The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
பங்காரு அடிகளார் (Bangaru Adigalar, 3 மார்ச்சு 1941 – 19 அக்டோபர் 2023) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் ஆன்மீக குரு ஆவார். ஆதிபராசக்தி தொண்டு மருத்துவ, கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக இருந்தார். இவரைப் பின்பற்றுபவர்களாலும், ஆதிபராசக்தி கோவிலின் பக்தர்களாலும் பங்காரு அடிகளார் 'அம்மா' என்று அழைக்கப்படுகிறார்.
கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) ஸ்பெயினின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார்.2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லஸ் புய்க்ரெமாண்ட்டின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இவர் ஸ்பெயினிலிருந்து, காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாக கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
கழுதைப்புலி புதர் மற்றும் முட்காடுகளில் தனியாக அலைந்து திரிந்து இரை தேடும் ஓர் அனைத்துண்ணி விலங்காகும். இவ்விலங்கு இந்தியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் காணப்படுகிறது. இவ்விலங்குகள் ஒரே இடத்தில் வசிக்காதவை; ஒரு நீர் நிலையிலிருந்து மற்றொரு நீர்நிலையைத் தேடி அலைந்து திரிந்துகொண்டிருக்கும்.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
லோகேஷ் கனகராஜ் என்பவர் தமிழகத் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டில் இருந்து மாநகரம் (2017), கைதி (2019), போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். 2020 ஆம் ஆண்டு விஜய் மற்றும் விஜய் சேதுபதி வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
விராட் கோலி (Virat Kohli, ஒலிப்பு , பிறப்பு: நவம்பர் 5, 1988) ஓர் இந்தியத் துடுப்பாட்டவீரர் ஆவார். இந்திய அணியின்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளின் முன்னாள் தலைவருமாவார்.வலது கை மட்டையாளரான இவர் சர்வதேச சிறந்த துடுப்பாட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.புது தில்லியில் பிறந்த இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 2006 ஆம் ஆண்டில் விளையாடுவதற்கு முன்பாக தில்லி அணிக்காக விளையாடினார். மலேசியாவில் 2008ஆம் ஆண்டு நடந்த பத்தொன்பது அகவைக்குக் கீழானவர்களுக்கான உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமையேற்று வெற்றி பெற்றார்.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
வரிக் கழுதைப்புலி (striped hyena, Hyaena hyaena) என்பது வட அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், காகசஸ், மத்திய ஆசியா மற்றும் இந்திய துணைக் கண்டம் ஆகிய இடங்களில் காணப்படும் ஒரு விலங்காகும். இது வேகமாக அழிந்து வரக்கூடிய இனமாக ஐ.யூ.சி.என் என்ற அமைப்பால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் பரந்து காணப்படும் இவ்வகை விலங்குகள் தற்செயலாகவோ, வேண்டுமென்றோ தொடர் துன்புறுத்துதலுக்கு ஆளாகின்றன.
விஜயதசமி (Vijayadashami, வங்காளம்: বিজয়াদশমী, கன்னடம்: ವಿಜಯದಶಮಿ, மலையாளம்: വിജയദശമി, மராத்தி: विजयादशमी, நேபாளி :विजया दशमी, ஒரியா :ବିଜୟାଦଶମୀ, தெலுங்கு: విజయదశమి) இந்தியா, நேபாளம் மற்றும் வங்காள தேசத்தில் பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்படும் ஓர் மழைக்கால இந்து சமய விழாவாகும். இது தசரா (Dasara/ Dasara/ Dussehra) என்றும் அழைக்கப்படுகிறது. தென்னகப் பகுதிகளில் நவராத்திரியின் ஓர் அங்கமாகவும், வங்காளத்தில் துர்கோத்சவத்தின் அங்கமாகவும் கொண்டாடப்படுகின்றது.
தினகரன் ஒரு தமிழ் நாளிதழ் ஆகும். இது சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பதிப்பிக்கப்படுகிறது. பல தென்னிந்திய மொழிகளில் ஒளிபரப்புச் சேவையை நடத்திவரும் சன் குழுமத்தினால் வெளியிடப்படும் இந்த நாளிதழ், ஏ.பி.சி என்னும் சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேஷன் என்னும் நிறுவனத்தின் ஆய்வுகளின்படி, 2006 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் முதல் தினகரன், 9 இலட்சம் பிரதிகளுக்கும் மேல் நாள்தோறும் விற்பனையாவதாகத் தெரிகிறது.தினகரன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முன்னாள் தலைவர்களில் ஒருவரும், தினத்தந்தியின் நிறுவனர் சி.
சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
சிவாஜி கணேசன் 275 தமிழ் திரைப்படங்களிலும், 9 தெலுங்கு திரைப்படங்களிலும், 2 இந்தி திரைப்படங்களிலும், 2 மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவை தவிர 17 திரைப்படங்களில் கௌரவ நடிகராகத் தோன்றி நடித்துள்ளார்.
முத்தாரம்மன் கோவில், குலசேகரன்பட்டினம்
முத்தாரம்மன் கோவில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் வட்டத்தில் குலசேகரன்பட்டினத்தின் கடற்கரையில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமையான சக்தி தலமாகும். இக்கோயில் திருச்செந்தூரிலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ளது.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.
உள்நாட்டில் சர்வதேச எல்லை ( ஐபி ) என்று அழைக்கப்படும் வங்காளதேச-இந்திய எல்லை, வங்களாதேசத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே இயங்கும் ஒரு சர்வதேச எல்லையாகும் , இது வங்களாதேசத்தின் எட்டு பிரிவுகளையும் இந்திய மாநிலங்களின் பிரிவுகளையும் குறிக்கிறது . பங்களாதேஷும் இந்தியாவும் 4,156-கிலோமீட்டர் நீளத்தைப் (2,582 mi) பகிர்ந்து கொள்கின்றன. இந்த சர்வதேச எல்லை, அசாமில் 262 (163 மைல்) கி.
பிக் பாஸ் தமிழ் என்பது 2017 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உண்மைநிலை நிகழ்ச்சி ஆகும். இது நெதர்லாந் நாட்டால் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதுவரை ஒளிபரப்பான மூன்று பருவங்களையும் பிரபல நடிகர் கமல் ஹாசன் என்பவர் தொகுத்து வழங்கியுள்ளார்.இதன் நான்காவது பருவத்தை ஜூன் 2020 ஆம் ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்டது, ஆனால் கோவிட்-19 பெருந்தொற்றுநோய் காரணமாக தாமதமாகி 4 அக்டோபர் 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்படுகிறது.
சந்திரயான்-3 (Chandrayaan-3) என்பது இந்திய நிலாப்பயண சந்திரயான் திட்டத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இசுரோ) திட்டமிட்டுள்ள மூன்றாவது மிக அண்மைய நிலாத் தேட்டத் திட்டமாகும். 2023 சூலையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 2019 இல் சந்திரயான்-2 இல் ஏவப்பட்டதைப் போன்று, விக்ரம் என்ற நிலாத் தரையிறங்கியையும், பிரக்யான் என்ற நிலாத் தரையூர்தியையும் கொண்டுள்ளது. சந்திரயான்-3 சதீசு தவான் விண்வெளி மையத்தில் இருந்து 2023 சூலை 14 அன்று ஏவப்பட்டது.
சரஸ்வதி அல்லது கலைமகள் அல்லது இயன்மகள் அல்லது சொன்மகள் இந்து சமயத்தினர் வணங்கும் முக்கியமான பெண் கடவுளரில் ஒருவர். படைப்புக் கடவுளான பிரம்மாவின் சக்தியாகக் கொள்ளப்படுகிறார். சரஸ்வதி என்னும் சமசுகிருதச் சொல் நகர்தல், ஆற்றொழுக்காகச் செல்லல் ஆகிய பொருள்களைக் கொண்ட ஸ்ர் என்னும் வேரின் அடியாகப் பிறந்தது.
யூடியூப் அல்லது வலையொளி (YouTube) என்பது ஓர் அமெரிக்க நாட்டு நிகழ்நிலைக் காணொளிப் பகிர்வு மற்றும் சமூக ஊடகத் தளமாகும். இது சாட் ஹர்லி, ஸ்டீவ் சென் மற்றும் ஜவேத் கரீம் ஆகியோரால் பிப்ரவரி 2005 இல் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் வலையொளிப் பயனர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியன் மணிநேரக் காணொளிகளைக் காணுகிறார்கள்.
பலஸ்தீன நாடு (State of Palestine, அரபு:دولة فلسطين, dawlat filastin, எபிரேய மொழி: מדינת פלסטין, medinat phalastin ) என்பது இஸ்ரேல் நாட்டால் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பலஸ்தீன மக்களுக்காக உருவாக்கப்பட இருக்கும் நாட்டுக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஆகும். இது ஒரு சுதந்திரமான நாடு அல்ல. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் உயர் பீடமான பாலஸ்தீன தேசிய கவுன்சில் நவம்பர் 15, 1988 இல் அல்ஜீரியாவில் கூடி ஒருதலைப்பட்ச விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டது.
செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)
செக்ஸ் இஸ் சீரோ 2002 இல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும். இதனை யோன் ஜி-க்யூன் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் இம் சேங்-ஜங், ஹா ஜி-வோன் மற்றும் சோய் வோன்-யூங் ஆகியோர் நடித்திருந்தனர்.
மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை தொடங்கியவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள்.
தர்மஸ்தல கோயில் அல்லது தர்மசாலா கோயில் (Dharmasthala Temple) (கன்னடம்/துளு:ಶ್ರೀ ಕ್ಷೇತ್ರ ಧರ್ಮಸ್ಥಳ) (சமக்கிருதம்: क्षेत्र धर्मस्थल, 800 ஆண்டு பழமையான மஞ்சுநாதருக்கு அர்பணிக்கப்பட்ட சிவன் கோயிலாகும். இக்கோயில் கர்நாடகா மாநிலத்தின் தெற்கு கன்னட மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவர்களாக மஞ்சுநாதரும், சமண சமயத்தின் எட்டாவது தீர்த்தங்கரான சந்திரபிரபாவும், கோயில் காவல் தெய்வங்களாக குமாரசுவாமியும் மற்றும் கன்னியாகுமரி எனும் யட்சினியும் உள்ளனர்.
திராவிடர் என்னும் சொல், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியொன்றைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்கும். தற்காலத்தில் திராவிடர்கள் செறிந்து வாழும் பகுதி, தென்னிந்தியாவில் விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள பகுதியாகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும் திராவிடர்களின் தாயகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.
பர்வத மலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இம்மலை.
முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்தப் பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாகத் தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
யூதர்களின் வரலாறு எனப்படுவது யூதம் எனும் மதத்தையும், அதனைப் பின்தொடரும் மனிதர்களின் கலாச்சாரத்தையும் பற்றியது ஆகும். யூதம் என்னும் மதம் முதன்முதலாக ஹெலனிய காலத்து கிரேக்கப் பதிவுகளில் காணப்படுகிறது. இதற்கு முன்பு இஸ்ரேலைப் பற்றிய குறிப்புகள் கிமு 1213–1203 ஐச் சேர்ந்த மெனப்தா கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான பொ.ஊ.மு 400க்கும் பொ.ஊ. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2013ல் வெளியான நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். இதை இயக்குனர் பொன்ராம் இயக்கினார். இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சத்யராஜ் மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
வைணவ சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள் ஆவர். தென்மொழியாம் தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர்.அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் ஆண்டாளையும், இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு. இவர்கள் பொ.ஊ.
இஸ்ரேல் (Israel, எபிரேயம்: יִשְׂרָאֵל; யிஸ்ராஎல்; அரபு மொழி: إِسْرَائِيل, யிஸ்ராஎல், அலுவலக ரீதியாக இஸ்ரேல் நாடு; [மெதிநாத் யிஸ்ராஎல்](எபிரேயம்), [தவுலத் இஸ்ராஇல்](அரபு)) என்பது மேற்கு ஆசியாவில், மத்திய தரைக்கடலின் தென்கிழக்கு கரையில் உள்ள ஒரு நாடு. இது இஸ்ரவேல், இஸ்ரயேல், இஸ்ரவேல், இஸ்ரயேல் எனவும் தமிழில் அழைக்கப்படுகிறது. இது வடக்கில் லெபனானுடனும், வடகிழக்கில் சிரியாவுடனும், கிழக்கில் யோர்தானுடனும் மேற்குக்கரையுடனும், தென்மேற்கில் எகிப்துடனும் காசா கரையுடனும், தெற்கில் செங்கடலில் அஃகபா குடாவுடனும் தன் எல்லைகளைக் கொண்டு, புவியியல் ரீதியாக பல மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட அம்சங்களை தன் சிறிய நிலப்பரப்பில் கொண்டுள்ளது.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
மருதமலை முருகன் கோயில், அல்லது மருதாசலமூர்த்தி கோவில், கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள மருதமலை மேல் அமைந்துள்ளது. மருத மலைமேல் அமைந்துள்ளதால் "மருதன்" என்றும் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற தலமிது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன், இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி (மருதன்) என்றும் அழைக்கப்படுகிறார்.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர். இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது.
பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்
பதிவிறக்கம் (download) என்பது கணனி வலையமைப்பின் ஊடாக எமது கணனிக்கு வேறு ஒரு கணனியில் இருந்து தரவுகளைப் பெற்றுக்கொளவதைக் குறிக்கும். இத்தகய பதிவிறக்கங்கள் இணைய வழங்கிகள், FTP வழங்கிகள், மின்னஞ்சல் வழங்கிகளில் இருந்து நடைபெறலாம். பதிவிறக்கம் என்பது இவ்வாறு ஒரு பதிவிறக்க வழங்கப்பட்ட கோப்பை பெறும் செயல்முறை அல்லது பெற்ற ஒரு நிகழ்வைக் குறிக்கும்.
முனைவர் சாரதா நம்பிஆருரன் ஒரு தமிழறிஞர், சொற்பொழிவாளர், பட்டிமன்ற பேச்சாளர் தற்போது தமிழ்நாட்டு தகவல் ஆணையத்தின் முதன்மை ஆணையராகப் பதவி வகித்து ஓய்வு பெற்றவர். இவரது கணவர் நம்பிஆருரன் தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கிய மறைமலைஅடிகளின் பேரன் ஆவார். சென்னையிலுள்ள ராணிமேரி கல்லூரியில் படித்த இவர், தமிழில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளைய தலைமுறையை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
தர்மஸ்தலம் (துளு/கன்னடம்:ಧರ್ಮಸ್ಥಳ) கர்நாடகாவின் தெற்கு கன்னடம் மாவட்டத்தின் பெல்தங்கடி தாலுகாவில் நேத்ராவதி ஆற்றின் கரையில் தர்மசாலா கோயில் அமைந்த ஊராகும்.அது தங்கத்தில் செய்யப்பட்ட சிவ லிங்கத்தைக் கொண்ட சிவபெருமானின் கோவிலாகும். இந்தக் கோவில் சமணர்கள் நிர்வாகத்தில் இயங்குகிறது. ஆனால் மாதவா வம்சாவழியைச் சேர்ந்த இந்து குருக்கள் பூஜைகள் செய்கின்றனர்.
வேட்டைக்காரன் (2009 திரைப்படம்)
வேட்டைக்காரன்' ' (Vettaikkaran) சன் பிச்ச்சரின் தயாரிப்பில் பாபுசிவன் இயக்கத்தில் "விஜய்",அனுஷ்கா,மற்றும் பலர் நடிப்பில் டிசம்பர் 18 2009 அன்று வந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் 2007-ல் வெளியான போக்கிரி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)
சில்லுனு ஒரு காதல் (Chillunu Oru Kadhal) 2006ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா சௌலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
காதலும் கடந்து போகும் (ஆங்கிலம் எழுத்துரு: Kadhalum Kadandhu Pogum) நளன் குமாரசாமி எழுதி இயக்கிய தமிழ்க் காதல் திரைப்படம் ஆகும். மை டியர் டெசுபராடோ என்னும் கொரிய மொழிப்படத்தின் மறுவுருவாக்கமான இப்படத்தில் விசய் சேதுபதி மற்றும் மடோனா செபாசுடியன் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் மார்ச்சு 11, 2016 அன்று வெளியானது.
தமன்னா பாட்டியா (உச்சரிப்பு; ஆங்கிலம்: Tamannaah Bhatia; பிறப்பு 21 திசம்பர் 1989) ஓர் இந்திய நடிகை ஆவார், இவர் பெரும்பான்மையாக தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடிக்கிறார். எழுபத்தைந்து படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், கலைமாமணி, சைமா உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார், மேலும் தென்னிந்திய பிலிம்பேர் விருதுக்கு எட்டு பரிந்துரைகளையும், சனி விருதுக்கு ஒரு பரிந்துரையையும் பெற்றுள்ளார்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.