The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
புளூமின் வகைப்பாடு (Bloom's taxonomy) என்பது கல்விகற்றல் நோக்கங்களைக் குறிப்பிட்ட நிலைகளாக வகைப்படுத்தப் பயன்படும் மூன்று படிநிலை கொண்ட மாதிரிகளின் தொகுப்பாகும். மூன்று பட்டியல்கள் அறிவாற்றல், பாதிப்பு மற்றும் உணர்ச்சி களங்களில் கற்றல் நோக்கங்களை உள்ளடக்கியது. அறிவாற்றல் கள பட்டியல் பெரும்பாலான பாரம்பரிய கல்வியின் முதன்மை மையமாக இருந்துவருகிறது, மேலும் பாடத்திட்ட கற்றல் நோக்கங்கள், மதிப்பீடுகள் மற்றும் செயல்பாடுகளைக் கட்டமைக்க அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) ஸ்பெயினின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார்.2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லஸ் புய்க்ரெமாண்ட்டின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இவர் ஸ்பெயினிலிருந்து, காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாக கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
மாணவர் மைய கற்றல் என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மணவர் மையக்கற்றலின் நோக்கம் கற்பவர் தன்னிச்சையாக சுதந்திரமாக செயல்படுவது. மாணவர் கைகளில் கற்கும் கற்றல் பாதை பொறுப்பு செலுத்துவதன் மூலம் கற்பவர் சுயமாக,சுதந்திரமாக பிரச்சனைகளை திறமையாக கையாள வலியுறுத்துவதை இலக்காக இம்மாணவர் மைய கற்றல் முறை விளக்குகிறது .
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
தலைகீழ் வகுப்பறை அல்லது மறுபுறம் திருப்பப்பட்ட வகுப்பறை (Flipped classroom) என்பது ஒரு மாற்று கற்பித்தல் முறையாகும். இது பாரம்பரிய கற்றல் சூழலை மாற்றி, பெரும்பாலும் வகுப்பறைக்கு வெளியே, யூடியூப் போன்ற ஆன்லைன் ஊடகத்தில் உள்ளடக்கத்தை வழங்கி மாணவர்களை வேகத்துக்கு ஏற்ப வீட்டிலிருந்தே பார்த்து கற்று வகுப்பறையில் விவாதித்து புரிந்துகொள்ளும் ஒரு கற்றல் முறை ஆகும். மாணவர்களுக்கு அறிவியல், கணிதம் போன்ற பாடங்களை 5 முதல் 10 நிமிடங்கள் கொண்ட சிறுசிறு காணொளிகளாக்கு யூ டியூபில் பதிவேற்றம் செய்வர்.
பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் இனத்தவர்கள் (Scheduled Castes & Scheduled Tribes) என்ற சமூகத்தவர்கள் கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் தகுதிகளில் இந்திய துணை கண்டத்தில் வரலாற்று ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள். பிரித்தானிய இந்தியாவில், இவர்களை ஒடுக்கப்பட்ட மக்கள் (Depressed Class) என்று வகைப்படுத்தி, அவர்களது பொருளாதார மேம்பாட்டிற்கு பஞ்சமி நிலங்கள் ஒதுக்கப்பட்டன. மகாத்மா காந்தியும், அவர்பால் ஈர்க்கப்பட்ட என்.
நுண்ணிலை கற்பித்தலில் வளர்க்கப்படும் திறன்களின் பட்டியல்
இக்கட்டுரை நுண்ணிலை கற்பித்தலில் வளர்க்கப்படும் திறன்களின் பட்டியலைத் தருகிறது.
ஐக்கிய நாடுகள், அல்லது ஐநா அல்லது யூஎன், என்பது, பல நாடுகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல், கலிபோர்னியாவிலுள்ள, சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டது.
கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளைய தலைமுறையை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
அய்யா வைகுண்டர் (c.1833 –c.1851) (தமிழ்: அய்யா வைகுண்டர், சமக்கிருதம்: अय्या वैघुण्ढर्, மலையாளம்: അയ്യാ വൈകുണ്ഠർ) அல்லது சிவ நாராயணர் ஏகப்பரம்பொருளின் ஏகனேக அவதாரமாவார் . அவர் நாராயணருக்கும் லட்சுமி தேவிக்கும் மகனாக திருச்செந்தூர் கடலினுள் கொல்லம் ஆண்டு 1008, மாசி மாதம் 20-ஆம் தியதி அவதரித்தார். மும்மூர்தியினரின் நாமரூபங்களை ஏற்று, அனைத்து தெய்வ சக்திகளையும் உள்ளடக்கி நாராயணர் தனது ஒன்பதாம் பிறப்பை, வைகுண்ட அவதாரத்துக்கு முன்பு திருச்செந்தூர் கடற்கரையில் எடுக்கிறார்.
கற்பித்தல் என்பது கோட்பாடு மற்றும் நடைமுறை பயிற்சி ஆகியவற்றைக் கையாளும் ஒழுக்கம் ஆகும். கல்வி கற்பித்தல், மாணவர்களின் புரிந்துணர்வு மற்றும் அவர்களின் தேவைகள் மற்றும் தனிப்பட்ட மாணவர்களின் பின்னணியையும் நலன்களையும் கருத்தில் கொண்டு கற்பித்தல், ஆசிரியர் நடவடிக்கை, மற்றும் ஆசிரிய தீர்ப்புகள் மற்றும் முடிவுகளை ஆசிரியர் கற்பிப்பார். ஆசிரிய மாணவர்களுடன் எவ்வாறு தொடர்புகொள்கிறார் மற்றும் சமூக மற்றும் அறிவார்ந்த சூழலை ஆசிரியராக நிறுவ முற்படுகிறார்.
வரலாறு (History) (கிரேக்கம்: ἱστορία, historia பொருள்: "ஆய்வு மூலம் பெறப்பட்ட அறிவு") என்பது இறந்த காலத்தைப் பற்றி படிக்கின்ற ஒரு பாடப்பிரிவு என எழுதப்பட்ட ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது . எழுதப்பட்ட பதிவுகளுக்கு முன்பாக நிகழ்ந்தவை அனைத்தும் வரலாற்றுக்கு முந்தைய நிகழ்வுகள் எனக் கருதப்படுகின்றன. இத்தலைப்பின்கீழ் கடந்த கால நிகழ்வுகள், நினைவுகள், கண்டுபிடிப்புகள், சேகரிப்புகள், அமைப்புகள், அன்பளிப்புகள், நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் ஆகியவை அனைத்தும் இடம்பெறுகின்றன.
முதல் உலகப்போர் என்பது உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர். எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன.
தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம்
தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (National Council for Teacher Education (NCTE) என்பது இந்திய அரசால் இந்திய கல்வி முறையில் தரத்தை, நடைமுறைகள் மற்றும் செயல்முறைகள் மேற்பார்வையிட 1995 இல் இயற்றப்பட்ட தேசிய ஆசிரியர் கல்விக்குழும் சட்டம் (#73, 1993) இன் படி 1995 ஆண்டு அங்கிகாரம் அளிக்கப்பட்ட அமைப்பாகும்.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
மத்திய கிழக்கு (Middle East) வரலாற்று மற்றும் பண்பாட்டு அடிப்படையில் ஆபிரிக்க-யூரேசியாவின் ஒரு உட்பிரிவாகும். மரபுநோக்கில் இது, எகிப்துடன் சேர்த்துத் தென்மேற்கு ஆசிய நாடுகளை அல்லது அப்பகுதி்களைக் குறித்தது. வேறு சூழ்நிலைகளில் இப்பிரதேசம், வட ஆபிரிக்காவின் பகுதிகள் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் போன்றவற்றையும் சேர்த்துக் குறிப்பதுண்டு.
