The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (Right to Information Act, 2005) இந்திய நாடாளுமன்றத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். இச்சட்டம் 2004 திசம்பர் மாதம் , நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு 2005 மே 11, அன்று, மக்கள் அவையிலும், 2005 மே 12, அன்று மாநில அவையிலும் நிறைவேற்றப்பட்டது. 2005 சூன், 15 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது.
பலஸ்தீன நாடு (State of Palestine, அரபு:دولة فلسطين, dawlat filastin, எபிரேய மொழி: מדינת פלסטין, medinat phalastin ) என்பது இஸ்ரேல் நாட்டால் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பலஸ்தீன மக்களுக்காக உருவாக்கப்பட இருக்கும் நாட்டுக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஆகும். இது ஒரு சுதந்திரமான நாடு அல்ல. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் உயர் பீடமான பாலஸ்தீன தேசிய கவுன்சில் நவம்பர் 15, 1988 இல் அல்ஜீரியாவில் கூடி ஒருதலைப்பட்ச விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டது.
யூதர்களின் வரலாறு எனப்படுவது யூதம் எனும் மதத்தையும், அதனைப் பின்தொடரும் மனிதர்களின் கலாச்சாரத்தையும் பற்றியது ஆகும். யூதம் என்னும் மதம் முதன்முதலாக ஹெலனிய காலத்து கிரேக்கப் பதிவுகளில் காணப்படுகிறது. இதற்கு முன்பு இஸ்ரேலைப் பற்றிய குறிப்புகள் கிமு 1213–1203 ஐச் சேர்ந்த மெனப்தா கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
இஸ்ரேல் (Israel, எபிரேயம்: יִשְׂרָאֵל; யிஸ்ராஎல்; அரபு மொழி: إِسْرَائِيل, யிஸ்ராஎல், அலுவலக ரீதியாக இஸ்ரேல் நாடு; [மெதிநாத் யிஸ்ராஎல்](எபிரேயம்), [தவுலத் இஸ்ராஇல்](அரபு)) என்பது மேற்கு ஆசியாவில், மத்திய தரைக்கடலின் தென்கிழக்கு கரையில் உள்ள ஒரு நாடு. இது இஸ்ரவேல், இஸ்ரயேல், இஸ்ரவேல், இஸ்ரயேல் எனவும் தமிழில் அழைக்கப்படுகிறது. இது வடக்கில் லெபனானுடனும், வடகிழக்கில் சிரியாவுடனும், கிழக்கில் யோர்தானுடனும் மேற்குக்கரையுடனும், தென்மேற்கில் எகிப்துடனும் காசா கரையுடனும், தெற்கில் செங்கடலில் அஃகபா குடாவுடனும் தன் எல்லைகளைக் கொண்டு, புவியியல் ரீதியாக பல மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட அம்சங்களை தன் சிறிய நிலப்பரப்பில் கொண்டுள்ளது.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
தமிழ் இலக்கியங்களில் யானைகளை ஆண், பெண், குட்டி, அறுபது வயதிற்கு மேலான யானை, போர் யானைகள் என்ற அடிப்படையில் மட்டும் அல்லாது இன்னும் பல்வேறுப் பிரிவுகளாக அவற்றைப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர்.இதன் மூலம் பழந்தமிழர்களின் வாழ்வினில் யானைகள் எவ்வளவு பயன் ஆற்றின என்பதையும், தமிழர்கள் அந்த யானைகளை எவ்வளவு ஆழமாக உணர்ந்து அவற்றின் பிரிவுகளை வரையறுத்து வைத்து இருந்தார்கள் என்பதையும் அறியலாம்.
2023 ஐசிசி ஆண்கள் துடுப்பாட்ட உலகக்கிண்ணம் (2023 ICC Men's Cricket World Cup) என்பது துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின் 13-ஆவது பதிப்பாகும், இது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் ஒழுங்கு செய்யப்பட்டு நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடர் ஆகும். இத்தொடரை 2023 அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியா பொறுப்பேற்று நடத்துகிறது. இத்தொடர் 2023 பெப்ரவரி, மார்ச்சில் நடத்தப்படுவதாக இருந்து, கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பின்போடப்பட்டது.
இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு (Israeli–Palestinian conflict) இருபதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து இன்றுவரை இசுரேலுக்கும் பலத்தீனத்திற்கும் இடையே நடைபெற்றுவரும் தொடர்போராட்டத்தை குறிக்கிறது. இந்தப் பிணக்குகள் பிரித்தானியர் ஆண்டுவந்த காலத்திலிருந்தே சீயோனியர்களுக்கும் (yishuv) அரபு மக்களுக்கும் இடையே இருந்து வந்துள்ளது. இது பரந்த அரபு-இசுரேல் முரண்பாட்டின் மைய அங்கமாகும்.
யூதர் (எபிரேயம்: יְהוּדִי, யெகுடி (ஒருமை) יהודים யெகுடிம் (பன்மை), ஆங்கிலம்: Jew, Jews or Jewish) எனப்படுவோர் இசுரவேலர் அல்லது எபிரேயர் என்ற இனமதக் குழு மக்களைக் குறிக்கும். இவர்கள் யூதம் என்ற மதத்தைப் பின்பற்றுகின்றனர். யூதர்கள் பல ஆண்டுகாலமாக பல நாடுகளிலும் மத, இன ரீதியாக அடக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) ஸ்பெயினின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார்.2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லஸ் புய்க்ரெமாண்ட்டின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இவர் ஸ்பெயினிலிருந்து, காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாக கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
சந்திரயான்-3 (Chandrayaan-3) என்பது இந்திய நிலாப்பயண சந்திரயான் திட்டத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இசுரோ) திட்டமிட்டுள்ள மூன்றாவது மிக அண்மைய நிலாத் தேட்டத் திட்டமாகும். 2023 சூலையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 2019 இல் சந்திரயான்-2 இல் ஏவப்பட்டதைப் போன்று, விக்ரம் என்ற நிலாத் தரையிறங்கியையும், பிரக்யான் என்ற நிலாத் தரையூர்தியையும் கொண்டுள்ளது. சந்திரயான்-3 சதீசு தவான் விண்வெளி மையத்தில் இருந்து 2023 சூலை 14 அன்று ஏவப்பட்டது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
வைணவ சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள் ஆவர். தென்மொழியாம் தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர்.அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் ஆண்டாளையும், இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு. இவர்கள் பொ.ஊ.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான பொ.ஊ.மு 400க்கும் பொ.ஊ. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அஃது ஒரு மகாயான காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மகாயான பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவை இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
தினகரன் ஒரு தமிழ் நாளிதழ் ஆகும். இது சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பதிப்பிக்கப்படுகிறது. பல தென்னிந்திய மொழிகளில் ஒளிபரப்புச் சேவையை நடத்திவரும் சன் குழுமத்தினால் வெளியிடப்படும் இந்த நாளிதழ், ஏ.பி.சி என்னும் சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேஷன் என்னும் நிறுவனத்தின் ஆய்வுகளின்படி, 2006 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் முதல் தினகரன், 9 இலட்சம் பிரதிகளுக்கும் மேல் நாள்தோறும் விற்பனையாவதாகத் தெரிகிறது.தினகரன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முன்னாள் தலைவர்களில் ஒருவரும், தினத்தந்தியின் நிறுவனர் சி.
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவார். இவர் அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.
தரைவழிப் போக்குவரத்தில் தரைப் போக்குவரத்துக்காக அமைக்கப்பட்ட சாலைகளில் நடக்கக் கூடிய விபத்து சாலை விபத்து எனப்படுகிறது. சாலையில் செல்லும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதியோ அல்லது சாலையின் ஓரங்களிலுள்ள மரம் அல்லது கட்டிடங்களில் மோதியோ பெரும்பான்மையான சாலை விபத்துக்கள் நடக்கின்றன. விபத்தின் காரணங்களாக வாகனத்தின் வடிவமைப்பு, வாகனம் செலுத்தப்பட்ட வேகம், சாலையின் தரம், சாலையின் வடிவமைப்பு, சுற்றுப்புறச் சூழ்நிலை, வாகன ஓட்டியின் ஓட்டுதல் திறன் மற்றும் வாகன ஓட்டியின் நடவடிக்கை ஆகியவற்றைக் கூறலாம்.
வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam, 5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) ஓர் ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதை குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம் " என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலை சேக்கிழார் விவரிக்கிறார்.
சோன் எட்வர்டு மார்சு (Shaun Edward Marsh, பிறப்பு: 9 சூலை 1983) ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ஆத்திரேலிய அணியில் தேர்வு, ஒருநாள், மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஜெஃப் மார்சின் மகனும், மிட்செல் மார்சின் தம்பியுமான இவர், இடக்கைத் துடுப்பாட்டக் காரரும், சுழல் பந்து வீச்சாளரும் ஆவார்.
