The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
லியோனல் ஆண்ட்ரே மெஸ்ஸி (எசுப்பானிய ஒலிப்பு: [ljoˈnel anˈdɾes ˈmesi]; ஜூன் 24, 1987 -இல் பிறந்தவர்) என்ற இவர் அர்ஜென்டின கால்பந்தாட்ட வீரர் ஆவர், இவர் தற்போது லா லிகா அணி, பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா தேசிய அணி ஆகியவற்றுக்காக விளையாடி வருகிறார். இந்த தலைமுறையின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக மெஸ்ஸி கருதப்படுகிறார், 21 வயதிற்குள்ளாகவே பல விருதுகளுக்கான, பால்லோன் டி'ஆர் மற்றும் உலகிலேயே ஆண்டின் சிறந்த வீரருக்கான ஃபிஃபா (FIFA) விருது ஆகியவற்றுக்கான பரிந்துரைகளைப் பெற்றுள்ளார். இவருடைய ஆட்ட முறை மற்றும் திறமையின் காரணமாக இவர், கால்பந்தாட்ட சாதனையாளரான டீகோ மாரடோனாவுடன் ஒப்பிடப்படுகிறார், மாரடோனாவும் இவரை தன்னுடைய "வாரிசு" என்றே அறிவித்துள்ளார்.மிக இளவயதிலேயே மெஸ்ஸி கால்பந்து விளையாடத் தொடங்கினார், இவருடைய திறமையை விரைவிலேயே பார்சிலோனா கண்டு கொண்டது.
க. அன்பழகன் (K. Anbazhagan, திசம்பர் 19, 1922 - மார்ச் 7, 2020) தமிழகத்தின் முதிர்ந்த அரசியல்வாதி ஆவார்.இவர், தமிழக தி.மு.க. அரசின் அமைச்சரவையில், பல்வேறு காலகட்டங்களில், நிதி, கல்வி, சுகாதார, சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த இவரை 'பேராசிரியர்' என இவரது ஆதரவாளர்கள் அழைத்தனர்.
உலகக்கோப்பை காற்பந்து எனப்படுவது வெவ்வேறு நாடுகளில், பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் ஆண்களின் தேசிய காற்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான உலகளவிலான போட்டியாகும். இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் வழங்கப்படும். இந்தப் போட்டியானது 1930 ஆம் ஆண்டு முதல், இன்றுவரை நான்கு ஆண்டுகளுக்கு ஒருதடவை நடைபெற்று வருகின்றது.
கிலியான் எம்பாப்பே லோத்தன் ( Kylian Mbappé Lottin, பிரெஞ்சு உச்சரிப்பு: [kiljan (ə)mbape]; பிறப்பு 20 திசம்பர் 1998) பிரான்சிய தொழில்முறை கால்பந்தாட்ட வீரர். இவர் மொனாக்கோ கழகத்திடமிருந்து பாரிசு செயின்ட்-செர்மைன் கழகத்திற்கு கடனாகத் தரப்பட்டு ஆடி வருகிறார். இந்த அணியிலும் பிரான்சு தேசிய அணியிலும்முன்கள வீரராக இருந்து வருகிறார்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
2022 உலகக்கோப்பை கால்பந்து அல்லது 2022 பிஃபா உலகக் கோப்பை (2022 FIFA World Cup) பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்துகின்ற ஒரு பன்னாட்டு காற்பந்தாட்டப் போட்டியாகும். 2022 நவம்பர் 20 முதல் திசம்பர் 18 வரை கத்தாரில் நடைபெற்ற இந்தப் போட்டித்தொடர் 22வது உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியாகும். அரபு நாடொன்றில் உலகக்கிண்ணம் முதன் முறையாக நடைபெற்ற நிகழ்வாகும்.2002 ஆம் ஆண்டு தென் கொரியா, யப்பான் ஆகிய நாடுகளில் நடந்த போட்டிக்குப் பிறகு முற்றிலும் ஆசியாவில் நடைபெறும் இரண்டாவது உலகக் கோப்பையாகும்.
