The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission- TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும். 1929இல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பெற்ற ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பெற்றது.
இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள்
இந்தியாவில் குழந்தைகள் பகுதி நேர அல்லது முழு நேர அடிப்படையில், பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் நடைமுறை உள்ளது. இந்நடைமுறை அவர்கள் குழந்தைப் பருவத்தைப் பறித்து, அவர்களுடைய உடல் மற்றும் மன வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. வறுமை, நல்ல பள்ளிகள் மற்றும் முறைசாரா பொருளாதாரம் வளர்ச்சி இல்லாமை இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் நடைமுறை இருக்க முக்கிய காரணங்கள் என கருதப்படுகிறது.
மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகளை "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக" கருதப்படுகின்றன.
யோகக் கலை அல்லது யோகா (yóga, சமஸ்கிருதம், பாலி: योग|योग) என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். பதஞ்சலி முனிவரால் இக்கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியாகும்.
இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986
இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 (தி கன்சியூமர் புரட்டக்சன் ஆக்ட், 1986) இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையை பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் ஏற்படுத்தப்பெற்றச் சட்டமாகும். ஜூலை 1, 1987 முதல் இச்சட்டம் அமலுக்கு வந்தது. இச்சட்டம் 1991 மற்றும் 1993 களில் திருத்தச் சட்டங்களாக வெளிவந்தன.
போட்டித் தேர்வு (Competitive examination) என்பது, மாணவா்களின் திறன்களை சோதிப்பதற்காக நடத்தப்படும் ஒரு தோ்வு. இதில் போட்டியாளர்களில் வெற்றி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மற்றவர்கள் நிராகரிக்கப்படுவார்கள். போட்டித்தேர்வுகள் பெரும்பாலும் பல்கலைக்கழகம், கல்லூரி சேர்க்கை அல்லது மேல்நிலைப் பள்ளிகளுக்கான நுழைவுத் தேர்வு போன்றவற்றிற்கு பயன்படுத்துகின்றனர்.
புவியியல் என்பது புவி, அங்குள்ள நிலம், பல்வேறு அம்சங்கள், அதிலுள்ள உயிர் வகைகள் மற்றும் தோற்றப்பாடுகள் என்பவற்றை விளக்கும் ஒரு துறையாகும். இச்சொல்லை நேரடியாக மொழி பெயர்க்கும்போது அது புவியைப்பற்றி விளக்குவது அல்லது எழுதுவது என்பதைக் குறிக்கும். புவியியல் ஆய்வில் வரலாற்று ரீதியாக நான்கு மரபுகள் காணப்படுகின்றன.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (Meenakshi Temple) என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள, கோயில் நகரமான மதுரையின் மத்தியில், அமைந்துள்ள சிவன் ஆலயமாகும். இச்சிவ ஆலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) ஸ்பெயினின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார்.2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லஸ் புய்க்ரெமாண்ட்டின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இவர் ஸ்பெயினிலிருந்து, காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாக கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
கொத்தடிமை முறை (Debt bondage, debt slavery அல்லது bonded labour) என்பது பணத்திற்காக ஒரு குடும்பமோ அல்லது ஊரோ தலைமுறை தலைமுறையாக பணம் படைத்தவர்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பது ஆகும். தற்போது, "பன்னாட்டு தொழிலாளர் நலக்கழகம் 2005" இன், கணக்கெடுப்பின் படி 8.1 மில்லியன் மக்கள் கொத்தடிமைகளாக உலகெங்கும் வாழ்ந்து வருவது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொத்தடிமை முறைக்கெதிராக, ஐக்கிய நாடுகள் அமைப்பு "கொத்தடிமை முறை ஒழிப்பு மாநாடு" நடத்தி இம்முறையின் "தற்காலநிலை" பற்றி தெளிவாக வரையறுத்து கூறுகிறது.தெற்காசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகள் கொத்தடிமை முறையை இன்றளவும் நடைமுறையில் வைத்திருப்பதை ஐ.நா வின் கொத்தடிமை முறை ஒழிப்பு மாநாடுகள் உறுதிப்படுத்துகின்றன..
குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்
குருவாயூர் கோவில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் என்னும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் ஆகும். பக்தர்களால், இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாகவும் பூலோக வைகுண்டமாகவும் (புவியில் இறைவன் விஷ்ணு வாசம் செய்யும் தலம்) அறியப்படும் திருத்தலம்.ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திற்கு சற்று முன் அன்னை தேவகி மற்றும் தந்தையார் வாசுதேவருக்கு குருவாயூர் கோயிலில் உள்ளவாறே தோற்றமளித்தார்; இதனால் இந்த இடம் தென் இந்தியாவின் துவாரகா என்றும் அறியப்படுகிறது. இங்கு குடிகொண்டிருக்கும் சிறுவனான ஸ்ரீ கிருஷ்ணனை, பக்தர்கள் அன்புடன் கண்ணன், உண்ணிக் கண்ணன், (குழந்தை கிருஷ்ணன்) உண்ணிக்கிருஷ்ணன், பாலகிருஷ்ணன், மற்றும் குருவாயூரப்பன் என்று பல பெயர்களில் வணங்குவது வழக்கம.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
பிச்சாவரம் தமிழ்நாட்டில் சிதம்பரத்துக்கு அருகே வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி. இப்பகுதி கடலூர் மாவட்டத்தில் உள்ளது.பித்தர்புரம் என்ற பெயரே, பிச்சாவரம் என்று மருவியது.இவ்வூரில் அலையாத்திக் காடுகள் (சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள்) மிகுந்துள்ளன. இங்குள்ள அலையாத்திக் காடே உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு ஆகும்.
இந்தியாவில் கொத்தடிமை முறை (Debt bondage in India) 1976 ஆம் ஆண்டு சட்டபூர்வமாக ஒழிக்கப்பட்டது. ஆனால் அந்தச் சட்டம் அரசாங்கத்தால் பலமாக அமல்படுத்தப்படாததால் கொத்தடிமை முறை இன்றும் நடைமுறையில் உள்ளது. கொத்தடிமைக் கூலி என்னும் முறை கடன் கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையேயான கடுமையான பணம் மற்றும் சக்தி ஏற்றத்தாழ்வுகள் காரணமாக உருவாயிற்று.
கட்டிடக்கலை என்பது கட்டிடங்கள் மற்றும் அதன் உடல் கட்டமைப்புகளை வடிவமைத்தல், செயல்முறைத் திட்டமிடல், மற்றும் கட்டிடங்கள் கட்டுவதை உள்ளடக்கியதாகும். கட்டடக்கலை படைப்புகள், கட்டிடங்கள் பொருள் வடிவம், பெரும்பாலும் கலாச்சார சின்னங்களாக மற்றும் கலை படைப்புகளாக காணப்படுகின்றது. வரலாற்று நாகரிகங்கள் பெரும்பாலும் அவர்களின் கட்டிடகலை சாதனைகளின் மூலம் அடையாளம் காணப்படுகின்றன.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்
இந்தியாவின் அடிப்படை உரிமைகள் என்பது இந்திய அரசியல் சாசனம் தனது மூன்றாவது பகுதியில் வழங்கியுள்ள உரிமைகளுக்கான சாசனம்' ஆகும். இந்தப் பகுதி இந்திய நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் அமைதியான முறையிலும் இணக்கத்துடனும் வாழ்வை மேற்கொள்ள தேவையான குடிமையியல் சுதந்திரங்களை இந்தியர்களுக்கு வழங்குகிறது. அமெரிக்காவின் உரிமைகள் சட்டவரைவை (Bill of Rights) மூலமாக கொண்டது.
சுற்றுலாத்துறை என்பது இந்தியாவின் பெரிய சேவைத் துறையாகும். இது நாட்டின் தேசிய மொத்த உற்பத்தியில் 6.23 சதவீதம் பங்களிக்கிறது மேலும் இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்பில் 8.78% சதவீதத்தைக் கொண்டுள்ளது. இந்தியா ஆண்டுக்கு 5 மில்லியனுக்கும் மேலான அந்நிய சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் 562 மில்லியன் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் கொண்டுள்ளது.
குடியுரிமை (citizenship) என்பது, சிறப்பாக ஒரு நாட்டின் குடிமகனாகவோ குடிமகளாகவோ இருப்பதற்கான உரிமையைக் குறிக்கும். இவ்வுரிமையில் அந்நாட்டு அரசியலில் பங்குகொள்ளும் உரிமையும் அடங்கும். குடியுரிமை சமூக ஒப்பந்தக் கொள்கையின் அடிப்படையில் சில பொறுப்புகளையும், கடமைகளையும் குடிமக்களிடத்தில் எதிர்பார்க்கிறது.