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் (மேயர்) பட்டியல்
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் (மேயர்) இந்தியாவின் தமிழக மாநிலத்தில் உள்ள சென்னை மாநகராட்சி மன்றத்தை வழிநடத்தும் அலுவலர் ஆவார்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
குடிப்பழக்கம் (Alcoholism) அல்லது மது சார்புள்ளமை என்பது மது குடிக்கும் பழக்கத்திலிருந்து வெளிவர முடியாத ஒரு பழக்கவடிமை நோய் ஆகும். இந்த நோயுள்ளவர்கள் மது அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் பின்விளைவுகள் மற்றும் அதனால் சமூகத்தில் ஏற்படும் தலைகுனிவு ஆகியவற்றை நன்கு அறிந்தும் கூடத் தவிர்க்கமுடியாமல் விருப்பத்திற்கு மாறாக, மற்றும் போதும் என்று கட்டுப்படுத்த இயலாதவாறு தொடர்ந்து குடிக்கும் பழக்கத்தை விடாமலிருப்பார்கள். போதை மருந்துகளுக்கு அடிமையாவது போலவே, குடிப்பழக்கம் எனப்படும் இந்நோயும் மருத்துவத்துவ துறையினரால் குணப்படுத்த இயலும் நோயாக வரையறுக்கப்படுகிறது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
உக்ரைன் (Ukraine, உக்ரைனியன்: Україна, உச்சரிப்பு [ʊkrɐˈjinɐ] (கேட்க), உக்ரையீனா) கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. உருசியாவுக்கு அடுத்தபடியாக பரப்பளவில் ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடான உக்ரைன், உருசியாவுடன் கிழக்கேயும், வட-கிழக்கேயும் எல்லைகளைக் கொண்டுள்ளது. உக்ரைன் நாட்டின் நடுவில் பாயும் தினேப்பர் ஆறு, உக்ரைனை மேற்கு உக்ரைன் மற்றும் கிழக்கு உக்ரைன் எனப்பிரிக்கிறது.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அஃது ஒரு மகாயான காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மகாயான பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவை இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
நகரத் தந்தை (மேயர்; mayor, "பெரிய" எனப் பொருள்படும் இலத்தீன் மொழியின் மேயோரிலிருந்து (maior) பெறப்பட்டது) பல நாடுகளிலும் மாநகரம் அல்லது நகரம் போன்ற உள்ளாட்சி அரசின் மிக உயரிய அலுவலர் ஆவார். நகரக் கிழார், நகர பிதா, மாநகர முதல்வர் எனவும் அறியப்படுகின்றார். உலகளவில் மேயரின் அதிகாரங்கள், பொறுப்புகள் குறித்த உள்ளகச் சட்டங்கள் மற்றும் வழமைகளில் பெருத்த வேறுபாடுகள் காணப்படுகின்றன.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
அடால்ஃப் இட்லர் (Adolf Hitler, ஏப்ரல் 20, 1889- ஏப்ரல் 30 ,1945) ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ந் தேதியன்று தற்கொலை செய்து கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார்.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்
தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்: ஆண்டு - படைப்பு (தன்மை) - படைப்பின் எழுத்தாளர் 1955 - தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) - ரா. பி. சேதுப்பிள்ளை 1956 - அலை ஓசை (நாவல்) - கல்கி கிருஷ்ணமூர்த்தி 1957 - (விருது வழங்கப்பட வில்லை) 1958 - சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை) - சி.
கணினி-வழி மொழிப் பாடம் கற்றல் (Computer-assisted language learning (CALL) அல்லது Computer-Aided Instruction (CAI) அல்லது Computer-Aided Language Instruction (CALI)) முறையில் மாணவர் தாமே கற்றலை நிகழ்த்துவர். எனவே இது தனிநபர் கற்றல் அல்லது தனிப்பட்ட கற்றல் என்றும் அழைக்கப்படும். தனிப்பட்ட கற்றல் என்பது கற்பவருக்கும் கற்றலுக்குமான உறவை பலப்படுத்துவதாகும்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
வணிகம் அல்லது வர்த்தகம் (trade, commerce) என்பது மனிதனது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் இலாப நோக்குடைய அல்லது இலாப நோக்கற்ற ஒரு பொருளாதாரச் செயற்பாடு ஆகும். வணிகமானது பிரதானமான நான்கு வளர்ச்சி கட்டங்களின் கீழ் வளர்ச்சியுற்றது. பண்டமாற்று முறை பணமுறை கைத்தொழில் புரட்சி தகவல் தொழில்நுட்ப புரட்சிவணிகவியல் வர்த்தக நடவடிகைகளை வணிகம் தொழிற்சாலை என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
செர்னோபில் அணு உலை விபத்து என்பது 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் நாள் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள பிப்யாட் என்னும் இடத்துக்கு அருகில் அமைந்திருந்த செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தைக் குறிக்கும்.இங்கு நான்கு அணு உலைகள் இருந்தன. அவற்றில் ஒன்றின் நீர் குளிர்வு சாதனம் செயல்படாததன் காரணமாக, வெப்பம் அதிகரித்து, அணு உலையின் மையம் உருக ஆரம்பித்தது. 1986, ஏப்ரல் 26 அன்று அதிகாலை 1.23 மணியளவில் நேர்ந்த இந்த சம்பவம் தொடர்ந்து மூன்று மணி நேர வெப்பத்தின் காரணமாக , உருகுதலோடு, உலையில் உள்ள பிளாக்குகளைத் தீப்பற்ற செய்து வெடிக்கவும் வைத்தது.