அர்கெந்தீனா (ஆங்கிலம்: Argentina) தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இந்நாட்டின் அரசு ஏற்பு பெற்ற பெயர் ரெப்பு'ப்லிக்கா அர்ஃகென்ந்தீனா (எசுப்பானிய மொழியில் República Argentina, ஒலிப்பு: reˈpuβlika aɾxenˈtina). இதன் மேற்கிலும், தெற்கிலும் சிலியும், வடக்கில் பொலீவியா, பராகுவே ஆகிய நாடுகளும், வடகிழக்கில் பிரேசில், உருகுவே என்பனவும் எல்லைகளாக உள்ளன.
உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும் அரசியல்வாதியும் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளரும் தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் ஆவர். இவர் இரெட் செயன்டு மூவிசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார். இவர் தற்போது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
கூட்டுறவு இயக்க வரலாறு இங்கிலாந்து நாட்டில் முதன் முதலாக கூட்டுறவு இயக்கமானது, ரோச்டேல் பயனீர் என்பவரால் சிந்திக்கப்பட்டு, 1844-ஆம் ஆண்டில் அவரது நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்கள் கொண்ட கூட்டம் கூட்டப்பட்டு, அந்த கூட்டத்தில் தாமே, தங்களுக்குள், தங்கள் தேவைக்காக தங்கள் மூலம் என்ற கொள்கைகளுடன் ரோச்டேல் சமத்துவ முன்னோடிகள் கூட்டுறவு பண்டகசாலைகளை துவக்கினர். அக்கூட்டுறவு சங்கத்திற்கான நடைமுறை விதிகள் ஏற்படுத்திக் கொண்டனர். இக்கூட்டுறவு சங்கமே, பிற நாடுகளில் கூட்டுறவு சங்கங்கள் துவக்க முன்னோடியாக விளங்கியது.ஜெர்மனியில் 1852-ஆம் ஆண்டில் பிரான்ச் ஹெர்மன் சூல்ஸ் (Franz Hermann Schulze) என்பவரது முயற்சியால், நகர்ப் புறங்களில் சிக்கன நாணயக் கூட்டுறவு கடன் சங்கங்கள் தொடங்கப்பட்டன.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை (தமிழ்நாடு)
தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை (Department of Co-operation, Food and Consumer Protection (Tamil Nadu)) என்பது தமிழ்நாடு அரசின் ஒரு துறையாகும்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியும் ஆவார். இந்திய ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் எனக் குறிப்பிடப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் வாயிலாக இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் மரபுசார்ந்த ஒன்றாகும்.
கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) ஸ்பெயினின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார்.2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லஸ் புய்க்ரெமாண்ட்டின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இவர் ஸ்பெயினிலிருந்து, காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாக கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
நியாய விலைக் கடை (Public distribution system) என்பது பொது விநியோக முறையின் கீழ் இந்திய அரசாலும், மாநில அரசாலும் நிர்வகிக்கப்படும் ஒரு நுகர்வு பொருள் விற்பனை மையமாகும். இதுவரை 4.99 லட்சம் நியாய விலைக் கடைகள் நாடு முழுவதும் உள்ளன.கூட்டுறவுத்துறை வழியாக அனைத்து ஊர்களிலும் மக்களின் எண்ணிக்கைக்கேற்ப நியாய விலைக் கடைகளை அமைந்துள்ளது. பொதுவாக இந்த நியாய விலைக் கடைகளின் மூலமாக மக்களின் அத்தியாவசியத் தேவையான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் பலசரக்குப் பொருள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடல்களையும் இணைத்து மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள். கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் இருக்கும் பாவை நோன்பின் ஒரு பகுதியாக இந்த பாடல்களைப் பாடுவது உள்ளது.
மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப் பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகளை "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக"மனித உரிமைகள் என்றால் என்ன?கருதப்படுகின்றன.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
யூடியூப் அல்லது வலையொளி (YouTube) என்பது ஓர் அமெரிக்க நாட்டு நிகழ்நிலைக் காணொளிப் பகிர்வு மற்றும் சமூக ஊடகத் தளமாகும். இது சாட் ஹர்லி, ஸ்டீவ் சென் மற்றும் ஜவேத் கரீம் ஆகியோரால் பிப்ரவரி 2005 இல் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் வலையொளிப் பயனர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியன் மணிநேரக் காணொளிகளைக் காணுகிறார்கள்.
