The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.
கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) ஸ்பெயினின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார்.2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லஸ் புய்க்ரெமாண்ட்டின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இவர் ஸ்பெயினிலிருந்து, காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாக கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது.
உக்ரைன் (Ukraine, உக்ரைனியன்: Україна, உச்சரிப்பு [ʊkrɐˈjinɐ] (கேட்க), உக்ரையீனா) கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. உருசியாவுக்கு அடுத்தபடியாக பரப்பளவில் ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடான உக்ரைன், உருசியாவுடன் கிழக்கேயும், வட-கிழக்கேயும் எல்லைகளைக் கொண்டுள்ளது. உக்ரைன் நாட்டின் நடுவில் பாயும் தினேப்பர் ஆறு, உக்ரைனை மேற்கு உக்ரைன் மற்றும் கிழக்கு உக்ரைன் எனப்பிரிக்கிறது.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் அல்லது ஐக்கிய அமெரிக்கா (United States of America / USA / US) ஐம்பது மாநிலங்களும் ஓர் கூட்டரசு மாவட்டமும் ஐந்து தன்னாட்சி ஆட்பகுதிகளையும் மற்றும் பல துய்ப்புரிமை உடைய பகுதிகளையும் கொண்ட கூட்டாட்சி அரசியல் சட்ட குடியரசு நாடாகும். இது பொதுவாக அமெரிக்கா என அழைக்கப்படுகிறது. 3.8 மில்லியன் சதுர மைல்கள் (9.8 மில்லியன் கிமீ2) பரப்பும் 325 மில்லியன் மக்களும் கொண்ட ஐக்கிய அமெரிக்கா உலகின் பரப்பினடிப்படையில் மூன்றாவது- அல்லது நான்காவது-மிகப்பெரும் நாடாகவும் மூன்றாவது-மிகுந்த மக்களதொகை உள்ள நாடாகவும் திகழ்கிறது.
சுவிட்சர்லாந்து (Switzerland) அல்லது சுவிசுக் கூட்டமைப்பு நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு. இதன் வடக்கே செருமனி, மேற்கே பிரான்சு, தெற்கே இத்தாலி, கிழக்கே ஆஸ்திரியா மற்றும் லிக்டன்ஸ்டைன் ஆகிய நாடுகள் சுவிசின் எல்லைகளாக உள்ளன. சுவிட்சர்லாந்து வரலாற்று நோக்கில் ஒரு கூட்டமைப்பு ஆனால் 1848 முதல் ஒருங்கிணைந்த தனி நாடாக உள்ளது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு
பரவலாக நேட்டோ (NATO) என அறியப்படும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organization) என்பது, 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் நாள் வட அத்திலாந்திய ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் உருவான ஒரு இராணுவக் கூட்டணி ஆகும். இதன் தலைமையகம் பெல்ஜியத்தின் தலைநகரமான பிரசல்சில் உள்ளது. வெளியார் தாக்குதலுக்கு எதிராக பரஸ்பர பாதுகாப்பு உதவி வழங்குவதற்கு இதிலுள்ள உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் இணங்கியதன் மூலம் இவ்வமைப்பு ஒரு கூட்டுப் பாதுகாப்பு முறையைக் கொண்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
அகத்தியம் என்பது பண்டைய தமிழி மொழி மற்றும் தற்கால தமிழ் மொழியை உடைய மக்களினத்தைக் குறிக்கும் மிகவும் தொன்மையான தமிழி மற்றும் தமிழ் மொழிக்கான இலக்கண நூல் எனத் திரிபுப்பட கருதப்படுகின்றது. அகத்தியன் என்பவர் இயற்றிய நூலாதலால், இது அகத்தியம் என்றும் வழங்கப்படுகின்றது. அகத்தியத்தில் முதல், இடை, கடை என வரையறுக்கப்படும் முச்சங்க காலங்களிலும் இதுவே, தமிழ் இலக்கணத்துக்கான, முதல் நூலாகத் திகழ்ந்தது என்று தமிழ் ஆய்வாளர்கள் அய்யம் திரிப்புர உரைக்கின்றனர்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
சத்குரு ஜகி வாசுதேவ் (Sadhguru Jaggi Vasudev) ஞானியாகவும் யோகியாகவும் குருவாகவும் திகழ்பவர். இவர் நிறுவியுள்ள ஈஷா அறக்கட்டளை, மத சார்பற்ற, இலாப நோக்கில்லாத ஒரு பொதுத் தொண்டு நிறுவனம். இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, லெபனான், சிங்கபூர், கனடா, மலேசியா, உகாண்டா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பல உலக நாடுகளில் யோகா நிகழ்ச்சிகளை ஈஷா அறக்கட்டளை வழங்கிக் கொண்டிருக்கிறது.
சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்
தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்: ஆண்டு - படைப்பு (தன்மை) - படைப்பின் எழுத்தாளர் 1955 - தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) - ரா. பி. சேதுப்பிள்ளை 1956 - அலை ஓசை (நாவல்) - கல்கி கிருஷ்ணமூர்த்தி 1957 - (விருது வழங்கப்பட வில்லை) 1958 - சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை) - சி.
குடிப்பழக்கம் (Alcoholism) அல்லது மது சார்புள்ளமை என்பது மது குடிக்கும் பழக்கத்திலிருந்து வெளிவர முடியாத ஒரு பழக்கவடிமை நோய் ஆகும். இந்த நோயுள்ளவர்கள் மது அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் பின்விளைவுகள் மற்றும் அதனால் சமூகத்தில் ஏற்படும் தலைகுனிவு ஆகியவற்றை நன்கு அறிந்தும் கூடத் தவிர்க்கமுடியாமல் விருப்பத்திற்கு மாறாக, மற்றும் போதும் என்று கட்டுப்படுத்த இயலாதவாறு தொடர்ந்து குடிக்கும் பழக்கத்தை விடாமலிருப்பார்கள். போதை மருந்துகளுக்கு அடிமையாவது போலவே, குடிப்பழக்கம் எனப்படும் இந்நோயும் மருத்துவத்துவ துறையினரால் குணப்படுத்த இயலும் நோயாக வரையறுக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள், அல்லது ஐநா அல்லது யூஎன், என்பது, பல நாடுகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல், கலிபோர்னியாவிலுள்ள, சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டது.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (Thirugnana Sambandar, தமிழில் அறிவுசேரர் என்று பொருள் தரும்.), அல்லது சம்பந்தர் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதலில் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார்.
ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐ.ஒ (European Union அல்லது EU) என்பது தற்பொழுது 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட, நாடு தாண்டிய அரசிடை அமைப்பாகும். 1992ல் நிறுவப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை (மாசுடிரிச் ஒப்பந்தம் என்றும் பரவலாக அறியப்படுகிறது) அடுத்து இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும், 1950கள் முதற்கொண்டே இயங்கி வந்த பல்வேறு முன்னோடி அமைப்புகளின் செயற்பாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தை ஒத்து இருந்தன.
முதல் உலகப்போர் என்பது உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர். எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன.
அணுகுண்டு (ஒலிப்பு ) என்பது அணுக்கருப் பிளவு மூலமோ அல்லது கருப்பிளவு மற்றும் கரு இணைவு ஆகிய இரண்டின் மூலமோ அழிவுச் சக்தியை உருவாக்கக் கூடிய வெடிபொருளாகும். இவ்விரு தாக்கங்களும் சிறியளவு திணிவிலிருந்து பெரியளவிலான சக்தியை வெளியிடக்கூடியன. மிகச்சிறிய கட்டமைப்பில் ஏராளமான ஆற்றலை அடக்கி வைத்திருந்து அதைப் பெருவேகத்தில் வெளிப்படுத்துவதே அணுகுண்டின் தத்துவமாகும்.முதல் அணுக்கருப் பிளவுக் குண்டின் பரிசோதனையின்போது அண்ணளவாக 20,000 தொன் TNTயின் சக்தி வெளியிடப்பட்டது.
