களினாலும் புரிந்துகொள்ளப் பட்டிருப்பதால், "குடும்பம்" என்பது பல வேளைகளில் பெரிய மனிதக் குழுவினரை உள்ளடக்கும் ஒரு உருவகமாகவும் பயன்படுவதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, சமூகம், சுற்றம், நாடு, மனித குலம் போன்றவற்றையும் குடும்பம் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர்.
(சுற்றுச்சூழல் பாதுகாப்பு) (environmental protection) என்பது சுற்றசூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகையினாலும் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்று சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
பாலின அடையாளம் (Gender identity) என்பது ஒருவர் தன் பாலினத்தை எவ்வாறு உணர்கிறார் அதாவது அடையாளப் படுத்திக் கொள்கிறார் என்பதைக் குறிக்கும். பாலின அடையாளம் ஒருவருக்குப் பிறப்பின்வழி உயிரியலாக அமையும் பாலாக அமையலாம் அல்லது அதில் இருந்து வேறுபடலாம்.விளக்கமாக, ஒருவர் தன்னுடய பாலினத்தை எவ்வாறு நடைமுறையில் பட்டறிகிறாரோ அதுவே அவருடய பாலின அடையாளம் (gender identity) ஆகும். அதாவது, ஒருவர் தான் எந்த பாலைச் சேர்ந்தவர் என்று உணர்கிறாரோ அதுவே அவரின் பாலின அடையாளம் ஆகும்.
பாகுபாடு (Discrimination) என்பது ஒரு தனிநபரை ஓர் குறிப்பிட்டக் குழு அல்லது வகைப்பாட்டில் அங்கமாக உள்ளதை (அல்லது அங்கமானவர் என்று எண்ணி) முன்னிட்டு முற்சார்புடன் நடத்துவதாகும். இது அந்தக் குழுக்களைத் தனிப்படுத்துவதும் தடை செய்வதுமான செயல்களை உள்ளடக்கும். ஒரு குழுவினை மட்டும் மற்ற குழுவினருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளிலிருந்து தள்ளி வைப்பதும் கட்டுப்படுத்துவதும் ஆகும்.பாகுபாடுடைய சட்டங்கள் பல நாடுகளில் உள்ளன.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
விண் கலங்கள் வரிசையில் பார்க்கும் பொழுது மனிதனின் முயற்சியால் விண்வெளியின் கோளப்பாதையில் இயங்கும் ஒரு பொருளாகசெயற்கைக்கோள் (Satellite)(ஈழ வழக்கு: செய்மதி) இருக்கிறது. இது நிலா போன்ற இயற்கைக் கோள்கள் போல் விண்வெளியில் உலா வருவதினால் இதற்கு செயற்கைக் கோள் என்ற பெயர் வந்தது. 1957 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தால் ஸ்புட்னிக் 1 என்கின்ற முதல் செயற்கைக்கோள் விண்வெளியில் செலுத்தப்பட்டது.
நாளிதழ் என்பது ஒவ்வொரு நாளும் அச்சிட்டு வெளியிடப்படும் செய்தி இதழ் ஆகும். தற்காலத்தில் செய்தியல்லாத பிறவற்றையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு நாளிதழ்கள் வெளியிடப்படுகின்றன ஆயினும், மிகப் பெரும்பாலான நாளிதழ்கள் செய்தி இதழ்களாகவே உள்ளன. எனவே இதை செய்தித்தாள்கள் (News Papers) என்றும், நாள்தோறும் வெளியிடப்படுவதால் தினசரிகள் (Dailies) என்றும் அழைப்பதுண்டு.
உழவு அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
ஐக்கிய நாடுகள், அல்லது ஐநா அல்லது யூஎன், என்பது, பல நாடுகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல், கலிபோர்னியாவிலுள்ள, சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டது.
சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
சிவாஜி கணேசன் 275 தமிழ் திரைப்படங்களிலும், 10 தெலுங்கு திரைப்படங்களிலும், 2 இந்தி திரைப்படங்களிலும், 1 மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவை தவிர 19 திரைப்படங்களில் கௌரவ நடிகராகத் தோன்றி நடித்துள்ளார்.
பொது ஊடகம் (mass media) என்பது, பெருமளவு மக்களைச் சென்றடைவதற்காக பேரமைவுத் தொடர்பாடல் வழியாக அமைக்கப்படும் பல்வேறு ஊடகத் தொழில்நுட்பங்களின் தொகுப்பைக் குறிக்கும். இந்தத் தொடர்பாடல் நிகழ்வில் பல வெளியீட்டு முனையங்கள் அமையும். ஒலிபரப்பு ஊடகம் திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி, மெல்லிசை ஆகியவற்றின் வாயிலாக தகவலை மின்னனியலாகச் செலுத்துகின்றன.
மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகளை "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக" கருதப்படுகின்றன.
