The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) ஸ்பெயினின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார்.2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லஸ் புய்க்ரெமாண்ட்டின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இவர் ஸ்பெயினிலிருந்து, காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாக கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
பட்டாம்பூச்சி அல்லது வண்ணத்துப் பூச்சி அல்லது வண்ணாத்திப் பூச்சி (butterfly) என்பது கண்ணைக் கவரும், மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள பறக்கும் பூச்சி இனமாகும். பற்பல வண்ணங்களில் இறக்கைகள் கொண்டு, அழகாக இருப்பதனால், இவை வண்ணத்துப் பூச்சி எனவும் அழைக்கப்படுகின்றன. இப்பூச்சிகள் மலர்களில் இருந்து தேனை உறிஞ்சிப் பருகுவதும், மிக ஒடிசலாக இங்கும் அங்கும் சிறகடித்துப் பறப்பதும் பலரையும் கண்டு களித்து இன்புறச்செய்யும்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுட்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
தமிழ்நாட்டில், மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக, அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிதிவண்டி உதிரிப் பாகங்கள் பட்டியல்
Bicycle - மிதிவண்டி, ஈருளி Tube - மென் சக்கரம், தூம்பு Tyre - வன் சக்கரம், உருளிப்பட்டை, மெத்துருளி Front wheel - முன் சக்கரம், முன்னாழி Rear wheel (or) Back wheel - பின் சக்கரம், பின்னாழி Free wheel - வழங்கு சக்கரம் Sprocket - இயக்குச் சக்கரம் Multi gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம் Training wheels - பயிற்சிச் சக்கரங்கள், பயிலாழிHub - குடம், ஆழிக்குடம், நடு Front wheel axle - முன் அச்சுக் குடம், முன்னாழி அச்சு Rear wheel axle - பின் அச்சுக் குடம், பின்னாழி அச்சு Rim - சக்கரச் சட்டகம், ஆழி வளைGear - பல்சக்கரம், பல்லாழி Teeth - பல் Wheel bearing - சக்கர உராய்வி Ball bearing - பந்து உராய்வி, உண்டைத் தாங்கி (தாங்கி = bearing) Bottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு Cone cup - கூம்புக் கிண்ணம் Mouth valve - மடிப்பு வாய், ஒருபோக்கி வாய் Mouth valve cover - மடிப்பு வாய் மூடி, ஒருபோக்கி வாய்மூடிChain - சங்கிலி Chain link - சங்கிலி இணைப்பி Chain pin - இணைப்பி ஒட்டி Adjustable link - நெகிழ்வு இணைப்பி Circlip - வட்டக் கவ்வி Chain lever - சங்கிலி நெம்பிFrame - சட்டகம் Handle bar - பிடி செலுத்தி, கைத்திருப்பி, கைச்செலுத்தி Gripper - பிடியுறை Cross Bar - குறுக்குத் தண்டு Cross Bar cover - குறுக்குத் தண்டு உறை Sissy Bar - சிறுமியர் இருக்கைத் தண்டுDynamo - மின் ஆக்கி Head light - முகப்பு விளக்கு, முன்விளக்கு Danger light (or) Light reflector - அபாய விளக்கு (அ) ஒளிதிருப்பி, பின் ஒளிர்வி Rearview Mirror - பின்காட்டி, பின் ஆடிBack Carrier - பொதி பிடிப்பி, பின் சுமைதி Front