The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
அரிவாள் (இலங்கை வழக்கு : தாக்கத்தி) () (sickle) அறுவடை-கொக்கி வேளாண்மையில் பயன்படும் முக்கிய கருவி ஆகும். அரை வட்ட தோற்றத்தில் உள்ள இரும்பு பட்டையின் உட்புறம் கூர்மையாகவும் ரம்பம் போன்று சாய்வு வெட்டுக்களுடன் கூடியதாகவும் அடிப்பகுதியில் கைபிடி பொருத்தப்பட்டும் இருக்கும். இது பல்வேறு வளைந்த கத்திகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு கையால் செய்யப்பட்ட விவசாய கருவியாகும், இது பொதுவாக தானிய பயிர்களை அறுவடை செய்ய, செய்ய, அல்லது சதைப்பற்றுள்ள தீவனத்தை வெட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது, முக்கியமாக கால்நடைகளுக்கு உணவளிக்க, வைக்கோலை உலர்த்துவதற்காக வெட்டப்படும் ஒரு கருவியாக இய்ஹி பயன்படுகிறது.
திருக்குறள் (ஆங்கில மொழி: Tirukkural), சுருக்கமாகக் குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
அறுவடை செய்யப்பட்ட நெல்லிருந்து நெல் மணிகளைப் பிரிக்கும் செயல் கதிர் அடித்தல் எனப்படுகிறது. இதனைக் கதிரடிக்கும் எந்திரத்தைக் கொண்டோ அல்லது மனிதர்களைக் கொண்டோ செய்யலாம். எந்திரமற்ற பாரம்பரிய மனிதச்செயல்முறையில் நெற்கட்டுகளைப் பிரித்து நெல்மணிகள் மேல்நோக்கி இருக்குமாறு களத்தில் வட்ட வடிவில் அடுக்கப்படும்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) ஓர் இந்திய சட்ட வல்லுநர், பொருளாதார நிபுணர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் அரசியல் தலைவரும் ஆவார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகப் பதவியேற்று இந்திய அரசியலமைப்பு வரைவு குழுவிற்குத் தலைமை தாங்கினார். பட்டியல் இன மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி தீண்டாமை ஒழியப் போராடினார்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) ஓர் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
கடையெழு வள்ளல்கள் என்போர் சங்க காலத் தமிழகத்தில் வாழ்ந்த வள்ளல்களின் தொகுப்பில் கடைசியாக வரும் ஏழு வள்ளல்கள் ஆவர். சிறுபாணாற்றுப் படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைமடச் செயல்கள் பற்றியும் கூறியுள்ளார். கொடைமடச் செயல்கள் என்றால், பகுத்தறியாது மடமையோடு கொடையளித்த செயல்கள் என்று கூறலாம்.
இந்திய சோதிடத்தில் பிரீதி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் இரண்டாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 13° 20' தொடக்கம் 26° 40' பிரீதி யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "பிரீதி" ஆகும்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
சீனிவாச இராமானுசன் (Srinivasa Ramanujan, திசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோட்டை பகுதியில் பிறந்த கணித அறிஞர் ஆவார். இவர் தனது 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
பி. கக்கன் (P. Kakkan, 18 சூன் 1908 – 23 திசம்பர் 1981), விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதர பல பொறுப்புகளை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்த, அரசியல்வாதி ஆவார். கக்கன் தமையனார் விஸ்வநாதன் ஒரு வழக்கறிஞர்.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
கீழ்வெண்மணிப் படுகொலைகள் என்பது 25 திசம்பர் 1968இல் இந்தியாவின், தமிழ்நாட்டில், ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், நாகப்பட்டினத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில், நிலக்கிழார்களால் நடத்தப்பட்ட படுகொலை நிகழ்வாகும். இதில் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பட்டியல் இன வேளாண் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
விலங்குகள் (Animals), அனிமலியா (Animalia) அல்லது பல உயிரணு உயிரி (Metazoa), என்பது இராச்சியத்தின் பெரும்பாலும் மெய்க்கருவுயிரி உயிரினங்களின் பெரும் பிரிவாகும். சில விதிவிலக்குகள் தவிர்த்து, அநேகமானவை அனைத்து உயிரினங்களும் கரிமச் சேர்மங்களை உட்கொள்பவையாகவும், ஆக்சிசனை சுவாசிப்பவையாகவும், தன்னிச்சையாக நகரக்கூடியவையாகவும் (இயக்கம்(விலங்கியல்)) , பாலினப்பெருக்கம் செய்பவையாகவும், முளைய விருத்தியின்போது வெற்றுக்கோள உயிரணுக்களான கருக்கோளத்திலிருந்து (en:Blastula) வளர்ச்சியடையும் உயிரினமாகவும் இருக்கின்றன. உலகில் சுமார் 7 மில்லியனுக்கும் அதிகமான விலங்கு சிற்றினங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருப்பினும், கிட்டத்தட்ட 1.5 மில்லியனுக்கும் அதிகமான சிற்றினங்களே விவரிக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
நத்தார், கிறிஸ்து பிறப்புப் பெருவிழா அல்லது கிறிஸ்துமஸ் (Christmas) என்பது ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கக் கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழா கிறிஸ்தவத் திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாகும். இவ்விழாவின் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்துமஸ் மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும்.
