The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
உயிரியல் பல்வகைமை அல்லது பல்லுயிரியம் அல்லது உயிரினப் பன்மயம் (Biodiversity, இலங்கை வழக்கு: உயிர்ப் பல்வகைமை) என்பது பூமியில் உள்ள நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய கணக்கிலடங்காத உயிரினங்களில் காணப்படும் வேறுபாடு ஆகும். மரபுவழிப் பண்பில் பல்வகை, சிற்றினங்களில் பல்வகை, சூழல் அமைப்பில் பல்வகை, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு உரித்தான பல்வகை, அறிமுகப்படுத்தப்பட்ட உயிரினங்களில் பல்வகை ஆகியவற்றை உயிரியல் பல்வகைமை என்பது குறிக்கும். உயிரியல் பல்வகைமை என்பது புவியின் எல்லாப் பகுதிகளிலும் பல்வேறு சூழல்களில் வாழும் பலவகையான உயிரினங்களைப் பற்றி விவரிக்கப் பயன்படுத்தும் ஒரு சொல்லாகும்.
யோகக் கலை அல்லது யோகா (yóga, சமஸ்கிருதம், பாலி: योग|योग) என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். பதஞ்சலி முனிவரால் இக்கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியாகும்.
சூழல் மண்டலம் (ecosystem, இலங்கை வழக்கு: சூழற்றொகுதி) என்பது, ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியிலுள்ள உயிரற்ற இயற்பியல் கூறுகளுடன் ஒருமித்துச் செயற்படும் எல்லாத் தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகள், நுண்ணுயிர்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய உயிரினங்களையும் இணைத்த ஒரு இயற்கை அலகு ஆகும். உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தாங்கள் வாழும் இடத்தின் சூழலைப் பொறுத்து, ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் உயிருள்ள இனங்களும், உயிரற்ற இயற்பியல் கூறுகளும், அவற்றிற்கிடையிலான இடைவினைகளும் இணைந்து சூழல் மண்டலம் எனப்படும்.
தீங்குயிர்கொல்லிகள் அல்லது பீடைகொல்லிகள் எனப்படுபவை தீங்குயிர்/பீடைகளையும் களைகளையும் கட்டுப்படுத்தும் அல்லது அழிக்கும் அல்லது விலகச் செய்யும் (repelling) அல்லது அவற்றின் தாக்கத்தைத் தணித்து வைக்கும் தன்மை கொண்ட சில பொருட்களின் கலவையாகும் தீங்குயிர்கொல்லிகள் என்ற சொல் களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி (இவற்றில் பூச்சி வளர்ச்சி கட்டுபடுத்திகள், கரையான்கொல்லிகள் அடங்கும்), புழுக்கொல்லி, மெல்லுடலிக்கொல்லி, மீன்கொல்லி, பறவைக்கொல்லி, கொறிப்பிக்கொல்லி, குச்சுயிரிக்கொல்லி, பூச்சி விரட்டுவன, விலங்கு விரட்டுவன, நுண்ணுயிர்க்கொல்லி, பூஞ்சைக்கொல்லி ஆகியவற்றை அடக்கும். தீங்குயிர்கொல்லிகளில் 80% மானவை களைகொல்லிகளாகும். பெரும்பாலான தீங்குயிர்கொல்லிகள் பயிர் பாதுகாப்புக்கானவையே.
மில்கா சிங் (Milkha Singh, 20 நவம்பர் 1929 – 18 சூன் 2021) இந்திய தடகள விளையாட்டு வீரர். 1958 ஆம் ஆண்டு கார்டிப்பில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 46.16 வினாடிகளில் தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றவர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் தடகளப் பிரிவில் தங்கம் வென்ற சுதந்திர இந்தியாவின் முதல் வீரர் மில்கா சிங்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
வேட்டையாடுதல் (Hunting) வாழும் உயிர்களை, குறிப்பாக காட்டு விலங்குகளை, உணவு, மகிழ்ச்சி, வியாபாரம் போன்றவற்றிற்காக பிடிப்பது மற்றும் கொலை செய்வது ஆகும். இச்செயலை மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் செய்கின்றன. வியாபாரப் பொருட்களுக்காக வேட்டையாடப்படும் உயிரினங்களின் பொருட்கள் நாடு கடத்தப்படுவது குற்றம் என அரசு சட்டங்கள் தெரிவிக்கின்றன, பன்னெடுங்காலமாக தமிழ் அரசர்கள் வேட்டையாடியதைப் பற்றி இலக்கியங்கள் கூறுகின்றன.
