The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
குருத்து ஞாயிறு (Palm Sunday) அல்லது குருத்தோலை ஞாயிறு என்பது இயேசு கிறித்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து கிறித்தவர்கள் ஆண்டுதோறும் அனுசரிக்கின்றனர். பாடுகளின் குருத்து ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது. இது இயேசு இறந்து உயிர்த்தெழுந்த ஞாயிறு (ஈஸ்டர்) க்கு முந்திய ஞாயிறு வரும்.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
வெற்றிமாறன் (Vetrimaaran) ஒர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது முதல் திரைப்படமான பொல்லாதவன் நடப்பு நிலைக்கு மிக அண்மையாகப் படம்பிடித்துக் காட்டியதற்காக மிகவும் பாராட்டைப் பெற்றது. இவரது இரண்டாவது திரைப்படமான ஆடுகளம் 2011ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது.
குர்ஆன் அல்லது திருக்குர்ஆன் (அரபு: القرآن அல்-குர்-ஆன்) இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். இது முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை. இசுலாமிய சட்ட முறைமையான சரியத் சட்டத்தின் அடிப்படையாகவும் குரான் விளங்குகின்றது.
வாச்சாத்தி வன்முறை என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு வன்முறைச் சம்பவம். சூன் 20-22, 1992 தேதிகளில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டுக் காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அக்கிராம மக்கள் மீது நடத்திய வன்முறை/வன்கொடுமைத் தாக்குதல்களே நிகழ்வே வாச்சாத்தி வன்முறை எனப்படுகின்றது.
முன்னின்பம் அல்லது புறத்தொழில் (Foreplay) என்பது மனித குல பாலுறவு செய்கைகளில் தன்னுடன் பாலுறவு கொள்ளும் எதிர்பாலினரை உறவிற்கு தயார் செய்யும் வகையில் மனரீதியாகவோ உடல் ரீதியாகவோ தனது உள்ளார்ந்த ஆவலை வெளிப்படுத்தும் செயல்களை புரிவது ஆகும். இதில் ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ தனது உள்ள வெளிப்பாட்டை துவக்கலாம். சரசமானது உறவுக்கு தயாராகும் இருவரிடையே தனது ஆவலை வெளிபடுத்தவும் தனது எதிர்பாலினரிடம் நம்பகமான நபராக தன்னை கட்டிக்கொள்ளவும், இவற்றை தொன்று தொட்டே மனிதகுலம் செய்து வருகிறது.
முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, அரபு மொழி: محمد, பிறப்பு பொ.ஊ. 570, இறப்பு 8 சூன் பொ.ஊ. 632 கணிப்பு), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்தவர்.
ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ ( எ.கா. நகரம், வட்டாரம், நாடு ) குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு (Geographical indication) எனப்படும். இந்த குறியீடு, அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும்.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
மேலும் தகவல்களுக்கு: இராவணன் (பக்கவழி நெறிப்படுத்தல்)இராவணன் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணம் எனும் காவியம் கூறும் இலங்கையை ஆண்ட அசுர குல மன்னர் ஆவார். இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. பத்து முகங்களை உடையமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார்.பத்து பிரஜாபதிகளில் ஒருவரான புலஸ்திய முனிவரின் மகனான விஸ்ரவ முனிவருக்கும், அரக்கர் குல தலைவர் சுமாலியின் மகள் கைகேசிக்கும் பிறந்தவர்களே இராவணன், கும்பகர்ணன், வீடணன் மற்றும் சூர்ப்பனகை ஆவார்.
ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)
ஆயிரத்தில் ஒருவன் (Aayirathil Oruvan) செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக் சிவகுமார், ரீமா சென் ஆகியோர் முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்க 2010 ஆம் ஆண்டு சனவரி மாதம் 13-ம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் பார்த்திபன், ஆண்ட்ரியா ஜெரமையா ஆகியோர் கௌரவ வேடங்களில் நடித்துள்ளனர். கதை, திரைக் கதை என்பனவும் இயக்குனரே ஏற்றுள்ளார்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
முகம்மது நபியின் மதீனா வாழ்க்கை
முகம்மது நபியின் மதீனா வாழ்க்கை இசுலாமிய இறைத்தூதர் முகம்மது நபி மக்கா நகரிலிருந்து மதீனா நகருக்கு ஹிஜ்ரத் செய்து சென்றபின் 622 இல் இருந்து தொடங்கியது.
