The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டினர்
இந்திய விடுதலை இயக்கங்களில் பங்கு பெற்ற தமிழ்நாட்டினர் குறித்த பட்டியல் இது. இதில் முதலாவது இடத்தில் மாமன்னர் அழகுமுத்துக்கோன் யாதவ் ஆவார்.இவர் வாழ்ந்த ஆண்டு (1728-1757) 1757ல் நடந்த போரே முதல் விடுதலை போர் ஆகும். இவரை தவிர பூலித்தேவன் (1715-1767) மருதநாயகம் (1725-1764) வீரபாண்டிய கட்டபொம்மன் (1790-1799) தீரன் சின்னமலை சாமி நாகப்பன் படையாட்சி வீரன் சுந்தரலிங்கம் அர்த்தநாரீசுவர வர்மா அஞ்சலை அம்மாள் எஸ்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுட்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்
இந்திய விடுதலைப்போராட்டத்தில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர். 1857-ல் நடந்த சிப்பாய் கலகம் முதல் இந்திய விடுதலைப் போர் எனக் குறிப்பிடப்படுகிறது. எனினும் தென்னிந்தியாவில் அதற்கு முன்னரே பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராகப் பல போர்களும் கிளர்ச்சிகளும் நடைபெற்றன.
சீனிவாச இராமானுஜன் (Srinivasa Ramanujan, டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோட்டை பகுதியில் பிறந்த கணித அறிஞர். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார்.
பாபர் மசூதி இடிப்பு (பாபர் மசூதி அழிப்பு; பாபர் மசூதி தகர்ப்பு) என்பது டிசம்பர் 6, 1992 அன்று இந்தியாவின் உத்திரப் பிரதேசத்திலுள்ள, அயோத்தியின் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதியை, இராமர் பிறந்த இடத்தைக் (இராமஜென்மபூமி) கைப்பற்றும் பொருட்டு இந்துக் கரசேவகர்கள் அழித்ததைக் குறிக்கும். இந்த அழிப்பினால் விளைந்த இந்து இஸ்லாமிய மதக்கலவரங்கள் பல மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இவற்றினால் ஏறத்தாழ 2,000 பேர் உயிரிழந்தனர்.
நெகிழி அல்லது பிளாஸ்டிக் (Plastic) என்பது ஒரு பொருள் ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுகி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும். "வார்க்கத் தக்க ஒரு பொருள்" என்னும் பொருள் தரும் "பிளாஸ்டிகோஸ்" என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது. நெகிழி என்னும் பொருளானது பிசைவு கொள்ளும் பொருள் ஆகும்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
இந்திய விடுதலை இயக்கம் என்பது இந்தியாவில் இரண்டு நூற்றாண்டுகளாக நீடித்த ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியையும் அதனைத் தொடர்ந்து வந்த ஆங்கில அரசின் ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும் நிகழ்ந்த கலகங்கள், அகிம்சை வழிப் போராட்டங்கள் முதலிய பல்வேறு நிகழ்வுகளை குறிக்கும் ஒரு பரந்துபட்ட வரலாறு ஆகும். இவ்வியக்கம் பிரிக்கப்படாத இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் இருந்து ஆங்கில அரசை விலக்குவது மற்றும் அங்கெல்லாம் சுதந்திர அரசை ஏற்படுத்தி சுய ஆட்சியை நிர்மாணிப்பது முதலிய பல்வேறு நோக்கங்களுக்காக எடுத்து செல்லப்பட்ட இயக்கம் ஆகும். இந்த இயக்கங்களின் ஆரம்பகட்ட எதிர்ப்புகள் 16 ஆம் நூற்றாண்டில் கர்நாடகாவில் போர்த்துக்கீசிய காலனிய விரிவாக்கத்தின் துவக்கத்திலும், 1700-களின் மத்திய காலம் மற்றும் இறுதிக் காலங்களில் வங்காளத்தில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியாலும் செய்யப்பட்ட காலத்திலேயே காணப்படுகின்றன.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
யாழ்ப்பாண அரசு (Jaffna kingdom) அல்லது ஆரியச்சக்கரவர்த்தி அரசு (Kingdom of Aryacakravarti) (கி.பி 1215–1624) எனப்படுவது இலங்கையின் தற்போதைய வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் யாழ்ப்பாணம் நகரில் அமைந்திருந்த வரலாற்று அரசைக் குறிக்கின்றது. இந்தியாவின் கலிங்க நாட்டைச் சேர்ந்த, யாழ்ப்பாண அரசின் நிறுவனர் எனப்படும் கலிங்க மாகன் படையெடுப்பின் பின் இது அமைக்கப்படதெனக் கூறப்படுகின்றது. பலமிக்க படையை வடக்கு, வடகிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்டு, பின் தற்போதைய தென்னிந்தியாவின் பாண்டியர் அரசுக்கு 1258 இல் நிலமாணிய வரியை கப்பமாக செலுத்தி வந்த இவ்வரசு பாண்டியரின் உடைவின் பின்னர் 1323 இல் விடுதலை பெற்றது.
