The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
எல். முருகன் (L. Murugan, பிறப்பு: 29 மே, 1977) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும் ஆவார். இவர் தமிழக பாஜக தலைவராக, தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் 11 மார்ச், 2020 அன்று நியமிக்கப்பட்டார்.இவருக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளும் நன்றாகத் தெரியும்.
காட்டு நிலங்களை, வேளாண்மை, நகராக்கம் போன்ற காடல்லாத நிலப் பயன்பாடுகளுக்கோ அல்லது அதன் வளங்களுக்காகக் காட்டை வெட்டி நிலத்தைத் தரிசாகவோ மாற்றுவதே காடழிப்பு என்பதன் முழுமையான பொருளாகும். முற்காலத்தில் காடழிப்பு, மேய்ச்சல் நிலங்களை உருவாக்குவதற்கு அல்லது வேளாண்மை நிலங்களை உருவாக்கும் நோக்கத்துடனேயே நடைபெற்றது. தொழிற் புரட்சிக்குப் பின்னர் நகராக்கமும், காட்டு வளங்களின் சுரண்டலும், இத்துடன் சேர்ந்து கொண்டன.
மழைநீர் சேகரிப்பு என்பது மழை நீரை வீணாக்காமல் சேமித்து வைப்பது ஆகும். மழைநீரைச் சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும், நீர்ப்பாசனத்திற்கும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் பயன்படுத்தலாம். வீடுகள், நிறுவனங்களின் கட்டிடங்களின் மேற்கூரைகளில் இருந்தும் இதற்காகத் தயார் செய்யப்பட்ட தரைவழியாகவும் சேகரிக்கப்படும் மழைநீர் குடிநீருக்கான முக்கியமான ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.சில சூழ்நிலைகளில், மழைநீர் ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய, சிக்கனமான நீர் ஆதாரம்.
நுகர்வோர் பொருட்களையும், சேவைகளையும் நுகரும் போது அவர்களிற்கு உள்ள உரிமைகளே நுகர்வோர் உரிமைகள் (Consumer rights) ஆகும். காலத்திற்குக் காலம் பல்வேறுபட்ட வகைகளில் நுகர்வோர் உரிமைகள் வகைப்படுத்தி கூறப்பட்டு வருகின்றது. இத்தகைய நுகர்வோர் உரிமைகளை முன் வைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அல்லது நிறுவனங்கள் வருமாறு.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு (environmental protection) என்பது சுற்றுச்சூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகை பெருக்கத்தினாலும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்றுச்சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
உயிரியல் பல்வகைமை அல்லது பல்லுயிரியம் அல்லது உயிரினப் பன்மயம் (Biodiversity, இலங்கை வழக்கு: உயிர்ப் பல்வகைமை) என்பது பூமியில் உள்ள நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய கணக்கிலடங்காத உயிரினங்களில் காணப்படும் வேறுபாடு ஆகும். மரபுவழிப் பண்பில் பல்வகை, சிற்றினங்களில் பல்வகை, சூழல் அமைப்பில் பல்வகை, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு உரித்தான பல்வகை, அறிமுகப்படுத்தப்பட்ட உயிரினங்களில் பல்வகை ஆகியவற்றை உயிரியல் பல்வகைமை என்பது குறிக்கும். உயிரியல் பல்வகைமை என்பது புவியின் எல்லாப் பகுதிகளிலும் பல்வேறு சூழல்களில் வாழும் பலவகையான உயிரினங்களைப் பற்றி விவரிக்கப் பயன்படுத்தும் ஒரு சொல்லாகும்.
சுற்றுச்சூழல்அல்லதுஉயிரியற்பியல் சூழல் என்பது ஒரு உயிரினத்தை அல்லது மக்கள் தொகையைச் சுற்றியுள்ள உயிர் உள்ள, மற்றும் உயிரற்ற கூறுகள் அனைத்தையும், அவற்றின் விளைவாக குறிப்பிட்ட உயிரினம் அல்லது மக்கள் தொகையின் பிழைப்புத்திறன், விருத்தி, படிவளர்ச்சி அல்லது கூர்ப்பு ஆகியவற்றில் தாக்கம் செய்யக்கூடிய அனைத்துக் காரணிகளையும் உள்ளடக்கிய இயற்கைச் சூழலைக் குறிக்கின்றது. உயிரியற்பியல் சூழலானது நுண்ணோக்கி நிலையிலிருந்து, உலகளாவிய நிலைவரை வேறுபட்ட அளவுகளில் ஆராயப்படலாம். அத்துடன் சூழலின் இயல்பைப் பொறுத்து பெருங்கடல் சூழல், வளிமண்டலச் சூழல், நிலச் சூழல் போன்ற பல வேறுபட்ட சூழல்களைக் காணலாம்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
மண் மாசடைதல் (Soil contamination, soil pollution) மனிதனால் உருவாக்கப்பட்ட வேதிப்பொருள்கள் கலப்பதாலும், இயற்கை மண் சூழலில் ஏற்படும் வேறு மாற்றங்களாலும் உருவாகிறது. பொதுவாக இவ்வாறான மாசடைதல், நிலக்கீழ் சேமிப்புத் தொட்டிகள் உடைதல், பூச்சிகொல்லிப் பயன்பாடு, மாசடைந்த மேற்பரப்பு நீர் நிலக்கீழ் மட்டங்களுக்குச் செல்லல், எண்ணெய் மற்றும் எரிபொருட் கழிவுகளைக் கொட்டுதல், தொழிற்சாலைக் கழிவுகளை நேரடியாக நிலத்தில் வெளியேற்றுதல் போன்றவற்றால் ஏற்படுகின்றது. மிகப் பொதுவான வேதிப்பொருள் மாசுகள், பெட்ரோலிய ஐதரோகாபன்கள், கரையங்கள், பூச்சிகொல்லிகள், ஈயம், பார உலோகங்கள் போன்றனவாகும்.
இணையம் (ஒலிப்பு ) (Internet) என்பது உலக அளவில் பல கணினி வலையமைப்புகளின் கூட்டிணைப்பான பெரும் வலையமைப்பைக் குறிக்கும். இணைய நெறிமுறைகளைப் பின்பற்றி தரவுப் பரிமாற்றம் (பாக்கெட் சுவிட்சிங்) மடைமாற்றி மற்றும் திசைவியின் வழி நடைபெறும். இணையம் என்னும் சொல்லானது செப்புக்கம்பிகளினாலும், ஒளிநார் இழைகளினாலும் இணைக்கப்பட்டுள்ள கணினி வலைகளின் பேரிணைப்பைக் குறிக்கும்.
பொருளியல் சிந்தனையின் வரலாறு (History of Economic Thought) என்பது பொருளியல் எண்ணங்கள் பழங்காலத்திலிருந்து இன்று வரை தோன்றி வளர்ந்த விதம் குறித்து விளக்குவது ஆகும். பொருளாதார வளர்ச்சிக்கும் பொருளியல் சிந்தனைகளின் வளர்ச்சிக்கும் வேறுபாடு உண்டு. பொருளாதார வளர்ச்சி ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் குறிப்பதாகும் ஆனால் பொருளியல் சிந்தனை வளர்ச்சி என்பது பொருளியல் குறித்த எண்ணங்கள் எவ்வாறு உருவெடுத்து பின்பு இது ஒரு தனி இயலாக வளா்ந்தது என்பது குறித்தது ஆகும்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
தினப்பதிவியம் அல்லது நாட்பதிவியம் (Journalism எனும் தொழிற்துறைக்கானத் தமிழ்ச்சொல்) என்பது, மக்களிடம் செய்திகள், நிகழ்வுகளை கொண்டு செல்லும் ஊடகங்கள். ஊடகவியல் என்பது தற்போது Media studies எனும் ஊடகத்தைக் கையாளும் ஆய்வுத் துறையைக் குறிக்கிறது, மற்றும் இதழியல் என்பது பழையப் பயன்பாட்டில் சொல். அவை, செய்தித்தாள்கள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் அடங்கும்.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
ஆளுமை என்பது என்ன என்பது பற்றி உறுதியான எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறை இல்லை. உளவியல் நோக்கில் ஆளுமை என்பது ஒருவரின் ஒழுங்கமைந்த, இயங்கியல் பண்புகளும், அவை தோற்றுவிக்கும் தோரண நடத்தைகள், உணர்வுகள், சிந்தனைகளையும் குறிக்கிறது. பொது வழக்கில் ஆளுமை என்பது ஒருவரின் வெளித் தோற்றத்தைப் பெரிதும் குறிக்கிறது.
