The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
கிராம கணக்குகள், தமிழ்நாடு அரசின் வருவாய் துறையின் கீழ் உள்ள வருவாய் கிராமங்கள் தொடர்பான 24 வகையான கிராமக் கணக்குகளைப் பராமரிப்பது கிராம நிர்வாக அலுவலர் ஆவார். பசலி ஆண்டில் (1, சூலை முதல் 30, சூன்), சூன் 30ம் தேதிக்குள் நடைபெறும் ஜமாபந்தி அன்று கிராம நிர்வாக அலுவலர் பராமரித்த 24 வகையான கிராமக் கணக்குகளை சரக வருவாய் ஆய்வாளர், மண்டல துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் போன்றோர் தணிக்கை செய்வர்.
தமிழ்நாட்டில் வருவாய்த்துறை நிர்வாக அமைப்பின் கீழ், கீழ்நிலை நிர்வாக அமைப்பாக வருவாய் கிராம நிர்வாகம் இருக்கிறது. இவ்வமைப்பு, ஒரு வட்டத்தின் வட்டாட்சியர் தலைமையில், அவருடைய வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறது. மேலும் இது, குறிப்பிட்ட எல்லை வரையறைக்கு உள்ளான நிலப் பரப்பினைக் கொண்டு இயங்குகின்ற நிர்வாக அமைப்பாக உள்ளது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அமைப்பு
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வருவாய்த்துறையின் கீழான ஆட்சி அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்பு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அவருடைய வழிகாட்டுதலின் கீழ் இயங்குகின்றன. இந்த மாவட்ட வருவாய்த்துறை அமைப்பில் வருவாய் கிராமம், உள்வட்டம், வருவாய் வட்டம் மற்றும் மாவட்டம் வரை கீழ்கண்ட வருவாய்த் துறை அலுவலர்கள் நிர்வகிக்கின்றனர்.இந்த வருவாய்த்துறையின் வழியாகத்தான் தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) ஸ்பெயினின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார்.2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லஸ் புய்க்ரெமாண்ட்டின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இவர் ஸ்பெயினிலிருந்து, காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாக கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
ஜமாபந்தி, ஆண்டு தோறும் சூன் மாதத்தில் வருவாய்த் துறையினரால் கிராமந்தோறும் நடத்தப்படும் கிராம கணக்குகள் குறித்த தணிக்கை முறையாகும். இம்முறை ஜமாபந்தி என்ற பெயரால் இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த வருவாய் தீர்வாயத்தில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிருவாக அலுவலர் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்யும் நிலங்களில் நீர்ப் பாய்ச்சல் ஆதாரம் மிகுந்த நிலப் பகுதிகள் நன்செய் என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன. இந்த வகைப்பாடுடைய நிலங்களில் அதிகப்படியான பயிராக நெல், கரும்பு, வாழை போன்ற பணப்பயிர்கள் மட்டுமே விளைவிக்கப்படுகின்றன. ஆற்றுநீர், தேக்கி வைக்கப்பட்ட குளத்து நீர், நன்செய் நிலங்களில் உள்ள கிணற்று நீர் ஆகிய நீர் வள ஆதாரங்களைக் கொண்டு ஓர் ஆண்டுக்கு மூன்று போகங்கள் வரை வேளாண்மை செய்யும் நிலத் தொகுதி நன்செய் எனப்படுகிறது.
புன்செய் நிலம் அல்லது புன்செய் நிலம் என்பது மழை நீரை நீர் ஆதாரமாகக் கொண்ட நிலமாகும். தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்யும் நிலங்களில் நீர் பாய்ச்சல் ஆதாரம் இல்லாத நிலப் பகுதிகள் புன்செய் என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன. இந்நிலத்தில் நீர் ஆதாரம் குறைவாகத் தேவைப்படும் பயிர்கள் மட்டுமே பயிரிடப்படுகின்றன.
தமிழக மாவட்டங்களில் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி சில வட்டாட்சி அமைப்புகள் அமைக்கப்படுகின்றன. இந்த வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து வருவாய்க் கிராமங்களும் இந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. இந்த வருவாய் வட்டத்தின் தலைமை அலுவலராக வட்டாட்சியர் இருக்கிறார்.