1996 இல் டெலோர்ஸ் அறிக்கையானது டெலோா்ஸ் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட ஒரு அறிக்கையாகும். இது இரு முக்கிய கல்வி கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த பார்வைக்கு முன்மொழியப்பட்டது. அதாவது 'வாழ்நாள் முழுவதும் கற்குபது,' மற்றும் கல்வியின் நான்கு தூண்களின் கற்றல், அறிவது, செய்து கற்றல், ஒன்றாக வாழ்வது ஆகியன ஆகும்.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
முறைசாரா கற்றல் என்பது சுய இயக்கம் கற்றல் அல்லது அனுபவத்திலிருந்து கற்றல் போன்றது. முறையான கற்றலை விட முறைசாரா கற்றல் வித்தியாசமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது, ஏனென்றால் கற்றல் விளைவுகளின் அடிப்படையில் எந்த நோக்கமும் இல்லை மற்றும் கற்பனையின் நிலைப்பாட்டிலிருந்து வேண்டுமென்றே திட்டமிடப்படாதது. அனைத்து கற்கும் மாணவர்களுக்கான இந்த சூத்திர மொழி கட்டிடம், சமூகமயமாக்கல், ஊடுருவல் மற்றும் நாடகம் ஆகியவை அடங்கும்.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
மக்களாட்சி அல்லது சனநாயகம் (Democracy) என்பது "மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்" என வரைவிலக்கணம் கொண்டது. மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்ற அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் மக்களாட்சிக்கு வரையறையை கூறினார். தற்போது உலகில் உள்ள மிகப்பெரும்பாலான நாடுகளில் இந்த முறையே கைகொள்ளப்படுகிறது.
விளம்பரம் (advertising) என்பது தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பிராண்டுகளை அல்லது ஒரு குறிப்பிட்ட வகை தயாரிப்புகள் அல்லது சேவைகளை அதிக அளவில் வாங்க உண்டாக்கப்பட்ட தொடர்பு சாதனம். 19ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒட்டுமொத்த உற்பத்தி அதிகமானதைத் தொடர்ந்து நவீன விளம்பரங்கள் முன்னேற்றமடைந்தன.வடிவமைக்கப்பட்ட மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட "வடிவம்" மூலம் அந்தக் குறிப்பிட்ட சாதனங்கள், சேவைகளின் கொள்முதலை அதிகப்படுத்தும் வகையில் நிறைய விளம்பரங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த மாதிரியான நோக்கத்திற்காகச் சில விளம்பரங்கள், அவர்களுடைய விடாப்பிடியான செய்தியை சில சமயங்களில் உண்மையான தகவல்களுடன் சேர்த்துவிடுவதுண்டு.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார்.
பிரான்சு அல்லது பிரெஞ்சுக் குடியரசு மேற்கு ஐரோப்பாவில் தனது பெருநிலப் பரப்பையும் மற்றைய கண்டங்களில் ஆட்சிப் பகுதிகளையும், தீவுகளையும் கொண்ட நாடாகும். பிரான்ஸ் பெருநிலப் பரப்பானது, தெற்கே மத்தியதரைக் கடல் தொடக்கம் வடக்கே ஆங்கிலக் கால்வாய் வடகடல் வரையும் விரிந்து காணப்படுகிறது. பெல்ஜியம், யேர்மனி, சுவிஸர்லாந்து, லக்சம்பேர்க், இத்தாலி, மொனாகோ, அன்டோரா, ஸ்பெயின் ஆகியன இதன் அண்டை நாடுகள்.
வெள்ளியங்கிரி மலை (Velliangiri Mountains) தமிழ்நாடு கோயம்புத்தூரிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாகவும் (தென்கயிலை), சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் "வெள்ளியங்கிரி" என்ற பெயர் பெற்றது.