உரம் (fertilizer) என்பது தாவர வளர்ச்சிக்கு இன்றியமையாத, சுண்ணாம்பு தவிர, ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட தாவர ஊட்டங்களை நிலத்துக்கு தாவர இழையங்களுக்குத் தரும் இயற்கை அல்லது செயற்கைத் தொகுப்புவழிப் பொருட்களைக் குறிப்பிடும். பல இயற்கை அல்லது தொழிலக உரங்கள் நடப்பில் உள்ளன.உரம் (ஒலிப்பு ) (fertiliser) என்பது விளை நிலத்தில் உள்ள ஊட்டச்சத்துகளைப் பெருக்கும் பொருட்டு இடப்படுவதாகும். மண்ணில் குறைந்து வரும் இயற்கையான சத்துப் பொருட்களை ஈடு செய்யும் பொருட்டு செயற்கையான சத்துப் பொருளை மண்ணுக்கு ஊட்டுவது 'உரம் இடுதல்' ஆகும்.
தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் வேறுபகுதிகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் அன்னையர் தினத்தை இந்த தினம் முழுமையடையச் செய்கிறது.
காட்டு நிலங்களை, வேளாண்மை, நகராக்கம் போன்ற காடல்லாத நிலப் பயன்பாடுகளுக்கோ அல்லது அதன் வளங்களுக்காகக் காட்டை வெட்டி நிலத்தைத் தரிசாகவோ மாற்றுவதே காடழிப்பு என்பதன் முழுமையான பொருளாகும். முற்காலத்தில் காடழிப்பு, மேய்ச்சல் நிலங்களை உருவாக்குவதற்கு அல்லது வேளாண்மை நிலங்களை உருவாக்கும் நோக்கத்துடனேயே நடைபெற்றது. தொழிற் புரட்சிக்குப் பின்னர் நகராக்கமும், காட்டு வளங்களின் சுரண்டலும், இத்துடன் சேர்ந்து கொண்டன.
வெள்ளம் என்பது நிலத்தை மூழ்கடிக்குமளவுக்குத் தேங்கி நிற்கும் அல்லது பொங்கிப் பாய்ந்தோடும் நீர் ஆகும்.ஆறு அல்லது ஏரி போன்ற நீர்நிலைகளில் உள்ள நீர் மிகையாகும் போது அல்லது கரை உடையும் போது அது தனது வழக்கமான எல்லைகளைத் தாண்டுகிறது. நீரோட்டத்தின் வலிமையானது மிகவும் அதிகரிக்கின்ற போது ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அது ஆற்றின் பாதையைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடி கரையோரம் ஒட்டி அமைந்துள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனகளுக்கு சேதம் உண்டாக்குகிறது.
சுற்றுச்சூழல் நாற்கூம்பு அல்லது சுற்றுச்சூழல் பிரமிடு (ecological pyramid) என்பது கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழலில் ஒவ்வொரு சூழ்நிலை மண்டல மட்டத்திலும் உயிரினத்தொகுதி (பயோமாஸ்) அல்லது உயிர் உற்பத்தித்திறனைக் காட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு வரைகலை அமைப்பு ஆகும். இது சூழ்நிலை மண்டல பிரமிடு, எல்டோனியன் பிரமிடு, ஆற்றல் பிரமிடு, அல்லது சில நேரங்களில் உணவு பிரமிடு (trophic pyramid, eltonian pyramid, energy pyramid, food pyramid) எனவும் அழைக்கப்படுகிறது. ”பயோமாஸ் பிரமிடுகள்” எத்தனை உயிரினங்கள் (ஒரு உயிரினத்தில் வாழும் உயிரினம் அல்லது உயிரினத்தின் அளவு) ஒவ்வொரு சூழ்நிலை மண்டல மட்டத்திலும் உள்ளன என்பதைக் குறிப்பிடுகின்றன.
