The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam, 5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) ஓர் ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதை குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.
பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
நம்பி நாராயணன், இந்திய அறிவியலாளர் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் அதிகாரி ஆவார். கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்களில் முதன்மையாகச் செயல்பட்டவராவார். மத்தியப் புலனாய்வுத் துறையால் தவறுதலாக 1994ல் உளவு பார்த்தல் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு, பின்னர் 1998ல், இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து விடுவிக்கப்பட்டார்.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
வரலாறு (ஆங்கிலம்: History) (கிரேக்கம்: ἱστορία, historia பொருள்: "ஆய்வு மூலம் பெறப்பட்ட அறிவு") என்பது இறந்த காலத்தைப் பற்றி படிக்கின்ற ஒரு பாடப்பிரிவு என எழுதப்பட்ட ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது . எழுதப்பட்ட பதிவுகளுக்கு முன்பாக நிகழ்ந்தவை அனைத்தும் வரலாற்றுக்கு முந்தைய நிகழ்வுகள் எனக் கருதப்படுகின்றன. இத்தலைப்பின்கீழ் கடந்த கால நிகழ்வுகள், நினைவுகள், கண்டுபிடிப்புகள், சேகரிப்புகள், அமைப்புகள், அன்பளிப்புகள், நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் ஆகியவை அனைத்தும் இடம் பெறுகின்றன.
"பாவலரேறு" பெருஞ்சித்திரனார் (10 மார்ச் 1933 – 11 சூன் 1995) தமிழ்நாட்டைச் சேர்ந்த தனித்தமிழ் அறிஞர், புலவர், இதழாளர் மற்றும் பெரியாரிய, பொதுவுடைமை, தமிழ்த் தேசியச் செயல்பாட்டாளர் ஆவார். தன் ஐம்பதாண்டு கால எழுத்துப்பணியில் கனிச்சாறு (1948), கொய்யாக்கனி (1956) உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட படைப்புகளை இயற்றினார். "திராவிட மொழிநூல் ஞாயிறு" என அறியப்படும் ஞா.தேவநேயப் பாவாணருடன் இணைந்து தென்மொழி இதழைத் தொடங்கி நடத்தினார்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான பொ.ஊ.மு 400க்கும் பொ.ஊ. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பிரபஞ்சம் மற்றும் அனைத்து ஜீவராசிகளும் பஞ்சபூதங்கள் அல்லது ஐம்பூதங்கள் ஆகியவைகளின் சேர்க்கையினால் ஆனது ஆகும். வானம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகியவை ஐம்பூதங்களாகும். இந்தவமைபசதமசதபஞஞநமமுநக் கூட்டுப் பொருட்களின் பகுதிகள் பஞ்சீகரணத்தினால், இப்பிரபஞ்சம் மற்றும் ஜீவராசிகள் தோன்ஊபைநநஞவமமடமமயயயறின.
யூடியூப் அல்லது வலையொளி (YouTube) என்பது ஓர் அமெரிக்க நாட்டு நிகழ்நிலைக் காணொளிப் பகிர்வு மற்றும் சமூக ஊடகத் தளமாகும். இது சாட் ஹர்லி, ஸ்டீவ் சென் மற்றும் ஜவேத் கரீம் ஆகியோரால் பிப்ரவரி 2005 இல் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் வலையொளிப் பயனர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியன் மணிநேரக் காணொளிகளைக் காணுகிறார்கள்.
முதலாம் உலகப் போர் என்பது வரலாற்றின் உலகளாவிய சண்டைகளில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய போர்களில் ஒன்றாகும். பெரும்பாலான ஐரோப்பா, உருசியப் பேரரசு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் உதுமானியப் பேரரசு ஆகியவை இதில் கலந்து கொண்டன. ஐரோப்பா முழுவதும், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, பசிபிக் மற்றும் ஆசியாவின் பகுதிகளில் சண்டைகள் நடைபெற்றன.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.
ஓமியோபதி (homeopathy) என்பது ஒரு போலி அறிவியல் மாற்று மருத்துவ முறையாகும். இது மருத்துவர் சாமுவேல் ஹானிமன் என்பவரால் 1796 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட போலி அறிவியல் கோட்பாடுகளை கொண்ட ஒரு மருத்துவமுறை ஆகும். ஓமியோபதி மருத்துவமுறை, ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும் என்ற கோட்பாட்டின்படி இயங்கும் முறையாகும்.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (Thirugnana Sambandar, தமிழில் அறிவுசேரர் என்று பொருள் தரும்), அல்லது சம்பந்தர், என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதலில் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார்.
