The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கில மொழி: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
பகத் சிங் (Bhagat Singh, செப்டம்பர் 28, 1907 – மார்ச் 23, 1931) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மார்க்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவதுண்டு..
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
சிந்துவெளி நாகரிகம் (Indus Valley Civilisation) மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது.
வேதிச் சேர்மம் (Chemical Compound) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஓர் உறுப்படி ஆகும். ஒரு தனிமத்திலிருந்து குறைந்தபட்சம் இரண்டு அணுக்கள் இவ்வுறுப்படியில் வேதிப் பிணைப்பால் இணைக்கப்பட்டிருக்கும். இரசாயனச் சேர்வை, சேர்வை, சேர்மம் என்னும் பெயர்களாலும் இது அழைக்கப்படும்.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
ஐக்கிய நாடுகள், அல்லது ஐநா அல்லது யூஎன், என்பது, பல நாடுகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல், கலிபோர்னியாவிலுள்ள, சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டது.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
வல்லினம் மிகும் இடங்க.ள் என்பது தமிழ் மொழியில் அடுத்தடுத்து இரண்டு சொற்கள் வரும்போது முதல் சொல்லின் இறுதியில் ஒரு வல்லின எழுத்து சேர்வதைக் குறிக்கும். ஒரு நிலைமொழியோடு வருமொழி க,ச,த,ப வருக்க எழுத்துகளில் தொடங்குஞ் சொல்லாக அமையும்பொழுது அவ்வல்லொற்று சிலவிடங்களில் மிகுந்தும் சிலவிடங்களில் மிகாமலும் வரும். இவற்றையறிந்து பயன்படுத்தாமையைச் சந்திப்பிழை யெனக் கூறுவர்.
கண்ணதாசன் (ஒலிப்பு ) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா: கு, சு, டு, து, பு, று) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துகள் (எ.கா: ற, கி, பெ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது. இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.
ஊட்டச்சத்து (Nutrition) என்பது வாழ்க்கைக்கு ஆதாரமான அத்தியாவசிய மூலப்பொருள்களை உயிரணுக்களுக்கும், அதன்மூலம் உயிரினங்களுக்கும் வழங்குகின்ற உணவு ஆகும். இது பல ஊட்டக்கூறுகளைக் (Nutrients) கொண்டிருக்கும். பல பொதுவான சுகாதார பிரச்சினைகளையும் ஆரோக்கியமான உணவைக் கொண்டு தடுக்கவோ தவிர்த்துவிடவோ செய்ய முடியும்.
ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.புதுக்கோட்டை மாவட்டம் ஐல்லிக்கட்டின் "சொர்க்க பூமியாக " இன்னும் திகழ்ந்து வருகிறது.
காந்தியின் உண்ணாநிலைப் போராட்டப் பட்டியல்
காந்தியின் உண்ணாநிலைப் போராட்டங்கள், இந்திய விடுதலைக்கும், தீண்டாமைக்கு எதிராகவும், சமய நல்லிணக்கதிற்கும் மேற்கொள்ளப்பட்டவையாகும். மகாத்மா காந்தி, 17 முறை, 139 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டங்கள் மேற்கொண்டார். அவற்றில் மூன்று முறை 21 நாட்கள் மேற்கொண்ட தொடர் உண்ணாநிலைப் போராட்டங்களைக் கண்ட, பிரித்தானிய இந்திய ஆட்சியாளர்கள் வியந்தனர்.
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார்.
தமிழில் உள்ள உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18, ஆக மொத்தம் 30 எழுத்துகளைத் தமிழ் இலக்கணம் என்னும் மொழியியல் முதலெழுத்து எனக் குறிப்பிடுகிறது. வித்துமுதலைப் போட்டு விளைச்சல் காண்பது போலவும், முதலை வைத்துத் தொழில் செய்து பொருள் ஈட்டுவது போலவும் இந்த 30 முதல் எழுத்துகளை வைத்துதான் தமிழ் இயங்குகிறது. எழுத்துகள் சொல்லாகும்போது சில எழுத்துகள் மொழியோடு தோன்றி எழுத்தின் ஒலியைக் கூட்டியும் குறைத்தும் தருவது உண்டு.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் உலகப்போர் என்பது உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர். எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
சகப் பிணைப்பு அல்லது பங்கீட்டு வலுப்பிணைப்பு (covalent bond) என்பது இரு அணுக்கள் எலக்ட்ரான்களை சமமாக வழங்கி சமமாகப் பகிர்ந்து கொள்வதால் உருவாகும் பிணைப்பு ஆகும். வேதிப்பிணைப்புகளுள் ஒன்று. இரண்டு அணுக்கள் எதிரெதிர் சுழலெண் (spin) கொண்ட இணையான எதிர்மின்னிகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வதால் பகிர்வுப்பிணைப்பு அல்லது பகிர்பிணைப்பு அல்லது சகப்பிணைப்பு என்னும் வகையான வேதியியல் பிணைப்பு உண்டாகிறது.
காந்தப் புலம் (magnetic field) என்பது மின்னோட்டத்தின் அல்லது காந்தப் பொருள் ஒன்றின் காந்த விளைவாகும். ஒவ்வொரு புள்ளியிலும் உள்ள காந்தப் புலம் திசையாலும் வலிமை (பருமை)யாலும் குறிப்பிடப்படுகிறது; எனவே இது ஒருநெறியப் புலமாகும். இந்தச் சொல் B H ஆகிய இரு குறியீடுகளால் குறிக்கப்படும் இருவகைப் புலங்களுக்குப் பயன்படுகிறது.
உழவு அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான்.
சட்டம் மற்றும் பொருளியலில்‚ காப்பீடு அல்லது காப்புறுதி (insurance) என்பது சார்ந்திருப்போர் இழப்பின் பாதிப்பு இடர்பாட்டினைக் கடப்பதற்கு முதன்மையாகப் பயன்படுத்தப்படும் இடர் மேலாண்மை வடிவமாகும். பெரிய அளவிலான அதிர்ச்சியளிக்கும் இழப்பிற்கான வாய்ப்பை தவிர்க்கும் வகையில் ஒரு சிறிய உத்தரவாதம் மிக்க இழப்பாக ப்ரீமியத்தைப் பெற்று‚ ஒரு தரப்பிலிருந்து மற்றொரு தரப்பிற்கு இழப்பு இடர்பாட்டிற்கு சமமான மாற்றினை வழங்குவதே காப்பீடு ஆகும். காபீட்டை விற்கும் நிறுவனம் காப்பீடு வழங்குவோர் என்றும்; காப்பீடுதாரர் அல்லது பாலிசிதாரர் என்று காப்பீட்டை பெற்ற நபரோ அல்லது தரப்போ அழைக்கப்படும்.
பெண்ணியம் என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் எதிர்க்கும் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் தொகுப்பாகும். ஆண் பெண் சமத்துவத்தில் கவனம் செலுத்தும் கோட்பாடாகவும் இது வரையறுக்கப்படுவதுண்டு. பெண்ணியத்தை வரையறுப்பதென்பதே கூட சிக்கலானதாக இருப்பதுண்டு.
சுரதா (நவம்பர் 23, 1921 - சூன் 20, 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர்.
சமணம் என்பது பண்டைய இந்தியாவில் நிலவிய சில சமயக்கோட்பாடுகளைக் குறிக்கும். சமணம் என்ற சொல் ச்ரமண (śramaṇa) என்ற வடமொழிச்சொல்லின் சிதைவு; ச்ரமண என்றால் தன்னை வருத்துகை என்று பொருள் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சிலக்குழப்பங்களால் சமணம் என்ற சொல்லே ஜைனத்தை மட்டும் குறிக்க தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டது.
இந்திய தேசிய காங்கிரஸ் (ஆங்கில மொழி: Indian National Congress) ('காங்கிரஸ் கட்சி அல்லது காங்கிரஸ் (I) என்றும் அழைக்கப்படுகிறது, சுருக்கமாக ') இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885ல் தொடங்கப்பட்ட இக்கட்சி, இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. இக்கட்சியின் அமைப்புகளில் 15 மில்லியன் இந்திய மக்களும், ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 70 மில்லியன் மக்களும் பங்கெடுத்தனர்.
இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 (Indian Rebellion of 1857) அல்லது சிப்பாய்க் கலகம் என்பது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய்கள் மே 10, 1857 இல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும். இக்கிளர்ச்சி பின்னர் இந்தியாவின் பல இடங்களிலும், குறிப்பாக இந்தியாவின் மத்திய மலைப் பகுதிகளில், பரவியது. பொது மக்கள் பலரும் இக்கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர்.
மனிதக் குரங்கு (ape) என்பது ஹொமினோய்டியே பெருங்குடும்பத்தைச் சேர்ந்த உயர் விலங்கினம் ஆகும். பொது வழக்கில் இது பெரும்பாலும் மனிதர்களை உள்ளடக்குவதில்லை எனினும் அறிவியல் வகைப்பாட்டு அடிப்படையில் மனிதரும் இவ் வகையுள் அடங்குபவரே. நடைமுறையில் உள்ள வகைப்பாட்டில் இரண்டு ஹொமினோய்டு குடும்பங்கள் உள்ளன: ஹைலோபட்டிடே குடும்பம்: இது 4 பேரினங்களையும், 13 கிப்பன் இனங்களையும் அடக்கியுள்ளது.
மழைநீர் சேகரிப்பு என்பது மழை நீரை வீணாக்காமல் சேமித்து வைப்பது ஆகும். மழைநீரைச் சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும், நீர்ப்பாசனத்திற்கும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் பயன்படுத்தலாம். வீடுகள், நிறுவனங்களின் கட்டிடங்களின் மேற்கூரைகளில் இருந்தும் இதற்காகத் தயார் செய்யப்பட்ட தரைவழியாகவும் சேகரிக்கப்படும் மழைநீர் குடிநீருக்கான முக்கியமான ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.சில சூழ்நிலைகளில், மழைநீர் ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய, சிக்கனமான நீர் ஆதாரம்.
(சுற்றுச்சூழல் பாதுகாப்பு) (environmental protection) என்பது சுற்றசூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகையினாலும் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்று சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
எட்டப் பார்வை (Hyperopia) என்றும் தூரப் பார்வை (longsightedness அல்லது hypermetropia) என்றும் அறியப்படும் கண்ணின் குறைபாடு விழிக்கோளமோ விழி வில்லையோ செம்மையாக இல்லாமையால் உருவாகிறது. இக்குறைபாட்டினால் அண்மையிலுள்ள பொருட்களைக் காண்பதில் சிரமம் ஏற்படுகிறது. விழியின் அண்மைப் பார்வைக்கான குவிமையத்தன்மை ஆற்றல் குறைகிறது.
பைத்தான் (Python Programming Language) என்பது ஒரு திறந்த மூல நிரலாக்க மொழியாகும். இம்மொழியை உருவாக்கியவர் குய்டொ வான் ரூஸ்ஸொம்(Guido van Rossum) என்ற நெதர்லாந்து நாட்டு நிரலாளர் ஆவார். இவர் இம்மொழிக்குப் பெயரை, 'Monty Python's Flying Circus' என்ற இங்கிலாந்து நகைச்சுவை நாடகத்தின் பெயரைக் கொண்டு, பைத்தான் என்று வைத்தார்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
இந்திய விடுதலை இயக்கம் என்பது இந்தியாவில் இரண்டு நூற்றாண்டுகளாக நீடித்த ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியையும் அதனைத் தொடர்ந்து வந்த ஆங்கில அரசின் ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும் நிகழ்ந்த கலகங்கள், அகிம்சை வழிப் போராட்டங்கள் முதலிய பல்வேறு நிகழ்வுகளை குறிக்கும் ஒரு பரந்துபட்ட வரலாறு ஆகும். இவ்வியக்கம் பிரிக்கப்படாத இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் இருந்து ஆங்கில அரசை விலக்குவது மற்றும் அங்கெல்லாம் சுதந்திர அரசை ஏற்படுத்தி சுய ஆட்சியை நிர்மாணிப்பது முதலிய பல்வேறு நோக்கங்களுக்காக எடுத்து செல்லப்பட்ட இயக்கம் ஆகும். இந்த இயக்கங்களின் ஆரம்பகட்ட எதிர்ப்புகள் 16 ஆம் நூற்றாண்டில் கர்நாடகாவில் போர்த்துக்கீசிய காலனிய விரிவாக்கத்தின் துவக்கத்திலும், 1700-களின் மத்திய காலம் மற்றும் இறுதிக் காலங்களில் வங்காளத்தில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியாலும் செய்யப்பட்ட காலத்திலேயே காணப்படுகின்றன.
உலக வணிக அமைப்பு (WTO ) என்பது ஒரு சர்வதேச நிறுவனமாகும், சர்வதேச மூலதன வணிகத்தினைத் தாராளமயமாக்கி அதை மேற்பார்வையிடும் நோக்குடன் இந்த அமைப்பு நிறுவப்பட்டது. 1947 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்த ஜிஏடிடி என்ற (General Agreements on Tariffs and Trade (GATT)) வணிகம் மற்றும் கட்டண விகிதத்திற்கான பொது உடன்பாட்டு அமைப்பிற்குப் பதிலாக ஜனவரி 1, 1995 ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு அதிகாரபூர்வமாக, மர்ரகேஷ் ஒப்பந்தத்தின்கீழ் செயல்படத் துவங்கியது. உலக வணிக அமைப்பானது அதில் பங்குபெறும் நாடுகளிடையே நிலவும் வணிகத்தை ஒழுங்குமுறைப்படுத்துகிறது; பேச்சுவார்த்தைகள் மூலம் வணிக உடன்பாடுகள் செய்து முடிவு காண்பதற்கு ஒரு நிலையான கட்டமைப்பை அது வழங்குகிறது.
கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளைய தலைமுறையினரை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
இரத்தத்தில் கலந்திருக்கும் சிகப்பு இரத்த அணுக்களின்(RBCs) Mமேற்பரப்பில் இருக்கும் அல்லது இல்லாதிருக்கும் மரபு உடற் காப்பு ஊக்கிகளை வைத்துக் குருதி வகைப்படுத்தப்படுகிறது.(இதனை, இரத்த பிரிவு என்றும் அழைக்கலாம்) இந்த உடற்காப்பு ஊக்கிகள் , மாவு சத்தாக, இரத்த சர்க்கரை புரதமாக, அல்லது க்ளைகோ லிபிடாக இருக்கலாம். இது ரத்த பிரிவின் அடிப்படையில் ஏற்படக்கூடியது. பல்வேறு திசுக்களில் இருக்கும் வேறு வகையான உயிரணுக்களின் மேற்பரப்பிலும் சில உடற்காப்பு ஊக்கிகள் காணப்படுகின்றன.
இலங்கை (ஒலிப்பு ) (Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, சிறீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
சுற்றுலா (tourism) என்பது தமது வழமையான இருப்பிடங்களை விட்டு வேற்று இடங்களைக் கண்டு களிக்க பயணித்தலே ஆகும். உலக சுற்றுலா அமைப்பின் சொற்பொருள் விளக்கத்தின்படி ஒரு பயணத்தை சுற்றுலா என வகைப்படுத்த ஒருவர் தமது "வழமையான சுற்றுச்சூழலைவிட்டு வேற்று இடத்திற்கு ஒய்வு, அலுவல் மற்ற ஏனைய நோக்குடன் மேற்கொள்ளும் பயணம் ஒரு வருட காலகட்டத்திற்குள் அமைய வேண்டும். மேலும், அப்பயணத்தின் மூலம் பயணி பயணிக்கப்பட்ட இடத்திலிருந்து ஊதியம் பெற கூடாது".
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் பழங்குடியினர் (36) பட்டியல் சாதிகள் (76) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79)என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
திராவிட மொழிக் குடும்பம் (dravidian language family) என்பது மரபு வழியாக இணைந்த கிட்டத்தட்ட 85 மொழிகளை உள்ளடக்கியதாகும். கிட்டத்தட்ட 217 மில்லியன் மக்கள் இம்மொழிகளைப் பேசுகின்றனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த முக்கிய மொழிகளான, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பன ஒன்றுடனொன்று நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும், ஏனைய இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதும் அறியப்பட்டுள்ளது.