Carrier Basket - பொதி ஏந்தி, முன் கூடை Carrier support legs - பொதி பிடிப்பித் தாங்கு கால்கள், சுமைதி கால் Side box - பக்கவாட்டுப் பெட்டி, பக்கப் பெட்டிStand - நிலை, நிற்பி Side stand - சாய்நிலை, சாய் நிற்பி Speedo meter (Odo meter) - வேகம்காட்டி, விரைவளவி, விரைவுமானி Fender - வண்டிக் காப்பு Derailleurs - பற்சக்கர மாற்றி, பல்லாழி மாற்றி Peg - ஆப்பு Air pump - காற்றழுத்தி, காற்றேற்றி Shock absorber - அதிர்வு ஏற்பி, அதிர்வு குறைப்பிBreak - நிறுத்தி, தடை Break shoes - நிறுத்துக்கட்டை, தடைக்கட்டை Break wire - நிறுத்திழை, நிறுத்திக் கம்பி Break Lever - நிறுத்து நெம்பி Front break ankle - முன் நிறுத்துக் கணு Back break ankle - பின் நிறுத்துக் கணு Disc brake - வட்டு நிறுத்தி Break connecting links - நிறுத்தி இணைப்பிகள்Pedal - மிதிக்கட்டை Reflecting Pedal - ஒளிதிருப்பி மிதிக்கட்டை, எதிரொளிர் மிதிகட்டை Pedal cover - மிதிக்கட்டை உறை Pedal cup - மிதிக்கட்டைக் குமிழ் Pedal rod - மிதிக்கட்டைத் தண்டு Spindle - சுழலும் மிதிக்கூடு, தண்டு, சுழல்தண்டுSeat (Saddle) - இருக்கை Seat Post - இருக்கை தாங்கி Baby Seat - குழந்தை இருக்கை Seat cover - இருக்கை உறை Leather Seat - தோல் இருக்கை Cushion seat - மெத்திருக்கைWasher - நெருக்கு வில்லை, இடை வில்லை Tension washer - மிகுநெருக்கு வில்லை, நெருக்கு வில்லை Screw - திருகுமரை, திருகாணி, திருகு கூராணி Nut - ஆணி இறுக்கி, மரை வில்லை Bolt - திருகாணி, திருகுதண்டு Spring - சுருள் Bush - உள்ளாழி Lever - நெம்பி Rust - துரு Balls - பொடிப்பந்துகள், உண்டைமணி Crank - வளைவு அச்சு Rivet - கடாவு ஆணி Axle - அச்சு Spring chassis - சுருள் அடிச்சட்டம் Nose spring - சுருள் முனை Fork - கவை Horn - ஒலியெழுப்பி, ஒலிப்பி Cable - கம்பியிழை, வடம் Knuckles - மூட்டுகள் Clamp - கவ்வி Ring - வளையம் Hole - ஓட்டை Hook - கொக்கி Spokes - ஆரக்கால்கள் Spoke fixing screw - ஆரக்கால் திருகாணி Spanner - மறைதிருகி Spokes spanner - ஆரக்கால் மறைதிருகி Screw driver - திருப்புளி Tools - கருவிகள் Pocket tools - பையடக்கக் கருவிகள்Front Mud Guard - முன் மணல் காப்புறை Back mud guard - பின் மணல் காப்புறை Chain Guard - சங்கிலிக் காப்புறை Dress Guard - ஆடைக் காப்புறை Gloves - கையுறை Head set - தலைக்கவசம் Wrist band - மணிக்கட்டுப் பட்டைBell - மணி Bell lever - மணி நெம்பி Bell cup - மணி மூடி Bell spring - மணிச் சுருள் Bell frame - மணிச் சட்டகம் Bell rivet - மணி கடாவி Bell fixing clamp - மணிப் பொருத்திLock - பூட்டு Lock fixing clamp - பூட்டுப் பொருத்தி Key - சாவி Key chain - சாவிக் கொத்து Chain lock - சங்கிலிப் பூட்டுInner wire - உள்ளிழை Electrical parts - மின்னணுப் பாகங்கள் Lighting Spoke - ஒளிரும் ஆரக்கால் Spokes with balls - மணிகோத்த ஆரக்கால் Extra fittings - கூடுதல் பொருத்திகள்Foot rest - கால்தாங்கி Baby foot