The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
அன்னை தெரேசா (Mother Teresa, 26 ஆகத்து 1910 – 5 செப்டம்பர் 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார்.
ரமேசுபாபு பிரக்ஞானந்தா (Rameshbabu "Pragg" Praggnanandhaa; பிறப்பு: 10 ஆகத்து 2005) இந்தியத் தமிழ் சதுரங்க கிராண்ட்மாசுட்டர் ஆவார்.சென்னையில் பிறந்த சதுரங்க வீரரான இவர் அபிமன்யூ மிசுரா, செர்கே கரியாக்கின், குகேஷ், சவாகிர் சிந்தாரொவ் ஆகியோருக்குப் பின்னர் பின்னர் கிராண்ட்மாசுட்டர் பட்டத்தை வென்ற ஐந்தாவது-வயதில் இளையவர் ஆவார். இவர் 2022 பெப்ரவரி 22 இல், தனது 16-வது அகவையில், நடப்பு உலக வாகையாளரான மாக்னசு கார்ல்சனை வென்ற வயதில் குறைந்த சதுரங்க வீரரானார். 2022 மே 20 இல், மீண்டும் கார்ல்சனை வென்றார்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (Indian Space Research Organization, ISRO, இஸ்ரோ) இந்திய அரசின் முதன்மையான தேசிய விண்வெளி முகாம் ஆகும். பெங்களூரில் தலைமைப் பணியகம் கொண்ட இஸ்ரோ 1969 இல் உருவாக்கப்பட்டது. தற்போது 16,000 ஊழியர்கள் இஸ்ரோவில் பணியாற்றுகின்றனர்.
மரகதப் புறா (Common emerald dove), வெப்ப மண்டலத் தெற்காசியாவில் பாகிஸ்தானிலிருந்து இலங்கை வரையிலும், கிழக்கே இந்தோனேசியா, வடக்கு, கிழக்கு ஆஸ்திரேலியா வரையிலும் பரவலாகக் காணப்படும் மனைவாழ் புறாவாகும். இப்புறா, பச்சைப் புறா எனவும், பச்சை இறகுப் புறா எனவும் அழைக்கப் பெறுகிறது. இப்புறாவின் பல இனங்கள் காணப்படுகின்றன.
ஓணம் அல்லது ஆவணி திருவோணம் இந்தியாவின், தென்தமிழகத்திலும் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். மகாபலி சக்கரவர்த்தியை சூழச்சியால் வீழத்திட , திருமால் வாமனராக அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும்; அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும் கொண்டாடுகின்றனர்.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
கதிரவ அமைப்பு (Solar System) அல்லது சூரிய மண்டலம் அல்லது சூரியக் குடும்பம் என்பது கதிரவனுக்கும் அதைச் சுற்றி வரும் பொருட்ளுக்கும் இடையே உள்ள ஈர்ப்புவிசைப் பிணைப்பால் உருவான ஓர் அமைப்பாகும். இது கதிரவனைச் சுற்றி வரும் எட்டு கோள்களையும், ஐந்து குறுங்கோள்களையும் உள்ளடக்கியது ஆகும் என்று உலகளாவிய வானியல் ஒன்றியம் வரையறுத்துள்ளது. இந்த அமைப்பில் கதிரவனை நேரடியாகச் சுற்றி வரும் பெரிய அளவு கொண்ட கோள்களும் சிறிய அளவு கொண்ட குறுங்கோள் மற்றும் சிறு கதிரவ அமைப்புப் பொருட்கள் போன்றவையும், கதிரவனை மறைமுகமாகச் சுற்றி வரும் துணைக்கோள்களும் அடங்கும்.
கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) ஸ்பெயினின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார்.2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லஸ் புய்க்ரெமாண்ட்டின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இவர் ஸ்பெயினிலிருந்து, காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாக கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்கள்
பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்கள், இந்தியாவின் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், திருப்பத்தூர் பேரூராட்சிக்கு அண்மையில் உள்ள பூலாங்குறிச்சி ஊராட்சியில் உள்ள பூலாங்குறிச்சி குன்றின் சரிவுப் பகுதியில் அமைந்துள்ளன. இக்கல்வெட்டுக்களை 1979-ஆம் ஆண்டில் மேலப்பனையூர் கிராம ஆசிரியரும், கல்வெட்டு ஆய்வாளருமான கரு.ராஜேந்திரன் கண்டறிந்தார். கி.பி.
