The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
அமலாக்கப் பிரிவு அல்லது அமலாக்க இயக்குனரகம் (Directorate General of Economic Enforcement or Enforcement Directorate [ED]) (இந்தி: प्रवर्तन निदेशालय) என்பது இந்தியாவில் பணமோசடி தடுப்பு சட்டம், 2002 மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999 போன்ற பொருளாதாரச் சட்டங்களை கண்காணிக்கவும், நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இதன் பணியாகும். அமலாக்கப் பிரிவு, இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய்த் றையின் கீழ் இயங்கும் புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அமைப்பு ஆகும். அமலாக்க இயக்குநனரகத்தில் இந்தியக் காவல் பணி அதிகாரிகள், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், வருமானவரி அதிகாரிகள், சுங்கம் மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் ஆகியோர்களைக் கொண்டு இயங்குகிறது.
ஆட்கொணர்வு மனு அல்லது ஹேபியஸ் கார்பஸ் (Habeas corpus) (; என்ற மத்திய கால இலத்தீன் மொழிச் சொல்லிற்கு நீ உயிருடன் இருக்கிறாய் எனப் பொருளாகும்.) ஒருவரை சட்டத்திற்குப் புறம்பாக வேண்டுமென்றோ அல்லது தவறாகவோ காவல்துறையினர் தடுப்புக் காவலில் அல்லது சிறையில் அடைத்து வைத்திருப்பதாக கருதினால், அந்நபரை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்துவதற்கு, நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு சமர்ப்பிப்பதன் மூலம், அந்நபரின் தனி மனித உரிமை காக்கப்படுகிறது. தனிமனித உரிமை பாதிக்கப்படும்போது, அக்குறையை நீக்குவதற்கும், பாதுகாப்பதற்கும், ஆட்கொணர்வு நீதிப் பேராணை பெரும்பங்கு வகிக்கிறது. ஒரு தனிமனிதனின் சுதந்திரம் தடை செய்யப்படும் போது, நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு சமர்ப்பிப்பதன் மூலம், அந்தத் தடை பற்றி விசாரித்து தக்க தீர்வு கோர உரிமை உள்ளது.
சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (14 சூன் 1928 – 9 அக்டோபர் 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்
இந்தியாவில் 28 மாநிலங்களும், தில்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 8 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, சம்மு காசுமீர், தில்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் இந்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்களைக் கொண்ட, குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும்.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
தமிழகத்தில் சங்ககாலத்தில் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் நிலவிய கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட நூல்களை பதினெண் மேற்கணக்கு நூல்கள் எனவும் பதினெண் கீழ்கணக்கு நூல்கள் எனவும் மொழி ஆய்வாளர்கள் பிற்காலத்தில் வகைப்படுத்தினர். குறைந்த அடிகளுடைய நூல்கள் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் நிறைந்த அடிகளைக் கொண்டவை மேற்கணக்கு நூல்கள் எனவும் வகைபடுத்தப்பட்டன. மேற்கணக்குப் பகுப்பில் 18 நூல்களும், கீழ்க்கணக்குப் பகுப்பில் 18 நூல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்
இத் தனிமங்களின் பட்டியல் பெயர்வாரியாக அமைத்த பட்டியல். தனிமத்தின் வகையைப் பொருத்து நிறம் காட்டப்பட்டுள்ளது. தனிமங்களின் குறியெழுத்து, அணுவெண் அணுப் பொருண்மை, நிலையான மாற்றுரு, நெடுங்குழு எண், கிடைவரிசை எண் முதலிய குறிக்கபட்டுள்ளன.
ஆயுள் தண்டனை (Life imprisonment, life sentence, life-long incarceration அல்லது life incarceration) ஓர் தீவிரமான குற்றம் புரிந்த குற்றவாளி தனது மீதமுள்ள வாழ்நாள் முழுமையையும் சிறையில் இருக்குமாறுத் தரப்படும் குற்றவியல் தண்டனையாகும். கொலை, தேசத்துரோகம், போதைமருந்து கடத்துதல், பிறருக்கு ஊறு விளைவிக்குமாறு நிகழ்த்திய திருட்டு போன்ற குற்றங்களுக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது. இந்தத் தண்டனை அனைத்து நாடுகளிலும் கொடுக்கப்படுவது இல்லை.
ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும். எடுத்துக்காட்டு: 'க்' என்னும் மெய்யும் 'அ' என்னும் உயிரும் சேர்வதால் 'க' என்னும் உயிர்மெய் பிறக்கின்றது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் (18 X 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான பொ.ஊ.மு 400க்கும் பொ.ஊ. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)
சங்க நூலான பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்து தொகுப்பில் பத்து பாடல்கள் உள்ளன. இவற்றை பாடிய புலவர் பரணர். பாடிப் பாராட்டப்பட்ட அரசன் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்.
