The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
தயிர்சாதம் அல்லது தயிர் சோறு (Curd rice, கன்னடம்: ಮೊಸರು-ಅನ್ನ (மசரு அண்ணா), தெலுங்கு: పెరుగు అన్నం (பெருகு அண்ணம்), Malayalam: Thayiru) என்பது ஒரு இந்திய உணவு ஆகும். இது தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிகவும் பிரபலமாக உள்ளது. தனியான உணவாகவும், அல்லது மதிய உணவின் போது சாம்பார் சாதம், ரசம் சாதம் தயிர் சாதம், என்ற வரிசையிலும் வகை வகையாக உண்ணலாம்.
திராவிடர் என்னும் சொல், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியொன்றைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்கும். தற்காலத்தில் திராவிடர்கள் செறிந்து வாழும் பகுதி, தென்னிந்தியாவில் விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள பகுதியாகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும் திராவிடர்களின் தாயகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.
இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
மேலும் தகவல்களுக்கு: இராவணன் (பக்கவழி நெறிப்படுத்தல்)இராவணன் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணம் எனும் காவியம் கூறும் இலங்கையை ஆண்ட அசுர குல மன்னர் ஆவார். இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. பத்து முகங்களை உடையமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார்.பத்து பிரஜாபதிகளில் ஒருவரான புலஸ்திய முனிவரின் மகனான விஸ்ரவ முனிவருக்கும், அரக்கர் குல தலைவர் சுமாலியின் மகள் கைகேசிக்கும் பிறந்தவர்களே இராவணன், கும்பகர்ணன், வீடணன் மற்றும் சூர்ப்பனகை ஆவார்.
பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலர் கோயில்
பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலர் கோயில் (Vithoba Temple), அதிகாரப்பூர்வமாக சிறீ விட்டலர்-ருக்மணி கோயில் (Shri Vitthal-Rukmini Mandir) (மராத்தி: श्री विठ्ठल-रूक्मिणी मंदिर என்பர். இது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டரிபுரம் நகரத்தில் பாயும் சந்திரபாகா ஆற்றின் கரையில் உள்ளது. இது கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயில் ஆகும்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
சடாயு (வடமொழி: जटायू, ஜடாயு) இந்து இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் இடம்பெறும் கழுகு வடிவிலான ஒரு பாத்திரம் ஆகும். இவன் கருடனின் தம்பியான அருணனின் மகன், சம்பாதியின் தம்பி. இராமனின் தந்தை தசரதனுக்கு நெருங்கிய நண்பனாக இருந்தவன்.இராமன் சீதையுடன் வனவாசத்தில் இருக்கும் போது சீதையைத் தனியே விட்டு விட்டு வேட்டைக்குப் போகும் போது சீதைக்குத் துணையாக இருந்தவன் சடாயு.
குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா: கு, சு, டு, து, பு, று) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துகள் (எ.கா: ற, கி, பெ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது. இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
விளம்பரம் (advertising) என்பது தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பிராண்டுகளை அல்லது ஒரு குறிப்பிட்ட வகை தயாரிப்புகள் அல்லது சேவைகளை அதிக அளவில் வாங்க உண்டாக்கப்பட்ட தொடர்பு சாதனம். 19ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒட்டுமொத்த உற்பத்தி அதிகமானதை தொடர்ந்து நவீன விளம்பரங்கள் முன்னேற்றமடைந்தன.வடிவமைக்கப்பட்ட மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட "வடிவம்" மூலம் அந்தக்குறிப்பிட்ட சாதனங்கள் ,சேவைகளின் கொள்முதலை அதிகப்படுத்தும் வகையில் நிறைய விளம்பரங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த மாதிரியான நோக்கத்திற்காக சில விளம்பரங்கள், அவர்களுடைய விடாப்பிடியான செய்தியை சில சமயங்களில் உண்மையான தகவல்களுடன் சேர்த்துவிடுவதுண்டு.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
சுவர்ணலதா (Swarnalatha, ஏப்ரல் 29, 1973 - செப்டம்பர் 12, 2010) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். 1987 ஆம் ஆண்டில் இருந்து பல இசையமைப்பாளர்களின் இசைக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். "இசைப் பொக்கிஷம்" என்கிற "குரலரசி" சுவர்ணலதா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, மலையாளம், பெங்காலி, ஒரியா, படுகா உள்ளிட்ட பல மொழிகளில் ஏழாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.
வைணவ சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள் ஆவர். தென்மொழியாம் தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர். அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் ஆண்டாளையும், இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு.
சோகாமேளர் (Chokhamela) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டரிபுரம் பான்டுரங்க விட்டலர் கோயிலில் குடிகொண்டுள்ள விட்டலரின் அன்புக்குரிய பக்தர் ஆவார். சோகாமேளர் கிபி 14-ஆம் நூற்றாண்டில், தற்போதைய மகாராட்டிரா மாநிலத்தின் புல்டாணா மாவட்டம், தியோல்காவ்ன் இராஜா தாலுகாவில் உள்ள மெகுனா இராஜா எனும் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மகர் சமூகத்தில் பிறந்தவர் ஆவார். நாமதேவரைப் பின்பற்றி சோகாமேளர் தனது மனைவி சோயாராபாய் மற்றும் மகன் கர்மமேளாவுடன் விட்டலர் கோயில் கொண்டுள்ள பண்டரிபுரத்தில் வைணவ வர்க்காரி நெறிகளுடன் வாழ்ந்தவர்.சோகாமேளர் விட்டலரைத் துதித்து அதிக பதிகங்களைப் பாடியுள்ளார்.
அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் சோழ பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே.
ஜனாபாய் (Janābāi) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டரிபுரம் எனும் ஊரில் ருக்மணியுடன் கோயில் கொண்டுள்ள விட்டலரின் பரம பக்தையும், நாமதேவரின் சீடரும் ஆவார். ஜனாபாய் கிபி 13-ஆம் நூற்றான்டில் பிறந்து, 1350-இல் சமாதி அடைந்தார். பாண்டுரங்க விட்டலரின் பரம பக்தையான ஜனாபாய், விட்டலர் மீது இயற்றி பாடியுள்ள பக்திப் பாடல்களை அபங்கம் என்பர்.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
சக்குபாய் (Sakkubai), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டரிபுரத்தில் கோயில் கொண்டுள்ள பகவான் பாண்டுரங்க விட்டலரின் பரம பக்தை ஆவார். பண்டரிபுரம் அருகே சிஞ்சுருணிபுரம் எனும் கிராமத்தில், கங்காதர ராவ் - கமலாபாய் தம்பதியருக்கு சக்குபாய் பிறந்தார். சிறுவயது முதலே கிருஷ்ணராகிய பாண்டுரங்க விட்டலரின் மீது அதிக பக்தி கொண்டிருந்தார்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லேபட்சி (Lepakshi) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஹிந்துப்பூருக்கு கிழக்கே 15 கிலோமீட்டர் தொலைவிலும் பெங்களூருக்கு வடக்கே சுமார் 120 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. விசயநகர அரசர்கள் கி.பி.1400-1600 ஆண்டுகளில் ஹம்பியில் அரசாண்ட கொண்டிருந்தபோது இது ஒரு புண்ணியத்தலமாக இருந்தது.
விஜயநகரக் கட்டிடக்கலை என்பது, கிபி 1336–1565 காலப்பகுதியில், தென்னிந்தியாவின் பெரும்பகுதியில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நிலவிய காலத்தில் வழங்கிய கட்டிடக்கலைப் பாணியைக் குறிக்கும். இன்றைய இந்திய மாநிலமான கர்நாடகத்தில் உள்ள துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்திருந்த விஜயநகரம் இப்பேரரசின் தலைநகரமாக இருந்தது. இதனால் இக் காலத்தில் கட்டப்பட்ட ஏராளமான கோயில்கள், மாளிகைகள் மற்றும் பல கட்டிடங்கள் இப் பகுதியிலேயே செறிந்து காணப்படுகின்றன.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
சுற்றுச்சூழல்அல்லதுஉயிரியற்பியல் சூழல் என்பது ஒரு உயிரினத்தை அல்லது மக்கள் தொகையைச் சுற்றியுள்ள உயிர் உள்ள, மற்றும் உயிரற்ற கூறுகள் அனைத்தையும், அவற்றின் விளைவாக குறிப்பிட்ட உயிரினம் அல்லது மக்கள் தொகையின் பிழைப்புத்திறன், விருத்தி, படிவளர்ச்சி அல்லது கூர்ப்பு ஆகியவற்றில் தாக்கம் செய்யக்கூடிய அனைத்துக் காரணிகளையும் உள்ளடக்கிய இயற்கைச் சூழலைக் குறிக்கின்றது. உயிரியற்பியல் சூழலானது நுண்ணோக்கி நிலையிலிருந்து, உலகளாவிய நிலைவரை வேறுபட்ட அளவுகளில் ஆராயப்படலாம். அத்துடன் சூழலின் இயல்பைப் பொறுத்து பெருங்கடல் சூழல், வளிமண்டலச் சூழல், நிலச் சூழல் போன்ற பல வேறுபட்ட சூழல்களைக் காணலாம்.
கும்பகோணப் பள்ளிக்கூடத் தீ விபத்து
கும்பகோணம் பள்ளிக்கூடத் தீ விபத்து என்பது 2004, சூலை 16 ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தைப் பற்றியது. இவ்விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். இறந்த குழந்தைகள் அனைவரும் 7 வயதிலிருந்து 11 வயதுக்குட்பட்டவர்களாவர்.
தமிழி அல்லது தமிழ்ப் பிராமி என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப் பயன்பட்ட ஒலிப்பியல் எழுத்து முறைமை. இது தெற்கு ஆசியாவில் பயன்பாட்டில் இருந்த பிராமி எழுத்துமுறைகளான அசோகப் பிராமி, தென் பிராமி மற்றும் பட்டிபிரோலு எழுத்துமுறைகளிலிருந்து வேறுபட்டது. தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் குகைப் படுக்கைகள், மட்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரை அச்சுக்கள், மோதிரங்கள் ஆகியவற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன.
பார்வைக் குறைபாடு (Visual impairment) என்பது கண்களில் மூக்குக்கண்ணாடி அணிவது போன்ற வழக்கமான எளிய வழிகளில் சரிசெய்ய முடியாத சிக்கல்களைக் கொண்டிருக்கும் கண்களின் காட்சிக் குறைபாட்டைக் குறிக்கும். இதை பார்வை இழப்பு என்ற பெயராலும் அழைப்பர் . மூக்குக்கண்ணாடிகள் மற்றும் விழியொட்டு வில்லைகள் முதலானவற்றைப் பயன்படுத்தும் வசதியில்லாததால் பார்வையை இழக்கும் நிலைமையும் பார்வைக் குறைபாடு என்றே கருதுவார்கள்.
கல்வி (Education) என்பதுக் குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
திராவிட மொழிக் குடும்பம் (Dravidian language family) என்பது மரபு வழியாக இணைந்து கிட்டத்தட்ட 85 மொழிகளை உள்ளடக்கியதாகும். கிட்டத்தட்ட 217 மில்லியன் மக்கள் இம்மொழிகளைப் பேசுகின்றனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த முக்கிய மொழிகளான, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பன ஒன்றுடனொன்று நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும், ஏனைய இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதும் அறியப்பட்டுள்ளது.
குமரிக்கண்டம் (kumari Kandam) என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இந்தியாவின் தெற்கே இருந்ததாகவும் பின்னா் இழந்தாகவும் கருதப்படும் ஒரு புனைவுக் கண்டத்தைக் குறிக்கிறது . இது பண்டைய தமிழர் நாகரிகத்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமான நிலப்பகுதியாகவும் கருதப்படுகிறது. குமரிக்கண்டம், குமரி நாடு என்ற வேறு பெயர்களாலும் இப்பகுதி அழைக்கப்பட்டது.
இலங்கை (ஒலிப்பு ) (Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, சிறீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
சுற்றுச்சூழல் மாசுபாடு (சூழல் மாசடைதல்) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும். சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது.
