The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
யூடியூப் அல்லது வலையொளி (YouTube) என்பது ஓர் அமெரிக்க நாட்டு நிகழ்நிலைக் காணொளிப் பகிர்வு மற்றும் சமூக ஊடகத் தளமாகும். இது சாட் ஹர்லி, ஸ்டீவ் சென் மற்றும் ஜவேத் கரீம் ஆகியோரால் பிப்ரவரி 2005 இல் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் வலையொளிப் பயனர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியன் மணிநேரக் காணொளிகளைக் காணுகிறார்கள்.
வராகி (Varahi; சமக்கிருதம்: वाराही, Vārāhī, வாராஹி) என்பது இந்து சமயத்தின் நான்கு முக்கிய வழிபாட்டு நடைமுறை பிரிவினர்களான சைவம் (சிவ பக்தர்கள்), பிராமணியம் (பிரம்ம பக்தர்கள்), வைணவம் (விஷ்ணுவின் பக்தர்கள்), சக்தி (தேவி வழிபாடு) ஆகியோரால் வணங்கப்படும் ஒரு தெய்வமாகும். பொதுவாக, இரகசியமான வாமர்கா தாந்த்ரீக நடைமுறைகளைப் பயன்படுத்தி, வராஹி அம்மனை இரவில் வழிபடும் வழக்கம் உள்ளது. இவர் அம்மனின் காவல் தெய்வமாகவும், சப்தகன்னியரில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
முன்னின்பம் அல்லது புறத்தொழில் (Foreplay) என்பது மனித குல பாலுறவு செய்கைகளில் தன்னுடன் பாலுறவு கொள்ளும் எதிர்பாலினரை உறவிற்கு தயார் செய்யும் வகையில் மனரீதியாகவோ உடல் ரீதியாகவோ தனது உள்ளார்ந்த ஆவலை வெளிப்படுத்தும் செயல்களை புரிவது ஆகும். இதில் ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ தனது உள்ள வெளிப்பாட்டை துவக்கலாம். சரசமானது உறவுக்கு தயாராகும் இருவரிடையே தனது ஆவலை வெளிபடுத்தவும் தனது எதிர்பாலினரிடம் நம்பகமான நபராக தன்னை கட்டிக்கொள்ளவும், இவற்றை தொன்று தொட்டே மனிதகுலம் செய்து வருகிறது.
பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
இந்திய ₹2000 பணத்தாள் இந்திய ரிசர்வ் வங்கியால் நவம்பர் 08 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ரூபாய் இரண்டாயிரம் மதிப்புடைய பணத்தாள் ஆகும். இந்திய அரசாங்கம் நவம்பர் 08 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு இரவிலிருந்து கருப்பு பண புழக்கத்தை முடக்கும் பொருட்டு செல்லாது என்று அறிவித்தது. ஆனால் ,₹500 மற்றும் ₹2000 ஆகியவற்றின் புதுவடிவ நோட்டுக்கள் 11 ஆம் தேதி நவம்பர் 2016 அன்று வங்கிகளில் கிடைக்கும் என்று அறிவித்தது.
தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான பொ.ஊ.மு 400க்கும் பொ.ஊ. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் கலாச்சாரம், தமிழ் மக்களின் பண்பாடு ஆகும். தமிழ் கலாச்சாரம் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ளது. தமிழ் கலாச்சாரம் மொழி, இலக்கியம், இசை, நடனம், நாட்டுப்புற கலை, தற்காப்பு கலை, ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, விளையாட்டு, ஊடகங்கள், நகைச்சுவை, உணவு, ஆடைகள், கொண்டாட்டங்கள், தத்துவம், மதங்கள், மரபுகள், சடங்குகள், நிறுவனங்கள், அறிவியலை வெளிப்படுத்தப்படுகிறது மற்றும் தொழில்நுட்பம்.
செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)
செக்ஸ் இஸ் சீரோ 2002 இல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும். இதனை யோன் ஜி-க்யூன் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் இம் சேங்-ஜங், ஹா ஜி-வோன் மற்றும் சோய் வோன்-யூங் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.