பொங்கல் (Pongal) என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என வழங்கப்படுகிறது.
செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)
செக்ஸ் இஸ் சீரோ 2002 இல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும். இதனை யோன் ஜி-க்யூன் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் இம் சேங்-ஜங், ஹா ஜி-வோன் மற்றும் சோய் வோன்-யூங் ஆகியோர் நடித்திருந்தனர்.
திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடல்களையும் இணைத்து மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாகக் கொண்டுள்ளார்கள். கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் இருக்கும் பாவை நோன்பின் ஒரு பகுதியாக இந்த பாடல்களைப் பாடுவது உள்ளது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.
இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்
1975ல் முதல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியதில் இருந்து இதுவரை ஐம்பதிற்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை இந்தியா ஏவியுள்ளது. இந்திய, அமெரிக்க, உருசிய, ஐரோப்பிய ராக்கெட்டுகளின் மூலமும் அமெரிக்க விண்வெளி ஓடத்தின் துணைக்கொண்டும் இவை செலுத்தப்பட்டுள்ளன. இந்திய செயற்கைக்கோளின் பொறுப்பாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் உள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பு அல்லது அதிகாரபூர்வமாக ஐக்கிய நாடுகள் (United Nations, UN, ஐநா) என்பது உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், நாடுகளுக்கிடையே நட்புறவு உறவுகளை வளர்த்தல், பன்னாட்டு ஒத்துழைப்பைப் பேணல், நாடுகளின் நடவடிக்கைகளை ஒத்திசைப்பதற்கான மையமாக இருத்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்ட அரசுகளுக்கிடையேயான ஓர் அமைப்பாகும். இது உலகின் மிகப்பெரியது பன்னாட்டு அமைப்பாகும். இதன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ள பன்னாட்டு நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
கிறித்துமசு தாத்தா அல்லது நத்தார் தாத்தா (Santa Claus, சாண்டா குலோஸ், அல்லது புனித நிக்கலசு) என்பவர் தொன்ம வரலாறு, மற்றும் நாட்டார் பாடல்களில் வரும் ஒரு பாத்திரம் ஆகும். மேற்குலகப் பண்பாட்டில் கிறித்துமசு நாளுக்கு முதல் நாள் டிசம்பர் 24 இரவில் இவர் குழந்தைகளுக்கு அன்பளிப்புகள் கொண்டு வருபவராகக் குறிக்கப்படுகிறார். சண்ட குலோஸ் என்ற சொல் டச்சு மொழியின் சிண்டெர்கிலாஸ் என்னும் சொல்லில் இருந்து மருவியதாகும்.
அல்லு அர்ஜுன் (Allu Arjun) (பிறப்பு:8 ஏப்ரல் 1983) ஒரு தெலுங்குத் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், விளம்பர நடிகரும், நடனக் கலைஞரும் இயக்குநருமாவார். இவர் ஆர்யா, தேசமுடுரு, சங்கர் தாதா சிந்தாபாத், ஆர்யா 2, வருடு, வேதம், ரேஸ் குர்ராம் உள்ளிட்ட 20இற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இரண்டு முறை நந்தி விருதுகளைப் பெற்றவர்.
