The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் புதினமாகும். 1950 - 1955-ஆம் ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது.
மனு தர்ம சாத்திரம் (சமசுகிருதம்:मनुस्मृति, மனுஸ்மிருதி) இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும். இதனை சுவாயம்பு (மனு) எனும் பண்டைய வேத கால முனிவர் தொகுத்தார். இது 2685 செய்யுட்களாகவும், 3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது.
கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) ஸ்பெயினின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார்.2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லஸ் புய்க்ரெமாண்ட்டின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இவர் ஸ்பெயினிலிருந்து, காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாக கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
கைப்பந்தாட்டம் (volleyball) என்பது ஓர் அணிக்கு ஆறு வீரர்கள் வீதம் உருவாக்கப்பட்ட இரண்டு அணி வீரர்கள் ஒரு வலையால் பிரிக்கப்பட்டு கைகளால் பந்தை அடித்து ஆடுகின்ற ஒரு குழு ஆட்டமாகும். ஒவ்வோர் அணியும் தங்கள் பகுதிக்கு அனுப்பப்பட்ட பந்தை அது தரையை தொடுவதற்கு முன் கைகளால் வாங்கி, தட்டி பின்னர் எதிர்ப்பக்கத்தினரின் பகுதியில் தரையைத் தொடும்படி அனுப்புகின்ற விளையாட்டு ஆகும். எதிர்ப்பக்கத்திற்கு பந்தை அனுப்ப ஒவ்வோர் அணியும் மூன்று தட்டுதல்கள் எடுத்துக் கொள்ளலாம்.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர். இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
தடகள விளையாட்டுக்கள் (Athletics) எனப்படுவது தட கள மைதானத்தில் இடம்பெறும் ஓடுதல், எறிதல்,நடத்தல், தாண்டுதல் போன்ற செயற்திறன்களை உள்ளடக்கிய பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஆகும். பெரும்பாலான இவ்விளையாட்டுக்கள் மிக எளிமையானவை. விலையுயர்ந்த கருவிகளையோ கட்டமைப்புக்களையோ வேண்டுவதில்லை என்பதால் இவை மிகப் பரவலாக விளையாடப்படுகின்றன.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
ஒலிம்பிக்கு விளையாட்டுகள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுகளுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக்கில் 200 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன.
தாள்ளபாக்கம் அன்னமாச்சாரியார் (மே 9, 1408 - பெப்ரவரி 23, 1503) 15ம் நூற்றாண்டில் ஆந்திராவிலுள்ள கடப்பா மாவட்டத்தில் தாள்ளபாக்கம் எனும் கிராமத்தில் நந்தவாரிக எனும் தெலுங்கு அந்தண குடும்பத்தில் பிறந்த வைணவத் தொண்டர். திருமலை திருவேங்கடமுடையான் கோயிலோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இவர், திருவேங்கடவன் மீது பாடிய பாடல்கள் சங்கீர்த்தனைகள் என்ற புகழ்பெற்றவை.
கால்பந்து என்பது ஒரேமாதிரியான பலகுழு விளையாட்டுக்களின் பெயர், அவை அனைத்தும் பந்தை கால்களைக்கொண்டு உதைத்து கோலைப் பெற (வெவ்வேறு கோணங்களில்) முயற்சிக்கும் செயலில் ஈடுபடுகின்றன. சங்கக் கால்பந்து என்பது உலக அளவில் இந்த விளையாட்டுக்களில் மிகவும் பிரபலமானது, மேலும் பொதுவாக வெறும் "கால்பந்து" அல்லது "சாக்கர்" என்று அறியப்படுகின்றது. இருப்பினும் கால்பந்து என்ற வார்த்தை கால்பந்து வடிவத்தில் உள்ள அனைத்து விளையாட்டிற்கும் பொருந்துகின்றது, இது உலகத்தின் ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியிலும் மிகவும் பிரபலமானது.
கபடி அல்லது சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழ்குடிகளால் பல காலமாக, விளையாடப்படும் தமிழர் விளையாட்டுகளுக்குள் ஒன்று. சல்லிக்கட்டிற்கு (ஏறு தழுவுதல்) தயாராகும் முன் தமிழர்கள் செய்யும் பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக விளையாடப்பட்டு வருகிறது. கபடி என்ற பெயரும் தமிழ்ப்பெயராக இருக்கும் என்று கூறப்படுகிறது.
வியாசர் மகா புராணங்கள் என்று அழைக்கப்பெறும் பதினெண் புராணங்களையும் எழுதியவராகவும், இதிகாசமான மகா பாரதத்தினை எழுதியவராகவும் அறியப்பெறுகிறார். இவர் வேதங்களை தொகுத்து வழங்கியதால் வேத வியாசர் என்றும் அழைக்கப்பெறுகிறார். பராசரர் - மச்சகந்தி இணையருக்கு கங்கை ஆற்றில் அமைந்த ஒரு தீவுத்திட்டில், கருத்தமேனியுடன் பிறந்ததால், கிருஷ்ண த்வைபாயனர் என்ற பெயராயிற்று.
விரைவோட்டம் (Sprint) அல்லது சுருக்கோட்டம் (குறுவிரையோட்டம்) என்பது அனைத்துலகிலும் நடைபெறும் ஓர் ஓட்டப்பந்தயம். இவ்வோட்டப்போட்டி ஒலிம்பிக்கில் மிகப்பலராலும் விரும்பிப் பார்க்கப்படும் ஒரு விளையாட்டு. இவ்வகை ஓட்டப்போட்டியில் ஏறத்தாழ 8-10 பேர் ஒரே நேரத்தில் புறப்பட்டு ஒரு குறிப்பிட்ட நீளம் கொண்ட தடகளத்தை கடக்க மிகவிரைந்து ஓடுவார்கள்.
சில்க் ஸ்மிதா (தெலுங்கு: 'సిల్క్' స్మిత (2 திசம்பர் 1960 - 23 செப்டம்பர் 1996) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். 1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக இவர் திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார். சில்க் ஸ்மிதா தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தினார்.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
பொன்னியின் செல்வன் என்பது 2022 இல் திரைக்கு வரவிருக்கும் தமிழ் கற்பனைய வரலாற்று நாடகத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், லைக்கா தயாரிப்பகம் ஆகிய தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் மணிரத்னம் இயக்கி, தயாரிக்கின்றார். இது பிரபல தமிழ் எழுத்தாளரான கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்ட இரு பாகங்களின் முதல் பாகம் ஆகும்.
வலைப்பந்து ஏழு பேர்கள் அடங்கிய இரு அணிகளுக்கிடையே ஆடப்படும் ஓர் பந்து விளையாட்டு ஆகும்.இது பெண்கள் கூடைப்பந்து விளையாட்டின் துவக்கநிலை பதிப்புகளிலிருந்து உருவானதால் கூடைப்பந்து விளையாட்டுடன் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. இங்கிலாந்தில் 1890களில் இது ஓர் முறையான விளையாட்டாக மேம்படுத்தப்பட்டது.அங்கிருந்து பல நாடுகளுக்குப் பரவியது.பொதுநலவாய நாடுகளில் பரவலாக விளையாடப்படும் இந்த விளையாட்டினை பெரும்பாலும் பெண்களே விளையாடுகின்றனர். செவ்வக வடிவ ஆடுகளம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இரு சிறு இறுதிப்பகுதிகளிலும் உயரமான இலக்குகூடை அமைந்துள்ளது.
வளையப்பந்து(Tennikoit) என்பது பூப்பந்தைப்(Tennis) போன்ற ஒரு வகை விளையாட்டாகும் .இதற்கும் பூப்பந்து விளையாடுவதற்கு ஏற்ற ஆடுகளம்போல் ஆடுகளம் தேவை .வளையப்பந்து விளையாடுவதற்கு வட்டமான இரப்பர் வளையப்பந்து தேவை.இந்த விளையாட்டை விளையாடும் இரு விளையாட்டு வீரர்களை பிரிக்கும் வகையில் , ஒவ்வொருவரும் தனது பிடிப்பை மோதலின்றி பிடிக்க ஆடுகளத்தின் குறுக்கே வலை அமைக்கப்பட்டிருக்கும் .வளையப்பந்து குறிப்பாக ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இந்த விளையாட்டு மிகவும் பிரபலமாக உள்ளது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
பொதுவாக கால்பந்து அல்லது சங்க கால்பந்து (Association football) என்பது, பதினொரு வீரர்கள் கொண்ட இரண்டு அணிகளுக்கு இடையில் ஒரு கோள வடிவப் பந்தினைக் கொண்டு விளையாடப்படும் ஒரு அணி விளையாட்டு ஆகும். சங்கக் கால்பந்து என்பது உலகெங்கிலும் மிகப் பிரபலமாக இருக்கும் காற்பந்து விளையாட்டு வகையாகும். இது உலகிலேயே மிகவும் பிரபலமான விளையாட்டாகக் கருதப்படுகிறது.இந்த விளையாட்டு, செவ்வக வடிவ புல்தரை அல்லது செயற்கைப் புல்தரை ஆடுகளத்தில் விளையாடப்படுகிறது.
நீளம் தாண்டுதல் (இலங்கை வழக்கு: நீளப்பாய்ச்சல் அல்லது நீளம் பாய்தல்) என்பது ஒரு தடகள விளையாட்டு ஆகும். இதில் விளையாட்டு வீரர் ஒருவர் ஓடி வந்து ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து தனது உடல்வலு, வேகம் ஆகியவற்றைப் பயன்படுத்தி நீண்ட தூரத்தைத் தாண்டிப் பாய முயற்சிப்பார். பாய்வதற்கான இடத்தில் செவ்வக வடிவிலான ஒரு குழி வெட்டப்பட்டு அதில் மணல் நிரப்பப்பட்டிருக்கும்.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகின் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
பிரதோசம் (Pradosha) என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோச வழிபாடு எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோச விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது. பிரதோசத்திற்காக கூறப்படும் புராணக் கதையில் செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் பொழுது ஆலகாலம் எனும் விசம் வெளிப்பட்டது.
சூத்திரர் (Shudra) என்போர் குலப்பிரிவை அடிப்படையாகக் கொண்ட இந்து சமயக் கோட்பாட்டின்படி கடைநிலை ஊழியர்களாகவும், தாழ்ந்தவர்களாகவும் பணிக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள். பிராமணர், சத்திரியர் (அரசகுடியினர்), மற்றும் வைசியர் ஆகிய மூன்று பிரிவினரைவிட தாழ்ந்தவர்கள் என அறிவித்து மற்ற பிரிவினருக்குப் பணி செய்வதையே இவர்களது கடமை என்ற முறையை பின்பற்றினர்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான பொ.ஊ.மு 400க்கும் பொ.ஊ. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thai Valthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.
தடகளப் போட்டிகள் என்பது விளையாட்டின் வகைகளில், ஓடுதல், குதித்தல் மற்றும் வீசுதல் ஆகியவற்றின் திறன்களில் நிறுவப்பட்ட போட்டிகளை உள்ளடக்கியது ஆகும். விளையாட்டு நடைபெறும் இடம், ஓடும் பாதை மற்றும் வீசுவதற்கான புல் களம் மற்றும் சில குதித்தல் நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து இந்தப் பெயர் பெறப்பட்டது. தடகளம் என்பது தனித்திறன் விளையாட்டுப் போட்டி என்ற குடையின் வகைப்படுத்தப்பட்டுள்ளது, இதில் சாலை ஓட்டம், நாடுகளுக்கிடையிலான ஓட்டம் மற்றும் பந்தய நடைப்பயிற்சி ஆகியவை அடங்கும்.
கையுந்துபந்து போட்டிக்கு பயன்படுத்தப்படும் பந்தே உள்ளரங்க கையுந்துபந்து போட்டிக்கும், கடற்கரை கையுந்துபந்து போட்டிக்கும், இதே போன்று சற்று மாறுபாடு கொண்டு ஆடப்படும் கையுந்துபந்து போட்டிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. கையுந்துபந்து ஏறக்குறைய 18 செவ்வக வடிவமுடைய செயற்கை அல்லது உண்மையான தோல்களைக் கொண்டு வட்டவடிவமாக உருவாக்கப்பட்டுள்ளது.கையுந்துபந்து உருவாக்கப்படும்பொழுது மூன்று பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஆறு செவ்வக வடிவ செயற்கை அல்லது உண்மையான தோலுடன் காற்று நிரப்ப்ப்படும் ஒரு இரப்பர் பை கொண்ட வட்ட வடிவமாக ஓட்டப்படுகிறது. 2008-ல் அகில உலக கையுந்துபந்து கழகம் உள்ளரங்க கையுந்துபந்து போட்டிகளில் விளையாட ஏதுவாக மென்மையாக தொடுவதற்கும், பந்து முறையாகப் பறப்பதற்கும், எட்டு பேனல்கள் கொண்ட கைபந்தை ஏற்றுக்கொண்டது.
அஷ்டதிக்கஜங்கள் ( Ashtadiggajas ) என்பது பொது ஊழி 1509 முதல் 1529 வரை விஜயநகரப் பேரரசை ஆண்ட கிருஷ்ணதேவராயனின் அரசவையில் இடம்பெற்றிருந்த எட்டு தெலுங்கு அறிஞர்கள் மற்றும் கவிஞர்களுக்கு வழங்கப்பட்ட பெயராகும். இவரது ஆட்சியின் போது, தெலுங்கு இலக்கியமும் கலாச்சாரமும் அதன் உச்சத்தை எட்டின. இவரது அரசவையில், எட்டு கவிஞர்கள் இவரது இலக்கிய சபையின் எட்டு தூண்களாக கருதப்பட்டனர்.
பிரம்மா, விச்ணு, சிவன் ஆகியோரை மும்மூர்த்தி அல்லது திரிமூர்த்தி (சமட்கிருதம்:त्रिमूर्तिः, ''trimūrti'') என்று குறிப்பிடுகின்றார்கள். சிவன் தனது இப்புறத்திலிருந்து விஷ்ணுவையும், வலப்புறத்திலிருந்து பிரம்மதேவரையும் படைத்ததாக விஷ்ணுவின் அவதாரமான வேதவியாசர் எடுத்தியம்புகிறார். ஒருமுறை பிரம்மருக்கும், விஷ்ணுவுக்கும் தான்தான் பெரியவர் என்று பூசல் ஏற்பட்டதன் காரணமாக பிரம்மன், பத்ம கற்பத்தில் திருமாலின் உந்தி கமலத்திலிருந்து பிறப்பெடுப்பார் என்று திருமாலுக்கு சிவன் அருளினார்.
சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.
தேசிய புலனாய்வு முகமை (இந்தியா)
தேசிய புலானாய்வு முகமை (National Investigation Agency, NIA) இந்தியாவில் தீவிரவாதக் குற்றங்களை எதிர்க்க இந்திய அரசால் ஒன்றிய அளவில் நிறுவப்பட்டுள்ள ஓர் புலனாய்வு அமைப்பாகும். பல மாநிலங்களின் ஊடாக நடைபெறும் தீவிரவாதம் தொடர்புடைய குற்றங்களை எதிர்கொள்ள மாநிலங்களின் அனுமதிக்காகக் காத்திராது செயலாற்ற தேவையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2008 மும்பை தாக்குதல்களை அடுத்து இந்த அமைப்பை உருவாக்கிட வழி செய்யும் தேசிய புலனாய்வு முகமை மசோதா திசம்பர் 16, 2008ஆம் ஆண்டு நடுவண் உள்துறை அமைச்சரால் நாடாளுமன்றத்தில் வழிமொழியப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
கருத்தரிப்பு என்பது, பாலூட்டிகளில், கருக்கட்டல் நிகழ்வின்போது உருவாகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்த சந்ததிக்கான உயிரி, முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கரு நிலையில் குழந்தை பிறப்புவரை, பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையில் பதிந்து, தாங்கிக் கொள்ளப்படும் நிலையாகும். இந்தக் கட்டுரையில் மனிதரில் நிகழும் கருத்தரிப்பே விரிவாக ஆராயப்படுகின்றது. மனிதரில், பருவமடைந்த ஆரோக்கியமான பெண்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள் உற்பத்தியாகும்.
ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
இரண்டாம் எலிசபெத் (Elizabeth II, எலிசபெத் அலெக்சாந்திரா மேரி; 21 ஏப்ரல் 1926 – 8 செப்டம்பர் 2022) என்பவர் 1952 பெப்ரவரி 6 முதல் 2022 இல் இறக்கும் வரை ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக இருந்தார். இவரது 70 ஆண்டுகள், 214 நாட்கள் என்ற மொத்த ஆட்சிக்காலம் எந்த ஒரு பிரித்தானிய மன்னரிலும் மிக நீண்டதாகும், அத்துடன் இறையாண்மை கொண்ட எந்த மன்னரினதும் இரண்டாவது மிக நீண்ட ஆட்சியும் ஆகும். எலிசபெத் இறக்கும் போது, ஐக்கிய இராச்சியம் தவிர 14 பொதுநலவாய நாடுகளின் ராணியாகவும் இருந்தார்.எலிசபெத் இலண்டன், மேஃபெயார் என்ற இடத்தில் யோர்க் கோமகன் ஆல்பர்ட்டிற்கும் (பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் மன்னர்), எலிசபெத்திற்கும் முதல் குழந்தையாக 1926 ஏப்ரல் 21 இல் பிறந்தார்.
உயர் இரத்த அழுத்தம் (hypertension) சில நேரங்களில் “தமனி வழி உயர் இரத்த அழுத்தம்”, தமனி / தமனிகளில் இரத்த அழுத்தம் உயர்த்தப்பெற்ற ஒரு நீடித்த(மருந்து) / நீடித்த நோய் / மருத்துவ நிலை ஆகும். இரத்தக் குழாய்களின் மூலமாகச் செயல்படும் இரத்த ஓட்டத்திற்கு, இந்த உயர்த்தப்பெற்ற நிலையினால் இதயம் வழக்கத்தைவிட கடினமாக வேலை செய்ய தேவைப்படுகிறது. இதய துடிப்புகளுக்கிடையே இதய தசை சுருங்குவது (சிஸ்டோல்) அல்லது தளர்வுறுவது ( டைஸ்டோல் ) என்பதைப் பொறுத்து இரத்த அழுத்தம் இதய சுருங்கியக்க அழுத்தம் மற்றும் விரிவியக்க அழுத்தம் என்ற இரண்டு அளவுகளை உள்ளடக்கியது.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
வடிவவியலில், ஏதேனும் ஒரு பரப்பைச் சுற்றி அமையும் பாதை, அப்பரப்பின் சுற்றளவு (perimeter) எனப்படும். பெரி (சுற்றி) மற்றும் மீட்டர் (அளவு) என்ற கிரேக்கமொழிச் சொற்களிலிலிருந்து ஆங்கிலத்தில் பெரிமீட்டர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. சுற்றளவு என்ற சொல் ஒரு பரப்பைச் சுற்றி அமைந்த பாதையை அல்லது அப்பாதையின் நீளத்தைக் குறிப்பதற்கு பயன்படுகிறது.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
சதுரங்க விதிமுறைகள் ( Rules of chess ) என்பது சதுரங்கத்தின் சட்டங்கள் (Laws of chess ) ஆக அறியப்படுகின்றன. இவ்விதிமுறைகள் அல்லது சட்டங்கள் சதுரங்க (செஸ்) விளையாட்டினை விளையாடுவதற்காக வகுக்கப்பட்ட விதிமுறைகள் ஆகும். இவ்விதிமுறைகளின் மூலங்கள் துல்லியமாகத் தெரியாவிடினும், நவீன விதிமுறைகள் 16 ஆம் நூற்றாண்டில் முற்பகுதியில் இத்தாலியில் அமைக்கப்பட்டன.
பர்வத மலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இம்மலை.
இறகுப்பந்து விளையாட்டினை பிரிட்டானிய இராணுவ வீரர்கள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் அறிமுகம் செய்தனர். இவ்விளையாட்டினை 1873 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் ப்யூபர்ட் பிரபுவின் கிராமப் பகுதியான “பாட்மிண்டன்” (Badminton) எனும் இடத்தில் ஆடப்பட்டதால் இந்த விளையாட்டை ஆங்கிலத்தில் “பாட்மிண்டன்” என்று அழைத்தனர். இது ஒரு மட்டைப் பந்தாட்ட (racquet sport) வகை விளையாட்டு.
குத்துச்சண்டை ஒரு சண்டை விளையாட்டு. ஒரே எடைத்தரத்தில் உள்ள இரு வீரர்கள் கைமுட்டியுறை, மற்றும் சில பாதுகாப்பு அணிகலங்கள் அணிந்து கை முட்டிகளால் மட்டும் சண்டை செய்வதே குத்துச்சண்டை ஆகும். ஒருவர் அடித்துத் தனது எதிரியை வீழ்த்திவிட்டால், விழுந்தவர் நடுவர் 10 எண்ணுவதற்குள் எழும்பாவிட்டால் வீழ்த்தியவர் வெற்றி பெறுவார்.
எறிபந்தாட்டம் (handball) 7 பேர் ஒரு அணிக்கு என பந்தை கைகளால் கையாண்டு ஆடப்படும் ஒரு விளையாட்டு ஆகும். காற்பந்தாட்டம் போன்று பந்தை ஒரு இலக்கு கம்பத்துக்குள் இடவேண்டும், ஆனால் கால்களால் அல்லாமல் கைகளால் பந்தை கையாடி பந்தை இலக்கு கம்பத்துக்குள் போட வேண்டும். ஒருவர் பந்தை 3 வினாடிகளுக்கு மேல் கையில் வைத்திருக்க முடியாது.
வர்ணங்கள் (சமஸ்கிருதம்: वर्ण, varṇa,வர்ணா ), இந்திய சமயங்களின் சூழலில், சமூகத்தை வகுப்புகளாகப் படிநிலைப்படுத்தும் கருத்தியலைக் குறிக்கிறது. சமூகத்தை நான்கு வர்ணங்களாக வகைப்படுத்தும் மனுதரும சாத்திரம் போன்ற நூல்களில் சித்தாந்தம் உள்ளது. வரலாற்றையொற்றி வழிவழியாய் வந்த கூற்றின்படி வர்ணமும், சாதியும் வெவ்வேறானவை அல்ல அவை ஒன்றொக்கொன்று தொடர்புடையவை என்று கூறப்பட்டுள்ளது.
கவிமணி தேசிக விநாயகம் (Kavimani Desigavinayagam, 27 சூலை 1876 – 26 செப்டம்பர் 1954) 20ஆம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
கல்லீரல் (English: liver) (ஈரல் - இலங்கை வழக்கு) என்பது முதுகெலும்புள்ள உயிரினங்களிலும் வேறு சில விலங்குகளின் உடலிலும் காணப்படும் ஒரு முக்கிய உள் உறுப்பாகும். மனிதர்களுக்கு மார்புக் கூட்டின் வலது கீழ்புறத்தில், வயிற்றறைக்கு வலது மேல் பக்கத்திலும் நெஞ்சறையையும் வயிற்றறையும் பிரிக்கும் இடைத்திரைக்கு கீழாகவும் பெரிய ஆப்பு வடிவத்தில் கல்லீரல் இருக்கிறது. இதற்குக் கீழாக பித்தப்பையும், இடது புறமாக இரைப்பையும் இருக்கின்றன.