தமிழர் தொழில்நுட்பம் என்பது தமிழர் பங்களித்து பயன்படுத்தும் பல் துறை சார் தொழில்நுட்பங்களைக் குறிக்கும். 16 ம் நூற்றாண்டு அறிவியல் புரட்சி வரைக்கும் தமிழர் தொழில்நுட்பம் ஏனைய நாகரிகங்களுக்கு இணையான வளர்ச்சியைக் கொண்டிருந்தது. வேளாண்மை, கட்டிடக்கலை, இசைக்கருவிகள், மருத்துவம், கப்பற்கலை, போர்க்கலை என பல துறைகளில் தமிழர் தொழில்நுட்பம் சிறந்து இருந்தது.
இசுரேலின் நிலம் புனித பூமி அல்லது பாலஸ்தீனம் என்றும் அழைக்கப்படுகிறது, இது யூத மக்களின் பிறப்பிடம், எபிரேய விவிலியத்தின் இறுதி வடிவம் தொகுக்கப்பட்டதாக கருதப்படும் இடம் மற்றும் யூத மதம் மற்றும் கிறிஸ்தவத்தின் பிறப்பிடம். இது யூத மதம், சமாரியவாதம், கிறிஸ்தவம், இஸ்லாம், ட்ரூஸ் மற்றும் பஹாய் நம்பிக்கை ஆகியவற்றிற்கு புனிதமான தளங்களைக் கொண்டுள்ளது. இப்பகுதி பல்வேறு சாம்ராஜ்யங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது, இதன் விளைவாக, பல்வேறு வகையான இனங்களை கொண்டும் வரலாறைக் கொண்டும் உள்ளது.
இந்தியாவின் பசுமைப் புரட்சி (Green Revolution in India) என்று 1966ஆம் ஆண்டு முதல் இந்திய உணவுத் தயாரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் குறிக்கிறது. விடுதலை பெற்ற இந்தியா உணவுத் தட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு வீரிய ஒட்டு விதைகள், மேம்பட்ட உரவகைகள், மேம்பட்ட வேளாண்மை செயல்முறைகள் மற்றும் நீர்ப்பாசன வளர்ச்சித் திட்டங்களின் ஒருங்கிணைந்த பயன்பாட்டால் வேளாண்மை மேம்படுத்தப்பட்டு உணவுத் தன்னிறைவு பெற்றதே பசுமைப் புரட்சி ( Green Revolution) என்று அறியப்படுகிறது. அடிக்கடி பஞ்சங்களுக்குப் பழக்கப்பட்ட இந்தியாவில் பசுமைப் புரட்சிக்குப் பின்னர் ஒருமுறை கூட பஞ்சம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, அரபு மொழி: محمد, பிறப்பு பொ.ஊ. 570, இறப்பு 8 சூன் பொ.ஊ. 632 கணிப்பு), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்தவர்.
பர்வத மலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இம்மலை.
முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்தப் பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாகத் தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
யூடியூப் அல்லது வலையொளி (YouTube) என்பது ஓர் அமெரிக்க நாட்டு நிகழ்நிலைக் காணொளிப் பகிர்வு மற்றும் சமூக ஊடகத் தளமாகும். இது சாட் ஹர்லி, ஸ்டீவ் சென் மற்றும் ஜவேத் கரீம் ஆகியோரால் பிப்ரவரி 2005 இல் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் வலையொளிப் பயனர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியன் மணிநேரக் காணொளிகளைக் காணுகிறார்கள்.
இராவண காவியம் எனும் நூல், இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழியில் தோன்றிய காவியங்களுள் ஒன்று. திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்ட இக்காவியம் 1946 இல் வெளிவந்தது. இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க் காண்டம் - என ஐந்து காண்டங்களையும் 57 (8 + 8 + 11 + 12 + 18) படலங்களையும் 3,100 பாடல்களையும் கொண்டுள்ளது.
அப்பர் திருநாவுக்கரசு நாயனார் பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரைத் தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.
கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளைய தலைமுறையை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
அமாசு (Ḥamas, அரபு: حركة حماس அல்லது Ḥarakat al-Muqawama al-Islamiyya "இசுலாமிய எதிர்ப்பு இயக்கம்") எனப்படுவது பாலத்தீன சுணி இசுலாமிய போராளி இயக்கமும் பாலத்தீனத்தில் அதிகூடிய இடங்களைக் கைப்பற்றியுள்ள அரசியல் கட்சியும் ஆகும். அமாசு இயக்கம் 1987 ஆம் ஆண்டு சேக்கு அகமது யாசின், மற்றும் முகமது தாகா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. இசுரேலிய இராணுவத்தினர் மீதும் பொதுமக்கள் மீதும் பல தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தாலும், பல சமூக வேலைத்திட்டங்களை இவ்வியக்கம் முன்னெடுத்து நடத்திச் செல்லுகின்றனர்.
சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.
வல்லினம் மிகும் இடங்கள் என்பது தமிழ் மொழியில் அடுத்தடுத்து இரண்டு சொற்கள் வரும்போது முதல் சொல்லின் (நிலைமொழி) இறுதியில் ஒரு வல்லின எழுத்துச் சேர்வதைக் குறிக்கும். ஒரு நிலைமொழியோடு வருமொழி க, ச, த, ப வருக்க எழுத்துகளில் தொடங்குஞ் சொல்லாக அமையும்பொழுது அவ்வல்லொற்று சிலவிடங்களில் மிகுந்தும் சிலவிடங்களில் மிகாமலும் வரும். இவற்றையறிந்து பயன்படுத்தாமையைச் சந்திப்பிழையெனக் கூறுவர்.
கீழ்வெண்மணிப் படுகொலைகள் என்பது 25 திசம்பர் 1968இல் இந்தியாவின், தமிழ்நாட்டில், ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், நாகப்பட்டினத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில், நிலக்கிழார்களால் நடத்தப்பட்ட படுகொலை நிகழ்வாகும். இதில் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பட்டியல் இன வேளாண் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
பிரதோசம் (Pradosha) என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோச வழிபாடு எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோச விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது. பிரதோசத்திற்காக கூறப்படும் புராணக் கதையில் செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் பொழுது ஆலகாலம் எனும் விசம் வெளிப்பட்டது.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் சிவனைப் பற்றிய கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று உட்பட பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அப்பாடல்களை அடி எல்லை நோக்கில் ஆராயும் போது குறைந்த அடி எல்லையாக 11 அடிகள் கொண்ட பாடல்களும் உயர்ந்த அடி எல்லையாக 80 அடிகள் கொண்ட பாடல்களும் காணப்படுகின்றன.
வாக்குரிமை (Suffrage, அல்லது franchise) என்பது பொது மற்றும் அரசியல் தேர்வுகளில் வாக்களிக்கும் உரிமை ஆகும். சில மொழிகளில் வாக்களிப்பது இயங்கு வாக்குரிமை என்றும் (active suffrage) தேர்தலில் நிற்பது உயிர்ப்பற்ற வாக்குரிமை (passive suffrage), என்றும் குறிப்பிடப்படுகின்றன; இவ்விரண்டும் இணைந்து முழுமையான வாக்குரிமை எனப்படுகின்றது.பொதுவாக வாக்குரிமை வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதை ஒட்டியே வரையறுக்கப்பட்டாலும் குறிப்பிட்ட அரசியல் தீர்வுகளையும் முனைப்புகளையும் முன்னிறுத்தி நடத்தப்படும் பொது வாக்கெடுப்புகளுக்கும் பொருந்தும். வாக்குரிமை தகுதிபெற்ற குடிமகன்களுக்கு அவர்களது வாக்களிக்கும் வயது நிறைந்தவுடன் அளிக்கப்படுகின்றது.
யெரூசலம் அல்லது எருசலேம் (Jerusalem) என்பது நடு ஆசியாவில் அமைந்து, யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய மதங்களுக்கும், இசுரயேலர், பாலத்தீனியர் ஆகியோருக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நகராகவும், பழமைமிக்க நகராகவும் அமைந்துள்ளது. எருசலேம் என்பது எபிரேய மொழியில் יְרוּשָׁלַיִם (யெருசலையிம்) என்றும், அரபியில் அல்-குத்சு (القُدس) என்றும் அழைக்கப்படுகிறது. எருசலேமைக் குறிக்கும் எபிரேயச் சொல்லுக்கு அமைதியின் உறைவிடம் என்றும், அரபிச் சொல்லுக்குப் புனித தூயகம் என்றும் பொருள்.
தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.