The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
சடாயு (வடமொழி: जटायू, ஜடாயு) இந்து இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் இடம்பெறும் கழுகு வடிவிலான ஒரு பாத்திரம் ஆகும். இவன் கருடனின் தம்பியான அருணனின் மகன், சம்பாதியின் தம்பி. இராமனின் தந்தை தசரதனுக்கு நெருங்கிய நண்பனாக இருந்தவன்.இராமன் சீதையுடன் வனவாசத்தில் இருக்கும் போது சீதையைத் தனியே விட்டு விட்டு வேட்டைக்குப் போகும் போது சீதைக்குத் துணையாக இருந்தவன் சடாயு.
ஜெய் ஹிந்த் அல்லது ஜெய் இந்த் (Jai Hind) (இந்தி: जय हिन्द), இந்திய விடுதலை இயக்க காலத்தில், அடிமைப்பட்ட கால இந்திய மக்களின் மனதில் நாட்டுப் பற்றை விதைக்கவும், விடுதலை வேட்கையை வளர்க்கவும், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களால், பொது மேடைகளிலும், செய்தித் தொடர்புகளிலும், "ஜெய் ஹிந்த்" என்ற இந்தியாவின் வெற்றிக்கான வீர முழக்கச் சொல் பயன்படுத்தப்பட்டது, ஜெய் ஹிந்த் என்பதன் பொருள் வெல்க இந்தியா என்பதே. இந்தியா நீடுழி வாழ்க என்ற பொருளிலில் பயன்படுத்தப்படுகிறது.இந்தியாவுக்கு வெற்றி (Jai Hindustan Ki) என்பதன் சுருக்கமே ஜெய் ஹிந்த் எனும் சொல்லாகும். இந்த வெற்றி முழக்கச் சொல், செண்பகராமன் பிள்ளை என்பவரால் முதன் முதலில் முழக்கமிடப்பட்டது.இந்தியா விடுதலை அடைந்த நாளான ஆகஸ்டு 15, 1947இல், அனைத்து அஞ்சல்களில் ஜெய் ஹிந்த் என்ற வெற்றி முழக்கச் சொல் முத்திரையாகப் பதிக்கப்பட்டது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
சொத்து உரிமை என்பது ஒருவர் அல்லது ஒரு குழு நேர்மையான வழியில் உழைத்த சொத்துக்கான உரிமை ஆகும். சொத்தின் சொந்தக்காரர் அந்தச் சொத்தை நுகர, விற்க, வாடகைக்குவிட, பிறருக்கு கையளிக்க, அழிக்க உரிமை பெறுகிறார். ஆதனச் சொத்து (நிலம், வீடு), தனிநபர் சொத்துக்கள் (வாகனம், உடை போன்ற பொருட்கள்), அறிவுசார் சொத்து, பொதுச் சொத்து என்று பல்வேறு வகையான சொத்துக்கள் உள்ளன.
கண்ணதாசன் (ஒலிப்பு ) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்
இந்திய அரசியலமைப்பு பல சிறப்பு அம்சங்களைக் ( Special Features of Indian Constitution) கொண்டது. இந்திய அரசியலமைப்பு மற்ற அரசியலமைப்புகளிலிருந்து வேறுபட்ட மற்றும் தனித்தன்மை வாய்ந்தது. அரசியலமைப்பு என்பது அரசாட்சியின் மையமாக விளங்குகிறது.
தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
இடைச்சொல் என்பது தனித்து நின்று பொருள் தராது பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையில் நின்று பொருளை விளக்கும் சொல் இடைச்சொல் ஆகும். இவை நுணுக்கமான பொருள் வேறுபாடுகளை உணர்த்துவதற்கும், உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் மிகத்தெளிவாகவும் சுருக்கமான முறையிலும் வெளிப்படுத்தவும் பயன்படும். இடைச்சொற்களின் வகைகள் சில வருமாறு: 1.வேற்றுமை உருபுகள்- முதலாம் எட்டாம் வேற்றுமை தவிர்ந்த ஆறு வேற்றுமை உருபுகள்.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, நவம்பர் 26, 1954 – மே 17 அல்லது மே 18 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
செம்மொழி (Classical language) என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்1 (ஜோர்ஜ் எல்.ஹார்ட்). உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன.
தமிழ் இலக்கணத்தில் வழக்கு என்பது மக்களின் பேச்சு வழக்கிலும், இலக்கிய வழக்கிலும் சொற்கள் வழங்கப்படும் முறை அல்லது பயன்படுத்தப்படும் முறை ஆகும். நம் முன்னோர்கள் எந்தப் பொருளை எந்தச் சொல்லால் வழங்கி வந்தனரோ நாமும் அவ்வாறே வழங்கி வருவதைக் குறிக்கும். வழக்கு என்பது மரபு அல்லது பழக்கம் என்ற பொருளிலும் கையாளப்படுகிறது.