ஜோர்தான் (அரபு மொழி: الأردنّ) அல்லது அதிகாரப்பட்சமாக ஜோர்தான் இராச்சியம் தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும். இதன் வடக்கில் சிரியாவும் வடகிழக்கில் ஈராக்கும் மேற்கில் இசுரேலும் மேற்குக் கரையும் தெற்கிலும் கிழக்கிலும் சவுதி அரேபியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாட்டுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அமைந்துள்ளது.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
காமராசர் (ஆங்கில மொழி: Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) ஓர் இந்திய விடுதலைப் போராட்ட ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். இவர் 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
குகேசு தொம்மராசு (Gukesh Dommaraju, பிறப்பு: 29 மே 2006, குகேசு டி எனவும் அழைக்கப்படுகிறார்), இந்திய சதுரங்கப் பேராதனும், நடப்பு உலக சதுரங்க வாகையாளரும் ஆவார். ஒரு சதுரங்க மேதையாக, குகேசு உலகின் மிக இள வயது சதுரங்க வாகையராகவும், தனது 17-ஆவது அகவையில் பிடேயின் 2750 எலோ மதிப்பீட்டைத் தாண்டிய மிக இளவயது வீரராகவும், தனது 16-ஆவது அகவையில் 2700 மதிப்பீட்டைத் தாண்டிய மூன்றாவது-இளையவராரவும் இவர் திகழ்கிறார். தனது 12-ஆவது அகவையில் சதுரங்கப் பேரானாகப் பட்டம் பெற்று, சதுரங்க வரலாற்றில் மூன்றாவது-இளைய பேராதன் என்ற சாதனையையும் பெற்றார்.
தாய்லாந்து (ஆங்கிலம்: Thailand அல்லது Kingdom of Thailand; தாய்: ประเทศไทย), அதிகாரப்பூர்வமாக தாய்லாந்து இராச்சியம் (Kingdom of Thailand), முன்னர் சயாம் (ஆங்கிலம்: Siam, தாய்: สยาม) என்பது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இந்த நாட்டின் வடக்கில் மியான்மர், லாவோஸ்; கிழக்கில் லாவோஸ், கம்போடியா; தெற்கில் தாய்லாந்து வளைகுடா, மலேசியா; மேற்கில் அந்தமான் கடல் எல்லைகளாக அமைந்துள்ளன. தாய்லாந்தின் கடல் எல்லைகளாக தென்கிழக்கே தாய்லாந்து வளைகுடா; வியட்நாம், தென்மேற்கே அந்தமான் கடலில் இந்தோனேசியா, இந்தியா ஆகிய நாடுகளும் உள்ளன.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல். இது சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான இந்நூல் ஆசிரியப்பாவால் ஆன 188 அடிகளைக் கொண்டது. நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற கூதிர்ப்பாசறையின்கண் இருக்கும் தலைவனுக்கு இஃது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.
புஷ்பா: தி ரைஸ் (Pushpa: The Rise) என்பது இயக்குநர் சுகுமார் எழுதி இயக்கி, தெலுங்கு மொழியில் வெளியான அதிரடி பரபரப்புத் திரைப்படமாகும்.. இந்தப் படத்தில், அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க பகத் பாசில் (தெலுங்கில் அறிமுகமாகிறார்), ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். திரைப்படத்தின் இரண்டு பாகங்களில் முதல் பாகம், ஆந்திரப் பிரதேசத்தின இராயலசீமை பகுதியின் சேசாசலம் மலைப்பகுதியில் செஞ்சந்தன மரக்கடத்தலை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
வெற்றிமாறன் (Vetrimaaran) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது முதல் திரைப்படமான பொல்லாதவன் நடப்பு நிலைக்கு மிக அண்மையாகப் படம்பிடித்துக் காட்டியதற்காக அதிக பாராட்டைப் பெற்றது. இவரது இரண்டாவது திரைப்படமான ஆடுகளம் 2011ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது.
விசயகாந்து (Vijayakanth, விஜயகாந்த்; இயற்பெயர்: விஜயராஜ், 25 ஆகத்து 1952 – 28 திசம்பர் 2023) ஒரு திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சியின் நிறுவனத் தலைவரும் ஆவார். இவர் 2006 முதல் 2016 வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். இவரது நான்கு தசாப்த திரை வாழ்க்கையில் இவர் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2024
2024 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. 7/ஜி அக்கரன் அஞ்சாமை அதர்மக் கதைகள் அதோமுகம் அந்தகன் அமரன் அமிகோ கேரேஜ் அய்யய்யோ அயலான் அரணம் அரண்மனை 4 அரிமாபட்டி சக்திவேல் ஆந்தை ஆப்ரேசன் லைலா ஆராய்ச்சி ஆர்கே வெள்ளிமேகம் ஆலகாலம் இங்கு நான் தான் கிங்கு இங்கு மிருகங்கள் வாழும் இடம் இ-மெயில் இடி மின்னல் காதல் இந்தியன் 2 இரவின் கண்கள் இருளில் இராவணன் இப்படிக்கு காதல் இனி ஒரு காதல் செய்வோம் உணர்வுகள் தொடர்கதை உதிர் @ பூமரக் காத்து உயிர் தமிழுக்கு எங்க வீட்டுல பார்ட்டி எட்டும் வரை எட்டு எப்புரா எப்போதும் ராஜா எமகாதகன் எஸ்கே 23 எலக்சன் ஏழு கடல் ஏழு மலை ஒயிட் ரோஸ் ஒரு தவறு செய்தால் ஒரு நொடி கங்குவா கடமை கருடன் கருப்பர் நகரம் கழுமரம் கவுண்டம் பாளையம் கள்வன் கன்னி காட்ஸ்பாட் காடுவெட்டி காதலிக்க நேரமில்லை கார்டியன் காழ் கியூ ஜி பகுதி 1 கிரிமினல் கிளாஸ்மேட்ஸ் குரங்கு பெடல் கும்பாரி கேப்டன் மில்லர் கொஞ்சம் பேசினால் என்ன கொட்டுக்காளி கொலை தூரம் கோட் கோழிப்பண்ணை செல்லதுரை சட்டம் என் கையில் சத்தமின்றி முத்தம் தா சாமானியன் சாலா சிக்லெட்ஸ் சிங்கப்பூர் சலூன் சிங்கப்பெண்ணே சிட்டு 2020 சிறகன் சூரியனும் சூரியகாந்தியும் செவப்பி சைரன் டபுள் டக்கர் டிமான்டி காலணி 2 டியர் டிரைன் டிராகன் டீன்சு தக் லைஃப் தங்கலான் த. நா தி அக்காலி தி பாய்ஸ் தி பூரூஃப் திமில் துருவ நட்சத்திரம் தூக்குதுரை தேவில் தோழர் சேகுவேரா நண்பன் ஒருவன் வந்த பிறகு நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நானும் ஒரு அழகி நியதி நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நினைவெல்லாம் நீயடா நின்னு விளையாடு நெவர் எஸ்கேப் நேற்று இந்த நேரம் பகலறியான் படிக்காத பக்கங்கள் பயமறியா பிரம்மை பர்த்மார்க் பாம்பாட்டம் பார்க் பி2 பி.
இயேசுவின் பிறப்பு என்பது இயேசுவின் பிறப்பு குறித்த லூக்கா நற்செய்தி, மத்தேயு நற்செய்தி மற்றும் சில திருமுறையினை சேரா நூல்களில் விவரிப்பினைக்குறிக்கும். லூக்கா மற்றும் மத்தேயு நற்செய்திகள் யூதேயா நாட்டின் பெத்லகேம் ஊரில் இயேசு ஒரு கன்னியிடம் பிறந்தார் என குறிக்கின்றது. லூக்கா நற்செய்தியின்படி அகுஸ்து சீசரின் கட்டளைப்படி மக்கள் தொகையைக் கணக்கில் தன் குடும்பத்தை பதிவு செய்ய தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், அவருக்கு மண ஒப்பந்தமான மரியாவும் நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றனர்.
தமிழ் இலக்கியத்தில், கலம்பகம் என்பது பலவகைச் செய்யுள்களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதுமான சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும். பல்பூ மிடைந்த படலைக் கண்ணி (174) (பல் = பல; பூ = பூக்கள்; மிடைந்து = கலந்து) என்று ஓர் அடி, கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பெரும்பாணாற்றுப் படையில் வருகின்றது. இதற்குப் பலவாகிய பூக்கள் கலந்து கட்டப்பட்ட கலம்பக மாலை என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறுகின்றார்.
வைணவ சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள் ஆவர். தென்மொழியாம் தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர். அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் ஆண்டாளையும், இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு.
உழவு அல்லது வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவு மற்றும் உணவு சாராப் பொருட்களுக்காக பயிர் மற்றும் கால்நடை உற்பத்தி, நீர் வேளாண்மை, மீன் வளர்ப்பு மற்றும் காட்டியல் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். நிலையான இடத்தில் வாழ்ந்த மனித நாகரிகத்தின் எழுச்சியில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக வேளாண்மை இருந்துள்ளது.
இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியும் ஆவார். இந்திய ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் எனக் குறிப்பிடப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் வாயிலாக இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் மரபுசார்ந்த ஒன்றாகும்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of chief ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (Madurai Meenakshi Sundareswarar Temple) என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள, கோயில் நகரமான மதுரையின் மத்தியில், அமைந்துள்ள சிவன் ஆலயமாகும். இச்சிவ ஆலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒன்றே போன்ற ஒலிப்பினைக் கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வகையான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.
திவ்ய தேசங்கள் (ஆங்கில மொழி: Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
திருநெல்வேலி அல்லது நெல்லை (, Tirunelveli), என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' எனச் சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும். இவ்வூர் அல்வாவிற்கு பெயர் பெற்றது.