The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
தொம்மராஜு குகேஷ் (Dommaraju Gukesh, பிறப்பு: 29 மே 2006) இந்திய சதுரங்கப் பேராதன் மற்றும் 18 ஆவது உலக சதுரங்க வாகையாளர் ஆவார். சதுரங்க மேதையான இவர், பேராதன் (கிராண்ட்மாஸ்டர்) பட்டத்திற்குத் தகுதி பெற்ற வரலாற்றில் மூன்றாவது-இளையவரும், 2700 என்ற சதுரங்க மதிப்பீட்டை எட்டிய மூன்றாவது-இளையவரும், 2750 மதிப்பீட்டை எட்டிய முதலாவது இளையவரும் ஆவார். குகேசு 2024 வேட்பாளர் போட்டியில் வென்று, உலக சதுரங்க வாகையாளர் பட்டத்திற்காகப் போட்டியிடும் இளைய போட்டியாளர் ஆனார்.
கார்த்திகை விளக்கீடு(கார்த்திகைத் தீபம், தீபம்; ஆங்கிலம்:Kārtthigai Vilakkēdu) என்பது கார்த்திகைத் திங்கள் முழுநிலவு நாளும் கார்த்திகை நாண்மீனும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான விளக்குகளை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு விளக்கீட்டுத் திருநாள் ஆகும்.
சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.
ரமேசுபாபு பிரக்ஞானந்தா (Rameshbabu "Pragg" Praggnanandhaa; பிறப்பு: 10 ஆகத்து 2005) இந்தியத் தமிழ் சதுரங்க கிராண்ட்மாசுட்டர் ஆவார்.சென்னையில் பிறந்த சதுரங்க வீரரான இவர் அபிமன்யூ மிசுரா, செர்கே கரியாக்கின், குகேஷ், சவாகிர் சிந்தாரொவ் ஆகியோருக்குப் பின்னர் கிராண்ட்மாசுட்டர் பட்டத்தை வென்ற ஐந்தாவது-வயதில் இளையவர் ஆவார். இவர் 2022 பெப்ரவரி 22 இல், தனது 16-வது அகவையில், நடப்பு உலக வாகையாளரான மாக்னசு கார்ல்சனை வென்ற வயதில் குறைந்த சதுரங்க வீரரானார். 2022 மே 20 இல், மீண்டும் கார்ல்சனை வென்றார்.
இளையராஜா (Ilaiyaraaja, பிறப்பு: 2 சூன் 1943) இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 இற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
பர்வதராஜகுலம் (Parvatha Rajakulam) அல்லது செம்படவர் (Sembadavar) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சோழ மண்டல கடற்கரையில் வாழுகின்ற ஒரு மீனவ சமூகத்தினர் ஆவர். இச்சமூகத்தினர் செம்படவர் என்னும் பெயரையே முதன்மையாக பயன்படுத்துகின்றனர். இச்சமூகத்தினர் மீன்பிடித் தொழிலை முதன்மையாக செய்து வருகின்றனர்.
ஆதவ் அர்ஜுனா (ஆங்கில மொழி: Aadhav Arjuna) என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் அரைஸ் கேப்பிட்டல் என்ற நிறுவத்தின் நிர்வாக இயக்குநராகவும் 2021 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் 2023 ஆம் ஆண்டு முதல் இந்தியக் கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் வாய்ஸ் ஆப் காமன்ஸ் என்ற அரசியல் வியூக நிறுவனத்தின் நிறுவனராகவும் உள்ளார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்து, 2024 டிசம்பரில் ஆறு மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அல்லு அர்ஜுன் (Allu Arjun) (பிறப்பு:8 ஏப்ரல் 1983) ஒரு தெலுங்குத் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், விளம்பர நடிகரும், நடனக் கலைஞரும் இயக்குநருமாவார். இவர் ஆர்யா, தேசமுடுரு, சங்கர் தாதா சிந்தாபாத், ஆர்யா 2, வருடு, வேதம், ரேஸ் குர்ராம் உள்ளிட்ட 20இற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இரண்டு முறை நந்தி விருதுகளைப் பெற்றவர்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) ஓர் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
காவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடு
தமிழ்நாட்டின் கிராமங்களில் உள்ள நாட்டுப்புறக் காவல் தெய்வங்களின் பட்டியல்: வேளாளர்கள் கும்பிடும் மஹாதேவசுவாமி,முப்பிலியான்,பெரிய கருப்புசுவாமி,தாவாயி - ஜெயமங்களம்,தேனி,மதுரை அருகில். ஸ்ரீ தொட்டியத்து சின்னையா, சிவகங்கை மாவட்டம், வெள்ளலூர் நாடு, சிவல்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் ஶ்ரீ தொட்டிச்சி அம்மன் & கண்ணபிரான் சுவாமி கோயில் வாழைத்தோட்டத்து அய்யன் கோயில், பல்லடம், திருப்பூர் மாவட்டம் [1] பரணிடப்பட்டது 2014-12-17 at the வந்தவழி இயந்திரம் மாரமங்கலம் அருள்மிகு ஸ்ரீ சுடலை ஈஸ்வரர் திருக்கோவில் நள்ளி சிங்கமுடைய அய்யனார் கோவில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் ஸ்ரீவடுவச்சி அம்மன் கோவில் வீரகனூர் ஸ்ரீதண்டியாகரன் சாமி வீரகனூர் சேலம் மாவட்டம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில் வீரகனூர் பாவாடைராயன் . தடிகாரன் முன்னோடியார் .