நீதிமன்றக் காவல் அல்லது விளக்க மறியல், (Remand (detention)) ஒரு குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரால் காவல் துறையின் விசாரணை பாதிக்கப்படும் என காவல்துறை நீதிமன்றத்தில் போதிய ஆதாரத்துடன் எடுத்துரைத்தால், காவல் துறையின் விசாரணை முடியும் வரையோ அல்லது நீதிமன்றத்தில் வழக்கு துவங்கும் வரையோ அல்லது வழக்கு முடியும் வரையோ குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தின் ஆணையின் பேரில் சிறையில் அடைக்கலாம்.
யூடியூப் அல்லது வலையொளி (YouTube) என்பது ஓர் அமெரிக்க நாட்டு நிகழ்நிலைக் காணொளிப் பகிர்வு மற்றும் சமூக ஊடகத் தளமாகும். இது சாட் ஹர்லி, ஸ்டீவ் சென் மற்றும் ஜவேத் கரீம் ஆகியோரால் பிப்ரவரி 2005 இல் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் வலையொளிப் பயனர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியன் மணிநேரக் காணொளிகளைக் காணுகிறார்கள்.
தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் சிவனைப் பற்றிய கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று உட்பட பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அப்பாடல்களை அடி எல்லை நோக்கில் ஆராயும் போது குறைந்த அடி எல்லையாக 11 அடிகள் கொண்ட பாடல்களும் உயர்ந்த அடி எல்லையாக 80 அடிகள் கொண்ட பாடல்களும் காணப்படுகின்றன.
இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்
இந்தியா இருபத்தி எட்டு மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களாக (UTs) பிரிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் மேலும் அவர்களின் சொந்த அரசாங்கத்தையும் கொண்டிருக்கின்றன. மூன்று யூனியன் பிரதேசங்கள்,சம்மு காசுமீர் , தில்லி தேசிய தலைநகரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரிக்கு தங்கள் சொந்த சட்டமன்றங்கள் இருக்கின்றன.
தனிமங்களின் எண் பட்டியல் என்பது தனிமங்களின் அணு எண் அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்ட ஒரு வேதியியல் பொருட் பட்டியல். தனிமத்தைன் வகைக்கு ஏற்றார்போல நிறவேறுபாடு காட்டப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தனிமத்தின் அணு எண், தனிமத்தின் குறியெழுத்து, தனிமம் சேர்ந்த நெடுங்குழு, கிடைவரிசை, அணுப் பொருண்மை, நிலையான் மாறுரு, அடர்த்தி, உருகுநிலை, கொதிநிலை, கண்டுபிடித்தோர் பெயர் அகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியும் ஆவார். இந்திய ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் எனக் குறிப்பிடப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் வாயிலாக இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் மரபுசார்ந்த ஒன்றாகும்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
தனிம அட்டவணை என்பது வேதியியற் தனிமங்களின் அணு எண், எதிர்மின்னி அமைப்பு, மற்றும் மீண்டும் மீண்டும் வரும் வேதியற் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தனிமங்களின் அட்டவணை மூலமான காட்சிப்படுத்தலாகும். தனிமங்கள் அணு எண்ணுக்கமைய (நேர்மின்னிகளின் எண்ணிக்கை) ஏறுவரிசையில் அடுக்கப்பட்டிருக்கும். 1869 இல் திமீத்ரி மெண்டெலீவ் என்ற ரஷ்ய நாட்டு அறிஞர் இந்த அட்டவணையைக் கண்டுபிடித்தார்.
Euteleostomi மாடு (ஆங்கில மொழி: Cattle) அல்லது பசு (மாட்டின் பெண்ணினத்திற்கு வழங்கும் பொதுவான பெயர்) (Bos taurus) பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. பசுவினுடைய பால் பல சத்துக்கள் நிறைந்ததுள்ள காரணத்தினால் மனிதன் அதனை ஒரு முக்கிய உணவாகக் கொண்டுள்ளான். மனிதன் இம்மாடுகளின் இறைச்சியையும் உணவாகப் பயன்படுத்துகிறான்.
வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam, 5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) ஓர் ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதை குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.
உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973
மிசா (MISA) என்று பரவலாக அறியப்பட்ட உள் நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் (Maintainence of Internal Security Act) இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்காக பலத்த சர்ச்சைக்கிடையே ஏற்படுத்தப்பட்ட இச்சட்டம் 1971 ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியின் ஆளுமையின் பொழுது கொண்டு வரப்பட்டச் சட்டமாகும்.இந்தியச் சட்ட செயலாக்கப் பிரிவினருக்கு அதிக அதிகாரங்களை கொடுக்கும் விதமாக, அதன்மூலம் நிச்சயமற்ற குற்றக்காரணங்கள் ஏதுமின்றி எந்தவொரு தனிநபரையும் கைது செய்யமுடியும், அவரின் செயல்பாடுகளை முடக்க முடியும், அவரின் உடைமைகளை பிடிஆணை இல்லாமல் பறிமுதல் செய்யவும் இச்சட்டம் வழிவகை செய்கின்றது. இச்சட்டம் மனித உரிமைகளை நசுக்குவதற்காகவும், அரசியல் பழி வாங்கும் செயலுக்காகவுமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. இதனால் ஆளுமையில் உள்ளவர்கள் அரசியல் களத்தில் தங்களது அணிக்கு எதிரணியால் ஏற்படும் போட்டியினை சமாளிக்கவேப் பயன்படுத்தினர்.
வராகி (Varahi; சமக்கிருதம்: वाराही, Vārāhī, வாராஹி) என்பது இந்து சமயத்தின் நான்கு முக்கிய வழிபாட்டு நடைமுறை பிரிவினர்களான சைவம் (சிவ பக்தர்கள்), பிராமணியம் (பிரம்ம பக்தர்கள்), வைணவம் (விஷ்ணுவின் பக்தர்கள்), சக்தி (தேவி வழிபாடு) ஆகியோரால் வணங்கப்படும் ஒரு தெய்வமாகும். பொதுவாக, இரகசியமான வாமர்கா தாந்த்ரீக நடைமுறைகளைப் பயன்படுத்தி, வராஹி அம்மனை இரவில் வழிபடும் வழக்கம் உள்ளது. இவர் அம்மனின் காவல் தெய்வமாகவும், சப்தகன்னியரில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.
தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.
சுற்றுச்சூழல் மாசுபாடு அல்லது சூழல் மாசடைதல் (Pollution) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக் கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும். சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன.
செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)
செக்ஸ் இஸ் சீரோ 2002 இல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும். இதனை யோன் ஜி-க்யூன் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் இம் சேங்-ஜங், ஹா ஜி-வோன் மற்றும் சோய் வோன்-யூங் ஆகியோர் நடித்திருந்தனர்.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு (environmental protection) என்பது சுற்றுச் சூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகை பெருக்கத்தினாலும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்றுச்சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச் சூழல் சீரழிவிற்குக் காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.
சவுக்கு அரசியல் மற்றும் அரசு தொடர்பான கருத்துக்கள் வெளியிடுதல் மற்றும் அநீதிகளை இடித்துரைக்கும் ஒரு தமிழ் இணையத்தளம். தமிழ்நாட்டில் 2008 இல் நடைபெற்ற தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் கைதான சங்கர் என்பவர் நடத்தும் இணையத்தளமாகும். 2008 இல் தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளராக இருந்த திரிபாதிக்கும் இலஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் இயக்குநர் உபாத்யாய்க்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் உரையை ஏப்ரல் 14, 2008 இல் டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழ் வெளியிட்டது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
பிறப்பொலியியலில் (articulatory phonetics), மெய்யொலி (Consonant) என்பது, பேச்சு மொழியின் ஒரு ஒலிவகை ஆகும். நெஞ்சிலிருந்து வரும் காற்று வாய்ப்பகுதியில் தற்காலிகமாகத் தடைப்பட்டு வெளியேறும்போது மெய்யொலிகள் உருவாகின்றன. மெய்யொலிகள், அடைப்பொலி, மூக்கொலி, உரசொலி, மருங்கொலி, ஆடொலி, வருடொலி, தொடரொலிஎனப் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (Thirugnana Sambandar, தமிழில் அறிவுசேரர் என்று பொருள் தரும்), அல்லது சம்பந்தர், என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதலில் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார்.
கதிரவ அமைப்பு (Solar System) அல்லது சூரிய மண்டலம் அல்லது சூரியக் குடும்பம் என்பது கதிரவனுக்கும் அதைச் சுற்றி வரும் பொருட்ளுக்கும் இடையே உள்ள ஈர்ப்புவிசைப் பிணைப்பால் உருவான ஓர் அமைப்பாகும். இது கதிரவனைச் சுற்றி வரும் எட்டு கோள்களையும், ஐந்து குறுங்கோள்களையும் உள்ளடக்கியது ஆகும் என்று உலகளாவிய வானியல் ஒன்றியம் வரையறுத்துள்ளது. இந்த அமைப்பில் கதிரவனை நேரடியாகச் சுற்றி வரும் பெரிய அளவு கொண்ட கோள்களும் சிறிய அளவு கொண்ட குறுங்கோள் மற்றும் சிறு கதிரவ அமைப்புப் பொருட்கள் போன்றவையும், கதிரவனை மறைமுகமாகச் சுற்றி வரும் துணைக்கோள்களும் அடங்கும்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
மரபுச்சொற்கள் மரபு ரீதியாக வழங்கிவரும் சொற்களைக் குறிக்கும். மரபு என்பது நம் முன்னோர் ஒரு பொருளை எச்சொல்லால் வழங்கினரோ அவ்வாறே வழங்குவது ஆகும். உதாரணமாக, பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்களின் ஒலிகளையும் அவை ஒலிக்கும் முறைகளையும் இவ்வாறு கூற வேண்டுமென, முன்னோர் கூறிய மரபினைத் தொன்றுதொட்டுப் பின்பற்றி வருகின்றனர்.
