The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) ஸ்பெயினின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார்.2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லஸ் புய்க்ரெமாண்ட்டின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இவர் ஸ்பெயினிலிருந்து, காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாக கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
கூட்டுறவு இயக்க வரலாறு இங்கிலாந்து நாட்டில் முதன் முதலாக கூட்டுறவு இயக்கமானது, ரோச்டேல் பயனீர் என்பவரால் சிந்திக்கப்பட்டு, 1844-ஆம் ஆண்டில் அவரது நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்கள் கொண்ட கூட்டம் கூட்டப்பட்டு, அந்த கூட்டத்தில் தாமே, தங்களுக்குள், தங்கள் தேவைக்காக தங்கள் மூலம் என்ற கொள்கைகளுடன் ரோச்டேல் சமத்துவ முன்னோடிகள் கூட்டுறவு பண்டகசாலைகளை துவக்கினர். அக்கூட்டுறவு சங்கத்திற்கான நடைமுறை விதிகள் ஏற்படுத்திக் கொண்டனர். இக்கூட்டுறவு சங்கமே, பிற நாடுகளில் கூட்டுறவு சங்கங்கள் துவக்க முன்னோடியாக விளங்கியது.ஜெர்மனியில் 1852-ஆம் ஆண்டில் பிரான்ச் ஹெர்மன் சூல்ஸ் (Franz Hermann Schulze) என்பவரது முயற்சியால், நகர்ப் புறங்களில் சிக்கன நாணயக் கூட்டுறவு கடன் சங்கங்கள் தொடங்கப்பட்டன.
நெப்போலியன் என அழைக்கப்படும் குமரேசன் துரைசாமி (Kumaresan Duraisamy or Napoleon), (பிறப்பு: டிசம்பர் 2, 1963) தென்னிந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் பெற்றோர் பெயர் துரை சாமி ரெட்டியார் தாயார் பெயர் சரஸ்வதி அம்மாள் . இவர் 7 பிள்ளைகள் .இவர் 2009 ஆம் ஆண்டு 15 வது மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சமூகநீதி இணையமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
நியாய விலைக் கடை (Public distribution system) என்பது பொது விநியோக முறையின் கீழ் இந்திய அரசாலும், மாநில அரசாலும் நிர்வகிக்கப்படும் ஒரு நுகர்வு பொருள் விற்பனை மையமாகும். இதுவரை 4.99 லட்சம் நியாய விலைக் கடைகள் நாடு முழுவதும் உள்ளன.கூட்டுறவுத்துறை வழியாக அனைத்து ஊர்களிலும் மக்களின் எண்ணிக்கைக்கேற்ப நியாய விலைக் கடைகளை அமைந்துள்ளது. பொதுவாக இந்த நியாய விலைக் கடைகளின் மூலமாக மக்களின் அத்தியாவசியத் தேவையான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் பலசரக்குப் பொருள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.
இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியும் ஆவார். இந்திய ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் எனக் குறிப்பிடப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் வாயிலாக இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் மரபுசார்ந்த ஒன்றாகும்.
இந்திய தேசிய சின்னங்கள் (National symbols of India) என்பது இந்தியாவின் அதிகாரபூர்வ சின்னங்களை குறிப்பதாகும். இந்திய குடியரசு, வரலாற்று ஆவணம், கொடி, சின்னம், தேசிய கீதம், நினைவு கோபுரம் மற்றும் பல தேசிய கதாநாயகர்கள் உட்பட பல அதிகாரப்பூர்வ தேசிய சின்னங்களைக் கொண்டுள்ளது. தேசியக் கொடியின் வடிவமைப்பு 1947ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி சுதந்திரத்திற்கு சற்று முன்பு அரசியலமைப்பு சபையால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை (தமிழ்நாடு)
தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை (Department of Co-operation, Food and Consumer Protection (Tamil Nadu)) என்பது தமிழ்நாடு அரசின் ஒரு துறையாகும்.