மண் மாசடைதல் (Soil contamination, soil pollution) மனிதனால் உருவாக்கப்பட்ட வேதிப்பொருள்கள் கலப்பதாலும், இயற்கை மண் சூழலில் ஏற்படும் வேறு மாற்றங்களாலும் உருவாகிறது. பொதுவாக இவ்வாறான மாசடைதல், நிலக்கீழ் சேமிப்புத் தொட்டிகள் உடைதல், பூச்சிகொல்லிப் பயன்பாடு, மாசடைந்த மேற்பரப்பு நீர் நிலக்கீழ் மட்டங்களுக்குச் செல்லல், எண்ணெய் மற்றும் எரிபொருட் கழிவுகளைக் கொட்டுதல், தொழிற்சாலைக் கழிவுகளை நேரடியாக நிலத்தில் வெளியேற்றுதல் போன்றவற்றால் ஏற்படுகின்றது. மிகப் பொதுவான வேதிப்பொருள் மாசுகள், பெட்ரோலிய ஐதரோகாபன்கள், கரையங்கள், பூச்சிகொல்லிகள், ஈயம், பார உலோகங்கள் போன்றனவாகும்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
நல்லதங்காள் கதை தமிழகத்தில் பிரபலமான ஒரு சோகக் கதையாகும். இது தொடர்பான சம்பவம் கதையாகவே சொல்லப்பட்டு வந்தாலும், அவள் உண்மையிலேயே வாழ்ந்தாள் எனவும் நம்பப்படுகிறது. நல்லதங்காள் வறுமையின் காரணமாகவும் தனது அண்ணியின் சுடுசொல் தாளாமலும் தான் பெற்ற பிள்ளைகளைக் கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, பின் தானும் அக்கிணற்றில் விழுந்து இறந்ததாக அவளது கதை சொல்லப்படுகிறது.
கல்வி (Education) என்பதுக் குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இயற்கை வளங்கள் (natural resources), அல்லது பொருளாதார ரீதியில் நிலம் மற்றும் மூலப்பொருள் அல்லது கச்சா பொருட்கள் எனப்படுபவை ஒப்பிட்டளவில் மனிதத் தலையீடுகளின்றித் தன் இயல்பு நிலையில் சூழல் தொகுதிகளில் காணப்படும் பொருட்கள் ஆகும். இயற்கை வளங்கள் சுற்றுச்சூழலிலிருந்து தருவிக்கப்படுபவை. இவற்றில் பெரும்பான்மையானவை நம் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவையாகவும் தேவைகளுக்குப் பயன்படக்கூடியவைகளாகவும் அமைகின்றன.
உணவுச் சங்கிலி (food chain) என்பது, ஒரு குறிப்பிட்ட வாழ்சூழலில் உள்ள உயிரினங்களுக்கு இடையிலான உணவுத் தொடர்பினை விளக்கும் எளிய சங்கிலித் தொடர்பு. ஒரு வாழ்சூழல் முறைமையில் உள்ள ஒரு உணவு மட்டத்திலிருந்து மற்றொரு உணவு மட்டத்திற்கு உணவும், ஆற்றலும் கடத்திச் செல்லப்படுவதை உணவுச் சங்கிலி விளக்குகிறது. உண்மையில், உணவுச் சங்கிலி தொடர்புகள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றன.
சுற்றுச்சூழல்அல்லதுஉயிரியற்பியல் சூழல் என்பது ஒரு உயிரினத்தை அல்லது மக்கள் தொகையைச் சுற்றியுள்ள உயிர் உள்ள, மற்றும் உயிரற்ற கூறுகள் அனைத்தையும், அவற்றின் விளைவாக குறிப்பிட்ட உயிரினம் அல்லது மக்கள் தொகையின் பிழைப்புத்திறன், விருத்தி, படிவளர்ச்சி அல்லது கூர்ப்பு ஆகியவற்றில் தாக்கம் செய்யக்கூடிய அனைத்துக் காரணிகளையும் உள்ளடக்கிய இயற்கைச் சூழலைக் குறிக்கின்றது. உயிரியற்பியல் சூழலானது நுண்ணோக்கி நிலையிலிருந்து, உலகளாவிய நிலைவரை வேறுபட்ட அளவுகளில் ஆராயப்படலாம். அத்துடன் சூழலின் இயல்பைப் பொறுத்து பெருங்கடல் சூழல், வளிமண்டலச் சூழல், நிலச் சூழல் போன்ற பல வேறுபட்ட சூழல்களைக் காணலாம்.