அவதார் (ஆங்கில மொழி: Avatar) என்பது 2009 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த அமெரிக்க நாட்டு காவிய அறிபுனைத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை 20ஆம் சென்சுரி பாக்ஸ், லைட்ஸ்டார்ம் என்டர்டெயின்மென்டு, ராட்பேக்-டூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் இங்கெனியசு மீடியா ஆகிய நிறுவனங்கள் தயாரிக்க, 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. இந்த திரைப்படம் ஜேம்ஸ் கேமரூன் மற்றும் ஜான் இலாண்டாவ் ஆகியோர் தயாரிப்பில், ஜேம்ஸ் கேமரூன் என்பவர் இயக்கம் மற்றும் திரைக்கதையில், சாம் வோர்த்திங்டன், ஜோ சல்டனா, இசுடீபன் லாங், மிச்செல் ரோட்ரிக்வெஸ் மற்றும் சிகர்னி வேவர் போன்ற பலர் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
டீகோ அர்மேண்டோ மரடோனா (பிறப்பு 30 அக்டோபர் 1960 - இறப்பு 25 நவம்பர் 2020) பியூனோஸ் ஏரிஸ் நகரத்தின் லானுஸ்) அர்ஜென்டினாவின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் மற்றும் அர்ஜென்டினா தேசிய அணியின் முன்னாள் மேலாளர் ஆவார். இவர் எக்காலத்திலும் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று பரவலாகக் கருதப்பட்டார். நூற்றாண்டின் சிறந்த ஃபிஃபா வீரர் விருதுக்காக இணையத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் முதலாவதாக வந்து இந்த விருதை பீலேவுடன் பகிர்ந்து கொண்டார்.மரடோனா தனது தொழில்வாழ்க்கையில் கால்பாந்து கிளப்பில் இருந்த காலத்தில் அவர் அர்ஜென்டினா ஜூனியர்ஸ், போகா ஜூனியர்ஸ், பார்சிலோனா, சீவில்லா, நியூவெல்ஸ் ஒல்ட் பாய்ஸ் மற்றும் நப்போலி போன்ற மன்ற அணிகளுக்காக விளையாடி ஒப்பந்தப் பண அளவில் உலக சாதனை செய்துள்ளார்.
பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி (ஜுலை 29, 1883 – ஏப்ரல் 28, 1945) என்ற முழுப்பெயர் கொண்ட முசோலினி இத்தாலி நாட்டுக்கு 1922–1943 காலப்பகுதியில் தலைமை வகித்தவர். இத்தாலிய அரசை பாசிச அரசாக மாற்றி ஏகபோக சர்வாதிகார ஆட்சியை முசோலினி நடத்தினார். அரச கட்டமைப்புகளையும், தனியார் நிறுவனங்களையும், ஊடகங்களையும், திறனாளர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வன்முறை, பரப்புரை, ஏகபோக அணுகுமுறை ஊடாக பாசிச அரசை உருவாக்கி பேணினார்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான பொ.ஊ.மு 400க்கும் பொ.ஊ. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thai Valthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.
கைப்பந்தாட்டம் (volleyball) என்பது ஓர் அணிக்கு ஆறு வீரர்கள் வீதம் உருவாக்கப்பட்ட இரண்டு அணி வீரர்கள் ஒரு வலையால் பிரிக்கப்பட்டு கைகளால் பந்தை அடித்து ஆடுகின்ற ஒரு குழு ஆட்டமாகும். ஒவ்வோர் அணியும் தங்கள் பகுதிக்கு அனுப்பப்பட்ட பந்தை அது தரையை தொடுவதற்கு முன் கைகளால் வாங்கி, தட்டி பின்னர் எதிர்ப்பக்கத்தினரின் பகுதியில் தரையைத் தொடும்படி அனுப்புகின்ற விளையாட்டு ஆகும். எதிர்ப்பக்கத்திற்கு பந்தை அனுப்ப ஒவ்வோர் அணியும் மூன்று தட்டுதல்கள் எடுத்துக் கொள்ளலாம்.