மகாபலிபுரத்தின் குகைக் கோயில்கள்
மகாபலிபுரத்தின் குகைக் கோயில்கள் (Cave Temples of Mahabalipuram) தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் சோழ மண்டலக் கடற்கரையில் அமைந்துள்ள குன்று நகரத்தில் அமைந்துள்ளன. ஏழாம் நூற்றாண்டில் மகாபலிபுரத்தில் பல்லவர் காலத்தில் மாமல்லர் பாணியில், பரவியுள்ள சிறுகுன்றுகளில் செதுக்கப்பட்டு, சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்ட கோயில்களாகும். இவை அதிரஞ்சந்தை குகைக் கோயில்களிலிருந்து வேறுபட்டுள்ளன; அந்தக் கோயில்கள் மகேந்திரவர்மன் காலத்தில் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை.
சுற்றுலா (tourism) என்பது தமது வழமையான இருப்பிடங்களை விட்டு வேற்று இடங்களைக் கண்டு களிக்க பயணித்தலே ஆகும். உலக சுற்றுலா அமைப்பின் சொற்பொருள் விளக்கத்தின்படி ஒரு பயணத்தை சுற்றுலா என வகைப்படுத்த ஒருவர் தமது "வழமையான சுற்றுச்சூழலைவிட்டு வேற்று இடத்திற்கு ஒய்வு, அலுவல் மற்ற ஏனைய நோக்குடன் மேற்கொள்ளும் பயணம் ஒரு வருட காலகட்டத்திற்குள் அமைய வேண்டும். மேலும், அப்பயணத்தின் மூலம் பயணி பயணிக்கப்பட்ட இடத்திலிருந்து ஊதியம் பெற கூடாது".
மத்திய தகவல் ஆணையம் (Central Information Commission) இந்திய அரசால் அரசிதழ் அறிக்கை மூலம் அமைக்கப்பட்ட அரசமைப்பாகும். இதில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட முதன்மை தகவல் ஆணையரும் ஏனைய பத்து தகவல் ஆணையர்களும் பதவி வகிக்கின்றனர்.இந்த ஆணையத்தின் நோக்கம் குடிமக்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 கீழ் எந்த அரசு அமைப்பிடமிருந்தாவது தகவல் பெறுவதில் தடங்கல் இருந்தால் அதனைக் களைவது ஆகும். இந்த அமைப்பைப் போன்றே ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநில ஆளுநரால் மாநில தகவல் முதன்மை ஆணையரும் பத்து மாநில தகவல் ஆணையர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
புதினம் அல்லது நாவல் என்பது மக்களால் பரவலாக விரும்பப்படும் ஒரு இலக்கிய வடிவம் ஆகும். இதில் வாழ்க்கையும், நிகழ்வுகளும் கற்பனையாக உரைநடையில் எழுதப்படுகின்றன. தற்காலப் பயன்பாட்டில் புதினம், நீளமாக இருத்தல், புனைகதையாக அமைதல், உரைநடையில் எழுதப்படல் போன்ற இயல்புகளால் ஏனைய இலக்கிய வடிவங்களிலிருந்து வேறுபடுத்தப்படுகின்றது.
திருவனந்தபுரத்தில் சுற்றுலா (Tourism in Thiruvananthapuram ) என்பது இந்திய மாநிலமான கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் மலை வாழிடங்கள், உப்பங்கழிகள், கடற்கரைகள், கடற்கரைக்காயல்கள், வனவிலங்கு சரணாலயங்களைப் பற்றியதாகும். இப்பகுதி ஒரு சுற்றுலாத் தலமாகவும், மருத்துவச் சுற்றுலாவுக்கான சிறு விமானங்களையும் கொண்டுள்ளது. ஏனெனில் நகரத்திலும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் உள்ளன.