ஆளுமை என்பது என்ன என்பது பற்றி உறுதியான எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறை இல்லை. உளவியல் நோக்கில் ஆளுமை என்பது ஒருவரின் ஒழுங்கமைந்த, இயங்கியல் பண்புகளும், அவை தோற்றுவிக்கும் தோரண நடத்தைகள், உணர்வுகள், சிந்தனைகளையும் குறிக்கிறது. பொது வழக்கில் ஆளுமை என்பது ஒருவரின் வெளித் தோற்றத்தைப் பெரிதும் குறிக்கிறது.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
அப்பர் திருநாவுக்கரசு நாயனார் கி.பி. ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரைத் தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.இவர் தமிழகத்தில் முதன்முதலாகச் சிவன் கோயில்களில் உழவாரப் பணியை அறிமுகப்படுத்தியவர் ஆவார்.
இதழ் (ஒலிப்பு ) அல்லது சஞ்சிகை (Magazine) என்பது அச்சிட்டு செய்திகளையும் கருத்துக்களையும் இயற்கலை படைப்புகளையும் அறியவும், பகிர்ந்து கொள்ளவும், பரப்பவும் வெளி வருகின்றவையாகும். (இணையத்தில் வெளியிடப்படும் இதழ்கள் மின்னிதழ்கள் ஆகும்.) அனைத்தையும் இதழ்கள் என்ற பொதுச் சொல்லால் குறிப்பிட்டாலும், அவை இயல்பாலும், வெளிவரும் காலம், அதில் இடம் பெற்ற உள்ளடக்கம் போன்றவைகளைக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன.
சோவியத் ஒன்றியம் (Soviet Union, இரசியம்: Сове́тский Сою́з - சவியெத்ஸ்கி சயூஸ்) எனப் பொதுவாக அழைக்கப்பட்ட சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் (Сою́з Сове́тских Социалисти́ческих Респу́блик (СССР) - Soyuz Sovetskikh Sotsialisticheskikh Respublik [SSSR]) என்பது 1922 இல் இருந்து 1991 வரை இருந்த ஒரு சோசலிச நாடாகும். இது போல்ஷெவிக் ரஷ்யாவின் வாரிசாக உருவானது. 1945 இல் இருந்து 1991 இல் கலைக்கப்படும் வரை உலகின் இரண்டு வல்லரசுகளில் இதுவும் ஒன்றாகத் திகழ்ந்தது.
சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார்.
இந்தியக் கணிதவியல் வரலாற்றில் இரண்டு ஆரியபட்டாக்கள் புகழ் பெற்றுள்ளார்கள். இவர்களுள் ஐந்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த ஆரியபட்டாவைப் பற்றியது இக் கட்டுரை. பிற்காலத்தில் வாழ்ந்த இரண்டாம் ஆரியபட்டா என்பவரிடம் இருந்து வேறுபடுத்துவதற்காக இவரை முதலாம் ஆரியபட்டா அல்லது மூத்த ஆரியபட்டா எனவும் அழைப்பது உண்டு.
உளவியல் முறை(Methods of Psychology) என்பது உளவியல் சிக்கல்களை, அறிவியல் அடிப்படையில் புரிந்துகொள்ள,பல அறிவியல் முறைகளை, உளவியலாளர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த முறைகளால் பல்வேறு நடத்தைக் கூறுகளைப் புரிந்து கொள்வதில், சார்புகளும், பிழைகளும் குறைக்கின்றன. இந்த அறிவியல் முறைகளின் பொருத்தப்பாடு என்பது உளவியலில் கோட்பாடுகளையும், கருதுகோள்களையும் சோதனைகள் செய்வதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் பல்வேறு வகையில் பயனாகின்றன.
அரசியல் கட்சி என்பது, அரசில் அரசியல் அதிகாரத்தை அடைவதையும், அதனைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்படும் அரசியல் சார்ந்த ஒரு அமைப்பு ஆகும். இவை பொதுவாகத் தேர்தல்களில் பங்கு கொள்வதன் மூலம் இந் நோக்கத்தை அடைய முயல்கின்றன. அரசியல் கட்சிகள் பொதுவாக ஒரு வெளிப்படையான கொள்கையையோ அல்லது, ஒரு குறித்த இலக்குடன் கூடிய நோக்கையோ கொண்டிருக்கின்றன.