தமிழ்நாட்டில் பண்டைய காலத்தில் நிலத்தின் அளவு மதிப்பு (பரப்பை) குழி, வேலி, மா, ஏக்கர் என பேச்சு நடைமுறையிலும் ஹெக்டேர் என்ற அளவீட்டு முறையிலும் குறிக்கப்படுகிறது. வீட்டு மனைகளைப் பொருத்த மட்டில் சதுரஅடிக் கணக்கிலும், சென்னை, கோவை, மதுரை போன்ற மாநகரங்களில் கிரவுண்டு என்ற அளவீட்டிலும் குறிப்பிடப் படுகிறது.
கிராம ஊராட்சி தமிழ்நாட்டில் 500 க்கு அதிகமான மக்கள் தொகை உள்ள கிராமங்களில் 12,524 கிராம ஊராட்சி மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவைகளின் செயல்பாடுகள் முறையே: கிராம ஊராட்சியின் உறுப்பினர்கள் மக்களால் தேர்தல் மூலமாக நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கிராம ஊராட்சியின் தலைவர் உறுப்பினர்கள் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
பஞ்சாயத்து ஒன்றியம் அல்லது ஊராட்சி ஒன்றியம் (Panchayat Union or Block Development Office), இந்தியாவின், தமிழ்நாட்டில், 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி சட்டத்தின்படி வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டன.ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் கிராம ஊராட்சிகள் இயங்குகின்றன. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் 385 ஊராட்சி ஒன்றியங்களும், 12,524 கிராம ஊராட்சிகளும் உள்ளன. அவற்றுள் நீலகிரி மாவட்டம் குறைந்த பட்சமாக நான்கு பஞ்சாயத்து ஒன்றியங்களும், விழுப்புரம் மாவட்டம் அதிக பட்சமாக 22 பஞ்சாயத்து ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.ஊராட்சி ஒன்றியங்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி விரிவாக்க அலுவலர்கள், மேலாளர், கணக்காளர் மற்றும் உதவியாளர்கள் ஊராட்சி ஒன்றியக் குழுவின் தீர்மானங்களை நிறைவேற்றுவர்.
தமிழ்நாட்டில் வருவாய்த்துறை நிர்வாக அமைப்பின் கீழ்நிலை நிர்வாக அமைப்பாக வருவாய் கிராம நிர்வாகம் இருக்கிறது. இவ்வமைப்பு, அந்தந்த வட்டாட்சியர் தலைமையில், அவருடைய வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறது. மேலும் இது, குறிப்பிட்ட எல்லை வரையறைக்கு உள்ளான நிலப் பரப்பினைக் கொண்டு இயங்குகின்ற நிர்வாக அமைப்பாக உள்ளது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
இந்திய மாவட்டங்களில் வருவாய்த்துறையில் சில வட்டங்களை உள்ளடக்கி வருவாய் கோட்டம் (REVENUE DIVISION) அல்லது வருவாய்த்துறைக் கோட்டம் அமைக்கப்படுகின்றன. இவற்றின் தலைமை அதிகாரிகளாக சார் ஆட்சியர் அல்லது துணை ஆட்சியர் பதவியில் உள்ளவர்களை வருவாய் கோட்டாட்சியர் பணியிடத்தில் நியமிக்கப்படுகிறார்கள். இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டால் சார் ஆட்சியர் (Sub Collector) என்றும், பதவி உயர்வு வழியாக நியமிக்கப்பட்டால் வருவாய்க் கோட்டாட்சியர் (Revenue Divisional Officer) என்றும் அழைக்கப்படுகிறார்.
தென்காசி மாவட்டம் (Tenkasi District) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். தமிழகத்தின் 33-வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. மேற்கே கேரள மாநிலமும், கிழக்கே தூத்துக்குடி மாவட்டத்தையும், வடக்கே விருதுநகர் மாவட்டத்தையும், தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தையும் எல்லையாக கொண்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான பொ.ஊ.மு 400க்கும் பொ.ஊ. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலம் (Land) என்பது நிரந்தரமாக நீரில் மூழ்கியிராத புவியின் திண்ம மேற்பரப்பு ஆகும். வரலாறு முழுவதும் பெரும்பாலான மனிதச் செயற்பாடுகள், வேளாண்மை, வாழிடம், பல்வேறு இயற்கை வளங்கள் ஆகியவை அடிப்படையான நிலத்திலேயே நடந்துள்ளன. நிலம், பெரிய நீர்ப் பரப்புகளைச் சந்திக்கும் பகுதிகள் கரையோரப் பகுதிகள் என அழைக்கப்படுகின்றன.