அப்பர் திருநாவுக்கரசு நாயனார் பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரைத் தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
சமவுடைமை அல்லது சமூகவுடைமை (Socialism, சோசலிசம், சோஷியலிசம் அல்லது சோசியலிசம்) என்பது ஒரு அரசியல்-பொருளியல் கோட்பாடு. பொருளாதார நிர்வாகத்தில் கூடிய அரச பங்களிப்பை வலியுறுத்துகின்றது. உற்பத்திக் காரணிகள் (Means of Production) மற்றும் இயற்கை வளங்கள் அரசு அல்லது சமூக கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற கொள்கையை முன்னிறுத்துகிறது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் புதினமாகும். 1950 – 1955-ஆம் ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) என்பது இந்தியாவில் விளையாடப்படும் தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆகும், இது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவின் வெவ்வேறு நகரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பத்து அணிகளால் விளையாடப்படுகின்றது. இத்தொடர் 2008ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) துவங்கப்பட்டதாகும். ஐபிஎல் தொடர், ஐசிசியின் எதிர்காலச் சுற்றுப்பயண திட்டத்தில் தனி விதிவிலக்கைப் பெற்றுள்ளது, அதன்படி ஏப்ரல்-மே மாதங்களில் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் எதுவும் நடத்தப்படுவதில்லை.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் (Tiruchendur Murugan Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றது.
வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, 26 நவம்பர் 1954 – 17 மே அல்லது 18 மே 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972 இல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975 இல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் இவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக இவர் குற்றம் சாட்டப்பட்டார்.
பொன்னியின் செல்வன் 1 என்பது 2022 இல் திரைக்கு வெளிவந்த ஒரு தமிழ் வரலாற்று நாடகத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை மதராசு தாக்கீசு, லைக்கா தயாரிப்பகம் ஆகிய தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் மணிரத்னம் இயக்கித் தயாரித்தார். இது பிரபல தமிழ் எழுத்தாளரான கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்ட இரு பாகங்களின் முதல் பாகம் ஆகும்.
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் நாள் ஆகும். இது இலங்கைத் தமிழராலும், உலகத் தமிழராலும் ஆண்டு தோறும் மே 18 ஆம் நாள் நினைவு கூறப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டில் இந்நாளிலேயே இலங்கையின் வட-கிழக்குக் கரையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் எனும் கிராமத்தில் ஈழப்போர் முடிவுற்றது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
கலை (ஒலிப்பு , Art) எனப்படுவது "நுட்பமான தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது". மனித நடத்தையினாலும் தம் கற்பனை வளத்தினாலும், கலை நுட்பத் திறமையுடன் கூடிய பொருட்கள் (அ) நிகழ்வுகளைப் புணைந்து காட்சிப்படுத்தல் (அ) அரங்கேற்றல் (அ) கைவினை கலைநயம் படைத்தல் ஆகும். இதன் மூலம் பண்பாடு, வரலாறு, அழகியல், போன்றவை பாரட்டுதலுக்காகவும், ரசிக்கும் படியாகவும் காட்சிப்படுத்தப்பட்டு உளவெழுச்சியில் விளைவுகளை ஏற்படுத்தும் நோக்கமுடையதாகும்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2013ல் வெளியான நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். இதை இயக்குனர் பொன்ராம் இயக்கினார். இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சத்யராஜ் மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) ஸ்பெயினின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார்.2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லஸ் புய்க்ரெமாண்ட்டின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இவர் ஸ்பெயினிலிருந்து, காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாக கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் பழங்குடியினர் (36) பட்டியல் சாதிகள் (76) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79)என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர். இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது.
வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam, 5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) ஓர் ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதை குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.
ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)
ஆயிரத்தில் ஒருவன் (Aayirathil Oruvan) செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக் சிவகுமார், ரீமா சென் ஆகியோர் முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்க 2010 ஆம் ஆண்டு சனவரி மாதம் 13-ம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் பார்த்திபன், ஆண்ட்ரியா ஜெரமையா ஆகியோர் கௌரவ வேடங்களில் நடித்துள்ளனர். கதை, திரைக் கதை என்பனவும் இயக்குனரே ஏற்றுள்ளார்.
சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)
சில்லுனு ஒரு காதல் (Chillunu Oru Kadhal) 2006ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா சௌலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
நாச்சியார் திருமொழி என்னும் நூல் வைணவ ஆழ்வார்களுள் ஒருவராகிய ஆண்டாளால் பாடப்பட்டது. வைணவ நூல்களின் தொகுப்பு ஆன நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் ஒரு பகுதியாகிய இந் நூல், அத் தொகுப்பில் 504 தொடக்கம் 646 வரையான பாடல்களாக இடம் பெறுகின்றது. 143 பாடல்களைக் கொண்ட இந்நூல், கண்ணனைத் தனது நாயகனாகக் கொண்டு அவனை அடையத் துடிக்கும் ஆண்டாளின் தவிப்பை எடுத்துக் காட்டுகின்றது.
மருதமலை முருகன் கோயில், அல்லது மருதாசலமூர்த்தி கோவில், கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள மருதமலை மேல் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற தலமிது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன், இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.
அயோத்தி தாசர் (C. Iyothee Thass, மே 20, 1845 –மே 5, 1914) தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் முதன்மையானவர். ஆதி திராவிட பின்புலத்தில் இருந்து வந்த இவர், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவிரமாகச் செயல்பட்டார்.
வன்னியர் (Vanniyar) அல்லது வன்னிய குல சத்திரியர் (Vanniya Kula Kshatriya's) எனப்படுவோர் தமிழகத்தில் குறிப்பாக வடதமிழகத்தில் (காவேரி ஆற்றின் வடக்கு பகுதிகளில்) அடர்த்தியாகவும், மற்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலும் வாழுகின்ற ஒரு மிகப்பெரிய தமிழ் சாதியினர் ஆவர். இவர்கள் புதுச்சேரி, தெற்கு கருநாடகம் மற்றும் தெற்கு ஆந்திரா போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.
பர்வத மலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இம்மலை.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
விராட் கோலி (Virat Kohli, ஒலிப்பு , பிறப்பு: நவம்பர் 5, 1988) ஓர் இந்தியத் துடுப்பாட்டவீரர் ஆவார். இந்திய அணியின்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளின் முன்னாள் தலைவருமாவார்.வலது கை மட்டையாளரான இவர் சர்வதேச சிறந்த துடுப்பாட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.புது தில்லியில் பிறந்த இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 2006 ஆம் ஆண்டில் விளையாடுவதற்கு முன்பாக தில்லி அணிக்காக விளையாடினார். மலேசியாவில் 2008ஆம் ஆண்டு நடந்த பத்தொன்பது அகவைக்குக் கீழானவர்களுக்கான உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமையேற்று வெற்றி பெற்றார்.
இலங்கை (ஒலிப்பு ) (Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, சிறிலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
சினைப்பை நோய்க்குறி (Polycystic ovary syndrome)(PCOS) என்பது பெண்களுக்கு ஆண்ட்ரோஜன் எனப்படும் ஆண்தன்மைச் சுரப்பி அதிகரிப்பதன் காரணமாக ஏற்படும் ஒரு கூட்டு நோய் அறிகுறியாகும். ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் இல்லாமலிருத்தல், அதிகமான குருதிப்போக்கு, உடலிலும் முகத்திலும் அதிகமான முடிவளர்ச்சி, முகப்பரு, இடுப்பெலும்பு வலி, மலட்டுத்தன்மை, சில தோல் பகுதிகள் மட்டும் கெட்டியாகவும் கருத்தும் மிருதுவாகக் காணப்படுதல் ஆகியன இதன் அறிகுறிகளாகும். மேலும் இதனோடு நீரிழிவு நோய், உடற் பருமன் இதய நோய் , உறங்கும்போது மூச்சு விடுதலில் மாற்றம், சீரற்ற மனநிலை, கருப்பை அகப்படலப் புற்றுநோய் ஆகியவையும் இதனோடு தொடர்புடையனவாகும்..
உலகின் புதிய ஏழு அதிசயங்கள் (New 7 Wonders of the World, 2000-2007) என்பது உலகின் பழைய ஏழு அதிசயங்களின் யோசனையை புதிய அதிசயங்களின் ஒரு பட்டியலைக் கொண்டு புதுப்பிப்பதாகும். நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை என்னும் தனியார் நிறுவனம் பிரபலமுற்றவைக்கான கருத்துக்கணிப்பு ஒன்றினை ஏற்பாடு செய்தது, வெற்றி பெற்றவை 2007 சூலை 7 அன்று போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் அறிவிக்கப்பட்டன100 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் தங்கள் வாக்குகளை இணையம் வழியாக அல்லது தொலைபேசி வழியாக பதிவு செய்ததாக சுவிட்சர்லாந்து நாட்டை மையமாகக் கொண்டு செயல்படும் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தெரிவிக்கிறது. ஒருவரே பலவாக்குகளை பதிவு செய்வதை தடுக்க வழியில்லாததால், இந்த கருத்துக்கணிப்பு "தீர்மானமாக அறிவியல் பூர்வமற்ற" ஒன்றாகக் கருதப்படுகிறது.
கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் சிவனைப் பற்றிய கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று உட்பட பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அப்பாடல்களை அடி எல்லை நோக்கில் ஆராயும் போது குறைந்த அடி எல்லையாக 11 அடிகள் கொண்ட பாடல்களும் உயர்ந்த அடி எல்லையாக 80 அடிகள் கொண்ட பாடல்களும் காணப்படுகின்றன.