The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
பேரறிவாளன் (A. G. Perarivalan; பிறப்பு: 30 சூலை 1971) என்பவர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர். இவர் திருப்பத்தூர் மாவட்டம், சோலையார்பேட்டையைச் சார்ந்தவர். மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழிநுட்பப் பட்டயம் பெற்ற இவர் சென்னை பெரியார் திடல் விடுதலை அலுவலகத்தில் கணிணிப் பிரிவில் பணியாற்றி வந்தார்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, நவம்பர் 26, 1954 – மே 17 அல்லது மே 18 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972 இல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975 இல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் இவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக இவர் குற்றம் சாட்டப்பட்டார்.
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் நாள் ஆகும். இது இலங்கைத் தமிழராலும், உலகத் தமிழராலும் ஆண்டு தோறும் மே 18 ஆம் நாள் நினைவு கூறப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டில் இந்நாளிலேயே இலங்கையின் வட-கிழக்குக் கரையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் எனும் கிராமத்தில் ஈழப்போர் முடிவுற்றது.
கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) ஸ்பெயினின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார்.2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லஸ் புய்க்ரெமாண்ட்டின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இவர் ஸ்பெயினிலிருந்து, காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாக கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்
தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்: ஆண்டு - படைப்பு (தன்மை) - படைப்பின் எழுத்தாளர் 1955 - தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) - ரா. பி. சேதுப்பிள்ளை 1956 - அலை ஓசை (நாவல்) - கல்கி கிருஷ்ணமூர்த்தி 1957 - (விருது வழங்கப்பட வில்லை) 1958 - சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை) - சி.
செங்கொடி (Senkodi, அகவை:21, இறப்பு: ஆகஸ்ட் 28, 2011) ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடக்கூடாது எனக் கோரி ஆகத்து 28, 2011 அன்று காஞ்சிபுரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண் போராளி ஆவார். இவர் காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகள். காஞ்சிபுரத்தில் இயங்கிய மக்கள் மன்றம் என்ற அமைப்பில் இணைந்து தமிழுணர்வுப் போராட்டங்களில் இவர் பங்கெடுத்துள்ளார்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
தேன்மொழி "காயத்திரி" ராசரத்தினம் (Thenmozhi "Gayatri" Rajaratnam), என்பவர் தற்கொலைக் குண்டுவெடிப்பில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்தவர். 1991, மே 21 ஆம் நாள் தமிழ்நாட்டில் சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் அவருடன், இராசீவ் காந்தி மேலும் பதினான்கு பேர் தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். தேன்மொழி "காயத்திரி" மற்றும் "தனு" என்ற பெயர்களாலும் இவர் அறியப்படும் இவர் இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறார்.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
பெண்ணியம் (feminism) என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் எதிர்க்கும் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் தொகுப்பாகும். ஆண் பெண் சமத்துவத்தில் கவனம் செலுத்தும் கோட்பாடாகவும் இது வரையறுக்கப்படுவதுண்டு. பெண்ணியத்தை வரையறுப்பதென்பதே கூட சிக்கலானதாக இருப்பதுண்டு.
ராசீவ் காந்தி (Rajiv Gandhi) (ஆகஸ்ட் 20, 1944 - மே 21, 1991), இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர்.இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981 பெப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.21 மே 1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
பழனி (Palani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி வட்டம் மற்றும் பழனி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வுநிலை நகராட்சியும் ஆகும். கொங்கு நாட்டில் அமைந்துள்ள இந்த நகராட்சி இந்திய புகழ்பெற்ற ஆன்மீக சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பழனி மலையில் 18 சித்தர்களில் ஒருவரான போகரால் ஒன்பது வகை பாசாணத்தைக் கொண்டு செய்த புகழ் பெற்ற முருகன் சிலை, மலைக்கோயிலில் இருக்கிறது.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் சிவனைப் பற்றிய கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று உட்பட பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அப்பாடல்களை அடி எல்லை நோக்கில் ஆராயும் போது குறைந்த அடி எல்லையாக 11 அடிகள் கொண்ட பாடல்களும் உயர்ந்த அடி எல்லையாக 80 அடிகள் கொண்ட பாடல்களும் காணப்படுகின்றன.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (Thirugnana Sambandar, தமிழில் அறிவுசேரர் என்று பொருள் தரும்.), அல்லது சம்பந்தர் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதலில் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான பொ.ஊ.மு 400க்கும் பொ.ஊ. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயாசாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்துக் கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும்.
புனிதர் தேவசகாயம் பிள்ளை (Saint Devasahayam, மலையாளம்: മാർ ദേവസഹായം പിള്ള; 23 ஏப்ரல் 1712 – 14 சனவரி 1752) இந்தியக் கத்தோலிக்கப் புனிதர் ஆவார். இவர் கன்னியாகுமரியில் இந்துக் குடும்பம் ஒன்றில் 18-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். நீலகண்டன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திருமுழுக்குப் பெற்றபோது, "லாசரசு" (Lazarus) என்பதன் தமிழ் பதமான "தேவசகாயம்" என்ற பெயரைப் பெற்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam, LTTE) சுருக்கமாக விடுதலைப் புலிகள் அல்லது த.வி.பு என்பது இலங்கையில் தமிழருக்கு ஏற்பட்ட இனவேற்றுமைகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடிய போராட்ட அமைப்பு ஆகும். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆவார். அவரால் இவ்வியக்கம் 1976 இல் உருவாக்கப்பட்டது.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thai Valthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அஃது ஒரு மகாயான காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மகாயான பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவை இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியும் ஆவார். இந்திய ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் எனக் குறிப்பிடப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் வாயிலாக இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் மரபுசார்ந்த ஒன்றாகும்.