rest - குழந்தைக் கால்தாங்கி Water bottle - தண்ணீர்க் குடுவைRacing cycle - பந்தய மிதிவண்டி Mini cycle - சிறு மிதிவண்டி Mountain cycle - மலை மிதிவண்டி Foldable cycle - மடக்கு மிதிவண்டி Wheel chair - சக்கர நாற்காலி Beach cruiser - கடற்கரைத் துரிதவண்டி One-wheel cycle - ஒரு சக்கர மிதிவண்டி High-tech bike - அதிநுட்ப வண்டி Kid cycle - சிறுவர் மிதிவண்டி Ladies cycle - மகளிர் மிதிவண்டி Tri cycle - முச்சக்கர வண்டி (அ) பொதி மிதிவண்டி Cycle with motor - உந்து மிதிவண்டிInflating - காற்றடித்தல் Patch - பட்டை Patching - பட்டை வைத்தல் Patch work - சிறு வேலை (அ) சில்லறை வேலை Over hauling - முழுச் சீரமைத்தல் Painting - வண்ணம் தீட்டல் Lubrication - எண்ணெய் இடல் Wheel bend removal - கோட்டம் எடுத்தல்Puncture - துளை Puncture closure - துளைமூடல் Puncture lotion - துளைமூடு பசை Emory paper (Abrasive sheet) - தேய்ப்புப் பட்டை (உப்புத் தாள்) Wooden mallet - மரச் சுத்திGrease - உயவுப் பசை Lubricant oil - உயவு எண்ணெய் Waste oil - கழிவு எண்ணெய்seat, saddle = குந்துகை, இருக்கை handle bar = கைப்பிடிப் பாளை (தென்னம் பாளை என்பதில் வரும் பாளை என்பது bar என்பதையே குறிக்கிறது.) wheel = வளை/வளவி (கையில் போடுவதும் வளவி தான்.) mud guard = மட் காப்பு (மண்+காப்பு) stand = தண்டை (தண்டு கொள்ளுதல் என்பது இருத்தலும் நிலைத்தலும் ஆகும்.) carrier = தூக்கி pedal = மிதி spoke = போழ்க்கு (போழுதல் என்பது கூர்மையாகக் குத்துதல். போழ்க்குகள் இங்கே சக்கர விளிம்பில் இருந்து நடுவத்தை நோக்கிப் போவது போழ்க்குவதாய் இருக்கிறது.) wheel rod = வளை/வளவி உரல் (எல்லாவற்றிற்கும் தண்டு எனவே சொல்லிக் கொண்டிராமல் உரல் என்ற சொல் இங்கே பயனாகிறது. கம்பு, தண்டு, தடி, உரல் எனப் பலவற்றையும் வேறுபாடு விளங்கிப் பயன்படுத்த வேண்டும்.) bell = மணி rim = விளிம்பு tube = தூம்பு tyre = தோலி (வியப்பாக இருக்கும்; தோலில் இருந்த கிளைத்த தோலி என்பது பழத்திற்கு மட்டுமல்லாமல் எல்லாவிதமான மேல் உறைகளுக்கும் பயன்படக் கூடிய சொல் தான்) chain = கணை (கண்ணி கண்ணியாய் கோத்துக் கணைத்தது கணை) break = தடை forks = பிரிகை sprocket = பற்சகடு gears = பல்லிணை pump = இறைப்பி dynamo = துனைமி ("கதழ்வும் துனைவும் விரைவுப் பொருள" என்பது தொல்காப்பியம்.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் (Local government bodies in Tamil Nadu) என்பது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தின் ஊர்களை அந்த ஊரின் மக்கள் தொகை மற்றும் வருவாய்க்கு ஏற்பப் பிரிக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரிவுகளைக் குறிக்கும். இந்திய அரசியலைப்புச் சட்டம் பகுதி IV ல் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அதிகாரங்கள் பொறுப்புகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் ஊராட்சிகள் சட்டம் 1994 இயற்றப்பட்டு, 1994 ஏப்ரல் 22ம் தேதி நடைமுறைக்கு வந்தது.