பர்வத மலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இம்மலை.
மெய்யியலில், இலட்சியவாதம் (Idealism) என்பது இயல்புநிலை அல்லது மனிதர்களால் உணர்ந்து கொள்ளப்படும் இயல்புநிலை மற்றும் மனத்தை அடிப்படையாகக் கொண்ட, மனத்தால் ஆக்கப்பட்ட அல்லது கருத்தியல்வாதமான நுண்புல மெய்யியல்களின் தொகுப்பாகும். அறிவாய்வியல்ரீதியாக, இலட்சியவாதம் என்பது மனத்தோடு சார்பற்ற பொருள் அல்லது கருத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பைப் பற்றிய ஒரு ஐயுறவியலாக வெளிப்படுகிறது. பொருள்முதல்வாதத்திற்கு மாறாக, பருப்பொருள் நிகழ்விற்கு மூலம் மற்றும் முன்நிபந்தைனயாக மனத்தின் விழிப்புணர்வு அல்லது சிந்தனையே முதன்மயானது என்பதை உறுதிப்படுத்துகிறது.
மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)
மனம் கொத்திப் பறவை (Manam Kothi Paravai), 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தை எழுதி இயக்கியவர் துள்ளாத மனமும் துள்ளும் என்ற திரைப்படத்தை இயக்கிய எழில் ஆவார். முக்கிய கதாபாத்திரங்களில் சிவ கார்த்திகேயன், சூரி, இளவரசு, ஆத்மியா ஆகியோர் நடித்துள்ளனர்.
தினகரன் ஒரு தமிழ் நாளிதழ் ஆகும். இது சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பதிப்பிக்கப்படுகிறது. பல தென்னிந்திய மொழிகளில் ஒளிபரப்புச் சேவையை நடத்திவரும் சன் குழுமத்தினால் வெளியிடப்படும் இந்த நாளிதழ், ஏ.பி.சி என்னும் சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேஷன் என்னும் நிறுவனத்தின் ஆய்வுகளின்படி, 2006 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் முதல் தினகரன், 9 இலட்சம் பிரதிகளுக்கும் மேல் நாள்தோறும் விற்பனையாவதாகத் தெரிகிறது.தினகரன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முன்னாள் தலைவர்களில் ஒருவரும், தினத்தந்தியின் நிறுவனர் சி.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான பொ.ஊ.மு 400க்கும் பொ.ஊ. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
வராகி (Varahi; சமக்கிருதம்: वाराही, Vārāhī, வாராஹி) என்பது இந்து சமயத்தின் நான்கு முக்கிய வழிபாட்டு நடைமுறை பிரிவினர்களான சைவம் (சிவ பக்தர்கள்), பிராமணியம் (பிரம்ம பக்தர்கள்), வைணவம் (விஷ்ணுவின் பக்தர்கள்), சக்தி (தேவி வழிபாடு) ஆகியோரால் வணங்கப்படும் ஒரு தெய்வமாகும். பொதுவாக, இரகசியமான வாமர்கா தாந்த்ரீக நடைமுறைகளைப் பயன்படுத்தி, வராஹி அம்மனை இரவில் வழிபடும் வழக்கம் உள்ளது. இவர் அம்மனின் காவல் தெய்வமாகவும், சப்தகன்னியரில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.