கவிமணி தேசிக விநாயகனார் (Kavimani Desigavinayagam, சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகின் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
இலங்கைத் தமிழர் இனப்படுகொலை என்பது பெரும்பான்மை பேரினவாத சிங்கள அரசு கலவரங்களை ஏற்படுத்தியும், வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாக குண்டு வீசியும், எறிகணைகளை வீசியும், நேரடியாகச் சுட்டும், சித்திரவதை செய்தும் ஈழத்தமிழர்களை படுகொலை செய்யும் இனவழிப்பைக் குறிக்கும். குறிப்பாக தமிழர்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு எவ்வித நடைமுறைத் தீர்வுகளையும் முன்வைக்காது, பொது மக்களைப் பொருட்படுத்தாது மேற்கொண்டுவரும் போரில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்படுதலைக் குறிக்கிறது. 2009 போரில் மட்டும் சுமார் 20,000 மக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய இராச்சிய ரைம்சு பத்திரிகை கூறுகிறது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
வைணவ சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள் ஆவர். தென்மொழியாம் தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர். அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் ஆண்டாளையும், இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு.
கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
இந்திய அரசின் ஐந்தாண்டுத் திட்டங்கள் (Five-Year Plans of India) என்பது 1947-2017 வரையில் இந்தியப் பொருளாதாரமானது திட்டமிடலை அடிப்படையாகக் கொண்டே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஐந்தாண்டுத் திட்டங்களாகப் பகுக்கப்பட்டு திட்டக் குழு (இந்தியா) (1947-2014) மற்றும் நிதி ஆயோக் (2014-2017) மூலம் வடிவமைக்கப்பட்டும், செயல்படுத்தப்பட்டும், மேற்பார்வையிடப்பட்டும் வந்தது. நரேந்திர மோதி தலமையிலான ஆட்சி 2014 இல் அமைந்தவுடன் இந்திய ஐந்தாண்டு திட்டங்கள் - திட்ட கமிசன் கலைத்து விட்டு புதிய அமைப்பாக நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்
இந்தியாவின் அடிப்படை உரிமைகள் என்பது இந்திய அரசியல் சாசனம் தனது மூன்றாவது பகுதியில் வழங்கியுள்ள உரிமைகளுக்கான சாசனம் ஆகும். இந்தப் பகுதி இந்திய நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் அமைதியான முறையிலும் இணக்கத்துடனும் வாழ்வை மேற்கொள்ளத் தேவையான குடிமையியல் சுதந்திரங்களை இந்தியர்களுக்கு வழங்குகிறது. அமெரிக்காவின் உரிமைகள் சட்டவரைவை (Bill of Rights) மூலமாக கொண்டது.
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் அல்லது இந்திய ஜனாதிபதி என்பவர் இந்தியக் குடியரசு எனப்படும் இந்திய அரசின் தலைவர் ஆவார். மத்திய நிர்வாகக் குழுவின் தலைவரும், கூட்டாட்சி நிர்வாகத்தின் தலைவரும், இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார். இந்தியாவின் முதல் குடிமகன் என்றும் அவர் குறிப்பிடப்படுகிறார்.
கணினி (ஒலிப்பு ) என்பது எண் முதலான தரவுகளை உட்கொண்டு, முறைப்படி கோத்த ஆணைக் கோவைகளைச் செயற்படுத்தும் ஒரு கருவி. ஒரு பணியைச் செய்ய, அதனைப் பல கூறாகப் பகுத்து, எதன் பின் எதனைச் செய்ய வேண்டும் என்று எண்ணி, கணினியுள் இடுவதற்காகத் lp தொகுக்கப்பட்ட ஆணைக் கோவை அல்லது கட்டளைக் கோவையானது, செய்நிரல் எனப்படும். கணினியில் இப்படி செய்நிரல்களைச் சேமித்து வைத்து பணி செய்ய இயக்குவது தனிச் சிறப்பாகும்.
அப்பர் திருநாவுக்கரசு நாயனார் கி.பி. ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரைத் தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.இவர் தமிழகத்தில் முதன்முதலாகச் சிவன் கோயில்களில் உழவாரப் பணியை அறிமுகப்படுத்தியவர் ஆவார்.
சாகித்திய அகாதமி விருது (Sahitya Akademi Award), சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
உலகத் தமிழ் மாநாடு உலகத் தமிழ் மாநாடு என்பது உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களையும் மொழியின்பால் ஒன்று சோ்ப்பதற்காக நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இம் மாநாடு தமிழையும், தமிழரின் பெருமையையும் உலகோர் அறியச் செய்ய கருப்பொருளாக விளங்குகிறது. இம்மாநாட்டில் பங்காற்றுவது ஒவ்வொரு தமிழனின் மொழி காக்கும் செயலாகும்.
சுற்றுச்சூழல் மாசுபாடு அல்லது சூழல் மாசடைதல் (Pollution) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக் கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும். சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன.
முள்ளிவாய்க்கால் படுகொலை என்பது இலங்கை நாட்டின், வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கே அமைந்த முள்ளிவாய்க்கால் என்ற கடற்கரை கிராமத்தில், ஈழப் போரின் இறுதிக் கட்டம் 2009ஆம் ஆண்டில் நிறைவுற்றது. இறுதிப் போரின் போது ஒன்றுமறியாத நாற்பதாயிரம் தமிழர்கள், சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.இப்படுகொலை குறித்து ஐக்கிய நாடுளின் சபை தலைமையில் பன்னாட்டு விசாரணை நடத்த உள்ளது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 – சூன் 11, 1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாகக் காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான்.