வரலாறு (History) (கிரேக்கம்: ἱστορία, historia பொருள்: "ஆய்வு மூலம் பெறப்பட்ட அறிவு") என்பது இறந்த காலத்தைப் பற்றி படிக்கின்ற ஒரு பாடப்பிரிவு என எழுதப்பட்ட ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது . எழுதப்பட்ட பதிவுகளுக்கு முன்பாக நிகழ்ந்தவை அமைத்தும் வரலாற்றுக்கு முந்தைய நிகழ்வுகள் எனக் கருதப்படுகின்றன. இத்தலைப்பின்கீழ் கடந்த கால நிகழ்வுகள், நினைவுகள், கண்டுபிடிப்புகள், சேகரிப்புகள், அமைப்புகள், அன்பளிப்புகள், நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் ஆகியவை அனைத்தும் இடம்பெறுகின்றன.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
வைணவ சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள் ஆவர். தென்மொழியாம் தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர். அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் ஆண்டாளையும், இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு.
உரிச்சொல் என்பது, ஒன்றுக்கு ஒன்று உரிமை உடையதாக விளங்கும் சொல். ஒரு சொல்லானது பல பொருள்களுக்கு உரிமை பூண்டு நிற்கும்போதும், பல சொற்கள் ஒரு பொருளுக்கு உரிமை பூண்டு நிற்கும்போதும் உரிச்சொல் நிலையினைப் பெறுகிறது. இது பெயர்ச்சொல்லாகவோ, வினைச்சொல்லாகவோ, பெயருக்கு அடைமொழியாகவோ, வினைக்கு அடைமொழியாகவோ, பெயருக்கும் வினைக்கும் பொதுவானதாகவோ இருக்கும்.
பயங்கரவாதம் (Terrorism) என்பது ஒரு மரபுசாராப் போர்முறையும், உளவியற் போர்முறையும் ஆகும். இச்சொல் அரசியலோடும் உணர்வுகளோடும் தொடர்புபட்டிருப்பதால் இதனைச் சரியாக வரையறுப்பது கடினமானது. 1988 ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்கப் படைத்துறை நடத்திய ஓர் ஆய்வின்படி பயங்கரவாதத்துக்கு நூற்றுக்கு மேற்பட்ட வரைவிலக்கணங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்திய நீதித்துறை 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரித்தானிய இந்தியாவில் நிறுவப்பட்ட ஆங்கில சட்ட அமைப்பின் தொடர்ச்சியாகும். சுங்கம், முன்னோடிகள் மற்றும் சட்டமன்ற சட்டம் செல்லுபடியாகும் என்று ஒரு பொதுவான கலப்பின சட்ட அமைப்பை அடிப்படையாக கொண்டது. நம்முடைய நாட்டின் உச்ச அதிகாரம் இந்திய அரசியலமைப்பிடம் தான் உள்ளது.
செண்பகராமன் என்று அழைக்கப்படும் செண்பகராமன் பிள்ளை (Chempakaraman Pillai, செப்டம்பர் 15, 1891 – மே 26, 1934) தமிழகத்தைச் சார்ந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி் ஆவார். இங்கிலாந்து, செர்மனி ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி போர் புரிந்தார். இட்லர், கெயிசர் ஆகியோருடன் நெருங்கிய உறவு கொண்டவர்.
கணக்கியல் மற்றும் வணிகத்தில் சொத்து எனப்படுவது ஒரு தனிநபரால் அல்லது சேர்ந்தியங்கும் ஒரு குழுவினால் வருமானத்தை ஈட்டிதரும் விதமாக வைத்திருக்கும் அனைத்து வளங்களும் சொத்து (Asset) எனப்படும்.சுருக்கமாக சொல்லின் காசும்,காசாக மாறக்கூடிய் வளங்களும் சொத்து எனலாம். பொருளியலில் செல்வத்தினை(wealth) கொண்டிருக்ககூடிய அனைத்து வடிவங்களும் சொத்து என வரைவிலக்கணப்படுத்தப்படும்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் இதழ்கள்
இந்தியாவில் நிலவிய காலனியாதிக்கச் சூழலில், பொதுமக்களின் கருத்தை உருவாக்கவும், எழுத்துரிமை, பேச்சுரிமை மூலம் அரசியல் விழிப்புணர்வு மெல்ல விரிந்து பரவவும் இதழியல் துறை பெரும்பங்கு ஆற்றியது. பிரித்தானியரால் கொண்டுவரப்பட்ட ஆங்கிலக் கல்வியால் பெற்ற இதழியல் அறிவு பிரித்தானியருக்கு எதிரான போரில் வலிமை வாய்ந்த கருவியாகப் பயன்பட்டது. தாய்மொழியில் தோன்றிய சுதேசமொழி இதழ்கள் மக்களுக்கு எழுச்சியூட்டின.
