The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
மூளையின் வெண்ட்ரிகிள்கள், உப சிலந்தி வலையுருப் பிரதேசம் மற்றும் தண்டுவட மையக் குழியினுள்ளும் நிரம்பியுள்ள நிறமற்ற, தெளிவான திரவம் மூளைத் தண்டுவடத் திரவம் (Cerebro-spinal fluid) அல்லது மூளைய முண்ணாண் பாய்பொருள் ஆகும். மூளையின் வெண்ட்ரிகிள்களில் (மூளைய அறைகள்) உள்ள தோலுருப் பின்னல் (choroid plexus) சுரப்புக் கலங்களான எப்பண்டைமல் கலங்களால் மூளைத் தண்டுவடத் திரவத்தைச் சுரக்கப்படுகின்றது. சராசரியாக,ஒரு மனிதனில் உள்ள இத்திரவத்தின் அளவு 150 மில்லி லிட்டர்.
கல்வி (Education) என்பதுக் குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
உணவுக் கலப்படம் (Adulterated food) என்பது ஒரு பொருளில் அதே போன்று பொருளை எளிதில் பிரித்தறிய முடியாதவாறு கலப்பது ஆகும். கலப்படம் பொருள்களின் தரத்தைக் குறைப்பது உடன் நுகர்வோருக்கு உடல்நலப் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. கலப்படத்தால் எற்படும் தீமைகள் 1) உணவுப் பொருட்களுடன் கலக்கப்படும் கல், மண் முதலியன குடல் பகுதியை அடைத்து வலி மற்றும் உடல் உபாதைகளை எற்படுத்துகிறது.
ஐக்கூ, கைக்கூ அல்லது ஹைக்கூ (Haiku) மூன்று வரிகளில் முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் என 17 அசைகளைக் கொண்டு அமைக்கப்பெறும் இயைபற்ற ஜப்பானியக் கவிதை வடிவம் ஆகும். ஐக்கூ மிகக்குறைந்த சொற்களைக்கொண்டு நேரடியாகவும் மறைமுகமாவும் அதிக கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. 17ம் நூற்றாண்டில் பாசோ இதனை மேலும் மெருகூட்டப்பட்ட கலையாக உயர்த்தியபோது இவ்வடிவம் தனித்தன்மையடைந்தது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
அப்பர் திருநாவுக்கரசு நாயனார் கி.பி. ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரை, தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.இவரை, திருஞானசம்பந்தர், 'அப்பர்' (தந்தை) என்று அழைத்தமையால் அப்பர் என்றும், நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார்.
வைணவ சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள் ஆவர். தென்மொழியாம் தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர். அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் ஆண்டாளையும், இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு.
ரவி சங்கர் பிரசாத் (Ravi Shankar Prasad, ஆகத்து 30, 1954) பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும் வழக்கறிஞரும் ஆவார். இவர் 2014 நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையிலும் மற்றும் 2019 இரண்டாம் அமைச்சரவையிலும் சட்டம் & நீதித் துறை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகங்களின் அமைச்சராக இருந்தார். மாநிலங்களவை உறுப்பினரான இரவி சங்கர் பிரசாத் மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்துள்ளார்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
திருத்தொண்டர் புராண சாரம் என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டு நூல். அதன் ஆசிரியர் உமாபதி சிவாசாரியார். சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணத்தில் உள்ள 63 நாயன்மார்களுக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடல் என்ற முறையில் 63 பாடல்களும், அப்பருக்கும், சம்பந்தருக்கும் கூடுதலாக இரண்டு பாடல்களும், மற்றும் பாயிரப் பாடல்களும் சேர்த்து மொத்தம் 83 பாடல்களைக் கொண்டது இந்த நூல்.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
உரிச்சொல் என்பது, ஒன்றுக்கு ஒன்று உரிமை உடையதாக விளங்கும் சொல். ஒரு சொல்லானது பல பொருள்களுக்கு உரிமை பூண்டு நிற்கும்போதும், பல சொற்கள் ஒரு பொருளுக்கு உரிமை பூண்டு நிற்கும்போதும் உரிச்சொல் நிலையினைப் பெறுகிறது. இது பெயர்ச்சொல்லாகவோ, வினைச்சொல்லாகவோ, பெயருக்கு அடைமொழியாகவோ, வினைக்கு அடைமொழியாகவோ, பெயருக்கும் வினைக்கும் பொதுவானதாகவோ இருக்கும்.
