The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
மணிமுத்தாறு அணை என்பது தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டத்தில் மணி முத்தாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளுள் ஒன்று. இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் களக்காடு பகுதியில் செங்கல்தேரி அருகே பச்சையாற்றின் பிறப்பிடத்திலிருந்து தனியாகப் பிரிந்து மணிமுத்தாறு அருவியாக மணிமுத்தாறு அணைக்கட்டில் வந்து விழுகிறது. இந்த ஆறு கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.
உலகத் தமிழ் மாநாடு உலகத் தமிழ் மாநாடு என்பது உலகில் உள்ள அனைத்து தமிழா்களையும் மொழியின் பால் ஒன்று சோ்ப்பதற்காக நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இம் மாநாடு தமிழையும், தமிழாின் பெருமையையும் உலகோர் அறியச் செய்ய கருப்பொருளாக விளங்குகிறது. இம்மாநாட்டில் பங்காற்றுவது ஒவ்வொரு தமிழனின் மொழி காக்கும் செயலாகும்.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல் இந்தியாவின் மாநிலமானத் தமிழத்தின் உயர் நீதிமன்றமான சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளாக பதவி வகித்தவர்கள் மற்றும் தற்பொழுதயத் தலைமை நீதிபதிகளின் பட்டியல். சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியால் நியமிக்கப்படுபவர் ஆவர். இவரே தமிழக அரசின் தலைமை நீதிபதி ஆவார்.
மணிமுத்தாறு நெல்லை (திருநெல்வேலி) மாவட்டத்தில் உள்ள ஒரு ஆறு மற்றும் அணைக்கட்டு ஆகும். இயற்கையாகவே மணிமுத்தாறு தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறாக இருப்பதாலும் அணைக்கட்டு அதன் குறுக்கே கட்டப்பட்டிருப்பதாலும் மேற்கண்டவாறு வழங்கப்படுகிறது. இது மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.
இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியும் ஆவார். இந்திய ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் எனக் குறிப்பிடப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் வாயிலாக இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் மரபுசார்ந்த ஒன்றாகும்.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
தனி நாடுகளிலும் சில ஆட்சிப்பகுதிகளிலும் 2005 ஆண்டிற்கான மக்கள் தொகைப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் 192 உறுப்பினர் நாடுகள் மற்றும் சீனக் குடியரசு, தைவான், வத்திக்கான் நகரம் ஆகியவை மட்டுமே எண்வரிசை இட்டுக் காட்டப்பட்டுள்ளன. பிற ஆட்சிப்பகுதிகள் எண்வரிசைப் படுத்தாமல் ஒப்பீட்டுக்காக தரப்பட்டுள்ளன.
அண்ணமார் சாமி கதை அல்லது அண்ணமார் கதை அல்லது குன்றுடையான் கதை என்பது கொங்கு நாட்டில் வழங்கிய ஒரு நாட்டு கூத்து ஆகும். இக்கதையின் கதையியல், விரிவு, அழகியல் போன்ற அம்சங்களை கருதி இக்கதையை மகாபாரதம், இராமாயணம் போன்ற காப்பியங்களுடன் ஒப்பிடலாம் என்று இக்கதையை நுணுக்கமாக ஆய்ந்த பிரெண்டா பெக் என்ற தமிழியல் ஆய்வாளர் குறிப்பிடுகின்றார். மேலும் "கதையின் கருப்பொருளை ஆய்வு செய்வதன் மூலம் எதிர்ப்பு/எதிர் அழகியல் (oppositional asthetic) எனும் கருத்தாக்கதைக் காட்டுவதாக முன்வைக்கின்றார்".
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
வண்டல் மண் (Alluviual soil) மலையில் இருந்து ஓடிவரும் ஆறு மக்கின செடி,கொடி,தழைகளையும் பல தாதுப் பொருள்களையும் அடித்தவாறு வரும்போது இவை ஒன்றிணைந்து உருவாகிறது. எனவே இவை வேளாண்மைக்கு மிகவும் ஏற்றதாகவும் தழைச்சத்து, நார்ச்சத்து, கனிமங்கள் உடையதாகவும் உள்ளது. நெல், கோதுமை, கரும்பு, வாழை, வெத்தலை போன்ற பயிர்கள் நன்கு விளையும்.
இந்திய தேசியக் கொடி அல்லது மூவர்ணக் கொடி என்பது ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், ஜூலை 22, 1947 அன்று ஏற்கப்பட்ட இந்திய நாட்டின் கொடியாகும். ஜனவரி 26, 1950-இல் இந்தியா குடியரசு நாடாக ஆகும் வரையிலும், அதன் பிறகும் இக்கொடி தேசியக் கொடியாக விளங்கி வருகிறது. நீள்சதுர வடிவில் உள்ள இக்கொடியில், மேலிருந்து கீழாக, காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்கள் உண்டு.
தக்காணப் பீடபூமி (Deccan Plateau) (தக்காண மேட்டுநிலம்; தக்காணம், தக்ஷிணம் = தெற்கு, தென்னிந்தியா) என்பது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர், மற்றும் விந்திய மலைத்தொடர் ஆகிய மூன்று மலைத்தொடர்களுக்கு நடுவில் முக்கோணவடிவில் உள்ளதாகும். தென்னிந்தியாவின் பெரும்பகுதி தக்காண பீடபூமியை சேர்ந்தது.கங்கைச் சமவெளிக்கு தென்புறம் தக்காணப் பீடபூமி அமைந்துள்ளது. இதன் மேற்குப்பகுதி உயரம் கூடியும் கிழக்குப்பகுதி உயரம் குறைந்தும் காணப்படுகிறது.
கொட்டில் என்பது பண்ணை ஒன்றில் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படும் வேளாண்மைக் கட்டிடமாகும். வட அமெரிக்காவில் கொட்டில் அல்லது கொட்டகை என்பது கால்நடை மற்றும் குதிரை முதலான விலங்கு வளர்ப்பு, கருவிகள், தீவனம் ஆகியவற்றை பராமரிக்கும் இடமாகும். மக்களை தங்கவைக்கும் இடமும் கொட்டில் எனும் பெயரால் அழைக்கப்படுவதுண்டு.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
ஈபெல் கோபுரம் (பிரெஞ்சு: Tour Eiffel, /tuʀ ɛfɛl/) பாரிஸில் மிகக் கூடுதலாக அடையாளம் காணத்தக்க குறிப்பிடமாகும். அத்துடன், உலகம் முழுவதிலும், இது பாரிஸிற்கான ஒரு குறியீடாகவும் அறியப்படுகிறது. இதை வடிவமைத்த அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் ல்லின் பெயரினால் அழைக்கப்படும் இக் கோபுரம், முக்கியமான சுற்றுலாத் தலமாகும்.
இந்தியாவின் மக்கள்தொகை பரம்பல்
இந்தியா உலகின் நிலப்பரப்பில் 2.4 சதவீதத்தையே கொண்டிருந்தாலும் உலகின் 17.5 சதவீத மக்கள் தொகையைக்கொண்டுள்ளது. இந்தியாவை விட அதிக மக்கள்தொகை கொண்ட நாடு சீனா மட்டுமேயாகும். ஏறக்குறைய 50 சதவிகிதம் 25 வயதிற்கும் , 65% சதவிகிதம் 35 வயதிற்கு குறைந்தவர்களாவர் .2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி , 72.2 சதவிகிதம் மக்கள் 6,38,000 க்கும் அதிகமான கிராமங்களில் வாழ்கின்றனர்.
மக்கள்தொகை அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல்
இந்தியா (India), அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India) தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்தியாவில் 28 மாநிலங்களும் மற்றும் 8 ஒன்றியப் பகுதிகளும் உள்ளன. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 1.2 பில்லியன் (1,210,569,573) மக்கள்தொகை கொண்ட, இந்தியா, சீனக் குடியரசிற்குப் பிறகு உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும்.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
சுயமரியாதை இயக்கம் (self-respect movement) சமுதாயத்தின் பிற்பட்ட மற்றும் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, மக்களின் வாழ்வியல் உரிமைக்காகவும் அவர்களின் மனித சமத்துவத்தை வலியுறுத்துவதற்காகவும் 1925 ஆம் ஆண்டு பெரியார் ஈ வெ இராமசாமி அவர்களால் இந்தியாவின், தமிழக மாநிலத்தில் (அப்போதைய சென்னை இராஜதானி) தொடங்கப்பட்டது. இவ்வமைப்பு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுகத்தினரின் சுயமரியாதையை வலியுறுத்தி, வர்ணாசிரம தர்ம தத்துவத்தில் ஊறிய சமூகத்தினிடமிருந்து இவர்களை மீட்டெடுக்கவும், அவர்களை சமுதாயத்தின் மேல்மட்டத்திற்கு உயர்த்தவும் பாடுபட்டது. இவ்வியக்கத்தின் கொள்கை தமிழகத்தில் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் என்று அனைவரிடமும் பரவியது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
ஆந்தை,(ஒலிப்பு ) ஸ்ட்றைஜிபோர்மெஸ் வரிசையைச் சேர்ந்த, தனித்த, இரவில் திரியும் 200 வகைப் பறவைகளில் ஒன்றைக் குறிக்கும். ஆந்தைகள் பெரும்பாலும் சிறிய பாலூட்டிகள், பூச்சிகள், மற்றும் ஏனைய பறவைகளை வேட்டையாடும். ஆந்தைகள் முன்நோக்கும் பெரிய கண்களையும், காதுகளையும், சொண்டையும், மற்றும் facial disk என அழைக்கப்படும், தெளிவாகத் தெரியும், கண்களைச் சுற்றி வட்டமாக அமைந்த இறகுகளையும் கொண்டுள்ளது.