தமிழ்நாடு அரசு அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை சமத்துவபுரம் எனும் பெயரில் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கி வருகிறது. இந்தக் குடியிருப்புப் பகுதியில் வணிக மையங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது இடங்கள், பூங்காக்கள், படிப்பகங்கள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சமத்துவபுரம் குடியிருப்புப் பகுதியில் அனைத்து சாதியினருக்கும் இலவசமாய் வீடுகள் ஒதுக்கித் தரப்படுகின்றன.
நிலா (மாற்றுப் பெயர்கள்: நிலவு, அம்புலி, திங்கள், மதி, சந்திரன்) (Moon, இலத்தீன்: luna) என்பது புவியின் ஒரேயொரு நிரந்தரமான இயற்கைத் துணைக்கோள் ஆகும். இது கதிரவ தொகுதியில் உள்ள ஐந்தாவது மிகப்பெரிய துணைக்கோளும் இரண்டாவது அடர்த்திமிகு துணைக்கோளும் ஆகும். நிலவு புவியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றி வர சராசரியாக 29.32 நாட்கள் ஆகிறது.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா
இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா அல்லது ஆனைமலை புலிகள் காப்பகம் (IGWLS&NP) ஓர் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். 1961ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இங்கு வருகை புரிந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் நினைவையொட்டி இப்பெயர் இடப்பட்டுள்ளது.
பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அஃது ஒரு மகாயான காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மகாயான பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவை இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
வல்லினம் மிகும் இடங்கள் என்பது தமிழ் மொழியில் அடுத்தடுத்து இரண்டு சொற்கள் வரும்போது முதல் சொல்லின் (நிலைமொழி) இறுதியில் ஒரு வல்லின எழுத்துச் சேர்வதைக் குறிக்கும். ஒரு நிலைமொழியோடு வருமொழி க, ச, த, ப வருக்க எழுத்துகளில் தொடங்குஞ் சொல்லாக அமையும்பொழுது அவ்வல்லொற்று சிலவிடங்களில் மிகுந்தும் சிலவிடங்களில் மிகாமலும் வரும். இவற்றையறிந்து பயன்படுத்தாமையைச் சந்திப்பிழையெனக் கூறுவர்.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் (Chairman of the Indian Space Research Organisation) என்பவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) சட்டப்பூர்வ தலைவராக உள்ளார். இவர் இந்திய அரசாங்கத்தின் செயலாளராகவும், இந்தியப் பிரதமருக்கு நேரடியாகத் கருத்து தெரிவிக்கும் விண்வெளித் துறையின் (DoS) நிர்வாகியாகவும் உள்ளார்.விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்தியத் தேசியக் குழு (INCOSPAR) 1962-ல் அணு சக்தித்துறையின் (DAE)கீழ் நிறுவப்பட்டது. இதன் தலைவராக விக்ரம் சாராபாய் ஆவார்.
செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)
செக்ஸ் இஸ் சீரோ 2002 இல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும். இதனை யோன் ஜி-க்யூன் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் இம் சேங்-ஜங், ஹா ஜி-வோன் மற்றும் சோய் வோன்-யூங் ஆகியோர் நடித்திருந்தனர்.
பர்வத மலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இம்மலை.
வானகம் என்பது தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தின் கடவூர் வட்டத்தில் சுருமான்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு தன்னார்வ மாதிரி பண்ணை ஆகும். இது இயற்கை வேளாண் அறிவியலாளர் நம்மாழ்வாரின் வழிகாட்டலில் செயற்படுத்தப்படுகிறது. வறண்ட பாறை நிலப்பரப்பை மூன்று ஆண்டுகளில் இயற்கை வேளாண் முறைகளைப் பயன்படுத்தி பல்லுயிர் வாழும் கானகமாக மாற்றியுள்ளனர்.
கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் சிவனைப் பற்றிய கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று உட்பட பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அப்பாடல்களை அடி எல்லை நோக்கில் ஆராயும் போது குறைந்த அடி எல்லையாக 11 அடிகள் கொண்ட பாடல்களும் உயர்ந்த அடி எல்லையாக 80 அடிகள் கொண்ட பாடல்களும் காணப்படுகின்றன.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.
தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் (Boston Tea Party) என்பது, 1773 ஆம் ஆண்டில் பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக அமெரிக்கக் குடியேறிகளால் நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தை குறிக்கும். பல ஆண்டுகளாக அமெரிக்கர்களால் பல்வேறு வரிகளை செலுத்த வேண்டியிருந்தது, ஆனால் அமெரிக்கர்களுக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளை ஏற்றுக்கொள்வதற்கு அனுமதி இல்லாது இருந்தது. அமெரிக்காவில் தேயிலை விற்றுவந்த வணிகர்களுக்கும் விற்கும் விலை வரிகளால் உயர்ந்து அவர்களது இலாபம் குறைந்தது.
ஓரு குப்பை கதை (ஆங்கிலம்: A Garbage Story ) என்பது 2018 ஆம் ஆண்டு இந்திய தமிழ் நாடகத் திரைப்படமாகும், இது அரவிந்தன்,ராமதாஸ்,அஸ்லம் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இதை அறிமுக இயக்குனர் காளி ரங்கசாமி எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் நடன இயக்குனர் தினேஷ் திரைபடத்தின் கதாநாயகனாக அறிமுகமானார், மணீஷா யாதவ் மற்றும் யோகி பாபு ஆகியோருடன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
மண்பானை என்பது களிமண்ணிலிருந்து தயாரிக்கப்பட்டு நீர் மற்றும் பிற பொருட்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் கொள்கலன் (பாத்திரம்/ஏனம்) ஆகும். பொதுவாக, உட்புறம் வெறுமென உள்ள உருண்டை வடிவில் இதன் அடிப்பாகமும் சிறிய கழுத்துப் பகுதியும் இருக்கும். களிமண் தொகுதியை சுழல விட்டு, கைகளைக் கொண்டு இதன் வடிவத்தை வரையறுத்து இவற்றை உருவாக்குவார்கள்.
யூடியூப் அல்லது வலையொளி (YouTube) என்பது ஓர் அமெரிக்க நாட்டு நிகழ்நிலைக் காணொளிப் பகிர்வு மற்றும் சமூக ஊடகத் தளமாகும். இது சாட் ஹர்லி, ஸ்டீவ் சென் மற்றும் ஜவேத் கரீம் ஆகியோரால் பிப்ரவரி 2005 இல் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் வலையொளிப் பயனர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியன் மணிநேரக் காணொளிகளைக் காணுகிறார்கள்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான பொ.ஊ.மு 400க்கும் பொ.ஊ. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வராகி (Varahi; சமக்கிருதம்: वाराही, Vārāhī, வாராஹி) என்பது இந்து சமயத்தின் நான்கு முக்கிய வழிபாட்டு நடைமுறை பிரிவினர்களான சைவம் (சிவ பக்தர்கள்), பிராமணியம் (பிரம்ம பக்தர்கள்), வைணவம் (விஷ்ணுவின் பக்தர்கள்), சக்தி (தேவி வழிபாடு) ஆகியோரால் வணங்கப்படும் ஒரு தெய்வமாகும். பொதுவாக, இரகசியமான வாமர்கா தாந்த்ரீக நடைமுறைகளைப் பயன்படுத்தி, வராஹி அம்மனை இரவில் வழிபடும் வழக்கம் உள்ளது. இவர் அம்மனின் காவல் தெய்வமாகவும், சப்தகன்னியரில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.
ககன்யான் (Gaganyaan விண்கலம்) இந்திய விண்கலத்தின் மூலம் பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது தான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்த விண்கலத்தில் மூன்று பேர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இந்த விண்கலமானது ஜி.
மயில்சாமி அண்ணாதுரை (Mylswamy Annadurai)(பிறப்பு: சூலை 2, 1958; கோதவாடி - கிணத்துக்கடவு, பொள்ளாச்சி) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர். தற்போது தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும் , தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவராகவும் உள்ளார். இந்தப் பொறுப்பை ஏற்கும் முன் இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குனராகப் பணிபுரிந்தார்.
வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்
திருமறைக்காடர் கோயில் சுந்தரர், அப்பர், சம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 125ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் திருமறைக்காடர், தாயார் வேதநாயகி.
மட்பாண்டம் என்பது களிமண் வகைகளை கொண்டு மனிதர்கள் தங்கள் தேவவைகளுக்கு பயன் படுத்தும் பொருட்களின் வகை ஆகும்மட்பாண்டம் என்பது பொதுவாக மண்ணால் செய்யப்படும் பொருட்களைக் குறிக்கும். மிகப் பழங்காலத்திலேயே மட்பாண்டங்களைச் செய்யும் நுட்பங்கள் கண்டறியப்பட்டன. மட்பாண்டங்கள் செய்வது உலகின் பல பகுதிகளிலும் மிகவும் பழமை வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.
உக்ரைன் (Ukraine, உக்ரைனியன்: Україна, உச்சரிப்பு [ʊkrɐˈjinɐ] (கேட்க), உக்ரையீனா) கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. உருசியாவுக்கு அடுத்தபடியாக பரப்பளவில் ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடான உக்ரைன், உருசியாவுடன் கிழக்கேயும், வட-கிழக்கேயும் எல்லைகளைக் கொண்டுள்ளது. உக்ரைன் நாட்டின் நடுவில் பாயும் தினேப்பர் ஆறு, உக்ரைனை மேற்கு உக்ரைன் மற்றும் கிழக்கு உக்ரைன் எனப்பிரிக்கிறது.
வயோமித்ரா (Vyommitra) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பெண் தோற்றமுள்ள இயந்திர மனிதனாகும். விண்வெளிப் பயணத்திற்காக இந்த இயந்திர மனிதன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய விண்கலத்தின் மூலம் பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதை நோக்கமாகக் கொண்ட ககன்யான் திட்டத்திற்காக இது உருவாக்கப்பட்டது.
ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)
ஆயிரத்தில் ஒருவன் (Aayirathil Oruvan) செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக் சிவகுமார், ரீமா சென் ஆகியோர் முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்க 2010 ஆம் ஆண்டு சனவரி மாதம் 13-ம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் பார்த்திபன், ஆண்ட்ரியா ஜெரமையா ஆகியோர் கௌரவ வேடங்களில் நடித்துள்ளனர். கதை, திரைக் கதை என்பனவும் இயக்குனரே ஏற்றுள்ளார்.
மெக்மோகன் கோடு (McMahon Line) திபெத் மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையே ஏற்பட்ட 1914 சிம்லா உடன்படிக்கையின் அடிப்படையில், பிரித்தானிய இந்தியா மற்றும் திபெத்திற்கும் இடையே, ஆங்கிலேயப் புவியியலரான ஹென்றி மெக்மோகன் என்பவரால் வரையப்பட்ட எல்லைக்கோடாகும். இந்தியாவின் கிழக்கு இமயமலை பகுதியில் இந்தியா மற்றும் சீனாவின் எல்லைப் பகுதிகளை வரையறுக்கும் எல்லைக் கோடு வரைந்தவர் மெக்மோகன் ஆவார். தற்போது இந்தியா – சீனா நாடுகளுக்கு எல்லையாக அமைந்த மெக்மோகன் கோடு இன்றும் சர்ச்சைக்குரியதாக உள்ளது.சர்ச்சைக்குரிய மெக்மோகன் எல்லைக்கோடு குறித்து 1962இல் இந்திய சீனப் போர் ஏற்பட வழி வகுத்தது.
சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)
சில்லுனு ஒரு காதல் (Chillunu Oru Kadhal) 2006ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா சௌலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.