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்
இந்தியாவில் 28 மாநிலங்களும், டெல்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 8 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, ஜம்மு காஷ்மீர், டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் இந்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும்.
கழுகுமலை (ஆங்கிலம்:Kalugumalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கழுகுமலையில் புகழ்பெற்ற கழுகுமலை வெட்டுவான் கோயில், கழுகுமலை முருகன் கோயில் மற்றும் கழுகுமலை சமணர் படுகைகள் அமைந்துள்ளது. கோவில்பட்டிக்கும், சங்கரன்கோவிலுக்கும் நடுவில் அமைந்த கழுகுமலை, சங்கரன்கோவிலில் இருந்து 21 கிமீ தொலைவிலும், கோவில்பட்டியிலிருந்து 22 கிமீ தொலைவிலும் உள்ளது.
பி. கக்கன் (P. Kakkan, சூன் 18, 1908– டிசம்பர் 23, 1981), விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதர பல பொறுப்புக்களை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்த, அரசியல்வாதி. கக்கன் தமையனார் விஸ்வநாதன் ஒரு வழக்கறிஞர்.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி.
வறட்சி அல்லது வரட்சி என்பது ஒரு வரண்ட காலகட்டத்தைக் குறிக்கும். நீண்ட காலத்திற்கு மழைவீழ்ச்சி (பொழிவு) கிடைக்கமையால் ஏற்படுகின்ற சூழல் நிலைமையை வரட்சி என்று எளிமையாக வரைவிலக்கணப்படுத்தலாம். ஆயினும் வரட்சி பற்றிய திட்டமான வரையறை காலத்துக்குக் காலம், நாட்டுக்கு நாடு, பிரதேசத்திற்குப் பிரதேசம் வெறுபடுகின்றது.
நிலம் (Land) என்பது நிரந்தரமாக நீரில் மூழ்கியிராத புவியின் திண்ம மேற்பரப்பு ஆகும். வரலாறு முழுவதும் பெரும்பாலான மனிதச் செயற்பாடுகள், வேளாண்மை, வாழிடம், பல்வேறு இயற்கை வளங்கள் ஆகியவை அடிப்படையான நிலத்திலேயே நடந்துள்ளன. நிலம், பெரிய நீர்ப் பரப்புககளைச் சந்திக்கும் பகுதிகள் கரையோரப் பகுதிகள் என அழைக்கப்படுகின்றன.
மரம் என்பதை அளவிற் பெரிய பல்லாண்டுத் தாவரம் என வரைவிலக்கணம் கூறலாம். இது நிலத்தில் (ஒரு விதையிலிருந்து) தோன்றி, இடம் விட்டு இடம் தானே நகராது, நிலைத்து வளரக்கூடிய ஒரு நிலைத்திணை வகை ஆகும். இதற்கான அளவு குறித்த வரையறை எதுவும் கூறப்படாவிடினும், பொதுவாக முதிர்ந்த நிலையில் 4.5 மீட்டர் (15 அடி) உயரமும், ஒரு தனி அடிமரத்தில் தாங்கப்பட்ட கிளைகளையும் கொண்டிருக்கும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு (environmental protection) என்பது சுற்றுச்சூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகை பெருக்கத்தினாலும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்றுச்சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
இலங்கை (ஒலிப்பு ) (Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, சிறீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
இந்தியாவில் பாலினப் பாகுபாடு (Gender inequality in India) என்பது இந்தியாவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நலவாழ்வு, கல்வி, பொருளியல், அரசியல் சார்ந்த சமனின்மையைக் குறிக்கிறது. இந்தக் காரணிகளின் அடிப்படையிலும் ஒட்டுமொத்த நிலைமையைப் பொறுத்தும் பல்வேறு பன்னாட்டுப் பாலினச் சுட்டிகள் இந்தியாவை பல்வேறு தரவரிசைகளில் பாகுபடுத்துகின்றன. மேலும் இந்தச் சுட்டிகள் ஏற்கப்படாமல் கருத்துமோதலில் உள்ளன.பாலினச் சமனின்மைகளும் அவை உருவாக்கும் சமூகக் காரணிகளும் இந்தியாவில் பாலின விகிதத்தை மாற்றுவதோடு மகளிரின் வாணாள் நலவாழ்வின் தரத்தையும் கல்வி வளர்ச்சியையும் பொருளியல் மேம்பாட்டையும் குறைக்கின்றன.