கல்வி (Education) என்பதுக் குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
பாபர் மசூதி (Babri Mosque, உருது: بابری مسجد, இந்தி: बाबरी मस्जिद), முதலாவது முகலாய மன்னரான பாபர் என்பவரின் கட்டளையின் பேரில் 16ம் நூற்றாண்டில் இந்தியாவின் அயோத்தி நகரில் எழுப்பப்பட்ட ஒரு மசூதி ஆகும். 1940களுக்கு முன்னர் இது இராமர் பிறந்த இடத்தின் மசூதி (Masjid-i Janmasthan) என அழைக்கப்பட்டது. இம்மசூதி "ராமாவின் கோட்டை" எனப்படும் குன்றில் அமைந்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
கோலா லங்காட் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Kuala Langat; ஆங்கிலம்: Kuala Langat District; சீனம்: 瓜拉冷岳县) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு வடக்கில் பெட்டாலிங் மாவட்டம் & கிள்ளான் மாவட்டம்; தெற்கில் சிப்பாங் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. கோலா லங்காட் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: பந்திங்; ஜுக்ரா; தெலுக் டத்தோ; மோரிப் மற்றும் கேரி தீவு.
சுனார் (Chunar) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கில் அமைந்த பூர்வாஞ்சல் பகுதியில் உள்ள மிர்சாபூர் மாவட்ட்த்தில் நகராட்சியுடன் கூடிய, பண்டைய சிறு நகரம் ஆகும். சுனார் தொடருந்து நிலையம், இந்தியாவின் ஹவுரா, தில்லி, டாடாநகர் மற்றும் வாரணாசி நகரங்களுடன் இணைக்கிறது. சுனார் நகரத்தின் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 35, வாரணாசி நகரத்துடன் இணைக்கிறது.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்
இந்தியாவில் 28 மாநிலங்களும், டெல்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 8 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, ஜம்மு காஷ்மீர், டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் இந்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும்.
கண்ணதாசன் (ஒலிப்பு ) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
மருத்துவர் பி எம் சுந்தரவதனன் (en: Dr B M Sundaravadanan) சென்னையைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரும், கல்வியியலாளரும் ஆவார். இவர் இந்தியாவில் மருத்துவம் முடித்த முதன்மையான மிகச் சிலருள் ஒருவரும் ஆவார். இவர் தமிழ்நாடு மருத்துவக்கழகத் தலைவராகவும், இந்திய அறுவை சிகிக்கை நிபுணர்கள் சங்கத்தின் நிறுவனர் மற்றும் செயலரும் ஆவார்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு இந்திய சுதந்திர போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பினை பற்றியது.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
பூலித்தேவன் (1715–1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
சோமநாதபுரம் கோயில் (Somnath) (குசராத்தி: સોમનાથ મંદિર) இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் தென்மேற்குக் கரையில், கிர்சோம்நாத் மாவட்டத்தில், பிரபாச பட்டினக் கடற்கரையில் சோமநாதபுரம் சிவன் கோயில் அமைந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள 12 சோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது.இங்கு சோதிர் லிங்கத்தின் நேர் பின்புறம் உள்ள சக்தி அம்மன், 51 சக்தி பீடங்களில் தேவியின் வயிற்றுப் பகுதி விழுந்த சக்தி பீடத்திற்குரியதாகும்.