வடமொழி என்பது பிராகிருதம் (Prakrits), சமசுகிருதம் (Sanskrit) போன்ற மொழிகளுக்கு கொடுக்கப்பட்ட பொதுப்பெயர். தமிழகத்திற்கு வடக்கில் இவை பேசப்பட்டதால் இவற்றை வடமொழி என்று தமிழில் பொதுவாகக் குறித்தனர். தொல்காப்பிய உரை ஆசிரியர்களுள் ஒருவரான தெய்வச்சிலையார் தொல்காப்பியத்தில் குறிக்கப்படும் வடசொல்லுக்கு உரை எழுதுகையில் பாகத மொழிகளை வடசொல்லுக்குரிய மொழிகள் என வலியுறுத்துகிறார்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
திராவிட முன்னேற்றக் கழகம் (Dravida Munnetra Kazhagam, திமுக) என்பது ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும். குறிப்பாக இக்கட்சி தமிழ்நாடு மாநிலத்திலும், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் செயற்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுக, இந்திய அளவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற கூட்டமைப்பில் ஒரு கட்சியாக செயல்படுகிறது.
மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் படுகொலை
மகாத்மா காந்தி ஜனவரி 30, 1948 அன்று ஒளிவு மறைவின்றி நாதுராம் கோட்சே வால் சுட்டுக்கொல்லப்பட்டது மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் படுகொலை என்று கூறப்படுகிறது. 1934 ல் இருந்து தொடர்ந்து 5 முறை அவரை கொலை செய்ய முயன்று தோற்று , 6 வது முறை அவர் கொலை செய்யப்பட்டார் .
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.இவர் 1945 ஆகத்து 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், அல்லது உருசியாவிற்குச் சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆகத்து 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது, போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியது.
தமிழ்நாட்டின் உள்ளாட்சி தேர்தல்
நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of chief ministers of Tamil Nadu) அதன் முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920 முதலான வரலாற்றில் இருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
இலங்கை (ஒலிப்பு ) (Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, சிறீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்
தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்: ஆண்டு - படைப்பு (தன்மை) - படைப்பின் எழுத்தாளர் 1955 - தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) - ரா. பி. சேதுப்பிள்ளை 1956 - அலை ஓசை (நாவல்) - கல்கி கிருஷ்ணமூர்த்தி 1957 - (விருது வழங்கப்பட வில்லை) 1958 - சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை) - சி.
பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு அறுவடைப் பண்டிகை ஆகும். இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
கண்ணதாசன் (ஒலிப்பு ) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
கோரா துவோர்கின் (Cora Dvorkin) ஓர் அர்ஜென்டீன இயற்பியலாளரும் கோட்பாட்டு அண்டவியலாளரும் ஆர்வார்டு பல்கலைக்கழக இயற்பியல் துறை இணைப்பேராசிரியரும் ஆவார். இவரது ஆய்வுப் புலங்கள் கரும்பொருண்மத்தின் தன்மை, நொதுமியன்களும் பிற மெல்லெடைத் துகள்களும் தொடக்கநிலைப் புடவியின் இயற்பியலுமாகும். இவர் புதிதாக நிறுவிய செயற்கை அறிதிறனுக்கான நிறுவனத்துக்கும் அடிப்படை இடைவினைகள் வாரியத்துக்குமான ஆர்வார்டு பேராளர் ஆவார்.இவர் 2019ஈல் அமெரிக்க ஆற்றல் துறையின் தொடக்கநிலை வாழ்க்கைப்பணி விருதைப் பெற்றுள்ளார்.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் பழங்குடியினர் (36) பட்டியல் சாதிகள் (76) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79)என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, சனவரி 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன.
வைணவ சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள் ஆவர். தென்மொழியாம் தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர். அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் ஆண்டாளையும், இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது.
கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
பகவத் கீதை (pronunciation ) (சமக்கிருதம்: श्रीमद्भगवद्गीता, Bhagavad Gita) என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்கு கடவுளின் பாடல்கள் என்று பொருள்படும். மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அருச்சுனன் அங்கே அவன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தார்.
உழவு அல்லது வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொள்கிறான்.