சுற்றுச்சூழல் மாசுபாடு (சூழல் மாசடைதல்) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும். சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
பன்னாட்டு யோகா நாள் (International Yoga Day) ஆண்டுதோறும் சூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார். சூன் 21 ஆம் நாளை அவர் இதற்காகப் பரிந்துரைத்திருந்தார். இரண்டு கதிர்த்திருப்பங்களில் ஒன்று நிகழும் இந்நாள், வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாளாகவும் உள்ளது.
பெண்ணியம் என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் எதிர்க்கும் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் தொகுப்பாகும். ஆண் பெண் சமத்துவத்தில் கவனம் செலுத்தும் கோட்பாடாகவும் இது வரையறுக்கப்படுவதுண்டு. பெண்ணியத்தை வரையறுப்பதென்பதே கூட சிக்கலானதாக இருப்பதுண்டு.
அரபு லீக் எனவும் அழைக்கப்படும் அரபு நாடுகள் கூட்டமைப்பு என்பது, தென்மேற்கு ஆசியா, வடக்கு ஆபிரிக்கா, வடமேற்கு ஆபிரிக்கா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அரபு நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். 1945 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி கெய்ரோவில் இது அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் எகிப்து, ஈராக், டிரான்ஸ்ஜோர்தான் (1946 க்குப் பின் ஜோர்தான் எனப் பெயர் மாற்றப்பட்டது), லெபனான், சவூதி அரேபியா, சிரியா ஆகிய நாடுகள் இக் கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்தன.
மாநில மறுசீரமப்புச்சட்டம் (1956) என்பது இந்திய அரசின் எல்லைகளை மறுசீரமைத்து அவற்றை ஆள்வதற்கென மொழிவாரியாக அமைப்பதற்கான சட்டமாகும். இந்த சட்டம் அரசியலமைப்பின் ஏழாவது சட்ட திருத்தம் (1956) வாயிலாக கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் ஒவ்வொரு மாநில எல்லைகளை வரையறுத்து ஒவ்வொரு மாநிலத்துக்கான எல்லைக் கோடுகளை வரைந்து அவற்றை இந்திய ஆளுமைக்குள் உட்புகுத்தி அதனை மூன்று வகையான அ, ஆ, இ மாநிலங்களாக பிரித்தெடுத்தது.
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 3 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக இவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.
பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி அல்லது பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி (Acquired immune deficiency syndrome) என்பது எச்.ஐ.வி எனப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் குறைப்பு செய்யும் திறன் கொண்ட தீ நுண்மத்தால் (வைரசால்) ஏற்படுகிற ஒரு நோயாகும்,. இந்த நோயானது மனிதர்களின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் செயற்படுதிறன் வலுவற்ற நிலையை படிப்படியாகத் தீவிரமடையச் செய்து, வாய்ப்பை எதிர் நோக்கியிருக்கும் தொற்றுநோய்களாலும், கட்டிகளாலும் மனிதர்களை இலகுவில் பாதிப்படையக் கூடியவர்களாகச் செய்கிறது. எச்.ஐ.வி தொற்றுக்குட்பட்ட இரத்தம், விந்து, யோனித் திரவம், முன்விந்துத் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களைக் கொண்ட உடலில் உள்ள சீதச்சவ்வு அல்லது இரத்த ஓட்டத்துடன் ஏற்படும் நேரடித் தொடர்பினால் இந்த வைரசானது ஒருவரிலிருந்து வேறொருவருக்குத் தொற்றுகின்றது.