இந்துக்களின் வழிபாட்டுக்குரியதாயமைந்த ஒன்பது கிரகங்கள் நவக்கிரங்கள் எனப்படும்.கிரகம் எனும் சமசுகிருத சொல்( ग्रह ) ஆளுகைப்படுத்தல்—(seizing, laying hold of, holding) எனும் பொருளுடையது. நவக்கிரகம்(சமசுகிருதம்: नवग्रह ), ஒன்பது ஆளுகைக்காரர்கள் எனப் பொருள்படும். புவியிலுள்ள உயிர்க்கூறுகளை ஆளுகைக்குட்படுத்துகின்ற அண்டவெளிக்கூறுகளாக இவை கருதப்படுகின்றன.
கொங்கு வேளாளர் (Kongu Vellalar) எனப்படுவோர் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் வசிக்கும் தமிழைத் தாய் மொழியாக கொண்ட ஓர் இனக்குழுவினர் ஆவர். பொதுவாக இவர்களை கவுண்டர் என்றும் கொங்கு சமுதாயம் என்றும் அழைப்பர். கொங்கு நாட்டுப் பகுதிகளில் பெருமளவில் உள்ள இவர்கள் முற்படுத்தப்பட்ட வகுப்பினராய் இருந்து, 1975இல் தங்களின் கோரிக்கைக்கேற்ப பிற்படுத்தப்பட்டவர்களாய் அறிவிக்கப்பட்டார்கள்.
சோம்நாத் அல்லது சோமநாதபுரம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா தீபகற்பத்தில், கிர் சோம்நாத் மாவட்டத்தில் அரபுக் கடற்கரையில் அமைந்த பண்டைய இந்திய நகரங்களில் ஒன்றாகும். தில்லி சுல்தானகம் மற்றும் முகலாயர்களால் பலமுறை சிதைக்கப்பட்ட சோம்நாத் நகரத்தை பதான்-சோம்நாத் அல்லது சோம்நாத்-பதான் என்றும் அழைப்பர். 12 சோதிர் லிங்க தலங்களில் முதன்மையான சோமநாதபுரம் சோமநாதர் கோயில் இவ்வூரில் அமைந்துள்ளது.
திருப்பூர் குமரன் (Tiruppur Kumaran, அக்டோபர் 4, 1904 – சனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 சனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார்.
உணவுக் கலப்படம் (Adulterated food) என்பது ஒரு பொருளில் அதே போன்று பொருளை எளிதில் பிரித்தறிய முடியாதவாறு கலப்பது ஆகும். கலப்படம் பொருள்களின் தரத்தைக் குறைப்பது உடன் நுகர்வோருக்கு உடல்நலப் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. கலப்படத்தால் எற்படும் தீமைகள் 1) உணவுப் பொருட்களுடன் கலக்கப்படும் கல், மண் முதலியன குடல் பகுதியை அடைத்து வலி மற்றும் உடல் உபாதைகளை எற்படுத்துகிறது.