இயற்கை வளங்கள் (natural resources), அல்லது பொருளாதார ரீதியில் நிலம் மற்றும் மூலப்பொருள் அல்லது கச்சா பொருட்கள் எனப்படுபவை ஒப்பிட்டளவில் மனிதத் தலையீடுகளின்றித் தன் இயல்பு நிலையில் சூழல் தொகுதிகளில் காணப்படும் பொருட்கள் ஆகும். இயற்கை வளங்கள் சுற்றுச்சூழலிலிருந்து தருவிக்கப்படுபவை. இவற்றில் பெரும்பான்மையானவை நம் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவையாகவும் தேவைகளுக்குப் பயன்படக்கூடியவைகளாகவும் அமைகின்றன.
மனிதனுடைய நம்பிக்கைகள், எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதே விழுமியம் (Value) எனப்படுகின்றது. விழுமியங்களை நேர்மையுடன் பயன்படுத்துவதே அவற்றின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகின்றது. இந்தத் தொடர்ச்சியே விழுமியத்தை தொடர்புடைய ஏனைய கருத்துருக்களான, நம்பிக்கை, கருத்து, எண்ணம் என்பவற்றிலிருந்து வேறுபடுத்துகின்றது.
சுயமரியாதை இயக்கம் (self-respect movement) சமுதாயத்தின் பிற்பட்ட மற்றும் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, மக்களின் வாழ்வியல் உரிமைக்காகவும் அவர்களின் மனித சமத்துவத்தை வலியுறுத்துவதற்காகவும் 1925 ஆம் ஆண்டு பெரியார் ஈ வெ இராமசாமி அவர்களால் இந்தியாவின், தமிழக மாநிலத்தில் (அப்போதைய சென்னை இராஜதானி) தொடங்கப்பட்டது. இவ்வமைப்பு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுகத்தினரின் சுயமரியாதையை வலியுறுத்தி, வர்ணாசிரம தர்ம தத்துவத்தில் ஊறிய சமூகத்தினிடமிருந்து இவர்களை மீட்டெடுக்கவும், அவர்களை சமுதாயத்தின் மேல்மட்டத்திற்கு உயர்த்தவும் பாடுபட்டது. இவ்வியக்கத்தின் கொள்கை தமிழகத்தில் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் என்று அனைவரிடமும் பரவியது.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
ப்ஹ்ஹ்க்க்தொலைத்தொடர்பு, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், அரசியல், பண்பாடு, ஆகிய துறைகளின் முன்னேற்றங்களினால் உந்தப்பட்டு உலக சமூகங்களுக்கிடையேயான அதிகரிக்கும் தொடர்பையும் அதனால் ஏற்படுத்தப்பட்டுவரும் ஒருவரில் ஒருவர் தங்கிவாழ் நிலையையும் உலகமயமாதல் எனலாம். உலகமய சூழலில் ஒரு சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைமைகளும் நிகழ்வுகளும் மற்றைய சமூகங்களில் கூடிய விகித தாக்கத்தை ஏதுவாக்குகின்றது. உலகமயமாதல் வரலாற்றில் ஒரு தொடர் நிகழ்வுதான், ஆனால் இன்றைய சூழல் உலகமயமாதலை கோடிட்டு காட்டுவதாக அமைகின்றது.
கல்வி (Education) என்பதுக் குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
இதழ் (ஒலிப்பு ) அல்லது சஞ்சிகை (Magazine) என்பது அச்சிட்டு செய்திகளையும் கருத்துக்களையும் இயற்கலை படைப்புகளையும் அறியவும், பகிர்ந்து கொள்ளவும், பரப்பவும் வெளி வருகின்றவையாகும். (இணையத்தில் வெளிவிடப்படும் இதழ்கள் மின்னிதழ்கள் ஆகும்.) அனைத்தையும் இதழ்கள் என்று பொதுச்சொல்லால் குறிப்பிட்டாலும், அவை இயல்பாலும், வெளிவரும் காலம், அதில் இடம் பெற்ற உள்ளடக்கம் போன்றவைகளைக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன.
மக்கள்செய்தித் தொடர்பியல் (மாஸ் கம்யூனிகேசன்) என்பது தனிநபர்கள் மற்றும் உட்பொருட்கள், மக்கள்செய்தி ஊடகம் வழியாகத் தகவலை ஒரே நேரத்தில் மக்கள்தொகையின் பல பகுதிகளுக்குப் பரப்புவதன் மூலமாக, பல்வேறு மட்டங்களின் தர்க்கரீதியான ஆய்வை விவரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வார்த்தை ஆகும். இதனைப் பொதுவாக செய்தித்தாள் மற்றும் பத்திரிகை வெளியிடுதல், வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் ஆகியவற்றுக்குத் தொடர்புடையதாகப் புரிந்துகொள்ளலாம், அவற்றில் இவை செய்திகளைப் பரப்புவதற்காக மற்றும் விளம்பரத்துக்காக ஆகிய இரண்டுக்குமே பயன்படுத்தப்படுகின்றன.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
அணு (ஒலிப்பு ) (atom) என்பது தனிமத்தின் இயல்புகளைக் கொண்ட இயல்பான பொருள் ஒன்றின் மிகச் சிறிய அலகுப் பொருட்கூறு ஆகும். ஒவ்வொரு திண்மம், நீர்மம், வளிமம், பிளாசுமாவும் நொதுமல்நிலை அல்லது மின்னூட்டமுடைய அணுக்களைக் கொண்டுள்ளது. அணுக்கள் மிகவும் சிறியவை; கட்டாக அவை அளவில் மீட்டரின் 10 பில்லியனில் ஒரு பங்காகும்.
கணினி (ஒலிப்பு ) என்பது எண் முதலான தரவுகளை உட்கொண்டு, முறைப்படி கோத்த ஆணைக் கோவைகளைச் செயற்படுத்தும் ஒரு கருவி. ஒரு பணியைச் செய்ய, அதனைப் பல கூறாகப் பகுத்து, எதன் பின் எதனைச் செய்ய வேண்டும் என்று எண்ணி, கணினியுள் இடுவதற்காகத் lp தொகுக்கப்பட்ட ஆணைக் கோவை அல்லது கட்டளைக் கோவையானது, செய்நிரல் எனப்படும். கணினியில் இப்படி செய்நிரல்களைச் சேமித்து வைத்து பணி செய்ய இயக்குவது தனிச் சிறப்பாகும்.
பிட்டின் இந்தியா சட்டம் (Pitt's India Act) அல்லது கிழக்கிந்திய நிறுவனச் சட்டம், 1784 என்பது பெரிய பிரித்தானிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் 1784 இல் இயற்றப்பட்ட ஒரு சட்டம். இந்தியத் துணைகண்டத்தில் |கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியையும் நடவடிக்கைகளையும் பிரித்தானிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக இது இயற்றப்பட்டது. இச்சட்டம், இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பனியின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை கம்பனியும் பிரித்தானிய அரசும் கூட்டாக நிருவாகம் செய்ய ஒரு கட்டுப்பாட்டு வாரியத்தை அமைத்தது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy) என்பது சூரிய ஒளி, காற்று, மழை, கடல் அலை, புவிவெப்பம் போன்ற புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆற்றல் ஆகும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பமானது சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், நீர்மின்சாரம், உயிர்த்திரள் ஆற்றல், உயிரெரிபொருட்கள் என்பவற்றை உள்ளடக்கி உள்ளது.]]. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நான்கு முதன்மையான பயன்பாடுகளுக்குப் பயன்படுகிறது.
பெண்ணியம் என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் எதிர்க்கும் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் தொகுப்பாகும். ஆண் பெண் சமத்துவத்தில் கவனம் செலுத்தும் கோட்பாடாகவும் இது வரையறுக்கப்படுவதுண்டு. பெண்ணியத்தை வரையறுப்பதென்பதே கூட சிக்கலானதாக இருப்பதுண்டு.
மூன்றாம் பானிபட் போர் 14 ஜனவரி 1761ல் டில்லிக்கு வடக்கே 60மைல் (97கி.மீ) தொலைவில் பானிபட் என்ற இடத்தில் மராட்டிய பேரரசின் வடக்கு படைக்கும், ஆப்கானிஸ்தான் மன்னர் அகமது சா அப்தாலிக்கும் இடையில் நடந்தது. அகமது சா துரானியை, ரோகில்லாக்கள் மற்றும் அவத் நவாபு சுஜா-உத்-தௌ ஆதரித்தனர். ஆப்கானியர்களுக்கு எதிரான இப்போரில் இராசபுத்திரப் படைகளும், சீக்கியப் படைகளும் மராட்டியப் படைகளுக்கு உதவ முன் வரவில்லை.