வணிகம் அல்லது வர்த்தகம் (trade, commerce) என்பது மனிதனது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் இலாப நோக்குடைய அல்லது இலாப நோக்கற்ற ஒரு பொருளாதாரச் செயற்பாடு ஆகும். வணிகமானது பிரதானமான நான்கு வளர்ச்சி கட்டங்களின் கீழ் வளர்ச்சியுற்றது. பண்டமாற்று முறை பணமுறை கைத்தொழில் புரட்சி தகவல் தொழில்நுட்ப புரட்சிவணிகவியல் வர்த்தக நடவடிகைகளை வணிகம், தொழிற்சாலை என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளைய தலைமுறையை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
கால்பந்து என்பது ஒரேமாதிரியான பலகுழு விளையாட்டுக்களின் பெயர், அவை அனைத்தும் பந்தை கால்களைக்கொண்டு உதைத்து கோலைப் பெற (வெவ்வேறு கோணங்களில்) முயற்சிக்கும் செயலில் ஈடுபடுகின்றன. சங்கக் கால்பந்து என்பது உலக அளவில் இந்த விளையாட்டுக்களில் மிகவும் பிரபலமானது, மேலும் பொதுவாக வெறும் "கால்பந்து" அல்லது "சாக்கர்" என்று அறியப்படுகின்றது. இருப்பினும் கால்பந்து என்ற வார்த்தை கால்பந்து வடிவத்தில் உள்ள அனைத்து விளையாட்டிற்கும் பொருந்துகின்றது, இது உலகத்தின் ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியிலும் மிகவும் பிரபலமானது.
சுருள்பாசி (Spirulina) அல்லது நீலப்பச்சைப்பாக்டீரியா என அழைக்கப்படும் நுண்ணுயிரி சயனோபாக்டீரியா (Cyanobacteria) மனிதர்களாலும், விலங்குகளாலும் உண்ணத்தக்கவையாகும். முதன்மையாக, இரண்டு சயனோபாக்டீரியா இனங்கள் (ஆர்த்ரோஸ்பைரா பிளாட்டென்சிஸ், ஆர்த்ரோஸ்பைரா மேக்சிமா) உணவுக் குறைநிரப்பிகளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. உலகெங்கிலும் நீலப்பச்சைப்பாசி வளர்க்கப்படுகிறது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of chief ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 2022
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 2022 (2022 Indian vice presidential election) என்பது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 56(1) இந்தியத் துணைக் குடியரசுத் தலைவராக ஐந்தாண்டுக் காலத்திற்குப் பதவி வகிப்பவரை 6 ஆகத்து 2022 அன்று தேர்ந்தெடுக்க நடைபெறும் தேர்தலாகும். இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்குப் பதிலாகப் பதவியேற்பார். 16 சூலை 2022 அன்று, மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜகதீப் தன்கர் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் பாரதிய ஜனதா கட்சியால் பரிந்துரைக்கப்பட்டார்.
அப்பர் திருநாவுக்கரசு நாயனார் பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரைத் தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2022
2022 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் (2022 Indian presidential election) 16வது இந்தியக் குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் 18 சூலை 2022 அன்று நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் 9 சூன் 2022 அன்று அறிவித்துள்ளது. முறைப்படியான தேர்தல் அறிவிப்பு 15 சூன் 2022 அன்று வெளியிடப்படும். வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் 29 சூன் 2022 ஆகும்.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (Thirugnana Sambandar, தமிழில் அறிவுசேரர் என்று பொருள் தரும்.), அல்லது சம்பந்தர் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதலில் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார்.
தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரெண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
சுற்றுச்சூழல் மாசுபாடு அல்லது சூழல் மாசடைதல் (Pollution) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக் கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும். சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன.
பொருளாதாரம் (economy) என்பது நாட்டின் அறியப்பட்ட பொருளாதார அமைப்பையோ இதர நிலப்பகுதியையோ கொண்டுள்ளது. அப்பகுதியின் சமூக ரீதியாக உற்பத்தியில், பரிமாற்றத்தில், விநியோகத்தில் மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வில் பங்கேற்கும் பொருளாதாரக் காரணிகளையும் கொண்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட பொருளாதாரம் என்பது அதன் தொழில் நுட்ப பரிணாமம், வரலாறு மற்றும் சமூக நிறுவனம் ஆகியன அடங்கியுள்ள ஒரு வழிமுறையின் இறுதி விளைவுகளையும்; அதேபோல அதன் புவியியல், இயற்கை வளக் கொடை மற்றும் சூழல் ஆகியவற்றை முக்கியக் காரணிகளாக உள்ளடக்கியுள்ளது.
ஆபுத்திரன் கதை மணிமேகலை என்னும் நூலில் சொல்லப்பட்டுள்ளது. வாரணாசியில் வாழ்ந்த மறைகாப்பாளன் (அந்தணர்) அபஞ்சிகனுக்குப் பிழை செய்த பாவம் நீங்க அவன் மனைவி சாலி குமரிக்கு வந்து நீராடிவிட்டு மீளும்போது தனக்குப் பிறந்த குழந்தையை வழியில் கிடத்திவிட்டுச் சென்றுவிட்டாள்..அந்தக் குழந்தையைப் பசு ஒன்று நாவால் தடவிக் கொடுத்து பாலூட்டி ஏழு நாள் வளர்த்தது. அங்குத் தன் மனைவியுடன் வந்த இளம்பூதி என்னும் மறைகாப்பாளன் குழந்தையைத் தன் ஊருக்கு எடுத்துச்சென்று வளர்த்து ஆபுத்திரன் (= பசு மகன்) எனப் பெயர் சூட்டி கல்விகேள்விகளில் வல்லவனாக்கினான்.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் - இந்தியாவின் இரண்டாவது மிக உயர் பதவிக்குரியதாகும், குடியரசுத் தலைவருக்கு அடுத்த நிலையில் வரும் பதவியாகும். துணைக்குடியரசுத்தலைவரே நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் தலைவராவார். எனினும் இவருக்கு மாநிலங்களவை ஓட்டெடுப்பில் ஓட்டளிக்கும் உரிமை இல்லை.
அவதார்: தி வே ஆப் வாட்டர் (ஆங்கில மொழி: Avatar: The Way of Water) என்பது 2022 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் அமெரிக்க நாட்டு காவிய அறிபுனைத் திரைப்படம் ஆகும். இது 2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் என்ற படத்தின் தொடர்சியாக லைட்ஸ்டார்ம் என்டர்டெயின்மென்ட் மற்றும் டி.எஸ்.ஜி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, 20ஆம் சென்சுரி பாக்ஸ் நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த திரைப்படம் ஜேம்ஸ் கேமரூன் இணைந்து ஜான் இலாண்டாவ் என்பவரும் தயாரிக்க, ஜேம்ஸ் கேமரூன் மற்றும் ஜோஷ் பீரீட்மேன் ஆகியோரின் திரைக்கதையில், சாம் வோர்த்திங்டன், ஜோ சல்டனா, சிகர்னி வேவர், இசுடீபன் லாங், கிளிப் கர்டிசு, சிசிஎச் பவுண்டர், எடி பால்கோ, ஜெமைன் கிளமென்ட் மற்றும் கேட் வின்ஸ்லெட் போன்ற பலர் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (Tamil Nadu Civil Supplies Corporation) அரிசி, கோதுமை, பருப்பு, மண்ணென்ணெய், ரவா, உணவு எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களை நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் மக்களிடையே பொது விநியோகம் செய்வதற்காக இந்நிறுவனத்தை தமிழ்நாடு அரசு 1972-ஆம் ஆண்டில் நிறுவியது.
பொதுவாக கால்பந்து அல்லது சங்க கால்பந்து (Association football) என்பது, பதினொரு வீரர்கள் கொண்ட இரண்டு அணிகளுக்கு இடையில் ஒரு கோள வடிவப் பந்தினைக் கொண்டு விளையாடப்படும் ஒரு அணி விளையாட்டு ஆகும். சங்கக் கால்பந்து என்பது உலகெங்கிலும் மிகப் பிரபலமாக இருக்கும் காற்பந்து விளையாட்டு வகையாகும். இது உலகிலேயே மிகவும் பிரபலமான விளையாட்டாகக் கருதப்படுகிறது.இந்த விளையாட்டு, செவ்வக வடிவ புல்தரை அல்லது செயற்கைப் புல்தரை ஆடுகளத்தில் விளையாடப்படுகிறது.
உயர் இரத்த அழுத்தம் (hypertension) சில நேரங்களில் “தமனி வழி உயர் இரத்த அழுத்தம்”, தமனி / தமனிகளில் இரத்த அழுத்தம் உயர்த்தப்பெற்ற ஒரு நீடித்த(மருந்து) / நீடித்த நோய் / மருத்துவ நிலை ஆகும். இரத்தக் குழாய்களின் மூலமாகச் செயல்படும் இரத்த ஓட்டத்திற்கு, இந்த உயர்த்தப்பெற்ற நிலையினால் இதயம் வழக்கத்தைவிட கடினமாக வேலை செய்ய தேவைப்படுகிறது. இதய துடிப்புகளுக்கிடையே இதய தசை சுருங்குவது (சிஸ்டோல்) அல்லது தளர்வுறுவது ( டைஸ்டோல் ) என்பதைப் பொறுத்து இரத்த அழுத்தம் இதய சுருங்கியக்க அழுத்தம் மற்றும் விரிவியக்க அழுத்தம் என்ற இரண்டு அளவுகளை உள்ளடக்கியது.
திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1874) ஓர் ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதை குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.
பொருளியல் (economics) என்பது மக்கள் பயன்படுத்தும் அல்லது ஆக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய உற்பத்தி, பகிர்வு, நுகர்வு, என்பன பற்றி ஆராயும் சமூக அறிவியல் ஆகும்.உற்பத்தி, பகிர்வு என்பன பற்றிய கருத்துருவாக்கங்கள் வரலாற்றில் நீண்ட காலத்திற்கு முன்பாக உருவாக்கப்பட்டபோதினும் 1776 ல் வெளிவந்த ஆடம் இசுமித் என்பாரின் வெல்த் ஆஃப் நேஷன்ஸ் (The Wealth of Nations, நாடுகளின் செல்வம்) எனும் நூலில் இசுமித் அனைத்து பொருளியல் கருத்தாக்கங்களையும் ஒருங்கிணைத்து பொருளியல் என முறைபடுத்தப்பட்ட அறிவியல் துறையாக புத்தாக்கம் பெற்றது. இவர் அரசியல் பொருளியலின் தந்தை என அறியப்படுகிறார். பொருளியல் என்ற சொல் மிகவும் பழமையான ஆய்க்கனோமிக்ஸ் என்னும் கிரேக்க மொழி சொல்லில் இருந்து பெறப்பட்டது.
கருத்தரிப்பு என்பது, பாலூட்டிகளில், கருக்கட்டல் நிகழ்வின்போது உருவாகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்த சந்ததிக்கான உயிரி, முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கரு நிலையில் குழந்தை பிறப்புவரை, பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையில் பதிந்து, தாங்கிக் கொள்ளப்படும் நிலையாகும். இந்தக் கட்டுரையில் மனிதரில் நிகழும் கருத்தரிப்பே விரிவாக ஆராயப்படுகின்றது. மனிதரில், பருவமடைந்த ஆரோக்கியமான பெண்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள் உற்பத்தியாகும்.
இந்தியாவின் நிதி அமைச்சர் (Minister of Finance of India) இந்திய அரசின் நிதி அமைச்சின் தலைவர் ஆவார். அமைச்சரவையின் மூத்த அலுவலகம் ஒன்றின் தலைவரான நிதி அமைச்சர் அரசின் நிதிக்கொள்கைக்குப் பொறுப்பானவர் ஆவார். அத்துடன் இந்தியாவின் வரவு செலவுத் திட்டம் மற்றும் பொது வரவு செலவுத் திட்டங்களின் வரைவாளரும் ஆவார்.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர். இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது.
பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் புதினமாகும். 1950 - 1955-ஆம் ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
புற்றுநோய் (cancer) என்பதுக் கேடுதரும் உடற்கட்டிகளால் ஏற்படும் பல நோய்களின் பொதுவான ஒரு பெயர் ஆகும். இயல்புக்கு மாறாகக் கட்டுப்பாடற்று உயிரணுக்கள் பிரிந்து பெருகுவதால் இழையங்களில் ஏற்படும் மிகைப்பெருக்கம், அருகிலுள்ள இழையங்களினூடாக ஊடுருவி, ஏனைய உடற்பகுதிகளுக்கும் பரவும் ஆற்றலைக் கொண்டிருப்பின் அவை கேடுதரும் கட்டிகள் அல்லது புற்று நோய் எனப்படும். இவை உடலில் இருக்கும் இடத்தைப் பொறுத்து என்ன நோய் என்று பெயரிடப்படுகின்றது.
பர்வத மலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இம்மலை.