விளம்பரம் (advertising) என்பது தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பிராண்டுகளை அல்லது ஒரு குறிப்பிட்ட வகை தயாரிப்புகள் அல்லது சேவைகளை அதிக அளவில் வாங்க உண்டாக்கப்பட்ட தொடர்பு சாதனம். 19ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒட்டுமொத்த உற்பத்தி அதிகமானதைத் தொடர்ந்து நவீன விளம்பரங்கள் முன்னேற்றமடைந்தன.வடிவமைக்கப்பட்ட மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட "வடிவம்" மூலம் அந்தக் குறிப்பிட்ட சாதனங்கள், சேவைகளின் கொள்முதலை அதிகப்படுத்தும் வகையில் நிறைய விளம்பரங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த மாதிரியான நோக்கத்திற்காகச் சில விளம்பரங்கள், அவர்களுடைய விடாப்பிடியான செய்தியை சில சமயங்களில் உண்மையான தகவல்களுடன் சேர்த்துவிடுவதுண்டு.
தொலைத்தொடர்பு, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், அரசியல், பண்பாடு, ஆகிய துறைகளின் முன்னேற்றங்களினால் உந்தப்பட்டு உலக சமூகங்களுக்கிடையேயான அதிகரிக்கும் தொடர்பையும் அதனால் ஏற்படுத்தப்பட்டுவரும் ஒருவரில் ஒருவர் தங்கிவாழ் நிலையையும் உலகமயமாதல் எனலாம். உலகமய சூழலில் ஒரு சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைமைகளும் நிகழ்வுகளும் மற்றைய சமூகங்களில் கூடிய விகித தாக்கத்தை ஏதுவாக்குகின்றது. உலகமயமாதல் வரலாற்றில் ஒரு தொடர் நிகழ்வுதான், ஆனால் இன்றைய சூழல் உலகமயமாதலை கோடிட்டு காட்டுவதாக அமைகின்றது.
தமிழ்நாட்டில், மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை 142 நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக, அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் (Local government bodies in Tamil Nadu) என்பது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தின் ஊர்களை அந்த ஊரின் மக்கள் தொகை மற்றும் வருவாய்க்கு ஏற்பப் பிரிக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரிவுகளைக் குறிக்கும். இந்திய அரசியலைப்புச் சட்டம் பகுதி IV ல் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அதிகாரங்கள் பொறுப்புகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் ஊராட்சிகள் சட்டம் 1994 இயற்றப்பட்டு, 1994 ஏப்ரல் 22ம் தேதி நடைமுறைக்கு வந்தது.
அன்னை தெரேசா (Mother Teresa, ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார்.
தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை
தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை (National Assessment and Accreditation Council, NAAC) அல்லது என்ஏஏசி இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களை மதிப்பிட்டு தரவரிசைப்படுத்தும் ஓர் அமைப்பாகும். இந்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு வழங்கும் நிதியில் தன்னாட்சியுடன் இயங்கும் இந்த அமைப்பு பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்டுள்ளது.