உலக சதுரங்க வாகை 2024 (World Chess Championship 2024), அதிகாரபூர்வமாக கூகுள் முன்வைக்கும் உலக சதுரங்க வாகை 2024 (World Chess Championship 2024 presented by Google), என்பது உலக சதுரங்க வாகையாளரைத் தேர்ந்தெடுக்க நடப்பு உலக சதுரங்க வாகையாளர் திங் லிரேனுக்கும், அறைகூவல் வீரர் குகேசிற்கும் இடையே நடைபெற்ற சதுரங்கப் போட்டித் தொடர் ஆகும். இப்போட்டித் தொடர் சிங்கப்பூரில் 2024 நவம்பர் 25 முதல் திசம்பர் 13 வரை இடம்பெற்றது. 14 ஆட்டங்களில், தேவைப்படின் சமன்முறிகளுடன், வாகையாளர் தீர்மானிக்கப்படுவதாக தொடர் அமைந்திருந்தது.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல். இது சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான இந்நூல் ஆசிரியப்பாவால் ஆன 188 அடிகளைக் கொண்டது. நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற கூதிர்ப்பாசறையின்கண் இருக்கும் தலைவனுக்கு இஃது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.
பிரதான் மந்திரி மாத்ரி வந்தனா யோஜனா
பிரதம மந்திரி அன்னை பாதுகாப்பு திட்டம், பிரதான் மந்திரி மாத்ரி வந்தனா யோஜனா (PMMVY), முன்பு இந்திரா காந்தி மாத்ரித்வா சஹ்யோக் யோஜனா என அறியப்பட்டது, இது இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் மகப்பேறு நன்மை திட்டமாகும். இது முதலில் 2010 இல் தொடங்கப்பட்டது மற்றும் 2017இல் மறுபெயரிடப்பட்டது. இத்திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது.
அமரன் (Amaran) இராஜ்குமார் பெரியசாமி எழுத்து, இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல், சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா தயாரிப்பில், 31 அக்டோபர் 2024இல் வெளிவந்த தமிழ் அதிரடி போர்த் திரைப்படமாகும். இப்படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவும், சாய் பல்லவி, பவண் அரோரா, ராகுல் போஸ், லல்லு, அனுன் பாவ்ரா, அஜே நாக ராமன், மீர் சல்மான், கௌரவ் வெங்கடேசு, ஸ்ரீ குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். இது இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனை அடிப்படையாகக் கொண்ட சிவ் அரூர் மற்றும் இராகுல் சிங் எழுதிய இந்தியாஸ் மோஸ்ட் பியர்லெஸ் என்ற புத்தகத் தொடரின் தழுவலாகும்.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
வீரமாமுனிவர் நூல்களில் திருக்குறள்
வீரமாமுனிவர் நூல்களில் திருக்குறள் என்பது தமிழ்நாட்டில் வாழ்ந்த இத்தாலியரான வீரமாமுனிவர் (1680-1747) தமிழ்மறை திருக்குறளில் உள்ள அறநெறிகளை எவ்வாறு தமது நூல்களில் பயன்படுத்தினார் என்பதை விவரிக்கிறது. திருவள்ளுவரின் கருத்துகளைத் தமிழ் மக்களும் பிற நாட்டவரும் அறிந்து பயனடைய வேண்டும் என்னும் ஆர்வத்தால் வீரமாமுனிவர் திருக்குறளை ஆழ்ந்து கற்று, அதன் மெய்யறிவைத் தமது நூல்களில் புகுத்தினார்.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என வழங்கப்படுகிறது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
வைக்கம் போராட்டம் அல்லது வைக்கம் சத்தியாக்கிரகம் என்பது 1924 - 1932 ஆம் ஆண்டுகளிலான காலகட்டத்தில் பிரித்தானிய இந்தியாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் தீண்டாமைக்கு எதிராக நடைபெற்றப் போராட்டம். வைக்கம் ஊரில் இருந்த மகாதேவர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களை அவர்ண சாதியினர் பயன்படுத்தக்கூடாது என்ற தடையை நீக்க இப்போராட்டம் நடத்தப்பட்டது.
புஷ்பா: தி ரைஸ் (Pushpa: The Rise) என்பது இயக்குநர் சுகுமார் எழுதி இயக்கி, தெலுங்கு மொழியில் வெளியான அதிரடி பரபரப்புத் திரைப்படமாகும்.. இந்தப் படத்தில், அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க பகத் பாசில் (தெலுங்கில் அறிமுகமாகிறார்), ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். திரைப்படத்தின் இரண்டு பாகங்களில் முதல் பாகம், ஆந்திரப் பிரதேசத்தின இராயலசீமை பகுதியின் சேசாசலம் மலைப்பகுதியில் செஞ்சந்தன மரக்கடத்தலை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
கேரள நடனம் (Kerala Natanam) என்பது ஒரு புதிய பாணியிலான நடனமாகும். இது இந்திய நடன-நாடகத்தின் ஒரு வடிவமான கதகளியில் {இருந்து உருவான ஒரு தனித்துவமான கலை வடிவமாக இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய நடனக் கலைஞர் குரு கோபிநாத், நன்கு பயிற்சி பெற்ற கதகளி கலைஞரும், அவரது மனைவி தங்கமணி கோபிநாத்தும் கேரள கலாமண்டலத்தில் மோகினியாட்டத்தின் முதல் மாணவராக இருந்தவர்.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர். இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது.
சிறைச்சாலை (Siraichalai) என்பது 1996 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் திரைப்படமாகும். மலையாளத்தில் கலாபாணி என்ற பெயரில் வெளியான இத்திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சிறைச்சாலை என்ற பெயரில் வெளியானது. 1915 ஆம் ஆண்டில் நடந்த இந்திய விடுதலைப் போராட்டத்தை மையமாகக் கொண்ட இத்திரைப்படத்தை பிரியதர்சன் இயக்கியிருந்தார்.
மேஜர் முகுந்த் வரதராஜன் ஏ.சி (Mukund Varadarajan), இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்தார். ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடந்த ஒரு மோதலில் மூன்று பயங்கரவாதிகளைக் கொன்றதற்காக, 2014 ஆம் ஆண்டில், இந்தியாவின் மிக உயர்ந்த அமைதிக்கால துணிச்சலான அசோகச் சக்கரம் விருது இவருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.
பாலை என்பது பண்டைத் தமிழகத்தில் பண்பின் அடிப்படையில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப்பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல், மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும்.
பாண்டவர் எனப்படுவர்கள் மகாபாரதத்தில் வரும் மன்னன் பாண்டுவின் ஐந்து மகன்கள் ஆவார்கள். இவர்களுள் முதல் மூவரான தர்மன், பீமன் மற்றும் அர்ஜூனன் ஆகியோர் குந்தி மூலமும் கடைசி இருவரான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் மாத்ரி மூலமும் பிறந்தவர்கள் ஆவர். இவர்கள் ஐவர் என்பதால் பஞ்ச பாண்டவர் என்றும் அழைக்கப்படுவர்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2024
2024 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. 7/ஜி அக்கரன் அஞ்சாமை அதர்மக் கதைகள் அதோமுகம் அந்தகன் அமரன் அமிகோ கேரேஜ் அய்யய்யோ அயலான் அரணம் அரண்மனை 4 அரிமாபட்டி சக்திவேல் ஆந்தை ஆப்ரேசன் லைலா ஆராய்ச்சி ஆர்கே வெள்ளிமேகம் ஆலகாலம் இங்கு நான் தான் கிங்கு இங்கு மிருகங்கள் வாழும் இடம் இ-மெயில் இடி மின்னல் காதல் இந்தியன் 2 இரவின் கண்கள் இருளில் இராவணன் இப்படிக்கு காதல் இனி ஒரு காதல் செய்வோம் உணர்வுகள் தொடர்கதை உதிர் @ பூமரக் காத்து உயிர் தமிழுக்கு எங்க வீட்டுல பார்ட்டி எட்டும் வரை எட்டு எப்புரா எப்போதும் ராஜா எமகாதகன் எஸ்கே 23 எலக்சன் ஏழு கடல் ஏழு மலை ஒயிட் ரோஸ் ஒரு தவறு செய்தால் ஒரு நொடி கங்குவா கடமை கருடன் கருப்பர் நகரம் கழுமரம் கவுண்டம் பாளையம் கள்வன் கன்னி காட்ஸ்பாட் காடுவெட்டி காதலிக்க நேரமில்லை கார்டியன் காழ் கியூ ஜி பகுதி 1 கிரிமினல் கிளாஸ்மேட்ஸ் குரங்கு பெடல் கும்பாரி கேப்டன் மில்லர் கொஞ்சம் பேசினால் என்ன கொட்டுக்காளி கொலை தூரம் கோட் கோழிப்பண்ணை செல்லதுரை சட்டம் என் கையில் சத்தமின்றி முத்தம் தா சாமானியன் சாலா சிக்லெட்ஸ் சிங்கப்பூர் சலூன் சிங்கப்பெண்ணே சிட்டு 2020 சிறகன் சூரியனும் சூரியகாந்தியும் செவப்பி சைரன் டபுள் டக்கர் டிமான்டி காலணி 2 டியர் டிரைன் டிராகன் டீன்சு தக் லைஃப் தங்கலான் த. நா தி அக்காலி தி பாய்ஸ் தி பூரூஃப் திமில் துருவ நட்சத்திரம் தூக்குதுரை தேவில் தோழர் சேகுவேரா நண்பன் ஒருவன் வந்த பிறகு நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நானும் ஒரு அழகி நியதி நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நினைவெல்லாம் நீயடா நின்னு விளையாடு நெவர் எஸ்கேப் நேற்று இந்த நேரம் பகலறியான் படிக்காத பக்கங்கள் பயமறியா பிரம்மை பர்த்மார்க் பாம்பாட்டம் பார்க் பி2 பி.
ஜமீன் ஊத்துக்குளி (ஆங்கிலம்:Zamin Uthukuli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். காளிங்கராயன் அணை கட்டிய காளிங்கராயக் கவுண்டர் (இயற்பெயர் லிங்கைய கவுண்டர்) என்பவரே இந்த நாட்டின் முதல் மன்னர் ஆவார். இப்பேரூராட்சியில் தென்னை விவசாயம் மற்றும் தென்னை நார் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) ஓர் இந்திய சட்ட வல்லுநர், பொருளாதார நிபுணர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் அரசியல் தலைவர் ஆவார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகப் பதவியேற்று பின்னர் இந்திய அரசியலமைப்பு வரைவு குழுவிற்குத் தலைமை தாங்கினார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி தீண்டாமை ஒழியப் போராடினார்.
பெரும்பாலான தமிழ் மக்களால் பயன்படுத்தப்பட்டுவரும் மரபுவழி நாட்காட்டியின்படி ஆண்டின் எட்டாவது மாதம் கார்த்திகை ஆகும். தமிழில் பாகுலம் என்றால் கார்த்திகை மாதத்தைக் குறிக்கும். சூரியனானது தமிழில் தேள் என்று சொல்லப்படும் விருச்சிக இராசியுள் புகுந்து அங்கே பயணம் செய்யும் காலமான 29 நாள், 30 நாடி அல்லது நாழிகை, 24 விநாடி அளவே இம் மாதமாகும்.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா என்பது தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் பழமையானதும், தொன்மையானதுமான தீபத் திருவிழாவாகும். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதை விளக்கும் ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’ என்ற தத்துவத்தை நினைவுகூரும் வகையில் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
இந்திய மதங்கள், தெற்காசிய மதங்கள், இந்து சமயங்கள் அல்லது தர்ம மதங்கள் என்பவை உலகில் உள்ள பல மதங்களுக்குப் பிறப்பிடமாக இந்திய துணைக்கண்டத்தில் தோன்றிய, மற்றும் தர்மத்தின் அடிப்படையிலான சமயங்கள் ஆகும். இந்திய துணைக்கண்டத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் இந்து சமயம் (சைவ சமயம், வைணவ சமயம்), சமணம், பௌத்தம், சீக்கியம், ஆசீவகம், அய்யாவழி ஆகிய மதங்கள் தோன்றிக் காலப் போக்கில் உலகமெங்கும் பரவின. இந்த மதங்கள் அனைத்தும் அதன் பொதுவான தோற்றம் மற்றும் சில பரஸ்பர செல்வாக்கு காரணமாக, அடிப்படை நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் மற்றும் மத சடங்குகளில் பல ஒற்றுமைகள் உள்ளன.
அகத்தியர் (Agastya) என்பவர் தமிழி என்ற தமிழ் சித்தர்களில் முதன்மையானவராகவும், சப்த ரிஷிகளில் ஒருவராகவும் அறியப்படுகிறார். சிவபெருமானின் திருமணத்தினைக் காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்குப் பயணப்பட்டு அதைச் சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினைத் தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழைச் சிவபெருமானிடமிருந்து கற்று உணர்ந்து மற்றவருக்கும் போதித்த ஆசானும் ஆவார். இவரே அகத்தியம் எனும் தமிழ் மொழிக்கான முதல் இலக்கண நூலை இயம்பியவர் எனப்படுகிறார்.
பூண்டி ஏரி அல்லது சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் என்பது சென்னை நகர மக்களின், குடிநீர்த் தேவைக்காக, சென்னை மாநகராட்சி மேயராக இருந்த சத்தியமூர்த்தியின் முயற்சியால், 14 சூன் 1944ஆம் ஆண்டில், 65 இலட்சம் ரூபாய் செலவில் கட்டித் திறக்கப்பட்டது. இந்நீர்த்தேக்கம் சென்னையிலிருந்து, 60 கி.மீ., தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள, பூண்டி எனும் ஊரில் கொற்றலை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது.
திங் லிரேன் அல்லது திங் லிசேன் (Ding Liren, சீனம்: 丁立人; பிறப்பு: 24 அக்டோபர் 1992) சீன சதுரங்க பேராதனும், நடப்பு உலக சதுரங்க வாகையாளரும் ஆவார். இவர் வரலாற்றில் அதிக மதிப்பெண் பெற்ற சீன சதுரங்க வீரரும், மூன்று முறை சீன சதுரங்க வாகையாளரும் ஆவார். திங் லிரேன் உலக வாகையாளருக்கான வேட்பாளர் போட்டியில் விளையாடி பிடே உலகத் தரவரிசையில் 2800 எலோ மதிப்பெண்ணைக் கடந்த முதல் சீன வீரர் ஆவார்.
வாழை (Vaazhai) 2024இல் மாரி செல்வராஜ் எழுத்து, இணை தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். குழந்தைகள் தொடர்பான இந்நாடகத் திரைப்படத்தை டிசுனி + ஆட்சுடார், நவ்வி சுடுடியோசு, பாஃர்மர்சு மாசுடர் பிளான் புரொடக்சன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில் அறிமுக நடிகர்கள் பொன்வேல் எம்., ராகுல் ஆர்., கலையரசன், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியும் ஆவார். இந்திய ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் எனக் குறிப்பிடப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் வாயிலாக இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் மரபுசார்ந்த ஒன்றாகும்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (Madurai Meenakshi Sundareswarar Temple) என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள, கோயில் நகரமான மதுரையின் மத்தியில், அமைந்துள்ள சிவன் ஆலயமாகும். இச்சிவ ஆலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
வைணவ சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள் ஆவர். தென்மொழியாம் தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர். அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் ஆண்டாளையும், இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு.
விசுவநாதன் ஆனந்த் (ஆங்கில மொழி: Viswanathan Anand, பிறப்பு: திசம்பர் 11, 1969, மயிலாடுதுறை, இந்தியா),ஓர் இந்திய சதுரங்க கிராண்ட்மாஸ்டர் மற்றும் முன்னாள் உலக சதுரங்க வாகையாளர் ஆவார். இவர் உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தை ஐந்து முறை வென்றுள்ளார். உலக சதுரங்க வரலாற்றில் பிடே தரப்பட்டியலில் 2800 ஈலோ புள்ளிகளைத் எட்டிய வெகு சிலருள் ஆனந்தும் ஒருவர்.
இலங்கை () (Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, சிறிலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
காமராசர் (ஆங்கில மொழி: Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) ஓர் இந்திய விடுதலைப் போராட்ட ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். இவர் 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
இயேசுவின் பிறப்பு என்பது இயேசுவின் பிறப்பு குறித்த லூக்கா நற்செய்தி, மத்தேயு நற்செய்தி மற்றும் சில திருமுறையினை சேரா நூல்களில் விவரிப்பினைக்குறிக்கும். லூக்கா மற்றும் மத்தேயு நற்செய்திகள் யூதேயா நாட்டின் பெத்லகேம் ஊரில் இயேசு ஒரு கன்னியிடம் பிறந்தார் என குறிக்கின்றது. லூக்கா நற்செய்தியின்படி அகுஸ்து சீசரின் கட்டளைப்படி மக்கள் தொகையைக் கணக்கில் தன் குடும்பத்தை பதிவு செய்ய தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், அவருக்கு மண ஒப்பந்தமான மரியாவும் நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றனர்.
பர்வத மலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இம்மலை.