The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
அலன் சிட்னி பட்ரிக் ரிக்மன் (Alan Sidney Patrick Rickman, 21 பெப்ரவரி 1946 – 14 சனவரி 2016) என்பவர் ஆங்கில திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் தனது பல்வேறுபட்ட கதாப்பாத்திர நடிப்பின் மூலம் அதிகமாக அறியப்படுகின்றார். ஆரி பாட்டர் திரைப்படத் தொடரில் செவெரசு சிநேப்பாக நடித்ததின் மூலம் அதிக இரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.
பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் புதினமாகும். 1950 - 1955-ஆம் ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது.
சேந்தன் அமுதன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற வாணி அம்மையின் மகன் ஆவார். கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிவபக்தியிலும் சிறந்தவனாக விளங்குவதாகவும், கதாநாயகன் வல்லவரையன் வந்தியத்தேவனின் நண்பனாகவும், பூங்குழலி எனும் படகோட்டி பெண்ணை காதல் செய்பவனாகவும் சேந்தன் அமுதனின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் நாள் அல்லது உழைப்பாளர் நாள் (Labour Day அல்லது Labor Day) என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். அது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது. அதிகபட்சமான நாடுகள் தொழிலாளர் தினத்தை மே 1 அன்று கொண்டாடுகின்றன.
பொன்னியின் செல்வன் 1 என்பது 2022 இல் திரைக்கு வெளிவந்த ஒரு தமிழ் வரலாற்று நாடகத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை மதராசு தாக்கீசு, லைக்கா தயாரிப்பகம் ஆகிய தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் மணிரத்னம் இயக்கித் தயாரித்தார். இது பிரபல தமிழ் எழுத்தாளரான கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்ட இரு பாகங்களின் முதல் பாகம் ஆகும்.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
சிவாஜி கணேசன் 275 தமிழ் திரைப்படங்களிலும், 9 தெலுங்கு திரைப்படங்களிலும், 2 இந்தி திரைப்படங்களிலும், 2 மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவை தவிர 17 திரைப்படங்களில் கௌரவ நடிகராகத் தோன்றி நடித்துள்ளார்.
அஜித் குமார், (Ajith Kumar, பிறப்பு மே 1, 1971) தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைக்கிறார்கள்.
ஆதித்த கரிகாலன் சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம் இராசராசனின் தமையனும் சுந்தர சோழரின், வானவன் மாதேவி மகனுமாவான். ஆதித்தன் சிறுவனாய் இருந்த பொழுதே சிங்கம் யானையுடம் போரிடுவதைப் போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட செய்த கண்டராதித்தனின் முயற்சிகளைத் தகர்த்து தன்னுரிமையுடன் வாழ்ந்து வந்த வீரபாண்டியனுடன் போரிட்டதாக லெய்டன் பட்டயங்கள் புகழ்கின்றன. புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்த கரிகாலனது வீரம் வெளிப்பட்டதோடு, வீரபாண்டியன் தலைகொண்ட என்று கூறிக்கொள்ளவும் இவனுக்கு வாய்ப்பைக் கொடுத்தது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
மதுராந்தகத் தேவர் (கதைமாந்தர்)
மதுராந்தகர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற கண்டராதித்தர் செம்பியன் மாதேவி வளர்ப்புமகனாவார். வரலாற்றில் இடம்பெற்ற உத்தம சோழனை சற்று புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (Meenakshi Temple) என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள, கோயில் நகரமான மதுரையின் மத்தியில், அமைந்துள்ள சிவன் ஆலயமாகும். இச்சிவ ஆலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
பர்வத மலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இம்மலை.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
குந்தவை (Kundavai) என்பது ஒன்பது மற்றும் பதினொன்றாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தென்னிந்தியாவில் வாழ்ந்த பல அரசப் பெண்களின் வரலாற்றுச்சிறப்பு மிகுந்த ஒரு பிரபலமான பெயராகும். குந்தவை என்ற பெயரில் வாழ்ந்து சென்ற சில பெண்கள் பின்வருமாறு: மேற்கு கங்கை மன்னர் முதலாம் பிருத்விபதியின் (கி.பி 853-880) மகள் குந்தவை என்பவர் மல்லாதேவாவின் மகனும் வாரிசுமான பாண இளவரசர் முதலாம் விக்ரமாதித்யாவை மணந்தார். திருவல்லத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு இவர் பல பரிசுகளை வழங்கினார்.ராசராசன் குந்தவை ஆழ்வார் என்பவர் சிறீ ராசேந்திர-சோழ தேவரின் தங்கை மற்றும் கிழக்கு சாளுக்கிய மன்னர் விமலாதித்யனின் பட்டத்து ராணி.முதலாம் ராசராச சோழனின் மூத்த சகோதரி ஆழ்வார் பராந்தகன் குந்தவை என்பவர் வல்லவராயன் வந்தியத்தேவனின் பட்டத்து ராணியாக வாழ்ந்தாரென தஞ்சை கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)
ஆயிரத்தில் ஒருவன் (Aayirathil Oruvan) செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக் சிவகுமார், ரீமா சென் ஆகியோர் முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்க 2010 ஆம் ஆண்டு சனவரி மாதம் 13-ம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் பார்த்திபன், ஆண்ட்ரியா ஜெரமையா ஆகியோர் கௌரவ வேடங்களில் நடித்துள்ளனர். கதை, திரைக் கதை என்பனவும் இயக்குனரே ஏற்றுள்ளார்.