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்
இந்தியாவில் 28 மாநிலங்களும், டெல்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 8 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, ஜம்மு காஷ்மீர், டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் இந்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்களைக் கொண்ட, குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும்.
தேசிய கல்வி கொள்கை 2019 (NPE) இந்தியாவின் மக்களிடையே கல்வியை மேம்படுத்துவதற்கான இந்திய அரசால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் உள்ள கல்லூரிகளுக்கு ஆரம்ப கல்வியை இந்தக் கொள்கை உள்ளடக்கியுள்ளது. முதல் தேசிய கல்வி கொள்கை1968 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி இந்திரா காந்தி அரசாங்கமும் மற்றும் இரண்டாவது தேசிய கல்வி கொள்கை பிரதம மந்திரி ராஜீவ் காந்தியால் 1986 ல் வெளியிடப்பட்டது.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (Indian Agricultural Research Institute), புசா நிறுவனம் என்றும் அழைக்கப்படும்- ஐ.ஏ.ஆர்.ஐ, இந்தியாவின் முதன்மை வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி அமைப்பாகும். 1905ல் பீகார் மாநிலம் புசா என்ற இடத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ஐ.ஏ.ஆர்.ஐ) அமெரிக்க வள்ளல் ஹென்ரி பிலிப்ஸ் என்பவரது கொடையால் தொடங்கப்பட்டது. பீகார் நிலநடுக்கத்தால் பாதிப்படைந்த இக்கழகம் 1936ல் மகாராட்டிரா மாநிலத்தின் பூசாவல் நகரத்திற்கு மாற்றப்பட்டது.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
ஆழ்மயக்கம் (Coma=கோமா) என்பது வலியை ஏற்படுத்தும் தூண்டல்களுக்கோ, ஒளி, அல்லது ஒலிக்கோ எந்த ஒரு எதிர்வினையும் காட்டாமல் இருப்பதுடன், தன்னிச்சையாக எந்தவொரு இயக்கத்தையோ / செயலையோ செய்ய முடியாமல், சாதாரணமாக உறங்கி, விழித்திருக்கும் வட்டத்தை இழந்து, ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக, உணர்வுகளை இழந்து, விழித்தெழச் செய்ய முடியாத நிலையில் தொடரக்கூடிய ஒரு மருத்துவ நிலைமையைக் குறிக்கும். ஆனாலும் கிளாஸ்கோ ஆழ்மயக்க வரையறையின்படி (Glasgow Coma Scale) , குழப்பத்திலுள்ளவர்களையும் மிதமான ஆழ்மயக்கத்தில் உள்ளவர்களாகக் கொள்ளலாம். இந்த ஆழ்மயக்கமானது, உணர்விழந்த நிலை, உணர்விழந்த மயக்க நிலை, செயலிழந்த மயக்க நிலை, நினைவற்ற நிலை என பலவகையாக அழைக்கப்படும்.
கருத்தரிப்பு என்பது, பாலூட்டிகளில், கருக்கட்டல் நிகழ்வின்போது உருவாகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்த சந்ததிக்கான உயிரி, முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கரு நிலையில் குழந்தை பிறப்புவரை, பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையில் பதிந்து, தாங்கிக் கொள்ளப்படும் நிலையாகும். இந்தக் கட்டுரையில் மனிதரில் நிகழும் கருத்தரிப்பே விரிவாக ஆராயப்படுகின்றது. மனிதரில், பருவமடைந்த ஆரோக்கியமான பெண்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள் உற்பத்தியாகும்.
தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் எனச் சித்தரிக்கப்படும் சங்க காலம் தமிழ்ப் புலவர்கள் நிறைந்து வழிந்த காலம். அக்காலத்தில் ஆண்பாற் புலவர்களுக்குச் சளைக்காமல் பெண்பாற் புலவர்களும் இலக்கிய ஆளுமை மிக்கவர்களாகக் காணப்பட்டனர். சிறந்த பல தனிப்பாடல்களை, தொகுப்புக்களை இப்பெண்பாற் புலவர்கள் தமிழ் உலகுக்கு ஈந்தபோதும் அவர்களின் இயற்பெயர் அத்தொகுப்புக்களிலோ, தனிப்பாடல்களிலோ ஈண்டு குறிப்பிடப்படவில்லை என்பதை இலக்கியங்களை ஆராயும்போது தெளிவாகிறது.