இசுலாம் (இஸ்லாம் الإسلام , அரபு: الإسلام; al-'islām, Islam) என்பது ஓரிறைக் கொள்கையைக் கொண்ட ஓர் ஆபிரகாமிய மதமாகும். உலகம் முழுவதும் 1.907 பில்லியன் (190 கோடி மற்றும் எழுபது லட்சத்திற்கும் மேலான) மக்கள் இம்மதத்தைப் பின்பற்றுகிறார்கள். இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 24.9 சதவீதமாகும், அதாவது கிட்டத்தட்ட மனித சமுதாயத்தில் நான்கில் ஒருவர்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
வைக்கம் போராட்டம் அல்லது வைக்கம் சத்தியாக்கிரகம் என்பது 1924 - 1932 ஆம் ஆண்டுகளிலான காலகட்டத்தில் பிரித்தானிய இந்தியாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் தீண்டாமைக்கு எதிராக நடைபெற்றப் போராட்டம். வைக்கம் ஊரில் இருந்த சோமநாதர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களை அவர்ண சாதியினர் பயன்படுத்தக்கூடாது என்ற தடையை நீக்க இப்போராட்டம் நடத்தப்பட்டது.
பாலை என்பது பண்டைத் தமிழகத்தில் பண்பின் அடிப்படையில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப்பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல், மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும்.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
மகாவீரர் ஜெயந்தி (Mahavir Jayanti), சமண சமயத்தின் 24-வதும், இறுதித் தீர்த்தங்கரருமான மகாவீரரின் பிறந்த நாள் விழாவைக் குறிப்பதாகும். மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வரும் சைத்திர மாதம், திரியோதசி திதி அன்று மகாவீரரின் பிறந்த நாள், சமணர்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மகாவீரர் பிறந்த நாளை இந்தியாவில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அன்று இந்தியாவில் இறைச்சிக் கடைகளும், மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளும் ஆணையிட்டுள்ளது.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
யூடியூப் அல்லது வலையொளி (YouTube) என்பது ஓர் அமெரிக்க நாட்டு நிகழ்நிலைக் காணொளிப் பகிர்வு மற்றும் சமூக ஊடகத் தளமாகும். இது சாட் ஹர்லி, ஸ்டீவ் சென் மற்றும் ஜவேத் கரீம் ஆகியோரால் பிப்ரவரி 2005 இல் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் வலையொளிப் பயனர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியன் மணிநேரக் காணொளிகளைக் காணுகிறார்கள்.
ஹதீஸ் (அரபு:حديث, ஹதீத்) என்பது நபிகள் நாயகம் முகமது நபியின் (ஸல்) அவர்களின் சொல், செயல், தீர்ப்புகள், முன்னெடுத்துக்காட்டுகள், நடைமுறைகள், விமர்சனப் பதிவுகளைக் கொண்ட தொகுதி ஆகும். மரபுவழி இசுலாமியச் சட்டவியலுக்கும் இறையியலுக்கும் குர்ஆனுடன் சேர்ந்து ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது. ஹதீதுகள் 8ம் 9ம் நூற்றாண்டுகளில் சேர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டன.
காதலும் கடந்து போகும் (ஆங்கிலம் எழுத்துரு: Kadhalum Kadandhu Pogum) நளன் குமாரசாமி எழுதி இயக்கிய தமிழ்க் காதல் திரைப்படம் ஆகும். மை டியர் டெசுபராடோ என்னும் கொரிய மொழிப்படத்தின் மறுவுருவாக்கமான இப்படத்தில் விசய் சேதுபதி மற்றும் மடோனா செபாசுடியன் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் மார்ச்சு 11, 2016 அன்று வெளியானது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.
ரமலான் நோன்பு (Sawm, அரபு மொழி: صوم) என்பது இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் இசுலாமியர்களால் நோற்கப்படும் நோன்பு ஆகும். இந்நாட்களில் நோன்பு அனுசரிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமல், மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பர்.இது இசுலாமின் ஐந்து அடிப்படை கடமைகளில் மூன்றாவது கடமை ஆகும்.
திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) ஓர் ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதை குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் பழங்குடியினர் (36) பட்டியல் சாதிகள் (76) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79)என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) ஸ்பெயினின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார்.2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லஸ் புய்க்ரெமாண்ட்டின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இவர் ஸ்பெயினிலிருந்து, காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாக கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
மகாவீரர் (இந்தி:महावीर), 599 – 527 BCE என்று குறிப்பிடப்படுபவர் சைன சமயத்தின் மையக் கருத்துக்களை நிறுவிய வர்த்தமானர் என்ற இந்திய துறவியாகும். சமண சமய வழக்கில் அவர் 24வது மற்றும் கடைசி அருகன் ஆவார் சைன சமயப் புத்தகங்களில் இவர் வீரா, வீரப்பிரபு, சன்மதி, அதிவீரர் மற்றும் ஞானபுத்திரர் என்று அழைக்கப்படுகிறார்.
மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன் (நூல்)
மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன் என்பது தமிழில் வெளிவந்த ஒரு சுயசரிதை நூலாகும். இது தமிழகத்தில் நக்சலைட் இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான புலவர் கலிய பெருமாள் எழுதிய சுயசரிதை நூலாகும்.
வன்னியர் (Vanniyar) அல்லது வன்னிய குல சத்திரியர் (Vanniya Kula Kshatriya's) எனப்படுவோர் தமிழகத்தில் குறிப்பாக வடதமிழகத்தில் (காவேரி ஆற்றின் வடக்கு பகுதிகளில்) அடர்த்தியாகவும், மற்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலும் வாழுகின்ற ஒரு மிகப்பெரிய தமிழ் சாதியினர் ஆவர். இவர்கள் புதுச்சேரி, தெற்கு கருநாடகம் மற்றும் தெற்கு ஆந்திரா போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.
ஹிஜ்ரத் என்ற சொல்லுக்கு வெறுத்தல், ஒதுக்குதல், விலகிக் கொள்ளுதல் எனப்பொருளாகும். இஸ்லாமிய வழக்கத்தில் ஹிஜ்ரத் ஒரு குறிப்பிட்ட தியாகத்தினை குறிக்கும் சொல்லாகும். இஸ்லாமிய கொள்கையினை ஓர் ஊரில் அல்லது ஒரு நாட்டில் பின்பற்ற முடியாத சூழ்நிலை ஏற்படும் பொழுது, கொண்ட கொள்கையை காத்துக் கொள்வதற்காக பிறந்த மண், சொத்து, சுகம் , சொந்தம், பந்தம் என அனைத்தையும் துறந்துவிட்டு இஸ்லாத்தினை கடைபிடிப்பதற்கு ஏதுவான இடத்திற்குச் செல்வது ஹிஜ்ரத் எனப்படும்.
பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் புதினமாகும். 1950 - 1955-ஆம் ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது.
இந்திய புவிசார் குறியீடுகள் பட்டியல்
புவியியல் சார்ந்த குறியீடு (ஜிஐ) என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடம் அல்லது தோற்றத்துடன் (எ.கா., ஒரு நகரம், பகுதி அல்லது நாடு) ஒத்திருக்கும் சில தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பெயர் அல்லது அடையாளம் ஆகும். உலக வர்த்தக அமைப்பின் (WTO) உறுப்பினரான இந்தியா, புவியியல் பொருட்களின் அடையாளங்கள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 1999ஐ இயற்றியது. இச்சட்டம் செப்டம்பர் 15, 2003 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
தமிழர் இசைக் கருவிகள் இரு கூறாகப் பிரிக்கப்படுகின்றன. பண்களை இசைக்கத் தகுந்தவற்றைப் பண்ணிசைக் கருவிகள் என்றும் தாளத்தைப் பொருத்தமாகக் குறித்துச் சுவையுடன் ஒலிக்கும் கருவிகளைத் தாளக் கருவிகள் என்றும் குறிப்பிடலாம். மேலும் இசையெழுப்பும் வாயில்களைக் கொண்டு அவற்றை நரம்புக் கருவி, துளைக் கருவி, தோற் கருவி, கஞ்சகக் கருவி எனப் பிரிக்கலாம்.
சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)
சில்லுனு ஒரு காதல் (Chillunu Oru Kadhal) 2006ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா சௌலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.