திருச்சானூர் பத்மாவதி கோயில் (Padmavathi Temple) அல்லது அலர்மேல் மங்கை கோயில் (Padmavathi Temple)மும்மூத்திகளில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரமான வெங்கடாசலபதியின் துணைவியான பத்மாவதி தேவி எனும் அலர்மேல் மங்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் பத்மாவதி தாயார் எனும் அலர்மேல் மங்கை ஆவார். இக்கோயில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதிக்கு அருகே 4 கிமீ தொலைவில் உள்ள திருச்சானூரில் உள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.
முன்னின்பம் அல்லது புறத்தொழில் (Foreplay) என்பது மனித குல பாலுறவு செய்கைகளில் தன்னுடன் பாலுறவு கொள்ளும் எதிர்பாலினரை உறவிற்கு தயார் செய்யும் வகையில் மனரீதியாகவோ உடல் ரீதியாகவோ தனது உள்ளார்ந்த ஆவலை வெளிப்படுத்தும் செயல்களை புரிவது ஆகும். இதில் ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ தனது உள்ள வெளிப்பாட்டை துவக்கலாம். சரசமானது உறவுக்கு தயாராகும் இருவரிடையே தனது ஆவலை வெளிபடுத்தவும் தனது எதிர்பாலினரிடம் நம்பகமான நபராக தன்னை கட்டிக்கொள்ளவும், இவற்றை தொன்று தொட்டே மனிதகுலம் செய்து வருகிறது.
பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
யூடியூப் அல்லது வலையொளி (YouTube) என்பது ஓர் அமெரிக்க நாட்டு நிகழ்நிலைக் காணொளிப் பகிர்வு மற்றும் சமூக ஊடகத் தளமாகும். இது சாட் ஹர்லி, ஸ்டீவ் சென் மற்றும் ஜவேத் கரீம் ஆகியோரால் பிப்ரவரி 2005 இல் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் வலையொளிப் பயனர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியன் மணிநேரக் காணொளிகளைக் காணுகிறார்கள்.
வராகி (Varahi; சமக்கிருதம்: वाराही, Vārāhī, வாராஹி) என்பது இந்து சமயத்தின் நான்கு முக்கிய வழிபாட்டு நடைமுறை பிரிவினர்களான சைவம் (சிவ பக்தர்கள்), பிராமணியம் (பிரம்ம பக்தர்கள்), வைணவம் (விஷ்ணுவின் பக்தர்கள்), சக்தி (தேவி வழிபாடு) ஆகியோரால் வணங்கப்படும் ஒரு தெய்வமாகும். பொதுவாக, இரகசியமான வாமர்கா தாந்த்ரீக நடைமுறைகளைப் பயன்படுத்தி, வராஹி அம்மனை இரவில் வழிபடும் வழக்கம் உள்ளது. இவர் அம்மனின் காவல் தெய்வமாகவும், சப்தகன்னியரில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.
விஸ்வாசம் (Viswasam) என்பது 2019 ஆம் ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் அஜித் குமார், நயன்தாரா, விவேக், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம் திரைப்படங்களை இயக்கிய சிவாவால் எழுதி, இயக்கி மற்றும் தியாகராஜனால் தயாரிக்கப்பட்டது.
கலை (ஒலிப்பு , Art) எனப்படுவது "நுட்பமான தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது". மனித நடத்தையினாலும் தம் கற்பனை வளத்தினாலும், கலை நுட்பத் திறமையுடன் கூடிய பொருட்கள் (அ) நிகழ்வுகளைப் புணைந்து காட்சிப்படுத்தல் (அ) அரங்கேற்றல் (அ) கைவினை கலைநயம் படைத்தல் ஆகும். இதன் மூலம் பண்பாடு, வரலாறு, அழகியல், போன்றவை பாரட்டுதலுக்காகவும், ரசிக்கும் படியாகவும் காட்சிப்படுத்தப்பட்டு உளவெழுச்சியில் விளைவுகளை ஏற்படுத்தும் நோக்கமுடையதாகும்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் (Tiruchendur Murugan Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) என்பது இந்தியாவில் விளையாடப்படும் தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆகும், இது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவின் வெவ்வேறு நகரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பத்து அணிகளால் விளையாடப்படுகின்றது. இத்தொடர் 2008ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) துவங்கப்பட்டதாகும். ஐபிஎல் தொடர், ஐசிசியின் எதிர்காலச் சுற்றுப்பயண திட்டத்தில் தனி விதிவிலக்கைப் பெற்றுள்ளது, அதன்படி ஏப்ரல்-மே மாதங்களில் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் எதுவும் நடத்தப்படுவதில்லை.