பொருளாதாரம் (economy) என்பது நாட்டின் அறியப்பட்ட பொருளாதார அமைப்பையோ அல்லது இதர நிலப்பகுதியையோ கொண்டுள்ளது. அப்பகுதியின் சமூக ரீதியாக உற்பத்தியில், பரிமாற்றத்தில், விநியோகத்தில் மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வில் பங்கேற்கும் பொருளாதாரக் காரணிகளையும் கொண்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட பொருளாதாரம் என்பது அதன் தொழில் நுட்ப பரிணாமம், வரலாறு மற்றும் சமூக நிறுவனம் ஆகியன அடங்கியுள்ள ஒரு வழிமுறையின் இறுதி விளைவுகளையும்; அதேபோல அதன் புவியியல், இயற்கை வளக் கொடை மற்றும் சூழல் ஆகியவற்றை முக்கியக் காரணிகளாக உள்ளடக்கியுள்ளது.
நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் போன்றவைகளுக்குச் செய்திகளைச் சேகரித்துத் தொகுத்துத் தரும் பணிகளைச் செய்பவர்கள் செய்தியாளர், நிருபர் அல்லது பத்திரிக்கையாளர் (journalist) எனப்படுகிறார்கள். செய்தி நிறுவனங்கள் இத்தகைய நிருபர்களை பல்வேறு இடங்களில் பணி நிமித்தம் செய்து உடனடியாக செய்திகளை சேகரித்து தங்களது ஊடகங்களின் (media) மூலம் மக்களுக்கு கொண்டு செல்வார்கள். இவர்கள் நேர்காணல், கவனித்தல், ஆய்வுசெய்தல் மூலம் செய்திகளைச் சேகரிப்பார்கள்.
இந்திய அரசுச் சட்டம், 1935 (Government of India Act 1935) என்பது பிரித்தானிய இந்தியாவில் அரசியல் சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்காக ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம். இதன் மூலம் இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு இந்தியர்களுக்கு மேலதிக தன்னாட்சி உரிமைகள் வழங்கப்பட்டன. இந்திய அரசுச் சட்டம், 1919 இன் படி பிரித்தானிய இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை ஏற்படுத்தப்பட்டது.
குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா: கு, சு, டு, து, பு, று) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துகள் (எ.கா: ற, கி, பெ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது. இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.
நாளிதழ் என்பது ஒவ்வொரு நாளும் அச்சிட்டு வெளியிடப்படும் செய்தி இதழ் ஆகும். தற்காலத்தில் செய்தியல்லாத பிறவற்றையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு நாளிதழ்கள் வெளியிடப்படுகின்றன ஆயினும், மிகப் பெரும்பாலான நாளிதழ்கள் செய்தி இதழ்களாகவே உள்ளன. எனவே இதை செய்தித்தாள்கள் (News Papers) என்றும், நாள்தோறும் வெளியிடப்படுவதால் தினசரிகள் (Dailies) என்றும் அழைப்பதுண்டு.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
அப்பர் திருநாவுக்கரசு நாயனார் கி.பி. ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரை, தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.இவரை, திருஞானசம்பந்தர், 'அப்பர்' (தந்தை) என்று அழைத்தமையால்,.
இந்தியாவில் அடிப்படை உரிமைகள் கோட்பாடுகள் மற்றும் அடிப்படைக் கடமைகள்
இந்தியாவில் அடிப்படை உரிமைகள் கோட்பாடுகள் மற்றும் அடிப்படைக் கடமைகள் போன்றவை இந்திய அரசியலமைப்பின் சில பிரிவுகள் ஆகும். இந்த பிரிவுகள் அரசாங்க கொள்கைகளை உருவாக்கவும், அரசாங்க கொள்கைக்கான மசோதாக்களின் உரிமைகள் மற்றும் குடிமக்களின் நடத்தைக்கும் ஒரு அரசியலமைப்பு சட்டமூலத்தை கொண்டுள்ளது. இந்த பிரிவுகள் அரசியலமைப்பின் முக்கிய கூறுகளாகக் கருதப்படுகின்றன, 1947 முதல் 1949 வரை இந்திய அரசியலமைப்பு சட்டமூலத்தை அடிப்படயாக கொண்டு உருவாக்கப்பட்டது.