பெங்களூர் (Bangalore), அதிகாரபூர்வமாக பெங்களூரு (Bengaluru, கன்னடம்: ಬೆಂಗಳೂರು, தமிழ்: வெங்களூர்) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகராகும். கர்நாடகாவின் தென்கிழக்கு பகுதியில் தக்காண பீடபூமியில் அமைந்துள்ள இந்நகரம் மக்கள்தொகையின் அடிப்படையில் இந்தியாவின் மூன்றாவது பெருநகரமாகவும் நகர்ப்புற மக்கள்தொகை அடர்த்தியில் ஐந்தாவது பெரியதாகவும் திகழ்கிறது. நவீன பெங்களூரின் சிற்பியாக பலர் கருதும் முதலாம் கெம்பை கவுடர் இந்த இடத்தில் ஒரு செங்கல்லில் செய்தகலவை கோட்டையைக் கட்டி இதனை விஜயநகர சாம்ராச்சிய பிராந்தியமாக நிறுவிய 1537 ஆம் ஆண்டு முதல் தான் இந்நகரத்தின் நவீன வரலாறானது துவங்குவதாக பலர் கருதுகின்றனர்.
பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயா சாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்துக் கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும்.
தமிழ் இலக்கியத்தில், கலம்பகம் என்பது பலவகைச் செய்யுள்களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதுமான சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும். பல்பூ மிடைந்த படலைக் கண்ணி (174) (பல் = பல; பூ = பூக்கள்; மிடைந்து = கலந்து) என்று ஓர் அடி, கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பெரும்பாணாற்றுப் படையில் வருகின்றது. இதற்குப் பலவாகிய பூக்கள் கலந்து கட்டப்பட்ட கலம்பக மாலை என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறுகின்றார்.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
கிராம ஊழியன் என்பது பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்தின், திருச்சினாப்பள்ளி மாவட்டத்தில் வெளிவந்த தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். இது திருச்சிராப்பள்ளிக்கு 28 கல் தள்ளி இருக்கும் துறையூர் என்ற சிற்றுாரிலிருந்து மாதம் இருமுறை இதழாக வெளிவந்தது. 1943-47 காலகட்டத்தில் களில் இந்தியாவில் இருந்து மாதம் இருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும்.
கண்ணதாசன் (ஒலிப்பு ) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
அருண்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராஜராஜ சோழன் சோழ பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராஜேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே.
நுகர்வோர் பொருட்களையும், சேவைகளையும் நுகரும் போது அவர்களிற்கு உள்ள உரிமைகளே நுகர்வோர் உரிமைகள் (Consumer rights) ஆகும். காலத்திற்குக் காலம் பல்வேறுபட்ட வகைகளில் நுகர்வோர் உரிமைகள் வகைப்படுத்தி கூறப்பட்டு வருகின்றது. இத்தகைய நுகர்வோர் உரிமைகளை முன் வைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அல்லது நிறுவனங்கள் வருமாறு.
சதுப்புநிலம் (Marsh) அல்லது ஈரைநிலம் என்பது ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் கூடிய நிலங்களில் சிறு தாவரங்களும், நீர் வாழ் விலங்குகள் மற்றும் பறவைகளுடன் கூடிய பகுதியாகும்.சதுப்பு நிலங்கள், உவர்ப்புத் தன்மை கூடிய சதுப்பு நிலங்கள் என்றும் நன்னீர் சதுப்பு நிலங்கள் என இரண்டு வகையாக உள்ளது. சதுப்பு நிலங்களில் வளரம் கூட்டமாக வளரும் சிறு தாவரங்களை அலையாத்தித் தாவரங்கள் என்பர். அலையாத்தி தாவரங்கள் சுனாமி போன்ற பேரலைகளிடமிருந்து கடற்கரை மக்களையும், கட்டமைப்புகளையும் பாதுகாக்கும் வல்லமை படைத்தது.