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர்
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநில அரசின் சட்டமன்றத்திற்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களில் இருந்து சட்டப்பேரவைத் தலைவர் (சபாநாயகர்) ஒருவர் தேர்வு செய்யப்படுகிறார். இவர் சட்டமன்றக் கூட்டத்திற்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பதுடன் கூட்டங்களின் போது உறுப்பினர்களின் கருத்துக்களை பதிவேடுகளில் சேர்க்கவும் தேவையற்ற கருத்துக்களை நீக்கவும் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார். இதுபோல் உறுப்பினர்கள் மீது கொண்டு வரப்படும் முறையீடுகளின் அடிப்படையில் உறுப்பினர்களை தற்காலிகமாகவோ கூட்டத் தொடர் முழுமைக்குமோ கலந்து கொள்ளத் தடைவிதிக்கும் அதிகாரமுடையவராகவும் இருக்கிறார்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப் பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகளை "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக"மனித உரிமைகள் என்றால் என்ன?கருதப்படுகின்றன.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2013ல் வெளியான நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். இதை இயக்குனர் பொன்ராம் இயக்கினார். இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சத்யராஜ் மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)
செக்ஸ் இஸ் சீரோ 2002 இல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும். இதனை யோன் ஜி-க்யூன் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் இம் சேங்-ஜங், ஹா ஜி-வோன் மற்றும் சோய் வோன்-யூங் ஆகியோர் நடித்திருந்தனர்.
காதலும் கடந்து போகும் (ஆங்கிலம் எழுத்துரு: Kadhalum Kadandhu Pogum) நளன் குமாரசாமி எழுதி இயக்கிய தமிழ்க் காதல் திரைப்படம் ஆகும். மை டியர் டெசுபராடோ என்னும் கொரிய மொழிப்படத்தின் மறுவுருவாக்கமான இப்படத்தில் விசய் சேதுபதி மற்றும் மடோனா செபாசுடியன் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் மார்ச்சு 11, 2016 அன்று வெளியானது.
பார்த்திபேந்திர பல்லவன் (கதைமாந்தர்)
பார்த்திபேந்திர பல்லவன் என்பவன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் தோன்றும் பல்லவச் சிற்றரசக் கதாபாத்திரம் ஆவான். புதினத்தில் இவன் ஆதித்த கரிகாலனின் நண்பனாக அறிமுகம் செய்விக்கப்படுகிறான். இவனுக்கு வந்தியத்தேவன் என்ற வாணர் குல தலைவன் மீது பொறாமை இருந்தது.
மருதமலை முருகன் கோயில், அல்லது மருதாசலமூர்த்தி கோவில், கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள மருதமலை மேல் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற தலமிது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன், இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான பொ.ஊ.மு 400க்கும் பொ.ஊ. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உழைப்பாளர் சிலை (Triumph of Labour) மே தின நினைவாகவும் உழைப்பாளர்களைப் போற்றும் விதத்திலும் சென்னையில் எழுப்பப்பட்ட சிலையாகும். மெரீனா கடற்கரையின் வடக்கே அண்ணா சதுக்கத்தில் அமையப்பெற்றுள்ள இந்தச் சிலை, சென்னையின் முக்கிய அடையாளமாகத் திகழ்கின்றது. மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட சிலைகளில் இது மிகவும் பழமையானது.
மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), சுருக்கமாக எம் எஸ் தோனி என்று (பிறப்பு: 7 சூலை, 1981) அறியப்படும் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சர்வதேசத் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வரையிட்ட நிறைவுப் போட்டிகளுக்கும் , 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக இருந்தார். இவரின் தலைமையில் 2007 ஐசிசி உலக இருபது20 2007-08 பொதுநலவய போட்டித் தொடர், 2010மற்றும் 2016 ஆசியக் கோப்பை, 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2013 ஐசிசி வாகையாளர் ஆகிய கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது.
கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) ஸ்பெயினின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார்.2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லஸ் புய்க்ரெமாண்ட்டின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இவர் ஸ்பெயினிலிருந்து, காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாக கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
இராசேந்திர சோழன் (Rajendra Chola) சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவருமான இராசராச சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமாவார். விசயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராசேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராசேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவர்.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.