The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுட்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் (அல்லது காமம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
இந்திய சோதிடத்தில் பிரீதி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் முதலாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 13° 20' தொடக்கம் 26° 40' பிரீதி யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "பிரீதி" ஆகும்.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110 என்பது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளில் ஒன்று ஆகும். அரசியலமைப்பு சட்டத்தின் 208-வது பிரிவு 1-வது உட்பிரிவின்படி இயற்றப் பெற்றவை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள் ஆகும். இதில் மொத்தம் 23 அத்தியாயங்கள், 292 விதிகள் உள்ளன.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 3 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக இவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.
ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.புதுக்கோட்டை மாவட்டம் ஜல்லிக்கட்டின் "சொர்க்க பூமியாக " இன்னும் திகழ்ந்து வருகிறது.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்
தமிழக ஆளுநர் -தமிழக ஆளுநர்களின் பட்டியல் தென்னிந்தியாவின் மாநிலமான, தமிழ்நாடு மாநிலத்தில், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்ற ஆளுநர் தமிழகத்தின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர். தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுநர்கள் 1946ல் இருந்தே நியமனம் செய்யப்பட்டவர்களாகவும், தற்காலிகப் பொறுப்புகளுடனும் பதவி வகித்து வந்துள்ளனர்.
நெகிழி அல்லது பிளாஸ்டிக் (Plastic) என்பது ஒரு பொருள் ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுகி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும். "வார்க்கத் தக்க ஒரு பொருள்" என்னும் பொருள் தரும் "பிளாஸ்டிகோஸ்" என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது. நெகிழி என்னும் பொருளானது பிசைவு கொள்ளும் பொருள் ஆகும்.
பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்
இத் தனிமங்களின் பட்டியல் பெயர்வாரியாக அமைத்த பட்டியல். தனிமத்தின் வகையைப் பொருத்து நிறம் காட்டப்பட்டுள்ளது. தனிமங்களின் குறியெழுத்து, அணுவெண் அணுப் பொருண்மை, நிலையான மாற்றுரு, நெடுங்குழு எண், கிடைவரிசை எண் முதலிய குறிக்கபட்டுள்ளன.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு, தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்தப் பேச்சாளராகவும், ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக, தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
காப்பியம் என்பது இலக்கிய வடிவங்களில் ஒன்று. இதனைப் பெருங்காப்பியம் என்றும், சிறுகாப்பியம் என்றும் பகுத்துக் காட்டினர் அறம்,பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஒரு ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது பெருங்காப்பியமாகும். வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று இது விரிந்து வளர்கிறது.
சமயக்குரவர் என்பவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகியோர் ஆவர். இவர்கள் சைவ சமயத்தின் தேவாரம் மற்றும் திருவாசகத்தினை எழுதியவர்கள். இவர்களை நால்வர் என்றும் நால்வர் பெருமக்கள் சைவ சமயத்தினர் அழைக்கின்றனர்.சமயக்குரவர் நால்வரின் காலம், செயல்பாடுகள், சைவ நூல்களில் அவர்களுடைய தாக்கங்கள் என பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளும், நூல்களும் எழுதப்படுகின்றன.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
நீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)
நீட் தேர்வு (National Eligibility cum Entrance Test) என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். இந்திய மருத்துவக் குழுமம் சட்டம் - 1956 இன் 2018 திருத்தம் மற்றும் பல் மருத்துவர் சட்டம் 1948 இன் 2018 திருத்தம் ஆகியவற்றின்படி தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வானது அகில இந்திய அளவிலான, இந்திய அரசின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழான, அகில இந்திய மருத்துவக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான ( அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் ஜவஹர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நீங்கலாக) சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்காக நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படுகிறது.இதன்படி 5 மே, 2013 அன்று முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டது. 2019-ஆம் ஆண்டு முதல் இந்த நுழைவுத்தேர்வை தேசியத் தேர்வு முகமை நடத்துகிறது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
இம்மானுவேல் சேகரன் (1924 அக்டோபர் 9 - செப்டம்பர் 11, 1957) ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தமிழக அரசியல் தலைவர். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர். மேலும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.
ஊட்டச்சத்து (Nutrition) என்பது வாழ்க்கைக்கு ஆதாரமான அத்தியாவசிய மூலப்பொருள்களை உயிரணுக்களுக்கும், அதன்மூலம் உயிரினங்களுக்கும் வழங்குகின்ற உணவு(food) ஆகும். இது வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், புரதம் ,கொழுப்பு ,என பல ஊட்டக்கூறுகளைக் (Nutrients) கொண்டிருக்கும். பல பொதுவான சுகாதார பிரச்சினைகளையும் ஆரோக்கியமான உணவைக் கொண்டு தடுக்கவோ தவிர்த்து முடியும் .
சிந்துவெளி நாகரிகம் (Indus Valley Civilisation) மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
பிரெஞ்சுப் புரட்சி (French Revolution, பிரெஞ்சு: Révolution française; 1789–1799) பிரான்சு மற்றும் பிற ஐரோப்பியப் பகுதிகளில் பண்பாடு மற்றும் அரசியல் களங்களில் நிகழ்ந்த பெரும் மாற்றங்களைக் குறிக்கிறது. இதன் விளைவாகப் பிரான்சில் பல நூற்றாண்டுகளாக நீடித்திருந்த முழு மன்னராட்சி முறை வீழ்ந்தது. நிலமானிய, நிலபிரப்புத்துவ, கிறித்தவ திருச்சபை அதிகார முறைமைகளின் ஆதிக்கம் சரிந்து, பிரெஞ்சு சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.
அடால்ஃப் இட்லர் (Adolf Hitler, ஏப்ரல் 20, 1889- ஏப்ரல் 30 ,1945) ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ந் தேதியன்று தற்கொலை செய்து கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
அமெரிக்க புரட்சிப் போர் 18ஆம் நூற்றாண்டில் பதின்மூன்று குடியேற்றங்கள் பிரித்தானிய அரசுக்கு எதிராக நடத்திய போராட்டங்களைக் குறிக்கும். 1763இல் பிரெஞ்சு செவ்விந்தியர் போர் முடிந்தபின் ஐக்கிய இராச்சியம் குடியேற்ற நாடுகளுக்கு வரிகளை அதிகரித்ததன் காரணமாக புரட்சிக் காலம் தொடங்கியுள்ளது. 1770இல் பாஸ்டன் படுகொலையில் புரட்சியின் முதல் வன்முறை நிகழ்வு நடந்தது.
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்
இந்தியாவில் 28 மாநிலங்களும், டெல்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 8 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, ஜம்மு காஷ்மீர், டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் இந்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும்.
இளங்கோ, அல்லது இளங்கோ அடிகள் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை எழுதியவர். இவர் சேர அரசன் செங்குட்டுவனுடைய தம்பியெனவும், இளவரசுப் பட்டத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டவர் எனவும் சொல்லப்படுகின்றது. இவர் சமண சமயத்தைத் தழுவியவராக இருந்தும், தாம் இயற்றிய நூலில் வைணவத் திருமாலையும்,சைவக் கொற்றவையையும் போற்றும் பகுதிகள் அந்தந்த சமயத்தவரால் பெரிதும் போற்றப்படுகின்றன.
பகத் சிங் (Bhagat Singh, செப்டம்பர் 28, 1907 – மார்ச் 23, 1931) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மார்க்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவதுண்டு..
வெள்ளம் என்பது நிலத்தை மூழ்கடிக்குமளவுக்குத் தேங்கி நிற்கும் அல்லது பொங்கிப் பாய்ந்தோடும் நீர் ஆகும்.ஆறு அல்லது ஏரி போன்ற நீர்நிலைகளில் உள்ள நீர் மிகையாகும் போது அல்லது கரை உடையும் போது அது தனது வழக்கமான எல்லைகளைத் தாண்டுகிறது. நீரோட்டத்தின் வலிமையானது மிகவும் அதிகரிக்கின்ற போது ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அது ஆற்றின் பாதையைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடி கரையோரம் ஒட்டி அமைந்துள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனகளுக்கு சேதம் உண்டாக்குகிறது.
மாவீரன் கர்ணன் (ஒலிப்பு ) மகாபாரத காப்பியத்தில் இடம் பெறும் மைய கதாப்பாத்திரங்களுள் ஒருவர். அவர் அங்கா நாட்டின் (தற்போதைய பாகல்பூர் மற்றும் முங்கர்) அரசராக இருந்தார். கர்ணனை போரில் வீழ்த்தக்கூடிய வல்லமை பெற்ற ஒரு வீரர் அகிலத்தில் எவரும் இல்லை என்று கிருஷ்ணன் உரைத்தார், ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் பீஷ்மரினால் மகாபாரதத்தின் மிகச்சிறந்த போர்வீரராகக் கருதப்பட்டார்.
குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா: கு, சு, டு, து, பு, று) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துகள் (எ.கா: ற, கி, பெ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது. இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.
இந்துக்களின் வழிபாட்டுக்குரியதாயமைந்த ஒன்பது கிரகங்கள் நவக்கிரங்கள் எனப்படும்.கிரகம் எனும் சமசுகிருத சொல்( ग्रह ) ஆளுகைப்படுத்தல்—(seizing, laying hold of, holding) எனும் பொருளுடையது. நவக்கிரகம்(சமசுகிருதம்: नवग्रह ), ஒன்பது ஆளுகைக்காரர்கள் எனப் பொருள்படும். புவியிலுள்ள உயிர்க்கூறுகளை ஆளுகைக்குட்படுத்துகின்ற அண்டவெளிக்கூறுகளாக இவை கருதப்படுகின்றன.
கார்த்திக் (பிறப்பு: செப்டம்பர் 13, 1960), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் முத்துராமனின் மகனும் ஆவார். 2006 ஆம் ஆண்டு, அனைத்திந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்று, அரசியல் வாழ்விலும் நுழைந்த இவர் தற்போது அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியைத் துவங்கியுள்ளார்.
விலங்குகள் (Animals), அனிமாலியா (Animalia) அல்லது மெற்றாசோவா (Metazoa) இராச்சியத்தின் பெரும்பாலும் பல உயிரணுக்களாலான, மெய்க்கருவுயிரி உயிரினங்களின் ஒரு மிகப் பெரும் பிரிவாகும். சில விதிவிலக்குகள் தவிர்த்து, அநேகமானவை கரிமச் சேர்மங்களை உட்கொள்பவையாகவும், ஆக்சிசனை சுவாசிப்பவையாகவும், தன்னிச்சையாக நகரக்கூடியவையாகவும் (en:Motility), பாலியல் இனப்பெருக்கம் செய்பவையாகவும், முளைய விருத்தியின்போது வெற்றுக்கோள உயிரணுக்களான கருக்கோளத்திலிருந்து (en:Blastula) வளர்ச்சியடையும் உயிரினமாகவும் இருக்கின்றன. 7 மில்லியனுக்கும் அதிகமான விலங்கு இனங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருப்பினும், கிட்டத்தட்ட 1.5 மில்லியனுக்கும் அதிகமான உயிருள்ள விலங்கு இனங்களே விவரிக்கப்பட்டுள்ளன.
இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்
1975ல் முதல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியதில் இருந்து இதுவரை ஐம்பதிற்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை இந்தியா ஏவியுள்ளது. இந்திய, அமெரிக்க, உருசிய, ஐரோப்பிய ராக்கெட்டுகளின் மூலமும் அமெரிக்க விண்வெளி ஓடத்தின் துணைக்கொண்டும் இவை செலுத்தப்பட்டுள்ளன. இந்திய செயற்கைக்கோளின் பொறுப்பாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் உள்ளது.
கூட்டுறவு வங்கி என்பது கூட்டுறவு அடிப்படையில் அமைக்கப்பட்ட வங்கி ஆகும். இவை பல வகைப்ப்பட்டவை எனினும் இவை பெரும்பாலும் உறுப்பினர்களின் வளங்களைப் பயன்படுத்தி உறுப்பினர்களின் நலனுக்காக நிறுவப்பட்டவை. உறுப்பினர்களுக்கு நியாமான விலையில் கடன் மற்றும் நிதிச் சேவைகளை வழங்குவதே கூட்டுறவு வங்கிகளில் நோக்கம் ஆகும்.
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார்.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் பழங்குடியினர் (36) பட்டியல் சாதிகள் (76) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79)என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
தமிழிலக்கணத்தில், உவமையணி என்பது ஒரு புலவர் தான் பிறருக்குக் கூறக் கருதிய பொருளை அவருக்கு நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது ஆகும். ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகுபடுத்திக் கூறுவதாம்.புலவர் தாம்சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு,தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபுபடுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமை புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும். புலவர் விளக்கிக் கூறக் கருதும் பொருள், 'பொருள்'அல்லது 'உவமேயம்' எனப்படும்.
கர்நாடகப் போர்கள் (Carnatic Wars) என்பன 18ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் நடைபெற்ற மூன்று போர்களாகும். இந்திய ஆட்சியாளர்களின் போர்களில் பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனங்கள் தலையிட்டு மோதிக் கொண்டன. இப்போர்களின் முடிவில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தென்னிந்தியாவில் பலம் பொருந்தி ஆதிக்க சக்தியாக உருப்பெற்றது.
நாராயண் ஜெகதீசன் (Narayan Jagadeesan, பிறப்பு: டிசம்பர் 24, 1995) என்பவர் ஒரு இந்திய துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் அக்டோபர் 27, 2016 அன்று 2016–17 ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு அணிக்காக முதல்-தரப் போட்டிகளில் அறிமுகமானார், அதில் அவர் ஆட்ட நாயகன் விருதை வென்றார். 30 ஜனவரி 2017 அன்று நடைபெற்ற 2016–17 இன்டர் ஸ்டேட் இருபது20 போட்டியில் தமிழ்நாடு அணிக்காக இருபது20 போட்டிகளில் அறிமுகமானார்.
தமிழில் உள்ள உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18, ஆக மொத்தம் 30 எழுத்துகளைத் தமிழ் இலக்கணம் என்னும் மொழியியல் முதலெழுத்து எனக் குறிப்பிடுகிறது. வித்துமுதலைப் போட்டு விளைச்சல் காண்பது போலவும், முதலை வைத்துத் தொழில் செய்து பொருள் ஈட்டுவது போலவும் இந்த 30 முதல் எழுத்துகளை வைத்துதான் தமிழ் இயங்குகிறது. எழுத்துகள் சொல்லாகும்போது சில எழுத்துகள் மொழியோடு தோன்றி எழுத்தின் ஒலியைக் கூட்டியும் குறைத்தும் தருவது உண்டு.
கௌதம புத்தரை அடிப்படையாகக்கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். கௌதம புத்தர் கிறித்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடிய, ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை தாம் கண்டறிந்துள்ளதாக நேபாளத்தில் உள்ள அகழ்வாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்ணதாசன் (ஒலிப்பு ) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.