குடும்பம் என்பது இரத்த உறவாலோ, அல்லது திருமணம், சுவீகாரம் (தத்தெடுத்தல்) போன்ற வேறு சட்டபூர்வமான முறைகளிலோ தொடர்புபட்ட ஒரு உறைவிடக் குழுவாகும். பல சமுதாயங்களில், குடும்பம் என்பது மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த வேறு கருத்துருக்களினாலும் புரிந்துகொள்ளப் பட்டிருப்பதால், "குடும்பம்" என்பது பல வேளைகளில் பெரிய மனிதக் குழுவினரை உள்ளடக்கும் ஒரு உருவகமாகவும் பயன்படுவதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, சமூகம், சுற்றம், நாடு, மனித குலம் போன்றவற்றையும் குடும்பம் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர்.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
மாமல்லபுரம் (ஆங்கிலம்:Mamallapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கியத் துறைமுகமாக விளங்கிய நகரமாகும். இந்நகரம் மகாபலிபுரம் (ஆங்கிலம்:Mahabalipuram) என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
பொருளாதாரம் (economy) என்பது நாட்டின் அறியப்பட்ட பொருளாதார அமைப்பையோ இதர நிலப்பகுதியையோ கொண்டுள்ளது. அப்பகுதியின் சமூக ரீதியாக உற்பத்தியில், பரிமாற்றத்தில், விநியோகத்தில் மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வில் பங்கேற்கும் பொருளாதாரக் காரணிகளையும் கொண்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட பொருளாதாரம் என்பது அதன் தொழில் நுட்ப பரிணாமம், வரலாறு மற்றும் சமூக நிறுவனம் ஆகியன அடங்கியுள்ள ஒரு வழிமுறையின் இறுதி விளைவுகளையும்; அதேபோல அதன் புவியியல், இயற்கை வளக் கொடை மற்றும் சூழல் ஆகியவற்றை முக்கியக் காரணிகளாக உள்ளடக்கியுள்ளது.
இதழ் (ஒலிப்பு ) அல்லது சஞ்சிகை (Magazine) என்பது அச்சிட்டு செய்திகளையும் கருத்துக்களையும் இயற்கலை படைப்புகளையும் அறியவும், பகிர்ந்து கொள்ளவும், பரப்பவும் வெளி வருகின்றவையாகும். (இணையத்தில் வெளிவிடப்படும் இதழ்கள் மின்னிதழ்கள் ஆகும்.) அனைத்தையும் இதழ்கள் என்று பொதுச்சொல்லால் குறிப்பிட்டாலும், அவை இயல்பாலும், வெளிவரும் காலம், அதில் இடம் பெற்ற உள்ளடக்கம் போன்றவைகளைக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன.
இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், இந்திய ஓரே பெண் பிரதமரும் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா காந்தியாக மாறினார்.இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார்.
உப்புச் சத்தியாகிரகம் அல்லது தண்டி நடைப்பயணம் அல்லது தண்டி யாத்திரை (Salt March) என்பது காலனிய இந்தியாவில் ஆங்கிலேயர் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை அறவழியில் எதிர்க்கும் திட்டமிட்ட போராட்டமாகும். மார்ச்சு 12, 1930 இல் குஜராத் மாநிலத்திலுள்ள தண்டியில் தடையை மீறி உப்பெடுக்கும் நடைப்பயணமாகத் துவங்கியது. 1930 ஜனவரி 30 ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரசு அறிவித்த முழு விடுதலை என்ற விடுதலைப் பிரகடனத்திற்குப் பிறகு ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து அமைப்பு ரீதியாகச் செய்யப்பட்ட முதல் நடவடிக்கையாகும்.
தமிழிலக்கணத்தில், உவமையணி என்பது ஒரு புலவர் தான் பிறருக்குக் கூறக் கருதிய பொருளை அவருக்கு நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது ஆகும். ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகுபடுத்திக் கூறுவதாம்.புலவர் தாம்சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு,தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபுபடுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமை புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும். புலவர் விளக்கிக் கூறக் கருதும் பொருள், 'பொருள்'அல்லது 'உவமேயம்' எனப்படும்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 – சூன் 11, 1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாகக் காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான்.
வைணவ சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள் ஆவர். தென்மொழியாம் தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர். அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் ஆண்டாளையும், இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
தமிழில் இடைக்கால இலக்கியம் என்பது தமிழ் நாட்டில் பல்லவர் குலத் தொடக்கம் முதலாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை உள்ள இலக்கியம் எனக் கொள்ளலாம். இந்நூல்களில் பெரும்பாலானவை பக்தி இலக்கியங்களும் அரசர்களையும் போர்களையும் பற்றிப் பாடும் சிற்றிலக்கியங்களும் ஆகும். இக்கால கட்டத்தில் பல மருத்துவ, தொழில் மற்றும் அறிவியல் சார்ந்த நூல்களும் இயற்றப்பட்டன.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
அம்பி (Hampi, ஹம்பி) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில் பாயும் துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள ஒரு ஊர் மற்றும் உலகப் பாரம்பரியக் களம் ஆகும். விஜயநகரப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய போது இதன் பெயர் விஜயநகரம் ஆகும். ஹம்பி, விசயநகரப் பேரரசின் தலைநகரமான விசயநகரத்தின் அழிபாடுகளிடையே அமைந்துள்ளது.