நரம்பணுக்களின் வெளிநீட்டமாக இருக்கும் நரம்பிழைகள் (axons), பல ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, மூடப்பட்ட கட்டுக்களாக புற நரம்பு மண்டலத்தில் இருக்கையில் அவை நரம்புகள் எனப்படும். இந்த நரம்புகளே மின் வேதி கணத்தாக்கங்களை உடலின் பல பாகங்களுக்கும் கடத்துகின்றன. மைய நரம்பு மண்டலத்தில் இருக்கும் இந்த நரம்புகளை ஒத்த அமைப்புக்கள் tract (நரம்புப் பாட்டை) என அழைக்கப்படுகின்றது.
தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
வராகி (Varahi; சமக்கிருதம்: वाराही, Vārāhī, வாராஹி) என்பது இந்து சமயத்தின் நான்கு முக்கிய வழிபாட்டு நடைமுறை பிரிவினர்களான சைவம் (சிவ பக்தர்கள்), பிராமணியம் (பிரம்ம பக்தர்கள்), வைணவம் (விஷ்ணுவின் பக்தர்கள்), சக்தி (தேவி வழிபாடு) ஆகியோரால் வணங்கப்படும் ஒரு தெய்வமாகும். பொதுவாக, இரகசியமான வாமர்கா தாந்த்ரீக நடைமுறைகளைப் பயன்படுத்தி, வராஹி அம்மனை இரவில் வழிபடும் வழக்கம் உள்ளது. இவர் அம்மனின் காவல் தெய்வமாகவும், சப்தகன்னியரில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.
பர்வத மலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இம்மலை.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (Meenakshi Temple) என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள, கோயில் நகரமான மதுரையின் மத்தியில், அமைந்துள்ள சிவன் ஆலயமாகும். இச்சிவ ஆலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
சுற்றுச்சூழல் மாசுபாடு அல்லது சூழல் மாசடைதல் (Pollution) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக் கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும். சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன.
வன்னியர் (Vanniyar) அல்லது வன்னிய குல சத்திரியர் (Vanniya Kula Kshatriya's) எனப்படுவோர் தமிழகத்தில் குறிப்பாக வடதமிழகத்தில் (காவேரி ஆற்றின் வடக்கு பகுதிகளில்) அடர்த்தியாகவும், மற்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலும் வாழுகின்ற ஒரு மிகப்பெரிய தமிழ் சாதியினர் ஆவர். இவர்கள் புதுச்சேரி, தெற்கு கருநாடகம் மற்றும் தெற்கு ஆந்திரா போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.
அப்பர் திருநாவுக்கரசு நாயனார் பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரைத் தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.
பெலோபொன்னேசியன் போர் (Peloponnesian War, கிமு 431-404) என்பது ஏதென்சு தலைமையிலான டெலியன் கூட்டணி மற்றும் எசுபார்த்தா தலைமையிலான பெலோபொன்னேசியன் கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே நடந்த ஒரு பண்டைய கிரேக்கப் போர் ஆகும். வரலாற்றாசிரியர்கள் பாரம்பரியமாக இந்தப் போரை மூன்று கட்டங்களாகப் பிரித்துள்ளனர். முதல் கட்டத்தில், ஆர்க்கிடாமியன் போர், எசுபார்த்தா அட்டிகா மீது மீண்டும் மீண்டும் படையெடுப்புகளை நடத்தியது, அதே நேரத்தில் ஏதென்சு அதன் கடற்படை மேலாதிக்கத்தைப் பயன்படுத்தி பெலொப்பொனேசியா கடற்கரையைத் தாக்கியது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் (Tiruchendur Murugan Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றது.
சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்.இவர் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது, சிவபெருமான் கிழவனாகச் சென்று தடுத்தார். பின்பு, சுந்தரரின் பிறவி நோக்கம், 'சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவது' எனப் புரிய வைத்தார். இதனைத் தடுத்தாட்கொள்ளுதல் எனச் சைவர்கள் கூறுகிறார்கள்.
மருதமலை முருகன் கோயில், அல்லது மருதாசலமூர்த்தி கோவில், கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள மருதமலை மேல் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற தலமிது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன், இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.
கீழடி தொல்லியல் களம் என்பது இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் தமிழ் நாடு தொல்லியல் துறையால் செயல்பட்டு வரும் ஒரு சங்க கால வசிப்பிடம் ஆகும். இந்த அகழாய்வு மையம் தமிழ்நாட்டில் மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி ஊராட்சியில் உள்ள கீழடி கிராமத்தின் பள்ளிச்சந்தை திடல் மேட்டுப்பகுதியில் உள்ளது. ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு இதுவேயாகும்.
செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)
செக்ஸ் இஸ் சீரோ 2002 இல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும். இதனை யோன் ஜி-க்யூன் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் இம் சேங்-ஜங், ஹா ஜி-வோன் மற்றும் சோய் வோன்-யூங் ஆகியோர் நடித்திருந்தனர்.
விளம்பரம் (advertising) என்பது தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பிராண்டுகளை அல்லது ஒரு குறிப்பிட்ட வகை தயாரிப்புகள் அல்லது சேவைகளை அதிக அளவில் வாங்க உண்டாக்கப்பட்ட தொடர்பு சாதனம். 19ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒட்டுமொத்த உற்பத்தி அதிகமானதைத் தொடர்ந்து நவீன விளம்பரங்கள் முன்னேற்றமடைந்தன.வடிவமைக்கப்பட்ட மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட "வடிவம்" மூலம் அந்தக் குறிப்பிட்ட சாதனங்கள், சேவைகளின் கொள்முதலை அதிகப்படுத்தும் வகையில் நிறைய விளம்பரங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த மாதிரியான நோக்கத்திற்காகச் சில விளம்பரங்கள், அவர்களுடைய விடாப்பிடியான செய்தியை சில சமயங்களில் உண்மையான தகவல்களுடன் சேர்த்துவிடுவதுண்டு.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)
ஆயிரத்தில் ஒருவன் (Aayirathil Oruvan) செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக் சிவகுமார், ரீமா சென் ஆகியோர் முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்க 2010 ஆம் ஆண்டு சனவரி மாதம் 13-ம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் பார்த்திபன், ஆண்ட்ரியா ஜெரமையா ஆகியோர் கௌரவ வேடங்களில் நடித்துள்ளனர். கதை, திரைக் கதை என்பனவும் இயக்குனரே ஏற்றுள்ளார்.
இலங்கையின் மலையகம் இலங்கை தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. புவியியல் சார்பாக சப்ரகமுவா குன்றுகளைத் தவிர்த்து கடல்மட்டத்திலிருந்து 300 மீட்டருக்கு மேல் அமைந்துள்ள பகுதி, மலையகம் என வரையறுக்கப்படுகிறது. ஆனால் சமுகஞ்சார் வரைவிலக்கணங்கள் படி, இலங்கையின் மலையகம் இவ்வெல்லைக்கு அப்பாலுள்ள பகுதிகளையும் இணைத்துக்கொள்கிறது.
மரபுச்சொற்கள் மரபு ரீதியாக வழங்கிவரும் சொற்களைக் குறிக்கும். மரபு என்பது நம் முன்னோர் ஒரு பொருளை எச்சொல்லால் வழங்கினரோ அவ்வாறே வழங்குவது ஆகும். உதாரணமாக, பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்களின் ஒலிகளையும் அவை ஒலிக்கும் முறைகளையும் இவ்வாறு கூற வேண்டுமென, முன்னோர் கூறிய மரபினைத் தொன்றுதொட்டுப் பின்பற்றி வருகின்றனர்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
வரலாற்றுவரைவியல் (Historiography) என்பது, வரலாற்றை ஒரு கல்விசார் துறையாக உருவாக்குவதில் வரலாற்றாளர்கள் கைக்கொள்ளும் வழிமுறைகள் பற்றிய ஆய்வுத்துறை ஆகும். அத்துடன் இதன் விரிவாக்கமாக ஒரு குறித்த விடயத்திலான ஏதாவது ஒரு தொகுதி வரலாற்று ஆக்கங்களையும் குறிக்கும். ஒரு குறித்த விடயத்திலான வரலாற்றுவரைவியல் என்பது, குறிப்பிட்ட தகவல் மூலங்கள், நுட்பங்கள், கோட்பாட்டு அணுகுமுறைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி எவ்வாறு வரலாற்றாளர்கள் அவ்விடயத்தை ஆய்வு செய்தனர் என்பதை உள்ளடக்கும்.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு (environmental protection) என்பது சுற்றுச் சூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகை பெருக்கத்தினாலும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்றுச்சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச் சூழல் சீரழிவிற்குக் காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.
முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்தப் பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாகத் தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
காதலும் கடந்து போகும் (ஆங்கிலம் எழுத்துரு: Kadhalum Kadandhu Pogum) நளன் குமாரசாமி எழுதி இயக்கிய தமிழ்க் காதல் திரைப்படம் ஆகும். மை டியர் டெசுபராடோ என்னும் கொரிய மொழிப்படத்தின் மறுவுருவாக்கமான இப்படத்தில் விசய் சேதுபதி மற்றும் மடோனா செபாசுடியன் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் மார்ச்சு 11, 2016 அன்று வெளியானது.
கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) ஸ்பெயினின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார்.2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லஸ் புய்க்ரெமாண்ட்டின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இவர் ஸ்பெயினிலிருந்து, காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாக கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
மட்பாண்டம் என்பது களிமண் வகைகளை கொண்டு மனிதர்கள் தங்கள் தேவவைகளுக்கு பயன் படுத்தும் பொருட்களின் வகை ஆகும் மட்பாண்டம் என்பது பொதுவாக மண்ணால் செய்யப்படும் பொருட்களைக் குறிக்கும். மிகப் பழங்காலத்திலேயே மட்பாண்டங்களைச் செய்யும் நுட்பங்கள் கண்டறியப்பட்டன. மட்பாண்டங்கள் செய்வது உலகின் பல பகுதிகளிலும் மிகவும் பழமை வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் பழங்குடியினர் (36) பட்டியல் சாதிகள் (76) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79)என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
மீசைய முறுக்கு (2017 திரைப்படம்)
மீசைய முறுக்கு(Meesaya Murukku)ஒரு இந்திய தமிழ் மொழித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த இசைப்பின்னணி கொண்ட காதல் திரைப்படம் ஆகும். இப்படத்தை கிப்கொப் தமிழா ஆதி இயக்கியுள்ளார்.
இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியும் ஆவார். இந்திய ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் எனக் குறிப்பிடப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் வாயிலாக இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் மரபுசார்ந்த ஒன்றாகும்.
காற்று (wind) என்பது வளிமங்கள் (gas) பெருமளவில் ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்கு நகரும் நிலையைக் குறிக்கும். புவியைப் பொறுத்தவரை, வளிமண்டலத்தில் (atmosphere)வளிமம் பெருமளவில் நகரும்போது காற்று எனப்படுகிறது. விண்வெளியில் சூரியனில் இருந்து வளிமங்கள் அல்லது மின்னேற்றம் (electric charge) அடைந்த துகள்கள் வெளியேறி வெளிக்குள் செல்வது சூரியக் காற்று (solar wind) எனவும், கோள்களில் (planet) இருந்து நிறை குறைந்த வளிமத் தனிமங்களின் வெளியேற்றம் கோட்காற்று (planetary wind) எனவும் அழைக்கப்படுகின்றன.
இளையராஜா (Ilaiyaraaja, பிறப்பு: சூன் 2, 1943) இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 இற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
நெடுநல்வாடை (ஆங்கிலம்: NEDUNALVADAI) என்பது 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.அறிமுக இயக்குனர் செல்வகண்ணன் இதை எழுதி இயக்கியுள்ளார். பி-ஸ்டார் புரொடக்சன்ஸ் இதனை தயாரித்துள்ளது. சங்க இலக்கியத்தில் நக்கீரர் எழுதிய கவிதையால் ஈர்க்கப்பட்ட இந்த படம், தலைப்பு குறிப்பிடுவது போல, ஒரு ஆணும் பெண்ணும், ஒரு தாத்தா மற்றும் அவரது பேரனின் பிரிவினையின் வலியைப் பற்றியது.
அறிவியல் தமிழ் தமிழ் மொழியில் இடம்பெறும் அறிவியல் கல்வி, ஆய்வுகள், தகவல் பரிமாற்றம், பிற அறிவியல் புலமைசார் செயற்பாடுகளை முதன்மையாகக் குறிக்கின்றது. இங்கு அறிவியல் தமிழ் மொழியையும், தமிழ் மொழியில் இடம்பெறும் அறிவியல் தொடர்பான செயற்பாடுகளையும் ஒருங்கே சுட்டுகின்றது. தமிழ் மொழியில், தமிழர் இடையே அறிவியல் செயற்பாடுகள் தொன்று தொட்டு பல காலகட்டங்களில் சிறப்புற்று இருந்தாலும் அறிவியல் தமிழ் இக்காலத்தில் மேற்கே செம்மை பெற்ற அறிவியல் அணுகுமுறைகளை உள்வாங்கி தமிழில், தமிழ்ச்சூழலில் மேற்கொள்ளப்படும் அறிவியல் செயற்பாடுகளை சிறப்பாக குறிக்கின்றது.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.