கல்வி (Education) என்பதுக் குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
நாட்டுப்புறவியல் (folklore) என்பது நாட்டுப்புற மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு, நம்பிக்கைகள், இலக்கியங்கள், கதைகள், பழமொழிகள், வாய்மொழி வரலாறு, விடுகதைகள், வாய்மொழி பாடல்கள், கலைகள் போன்றவற்றை சேகரித்து, வகைப்படுத்தி, தொகுத்து, ஆராய்ந்து அவற்றை ஆவணப்படுத்தும் துறையாகும். இத்தகைய வழக்குகள் பற்றி நாட்டுப்புறவியல் அறிவியல் முறைப்படி ஆய்வு செய்கின்றது. 1846 ஆம் ஆண்டிலேயே நாட்டுப்புறவியல் பற்றித் தற்காலக் கருத்தமைவில் முறையான ஆய்வுகள் தொடங்கின.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது.
திராவிட மொழிக் குடும்பம் (Dravidian language family) என்பது மரபு வழியாக இணைந்து கிட்டத்தட்ட 85 மொழிகளை உள்ளடக்கியதாகும். கிட்டத்தட்ட 217 மில்லியன் மக்கள் இம்மொழிகளைப் பேசுகின்றனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த முக்கிய மொழிகளான, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பன ஒன்றுடனொன்று நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும், ஏனைய இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதும் அறியப்பட்டுள்ளது.
புள்ளியியல் அல்லது புள்ளிவிபரவியல் என்பது, தரவுகளைச் சேகரிப்பு, ஒழுங்கமைப்பு, பகுப்பாய்வு, விளக்கம் என்பன குறித்த பாடத்துறை ஆகும். கள ஆய்வுகள், சோதனைகள் என்பவற்றின் வடிவமைப்புத் தொடர்பிலான தரவுச் சேகரிப்புத் திட்டமிடல் உட்பட மேற்குறித்தவற்றில் எல்லா சிறப்புகளையும் இத்துறை கையாள்கிறது. புள்ளியியலில் உரிய பயிற்சி பெற்று அத்துறைசார் பணிகளில் ஈடுபடுபவர் புள்ளியியலாளர் எனப்படுவார்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
இந்திய விடுதலை இயக்கம் என்பது இந்தியாவில் இரண்டு நூற்றாண்டுகளாக நீடித்த ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியையும் அதனைத் தொடர்ந்து வந்த ஆங்கில அரசின் ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும் நிகழ்ந்த கலகங்கள், அகிம்சை வழிப் போராட்டங்கள் முதலிய பல்வேறு நிகழ்வுகளை குறிக்கும் ஒரு பரந்துபட்ட வரலாறு ஆகும். இவ்வியக்கம் பிரிக்கப்படாத இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் இருந்து ஆங்கில அரசை விலக்குவது மற்றும் அங்கெல்லாம் சுதந்திர அரசை ஏற்படுத்தி சுய ஆட்சியை நிர்மாணிப்பது முதலிய பல்வேறு நோக்கங்களுக்காக எடுத்து செல்லப்பட்ட இயக்கம் ஆகும். இந்த இயக்கங்களின் ஆரம்பகட்ட எதிர்ப்புகள் 16 ஆம் நூற்றாண்டில் கர்நாடகாவில் போர்த்துக்கீசிய காலனிய விரிவாக்கத்தின் துவக்கத்திலும், 1700-களின் மத்திய காலம் மற்றும் இறுதிக் காலங்களில் வங்காளத்தில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியாலும் செய்யப்பட்ட காலத்திலேயே காணப்படுகின்றன.
உழவு அல்லது வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனையப் பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான்.
தேவநேயப் பாவாணர் (Devaneya Pavanar, 7 பிப்பிரவரி, 1902 - சனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார்.
இலக்கியம் (ஒலிப்பு ) என்பது விரிந்த பொருளில் எழுதிய அனைத்தையும் குறிக்கும். இந்த வரையறையின் கீழ் இலக்கியத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம்: இன்பியல் இலக்கியம் அறிவியல் இலக்கியம்'இன்பியல்' இலக்கியம் "கற்போர் உள்ளத்துக்கு இன்பம் தரும் நூல்கள்". அறிவியல் இலக்கியம் கற்போருக்கு அறிவை முதன்மையாகத் தரும் இலக்கியம்.
கவிதை (Poiesis) என்பது அழகியல் உணர்ச்சியுடைய, ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை பண்புச் சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கியக் கலை வடிவம் ஆகும். மேலும், மொழியில் உள்ள ஒலியன் அழகியல், ஒலிக் குறியீடுகள், மற்றும் சந்தம் (Metre) ஆகியவற்றுடன் இடம், இயல்பான பொருள் ஆகியவற்றை வெளிப்படையாகக் காட்டுவதாகக் கவிதை உள்ளது. உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.