மழைநீர் சேகரிப்பு என்பது மழை நீரை வீணாக்காமல் சேமித்து வைப்பது ஆகும். மழைநீரைச் சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும், நீர்ப்பாசனத்திற்கும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் பயன்படுத்தலாம். வீடுகள், நிறுவனங்களின் கட்டிடங்களின் மேற்கூரைகளில் இருந்தும் இதற்காகத் தயார் செய்யப்பட்ட தரைவழியாகவும் சேகரிக்கப்படும் மழைநீர் குடிநீருக்கான முக்கியமான ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.சில சூழ்நிலைகளில், மழைநீர் ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய, சிக்கனமான நீர் ஆதாரம்.
மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகளை "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக" கருதப்படுகின்றன.
பெண்களுக்கு எதிரான வன்முறை (Violence against women, சுருங்க VAW) என்பது பெண்களுக்கு எதிராக முதன்மையாக அல்லது தனிப்பட்ட முறையில் நிகழ்த்தப்படும் வன்முறைச் செயல்களை மொத்தமாகக் குறிப்பிடுகின்றது. சிலநேரங்களில் வெறுப்புக் குற்றமாகக் கருதப்படும் . பாதிக்கப்படுபவரின் பாலினத்தை முதன்மைக் காரணமாகக் கொண்டு, இத்தகைய வன்முறை குறிப்பிட்ட குழுவினரைக் குறி வைக்கிறது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
சுரதா (நவம்பர் 23, 1921 - சூன் 20, 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர்.
மத்தவிலாசம் (मत्तविलासप्रहसन, மத்தவிலாச பிரஹசனம்) கி.பி 7ம் நூற்றாண்டில் பல்லவ அரசர் முதலாம் மகேந்திரவர்மரால் இயற்றப்பட்ட ஒரு சமற்கிருத அங்கத நாடகம். இதனைத் தவிர பகவதஜ்ஜூகம் என்ற நாடகத்தையும் மகேந்திரவர்ம பல்லவர் இயற்றியுள்ளார். ஒரு பகுதி நாடகமான மத்தவிலாசம் சைவப் பிரிவுகளான கபாலிகம், பாசுபதம் ஆகியவற்றின் பழக்க வழக்கங்களையும் புத்த துறவிகளையும் பகடி செய்கிறது.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் பழங்குடியினர் (36) பட்டியல் சாதிகள் (76) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79)என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா: கு, சு, டு, து, பு, று) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துகள் (எ.கா: ற, கி, பெ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது. இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.
கண்ணதாசன் (ஒலிப்பு ) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
மனம் (mind) என்பது, சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மன உறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு (intellect) மற்றும் உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பைக் குறிக்கிறது. மனம் என்பது என்ன, அது எவ்வாறு இயங்குகிறது என்பது தொடர்பான கோட்பாடுகள் நிறையவே உள்ளன. பிளேட்டோ, அரிஸ்ட்டாட்டில், ஆதிசங்கரர், புத்தர் போன்ற பல கிரேக்க, இந்திய தத்துவஞானிகள் இதுபற்றிக் கூறியுள்ளனர்.
விளம்பரம் (advertising) என்பது தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பிராண்டுகளை அல்லது ஒரு குறிப்பிட்ட வகை தயாரிப்புகள் அல்லது சேவைகளை அதிக அளவில் வாங்க உண்டாக்கப்பட்ட தொடர்பு சாதனம். 19ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒட்டுமொத்த உற்பத்தி அதிகமானதை தொடர்ந்து நவீன விளம்பரங்கள் முன்னேற்றமடைந்தன.வடிவமைக்கப்பட்ட மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட "வடிவம்" மூலம் அந்தக்குறிப்பிட்ட சாதனங்கள் ,சேவைகளின் கொள்முதலை அதிகப்படுத்தும் வகையில் நிறைய விளம்பரங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த மாதிரியான நோக்கத்திற்காக சில விளம்பரங்கள், அவர்களுடைய விடாப்பிடியான செய்தியை சில சமயங்களில் உண்மையான தகவல்களுடன் சேர்த்துவிடுவதுண்டு.