கிலோகிராம் (குறுக்கம்: கிகி) என்பது சீர்தரம் செய்யப்பட்ட அனைத்துலக முறை அலகுகளில் உள்ள அடிப்படையான நிறை அலகு.ஒரு கிலோகிராம் நிறை என்பது பிளாட்டினம்-இரிடியம் கலவையால் செய்யப்பட்டு பிரான்ஸ் நாட்டில் செவ்ரே என்ற இடத்தில் மிகவும் பாதுகாப்பாக சீரான வெப்ப அழுத்த நிலைகளில் வைக்கப்பட்டுள்ள ஒரு பொருளின் நிறை ஆகும். இப்பொருளை Le Grand K (லெ ‘கிரான்) என்று பிரெஞ்சு மொழியிலும், IPK அல்லது International Prototype Kilogram (அனைத்துலக முதலுருக் கிலோகிராம் என்று பொருள்படும் இன்ட்டர்நேசனல் புரோட்டோ டைப் கிலோகிராம்) என்று ஆங்கிலத்திலும் அழைக்கிறார்கள். ஒரு கிலோகிராம் என்பது சற்றேறக்குறைய ஒரு லிட்டர் நீரின் நிறையை ஒத்தது.
வன்னியர் (Vanniyar) அல்லது வன்னிய குல சத்திரியர் (Vanniya Kula Kshatriya's) எனப்படுவோர் தமிழகத்தில் குறிப்பாக வடதமிழகத்தில் (காவேரி ஆற்றின் வடக்கு பகுதிகளில்) அடர்த்தியாகவும், மற்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலும் வாழுகின்ற ஒரு மிகப்பெரிய தமிழ் சாதியினர் ஆவர். இவர்கள் புதுச்சேரி, தெற்கு கருநாடகம் மற்றும் தெற்கு ஆந்திரா போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.
அருண்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராஜராஜ சோழன் சோழ பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராஜேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே.
ஆஸ்திரேலியாவின் உள்ளூராட்சிப் பகுதிகள்
உள்ளூராட்சிப் பகுதிகள் (Local Government Area, LGA) எனப்படுவது ஆஸ்திரேலியாவின் தனிப்பட்ட உள்ளூராட்சிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளைக் குறிக்கும். மாநிலத்துக்கு மாநிலம் உள்ளூராட்சிகளின் பெயர்கள் மாறுபடுகின்றன. தன்னாட்சி நகரம் (Borough), நகரம் (city), மாவட்டம், நகராட்சி (municipality), வட்டாரம் (Region), கிராமிய நகரம் (Rural City), ஷயர் (Shire), மற்றும் சிறுநகரம் (Town) ஆகியவை ஆகும்.
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவார். இவர் அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.
தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thai Valthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ் மொழியை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.
கார்லஸ் ரே "சக்" நோரிஸ் (மார்ச் 10, 1940 -இல் பிறந்தவர்) ஒரு அமெரிக்க வீரத் தற்காப்புக் கலை கலைஞர், நடிகர் மற்றும் ஊடக பிரபலம் ஆவார். அமெரிக்க வான் படையில் தன் சேவை முடிந்த பின், ஒரு தற்காப்பு வீரக்கலை கலைஞராக பிரபலமடையத் தொடங்கினார், அதோடு அவரது சொந்த பள்ளியான சன் குக் டோவையும் தொடங்கினார். வே ஆப் த டிராகன் போன்ற ஆக்ஷன் படங்களிலும் தோன்றினார், அதில் புருஸ் லீயுடன் இணைந்து நடித்தார், 1980களில் த கேனான் குரூப்பின் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்தார்.