The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
பொங்கல் (Pongal) என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
போகி (Bhogi) தமிழ் நாட்காட்டியில் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள், இந்தியாவில் கொண்டாடுகின்ற பண்டிகை ஆகும். கிரிகோரியன் நாட்காட்டியின்படி வழக்கமாக இப்பண்டிகை சனவரி 13 ஆம் நாளிலும், சில ஆண்டுகளில் சனவரி 14 ஆம் நாளிலும் வரும். பரவலாக போகிப் பண்டிகை தமிழ்நாடு, கர்நாடகா ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
கத்தோலிக்கத் திருச்சபை அல்லது உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை (Roman Catholic Church) மிகப்பெரிய கிறிஸ்தவ மதப்பிரிவாகும். டிசம்பர் 31, 2008 ஆம் ஆண்டு கணக்கின் படி 1,166,000,000 (ஒரு பில்லியன், 166 மில்லியன்) இறைமக்களை கொண்டதாக இப்பிரிவு இருக்கிறது. இவ்வடிப்படையில் கத்தோலிக்கமே உலகில் மிகப்பெரிய சமயப்பிரிவாகும்.
நம்ம வீடு பிள்ளை (Namma Veettu Pillai) 2019இல் தமிழ் மொழியில் வெளியான அதிரடி புனைகதை நகைச்சுவைத் திரைப்படமாகும். இயக்குநர் பாண்டிராஜ் எழுதி இயக்கியிருந்த இப்படத்தை கலாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் பதாகையின் கீழ் தயாரித்திருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல் ஆகியோருடன் சமுத்திரக்கனி, சூரி, பாரதிராஜா, நடராஜன் சுப்பிரமணியம் உள்ளிட்ட துணை நடிகர்களும் நடித்துள்ளனர்.
திருத்தந்தையர்களின் பட்டியல் (List of Popes) என்பது கத்தோலிக்க கிறித்தவத் திருச்சபை "திருத்தந்தையர்" என்றும் "போப்பாண்டவர்" என்றும் குறிப்பிடுகின்ற உரோமை ஆயர்களின் பெயர் வரிசையை வரலாற்று முறையில் அமைக்கின்ற அடைவு ஆகும். வத்திக்கான் நகரத்தில் அமைந்துள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைமையிடம் ஒவ்வொரு ஆண்டும் "திருத்தந்தை மேலிடப் புள்ளிவிவரத் தொகுப்பு" (Annuario Pontificio) என்னும் பெயரில் வெளியிடுகின்ற நூல் அதிகாரப்பூர்வமானதாகக் கருதப்படுகிறது. இப்புள்ளிவிவரத் தொகுப்பில் இன்று கத்தோலிக்க திருச்சபையின் தலைவராய் இருக்கும் 16ஆம் ஆசீர்வாதப்பர் (பெனடிக்ட்) வரலாற்றில் 265ஆம் திருத்தந்தை என்று குறிக்கப்படுகிறார்.
பிக் பாஸ் தமிழ் 7என்பது இந்திய உண்மைநிலை நிகழ்ச்சி தொடரான பிக் பாஸ் தமிழ் பதிப்பின் ஏழாவது தொடர் ஆகும்,பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா ரவிச்சந்திரன் என்று விஜய் தொலைக்காட்சியால் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இது ஸ்டார் விஜய் தொலைக்காட்சியிலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மேலதிய ஊடக செயலியிலும் 1 அக்டோபர் 2023 அன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஏழாவது முறையாக திரைப்பட நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
பிக் பாஸ் தமிழ் என்பது 2017 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உண்மைநிலை நிகழ்ச்சி ஆகும். இது நெதர்லாந் நாட்டால் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதுவரை ஒளிபரப்பான மூன்று பருவங்களையும் பிரபல நடிகர் கமல் ஹாசன் என்பவர் தொகுத்து வழங்கியுள்ளார்.இதன் நான்காவது பருவத்தை ஜூன் 2020 ஆம் ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்டது, ஆனால் கோவிட்-19 பெருந்தொற்றுநோய் காரணமாக தாமதமாகி 4 அக்டோபர் 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்படுகிறது.
சுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை (Tsunami, செப்பானிய மொழி: 津 波 ட்சு னமி "துறைமுக அலை") என்பது கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாகப் பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும்போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். நிலநடுக்கம் (பூமி அதிர்ச்சி), மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக்கூடிய மூல காரணிகளாகும்.
செவ்வாய்க்கிழமை (மங்களவாரம்) என்பது 2023 ஆம் ஆண்டு அஜய் பூபதி எழுதி இயக்கிய இந்திய தெலுங்கு மொழி உளவியல், இயற்கைக்கு அப்பாற்பட்ட திகில் படமாகும். இது ஐந்து இந்திய மொழிகளில் 17 நவம்பர் 2023 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கன்னடத்தில் மங்களவாரம் என்றும், இந்தியில் மங்களவார் என்றும், தமிழில் செவ்வாய்கிழமை என்றும், மலையாளத்தில் சோவ்வாழ்ச்ச என்றும் வெளியிடப்பட்டது.
விசயகாந்து (Vijayakanth, விஜயகாந்த்; இயற்பெயர்: விஜயராஜ், 25 ஆகத்து 1952 – 28 திசம்பர் 2023) ஒரு திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சியின் நிறுவனத் தலைவரும் ஆவார். இவர் 2006 முதல் 2016 வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். இவரது நான்கு தசாப்த திரை வாழ்க்கையில் இவர் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திமிரு புடிச்சவன் (திரைப்படம்)
திமிரு புடிச்சவன் (Thimiru Pudichavan) ஆனது 2018 ஆம் ஆண்டு வெளிவரயிருக்கின்ற ஓர் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கணேசா எழுதி, இயக்கி பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் நடன இயக்குனர் தயாரிப்பாளர் தயாபரன் விஜய் ஆண்டனி மற்றும் நிவேதா பெத்துராஜ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.விஜய் ஆண்டனியால் இயற்றப்பட்ட இசை மற்றும் ரிச்சர்டு எம்.
சங்கராந்தி என்பது இந்துக்களின் பஞ்சாங்கம் மற்றும் ஜோதிட சாஸ்திரத்தில், 12 இராசிகள் கொண்ட ராசிச் சக்கரத்தில் சூரியன் ஒரு இராசியிலிருந்து அடுத்த இராசிக்கு இடம் பெயர்வதை குறிக்கிறது. எனவே ஒரு ஆண்டு 12 சங்கராந்திகள் கொண்டுள்ளது.சூரிய நாட்காட்டியைப் பின்பற்றும் ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, துளுநாடு, கர்நாடகா, தெலுங்கானா, பஞ்சாப், ஒடிசா, மிதிலை பிரதேசம், பிகார் மற்றும் நேபாளம் பகுதிகளில் ஒவ்வொரு சங்கராந்தியும், ஒரு மாதத்தின் தொடக்கமாகக் குறிக்கப்படுகிறது. மறுபுறம், வங்காள நாட்காட்டி மற்றும் அசாமிய நாட்காட்டிகளைப் பின்பற்றும் பகுதிகளில், சங்கராந்தி ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும், அடுத்த நாள் புதிய மாதத்தின் தொடக்கமாகவும் குறிக்கப்படுகிறது.
இராமர் கோயில் இந்து சமயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரமான குழந்தை இராமர், அயோத்தியில் பிறந்த இடமான ராம ஜென்ம பூமியில் கட்டப்பட்டு வரும் ஒரு இந்துக் கோயில் ஆகும். இது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலததில், அயோத்தி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான அயோத்தி நகரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை நிர்வாகத்தில், 2.7 ஏக்கர் நிலப்பரப்பில் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்தால் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான பொ.ஊ.மு 400க்கும் பொ.ஊ. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்ப் புத்தாண்டு (Puthandu அல்லது Tamil New year) தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும்.
சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)
சில்லுனு ஒரு காதல் (Chillunu Oru Kadhal) 2006ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா சௌலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) எசுப்பானியாவின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார். 2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லசு புச்திமோனின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இவர் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாகக் கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய காளைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் கொண்டாடப்படுகிறது அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள்.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
தினகரன் ஒரு தமிழ் நாளிதழ் ஆகும். இது சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பதிப்பிக்கப்படுகிறது. பல தென்னிந்திய மொழிகளில் ஒளிபரப்புச் சேவையை நடத்திவரும் சன் குழுமத்தினால் வெளியிடப்படும் இந்த நாளிதழ், ஏ.பி.சி என்னும் சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேஷன் என்னும் நிறுவனத்தின் ஆய்வுகளின்படி, 2006 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் முதல் தினகரன், 9 இலட்சம் பிரதிகளுக்கும் மேல் நாள்தோறும் விற்பனையாவதாகத் தெரிகிறது.தினகரன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முன்னாள் தலைவர்களில் ஒருவரும், தினத்தந்தியின் நிறுவனர் சி.
காவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடு
தமிழ்நாட்டின் கிராமங்களில் உள்ள நாட்டுப்புறக் காவல் தெய்வங்களின் பட்டியல்: சிவகங்கை மாவட்டம், வெள்ளலூர் நாடு, சிவல்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் ஶ்ரீ தொட்டிச்சி அம்மன் & கண்ணபிரான் சுவாமி கோயில் வாழைத்தோட்டத்து அய்யன் கோயில், பல்லடம், திருப்பூர் மாவட்டம் [1] பரணிடப்பட்டது 2014-12-17 at the வந்தவழி இயந்திரம் மாரமங்கலம் அருள்மிகு ஸ்ரீ சுடலை ஈஸ்வரர் திருக்கோவில் நள்ளி சிங்கமுடைய அய்யனார் கோவில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் ஸ்ரீவடுவச்சி அம்மன் கோவில் வீரகனூர் ஸ்ரீதண்டியாகரன் சாமி வீரகனூர் சேலம் மாவட்டம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில் வீரகனூர் பாவாடைராயன் . தடிகாரன் முன்னோடியார் . முண்டசாமி ஐயனார் வைரியார் இசக்கியம்மன் பேச்சியம்மன் சுடலைமாடசாமி சங்கிலிமாடசாமி சந்தன மாடசாமி வெட்டு மாடசாமி வேட்டை மாடசாமி அக்கினி மாடசாமிகுத்துக்கல்மாடசுவாமி குத்துக்கல்மாடசுவாமி சாலியன் கோவில்மல்யுத்த ஐயனார் தளவாய் மாடசாமி கொம்ப மாடசாமி இசக்கி மாடன் மாயாண்டி சாமி முப்பலி மாடசாமி பலவேசகாரன் ஊர்காவலன் மாடக்குளம் கபாலிஸ்வரி அம்மன் சப்த கன்னிமார்கள் ஐக்கோர்ட மகாராஜ வேம்படிசுடலை சாஸ்தா அய்யனார் லாடசன்னாசி முத்து வீரன் சின்னதம்பி சேர்வாரன் கருப்புசாமி ஆகாசவீரன் ஆகாசகாளி பேச்சியம்மன் தீர்த்தக்கரை ராக்கு அழகர்கோயில், மதுரை முன்னோடி முத்துக்கருப்பனசாமி பதினெட்டாம்படி கருப்பண்ணச்சாமி, அழகர்கோயில், மதுரை கொம்புகாரன் கருப்பு, முட்டாஞ்செட்டி கிராமம், நாமக்கல் மாவட்டம் மதுரை வீரன் ஒண்டிவீரன் வடகாட்டு எல்லைக் கருப்பன், பாச்சலூர், அருள்மிகு முத்து இருளப்ப சுவாமி ,பெரிய கோட்டை ஒட்டன்சத்திரம் இடும்பன், பழனி பொன்னர் சங்கர், கொங்கு மண்டலம் காத்தவராய சுவாமி நல்ல தங்காள், அருச்சுனாபுரம், வத்திராயிருப்பு, விருதுநகர் மாவட்டம் காளி தீரன் சின்னமலை கவுண்டர் காங்கேயம் சுற்றியுள்ள சில பகுதிகள் துப்பாக்கி கவுண்டர் முச்டையாண்டி வானவராய மன்றாடி கவுண்டர், சமத்தூர் இராவுத்தகுமாரர் பஞ்ச பாண்டியர் (ஐவர் இராசக்கள்) மங்கலதேவி கண்ணகி கோவில் காடையூர் வெள்ளையம்மாள் குன்னிமரக் கருப்பண்ணசாமி கோவில் கருப்பசாமி செகுட்டையனார் கோயில் செல்லாண்டியம்மன் மதுரை பாண்டி முனீசுவரன் சதுரகிரி பிலாவடி கருப்பசாமி பேச்சி அம்மன்ஒச்சாண்டம்மன் முனீஸ்வரன் கோயில் மல்லாண்டார் மூதேவி அம்மன் ரோதை முனி வடக்கு வாசல் செல்வி அம்மன் வைரப்பெருமாள் வாழைத்தோட்டத்து அய்யன் கற்குவேல் அய்யனார் சோணையா கோயில் குறுமலை பொய்யாலப்பன் அய்யனார் கோவில் முத்தாரம்மன் கோயில் தம்பிக்காளை அய்யன் கோயில், தண்ணீர்பந்தல் பாளையம், கஞ்சிக்கோவில் 638116 சொரிமுத்து அய்யனார் கோயில், பாபநாசம், நெல்லை கோணூர் சந்தன கருப்பண்ண சுவாமி திருக்கோயில், திண்டுக்கல் மேலக்கால் கருப்பணசாமி, அய்யனார் திருக்கோயில், மதுரை மாடக்குளம் ஈடாடி அய்யனார் திருக்கோயில், மதுரை பனங்குளம் அய்யனார் திருக்கோயில், புதுக்கோட்டை தூத்தாகுடி வடவக்கூத்த அய்யனார் திருக்கோயில், புதுக்கோட்டை கொத்தவாசல் காரிய ஐய்யனார் திருக்கோயில், திருவாரூர் வைரவர்ஐயனார் தண்டளை ஹரிஹர புத்திர ஐயனார் திருக்கோயில், திருவாரூர் தென்மருதூர் கருப்பைய ஐயனார் திருக்கோயில், திருவாரூர் அரியலூர் கோட்டை முனியப்பன் திருக்கோயில், அரியலூர் தென்னம்பாக்கம் அய்யனார் திருக்கோயில், கடலூர் திருநாரையூர் ஐயனார் திருக்கோயில், கடலூர் ராஜபாளையம் நீர் காத்த அய்யனார் திருக்கோயில், விருதுநகர் எல்லையம்மன் பிடாரி அம்மன் ராக்காயி அம்மன், அழகர்கோயில், மதுரை காத்தாயி அம்மன் அருள்மிகு சீலைக்காரி திருக்கோயில், கோம்பை, தேனி மாவட்டம் முனியாண்டி வீரமாகாளி திருநெல்வேலி கருப்புசாமி கோயில் சின்னக் கருப்பன் பெரிய கருப்பன் சங்கிலி கருப்பன் ஆகாய கருப்பன் மார்நாட்டு கருப்பன் தூண்டிக் கருப்பன் சமயக் கருப்பன் சந்தணக் கருப்பன் மலையாள கருப்பன் சப்பாணி கருப்பன் சோணை கருப்பன் சோணையா சாமி காட்டேரி அம்மன் மாரி அம்மன் காளி அம்மன் பிடாரி அம்மன் கருமாரி அம்மன் பெரியாட்சியம்மன் பச்சை தண்ணி அம்மன் பால் பழக்காரி அம்மன் சோலை அம்மன் மாசாணியம்மன் பழையனூர் நீலி, சிவங்கை மாவட்டம் சோணைக் கருப்பு பேச்சியம்மன் திரெளபதி அம்மன், மதுரைநகர் நொண்டி வீரன் வீரகாரன் பாப்பாத்தியம்மன், கொம்புகாரன் கருப்பு, முட்டாஞ்செட்டி கிராமம், நாமக்கல் மாவட்டம்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
புனிதர் தேவசகாயம் (Saint Devasahayam, 23 ஏப்ரல் 1712 – 14 சனவரி 1752) இந்தியக் கத்தோலிக்கப் புனிதர் ஆவார். இவர் கன்னியாகுமரியில் இந்துக் குடும்பம் ஒன்றில் 18-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். நீலகண்டன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திருமுழுக்குப் பெற்றபோது, "லாசரசு" (Lazarus) என்பதன் தமிழ் பதமான "தேவசகாயம்" என்ற பெயரைப் பெற்றார்.
பர்வத மலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இம்மலை.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
திருத்தந்தை, பாப்பிறை, பாப்பரசர் அல்லது போப்பாண்டவர் (Pope) என்பது கத்தோலிக்க திருச்சபையின் இவ்வுலகத் தலைவரைக் குறிக்கும் பெயர் ஆகும். கிரேக்கத்தில் πάππας (Pappas) என்றும் இலத்தீனில் Papa என்றும் வழங்கும் சொல் "தந்தை" என்று பொருள்படும். இவர் உரோமையின் ஆயர், உரோமைத் தலைமைக்குரு, புனித பேதுருவின் வழிவந்தவர் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, சனவரி 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன.
விஜய் தொலைக்காட்சி (ஸ்டார் விஜய்) என்பது தமிழ் மொழியில் இயங்கும் 24 மணி நேர பொழுதுபோக்கு கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை நவம்பர் 24, 1994 ஆம் ஆண்டு முதல் சென்னையில் கிண்டியைத் தலைமையகமாகக் கொண்டு உலகளவில் இயங்கி வருகின்றது. இந்த அலைவரிசை ஏசியாநெட் ஸ்டார் கம்யூனிகேசன்சு நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும்.
நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.இவர் 1945 ஆகத்து 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், அல்லது உருசியாவிற்குச் சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆகத்து 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது, போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியது.
பூளை (Aerva lanata) அல்லது தேங்காய்ப்பூக் கீரை அல்லது சிறுபீளை என்னும் பூவை இக்காலத்தில் பூளாப்பூ என்பர். இதற்கு பொங்கப்பூ, சிறுகண்பீளை, பீளைசாறி, கற்பேதி, பாஷாணபேதி, கண்பீளை என வேறு பெயர்களும் உண்டு. பொங்கல் திருவிழாவின்போது இது காப்புக் கட்டவும், வீடுகளுக்கும் மாடுகளுக்கும் தோரணம் கட்டவும் இக்காலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் (Tiruchendur Murugan Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றது.
மகர ஜோதி (Makara Jyothi) வானத்தில் ஆண்டு தோறும் ஜனவரி 14 ல் மாலை 6.30 மணி அளவில் மகர சங்கராந்தி எனக்கூறப்படும் நாளன்று தோன்றும் நட்சத்திரம்.கேரளா மாநிலத்தில் சபரிமலைக்கு நேர் எதிரே கண்டமாலா மலை முகட்டில் இது தோன்றுவதாக ஆதாரமற்ற செய்தியாக சொல்லப்படுகிறது. இந்த நட்சத்திரத்தைக் காண வழிபாட்டாளர்கள் ஒவ்வோர் ஆண்டும் 41 நாட்கள் நோன்பிருந்து சபரிமலை செல்கின்றனர். இது குறித்து பல சர்ச்சைகள், பல்வேறு கருத்துக்கள் உள்ளன.
கமல்ஹாசன் (Kamal Haasan, பிறப்பு:7 நவம்பர் 1954) ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார்.கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக 1 தேசிய விருதும், 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள்கள், 4 ஆந்திர அரசின் நந்தி விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்றுள்ளார், இவர் சிறந்த பிறமொழிப்படத்திற்கான, அகாதமி விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றிலும் நடித்திருந்தார்.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.