விளம்பரம் (advertising) என்பது தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பிராண்டுகளை அல்லது ஒரு குறிப்பிட்ட வகை தயாரிப்புகள் அல்லது சேவைகளை அதிக அளவில் வாங்க உண்டாக்கப்பட்ட தொடர்பு சாதனம். 19ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒட்டுமொத்த உற்பத்தி அதிகமானதைத் தொடர்ந்து நவீன விளம்பரங்கள் முன்னேற்றமடைந்தன.வடிவமைக்கப்பட்ட மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட "வடிவம்" மூலம் அந்தக்குறிப்பிட்ட சாதனங்கள் ,சேவைகளின் கொள்முதலை அதிகப்படுத்தும் வகையில் நிறைய விளம்பரங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த மாதிரியான நோக்கத்திற்காக சில விளம்பரங்கள், அவர்களுடைய விடாப்பிடியான செய்தியை சில சமயங்களில் உண்மையான தகவல்களுடன் சேர்த்துவிடுவதுண்டு.
வைரமுத்து (Vairamuthu, சூலை 13, 1953), புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் சனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார்.
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைதமிழ் என்ற நூல் பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. இது பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்படுகிறது. மதுரையில் எழுந்தருளியுள்ள மீனாட்சியம்மையைப் பாட்டுடைத்தலைவியாகக் கொண்டு குமரகுருபரர் என்ற புலவரால் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர் திருமலை நாயக்கர் முன்னிலையில் மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் பாடப்பட்டது.
இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்
1975ல் முதல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியதில் இருந்து இதுவரை ஐம்பதிற்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை இந்தியா ஏவியுள்ளது. இந்திய, அமெரிக்க, உருசிய, ஐரோப்பிய ராக்கெட்டுகளின் மூலமும் அமெரிக்க விண்வெளி ஓடத்தின் துணைக்கொண்டும் இவை செலுத்தப்பட்டுள்ளன. இந்திய செயற்கைக்கோளின் பொறுப்பாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் உள்ளது.
அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை
அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (International Covenant on Civil and Political Rights) என்பது, 1966 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பல தரப்பு ஒப்பந்தம் ஆகும். இது 1976 மார்ச் 23 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தம் இதன் பங்காளர்கள் தனியாட்களுடைய குடிசார் உரிமைகளையும், அரசியல் உரிமைகளையும் மதிப்பதாக உறுதியளிக்கிறது.
கங்கைகொண்ட சோழபுரம் (ஆங்கிலம்:Gangaikonda Cholapuram) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூர் சோழர்களின் பெருமரசை நிறுவிய முதலாம் இராஜராஜ சோழன் மகனான இராசேந்திர சோழனால் உருவாக்கப்பட்டு 250 ஆண்டுகள் பிற்கால சோழ பேரரசின் தலைநகரமாக விளங்கியது. இங்கு இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவாலயம் இன்றும் உள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thai Valthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ் மொழியை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.
பொருள் அல்லது சேவையை "இப்படித்தான் இருக்க வேண்டும்" என்று யோசித்து ஆரம்பிக்கும் நடவடிக்கையிலிருந்து அதை இலாபகரமாகத் தயாரிப்பு செய்து சந்தைக்கு எடுத்து வந்து நுகர்வோருக்கு அளிப்பதை சந்தைப்படுத்தல் எனலாம். இதில் நுகர்வோர் இலக்கு என்றாலும், நுகர்வோரிடம் நெருக்கிய தொடர்புடைய விற்பனையாளர் மிக முக்கியமாகக் கருதப்படுகிறார்.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அஃது ஒரு மகாயான காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மகாயான பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவை இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
லதா மங்கேசுக்கர் (Lata Mangeshkar; 28 செப்டம்பர் 1929 – 6 பெப்ரவரி 2022) இந்தியப் பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க பாடகர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இந்திய இசைத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பானது இந்தியாவின் இசைக்குயில், மிலேனியத்தின் குரல், இன்னிசை இராணி போன்ற கௌரவப் பட்டங்களைப் பெற்றது.குறிப்பாக இந்தி, வங்காள, மராத்தி மொழிகள் உட்பட முப்பத்தாறுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளிலும் சில வெளிநாட்டு மொழிகளிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.