ஆக்ரமணம், தமிழக அரசின் புறம்போக்கு, புஞ்சைத்தரிசு, நஞ்சைத்தரிசு போன்ற நிலங்களை தனிநபர்கள் செய்யும் அனுபோகங்களை ஆக்ரமணம் அல்லது ஆக்கிரமிப்பு எனப்படும். 1905ம் ஆண்டு தமிழ்நாடு 3வது சட்டத்தில் ஆக்கிரமிப்புகளில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை முறை வகுக்கப்பட்டுள்ளது. மேலும், வருவாய் துறை நிலை ஆணை எண் 26ல் ஆக்ரமணம் குறித்து விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் (District Revenue Officer) மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் பணி மாவட்ட வருவாய் அலுவலர் பணியாகும். இவர் வருவாய்த்துறையின் அனைத்துச் செயல்பாடுகளையும் கவனிக்கிறார். மாவட்ட ஆட்சித்தலைவர் விடுமுறையில் இருக்கும் போதும், மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியில் யாரும் நியமிக்கப் படாத நிலையிலும், இவர் மாவட்ட ஆட்சித்தலைவர் பணியைக் கூடுதலாகக் கவனிப்பார்.
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் (Local government bodies in Tamil Nadu) என்பது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தின் ஊர்களை அந்த ஊரின் மக்கள் தொகை மற்றும் வருவாய்க்கு ஏற்பப் பிரிக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரிவுகளைக் குறிக்கும். இந்திய அரசியலைப்புச் சட்டம் பகுதி IV-இல் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அதிகாரங்கள், பொறுப்புகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் ஊராட்சிகள் சட்டம் - 1994 இயற்றப்பட்டு, 1994 ஏப்ரல் 22-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.
கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது.இந்தக் கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தலே கிராம சபைக் கூட்டதின் நோக்கமாகும். கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம், கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகள் ஆகும். கிராம சபைக் கூட்டத்தில், தங்கள் கிராமங்களில் அரசு மதுக்கடைகள் நடத்துவதை தடை செய்து தீர்மானம் இயற்றினால், அக்கிராமங்களில் அரசு மதுக்கடைக்களை திறக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thai Valthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.
பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் புதினமாகும். 1950 - 1955-ஆம் ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது.
திருவாரூர் மாவட்டம் (Tiruvarur district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திருவாரூர் ஆகும். திருவாரூர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வலங்கைமான் வட்டத்தையும், நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து சில வட்டங்களையும் பிரித்து 1 சனவரி 1997இல் நிறுவப்பட்ட மாவட்டம் ஆகும்.
இந்தியாவில் மாநில அரசுகளின் நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு மாநில எல்லைக்குட்பட்ட பகுதி முழுவதும் பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதன் தலைமை அலுவலராக மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட ஆட்சியர் (District collector) செயல்படுகிறார். மாவட்ட ஆட்சித் தலைவர்கள், இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்திய அரசால் ஒவ்வொரு மாநில பணித்தொகுதிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் பட்டியலிலிருந்து, அந்தந்த மாநில அரசால், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்படுகின்றனர்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
குறு வட்டம் அல்லது உள் வட்டம் அல்லது பிர்கா (ஆங்கிலம்: FIRKA) என்பது தமிழ்நாடு மாவட்டங்களில் வருவாய்த்துறையில் சில வருவாய் கிராமங்களை உள்ளடக்கி 'குறு வட்டம் (REVENUE FIRKA) அமைக்கப்படுகின்றன. வருவாய் துறைக்கென அலுவல் சார்ந்த அலுவலராக [[மண்டல துணை வட்டாட்சியர்] இருப்பார். இவர் பதவி உயர்வு வழியாகவும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறுவதின் வழியாகவும் நியமிக்கப்படுகிறார்.
இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியும் ஆவார். இந்திய ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் எனக் குறிப்பிடப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் வாயிலாக இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் மரபுசார்ந்த ஒன்றாகும்.
கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளைய தலைமுறையை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
தமிழ்நாட்டில், மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை 142 நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக, அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தமிழக ஊராட்சி மன்றங்கள் தமிழ்நாட்டில் 500 நபர்களும் அதற்கும் அதிகமான மக்கள் தொகையுடைய ஊர்களை ஊராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த கிராம ஊராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் ஊராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
2022 உலகக்கோப்பை கால்பந்து அல்லது 2022 பிஃபா உலகக் கோப்பை (2022 FIFA World Cup) பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்துகின்ற ஒரு பன்னாட்டு காற்பந்தாட்டப் போட்டியாகும். 2022 நவம்பர் 20 முதல் திசம்பர் 18 வரை கத்தாரில் நடைபெறும் இந்தப் போட்டியானது 22வது உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியாகும். அரபு நாடொன்றில் உலகக்கிண்ணம் முதன் முறையாக நடைபெறும் நிகழ்வாகும்.