2022 உலகக்கோப்பை கால்பந்து அல்லது 2022 பிஃபா உலகக் கோப்பை (2022 FIFA World Cup) பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்துகின்ற ஒரு பன்னாட்டு காற்பந்தாட்டப் போட்டியாகும். 2022 நவம்பர் 20 முதல் திசம்பர் 18 வரை கத்தாரில் நடைபெறும் இந்தப் போட்டியானது 22வது உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியாகும். அரபு நாடொன்றில் உலகக்கிண்ணம் முதன் முறையாக நடைபெறும் நிகழ்வாகும்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான பொ.ஊ.மு 400க்கும் பொ.ஊ. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thai Valthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)
ஓடி விளையாடு பாப்பா என்பது பாரதியார் எழுதிய பரந்து அறிமுகமான ஒரு குழந்தைகள் பாட்டு. இப் பாடலின் பல பகுதிகள் இலங்கை, இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பாட நூல்களில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பாடல் குறித்து பாரதியாரின் மகள் இப் பாடலை ‘என் தந்தை எனக்காக நான் செய்ய வேண்டியதற்கெல்லாம் அட்டவணையாகப் பாடிக் கொடுத்தார்’ என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of chief ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
உலகக்கோப்பை காற்பந்து எனப்படுவது வெவ்வேறு நாடுகளில், பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் ஆண்களின் தேசிய காற்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான உலகளவிலான போட்டியாகும். இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் வழங்கப்படும். இந்தப் போட்டியானது 1930 ஆம் ஆண்டு முதல், இன்றுவரை நான்கு ஆண்டுகளுக்கு ஒருதடவை நடைபெற்று வருகின்றது.
தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரெண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
சுருள்பாசி (Spirulina) அல்லது நீலப்பச்சைப்பாக்டீரியா என அழைக்கப்படும் நுண்ணுயிரி சயனோபாக்டீரியா (Cyanobacteria) மனிதர்களாலும், விலங்குகளாலும் உண்ணத்தக்கவையாகும். முதன்மையாக, இரண்டு சயனோபாக்டீரியா இனங்கள் (ஆர்த்ரோஸ்பைரா பிளாட்டென்சிஸ், ஆர்த்ரோஸ்பைரா மேக்சிமா) உணவுக் குறைநிரப்பிகளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. உலகெங்கிலும் நீலப்பச்சைப்பாசி வளர்க்கப்படுகிறது.
மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப் பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகளை "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக"மனித உரிமைகள் என்றால் என்ன?கருதப்படுகின்றன.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
கருத்தரிப்பு என்பது, பாலூட்டிகளில், கருக்கட்டல் நிகழ்வின்போது உருவாகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்த சந்ததிக்கான உயிரி, முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கரு நிலையில் குழந்தை பிறப்புவரை, பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையில் பதிந்து, தாங்கிக் கொள்ளப்படும் நிலையாகும். இந்தக் கட்டுரையில் மனிதரில் நிகழும் கருத்தரிப்பே விரிவாக ஆராயப்படுகின்றது. மனிதரில், பருவமடைந்த ஆரோக்கியமான பெண்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள் உற்பத்தியாகும்.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
தமிழிலக்கணத்தில், உவமையணி என்பது ஒரு புலவர் தான் பிறருக்குக் கூறக் கருதிய பொருளை அவருக்கு நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது ஆகும். ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகுபடுத்திக் கூறுவதாம்.புலவர் தாம்சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு,தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபுபடுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமை புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும். புலவர் விளக்கிக் கூறக் கருதும் பொருள், 'பொருள்'அல்லது 'உவமேயம்' எனப்படும்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (TamilNadu Rural Development and Panchayat Raj Department) தமிழ்நாடு அரசு 1994-இல் இயற்றிய பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி, தமிழக அரசின் கீழ் இயங்கும் ஒரு அரசுத் துறையாகும். இத்துறை மக்களுக்கான அடிப்படை வசதிகள், சேவைகளைத் தவிர வறுமை நிவாரணத் திட்டங்கள், வேலைவாய்ப்புத் திட்டங்கள், சுகாதாரம், அரசு ஊழியர்களின் திறன் மேம்படுத்தல், பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாடு, சுனாமியினால் பாதிப்படைந்தவர்களுக்குப் புனர்வாழ்வு போன்ற பல சமூக நலத்திட்டங்களில் மைய அரசு மற்றும் மாநில அரசின் நிதி மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களின் (ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்) ஆதரவு பெற்ற உதவித் திட்டங்களைச் செயற்படுத்தும் பொறுப்பிலுள்ளத் துறையாகும். இவை தவிரப் பல்வேறு ஊராட்சி நிறுவனங்கள் தன்னாட்சி அரசுப் பிரிவுகளாகத் திறனுடன் செயற்படுவதற்காக இத்துறையிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வராகி (Varahi; சமக்கிருதம்: वाराही, Vārāhī, வாராகி) என்பது இந்து சமயத்தின் நான்கு முக்கிய வழிபாட்டு நடைமுறை பிரிவினர்களான சைவம் (சிவ பக்தர்கள்), பிராமணியம் (பிரம்ம பக்தர்கள்), வைணவம் (விட்டுணுவின் பக்தர்கள்), சக்தி (தெய்வ வழிபாடு) ஆகியோரால் வணங்கப்படும் ஒரு தெய்வமாகும். பொதுவாக, இரகசியமான வாமர்கா தாந்த்ரீக நடைமுறைகளைப் பயன்படுத்தி, வராகி அம்மனை இரவில் வழிபடும் வழக்கம் உள்ளது. இவர் அம்மனின் காவல் தெய்வமாகவும், சப்தகன்னியரில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.
திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1874) ஓர் ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதை குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.
கொங்கு நாட்டின் புகழ்பெற்ற கால்நடைச் சந்தைகள்
கொங்கு நாட்டின் கால்நடைச் சந்தைகள் (மாட்டுத்தாவணிகள்) மிகவும் புகழ் பெற்றவையாகும். கொங்கு நாட்டில் குறிப்பிட்ட சில ஊர்களில் தொன்றுதொட்டு வருடத்துக்கு ஒரு முறை நடக்கும் தேர் திருவிழாவில் வெளியூர்களிலிருந்து மாடுகள் கொண்டு வந்து விற்பனை செய்வதற்கு ஏதுவாகக் கால்நடைச் சந்தைகள் (மாட்டுத்தாவணிகள்) தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் கொங்கு நாட்டின் பல பகுதிகளில் கால்நடைச் சந்தைகள் நடக்கின்றன - சித்திரையில் கண்ணபுரம், ஆனியில் அத்திக்கோம்பை (ஒட்டன்சத்திரம்), ஆடியில் தொப்பம்பட்டி (பழனி) மற்றும் அந்தியூர் ஆவணியில் கோபிசெட்டிப்பாளையம் போன்ற இடங்களில் கால்நடைச் சந்தைகள் கூடும்.
வறுமை என்பது, உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்த நிலை ஆகும். பல நாடுகளில் முக்கியமாக வளர்ந்து வரும் நாடுகளில் வறுமை ஒழிப்பு என்பது ஒரு முக்கியமான இலக்காக இருந்துவருகிறது. வறுமைக்கான காரணம், அதன் விளைவுகள், அதனை அளப்பதற்கான வழிமுறைகள் போன்றவை தொடர்பான வாதங்கள், வறுமை ஒழிப்பைத் திட்டமிடுவதிலும், நடைமுறைப் படுத்துவதிலும் தாக்கத்தைக் கொண்டுள்ளன.
தமிழ்நாட்டில், மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை 142 நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக, அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்
இந்தியாவில் 28 மாநிலங்களும், தில்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 8 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, சம்மு காசுமீர், தில்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் இந்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்களைக் கொண்ட, குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும்.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 2022
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 2022 (2022 Indian vice presidential election) என்பது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 56(1) இந்தியத் துணைக் குடியரசுத் தலைவராக ஐந்தாண்டுக் காலத்திற்குப் பதவி வகிப்பவரை 6 ஆகத்து 2022 அன்று தேர்ந்தெடுக்க நடைபெறும் தேர்தலாகும். இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்குப் பதிலாகப் பதவியேற்பார். 16 சூலை 2022 அன்று, மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜகதீப் தன்கர் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் பாரதிய ஜனதா கட்சியால் பரிந்துரைக்கப்பட்டார்.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் - இந்தியாவின் இரண்டாவது மிக உயர் பதவிக்குரியதாகும், குடியரசுத் தலைவருக்கு அடுத்த நிலையில் வரும் பதவியாகும். துணைக்குடியரசுத்தலைவரே நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் தலைவராவார். எனினும் இவருக்கு மாநிலங்களவை ஓட்டெடுப்பில் ஓட்டளிக்கும் உரிமை இல்லை.
மேலும் தகவல்களுக்கு: இராவணன் (பக்கவழி நெறிப்படுத்தல்)இராவணன் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணம் எனும் காவியம் கூறும் இலங்கையை ஆண்ட அசுர குல மன்னர் ஆவார். இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. பத்து முகங்களை உடையமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார்.பத்து பிரஜாபதிகளில் ஒருவரான புலஸ்திய முனிவரின் மகனான விஸ்ரவ முனிவருக்கும், அரக்கர் குல தலைவர் சுமாலியின் மகள் கைகேசிக்கும் பிறந்தவர்களே இராவணன், கும்பகர்ணன், வீடணன் மற்றும் சூர்ப்பனகை ஆவார்.
தமிழ்நாடு சட்டப் பேரவை (Tamil Nadu Legislative Assembly) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அரசியல் திட்டம் சார்ந்த சட்டங்களை இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது. இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பார்க்கும் பொழுது, இது 18 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுதிலிருந்தே இப்பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது.
தமிழ்நாட்டில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியல்
தமிழ்நாட்டில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியல் (List of most populous towns in Tamil Nadu) என்ற இந்த அட்டவணையியில், இந்தியாவின் ஏழாவது பெரிய மாநிலமான தமிழ் நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இம்மாநிலத்தில் உள்ள 35 மாவட்டங்களில் 21 மாநகராட்சிகளும் 146 நகராட்சிகளும் அடங்கியுள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழக நகரங்களை ஒப்பிடுகையில் சென்னை மாவட்டம் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக விளங்குகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (Tamil Nadu Civil Supplies Corporation) அரிசி, கோதுமை, பருப்பு, மண்ணென்ணெய், ரவா, உணவு எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களை நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் மக்களிடையே பொது விநியோகம் செய்வதற்காக இந்நிறுவனத்தை தமிழ்நாடு அரசு 1972-ஆம் ஆண்டில் நிறுவியது.
உயர் இரத்த அழுத்தம் (hypertension) சில நேரங்களில் “தமனி வழி உயர் இரத்த அழுத்தம்”, தமனி / தமனிகளில் இரத்த அழுத்தம் உயர்த்தப்பெற்ற ஒரு நீடித்த(மருந்து) / நீடித்த நோய் / மருத்துவ நிலை ஆகும். இரத்தக் குழாய்களின் மூலமாகச் செயல்படும் இரத்த ஓட்டத்திற்கு, இந்த உயர்த்தப்பெற்ற நிலையினால் இதயம் வழக்கத்தைவிட கடினமாக வேலை செய்ய தேவைப்படுகிறது. இதய துடிப்புகளுக்கிடையே இதய தசை சுருங்குவது (சிஸ்டோல்) அல்லது தளர்வுறுவது ( டைஸ்டோல் ) என்பதைப் பொறுத்து இரத்த அழுத்தம் இதய சுருங்கியக்க அழுத்தம் மற்றும் விரிவியக்க அழுத்தம் என்ற இரண்டு அளவுகளை உள்ளடக்கியது.
பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
உலகின் புதிய ஏழு அதிசயங்கள் (New 7 Wonders of the World, 2000-2007) என்பது உலகின் பழைய ஏழு அதிசயங்களின் யோசனையை புதிய அதிசயங்களின் ஒரு பட்டியலைக் கொண்டு புதுப்பிப்பதாகும். நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை என்னும் தனியார் நிறுவனம் பிரபலமுற்றவைக்கான கருத்துக்கணிப்பு ஒன்றினை ஏற்பாடு செய்தது, வெற்றி பெற்றவை 2007 சூலை 7 அன்று போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் அறிவிக்கப்பட்டன100 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் தங்கள் வாக்குகளை இணையம் வழியாக அல்லது தொலைபேசி வழியாக பதிவு செய்ததாக சுவிட்சர்லாந்து நாட்டை மையமாகக் கொண்டு செயல்படும் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தெரிவிக்கிறது. ஒருவரே பலவாக்குகளை பதிவு செய்வதை தடுக்க வழியில்லாததால், இந்த கருத்துக்கணிப்பு "தீர்மானமாக அறிவியல் பூர்வமற்ற" ஒன்றாகக் கருதப்படுகிறது.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர். இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது.
சுற்றுச்சூழல் மாசுபாடு அல்லது சூழல் மாசடைதல் (Pollution) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக் கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும். சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன.
காந்தாரா (Kantara) (மொழிபெயர்ப்பு: மாயக் காடு}, கன்னட மொழியில் 30 செப்டம்பர் 2022 அன்று திரையிடப்பட்ட பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும்.இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கி, நடித்தவர் ரிஷப் ஷெட்டி ஆவார். படத்தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அமைப்பு
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வருவாய்த்துறையின் கீழான ஆட்சி அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்பு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அவருடைய வழிகாட்டுதலின் கீழ் இயங்குகின்றன. இந்த மாவட்ட வருவாய்த்துறை அமைப்பில் வருவாய் கிராமம், உள்வட்டம், வருவாய் வட்டம் மற்றும் மாவட்டம் வரை கீழ்கண்ட வருவாய்த் துறை அலுவலர்கள் நிர்வகிக்கின்றனர்.இந்த வருவாய்த்துறையின் வழியாகத்தான் தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.