மேஜர் ஜெனரல் ராபர்ட் கிளைவ், 1வது பெரன் கிளைவ், (Robert Clive, 1st Baron Clive, செப்டம்பர் 29, 1725 - நவம்பர் 22, 1774) , வங்காளத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவ மற்றும் அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டிய ஒரு பிரித்தானிய அதிகாரி ஆவர். இந்தியத் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்சும் படைத்தலைவர் இராபர்ட் கிளைவும் பிரித்தானிய இந்தியாவை உருவாக்கிய முக்கிய நபர்களாகக் கருதப்படுகின்றனர்...
மின்னஞ்சல் (Email) என்பது மின்னணுத் தொடர்புச் சாதனங்கள் மூலம் செய்திகளை எழுதுதல், அனுப்புதல், மற்றும் பெறுதல் போன்றவற்றைச் செய்யும் முறையாகும். சாதாரணமாக அஞ்சல்கள் அனுப்பும் போது யாரிடமிருந்து, யாருக்கு அனுப்புவதைப் போன்று இங்கு உங்கள் மின்னஞ்சலும் பெறுபவரின் மின்னஞ்சல் முகவரியும் தேவைப்படுகின்றது. ஆரம்பத்தில் அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறையில் அமைந்திருந்த மின்னஞ்சல்கள், பின்னர் காலப்போக்கில் உலகின் பெரும்பாலான மொழிகளை ஆதரிக்கும் யுனிக்கோட் முறையை ஆதரிக்க மின்னஞ்சல் இரு பாகங்களை உள்ளடக்கியுள்ளது.
குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா: கு, சு, டு, து, பு, று) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துகள் (எ.கா: ற, கி, பெ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது. இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.
இந்தியா நாட்டில் உள்ள 1208 தீவுகளில் சில: தமிழ்நாடு முயல் தீவு குருசடை தீவு நல்ல தண்ணி தீவு பாம்பன் தீவு புள்ளிவாசல் தீவு திருவரங்கம் தீவு உப்புத்தண்ணித் தீவு விவேகானந்தர் பாறை குவிப்பில் தீவு கச்சத்தீவு (தற்போது இலங்கை கட்டுப்பாட்டில் பிரச்சினைக்குரியது) காட்டுப்பள்ளித் தீவு சென்னை தீவு ஆந்திரப் பிரதேசம் பவானித் தீவு தேவிசீமா தீவு கோணசீமா தீவு நம்பிக்கைத் தீவு இறுக்கம் தீவு ஸ்ரீஹரிக்கோட்டா வேநாடு தீவு மேகாலயா நங்குனும் ஆற்றுத் தீவு அசாம் திப்ரூ சாய்கோவா தீவு மஜுல தீவு உமானந்த தீவு பீகார் லாஹோபூர் தியாரா தீவு தமனும் தியூவும் தியூ தீவு மத்திய பிரதேசம் மந்தத தீவு கோவா அஞ்சதீவா தீவு ஜோரா தீவு கும்பர்ஜுவா தீவு திவார் தீவு சவோ ஜேசின்டோ புனித ஸ்தேவான் தீவு திஸ்வாடி தீவு வான்சிம் தீவு இலா கிராண்டி இலா பிகுயினோ குஜராத் துவாரகை தீவு கேங்கடோ பேட் தீவு கச்சு வளைகுடா தீவு கிழக்கு சிந்து படுகை தீவுகள் கபீர்வத் தீவு காதீர் பேட் தீவு கச்சு தீவு நந்தா பேட் தீவு பிராம் தீவு பிரோடன் தீவு சியால் பேட் தீவு ஜம்மு காஷ்மீர் சார் சினார் தீவு உவுளர் ஏரி தீவு கருநாடகம் பசவராஜ் துர்கா தீவு குரும்காட் தீவு அன்புத் தீவு நிசர்கதாமா தீவு பாவூர் உலியா தீவு ஸ்ரீரங்கப்பட்டணம் புனித மேரி தீவு உப்பு சங்கு தீவு கேரளா சவாரா தீவு தர்மடம் தீவு இடையிலகாடு தீவு எழுமன் தீவு குண்டுத் தீவு காவாய் தீவு கோதாடு தீவு குருவ தீவு மூலாம்பில்லித் தீவு மன்றோதுருத்து நெடுங்காடு தீவு பனங்காடு தீவு பருமலா பத்திரமணல் தீவு பிழாலா தீவு பூஜக்கல் தீவு புலிங்குன்னும் தீவு ராமன் தீவு சதார் தீவு வள்ளார்படம் தீவு வென்துருத்தி வைப்பீன் தீவு வில்லிங்டன் தீவு இலட்சத்தீவுகள்இலட்சத்தீவுகள் என்பது 12 பவளத் தீவுகள், 3 பவளப் படிப்பாறைகள் மற்றும் 5 கடலடி மீன்பிடி கரைகள் கொண்ட தீவுக்கூட்டம் ஆகும். இதில் சிறியதும் பெரியதுமாக சுமார் 39 தீவுகள் உள்ளது.
வேலூர் (Vellore) (வெல்லூர் என்றும் அழைக்கப்படுகிறது) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநகரமும், வேலூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். பாலாற்றின் கரையில் உள்ள வேலூரின் முக்கிய சுற்றுலா இடமாக வேலூர்க் கோட்டை விளங்குகிறது. வெவ்வேறு காலங்களில் இடைக்காலச் சோழர்கள், பிற்காலச் சோழர்கள், விஜயநகரப் பேரரசர்கள், இராட்டிரகூடர்கள், பல்லவர்கள், முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் வேலூரை ஆண்டுள்ளனர்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, நவம்பர் 26, 1954 – மே 17 அல்லது மே 18 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
சுற்றுச்சூழல் மாசுபாடு (சூழல் மாசடைதல்) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும். சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது.
திராவிட மொழிக் குடும்பம் (Dravidian language family) என்பது மரபு வழியாக இணைந்து கிட்டத்தட்ட 85 மொழிகளை உள்ளடக்கியதாகும். கிட்டத்தட்ட 217 மில்லியன் மக்கள் இம்மொழிகளைப் பேசுகின்றனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த முக்கிய மொழிகளான, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பன ஒன்றுடனொன்று நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும், ஏனைய இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதும் அறியப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் பழங்குடியினர் (36) பட்டியல் சாதிகள் (76) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79)என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
திலீப்குமார் (Dilip Kumar) என்ற தனது திரைப்பெயரால் நன்கு அறியப்பட்ட முகம்மது யூசுப் கான் (11 திசம்பர் 1922 – 7 சூலை 2021) ஓர் இந்திய நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளரும், நன்கொடையாளரும் ஆவார். இவர் முக்கியமாக, பாலிவுட் படங்களில் பணியாற்றியதற்காக மிகவும் பிரபலமானவர். இவர், தனது "சோகமாக நடிப்பதில் மன்னன்" என்று குறிப்பிடப்பட்டார்.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
இலங்கை (ஒலிப்பு ) (Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, சிறீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ ( எ.கா. நகரம், வட்டாரம், நாடு ) குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு (Geographical indication) எனப்படும். இந்த குறியீடு, அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும்.
அருந்ததியர் (Arunthathiyar) அல்லது சக்கிலியர் (Chakkiliyar) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா பகுதிகளில் வசித்து வரும் பட்டியல் சாதியைச் சேர்ந்த ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் தலித்து என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆந்திராவிலிருந்து தெலுங்கு மொழி பேசும் மக்களுடன், விஜயநகர ஆட்சியின் போது விஜயநகர மன்னர்களால், தமிழ்நாட்டிற்கு குடியமர்த்தப்பட்டதாக கருதப்படுகிறது.தமிழகத்தில் அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, ஆதி ஆந்திரர், பகடை, மாதிகா, தோட்டின் எனும் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.
அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் சோழ பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே.
பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் இனத்தவர்கள் (Scheduled Castes & Scheduled Tribes) என்ற சமூகத்தவர்கள் கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் தகுதிகளில் இந்திய துணை கண்டத்தில் வரலாற்று ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள். பிரித்தானிய இந்தியாவில், இவர்களை ஒடுக்கப்பட்ட மக்கள் (Depressed Class) என்று வகைப்படுத்தி, அவர்களது பொருளாதார மேம்பாட்டிற்கு பஞ்சமி நிலங்கள் ஒதுக்கப்பட்டது. மகாத்மா காந்தியும், அவர்பால் ஈர்க்கப்பட்ட என்.