சுற்றுச்சூழல்அல்லதுஉயிரியற்பியல் சூழல் (Biophysical environment) என்பது ஒரு உயிரினத்தை அல்லது மக்கள் தொகையைச் சுற்றியுள்ள உயிர் உள்ள, மற்றும் உயிரற்ற கூறுகள் அனைத்தையும், அவற்றின் விளைவாக குறிப்பிட்ட உயிரினம் அல்லது மக்கள் தொகையின் பிழைப்புத்திறன், விருத்தி, படிவளர்ச்சி அல்லது கூர்ப்பு ஆகியவற்றில் தாக்கம் செய்யக்கூடிய அனைத்துக் காரணிகளையும் உள்ளடக்கிய இயற்கைச் சூழலைக் குறிக்கின்றது. உயிரியற்பியல் சூழலானது நுண்ணோக்கி நிலையிலிருந்து, உலகளாவிய நிலைவரை வேறுபட்ட அளவுகளில் ஆராயப்படலாம். அத்துடன் சூழலின் இயல்பைப் பொறுத்து பெருங்கடல் சூழல், வளிமண்டலச் சூழல், நிலச் சூழல் போன்ற பல வேறுபட்ட சூழல்களைக் காணலாம்.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் பழங்குடியினர் (36) பட்டியல் சாதிகள் (76) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79)என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
உயிரியல் பல்வகைமை அல்லது பல்லுயிரியம் அல்லது உயிரினப் பன்மயம் (Biodiversity, இலங்கை வழக்கு: உயிர்ப் பல்வகைமை) என்பது பூமியில் உள்ள நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய கணக்கிலடங்காத உயிரினங்களில் காணப்படும் வேறுபாடு ஆகும். மரபுவழிப் பண்பில் பல்வகை, சிற்றினங்களில் பல்வகை, சூழல் அமைப்பில் பல்வகை, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு உரித்தான பல்வகை, அறிமுகப்படுத்தப்பட்ட உயிரினங்களில் பல்வகை ஆகியவற்றை உயிரியல் பல்வகைமை என்பது குறிக்கும். உயிரியல் பல்வகைமை என்பது புவியின் எல்லாப் பகுதிகளிலும் பல்வேறு சூழல்களில் வாழும் பலவகையான உயிரினங்களைப் பற்றி விவரிக்கப் பயன்படுத்தும் ஒரு சொல்லாகும்.
"பாவலரேறு" பெருஞ்சித்திரனார் (10 மார்ச் 1933 – 11 சூன் 1995) தமிழ்நாட்டைச் சேர்ந்த தனித்தமிழ் அறிஞர், புலவர், இதழாளர் மற்றும் பெரியாரிய, பொதுவுடைமை, தமிழ்த் தேசியச் செயல்பாட்டாளர் ஆவார். தன் ஐம்பதாண்டு கால எழுத்துப்பணியில் கனிச்சாறு (1948), கொய்யாக்கனி (1956) உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட படைப்புகளை இயற்றினார். "திராவிட மொழிநூல் ஞாயிறு" என அறியப்படும் ஞா.தேவநேயப் பாவாணருடன் இணைந்து தென்மொழி இதழைத் தொடங்கி நடத்தினார்.
கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) ஸ்பெயினின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார்.2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லஸ் புய்க்ரெமாண்ட்டின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இவர் ஸ்பெயினிலிருந்து, காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாக கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
நீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)
நீட் தேர்வு (National Eligibility cum Entrance Test) என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும்.
வன்னியர் (Vanniyar) அல்லது வன்னிய குல சத்திரியர் (Vanniya Kula Kshatriya's) எனப்படுவோர் தமிழகத்தில் குறிப்பாக வடதமிழகத்தில் (காவேரி ஆற்றின் வடக்கு பகுதிகளில்) அடர்த்தியாகவும், மற்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலும் வாழுகின்ற ஒரு மிகப்பெரிய தமிழ் சாதியினர் ஆவர். இவர்கள் புதுச்சேரி, தெற்கு கருநாடகம் மற்றும் தெற்கு ஆந்திரா போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.