செங்கல்பட்டு மாவட்டம் (Chengalpattu District) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். காஞ்சிபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் நிறுவுவதற்கான அரசாணை 12 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டது. தமிழகத்தின் 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் அறிவிக்கப்பட்டது.
மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப் பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகளை "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக"மனித உரிமைகள் என்றால் என்ன?கருதப்படுகின்றன.
திருப்பூர் மாவட்டம் (Tiruppur district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திருப்பூர் ஆகும். இம்மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் திருப்பூர், அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை ஆகிய வருவாய் வட்டங்களையும், ஈரோடு மாவட்டத்தின் தாராபுரம், காங்கேயம் ஆகிய வருவாய் வட்டங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
காஞ்சிபுரம், அல்லது காஞ்சீபுரம் (Kancheepuram) அல்லது காஞ்சி, இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும். இது கோவில் நகரம், ஆயிரம் கோவில்களின் நகரம், திருவிழாக்களின் நகரம் என்று பலவாறு அழைக்கப்படுகிறது. இது பாலாறு மற்றும் வேகவதி ஆறுகளின் கரையில் அமைந்துள்ளது.
20களின் குழு (Group of Twenty) அல்லது சுருக்கமாக ஜி-20, அல்லது 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களின் அமைப்பு (Group of Twenty Finance Ministers and Central Bank Governors) என்பது இருபது உலக நாடுகள் மற்றும் நிதி வளங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டமைப்பாகும். இவ்வமைப்பில் உலகின் 19 வளர்ச்சியடைந்த நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்புரிமை பெற்றுள்ளன. அர்ச்சென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, செருமனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, சப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இணைந்த பொருளியல் கூட்டமைப்பு கூட்டாக, ஜி-20 பொருளாதாரம் மொத்த உலக உற்பத்தியில் 85% உம், உலக வணிகத்தில் 80% உம், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் கொண்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வருவாய் துறை நேரடி நியமன அலுவலர்ச் சங்கம்
தமிழ் நாடு அரசு வருவாய் துறை நேரடி நியமன அலுவலர்ச் சங்கம் (ஆங்கிலம்:Tamil Nadu Direct Recruitment Revenue Officers Association) இச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் திரு. வீ. இருளப்பன் ஆவார்.
கைசிக ஏகாதசி, கைசிகம் என்பது ஒருவகைப் பண் ஆகும். வராக அவதாரத்தின்போது பூமாதேவிக்கு வராகப் பெருமாள் (திருமால்) இதை அருளியதாக வராக புராணம் கூறுகிறது. வைகுண்ட ஏகாதசி முன்னர் வரும், கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்று பாணர் குலதிலகம் நம்பாடுவார் கைசிகப் பண் இசையில் பாடியதால் இந்த ஏகாதசியை கைசிக ஏகாதசி என்றும் அழைப்பர்,.
கிராம சபை அல்லது கிராம ஊராட்சியின் பொதுக்குழு, தமிழ்நாடு அரசு 1994-ஆம் ஆண்டில் இயற்றிய பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி கிராம ஊராட்சி மன்றம் அமைக்கப்பட்டது. ஒரு மாநிலத்தின் சட்டமன்றம், கிராம சபைக்கு அதிகாரங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கலாம் என இந்திய அரசியலமைப்பு சடடப் பிரிவு 243 ஜி குறிப்பிடுகிறது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் கிராம ஊராட்சியின் வாக்காளர் பட்டியல் உள்ளவர்கள் அனைவரும் கிராம சபையின் உறுப்பினர்கள் ஆவார்.
பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்
உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (பன்னாட்டு ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3ஐ அனுசரிக்கின்றது. 1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது.
கோயம்புத்தூர் (Coimbatore, சுருக்கமாக கோவை) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில், சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரமும் தென்னிந்தியாவின் சென்னை, ஹைதராபாத், பெங்களூருக்கு அடுத்த நான்காவது மிகப்பெரிய மாநகரமும் ஆகும். இது இந்திய மாநகரங்களின் பட்டியலில் தொழில் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு மாநகரம் ஆகும். இது இந்தியாவின் பதினாறாவது பெரிய மாநகரம் ஆகும்.