ஊட்டச்சத்து (Nutrition) என்பது வாழ்க்கைக்கு ஆதாரமான அத்தியாவசிய மூலப்பொருள்களை உயிரணுக்களுக்கும், அதன்மூலம் உயிரினங்களுக்கும் வழங்குகின்ற உணவு ஆகும். இது பல ஊட்டக்கூறுகளைக் (Nutrients) கொண்டிருக்கும். பல பொதுவான சுகாதார பிரச்சினைகளையும் ஆரோக்கியமான உணவைக் கொண்டு தடுக்கவோ தவிர்த்துவிடவோ செய்ய முடியும்.
வானொலி (Radio) என்பது ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்களைக் கொண்ட மின்காந்த அலைகளின் வழி தொடர்பு கொள்ளும் ஒரு கம்பியில்லாத் தொலைத்தொடர்பு ஊடகமாகும். மின்காந்த அலைகளின் வழி செய்தி, அறிவிப்பு, பாடல் மற்றும் உரையாடல் ஒலியலைகளை ஏற்றி வான் வழியே செலுத்தி ஆங்காங்கே மக்கள் அதை தங்களிடமுள்ள வானொலிப் பெட்டி வழியாகப் பெறுமாறு தொழில் நுட்பம் தொடங்கியதால் இதனை வானொலி (அ) ரேடியோ என்பர். இந்த மின்காந்த அலைகள் கண்களால் காணக்கூடிய ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்ணைக் கொண்ட மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்குகிறது.
முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு, தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும், ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக, தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
தென்னிந்தியத் திருச்சபை (Church of South India) என்னும் கிறித்தவ சபைப் பிரிவு இங்கிலாந்து திருச்சபை என்னும் அமைப்பைப் பின்பற்றி இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் என்னுமிடத்தில் நிறுவப்பட்டது. இது நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு, இந்தியாவில் உள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய கிறித்தவ சபை அமைப்பாகத் திகழ்கிறது. இது தென்னிந்திய ஆங்கிலிக்கம், மெதாடிஸ்ட், பிரெஸ்பிட்டேரியன் மற்றும் புராட்டஸ்தாந்து ஆகிய திருச்சபைக் குழுக்களை இணைத்து அமைக்கப்பட்டது.
இலங்கை (ஒலிப்பு ) (Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, சிறீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
கணினி-வழி மொழிப் பாடம் கற்றல் (Computer-assisted language learning (CALL) அல்லது Computer-Aided Instruction (CAI) அல்லது Computer-Aided Language Instruction (CALI)) முறையில் மாணவர் தாமே கற்றலை நிகழ்த்துவர். எனவே இது தனிநபர் கற்றல் அல்லது தனிப்பட்ட கற்றல் என்றும் அழைக்கப்படும். தனிப்பட்ட கற்றல் என்பது கற்பவருக்கும் கற்றலுக்குமான உறவை பலப்படுத்துவதாகும்.
திவ்ய தேசங்கள் என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுக்கவிதை என்பதற்கான வரைவிலக்கணம் என்பது இன்றைய சூழலில் பல்வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. எனினும் இலகுவாக புதுக்கவிதை என்பது கவிதைக்குரிய மரபு, இலக்கணம் அற்ற ஒரு கவிதை முறையாக நோக்கப்படுகின்றது. மரபுக்கவிதையானது சீர், தளை, அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளைக் கொண்டு காணப்பட புதுக்கவிதை அவற்றை புறந்தள்ளியதாக புதுக்தோற்றத்துடன் காணப்படுகின்றது.
சுவர்ணலதா (Swarnalatha, இறப்பு: செப்டம்பர் 12, 2010) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. 1987 ஆம் ஆண்டில் இருந்து பல இசையமைப்பாளர்களின் இசைக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, மலையாளம், பெங்காலி, ஒரியா, படுகா உள்ளிட்ட பல மொழிகளில் ஏழாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.
விளம்பரம் (advertising) என்பது தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பிராண்டுகளைஅல்லது ஒரு குறிப்பிட்ட வகை தயாரிப்புகள் அல்லது சேவைகளை அதிக அளவில் வாங்க உண்டாக்கப்பட்ட தொடர்பு சாதனம். 19ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒட்டுமொத்த உற்பத்தி அதிகமானதை தொடர்ந்து நவீன விளம்பரங்கள் முன்னேற்றமடைந்தன.வடிவமைக்கப்பட்ட மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட "வடிவம்" மூலம் அந்தக்குறிப்பிட்ட சாதனங்கள் ,சேவைகளின் கொள்முதலை அதிகப்படுத்தும் வகையில் நிறைய விளம்பரங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த மாதிரியான நோக்கத்திற்காக சில விளம்பரங்கள், அவர்களுடைய விடாப்பிடியான செய்தியை சில சமயங்களில் உண்மையான தகவல்களுடன் சேர்த்துவிடுவதுண்டு.
கமல்ஹாசன் (Kamal Haasan, பிறப்பு:07 நவம்பர் 1954) ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார்.கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக 1 தேசிய விருதும், 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள்கள், 4 ஆந்திர அரசின் நந்தி விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்றுள்ளார், இவர் சிறந்த பிறமொழிப்படத்திற்கான, அகாதமி விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றிலும் நடித்திருந்தார்.