நாசிசம் என்பது ஆரியர்களே உயர்ந்தவர்கள், ஆரிய இனமே உலகை ஆளத் தகுந்தது;மற்ற அனைத்து இனங்களும் அழகிலும், அறிவிலும் ஆரியர்களுக்குக் குறைந்தவை போன்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஜெர்மனியில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றி இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்ட இனவெறிக் கொள்கையைக் குறிக்கும். இதற்கு மூலமான ஆரிய உயர்வுக் கொள்கை(Aryan Supremacy Theory) பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே பெரும்பாலான ஐரோப்பிய அறிஞர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தது. இக்கொள்கை, அன்பு, அருள், இரக்கம் போன்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ நெறியை அடிமைகளின் நெறிகள் என்றும் வெள்ளை நிறமும், நீலக் கண்களும் கொண்ட ஆரியர்கள் இவற்றையும் இவற்றிற்கு அடிப்படையான யூத மறையையும், யூதர்களையும் உலகிலிருந்து ஒழிக்கும் மூலமே ஆரியர்களின் பழங்காலப் பெருமையை மீண்டும் நிலைநாட்ட முடியும் என பரப்புரை(propaganda) செய்தது.
இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில் மட்டும் நகராட்சிகளுக்கும், கிராம ஊராட்சிகளுக்கும் இடைப்பட்ட நிலையில் பேரூராட்சி அமைப்பு நிறுவப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் நகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் குறிப்பிட்ட வருவாயுடைய ஊர்களை பேரூராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த பேரூராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன.
வானொலி (Radio) என்பது ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்களைக் கொண்ட மின்காந்த அலைகளின் வழி தொடர்பு கொள்ளும் ஒரு கம்பியில்லாத் தொலைத்தொடர்பு ஊடகமாகும். மின்காந்த அலைகளின் வழி செய்தி, அறிவிப்பு, பாடல் மற்றும் உரையாடல் ஒலியலைகளை ஏற்றி வான் வழியே செலுத்தி ஆங்காங்கே மக்கள் அதை தங்களிடமுள்ள வானொலிப் பெட்டி வழியாகப் பெறுமாறு தொழில் நுட்பம் தொடங்கியதால் இதனை வானொலி (அ) ரேடியோ என்பர். இந்த மின்காந்த அலைகள் கண்களால் காணக்கூடிய ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்ணைக் கொண்ட மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்குகிறது.
கண்ணப்ப நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். திண்ணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், வேடர் குலத்தில் பிறந்தவர், வேட்டை ஆடுவதில் சிறந்தவர். நாணன், காடன் என்ற நண்பர்களோடு வேட்டையாட சென்றபோது, காளத்தி மலையில் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தினை கண்டார்.
உழவு அல்லது வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொள்கிறான்.
சுவான்சாங் (யுவான் சுவாங்) என்பவர் ஒரு புகழ் பெற்ற சீன மதகுருவும், கல்வியாளரும், பயணியும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இவரது பயணங்கள், சீனாவின் தொடக்க தாங் காலத்தில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தின. தனது 17 ஆண்டுகள் பிடித்த இந்தியாவுக்குச் சென்று சீனா திரும்பிய பயணத்தின் மூலம் இவர் பெரும் புகழ் எய்தினார்.
பெண்ணியம் (feminism) என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் எதிர்க்கும் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் தொகுப்பாகும். ஆண் பெண் சமத்துவத்தில் கவனம் செலுத்தும் கோட்பாடாகவும் இது வரையறுக்கப்படுவதுண்டு. பெண்ணியத்தை வரையறுப்பதென்பதே கூட சிக்கலானதாக இருப்பதுண்டு.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of chief ministers of Tamil Nadu) அதன் முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920 முதலான வரலாற்றில் இருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
வகுப்பறை என்பது பாடசாலைகள் போன்ற கல்வி நிறுவனங்களில், கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகிய செயல்கள் நடைபெறும் அறைகளைக் குறிக்கும். மாணவர்கள் கல்வி கற்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவதே வகுப்பறை அமைப்பின் முக்கிய நோக்கமாகும். பொதுவாக, உகந்த தளவாடப் பரவமைப்புக்கான (layout) இடவசதி, சிறந்த உள்ளக ஒலிப் பண்பு, ஆசிரியர் கற்பிப்பதைத் தெளிவாகப் பார்க்கக்கூடிய வடிவமைப்பு, பொருத்தமான ஒளியமைப்பு என்பன வகுப்பறைகளில் இருக்கவேண்டிய சில முக்கிய அம்சங்களாகும்.
திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்
திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் எனப்படும் திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள காவேரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனைத் திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர்.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவார். இவர் அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.
இந்தியாவில் பெண்கள் நிலை கடந்த சில ஆயிரவாண்டுகளில் வெகுவாக மாறிவந்துள்ளது. பண்டைக் காலத்தில் பெண்கள் ஆண்களுடன் சமனிலையில் இருந்தனர்; இடைக்காலங்களில் மிகவும் தாழ்ந்த நிலையை எய்தினர்; சம உரிமைகளுக்கு அண்மை நூற்றாண்டில் பல சீர்திருத்தவாதிகள் போராடி வந்துள்ளனர். தற்கால இந்தியாவில் பல உயர்ந்த பதவிகளில் பெண்கள் இருந்துள்ளனர்; இந்திய அரசில் குடியரசுத் தலைவர், பிரதமர், மக்களவைத் தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளனர்.
பாடத்திட்டத்தின் மேம்பாடு என்பது பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான ஒரு செயல்முறையாகும். பாடத்திட்டத்தை மேம்படுத்துவதில் பல்வேறு அணுகுமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பொதுவாக பயன்படுத்தப்படும் அணுகுமுறைகள் பகுப்பாய்வு (அதாவது தேவை பகுப்பாய்வு, பணி பகுப்பாய்வு), வடிவமைப்பு (அதாவது நோக்க வடிவமைப்பு), தேர்வு (அதாவது சரியான கற்றல் / கற்பித்தல் முறைகள் மற்றும் அதற்கான மதிப்பீட்டு முறையை தேர்ந்தெடுத்து) உருவாக்கம் (அதாவது பாடத்திட்டத்தை செயல்படுத்த குழு / பாடத்திட்ட மதிப்பீட்டுக் குழுவின் உருவாக்கம்) மற்றும் ஆய்வு (அதாவது பாடத்திட்ட மதிப்பாய்வு குழு).
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு
"தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு" (இந்தி:राष्ट्रीय शैक्षिक अनुसंधान और प्रशिक्षण परिषद, ஆங்கிலம்:National Council of Educational Research and Training-NCERT ) இந்தியாவில் தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் குழு ஆகும். இது மத்திய, மாநில அரசுகளுக்குக் கல்வி குறித்த ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்கும் குழுவாக செயல்பட்டு வருகிறது. இக்குழு 1961 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
நாடுகளின் பொதுநலவாயம் (Commonwealth of Nations) அல்லது பரவலாக பொதுநலவாயம் (காமன்வெல்த்),[1] எனப்படுவது பெரும்பாலும் முன்னாள் பிரித்தானியப் பேரரசின் ஆட்பகுதிகளாக இருந்த, 53 உறுப்பினர் நாடுகளைக் கொண்ட பன்னாட்டிடை அமைப்பாகும்.இருபதாம் நூற்றாண்டின் நடுவில், இரண்டாம் உலகப்போரின் பின்னர் பிரித்தானியாவின் பல குடியேற்ற நாடுகளுக்கு பல நாடுகளுக்கு தன்னாட்சி வழங்கப்பட்டது. இந்நாடுகள் அனைவற்றையும் தன் பிணைப்பில் வைத்திருக்க பிரித்தானியா விரும்பியது. இத்தேவையை நிறைவு செய்ய பொதுநலவாயம் எனும் அமைப்பை உருவாக்கியது.
அப்பர் திருநாவுக்கரசு நாயனார் கி.பி. ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரைத் தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.இவர் தமிழகத்தில் முதன்முதலாகச் சிவன் கோயில்களில் உழவாரப் பணியை அறிமுகப்படுத்தியவர் ஆவார்.
வைணவ சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள் ஆவர். தென்மொழியாம் தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர். அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் ஆண்டாளையும், இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு.