The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
தீயணைப்பான் (Fire Extinguisher) என்பது குடியிருப்பு கட்டிடங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் ஏற்படும் சிறிய அல்லது கட்டுப்படுத்தக்கூடிய தீப் பற்றல், பரவல்களை தடுத்துத் தீ அணைக்க உதவும் ஒரு கருவி ஆகும். வண்டிகளில் பயன்படும் சிறிய ரக 500 கிராம் தீயணைப்பான்கள் முதல் பெரிய தொழிற்சாலைகளில் பயன்படும் 14 கிலோ தீயணைப்பான்கள் வரை இன்று பல அளவுகளில் தீயணைப்பான்கள் கிடைக்கப்பெறுகின்றன. இவை பொதுவாக இரண்டு முறைகளில் தயாரிக்கப்படுகின்றன.
உலக நாடுகள் சங்கம் (League of Nations, LON) என்ற பன்னாட்டுக் கழகம் பாரிசு அமைதி மாநாட்டின்படி முதல் உலகப் போர் முடிந்த பின்னர் எதிர்காலத்தில் இத்தகைய போர்கள் நடைபெறா வண்ணம் காக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் முன்னோடியான இதுவே தனது முதற் குறிக்கோளாக அமைதிப் பேணலைக் கொண்ட முதல் நிரந்தர பன்னாட்டு உலகப் பாதுகாப்பு அமைப்பாகும். உலக அமைதி மற்றும் பாதுகாப்பை உருவாக்க ஒரு சட்டப்பிரிவும் வெர்சேல்ஸ் உடன்படிக்கையில் இடம்பெற்றிருந்தது.
குளிர் காலமான நவரைப் பருவம் (Navarai Season) வேளாண் வழக்கு நவரைப் பட்டம் என்பது தென்னிந்திய மாநிலங்களான தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு, அல்லது நடவு தொடங்கும் காலத்தையும், மற்றும் சாகுபடி கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும். டிசம்பர் - சனவரி (தமிழ்: மார்கழி - தை) மாதங்களில் துவங்கும் இப்பருவம், ஏப்ரல் - மே (தமிழ்: சித்திரை - வைகாசி) மாதங்களில் முடிவடைகிறது.120 நாட்களைக் கொண்ட இந்த நவரைப் பருவம், குறுகியகால நெல் வகைகளை சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.
1951–52 இந்தியப் பொதுத் தேர்தல்
இந்தியக் குடியரசின் முதல் நாடாளுமன்றத் தேர்தல் 1951-2 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது. 21 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் வாக்குரிமை முறை அமலுக்கு வந்தபின் நடைபெற்ற முதல் தேர்தல் இதுவே. இத்தேர்தல் 1951 ஆம் ஆண்டு நடைபெறத் தொடங்கி 1952 வரை பலகட்டங்களாக நடைபெற்றது.
கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) ஸ்பெயினின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார்.2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லஸ் புய்க்ரெமாண்ட்டின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இவர் ஸ்பெயினிலிருந்து, காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாக கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
இயற்கைத் தேர்வு (natural selection) என்பது சுற்றுச்சூழலின் பண்புகளைப் பொறுத்து ஒரு சனத்தொகையின் குறிப்பிட்ட உயிரியல் குணவகைகள், மற்றும் மரபியல் குணவகைகளை ஆதாரமாகக் கொண்டு, அந்தக் குறிப்பிட்ட சனத்தொகை பெரும்பான்மையாகவோ அல்லது சிறுபான்மையாகவோ மாறும் ஒரு இயற்கையான நிகழ்முறை. இது அறிவியல் சரித்திரத்தில் ஏதோ ஒரு வடிவத்தில் பல நூற்றாண்டுகளாக புழக்கத்தில் இருந்திருந்தாலும், இதைச் சீராக எடுத்துக் கூறியவர் சார்லஸ் டார்வின் என்பவராகும். இயற்கைத் தேர்வு என்ற இந்தப் பெயரை அவர் பயன்படுத்தியதற்குக் காரணம் இதைச் செயற்கைத் தேர்வோடு, அல்லது தேர்ந்தெடுத்து வளர்ப்பதோடு, நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
அணுக்கரு ஆற்றல் இந்தியாவின் மின்சார உற்பத்தியில் அனல், புனல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு அடுத்து நான்காமிடத்தில் உள்ளது. 2012 வரை, இந்தியாவில் ஆறு அணு மின் நிலையங்களில் இயங்கும் 20 அணுக்கரு உலைகளில் 4,780 மெவா மின்சாரம் உற்பத்தியாகிறது. மேலும் ஏழு அணுக்கரு உலைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன; இவற்றின் மூலம் கூடுதலாக 5,300 மெகாவாட் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.அக்டோபர் 2010இல் இந்தியாவில் "2032ஆம் ஆண்டுக்குள் 63,000 மெவா அணுமின் ஆற்றலை உற்பத்தி செய்ய திட்டமொன்றை" தீட்டியபோதும், "திட்டமிடப்பட்ட பகுதி மக்களின் எதிர்ப்புகளாலும் அணுக்கரு உலை குறித்த பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடாதிருத்தல் குறித்து எழுந்த புதிய ஐயங்களாலும்" இது தள்ளிப்போடப்படுள்ளது.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
இந்திய அணுசக்திக் கழகம் (Nuclear Power Corporation of India) இந்தியாவில் மும்பையில் இருந்து செயல்படும் மத்திய அரசின் புகழ் பெற்ற அரசு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம், அணுசக்தியை போதிய பாதுகாப்புடன் தயாரிக்கும் ஆராய்ச்சிகளில் தன்னிறைவு அடையவும், அதன் வழியாக மின்சாரம் தயாரித்து நமது நாட்டு மக்கள் மேம்பாடு அடைவதையும் குறிக்கோளாகக் கொண்டு செயல் பட்டு வருகிறது.இந்த நிறுவனம் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் அமைந்த இந்திய அணு சக்தித்துறையின் நிருவாகத்தில் செயல்பட்டு வருகிறது.இந்திய அணுசக்திக் கழகம் 1987ஆம் ஆண்டில் இந்திய அரசு துவங்கிய பொதுத் துறை நிறுவனமாகும். இந்நிறுவனம் அணுக்கரு எரிபொருள்களை பயன்படுத்தி அணுக்கரு அணுசக்தியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதை குறிக்கோளாகக் கொண்டு இந்தியாவில், நவம்பர் 27, 2010 தற்போதைய நிலவரப்படி, 20 அணுக்கரு அணுமின் ஆலைகளை ஐ எசு ஒ 14000 தரநிர்ணயத்துடன் இயக்கி வருகிறது. இவ்வாலைகள் இந்தியாவில் ஆறு இடங்களில் முறையே தாராப்பூர் (மகாராட்டிரம்), ராவட்பட்டா (ராஜஸ்தான்), நரோரா (உத்தரப் பிரதேசம்), கக்ரபார் (குஜராத்), கல்பாக்கம் (தமிழ் நாடு), கைகா (கர்நாடகா) ஆகிய இடங்களில் நிறுவப்பெற்றுள்ளன. இந்தச் சாதனை மூலம் உலகில் அணு மின் நிலையங்களை இயக்குவதன் வழியாக மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்
சதுரகிரி மகாலிங்கம் கோவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும். இக்கோயிலுக்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம், வருசநாடு எனும் பகுதியிலிருந்தும் மலைப் பாதைகள் உள்ளன. மதுரை மாவட்ட மக்கள் வாழைத்தோப்பு பகுதி, சந்தையூர் மலைப் பகுதி மற்றும் வத்திராயிருப்பு பகுதி மலைப்பாதையையும், தேனி மாவட்ட மக்கள் வருசநாடு பகுதி வழியிலான மலைப்பாதையையும் பயன்படுத்துகின்றனர்.
பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
தொடருந்து 18 (Train 18), என்பது வந்தே பாரத் விரைவு வண்டி எனவும் அழைக்கப்படுகின்றஇந்திய நகரங்களுக்கிடையே செல்லக்கூடிய, ஒரு அதிவேக விரைவு வண்டியாகும். இந்த விரைவு வண்டியானது, இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழான முன்னெடுப்பில் இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் 18 மாத கால பணியின் விளைவாக உருவானது. இந்த விரைவுவண்டியின் ஒரு அலகுக்கான தயாரிப்புச் செலவினமானது ரூ.100 கோடியாகும்.
தமிழ்ப் பிராமி (Tamil Brahmi), அல்லது தமிழி, என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப் பயன்படுத்தப்பட்ட ஒலிப்பியல் ஓர் எழுத்து முறைமையும், இது தமிழ் மொழிக்கு முன்னோடி எழுத்து முறைமையும் ஆகும். இது தெற்கு ஆசியாவில் பயன்பாட்டில் இருந்த பிராமி எழுத்துமுறைகளான அசோகப் பிராமி, தென் பிராமி மற்றும் பட்டிபிரோலு எழுத்துமுறைகளிலிருந்து வேறுபட்டது மட்டுமல்லாமல், அதற்கு முந்தைய முறைமையாகும். தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் குகைப் படுக்கைகள், மட்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரை அச்சுக்கள், மோதிரங்கள் ஆகியவற்றிலிருந்து இந்த தமிழி எழுத்துக்கள் கண்டு அறியப்பட்டுள்ளன.
தினகரன் ஒரு தமிழ் நாளிதழ் ஆகும். இது சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பதிப்பிக்கப்படுகிறது. பல தென்னிந்திய மொழிகளில் ஒளிபரப்புச் சேவையை நடத்திவரும் சன் குழுமத்தினால் வெளியிடப்படும் இந்த நாளிதழ், ஏ.பி.சி என்னும் சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேஷன் என்னும் நிறுவனத்தின் ஆய்வுகளின்படி, 2006 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் முதல் தினகரன், 9 இலட்சம் பிரதிகளுக்கும் மேல் நாள்தோறும் விற்பனையாவதாகத் தெரிகிறது.தினகரன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முன்னாள் தலைவர்களில் ஒருவரும், தினத்தந்தியின் நிறுவனர் சி.
செயற்கை இழைகள் (synthetic fibers, synthetic fibres) என்பவை விலங்குகள், தாவரங்களிலிருந்து பெறப்படும் மூலப் பொருட்களைக் கொண்டு அறிவியல் ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்ட இழைகள் ஆகும். பட்டுப் பூச்சிகள், சிலந்திகள், புழுக்கள் போன்றவைகளிடம் இருந்து கிடைக்கக் கூடிய இயற்கையான இழைபுரிகளை தண்ணீர், காற்று போன்றவைகளை பயன்படுத்தி பிரித்தெடுத்து நூலாக சுற்றி அதனைக் கொண்டு செயற்கையான முறையில் இவ்வகை செயற்கை இழைகள் உருவாக்கப்படும். முன்னர் பெட்ரோ வேதிப் பொருட்களிலிருந்து கிடைக்கப்படும் பாலிமர்களிலிருந்தே செயற்கை இழைகள் தயாரிக்கப்பட்டு வந்தன.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான பொ.ஊ.மு 400க்கும் பொ.ஊ. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.
தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
தன்சாரி அனசுயா (பிறப்பு: சூலை 9, 1971), பொதுவாக சீதக்கா (Seethakka) என்று அழைக்கப்படுபவர், தற்போது தெலங்காணாவில் அமைச்சராகப் பணியாற்றும் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தெலங்காணா சட்டமன்றத்தில் முலுக் சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் 2009ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கும், 2018 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் தெலங்காணா சட்டமன்றத்திற்கும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம், சென்னிமலையிலிருந்து மேற்கே ஏறத்தாழ 15 கிமீ தூரத்திலும், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியிலிருந்து ஏறத்தாழ 9 கிமீ தூரத்திலும்,காவிரி ஆற்றில் கலக்கும் நொய்யல் ஆற்றின் வட கரையில், இன்றைய கொடுமணல் அமைந்துள்ளது. இதன் அமைவிடம், சங்ககாலச் சேர நாட்டின் தலைநகரமான கரூரை, மேற்குக் கடற்கரையுடன் இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
உலக சதுரங்க வாகை 2023 (World Chess Championship 2023) என்பது புதிய உலக சதுரங்க வாகையாளரைத் தேர்ந்தெடுக்க இயான் நிப்போம்னிசி, திங் லிரென் ஆகியோருக்கிடையே நடைபெற்ற சதுரங்கப் போட்டித் தொடர் ஆகும். இப்போட்டிகள் கசக்கஸ்தான், நூர் சுல்தான் நகரில் 2023 April 9 முதல் ஏப்ரல் 30 நடைபெற்றன.முன்னைய வாகையாளர் மாக்னசு கார்ல்சன் தனது வாகையாளர் பட்டத்தைத் தக்கவைக்க 2022 வேட்பாளர் சுற்றின் வெற்றியாளர் இயான் நிப்போம்னிசியுடன் விளையாட மறுத்து விட்டதால், நிப்போம்னிசி வேட்பாளர் சுற்றின் இரண்டாவது வெற்றியாளரான சீனாவைச் சேர்ந்த திங் லிரெனுடன் விளையாடினார். மரபார்ந்த நேர வடிவத்தில் 7-7 மதிப்பெண் சமநிலைக்குப் பிறகு, ஏப்ரல் 30 அன்று, போட்டி விரைவான நேர வடிவத்துடன் சமன்முறிக்குச் சென்றது.
இளங்கோ, அல்லது இளங்கோ அடிகள், தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை எழுதியவர். இவர் சேர அரசன் செங்குட்டுவனுடைய தம்பியெனவும், இளவரசுப் பட்டத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டவர் எனவும் சொல்லப்படுகின்றது. இவர் சமண சமயத்தைத் தழுவியவராக இருந்தும், தாம் இயற்றிய நூலில் வைணவத் திருமாலையும்,சைவக் கொற்றவையையும் போற்றும் பகுதிகள் அந்தந்த சமயத்தவரால் பெரிதும் போற்றப்படுகின்றன.
இந்தியக் குடியரசில் பொதுத் தேர்தல்கள் (General elections in India) என்பவை, இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவை உறுப்பினர்களை இந்தியக் குடிமக்கள் நேரடி வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யும் தேர்தல்களைக் குறிக்கும். மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெறும் கட்சி அல்லது கூட்டணி ஒருவரை இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கிறது. மக்களவையின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் என்பதால் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் நடைபெறும்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
வைக்கம் போராட்டம் அல்லது வைக்கம் சத்தியாக்கிரகம் என்பது 1924 - 1932 ஆம் ஆண்டுகளிலான காலகட்டத்தில் பிரித்தானிய இந்தியாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் தீண்டாமைக்கு எதிராக நடைபெற்றப் போராட்டம். வைக்கம் ஊரில் இருந்த மகாதேவர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களை அவர்ண சாதியினர் பயன்படுத்தக்கூடாது என்ற தடையை நீக்க இப்போராட்டம் நடத்தப்பட்டது.
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவார். இவர் அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.
ஈர்ப்பு விசை அல்லது பொருள் ஈர்ப்பு விசை அல்லது புவி ஈர்ப்பு விசை (gravitational force) என்பது இயற்கையாக பொருட்கள் ஒன்றை ஒன்று கவர்ந்து கொள்ளும் விசை, அவற்றின் திணிவுகளின் பெருக்கத்துக்கு நேர்விகிதத்தில் இருப்பது ஆகும். ஈர்ப்பு விசை என்பது பொருட்களை கைவிடும் பொழுது அவை கீழே விழுவதற்கும் மற்றும் அவைகளுக்கு எடையை கொடுப்பதுவுமே ஆகும். அண்டத்தில் உள்ள ஏதேனும் இரு பொருள்களுக்கு இடையே செயல்படுவது ஈர்ப்பு விசை ஆகும்.
இந்தியாவில் சூரிய ஆற்றல் துறை ஆண்டின் பெரும்பாலான நாட்களில் விழுகின்ற சூரிய கதிர்வீச்சின் உயரிய அளவையும் நெருக்கமான மக்கள்தொகையையும் கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. உலகில் உயரளவில் நிலக்கரியால் மின்சாரம் பெறும் நாடுகளில் ஒன்றான இந்தியா கரியமில வளி வெளிப்பாட்டைக் குறைக்கும் வண்ணம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களைப் பயன்படுத்துவதில் முனைப்புக் கொண்டுள்ளது. சூரிய ஆற்றலின் இன்றியமையாமையை அறிந்து இந்திய அரசு சவகர்லால் நேரு தேசிய சூரியாற்றல் திட்டத்தை (JNNSM) வரைந்து செயல்படுத்தி வருகிறது.
பிறப்பொலியியலில் (articulatory phonetics), மெய்யொலி (Consonant) என்பது, பேச்சு மொழியின் ஒரு ஒலிவகை ஆகும். நெஞ்சிலிருந்து வரும் காற்று வாய்ப்பகுதியில் தற்காலிகமாகத் தடைப்பட்டு வெளியேறும்போது மெய்யொலிகள் உருவாகின்றன. மெய்யொலிகள், அடைப்பொலி, மூக்கொலி, உரசொலி, மருங்கொலி, ஆடொலி, வருடொலி, தொடரொலிஎனப் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler, ஏப்ரல் 20, 1889- ஏப்ரல் 30 ,1945) ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ந் தேதியன்று தற்கொலை செய்து கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார்.
திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் அல்லது உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இங்கு மங்களேசுவரி சமேத மங்களேசுவரர் சிவன் கோவில் எனும் பிரபலமான இந்து கோவில் உள்ளது. ஐந்தரை அடி உயரம் - முழுவதும் விலை மதிப்பிட முடியாத மரகதத் திருமேனி.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் பட்டியல்
தமிழ் இலக்கிய உலகப் பெண்களை நினைத்தால் மனதில் உடனே தோன்றுபவர் ஒளவையார்தான். இதையடுத்து ஆண்டாள், காக்கைப் பாடினியார், காரைக்கால் அம்மையார் போன்று ஒரு சிலரே தெரிந்தவராக உள்ளனர். தமிழ் இலக்கியங்களில் ஆதி மந்தியார், குற மகள் இளவெயினியார், வெறிபாடிய காமக் கண்ணியார், கீரன் எயிற்றியார், ஒக்கூர் மாசாத்தியார், காவற்பெண்டு, நக்கண்ணையார், குமுழி ஞாழல் நப்பசையார், வெள்ளி வீதியார், பூதப்பாண்டியனின் உள்ளங் கவர்ந்த பெருங்கோப்பெண்டு, பாரிமகளிர் என்று தமிழ்ப் பெண்பாற் புலவர்களின் பட்டியல் நீளமானது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2013ல் வெளியான நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். இதை இயக்குனர் பொன்ராம் இயக்கினார். இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சத்யராஜ் மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)
ஆயிரத்தில் ஒருவன் (Aayirathil Oruvan) செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக் சிவகுமார், ரீமா சென் ஆகியோர் முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்க 2010 ஆம் ஆண்டு சனவரி மாதம் 13-ம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் பார்த்திபன், ஆண்ட்ரியா ஜெரமையா ஆகியோர் கௌரவ வேடங்களில் நடித்துள்ளனர். கதை, திரைக் கதை என்பனவும் இயக்குனரே ஏற்றுள்ளார்.
தமிழ் இலக்கணத்தில் புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வெட்சித் திணை தொடர்பில் விரிச்சி என்பது அகத்திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். பொதுவாக விரிச்சி என்பது வாயிலிருந்து வரும் சொல் என்னும் பொருள் கொண்டது. சிறப்பாக, முன் பின் தெரியாத ஒருவரிடமிருந்து வரும் சொற்களைக் கேடு அதற்குப் பொருள் கொள்வது விரிச்சி என்பர்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
பிரதோசம் (Pradosha) என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோச வழிபாடு எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோச விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது. பிரதோசத்திற்காக கூறப்படும் புராணக் கதையில் செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் பொழுது ஆலகாலம் எனும் விசம் வெளிப்பட்டது.
திருமகள் (தொலைக்காட்சித் தொடர்)
திருமகள் என்பது சன் தொலைக்காட்சியில் அக்டோபர் 12, 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.இந்தத் தொடரில் ஹரிகா சாது, சுரேந்தர் சண்முகம், சாமிதா ஸ்ரீகுமார், ரேகா கிருஷ்ணப்பா, ஜீவா ரவி, பிரகாஷ், ஜானகி, ரித்திகா வெங்கட், ரேவதி சங்கர், ராஜேந்திரன், ரேகா சுரேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
பர்வத மலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இம்மலை.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
இந்தியா நிலக்கரி நிறுவனம் (Coal India Limited) (முபச: 533278 , தேபச: COALINDIA ) மேற்கு வங்காளம், கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இந்தியாவின் நிலக்கரி உற்பத்திக்கு ஏறத்தாழ 85% பங்களிக்கிறது. இது, நிலக்கரி உற்பத்தியில் உலகிலேயே மிக பெரிய நிறுவனமாக உள்ளது.
வல்லினம் மிகும் இடங்கள் என்பது தமிழ் மொழியில் அடுத்தடுத்து இரண்டு சொற்கள் வரும்போது முதல் சொல்லின் (நிலைமொழி) இறுதியில் ஒரு வல்லின எழுத்துச் சேர்வதைக் குறிக்கும். ஒரு நிலைமொழியோடு வருமொழி க, ச, த, ப வருக்க எழுத்துகளில் தொடங்குஞ் சொல்லாக அமையும்பொழுது அவ்வல்லொற்று சிலவிடங்களில் மிகுந்தும் சிலவிடங்களில் மிகாமலும் வரும். இவற்றையறிந்து பயன்படுத்தாமையைச் சந்திப்பிழையெனக் கூறுவர்.