கணிதம் (ஒலிப்பு ) (Mathematics) என்பது வணிகத்தில், எண்களுக்கு இடையான தொடர்பை அறிவதில், நிலத்தை அளப்பதில், அண்டவியல் நிகழ்வுகளை வருவதுரைப்பதில் மனிதனுக்கு இருந்த கணித்தலின் தேவைகள் காரணமாக எழுந்த ஓர் அறிவியல் பிரிவாகும். இந்த நான்கு தேவைகளும் பின்வரும் நான்கு பெரிய கணிதப் பிரிவுகளைப் பிரதிபடுத்துகின்றன: அளவு (quantity) – எண்கணிதம் அமைப்பு (structure) – இயற்கணிதம் பரவெளி (space) – வடிவவியல் மாற்றம் (change) – பகுவியல் (analysis) – நுண்கணிதம்பல்வேறு கணிதவியலாளர்களுக்கும் இடையே கணிதத்தின் சரியான வீச்சையும் வரையறையையும் குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன.கணிதவியலாளர் தோரணங்களைத் தேடுகின்றனர்; கண்டுபிடித்த தோரணங்களைப் பயன்படுத்தி புதிய கணிப்புகளை உருவாக்குகின்றனர். தங்கள் கணிப்புகளின் மெய்,பொய் நிலைகளை கணித நிறுவல் மூலம் தீர்க்கின்றனர்.
மரம் என்பதை அளவிற் பெரிய பல்லாண்டுத் தாவரம் என வரைவிலக்கணம் கூறலாம். இது நிலத்தில் (ஒரு விதையிலிருந்து) தோன்றி, இடம் விட்டு இடம் தானே நகராது, நிலைத்து வளரக்கூடிய ஒரு நிலைத்திணை வகை ஆகும். இதற்கான அளவு குறித்த வரையறை எதுவும் கூறப்படாவிடினும், பொதுவாக முதிர்ந்த நிலையில் 4.5 மீட்டர் (15 அடி) உயரமும், ஒரு தனி அடிமரத்தில் தாங்கப்பட்ட கிளைகளையும் கொண்டிருக்கும்.
வன்னியர் (Vanniyar) அல்லது வன்னிய குல சத்திரியர் (Vanniya Kula Kshatriya's) எனப்படுவோர் தமிழகத்தில் குறிப்பாக வடதமிழகத்தில் (காவேரி ஆற்றின் வடக்கு பகுதிகளில்) அடர்த்தியாகவும், மற்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலும் வாழுகின்ற ஒரு மிகப்பெரிய தமிழ் சாதியினர் ஆவர். இவர்கள் புதுச்சேரி, தெற்கு கருநாடகம் மற்றும் தெற்கு ஆந்திரா போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (தமிழில் அறிவுசேரர் என்று பொருள் தரும்.), அல்லது சம்பந்தர் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதல் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார்.
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி (IIITT) மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தினால் முன்மொழியப்பட்ட இலாபநோக்கமற்ற பொது-தனியார் கூட்டுறவு (பிபிபி) மாதிரியின் கீழ் அமைக்கப்பட்ட 20 ஐஐஐடிடிகளுல் ஒன்றாகும். IIITT ஒரு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது முழுமையாக இந்திய அரசு, தமிழ்நாடு அரசு மற்றும் தொழிலக பங்குதாரர்கள் இணைந்து செய்யப்படும் நிதிபங்களிப்பினால் இயங்குகிறது, இதன் பங்கு விகிதம் முறையே 50:35:15 ஆகும்.
உளவியல் அல்லது மனோதத்துவம் (Psychology) என்பது மனதின் செயல்பாடுகள் மற்றும் நடத்தைகளை அறிவியல் முறையில் ஆய்வு செய்யும் கற்கை மற்றும் பயன்பாட்டு ஒழுங்கு முறையாகும். இந்தத் துறையின் தொழில்முறை நெறிஞர் அல்லது ஆய்வாளர் ஒரு உளவியலாளர் எனப்படுவர். உளவியலாளர் சமூக அல்லது நடத்தை விஞ்ஞானிகள் என்றும் வகைப்படுத்தப்படுவர்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
வைரமுத்து (Vairamuthu, சூலை 13, 1953), புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் சனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார்.
இலங்கை (ஒலிப்பு ) (Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, சிறீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
சுற்றுச்சூழல் மாசுபாடு (சூழல் மாசடைதல்) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும். சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது.