The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு அறுவடைப் பண்டிகை ஆகும். இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதினேழாவது மக்களவை உறுப்பினர்கள்
இந்தியாவின் பதினேழாவது மக்களவை உறுப்பினர்கள் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத்தேர்தவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த மக்களவை கலைக்கப்படாத வரையில் இது 2024 ஆம் ஆண்டு வரை செயல்படும். தொகுதி வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுட்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
1947 இந்தியப் பிரிவினைக்கு முன்னர், இந்தியாவில் மொத்தம் 562 இந்திய மன்னராட்சி அரசுகள் (Princely States) அல்லது சமஸ்தானங்கள் காணப்பட்டன. இவை பிரித்தானிய இந்திய அரசின் ஆளுகைக்கு உட்படாதவை ஆகும். இருப்பினும் இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் பிரித்தானிய இந்திய அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தி தத்தம் பகுதிகளை ஆண்டு வந்தன.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.புதுக்கோட்டை மாவட்டம் ஜல்லிக்கட்டின் "சொர்க்க பூமியாக " இன்னும் திகழ்ந்து வருகிறது.
கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) ஸ்பெயினின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார்.2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லஸ் புய்க்ரெமாண்ட்டின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இவர் ஸ்பெயினிலிருந்து, காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாக கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் ஜான் பென்னிகுவிக் (John Pennycuick) சென்னை மாகாண சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
2022 உங்கா தொங்கா எரிமலை வெடிப்பும் ஆழிப்பேரலையும்
2022 உங்கா தொங்கா எரிமலை வெடிப்பும் ஆழிப்பேரலையும் (2022 Hunga Tonga eruption and tsunami) 2022 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் தேதியன்று பசிபிக் பெருங்கடலில் நிகழ்ந்தன. தொங்கா நாட்டின் எரிமலைத் தீவான உங்கா தொங்காவில் ஒரு பெரிய வெடிப்பு 15 சனவரி 2022 அன்று ஏற்பட்டது. இந்த வெடிப்பு தொங்கா, பிஜி மற்றும் அமெரிக்க சமோவாவில் சுனாமிகளை ஏற்படுத்தியது.
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, சனவரி 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன.
விஜய் சேதுபதி (16 சனவரி 1978) என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் தென்மேற்கு பருவக்காற்று (2010), பீட்சா (2012), நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (2012), நானும் ரௌடி தான் (2015), சேதுபதி (2016 திரைப்படம்) (2016), 96 (2018) போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் நடிகர் ஆவார். இவர் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்று விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
கீதாபென் வஜேசிங்பாய் ரத்துவா என்று அழைக்கப்படும் கீதாபென் ரத்துவா (Gitaben Rathva) என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் இந்தியாவின் குசராத்தின் சோட்டா உதய்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து 17வது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
காவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடு
தமிழ்நாட்டின் கிராமங்களில் உள்ள நாட்டுப்புறக் காவல் தெய்வங்களின் பட்டியல்: வாழைத்தோட்டத்து அய்யன் கோயில், பல்லடம், திருப்பூர் மாவட்டம் [1] பரணிடப்பட்டது 2014-12-17 at the வந்தவழி இயந்திரம் மாரமங்கலம் அருள்மிகு ஸ்ரீ சுடலை ஈஸ்வரர் திருக்கோவில் நள்ளி சிங்கமுடைய அய்யனார் கோவில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் ஸ்ரீவடுவச்சி அம்மன் கோவில் வீரகனூர் ஸ்ரீதண்டியாகரன் சாமி வீரகனூர் சேலம் மாவட்டம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில் வீரகனூர் பாவாடைராயன் முன்னோடியார் . முண்டசாமி ஐயனார் இசக்கியம்மன் பேச்சியம்மன் சுடலைமாடசாமி சங்கிலிமாடசாமி சந்தன மாடசாமி வெட்டு மாடசாமி வேட்டை மாடசாமி அக்கினி மாடசாமிகுத்துக்கல்மாடசுவாமி குத்துக்கல்மாடசுவாமி தளவாய் மாடசாமி கொம்ப மாடசாமி இசக்கி மாடன் மாயாண்டி சாமி முப்பலி மாடசாமி பலவேசகாரன் ஊர்காவலன் மாடக்குளம் கபாலிஸ்வரி அம்மன் சப்த கன்னிமார்கள் ஐக்கோர்ட மகாராஜ வேம்படிசுடலை சாஸ்தா அய்யனார் லாடசன்னாசி முத்து வீரன் சின்னதம்பி சேர்வாரன் கறுப்புசாமி பதினெட்டாம்படி கருப்பண்ணச்சாமி, அழகர்கோயில், மதுரை கொம்புகாரன் கருப்பு, முட்டாஞ்செட்டி கிராமம், நாமக்கல் மாவட்டம் மதுரை வீரன் ஒண்டிவீரன் வடகாட்டு எல்லைக் கருப்பன், பாச்சலூர், அருள்மிகு முத்து இருளப்ப சுவாமி ,பெரிய கோட்டை ஒட்டன்சத்திரம் இடும்பன், பழனி பொன்னர் சங்கர், கொங்கு மண்டலம் காத்தவராய சுவாமி நல்ல தங்காள், அருச்சுனாபுரம், வத்திராயிருப்பு, விருதுநகர் மாவட்டம் காளி தீரன் சின்னமலை கவுண்டர் காங்கேயம் சுற்றியுள்ள சில பகுதிகள் துப்பாக்கி கவுண்டர் முச்டையாண்டி வானவராய மன்றாடி கவுண்டர், சமத்தூர் இராவுத்தகுமாரர் பஞ்ச பாண்டியர் (ஐவர் இராசக்கள்) மங்கலதேவி கண்ணகி கோவில் காடையூர் வெள்ளையம்மாள் குன்னிமரக் கருப்பண்ணசாமி கோவில் கருப்பசாமி செகுட்டையனார் கோயில் செல்லாண்டியம்மன் மதுரை பாண்டி முனீசுவரன் சதுரகிரி பிலாவடி கருப்பசாமி பேச்சி அம்மன்ஒச்சாண்டம்மன் முனீஸ்வரன் கோயில் மல்லாண்டார் மூதேவி அம்மன் ரோதை முனி வடக்கு வாசல் செல்வி அம்மன் வைரப்பெருமாள் வாழைத்தோட்டத்து அய்யன் கற்குவேல் அய்யனார் சோணையா கோயில் குறுமலை பொய்யாலப்பன் அய்யனார் கோவில் முத்தாரம்மன் கோயில் தம்பிக்காளை அய்யன் கோயில், தண்ணீர்பந்தல் பாளையம், கஞ்சிக்கோவில் 638116 சொரிமுத்து அய்யனார் கோயில், பாபநாசம், நெல்லை கோணூர் சந்தன கருப்பண்ண சுவாமி திருக்கோயில், திண்டுக்கல் மேலக்கால் கருப்பணசாமி, அய்யனார் திருக்கோயில், மதுரை மாடக்குளம் ஈடாடி அய்யனார் திருக்கோயில், மதுரை பனங்குளம் அய்யனார் திருக்கோயில், புதுக்கோட்டை தூத்தாகுடி வடவக்கூத்த அய்யனார் திருக்கோயில், புதுக்கோட்டை கொத்தவாசல் காரிய ஐய்யனார் திருக்கோயில், திருவாரூர் தண்டளை ஹரிஹர புத்திர ஐயனார் திருக்கோயில், திருவாரூர் தென்மருதூர் கருப்பைய ஐயனார் திருக்கோயில், திருவாரூர் அரியலூர் கோட்டை முனியப்பன் திருக்கோயில், அரியலூர் தென்னம்பாக்கம் அய்யனார் திருக்கோயில், கடலூர் திருநாரையூர் ஐயனார் திருக்கோயில், கடலூர் ராஜபாளையம் நீர் காத்த அய்யனார் திருக்கோயில், விருதுநகர் எல்லையம்மன் பிடாரி அம்மன் ராக்காயி அம்மன், அழகர்கோயில், மதுரை காத்தாயி அம்மன் அருள்மிகு சீலைக்காரி திருக்கோயில், கோம்பை, தேனி மாவட்டம் முனியாண்டி வீரமாகாளி திருநெல்வேலி கருப்புசாமி கோயில் சின்னக் கருப்பன் பெரிய கருப்பன் சங்கிலி கருப்பன் ஆகாய கருப்பன் மார்நாட்டு கருப்பன் தூண்டிக் கருப்பன் சமயக் கருப்பன் சந்தணக் கருப்பன் மலையாள கருப்பன் சப்பாணி கருப்பன் சோணை கருப்பன் சோணையா சாமி காட்டேரி அம்மன் மாரி அம்மன் காளி அம்மன் பிடாரி அம்மன் கருமாரி அம்மன் பெரியாட்சியம்மன் பச்சை தண்ணி அம்மன் பால் பழக்காரி அம்மன் சோலை அம்மன் மாசாணியம்மன் பழையனூர் நீலி, சிவங்கை மாவட்டம் சோணைக் கருப்பு பேச்சியம்மன் திரெளபதி அம்மன், மதுரைநகர் நொண்டி வீரன் வீரகாரன் பாப்பாத்தியம்மன், கொம்புகாரன் கருப்பு, முட்டாஞ்செட்டி கிராமம், நாமக்கல் மாவட்டம். மதுரை கோடாங்கி நாயக்கர் பரம்பரை கொண்டாடும் இருளப்பசாமி விராட்டிபத்து காமாட்சி அம்மன்.
மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
பிள்ளையார் அல்லது விநாயகர் (சமசுகிருதம்: गणेश; சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி: கணேஷா; கேட்க ), இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள். விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாகக் காணப்படுகிறது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார்.
முல்லைப் பெரியாறு அணை அல்லது முல்லைப் பேரியாறு அணை (Mullaiperiyar Dam) மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. இது கட்டப்பட்டுள்ள இடம் கேரளாவுக்கு உரிமையானது, தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையைப் பராமரித்து வருகிறது..
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.இவர் 1945 ஆகத்து 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், அல்லது உருசியாவிற்குச் சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆகத்து 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது, போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியது.
அகோம் பேரரசு (Ahom kingdom) (ஆட்சிக் காலம்: 1228 - 1826), வடகிழக்கு இந்தியாவின், பிரம்மபுத்திரா ஆறு பாயும் தற்கால அசாம் பகுதியில், தில்லி சுல்தானகம், மொகலாயர் மற்றும் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போது 600 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது. இப்பேரரசை 1228இல் நிறுவியவர் சுகப்பா ஆவார். இப்பேரரசின் தலைநகராக ஜோர்ஹாட் நகரம் விளங்கியது.
வினோத் பாய் சாவ்டா என்பவா் குஜராத் மாநிலத்தின் காச் சோ்ந்த அரசியல்வாதி ஆவாா். இவா் பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) சார்ந்தவர் ஆவாா். இவா் 2014 மக்களவை தேர்தலில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்.இவர் வெற்றி பெற்று 562855 வாக்குகள் எதிராக இத்தோ்தலில் டாக்டர் தினேஷ் பார்மரை, எதிா்த்து போட்டியிட்டு, 562855 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.
மெசொப்பொதாமியா (Mesopotamia), பண்டைய அண்மை கிழக்கின் தென்மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஒரு பிரதேசமாகும். இது டைகிரிசு ஆறு மற்றும் யூபிரட்டீஸ் ஆறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட வளமான வண்டல் மண் பகுதியாகும். இதன் வடக்குப் பகுதிகளை மேல் மெசொப்பொத்தேமியா என்றும், தெற்குப் பகுதிகளை கீழ் மெசொப்பொத்தேமியா என்றும் பிரிப்பர்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
உலகின் புதிய ஏழு அதிசயங்கள் (New 7 Wonders of the World, 2000-2007) என்பது உலகின் பழைய ஏழு அதிசயங்களின் யோசனையை புதிய அதிசயங்களின் ஒரு பட்டியலைக் கொண்டு புதுப்பிப்பதாகும். நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை என்னும் தனியார் நிறுவனம் பிரபலமுற்றவைக்கான கருத்துக்கணிப்பு ஒன்றினை ஏற்பாடு செய்தது, வெற்றி பெற்றவை 2007 சூலை 7 அன்று போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் அறிவிக்கப்பட்டன100 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் தங்கள் வாக்குகளை இணையம் வழியாக அல்லது தொலைபேசி வழியாக பதிவு செய்ததாக சுவிட்சர்லாந்து நாட்டை மையமாகக் கொண்டு செயல்படும் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தெரிவிக்கிறது. ஒருவரே பலவாக்குகளை பதிவு செய்வதை தடுக்க வழியில்லாததால், இந்த கருத்துக்கணிப்பு "தீர்மானமாக அறிவியல்பூர்வமற்ற" ஒன்றாகக் கருதப்படுகிறது.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
காமதா இராச்சியம் (Kamata kingdom) (pron: ˈkʌmətɑ), காமரூப பால வம்சத்தினரின் காமரூபப் பாலப் பேரரசின் ( 350–1140) வீழ்ச்சிக்குப் பின்னர் கிபி 13-ஆம் நூற்றாண்டில் எழுச்சியுற்ற இராச்சியமாகும்.காமதா இராச்சியத்தின் இறுதி மன்னரை, தில்லி சுல்தானகத்தின் வங்காளப் பிரதேச ஆளுநர் அலாவுத்தீன் உசைன் ஷா, ஆட்சியிலிருந்து அகற்றினாலும், அவரால் காமரூபப் பேரரசில் தனது ஆட்சியை நிலைநிறுத்த இயலவில்லை. இதனால் 1586-இல் காமதாப் பேரரசை அகோம் வம்சத்தினர் கைப்பற்றி ஆண்டனர். சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் காமதா இராச்சியத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கூச் பெகர் தலைநகராகக் கொண்டு 1586-இல் கூச் பெகர் இராச்சியம் நிறுவப்பட்டது.
கமலா சொஹோனே (Kamala Sohonie) (1912 செப்டம்பர் 14 முதல் 1998 ஜூன் 28 வரை) 1939 ஆம் ஆண்டில் அறிவியல் துறையில் ஒரு முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் இந்தியரும், பிரித்தானியப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் முனைவர் பட்டம்பெற்ற முதல் இந்தியரும் ஒரு முன்னோடி இந்திய உயிர்வேதியியலாளரும் ஆவார். பெங்களூருஇந்திய அறிவியல் கழகத்தில் பணியில் சேர்ந்ததன் மூலம் பெண்கள் முதல் தடவையாக அதன் வரலாற்றில் அனுமதிக்கப்படுவதற்கு வழிவகுத்தார்.அவரது ஆய்வு பருப்பு வகைகள், நெல் போன்றவற்றிலிருந்து கிடைக்க வேண்டிய வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் ஆகியவை கிடைக்காத மக்களுக்கு அதை எவ்வாறு ஈடுகட்டுவது என்பதாக இவரது ஆய்வு இருந்தது.பனை மரத்திலிருந்து பிரிக்கப்படும் நீராஎன்று பானத்தின் நன்மைகள் பற்றிய அவரது ஆராய்ச்சிப் பணியானது, குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் அவர்களின் ஆலோசனையினால் ஊக்கம் பெற்றது.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
அருண்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராஜராஜ சோழன் சோழ பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராஜேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே.
தேவநேயப் பாவாணர் (Devaneya Pavanar; 7 பிப்பிரவரி 1902 – 15 சனவரி 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார்.
அல்லு அர்ஜுன் (ஆங்கில மொழி: Allu Arjun) (பிறப்பு: 8 ஏப்ரல் 1983) ஒரு தெலுங்கு மொழி திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், விளம்பர நடிகர், நடனக் கலைஞர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் ஆர்யா, தேசமுடுரு, சங்கர் தாதா சிந்தாபாத், ஆர்யா 2, வருடு, வேதம், ரேஸ் குர்ராம் உள்ளிட்ட 20வதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இரண்டு முறை நந்தி விருதுகளைப் பெற்றவர்.
சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்
தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்: ஆண்டு - படைப்பு (தன்மை) - படைப்பின் எழுத்தாளர் 1955 - தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) - ரா. பி. சேதுப்பிள்ளை 1956 - அலை ஓசை (நாவல்) - கல்கி கிருஷ்ணமூர்த்தி 1957 - (விருது வழங்கப்பட வில்லை) 1958 - சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை) - சி.
வன்னியர் (Vanniyar) அல்லது வன்னிய குல சத்திரியர் (Vanniya Kula Kshatriya's) எனப்படுவோர் தமிழகத்தில் குறிப்பாக வடதமிழகத்தில் (காவேரி ஆற்றின் வடக்கு பகுதிகளில்) அடர்த்தியாகவும், மற்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலும் வாழுகின்ற ஒரு மிகப்பெரிய தமிழ் சாதியினர் ஆவர். இவர்கள் புதுச்சேரி, தெற்கு கருநாடகம் மற்றும் தெற்கு ஆந்திரா போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
வேலைவாய்ப்பின்மை என்பது ஒரு நபர் வேலை செய்யத் தயாராகவும் விருப்பத்துடனும் இருந்து ஆனால் அவர் தற்போது வேலையின்றி இருக்கிறார் என்பதைக் குறிப்பிடுவதாகும். வழக்கமாக வேலைவாய்ப்பின்மையின் விகிதத்தைப் பயன்படுத்தி மேலோங்கப்படும் வேலைவாய்ப்பின்மை அளவிடப்படுகிறது. இங்கு தொழிலாளர் ஆற்றலில் வேலையில்லாதவர்களைக் கொண்டு சதவீதம் வரையறுக்கப்படுகிறது.
இலங்கை (ஒலிப்பு ) (Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, சிறீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.