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்
இந்தியாவில் 28 மாநிலங்களும், டெல்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 8 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, ஜம்மு காஷ்மீர், டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் இந்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும்.
பிரெஞ்சு இந்தியா (French India) என்றப் பொதுப்படையானப் பெயர் இந்தியாவில் முன்பு பிரான்சு நாட்டுக்கு உரிமையானவையாக இருந்தவற்றைக் (பிரெஞ்சு: établissements français de l'Inde) குறிப்பதாகும். இவை கோரமண்டல் கரையில் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம், மலபார் கடற்கரையில் மாஹே, மற்றும் வங்காளத்தில் சந்தன்நகர் ஆகும். இவற்றைத் தவிர மச்சிலிப்பட்டணம், கோழிக்கோடு, சூரத் ஆகிய இடங்களில் பழைய தொழிற்சாலைகளின் எச்சமாக சில விடுதிகளும் (lodges) உண்டு.
தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரெண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
உணவுச் சங்கிலி (food chain) என்பது, ஒரு குறிப்பிட்ட சூழலில் வாழ்கின்ற உயிரினங்களுக்கு இடையிலான உணவுத் தொடர்பினை விளக்கும் சொற்றொடராகும். ஓர் வாழிடச் சூழல் வாழ்முறையில் ஓர் உணவு மட்டத்திலிருந்து மற்றொரு உணவு மட்டத்திற்கு உணவும், ஆற்றலும் கடத்திச் செல்லப்படுவதை உணவுச் சங்கிலி விளக்குகிறது. உண்மையில், உணவுச் சங்கிலி தொடர்புகள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றன.
தமிழர் நாடகக்கலையின் தோற்றத்தினை விவரிக்கும் நூற்களில் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவது அகத்தியம் என்னும் தலைச்சங்க காலத்து நூலாகும். நாடகம் என்பது பாட்டும், உரையும், நடிப்பும் என்பது தமிழ் மரபுவழி கூறும் இலக்கணமாக விளங்குகின்றது. சங்க காலத்தில் குணநூல், கூத்தநூல், சயந்தம் நூல், மதிவாணர் நாடகத் தமிழர், முறுவல் போன்ற நாடக நூல்கள் இருக்கப்பெற்றன என்பதனை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றது குறிப்பிடத்தக்கது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
சுற்றுச்சூழல் நாற்கூம்பு அல்லது சுற்றுச்சூழல் பிரமிடு (ecological pyramid) என்பது கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழலில் ஒவ்வொரு சூழ்நிலை மண்டல மட்டத்திலும் உயிரினத்தொகுதி (பயோமாஸ்) அல்லது உயிர் உற்பத்தித்திறனைக் காட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு வரைகலை அமைப்பு ஆகும். இது சூழ்நிலை மண்டல பிரமிடு, எல்டோனியன் பிரமிடு, ஆற்றல் பிரமிடு, அல்லது சில நேரங்களில் உணவு பிரமிடு (trophic pyramid, eltonian pyramid, energy pyramid, food pyramid) எனவும் அழைக்கப்படுகிறது. ”பயோமாஸ் பிரமிடுகள்” எத்தனை உயிரினங்கள் (ஒரு உயிரினத்தில் வாழும் உயிரினம் அல்லது உயிரினத்தின் அளவு) ஒவ்வொரு சூழ்நிலை மண்டல மட்டத்திலும் உள்ளன என்பதைக் குறிப்பிடுகின்றன.
'இறக்கைகள் கொண்ட இருகாலி'யைப் பறவை எனக் கூறுவர். பறவைகள் முதுகெலும்புடைய இளஞ்சூட்டுக் குருதியுடைய, இறகுகளுடைய, முட்டையிட்டு இனம்பெருகும் விலங்குகளை குறிக்கும். பறவைகள் இருகால்கள் உள்ள, தன் உடல்வெப்பம் காக்கும், முதுகெலும்புள்ள (முள்ளந்தண்டுள்ள) புள் என்றும் குரீஇ என்றும் சிறப்பித்துக் கூறும் வகையைச் சேர்ந்த, முட்டையிடும் விலங்குகள் ஆகும்.