வேதியியலில், ஒரு அயனிச் சேர்மம் என்பது ஒரு அயனிகளுக்கிடையே உள்ள நிலைமின்னியல் கவர்ச்சி விசைகளினால் பிணைக்கப்பட்ட அயனிகள் அயனிப் பிணைப்பால் இணைந்த வேதிச் சேர்மம் ஆகும். ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது சேர்மமானது மின்சுமையற்றதாக அதாவது நடுநிலையானதாக இருக்கும். ஆனால், நேர்மின் சுமை கொண்ட நேரயனிகளையும், எதிர்மின்சுமை கொண்ட எதிரயனிகளையும் கொண்ட சேர்மமாகும்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
நன்னூல், தொல்காப்பியத்தையும், தொல்காப்பியம் இளம்பூரணர் உரையையும் முதல்நூலாகக் கொண்ட வழிநூல். இது தொல்காப்பியம் கண்ட தமிழியலைப் பின்பற்றி நன்னூல் தோன்றிய காலத்தில் இருந்த தமிழையும் உள்ளத்தில் கொண்டு தமிழ்மொழியை ஆராய்ந்துள்ளது. சுமார் 1700 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் நிகழ்ந்த தமிழியல் பார்வை இது என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.நன்னூல், 13ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும்.
பஞ்சாயத்து ஒன்றியம் அல்லது ஊராட்சி ஒன்றியம் (Panchayat Union or Block Development Office), இந்தியாவின், தமிழ்நாட்டில், 1994ம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி சட்டத்தின்படி வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டது.ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் கிராம ஊராட்சிகள் இயங்குகிறது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் 385 ஊராட்சி ஒன்றியங்களும், 12524 கிராம ஊராட்சிகளும் உள்ளது. அவற்றுள் நீலகிரி மாவட்டம் குறைந்த பட்சமாக நான்கு பஞ்சாயத்து ஒன்றியங்களும், விழுப்புரம் மாவட்டம் அதிக பட்சமாக 22 பஞ்சாயத்து ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.ஊராட்சி ஒன்றியங்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி விரிவாக்க அலுவலர்கள், மேலாளர், கணக்காளர் மற்றும் உதவியாளர்கள் ஊராட்சி ஒன்றியக் குழுவின் தீர்மானங்களை நிறைவேற்றுவார்.
அயனிப் பிணைப்பு (இலங்கை வழக்கு: அயன் பிணைப்பு ஆங்கிலம்:Ionic bonding) என்பது ஒரு வகையான வேதிப்பிணைப்பு ஆகும். இதை மின்வலுப் பிணைப்பு அல்லது மின்மவணுப் பிணைப்பு என்றும் அழைக்கிறார்கள். ஒர் அணு மற்றோர் அணுவுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களைத் தேவைக்கேற்ப வழங்குவதால் உண்டாகும் இருவேறுவகை எதிரெதிர் மின்சுமையுள்ள அயனிகளுக்கிடையே நிலவும் மின் கவர்ச்சி விசையையே அயனிப்பிணைப்பு என்கிறோம்.
புதுக்கவிதை என்பதற்கான வரைவிலக்கணம் என்பது இன்றைய சூழலில் பல்வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. எனினும் இலகுவாக புதுக்கவிதை என்பது கவிதைக்குரிய மரபு, இலக்கணம் அற்ற ஒரு கவிதை முறையாக நோக்கப்படுகின்றது. மரபுக்கவிதையானது சீர், தளை, அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளைக் கொண்டு காணப்பட புதுக்கவிதை அவற்றை புறந்தள்ளியதாக புதுக்தோற்றத்துடன் காணப்படுகின்றது.
இளையராஜா (Ilaiyaraaja, பிறப்பு: சூன் 2, 1943) இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
சுற்றுச்சூழல் மாசுபாடு (சூழல் மாசடைதல்) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும். சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது.
சொல் (ஒருசொல், ஒன்று அல்லது பல பொருள், நிகண்டு வழி)
ஒரு சொல்லானது இன்னின்ன பொருளைத் தரும் என முதன்முதலில் தோன்றிய திவாகர நிகண்டு சொற்பொருள் இங்குத் தொகுக்கப்பட்டு அகர வரிசையில் தரப்படுகின்றன. இத்தொகுப்பில் 343 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலுக்குச் சேந்தன் திவாகம் என்னும் பெயரும் உண்டு.