காந்தளூர் சாலைப் போர்கள் (சோழரும் சேரரும்)
காந்தளூர் சாலைப் போர் சோழப் பேரரசர்களுக்கும் பிற்கால சேரர்களின் அரசின் படைகளுக்கும் இடையே தற்போதைய கேரளா அரசின் விழிஞம் எனுமிடத்திற்கு அருகிலுள்ள துறைமுகப் பட்டணமான காந்தளூர் சாலையில் (தற்போது வலியசாலா) கிட்டத்தட்ட கி.பி. 10ம் நூற்றாண்டு இறுதியிலும், பதினொன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இடம்பெற்றன. முதலாம் போரில் முதலாம் இராசராசனும், இரண்டாம் போரில் முதலாம் இராசேந்திரன் சோழ வேந்தர்களாய் போருக்கு தலைமை தாங்கி சேர வேந்தர்களை வென்றனர்.
சட்டம் மற்றும் பொருளியலில்‚ காப்பீடு அல்லது காப்புறுதி (insurance) என்பது சார்ந்திருப்போர் இழப்பின் பாதிப்பு இடர்பாட்டினைக் கடப்பதற்கு முதன்மையாகப் பயன்படுத்தப்படும் இடர் மேலாண்மை வடிவமாகும். பெரிய அளவிலான அதிர்ச்சியளிக்கும் இழப்பிற்கான வாய்ப்பை தவிர்க்கும் வகையில் ஒரு சிறிய உத்தரவாதம் மிக்க இழப்பாக ப்ரீமியத்தைப் பெற்று‚ ஒரு தரப்பிலிருந்து மற்றொரு தரப்பிற்கு இழப்பு இடர்பாட்டிற்கு சமமான மாற்றினை வழங்குவதே காப்பீடு ஆகும். காபீட்டை விற்கும் நிறுவனம் காப்பீடு வழங்குவோர் என்றும்; காப்பீடுதாரர் அல்லது பாலிசிதாரர் என்று காப்பீட்டை பெற்ற நபரோ அல்லது தரப்போ அழைக்கப்படும்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறை (Violence against women, சுருங்க VAW) என்பது பெண்களுக்கு எதிராக முதன்மையாக அல்லது தனிப்பட்ட முறையில் நிகழ்த்தப்படும் வன்முறைச் செயல்களை மொத்தமாகக் குறிப்பிடுகின்றது. சிலநேரங்களில் வெறுப்புக் குற்றமாகக் கருதப்படும் . பாதிக்கப்படுபவரின் பாலினத்தை முதன்மைக் காரணமாகக் கொண்டு, இத்தகைய வன்முறை குறிப்பிட்ட குழுவினரைக் குறி வைக்கிறது.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகளை "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக" கருதப்படுகின்றன.
உணர்வுசார் நுண்ணறிவு என்பது இமோஷனல் இண்டெலிஜன்ஸ் - ஈஐ ) ஒருவர் தமது உணர்ச்சிகளையோ, அல்லது மற்றவர்கள் அல்லது குழுக்களின் உணர்ச்சிகளையோ அடையாளம் கண்டு, மதிப்பிடு செய்து அதைத் திறம்பட மேலாண்மை செய்யும் ஆற்றல், திறமை, திறன், அல்லது ஒரு ஈஐ பண்புத்திற உருப்படிவத்தில், ஆற்றல் பற்றிய சுய மதிப்பீடு ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. ஈஐ என்பதை விளக்குவதற்கு பல எடுத்துக்காட்டுகள் முன்வைக்கப் பட்டுள்ளன. ஆயினும், இச்சொல்லை எப்படி உபயோகிப்பது என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்
தமிழக ஆளுநர் -தமிழக ஆளுநர்களின் பட்டியல் தென்னிந்தியாவின் மாநிலமான, தமிழ்நாடு மாநிலத்தில், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்ற ஆளுநர் தமிழகத்தின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர். தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுநர்கள் 1946ல் இருந்தே நியமனம் செய்யப்பட்டவர்களாகவும், தற்காலிகப் பொறுப்புகளுடனும் பதவி வகித்து வந்துள்ளனர்.
குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா: கு, சு, டு, து, பு, று) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துகள் (எ.கா: ற, கி, பெ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது. இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்
இந்தியாவில் 28 மாநிலங்களும், டெல்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 8 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, ஜம்மு காஷ்மீர், டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் இந்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு (environmental protection) என்பது சுற்றுச்சூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகை பெருக்கத்தினாலும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்றுச்சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
இதிகாசம் எனப்படுவது கடவுள், கடவுள் அவதாரம் அல்லது பெரும் வீரர்கள் நிகழ்த்திய அரும்பெரும் வீரச் செயல்களையும், நீதிநெறிகளையும் விவரிக்கும் புராண வரலாறாகும்(Pre-historic Period). இதி-ஹ-ஆஸ என்பதற்கு இப்படி உண்மையில் இருந்தது என்று அர்த்தமாகும். இந்தியாவைப் பொறுத்தளவில் இராமாயணமும், மகாபாரதமும் இதிகாசங்கள் என்றழைக்கப்படுகின்றன.
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார்.
இடைச்சொல் என்பது தனித்து நின்று பொருள் தராது பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையில் நின்று பொருளை விளக்கும் சொல் இடைச்சொல் ஆகும். இவை நுணுக்கமான பொருள் வேறுபாடுகளை உணர்த்துவதற்கும், உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் மிகத்தெளிவாகவும் சுருக்கமான முறையிலும் வெளிப்படுத்தவும் பயன்படும். இடைச்சொற்களின் வகைகள் சில வருமாறு: 1.வேற்றுமை உருபுகள்- முதலாம் எட்டாம் வேற்றுமை தவிர்ந்த ஆறு வேற்றுமை உருபுகள்.
திராவிட மொழிக் குடும்பம் (Dravidian language family) என்பது மரபு வழியாக இணைந்து கிட்டத்தட்ட 85 மொழிகளை உள்ளடக்கியதாகும். கிட்டத்தட்ட 217 மில்லியன் மக்கள் இம்மொழிகளைப் பேசுகின்றனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த முக்கிய மொழிகளான, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பன ஒன்றுடனொன்று நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும், ஏனைய இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதும் அறியப்பட்டுள்ளது.
பண்டைய தமிழகம் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, நடு நாடு என பல பிரிவுகளாக இருந்தன. கொங்கு நாடு என்பதே பண்டைய சேரனாடாதலால் தனக்கென்று எப்பொழுதும் தனியான எல்லைகள், வரலாறு, கலை, பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கம், ஆகியவைகளைக் கொண்டது. இதனைப் பழங்கால இலக்கியங்களும், கல்வெட்டுக்களும் உறுதிப்படுத்துகின்றன.
சுற்றுச்சூழல் மாசுபாடு (சூழல் மாசடைதல்) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும். சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது.
உலக மனித உரிமைகள் சாற்றுரை (Universal Declaration of Human Rights) என்பது, 1948 ஆம் ஆண்டில் பாரிசில் உள்ள சைலட் மாளிகையில் வைத்து, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சாற்றுரை ஆகும். கின்னஸ் பதிவுகள் நூல், இதனை மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட ஆவணம் எனக் குறிப்பிடுகிறது. இச் சாற்றுரை இரண்டாம் உலகப் போரில் இருந்து பெற்ற பட்டறிவுகளிலிருந்து உருவானது.
உலக மக்கள் தொகை நாள் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
டாய்த்திரிய ஆரன்யகா புனித நூலில் இருந்த அதிகாரத்தில் இருந்து பார்க்க சூரிய நமஸ்காரம் அத்தியாயம்.சூரிய நமஸ்காரம் (IAST: சூரிய நமஸ்காரா) அல்லது சூரிய வணக்கமுறை (இலக்கியத்தில் "சூரியனுக்கு வணக்கம்") என்பது ஹட யோக ஆசனங்களின் பொதுவான வரிசைமுறையாகும். இது இந்து சூரியக் கடவுளின் வழிபாட்டில் இருந்து திரிந்து பிறந்ததாகும். இந்த இயக்கங்களின் வரிசைமுறை மற்றும் நிலைகளானது விழிப்புணர்வின் மாறுபட்ட நிலைகளில் பயிற்சியளிக்கப்படுகிறது.