திருக்குறள், சுருக்கமாக குறள், ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுட்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் (அல்லது காமம்) ஆகிய மூன்று புத்தகங்ளை அல்லது தொகுப்புக்களைக் கொண்டது.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
இந்தியத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்
இந்தியத் தலைமை நீதிபதிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இந்தியாவின் உச்சநீதிமன்றம் 1950இல் நிறுவப்பட்டதிலிருந்து மொத்தம் 48 தலைமை நீதிபதிகள் பணியாற்றியுள்ளனர். தற்போதைய தலைமை நீதிபதியாக என்.
கோபால கிருஷ்ண கோகலே , CIE (மராத்தி: गोपाळ कृष्ण गोखले) (மே 9, 1866 - பிப்ரவரி 19, 1915) இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக இந்திய சுதந்திர போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவராவார். கோகலே இந்திய தேசிய காங்கிரஸ்சின் மூத்த தலைவரும் இந்திய சேவகர்கள் அமைப்புபின் உருவாக்குனரும் ஆவார். அந்த அமைப்பின் மூலம் மட்டுமல்லாது காங்கிரஸ் மற்றும் இதர அரசியலமைப்புகளில் பணிபுரிந்ததன் மூலம், கோகலே ஆங்கிலேய அரசிடமிருந்து சுதந்திரத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் அல்லது முக்கியமாக அதை மட்டுமே செய்யாமல் அவர் சமூக மாற்றத்தையும் முன்னெடுத்தார்.
இந்திய உச்ச நீதிமன்றம் (ஆங்கிலம்-Supreme Court of India') இந்திய அரசியல் சட்டப்பிரிவு அத்தியாயம் 4, பிரிவு 5 இன் கீழ் இந்தியாவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றமாகவும், கீழ்நீதிமன்றங்களின், உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யும் நீதிமன்றமாகவும் செயல்படுகின்றது. இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதி விசாரணைக்கு உட்பட்ட அதிகாரங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் 124 முதல் 147 ன் கீழ் எழுதப்பட்டுள்ளன. இது ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றமாகையால், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திபெத்திய பீடபூமி (Tibetan Plateau) மேற்கு சீனாவின் கிங்ஹாய் மாகாணம், திபெத் தன்னாட்சிப் பகுதி, மற்றும் இந்தியாவின் லடாக் பகுதிகளை உள்ளடக்கியதாகும்.25,00,000 இலட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட திபெத்திய பீடபூமி, கிழக்கிலிருந்து மேற்காக 2,500 கிலோ மீட்டர் நீளமும், வடக்கிலிருந்து தெற்காக 1,000 கிலோ மீட்டர் அகலமும், 4,500 மீட்டர் உயரமும் கொண்டது. இப்பீடபூமி 36,000 பனிபடர்ந்த கொடுமுடிகள் கொண்டது. தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவில் பாயும் ஆறுகளின் ஊற்றுக்கண்னாக திபெத்திய பீடபூமி விளங்குகிறது.
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்
இந்தியாவில் 28 மாநிலங்களும், டெல்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 8 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, ஜம்மு காஷ்மீர், டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் இந்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும்.
அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)
அடி என்பது செய்யுள் உறுப்புகள் ஆறனுள் ஒன்று; செய்யுள் உறுப்புகளின் வரிசையில் ஐந்தாவதாக வைத்து எண்ணப்பெறுவது. ‘எழுத்து அசை சீர் பந்தம், அடி தொடை’ என்று அமிதசாகரரால் வைப்பு முறை சொல்லப்படுகின்றது. தமிழ்ப் பாக்களின் இலக்கணத்தைக் கூறும் யாப்பியல் நூல்கள், பாக்களின் உறுப்புக்களாக, எழுத்து, அசை, சீர், அடி என்பவற்றைக் குறிப்பிடுகின்றன.
சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்
தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்: ஆண்டு - படைப்பு (தன்மை) - படைப்பின் எழுத்தாளர் 1955 - தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) - ரா. பி. சேதுப்பிள்ளை 1956 - அலை ஓசை (நாவல்) - கல்கி கிருஷ்ணமூர்த்தி 1957 - (விருது வழங்கப்பட வில்லை) 1958 - சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை) - சி.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் - இந்தியாவின் இரண்டாவது மிக உயர் பதவிக்குரியதாகும், குடியரசுத் தலைவருக்கு அடுத்த நிலையில் வரும் பதவியாகும். துணைக்குடியரசுத்தலைவரே நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் தலைவராவார். எனினும் இவருக்கு மாநிலங்களவை ஓட்டெடுப்பில் ஓட்டளிக்கும் உரிமை இல்லை.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் பழங்குடியினர் (36) பட்டியல் சாதிகள் (76) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79)என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
இடைச்சொல் என்பது தனித்து நின்று பொருள் தராது பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையில் நின்று பொருளை விளக்கும் சொல் இடைச்சொல் ஆகும். இவை நுணுக்கமான பொருள் வேறுபாடுகளை உணர்த்துவதற்கும், உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் மிகத்தெளிவாகவும் சுருக்கமான முறையிலும் வெளிப்படுத்தவும் பயன்படும். இடைச்சொற்களின் வகைகள் சில வருமாறு: 1.வேற்றுமை உருபுகள்- முதலாம் எட்டாம் வேற்றுமை தவிர்ந்த ஆறு வேற்றுமை உருபுகள்.
தாமசு ஆல்வா எடிசன் (Thomas Alva Edison, பெப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர்.
உலக மக்கள்தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் புவியில் வாழும் மனிதர்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பதாகும். 2009 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையானது 7,024,000,000 பேர் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டதுஅடிப்படையில் அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு செயலகம் தற்பொழுது உலக மக்கள் தொகை 6,831,200,000 என மதிப்பிட்டுள்ளது. 1400 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கருப்பு மரணத்தின் முடிவிலிருந்து உலக மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
பிரான்சின் முதலாம் நெப்போலியன்
நெப்போலியன் பொனபார்ட் (Napoléon Bonaparte, 15 ஆகஸ்ட் 1769 – 5 மே 1821) அல்லது முதலாம் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவனாகவும், அரசியல் தலைவனாகவும் இருந்தவன். தற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது. இவன் பிரெஞ்சுப் புரட்சியில் ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளன், பிரெஞ்சுப் பேரரசன், இத்தாலியின் மன்னன், சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளன், ரைன் கூட்டாட்சியின் காப்பாளன் ஆகிய பதவிகளை வகித்துள்ளான்.கோர்சிக்காவில் பிறந்த இவன் பிரான்ஸில் கனரக ஆயுதங்களுக்கான அலுவலராகப் பயிற்சி பெற்றான்.
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக்கில் 200 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
கீழடி தொல்லியல் களம் என்பது இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு ஆரம்பிக்கப்பட்டு , பின்னர் தமிழ் நாடு தொல்லியல் துறையால் செயல்பட்டு வரும் ஒரு சங்க கால வசிப்பிடம் ஆகும். இந்த அகழாய்வு மையம் தமிழ்நாட்டில் மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி ஊராட்சியில் உள்ள கீழடி கிராமத்தின் பள்ளிச்சந்தை திடல் மேட்டுப்பகுதியில் உள்ளது. ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு இதுவேயாகும்.
உழவு அல்லது வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனையப் பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான்.
திராவிட மொழிக் குடும்பம் (Dravidian language family) என்பது மரபு வழியாக இணைந்து கிட்டத்தட்ட 85 மொழிகளை உள்ளடக்கியதாகும். கிட்டத்தட்ட 217 மில்லியன் மக்கள் இம்மொழிகளைப் பேசுகின்றனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த முக்கிய மொழிகளான, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பன ஒன்றுடனொன்று நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும், ஏனைய இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதும் அறியப்பட்டுள்ளது.
ஜெர்மனி (Germany, [ˈdʒɜːmənɪ] ), அல்லது ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு (ஜெர்மானியம்: , IPA: [ˈbʊndəsʁepuˌbliːk ˈdɔʏtʃlant]), என்பது நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் வடக்கே வட கடல், டென்மார்க், பால்ட்டிக் கடல்; கிழக்கே போலந்து, செக் குடியரசு; தெற்கே ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து; மேற்கே பிரான்ஸ், லக்சம்பேர்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியன எல்லைகளாக உள்ளன. ஜெர்மனியின் பரப்பளவு 357,021 கிமீ².